செல்வராகவன் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறார் தனுஷ்!

Dhanush Be Produced Selvaragavan Film

கிட்டத்தட்ட முழு நேரத் தயாரிப்பாளராகவே மாறிவிட்டார் தனுஷ். 3, எதிர்நீச்சலைத் தொடர்ந்து, தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவன பேனரில் புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தை இயக்கப் போகிறவர்... அவரது அண்ணன் செல்வராகவன்.

தனுஷ் இப்போது மரியான், நய்யாண்டி மற்றும் வெற்றிமாறன் படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் ராஞ்ஜானே படத்தில் நடித்து முடித்துவிட்டார்.

இன்னொரு பக்கம் சொந்தப் படத் தயாரிப்பிலும் பிஸியாக உள்ளார். 3 படத்துக்குப் பிறகு இப்போது எதிர்நீச்சல் என்ற படத்தைத் தயாரிக்கும் தனுஷ், அடுத்து தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் புதுப் படத்தைத் தொடங்குகிறார்.

இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்க, கோலா பாஸ்கர் எடிட்டிங்கை கவனிக்கிறார்.

படத்தின் தலைப்பு, நடிகர்கள் போன்ற விவரங்களை பின்னர் தெரிவிப்பதாக தனுஷ் கூறியுள்ளார்.

 

'கமல்... கிடைச்ச பணத்துல சொத்துக்களை மீட்டு பிள்ளைகள் பேரில் எழுதி வைங்க!' - ரஜினி அட்வைஸ்

Rajini S Advice Kamal

விஸ்வரூபம் படத்தில் முதலீட்டுக்கு மேல் வந்த லாபத்தை வைத்து சொத்துகளை மீட்டு, அவற்றை பிள்ளைகள் பெயரில் எழுதி வைக்குமாறு சூப்பர் ஸ்டார் ரஜினி கமலுக்கு அட்வைஸ் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வரூபம் படம் வெளியாகி, நான்கு வாரங்கள் முடிந்துள்ளன. கிட்டத்தட்ட அனைத்துத் திரையரங்குகளிலிருந்தும் படம் தூக்கப்பட்டுவிட்டாலும், அந்தப் படத்துக்காக கிளப்பப்பட்ட பரபரப்பால், கணிசமாக கமலுக்கு லாபம் கிடைத்துள்ளதாம்.

படம் குறித்து பல சர்ச்சைகள், அதிருப்திகள் இருந்தாலும், பல நெருக்கடிகளைத் தாண்டி வசூல் ரீதியாக ஓரளவு திருப்தியான வருமானத்தைக் கமல் பார்த்துவிட்டாராம்.

எனவே கமலுக்கு வாழ்த்து சொல்ல, தனக்கு நெருங்கிய எழுத்தாளருடன் கமல் வீட்டுக்குச் சென்றாராம் ரஜினி.

கமலுக்கு வாழ்த்து சொன்னவர், "கிடைச்சிருக்கிற பணத்தில் சொத்துகளை மீட்டு உங்கள் பிள்ளைகள் பேரில் எழுதி வையுங்க. இனிமேல் அடிக்கடி வீட்டை அடமானம் வைத்துவிட்டு படமெடுத்ததாக வெளியில் சொல்ல வேண்டாம். இது தேவையில்லாத ரிஸ்க். உங்களுக்கு தோதான தயாரிப்பாளர்களைப் பிடிச்சி உங்களுக்குப் பிடிச்ச கதையில் நடிங்க... இந்த நேரத்துல இதை சொல்லும் உரிமை எனக்கிருக்கு," என்றாராம்.

கமல் செய்வாரா... அல்லது மீண்டும் அடகு வைத்ததைச் சொல்ல பிரஸ் மீட் வைப்பாரா?

 

இறுதிக் கட்டத்தில் தலைவா... படப்பிடிப்புக்கு ஆஸ்திரேலியா செல்கிறார்கள்!

Thalaivaa Team Goes Australia   

தன் ரசிகர்களைத் தவிர, மற்றவர்களும்கூட தன்னை தலைவா என்றழைக்க என்ன வழி என்று ரூம் போட்டு யோசித்து, தன் படத்துக்கு தலைப்பு வைத்த விஜய் அன்ட் கோ, படத்தை முடிக்கும் வேலைகளில் படுபிஸியாக உள்ளது.

இப்போது படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியா செல்லவிருக்கிறார்கள்.

ஏ எல்.விஜய் இயக்கும் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. அமலா பாலுடன் விஜய் டூயட் பாடும் காட்சிகள் ஸ்பெயினில் படமாக்கப்பட்டன.

பின்னர் மீண்டும் மும்பைக்கே திரும்பிய படக்குழு அங்கு வைத்து விஜய் - மும்பை நடிகை ராகினி நந்த்வானி நடிக்கும் காட்சிகளைப் படமாக்கினர்.

இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக வரும் 15ம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறது படக்குழு. அங்கு ஒரு மாதத்திற்கு மேலாக படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. ஏப்ரல் கடைசி வாரத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு படக்குழு ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிற்கு திரும்புகிறது.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுவிட்டன. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும் இசை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படுகிறது.

 

எதிர்காலத்தில் சமூகப் பணியில் முழு கவனம்! - அரசியலுக்கு அடி போடும் த்ரிஷா!!

Trisha S Interest Politics   

சென்னை: எதிர்காலத்தில் சமூகப் பணிகளில் அதிக அளவு ஈடுபடத் திட்டமிட்டுள்ளேன். அரசியலுக்கு வருவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார் நடிகை த்ரிஷா.

பத்தாண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கும் த்ரிஷா, அரசியலுக்கு வருவதை சூசகமாக அறிவித்துள்ளதாகவே இது பார்க்கப்படுகிறது.

நடிப்பில் பிஸியாக இருந்தாலும், சமூக சேவை, பிராணிகள் பாதுகாப்பு, ஆதரவற்றோருக்கு உதவி என பல்வேறு நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார் த்ரிஷா.

நேற்று மகளிர் தினத்தை ஒட்டி அவர் நிருபர்களைச் சந்தித்து அளித்த பேட்டி:

சமூகத்தில் பெண்களை பாதிக்கிற விஷயங்கள் நிறைய உள்ளன. பெண் சிசு கொலை, பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் பலாத்காரம் போன்றவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. இது போன்ற செய்திகள் அன்றாடம் வந்த வண்ணம் உள்ளன. இதுமிகுந்த வருத்தத்தைத் தருகிறது.

இதற்கு முடிவு கட்டி பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதற்காக சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உடனடியாக தண்டனை வழங்கும்படி சட்டம் கொண்டு வர வேண்டும்.

குஷ்பு, ராதிகா போன்றோர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்திருப்பது சந்தோஷமான விஷயம். அரசியலில் ஈடுபடுவது தவறானது அல்ல. அரசியலுக்கு வரவேண்டு மென்றால் மக்கள் அபிமானியாக இருக்க வேண்டும்.

நான் இப்போது பிராணிகள் நலனில் ஆர்வம் செலுத்தி வருகிறேன். நிறைய பேர் என்னிடம் தொடர்பு கொண்டு பேசி தங்களுக்கும் அது போன்ற ஆர்வம் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இது சந்தோஷமாக இருக்கிறது. சினிமாவில் நான் பத்து வருடமாக இருக்கிறேன். இப்போது தான் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களை எடுக்க ஆரம்பித்து உள்ளனர். அதற்கான மாற்றம் முளைக்க துவங்கியுள்ளது.

அரசியலில் ஈடுபடுவீர்களா என்று கேட்கிறார்கள். எதிர்காலத்தில் சமூக சேவை பணிகளில் ஈடுபட ஆர்வம் உள்ளது. உதவும் கரங்கள் அமைப்பில் இருந்து இரண்டு குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கிறேன். தகுதியான மாப்பிள்ளை கிடைக்கும் போது திருமணம் செய்து கொள்வேன்," என்றார்.

 

இந்த சல்மான், ஷாருக் கான் சண்டை ஓயாது போல: இப்ப என்னாச்சு தெரியுமா?

Shah Rukh Khan Challenges Salman Khan On His Turf

மும்பை: பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான் இடையேயான சண்டை ஓயவே ஓயாது போன்று.

பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கானுக்கும், சல்மான் கானுக்கும் எப்பொழுதுமே ஏழாம் பொருத்தம் தான். ஒருவரையொருவர் வம்புக்கு இழுக்கவில்லை என்றால் அவர்களுக்கு தூக்கம் வராது. இந்நிலையில் புதிய பிரச்சனைக்கு வழிவகுத்துள்ளார் ஷாருக்கான்.

அண்மை காலமாக சல்மான் கானின் படங்கள் ரம்ஜான் பண்டிகை அன்று வெளியாகிறது. அது என்னவோ ரம்ஜான் அன்று வெளியாகும் சல்மான் கானின் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிடுகிறது. ஆனால் வரும் ஆக்ஸ்ட் 8ம் வரும் ரம்ஜான் பண்டிகையின்போது சல்மானின் படம் எதுவும் ரிலீஸாகாது போல.

இதற்கிடையே ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் ரம்ஜான் பண்டிகைக்கு ரெடியாகிவிடுமாம். இந்நிலையில் ஷாருக் தனது படத்தை ரம்ஜான் அன்று வெளியிடத் தயாராகி வருகிறாராம்.

சல்மான் கான் போன்று தனது படமும் ஹிட்டாகிவிடும் என்ற நம்பிக்கையில் வெளியிடுகிறாரோ?

 

'ரோஜா பூ ஒன்று ராஜாவின் கைசேர'... இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் ஒரு பாட்டு!

Madhan Karki Dedicates Song Ilayaraa Vairamuthu

சென்னை: தமிழ் சினிமாவின் சாதனை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், முன்னிலை பாடலாசிரியர் வைரமுத்துவுக்கும் ஒரு பாடலை சமர்ப்பணம் செய்துள்ளார் மதன் கார்க்கி.

'தமிழ்ப்படம்' திரைப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு சி.எஸ்.அமுதன் ரெண்டாவது படம் என்ற தலைப்பில் புதிய படம் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நேற்று நடந்தது.

அதில் 'ரோஜா பூ ஒன்று ராஜாவின் கைசேர... வானம் செந்தூரம் சூடும்' என்ற பாடல் இடம்பெற்றுள்ளது.

80-களில் வெளிவந்த பாடல்களின் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள பாடல் இது. இளையராஜாவும்- வைரமுத்துவும் இணைந்து 80-களில் இணையற்ற பல பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பின் அந்த ஸ்டைலில் யாராலும் பாடல்களை கொடுக்க முடியவில்லை என்ற குறை இப்போது தமிழ் சினிமாவில் இருப்பதை உணர்ந்தே அமுதன் இந்த பாடலை எழுதச் சொன்னாராம்.

இந்த ரோஜா பூ பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். 80-களின் ஸ்டைலில் பாடல் எழுதிய அனுபவம் பற்றி பேசிய மதன் கார்க்கி, "80-களின் ஸ்டைலில் பாடல் எழுதியது எனக்கு சவாலாக இருந்தது. நான் சிறிய வயதிலிருந்தே இளையராஜா -வைரமுத்து இணைந்து உருவாக்கிய பாடல்களைக் கண்டு வியந்திருக்கிறேன். இந்தப் பாடலை எஸ்.பி.பி - சித்ரா பாடியிருக்கிறார்கள். நான் எழுதிய வரிகளை முதல்முதலாக இருவரும் பாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் பாடலை இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்," என்று கூறினார்.


ரோஜா பூ - பாடல் வரிகள்...

குழு - மயில் தோகை கொண்டே
விசிறி தோழன் ஒருவன் மயங்கிவிட்டானே
காதல் மதுவை அருந்தி...
திருக்கோவில் தீபம் எனவே
தோழி கைத்தலம் பிடிக்க வந்தாலே
தீயில் ஒளியாய் பொருந்தி...
கடல் சேரும் நீலம் எனவே
இசை சேரும் தாளம் எனவே
மகிழ்வோடு காலம் முழுதும் வாழ்கவே!

பல்லவி

ஆண் - ரோஜா பூ ஒன்று... ராஜாவின் கைசேர...
வானம் செந்தூரம் சூடும்
மாலை நிலவும் உன் போலே எழுந்து
மேகம் அணிந்து பாடும்
மாயம் புரிந்தாய்...
காற்றாய் நிறைந்தாய்...

குழு - உனக்கே பிறந்தாள்
இதயம் திறந்தாள்
நிலவாய் உன்னில் உதித்தாள்
காதல் தடம் பதித்தாள்

சரணம் - 1

ஆண் - தானாய் வந்ததொரு நந்தவனம்
என் சொந்தவனம்
பெண் - நீதான் காலமெங்கும் என் வசந்தம்
ஒரு பொன்வசந்தம்
ஆண் - தேன் மழை பொழியவா
பெண் - நான் அதில் நனையவா
ஆண் - உயிரே... உயிரில் இணையவா...

சரணம் - 2

பெண் - காமன் கோயிலுக்குள் போக மேடை
அதில் ராஜ பூஜை
ஆண் - மாமன் கைகளுக்குள் நூறு வித்தை
நீ பஞ்சு மெத்தை
பெண் - வேர்வையில் குளிக்கலாம்
ஆண் - பார்வையில் துடைக்கலாம்
பெண் - உறவே இரவை படிக்கலாம்

 

கமல் என் நெருங்கிய நண்பர் இல்லை.. ரஜினிதான்! - கேஎஸ் ரவிக்குமார்

Kamal Is Not My Friend Says Ks Ravi Kumar

சென்னை: கமல் ஹாசன் தனது நண்பர் இல்லை என்று இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசனுடன் அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம் மற்றும் தசாவதராம் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் பணியாற்றியுள்ளார் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்.

இந்நிலையில் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கமல் தனது நண்பர் இல்லை என்று சொல்லிவிட்டார்.

ரஜினிக்கு அரசியல் நிர்பந்தம் வந்த மாதிரி, கமலுக்கும் வந்துருச்சே... என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "ரஜினி அரசியலுக்கு வர்றது ஆண்டவன் கையில் இருக்கு. கமல் சார் மனசுல என்ன இருக்குனு நமக்குத் தெரியாதே?

தவிர, கமல் சார் எனக்கு நெருங்கிய நண்பர் இல்லை. ‘மன்மதன் அம்பு'க்குப் பிறகு அதிகபட்சம் நாலஞ்சு தடவை சந்திச்சிருப்போம்.

ஆனால் ரஜினி சார்கூட ரெண்டு, மூணு நாளைக்கு ஒரு முறை பேசிடுவேன்.

யாரா இருந்தாலும் நிர்பந்தம்னு ஒண்ணு இருந்தாதான் அரசியலுக்கு வர முடியும். சினிமாவைப் பொறுத்தவரைக்கும் அவர் மாஸ்... இவர் கிளாஸ். அரசியல் எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியலை."