ராம நாராயணன் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பு: விஜயகாந்த்

டெல்லி: இயக்குநர் ராம நாராயணன் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய திரையுலக வெற்றிக்கு அவரின் பங்கு மகத்தானது எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"தமிழ்த் திரையுலகின் ஜாம்பவானும், எனது பெரும் மரியாதைக்குரிய இயக்குநருமான ராம நாராயணன் அவர்கள் உடல்நலக் குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியினை கேட்டு, பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். இச்செய்தி என்னை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

ராம நாராயணன் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பு: விஜயகாந்த்

ராம நாராயணன் இயக்கத்தில் 10-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நான் நடித்துள்ளேன். என்னுடைய திரையுலக வெற்றிக்கு அவரின் பங்கு மகத்தானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி, வங்காளம், ஒரியா, போஜ்புரி, மலாய் ஆகிய மொழிகளில் 125 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளார்.

பல படங்களை அவரே தயாரித்தும் உள்ளார். பாடலாசிரியராகவும், கதாசிரியராகவும் இருந்து, இயக்குநர், தயாரிப்பாளர் என உயர்ந்தவர். இவரின் சாதனை தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக 3 முறையும், தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக 2 முறையும், சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர். தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர்.

பழகுவதற்கும், நட்பு பாராட்டுவதற்கும் இனிமையானவர், எளிமையானவர். சிறந்த பண்பாளர். இப்படி எல்லா வகையிலும் சிறப்பு பெற்ற எனது ஆருயிர் நண்பர் ராம நாராயணன் அவர்களின் இழப்பு எனக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், இந்திய திரையுலகிற்கும், குறிப்பாக தமிழ்த் திரையுலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளுகிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்". இவ்வாறு விஜயகாந்த் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

கதையே இன்னும் ரெடியாகல.. அப்புறம்தான் ஐஸ்வர்யா நடிக்கிறதை சொல்ல முடியும்! - மணிரத்னம்

லடாக்: என்னுடைய அடுத்த படத்தின் திரைக்கதை வேலையே இன்னும் முடியவில்லை. முடிந்த பிறகுதான் யார் நடிக்கிறார்கள் என்பதைச் சொல்ல முடியும் என்றார் இயக்குநர் மணிரத்னம்.

கடல் படத்துக்குப் பிறகு தெலுங்கு, தமிழ், இந்தி என மூன்று மொழிகளில் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மணிரத்னம். இதில் மகேஷ்பாபு, நாகார்ஜூனா, ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இடையில் மகேஷ்பாபு விலகிக் கொண்டதாகவும் செய்தி வெளியானது.

கதையே இன்னும் ரெடியாகல.. அப்புறம்தான் ஐஸ்வர்யா நடிக்கிறதை சொல்ல முடியும்! - மணிரத்னம்

இது பற்றி எந்தக் கருத்தையும் இதுவரை கூறாமல் வழக்கம் போல அமைதிகாத்தார் மணிரத்னம்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்த மணிரத்னத்திடம், அவரது புதிய படம் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "என் படத்தின் திரைக்கதை வேலைகளே இன்னும் முடியவில்லை. அது முடிந்த பிறகுதான் ஐஸ்வர்யா போன்றவர்கள் நடிக்கிறார்களா இல்லையா என்பதைச் சொல்ல முடியும். விரைவில் செய்தி வரும்," என்று பதிலளித்தார்.

 

நடிகர் சத்யராஜின் தங்கை மீது கணவர் போலீஸில் புகார்

குன்னூர்: போலி கையெழுத்து மூலம் தனது காரை அபகரித்து விட்டதாக நடிகர் சத்யராஜின் தங்கை மீது அவரது கணவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் சத்யராஜின் தங்கை கல்பனா நீலகிரி மாவட்டம், குன்னூரில் வசித்து வருகிறார். இவரது கணவர் அர்ஜூன் மன்றாடியார். இருவரும் பிரிந்து வசித்து வருகின்றனர். அர்ஜூன், ஈரோடு மாவட்டம், கீழப்பள்ளம் நத்தக்காடையூர் பகுதியில் வசித்து வருகிறார்.

நடிகர் சத்யராஜின் தங்கை மீது கணவர் போலீஸில் புகார்

இந்நிலையில், குன்னூர் வெலிங்டன் போலீஸாரிடம், அர்ஜூன் மன்றாடியார் தனது மனைவி கல்பனா மீது புகார் கொடுத்துள்ளார். அதில், 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி முதல் ஈரோட்டில் மகேந்திரா பொலிரோ என்ற வாகனத்தை கல்பனா பயன்படுத்தி வந்தார்.

எங்களுக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக தொடரப்பட்ட விவாகரத்து வழக்கு, ஊட்டி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி போலியாக கையெழுத்திட்டு அந்த வாகனத்தை கல்பனா பெயருக்கு மாற்றி உள்ளனர். எனவே, கல்பனா மீதும், டிரைவர் மணி மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

இந்த புகார் குறித்து இரு தரப்பிலும் விசாரணை மேற்கொண்ட பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

டான்ஸ் ஆட நமீதா வராததால் காரைக்காலில் பெரும் அமளி.. நாற்காலி வீச்சு..!

காரைக்கால்: காரைக்காலில் நடந்த நடன நிகழ்ச்சிக்கு கவர்ச்சி நடிகை நமீதா வராத்தால் ஆத்திரமடைந்து நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பெரும ரகளை மற்றும் கலவரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காரைக்காலில் தனியார் அமைப்பு சார்பில் காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு உங்களில் யார் அடுத்து லாரன்ஸ் என்ற தலைப்பில் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக கடந்த 2 மாதங்களாக அந்த்த் தனியார் நிர்வாகம், நமீதா உள்ளிட்டோர் படங்களுடன் நிகழ்ச்சிக்கான அனுமதி கூப்பன் தயார் செய்து, விளம்பரதாரர்களின் விளம்பரங்களுடன் விநியோகம் செய்தது.

நமீதா உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சி என காரைக்கால் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் தொடர் விளம்பரம் செய்யப்பட்டது. இதனால் கூப்பன் படு விறுவிறுப்பாக விற்பனையானது.

இந்த நிலையில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. பெரும் திரளாக நமீதாவைத் தரிசிக்க டிக்கெட் வாங்கியவர்கள் குழுமினர். அனைவர் பார்வையும் நமீதா ஏறப் போகும் மேடை மீதே இருந்த்து.

டான்ஸ் ஆட நமீதா வராததால் காரைக்காலில் பெரும் அமளி.. நாற்காலி வீச்சு..!

லோக்கல் கலைஞர்கள் உள்ளிட்டோர் கச்சேரி நடத்தினர். அதெல்லாம் பார்வையாளர்களைக் கவரவில்லை.. நமீதா எங்கேப்பா என்ற எதிர்பார்ப்புடன் சீட் நுனியில் குந்தியிருந்தனர். இந்த நிலையில் திடீரென மேடையில் ஒரு அறிவிப்பு வெளியானது.

நமீதா வரவில்லை என்று கூறப்பட்ட அந்த அறிவிப்பால் அத்தனை பேரின் இதயத் துடிப்பும் சற்று நின்றே போனது. அதன் பின்னர் அது ஆத்திரமாக உருமாறியது, கோபம் கொப்பளிக்க அத்தனை பேரும் ரகளையில் குதித்தனர். சேர், நாற்காலிகளைத் தூக்கி சரமாரியாக வீசினர்.

இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். கொந்தளித்துக் கோபத்துடன் கத்தியவர்களை அமைதிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கூப்பன் விற்பனையில் பல லட்சம் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக பார்வையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

செட்டிநாடு திரையுலகிற்கு தந்த மாமணிகளில் ஒருவர் என் அருமை தம்பி ராம. நாராயணன்: கருணாநிதி

சென்னை: இயக்குனர் ராம. நாராயணனின் நினைவு மறக்க கூடியதுமல்ல, மாறக் கூடியதுமல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

செட்டிநாடு திரையுலகிற்கு தந்த மாமணிகளில் ஒருவர் என் அருமை தம்பி ராம. நாராயணன்: கருணாநிதி

தமிழ்த் திரைப்பட உலகில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், கதாசிரியராகவும் பல படங்களில் பணியாற்றிப் பெரும் புகழ் பெற்றவரும் - திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியிலே போட்டியிட்டு வெற்றி பெற்று அந்தத் தொகுதியிலே அரும்பணியாற்றியவரும் -கழக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக சிறப்பாகச் செயல்பட்டவருமான என்னுடைய அருமைத் தம்பி, இயக்குனர் ராம. நாராயணன் சிங்கப்பூரில் மறைந்து விட்ட செய்தியினை அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்த ராம. நாராயணன் இரண்டு வாரங்களுக்கு முன்னால் என்னைச் சந்தித்து, தனது நோய் பற்றிய விவரங்களை எல்லாம் என்னிடம் கூறிய போது, இவ்வளவு விரைவில் அவர் மறைந்துவிடுவார் என்று நான் எண்ணிப் பார்க்கவே இல்லை.

"செட்டிநாடு" திரையுலகத்திற்கு வழங்கிய மாமணிகள் ஏ.வி. மெய்யப்ப செட்டியார், லேனா செட்டியார், கவிஞர் கண்ணதாசன், ஏ.எல். சீனிவாசன் வரிசையில் ராம. நாராயணன் இந்தத் துறையில் ஈடுபட்டு 128 திரைப்படங்களை இயக்கி நிலைத்த புகழைப் பெற்றிருக்கிறார்.

ராம.நாராயணன் என்னிடம் தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பும், பாசமும் கொண்டவர். கழகத்தின் மீதும், கழக லட்சியங்களின் மீதும் விசுவாசமும் பிடிப்பும் கொண்டு காலம் முழுவதும் கட்டுப்பாடு போற்றி வாழ்ந்தவர். அவரது நினைவு மறக்க கூடியதுமல்ல; மாறக் கூடியதுமல்ல; அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், எனக்கு நானே ஆறுதல் தேடிக் கொள்ள முயற்சிக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

சரி, களஞ்சியத்துடன் நடிக்க விரும்பலைன்னா பரவால்ல.. நஷ்ட ஈடு கொடுங்க! - அஞ்சலிக்கு நெருக்கடி

சென்னை: களஞ்சியத்துடன் நடிக்க விரும்பாவிட்டால், அதற்கான நஷ்ட ஈட்டை தயாரிப்பாளருக்கு சரி, களஞ்சியத்துடன் நடிக்க விரும்பலைன்னா பரவால்ல.. நஷ்ட ஈடு கொடுங்க! - அஞ்சலிக்கு நெருக்கடி  

களஞ்சியம் மற்றும் பாரதிதேவியின் தொல்லை தாங்காமல் சென்னையிலிருந்து வெளியேறி, ஹைதராபாதில் தங்கி தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஜெயம் ரவியுடன் தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் தனது ஊர்சுற்றி புராணம் படத்தை முடித்துக் கொடுக்காமல் அஞ்சலி வேறு படங்களில் நடிக்க கூடாது என்று களஞ்சியம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சங்கங்களுக்கு புகார் மனு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க கில்டு பொதுச் செயலாளர் ஜாகுவார் தங்கம் கூறுகையில், "நடிகை அஞ்சலி, களஞ்சியத்தின் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும். அதைச் செய்யாமல் வேறு எந்த மொழி படத்திலும் நடிக்கக் கூடாது.

தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படத் தயாரிப்பாளர்களுக்கு கடிதம் எழுதி அஞ்சலியை புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு உள்ளோம்.

ஊர்சுற்றிப் புராணம் படத்தில் அவர் நடிக்காததால் தயாரிப்பாளர் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளார்.

களஞ்சியத்துடன் அந்தப் படத்தில் அஞ்சலி நடிக்க விரும்பாவிட்டால் அதற்கான நஷ்டஈட்டை அவர் வழங்க வேண்டும். நடித்து கொடுக்க முன்வந்தால் அவருக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும்," என்றார்.

 

முருகதாஸ் தயாரிப்பில் விக்ரம் - சமந்தா நடிக்கும் படம்... ஜனவரியில் வெளியாகிறது!

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் - சமந்தா நடிக்கும் புதிய படம் வரும் ஜனவரியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ ஆர் முருகதாஸ் நிறுவனமும் - பாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் ஒரு குறுகிய காலத் தயாரிப்பாகும்.

முருகதாஸ் தயாரிப்பில் விக்ரம் - சமந்தா நடிக்கும் படம்... ஜனவரியில் வெளியாகிறது!

தமிழ் ரசிகர்கள் இடையே தரமான படங்களை வழங்கும் நிறுவனங்கள் என பெயர் எடுத்த இந்த இரு நிறுவனங்களும், விஜய் மில்டன் கதை, திரைகதை, அமைத்து ஒளிப்பதிவு செய்து இயக்கும் படத்தைதான் தங்களது அடுத்த படமாகத் தேர்வு செய்துள்ளன.

மில்டனின் கதை ஒன்றை கேட்டுப் பாராட்டிய விக்ரம், உடனடியாக தன்னுடைய தேதிகளை வழங்கி உள்ளார். ஐ படத்தில் வாய்ப்பைத் தவற விட்ட சமந்தா அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இமான் இசை அமைக்க, மதன் கார்க்கி பாடல்கள் இயற்ற பெரும் பொருட்செலவில் தயாராகும் இந்த படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் நடந்தது.

குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடித்து வெளியிட வேண்டும் என்பதால் விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் இன்று தொடங்கியது. அடுத்த இரண்டு மாதங்களில் ஷூட்டிங்கை முடித்து, வரும் ஜனவரியில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

 

உலக சாதனை படைத்த இயக்குநர் ராம நாராயணன் மரணம்... அதிர்ச்சியில் தமிழ் சினிமா!

சிங்கப்பூர்: பிரபல திரைப்பட இயக்குநரான ராம. நாராயணன் மாரடைப்பால் காலமானார். சிங்கப்பூரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அங்கு மரணமடைந்துள்ளார்.

9 மொழிகளில் 125 படங்களை இயக்கி சாதனை படைத்தவர் ராம.நாராயணன். இந்தியாவிலேயே அதிக படங்களை இயக்கிய இயக்குநர் இவர்தான்.

உலக சாதனை படைத்த இயக்குநர் ராம நாராயணன் மரணம்... அதிர்ச்சியில் தமிழ் சினிமா!

குறிப்பாக விலங்குகளை வைத்தும், கிராபிக்ஸ் மூலமும் பல படங்களை இயக்கி அனைவரையும் ரசிக்க வைத்தவர். விஜயகாந்த்துக்கு ஆரம்ப காலத்தில் ஏற்றம் கொடுத்த பல படங்களை இயக்கியவர்.

சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவரை சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் சென்றிருந்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

ராம நாராயணனிடம் உதவியாளராக இருந்தவர்தான் நடிகர் ராமராஜன். ஆரம்பத்தில் உதவி இயக்குநராக இருந்து பின்னர் இயக்குநராக மாறி அதன் பின்னர் ராமராஜன் நடிகரானார் என்பது நினைவிருக்கலாம்.

இதேபோல இன்னொரு சிஷ்யர் இயக்குநர் பேரரசு. ராம நாராயணனின் 30 படங்களில் பேரரசு உதவி இயக்குநராக இருந்துள்ளார்.

1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராம.நாராயணன் காரைக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1990-ம் ஆண்டு தமிழக அரசின் `கலைமாமணி' விருது இவருக்கு கிடைத்தது. 1995-ம் ஆண்டு இயல், இசை, நாடக மன்ற தலைவராக பதவி வகித்தார். 2005-ம் ஆண்டு முதல் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

ராம.நாராயணனின் மனைவி பெயர் ராதா. மகன் ராமசாமி. மகள்கள் அன்பு, உமா. அனைவருக்கும் திருமணமாகி விட்டது.