அமீர்கான், மாதவன் நடித்த `3 இடியட்ஸ்' இந்தி படம் வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தமிழில் `நண்பன்' என்ற பெயரில் `ரீமேக்' ஆகி உள்ளது. இளைய தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடித்துள்ளனர். நாயகியாக இலியானா நடித்துள்ளார்.மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் பொங்கனலுக்கு ரிலீஸ் ஆகிறது. இதனையடுத்து படத்தின் பாடல் வெளியீடு விழா இந்த மாதம் 23ம் தேதி நடைபெறுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இதுபற்றி ஷங்கர் கூறியதாவது:- `நண்பன்' படப்பிடிப்பு 100 சதவீதம் முடிந்துள்ளது. `நண்பன்' படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. `நண்பன்' படத்தின் பாடல் டிசம்பரில் 23ல் வெளியாகும் என்றார். பாடல் சி.டி. வெளியீட்டு விழாவிற்கு அமீர்கானை அழைக்க திட்டமிட்டுள்ளனர்.
இறுதிகட்டத்தில் "பில்லா 2"
நம்ம தல அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிக்கும் 'பில்லா 2' ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகிறுது. தற்போது படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து வரும் பிப்ரவரி மாதம் போஸ்ட் புரோடக்ஷன் வேலை நடக்க இருப்பதாகவும், மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் 14ந் தேதி வெளியாகலாம் எனவும் கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. முதல் பாகத்தில் அழகாக இருந்த நம்ம தல, இந்த பாகத்தில் இன்னும் ஸ்மார்ட்டாக இருக்கிறாராம். படத்திற்கு யுவன் இசை அமைத்துள்ளார். இந்த படம் முடிந்த பிறகு விஷ்ணுவர்த்தன் இயக்கத்திலும், சிறுத்தை சிவா இயக்கத்திலும் நடிக்கிறார்.
"ஒய் திஸ் கொல வெறி" பாடலுக்கு ஆட தயார் : மல்லிக்கா ஷெரவத்!
ஒஸ்தியில் சிம்புடன் ஒஸ்தியான டான்ஸ் ஆடிய மல்லிக்கா, அடுத்து 'ஒய் திஸ் கொல வெறி' பாடலுக்கும் ஆட தயார் என தெரிவித்துள்ளார். 'ஒய் திஸ் கொல வெறி' பாடல் பாலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை. பாலிவுட் டிவி ஷோக்களிலும் 'why this kolaveri di' பாடல் இல்லாமல் நிகழ்ச்சிகள் நடப்பதே இல்லை. இச்த பாடலின் உரிமம் பெற ஷாரூக்கான் மற்றும் அக்ஷய குமார் இடையே பெரிய போட்டியே நடந்தது. இறுதியில் அக்ஷய குமார் பாடலின் உரிமமத்தை பெற்றதாக தெரிகிறது. இந்நிலையில் 'ஒய் திஸ் கொல வெறி' பாடல் தனக்கு ரொம்பவும் பிடித்துள்ளதாகவும், பட தயாரிப்பாளர் விருப்பபட்டால் ஆட தயாராக உள்ளதாகவும் மல்லிக்கா கூறியுள்ளார். அதுமட்டுமின்றி கதையாக சரியாக அமைந்தால், இனி தமிழ் சினிமாவில் நடிக்க தயார் என அவர் தெரிவித்துள்ளார்.