சத்தியம் டிவியில் வரலாற்றின் மறுபக்கம்

சத்தியம் டிவியில் வரலாற்றின் மறுபக்கம்
சத்தியம் தொலைக்காட்சி வழங்கி வரும் ‘வரலாற்றின் மறுபக்கம்' ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்ற ஒரு நிகழ்ச்சியாக உள்ளது.

உலக நாடுகளில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் சாதனையாளர்களின் வாழ்க்கை பதிவுகள் வரலாற்றின் மறுபக்கத்தில் இடம் பெறுகின்றன . இதுவரை பார்த்திராத அரிதான நிகழ்வுகள் கொண்ட இந்நிகழ்ச்சியானது , பார்வையாளர்களை ஒவ்வொரு நாளும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது .

தெளிவான ஒளிப்பதிவில் பிரமாதமான தகவல்களை ஆவணக் களஞ்சியமாக வரலாற்றின் மறுபக்கத்தில் எடுத்து வருகிறார்கள். "உலகத்தில் முடிந்து போன பல விஷயங்கள் இனிவரும் காலங்களை புதுமையானதாக மாற்றுவதற்கு பெரும் உதவியாக இருக்கின்றன ."

அந்த வகையில் வரலாற்றின் மறுபக்கமும் பார்வையாளர்களை புதிய சாதனைகளைப் படைக்க நிச்சயம் தூண்டும். தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது . இதன் மறு ஒளிப்பரப்பை அடுத்த நாள் காலை 10.00 மணி அளவில் காணலாம்.

 

ரிவைசிங் கமிட்டிக்குப் போகிறது 'தலைவா'?

சென்னை: விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா வருமா வராதா என விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் கிசுகிசுத்துவரும் நிலையில், படத்துக்கு முதல் சிக்கல் தொடங்கியுள்ளது.

இந்தப் படத்துக்கு வழங்கப்பட்ட யு ஏ சான்றிதழை எதிர்த்து ரிவைசிங் கமிட்டிக்குப் போகிறார் தயாரிப்பாளர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தலைவா படம் அரசியல் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரிவைசிங் கமிட்டிக்குப் போகிறது 'தலைவா'?

இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் குழு, படத்துக்கு யு ஏ சான்று அளித்ததாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் சொல்லவில்லை.

இந்த நிலையில் ரிவைசிங் கமிட்டிக்கு இந்தப் படத்தை அனுப்பி யு சான்று பெறும் முயற்சியில் தீவிரமாகியுள்ளார் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின்.

சமீபத்தில் மரியான் படமும் இதே போல ரிவைசிங் கமிட்டிக்குப் போய் யுஏவை யுவாக மாற்றியது நினைவிருக்கலாம்.

ஏற்கெனவே தலைவா படம் குறித்து மர்மமான முணுமுணுப்புகள் இருந்து வரும் நிலையில், இப்போது சென்சார் பிரச்சினை எழுந்துள்ளது படத்தை 9-ம் தேதி எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் தியேட்டர்காரர்கள்தான்.

 

நடிகை லீனா மரியா பாலுக்கு ஜாமீன்!

நடிகை லீனா மரியா பாலுக்கு ஜாமீன்!

சென்னை: பல கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை லீனா மரியா பாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

பெங்களூரைச் சேர்ந்த சுகாஷ், கர்நாடக மாநில அரசு மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களின் உறவினர் என தன்னைக் கூறிக் கொண்டு பலரை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. அரசுப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் கோடிக்கணக்கான ரூபாயை வாங்கி, மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவரது நண்பரான கேரள நடிகை லீனா மரியா பாலுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஏராளமான வழக்குகள் சுகாஷ் மற்றும் லீனா மீது பதிவு செய்யப்பட்டுத.

கடந்த மே மாதம் லீனா மரியா பாலை டெல்லி பண்ணை இல்லத்தில் சென்னை போலீஸார் கைது செய்தனர். அப்போது நூலிழையில் தப்பிவிட்டார் சுகாஷ்.

சென்னை கொண்டுவரப்பட்ட லீனாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்ததும் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் அவர் பலமுறை மனு செய்தும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, லீனா மரியா பால் ரூ.2 லட்சத்துக்கான சொந்த பிணைத் தொகை செலுத்துவதுடன், தலா ரூ.1 லட்சத்துக்கான இரண்டு நபர்களின் உத்தரவாதத்தை அளித்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும், சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் அவர் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

 

சென்சார் அனுமதித்தாலும் ஸ்வேதா மேனன் நிஜ பிரசவ காட்சி உள்ள படத்தை எதிர்ப்போம் - பெண்கள் அமைப்புகள்

ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவ காட்சி இடம்பெற்று மலையாளப் படத்துக்கு சென்சார் அனுமதி வழங்கினாலும் அந்தப் படத்துக்கு எதிரான தங்கள் போராட்டம் தொடரும். ரிலீசாக விடமாட்டோம் என கேரள பெண்கள் அமைப்புகள் எதிர்பிபு தெரிவித்துள்ளன. .

தமிழ், மலையாளத்தில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர் ஸ்வேதா மேனன். திருமணத்துக்குப் பிறகும் படங்களில் நடிக்கும் அவர், தற்போது மலையாளத்தில் ‘களிமண்ணு' என்ற படத்தில் நடித்துள்ளார்.

சென்சார் அனுமதித்தாலும் ஸ்வேதா மேனன் நிஜ பிரசவ காட்சி உள்ள படத்தை எதிர்ப்போம் - பெண்கள் அமைப்புகள்

இப்படத்தை மலையாள இயக்குனர் பிளஸ்சி இயக்குகிறார். பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பின்போது ஸ்வேதா மேனன் கர்ப்பமாக இருந்தார். படத்தில் இடம் பெறும் ஒரு பிரசவக் காட்சியை தத்ரூபமாக படமாக்க இயக்குநர் விரும்பினார். எனவே ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவ காட்சியை படமாக்க முடிவு செய்தார். இதற்கு சுவேதா மேனனும் சம்மதித்தார். அதன்படி, ஸ்வேதா மேனனின் பிரசவத்தின்போது ஆபரேஷன் தியேட்டரில் வைத்து தத்ரூபமாக அக்காட்சி படமாக்கப்பட்டது.

நிஜ பிரசவ காட்சியை படமாக்கியதற்கு கேரளாவில் பெண்கள் அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. படத்தில் இருந்து அக்காட்சியை நீக்கவேண்டும். இல்லையென்றால் படம் வெளியாகும்போது போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்தனர்.

இந்நிலையில், இப்படத்தை சென்சார் குழுவுக்கு திரையிட்டு காட்டினர். படத்தை பார்த்த சென்சார் குழு, யு/ஏ சானறிதழ் வழங்கியது.

வரும் ஆகஸ்ட் 23ம் தேதி படம் வெளியாகிறது.

சென்சார் அனுமதித்தாலும் ஸ்வேதா மேனன் நிஜ பிரசவ காட்சி உள்ள படத்தை எதிர்ப்போம் - பெண்கள் அமைப்புகள்

பெண்கள் அமைப்புகள் போராட்ட அறிவிப்பு

ஏற்கெனவே இந்தப் படத்துக்காக ஒட்டப்பட்ட ஸ்வேதா மேனனின் கர்ப்பமான வயிற்றைக் காட்டும் போஸ்டர்களை எதிர்த்த பெண்கள் அமைப்புகள், இப்போது ஸ்வேதா மேனன் பிரசவக் காட்சிகளுக்கு சென்சார் அனுமதி வழங்கியதை எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரித்துள்ளன. படம் வெளியாவதற்கு முன் இந்த போராட்டம் நடக்கும் என அறிவித்துள்ளன.

கேரள சபாநாயகர் கார்த்திகேயன் இந்தப் படத்தை எதிர்த்துப் பேசியது நினைவிருக்கலாம்.

 

பெப்பர்ஸ் டிவி கோல்டன் மூவிஸ்… ஒரு படம் ஒரே பிரேக்

பெப்பர்ஸ் டிவியின் கோல்டன் மூவியில் ரசிகர்கள் இடைஞ்சல் இல்லாமல் படம் பார்க்கலாமாம்.

தொலைக்காட்சிகளில் படம் பார்ப்பது ஈஸியான விசயமில்லை முழு படத்தை பார்க்க மணிக்கணக்கில் விளம்பரத்தை பார்த்தே ஆகவேண்டிய கட்டாயம். போனால் போகட்டும் என்று பிட் பிட்டாக படத்தை காட்டுவார்கள்.

பெப்பர்ஸ் டிவி கோல்டன் மூவிஸ்… ஒரு படம் ஒரே பிரேக்

ஆனால் பெப்பர்ஸ் டிவியில் தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒரே ஒரு பிரேக்தான் விடுகின்றனராம். இதனால் இடைஞ்சலின்றி படங்களை கண்டு ரசிக்கலாம் என்கின்றனர்.

தினந்தோறும் பகல் 1.30 மணிக்கு கோல்டன் மூவிஸ் நேரத்தில் பழைய படங்களை ஒளிபரப்புகின்றனர். ரசிகர்களிடம் இதற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

 

சூர்யா படம் கைவிடப்படவில்லை... ஆக 21-ல் ஷூட்டிங்! - உறுதி செய்த லிங்குசாமி

சூர்யா படம் கைவிடப்படவில்லை... ஆக 21-ல் ஷூட்டிங்! - உறுதி செய்த லிங்குசாமி

சென்னை: சீமான் கதையை காப்பியடித்த லிங்குசாமியின் படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டதாக வந்த செய்தியை லிங்குசாமி மறுத்துள்ளார்.

சூர்யா நடிக்கும் படத்தை தான் இயக்குவது உறுதி என்று தெரிவித்துள்ள லிங்குசாமி, வரும் ஆகஸ்ட் 21ம் தேதி படப்பிடிப்பு தொடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கவுதம் மேனனின் துருவநட்சத்திரம், லிங்குசாமியின் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் நடிப்பதாக சூர்யா ஒப்பந்தமானார்.

துருவநட்சத்திரம் கடந்த மாதமே அறிவிக்கப்பட்டு பின்னர் கதை, கதாநாயகி விஷயத்தில் கருத்து வேறுபாடு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

எனவே லிங்குசாமி படத்தை உடனடியாகத் தொடங்க முடிவு செய்தார் சூர்யா.

ஆனால் அந்தப் படத்தின் கதை சீமானின் பகலவன் கதையின் ஜெராக்ஸ் காப்பி என்று தெரிய வந்ததால் சூர்யா இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கடந்த வாரம் செய்தி வெளியானது.

இந்த நிலையில், லிங்குசாமி படத்தின் கதை மாற்றப்பட்டுவிட்டதாகவும், சூர்யா சம்மதத்துடன் வரும் 21ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்றும் லிங்குசாமியே அறிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

 

சோலார் பேனல் மோசடி: மம்முட்டியிடமும் போலீஸ் விசாரணை?

சோலார் பேனல் மோசடி: மம்முட்டியிடமும் போலீஸ் விசாரணை?

திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி தொடர்பாக முன்னணி மலையாள நடிகர் மம்முட்டியிடம் கேரள போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

சோலார் பேனல் மோசடியில் கைதான பிஜு ராதா கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி சரிதா நாயரிடம் பண ஆதாயம் பெற்றவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் இடம் பெற்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பட்டியலில் நடிகர் மம்முட்டியின் பெயரும் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

பிஜு ராதாகிருஷ்ணன்- சரிதாநாயரின் நிறுவனம் கொச்சியில் நடத்திய ஒரு விழாவில் நடிகர் மம்முட்டி கலந்து கொண்டார். அந்த விழாவில் மம்முட்டிக்கு விருது வழங்கியதோடு அவருக்கு ரூ.10 லட்சம் பணமும் கொடுத்ததாக பிஜு ராதாகிருஷ்ணன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் போலீசார் நடிகர் மம்முட்டியிடம் இதுபற்றி விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

ஆனால் இதனை நடிகர் மம்முட்டி மறுத்துள்ளார். கொச்சியில் நடந்த விழாவில் கலந்து கொண்டபோது, தனக்கு விருதும், ரூ.25 ஆயிரம் பணம் மட்டுமே தரப்பட்டதாகவும், அந்தப் பணத்தைக் கூட ஒரு அனாதை இல்லத்திற்கு கொடுத்துவிட்டதாகவும் மம்முட்டி கூறியுள்ளார்.

 

பாலிவுட்டின் சிறந்த நடிகர் அமிதாப்- பிரிட்டன் கருத்துக் கணிப்பில் முடிவு

சென்னை: பாலிவுட்டின் மிகச் சிறந்த நடிகராக இந்தி நடிகராக அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இங்கிலாந்தில் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் அமிதாப் பச்சன் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாலிவுட்டின் சிறந்த நடிகர் அமிதாப்- பிரிட்டன் கருத்துக் கணிப்பில் முடிவு

பிரிட்டிஷ் ஆசிய வாராந்திரப் பத்திரிகை 'இந்தியாவின் சிறந்த 100 பாலிவுட் நட்சத்திரங்கள்' என்ற தலைப்பில் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் அமிதாப்பச்சன் விமர்சகர்கள், ரசிகர்கள், திரையுலக சக கலைஞர்கள் போன்ற ஏராளமானவர்களின் வாக்குகளைப் பெற்று முதல் இடம் பிடித்தார்.

முதுபெரும் நடிகர் திலிப் குமாருக்கு இரண்டாவது இடமும், ஷாருக்கான் மூன்றாவது இடமும் பிடித்துள்ளனர். நடிகை ஸ்ரீதேவிக்கு 10-வது இடம் கிடைத்துள்ளது.

மற்ற நடிகர்கள் பெற்ற இடங்கள்:

சல்மான் கான்-11, அமீர்கான்-14, தர்மேந்திரா- 15, ஹேமா மாலினி -18, மதுபாலா -24, கஜோல் -30, ஹிரித்திக் ரோஷன் -32, ராணி முகர்ஜி -38, கரீனா கபூர் -43, பிரியங்கா சோப்ரா -86, கேத்ரீனா கைப் - 93.

 

ரூ 100 கோடிக்கு உதயம் காம்ப்ளெக்ஸை வாங்கியது சத்யம்?

ரூ 100 கோடிக்கு உதயம் காம்ப்ளெக்ஸை வாங்கியது சத்யம்?

சென்னை: சென்னையின் பெரிய திரையரங்குகளில் ஒன்றான உதயம் காம்ப்ளெக்ஸை ரூ 100 கோடிக்கு சத்யம் சினிமாஸ் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எண்பதுகளில் கட்டப்பட்ட மிக முக்கியமான தியேட்டர் காம்ப்ளெக்ஸ் உதயம். தென் சென்னை மக்களுக்கு பல நல்ல சினிமாக்கள் பார்க்கும் வாய்ப்பை வழங்கிய இந்த அரங்கம், கடந்த சில ஆண்டுகளாக நிர்வாகப் பிரச்சினையில் சிக்கியுள்ளது.

இந்த காம்ப்ளெக்ஸில் உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன் என நான்கு அரங்குகள் உள்ளன. மொத்தம் 2198 பேர் படம் பார்க்க முடியும்.

இவற்றுக்கு உரிமையாளர்கள் மொத்தம் 53 பேர். 6 குடும்பங்களைச் சேர்ந்த இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு நீதிமன்றத்துக்குப் போனார்கள்.

இந்த சொத்தை விற்க ஒரு குழு அமைக்கப்பட்டது. நகரின் பிரதான இடத்தில் அமைந்துள்ள இந்த தியேட்டரை வாங்க ஏராளமான நிறுவனங்கள் போட்டி போட்டன. கடைசியில் சத்யம் சினிமாஸ் இதனை ரூ 100 கோடிக்கு பேசி முடித்துவிட்டதாகத் தெரிகிறது.

சத்யம் சினிமாஸ் சென்னை அண்ணா சாலையை ஒட்டி 4 தியேட்டர்களுடன் ஸ்ரீகாம்ப்ளெக்ஸ் என்ற பெயரில் ஆரம்பமானது. பின்னர் அதில் தியேட்டர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது (சத்யம், சாந்தம், செரீன், சீஸன்ஸ், ஸ்டுடியோ 5, சிக்ஸ் டிக்ரீஸ்).

அடுத்து எஸ்கேப் அவென்யூவில் எட்டு திரையரங்குகளை கையகப்படுத்தியது. பின்னர் பெரம்பூரில் எஸ் 2 என்ற பெயரில் 5 திரையரங்குகளையும், திருவான்மியூர் தியாகராஜாவை புதுப்பித்து எஸ் 2 தியாகராஜா என்ற பெயரில் 2 அரங்குகளையும் உருவாக்கியுள்ளது சத்யம்.

அடுத்து போரம் மாலில் 11 அரங்குகள், பீனிக்ஸ் மாலில் 11 திரையரங்களை தொடங்கத் திட்டமிட்டுள்ளது. நடிகர் சங்க வளாகத்தில் 8 அரங்குகளை உருவாக்கத் திட்டமிட்டு, நீதிமன்ற வழக்கு காரணமாக அப்படியே நிற்கிறது.

ஓஎம்ஆர், கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் வண்டலூர் பகுதிகளிலும் புதிய பலதிரை அரங்குகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது சத்யம்.