சென்னை: தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வீட்டுக்கு நடிகர் விஜய் சென்று அவரது குடும்பத்தாருடன் நேரம் செலவிட்டார்.
கடந்த மாதம் 25ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வீர மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இளையதளபதி விஜய் முகுந்த் வீட்டுக்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அங்கு அவர் முகுந்தின் மகளுடன் இரண்டு மணிநேரம் செலவிட்டார். தந்தையை பறிகொடுத்துவிட்டு நிற்கும் சிறுமியுடன் விளையாடி மகிழ்ந்தார்.
சிறுமியின் முகத்தில் சிரிப்பை வரவழைத்த விஜய் அவளின் எதிர்கால ஆசையை கேட்டறிந்தார். மேலும் முகுந்தின் குடும்பத்தாருக்கு உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தார்.
விஜய் மடியில் முகுந்தின் மகள் அமர்ந்து புன்னகை சிந்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.