மேடிக்கு வயசு 42: சிகாகோவில் கொண்டாட்டம்

Maddy Turns 42   
நடிகர் மாதவன் தனது 42வது பிறந்தநாளை இன்று சிகாகோவில் கொண்டாடுகிறார். இன்றிரவு பிறந்தநாள் பார்ட்டி கொடுக்கிறார்.

இயக்குனர் மணிரத்னத்தின் அலைபாயுதே மூலம் தமிழுக்கு வந்தவர் மாதவன். மாதவன் என்றாலே நம் நினைவுக்கு வருவது அவரது க்யூட் ஸ்மைல் தான். புன்னகை மன்னன் மாதவன் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

பாலிவுட் நடிகை பிபாஷாவின் டுவீட்:

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடி. ராஜா மாதிரி வாழ வேண்டும். சீக்கிரம் திரும்பி வாருங்கள். நாங்கள் உங்களை மிஸ் பண்ணுகிறோம்.

குஷ்பு வாழ்த்து:

ஹே மேடி, பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்பம், வெற்றி, அமைதி கிடைக்க வாழ்த்துக்கள்.

ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவும் மாதவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மாதவன் தற்போது தனது குடும்பத்தோடு சிகாகோவில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரை சிகாகோவில் இருப்பதிலேயே காஸ்ட்லியான கோல்ப் கிளப்பிற்கு அழைத்துச் செல்ல அவரது நண்பர்கள் திட்டமிட்டுள்ளனர். இன்று இரவு மாதவன் தனது கையோலேயே சமைத்து தனது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் விருந்து கொடுக்க திட்டமிட்டுள்ளார்.

மாதவனுக்கு கோல்ப் என்றால் மிகவும் பிடிக்கும். எந்த ஒரு சினிமா நட்சத்திரத்துடனும் கோல்ப் விளையாடாத மணிரத்னம் மாதவன் சென்னைக்கு வரும்போது அவருடன் சேர்ந்து கோல்ப் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

ஒரு பெண்ணுக்கு மஞ்சள் நிற புடவை கொடுத்து... மிஷ்கின்

Won T Act As Hero Again Mysskin
இனிமேல் ஹீரோவாக நடிக்கப் போவதில்லை என்று இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

நந்தா பெரியசாமி இயக்கிய அழகன் அழகி படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அதில் இயக்குனர் மிஷ்கின் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, என் நண்பன் பாலாஜி சக்திவேல் எடுத்த படம் வழக்கு எண் 18/9. நான் காரைக்காலில் ஷூட்டிங்கில் இருந்தபோது அந்த படத்தைப் பற்றித் தான் அடிக்கடி கேட்பேன். சென்னைக்கு வந்ததும் முதல் வேளையாக பாலாஜிக்கு போன் செய்து படம் எப்படி ஓடுகிறது என்றேன். அதற்கு அவனோ ஓ.கே. என்றான்.

ஒரு கலைஞன் ஓகே என்றால் அவனது படைப்பை மக்கள் ஆதரிக்கவில்லை என்று தான் அர்த்தம். பாலாஜி சக்திவேல் எடுத்த காதல் படத்தை விட வழக்கு எண் 18/9 மிகவும் சிறப்பானது. பாலாஜி 2 ஆண்டுகளாக செதுக்கி செதுக்கி எடுத்த படத்தை தமிழக மக்கள் ஏன் கொண்டாடாமல் போனார்கள். அந்த படத்தை என்னிடம் கொடுத்திருந்தால் ஒரு பெண்ணுக்கு மஞ்சள் நிற புடவை கொடுத்து ‘வாலமீனு வெளாங்கு மீனு’ என்று பாடச் சொல்லி ஹிட்டாக்கியிருப்பேன்.

ஆனால் பாலாஜியின் கண்ணியமான படத்திற்கு அங்கீகாரம் இல்லை. அப்ப எப்படித் தான் படம் எடுக்க வேண்டும்?. கையெடுத்து கும்பிடுகிறேன் திரைத்துறையில் 2,3 காந்திகள் தான் உள்ளனர். அவர்களையும் சுட்டு விடாதீர்கள். அவர்கள் மறைவிற்கு பிறகு பாராட்டியோ, சிலை வைத்தோ புண்ணியம் இல்லை.

இனி நான் ஹீரோவாக நடிக்க மாட்டேன். எனக்கு ரசிகர் மன்றங்கள் வேண்டாம் என்றார்.

மிஷ்கின் தான் இயக்கிய நந்தலாலா படத்தில் ஹீரோவாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
 

மோசடி வழக்கு.. கோர்ட் வளாகத்தில் நடந்த 'பவர் (ஸ்டார்)' மோதல்!

Sivakasi Court Action Packed When Power Star Arrived    | ஆனந்த தொல்லை  
சிவகாசி: நிதி மோசடி வழக்கில் சிவகாசி நீதிமன்றத்தில் பவர் ஸ்டார் ஆஜராக வந்தபோது அங்கு அவரது ஆதரவாளர்களுக்கும், மனுதாரரின் ஆட்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

லத்திகா என்ற படத்தை தயாரி்த்து, இயக்கியதுடன் தானே ஹீரோவாகவும் நடித்து நானும் இருக்கிறேன் என்று நிரூபித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். சாதாரண சீனிவாசனாக இருந்த அவர் தன் பெயருக்கு முன்னால் பவர் ஸ்டார் என்னும் பட்டத்தை தானாகவே சேர்த்துக் கொண்டார்.

அவர் பிரபலமாக ஃபேஸ்புக், யூ டியூப் ஆற்றிய பங்கு கொஞச, நஞ்சமல்ல. சளைக்காமல் படங்கள் எடுத்து நடிக்கும் அவர் அடுத்ததாக ஆனந்த தொல்லை என்ற படத்தின் மூலம் நம்மையெல்லாம் விரைவில் சந்திக்கவிருக்கிறார்.

தாஸ் என்பவரிடம் பவர் ஸ்டார் சீனிவாசன் \ரூ. 9 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிவகாசி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக சீனிவாசன் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் அவரது ஆதரவாளர்களுக்கும், தாஸின் ஆட்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து மோதலில் ஈடுபட்ட அனைவரையும் கூண்டோடு அள்ளிக் கொண்டு போய் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

அஜீத்துடன் டூயட் பாடுவாரா அனுஷ்கா?

Will Anushka Love Ajith Kumar   
சிறுத்தை பட இயக்குனர் சிவா எடுக்கும் படத்தில் தல அஜீத் குமார் நடிக்கவிருக்கிறார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது.

கார்த்தியை வைத்து சிறுத்தை படம் எடுத்த சிவா தற்போது அஜீத் குமாரை வைத்து ஒரு படத்தை எடுக்கவிருக்கிறார். இந்த படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவிருக்கிறது. இதில் அஜீத் குமாருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கவிருக்கிறாராம்.

அவரை சந்தித்து கதை சொன்னவுடன் அவருக்கு கதை மிகவும் பிடித்துவிட்டதாம். தான் இந்த படத்தில் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் வெறும் பேச்சு, பேச்சாகத் தான் இருக்கிறது. விருப்பம் தெரிவி்த்த அவர் கால்ஷீட் பற்றி மூச்சு விடவில்லையாம். இருப்பினும் அவர் விரைவில் கால்ஷீட் தருவார் என்று சிவா மலை போல் நம்புகிறாராம்.

அப்படி அனுஷ்கா ஒப்புக் கொண்டால் அஜீத்துடன் அவர் ஜோடி சேரும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அஜீத் விஷ்ணுவர்தனின் படத்தில் பிசியாக இருக்கிறார். அனுஷ்கா கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், விக்ரமுடன் தாண்டவம், ஆர்யாவுடன் இரண்டாம் உலகம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அவர் விரைவில் அஜீத் படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

மக்கள் டிவியில் சொல்லி அடி குறுக்கெழுத்துப் போட்டி

Makkal Tv Crosswords Program Solli Adi
குறுக்கெழுத்து புதிர்களுக்கு விடை எழுதுவது மூளை வளர்ச்சிக்கு உதவும். பெரும்பாலான நாளிதழ்கள், வார இதழ்களில் இந்த குறுக்கெழுத்துப் புதிர்போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆனால் புதிதாக மக்கள் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ‘சொல்லிஅடி’ என்ற குறுக்கெழுத்துப் போட்டி நடத்தப்படுகின்றன. இது ஒரு நேரலை நிகழ்ச்சி.

நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்கும் கேள்விக்கு ஏற்ப பதில் கூறி குறுக்கெழுத்து போட்டியின் கட்டங்களில் நிரப்பவேண்டும். சரியான பதில் கூறுபவர்களுக்கு வீட்டு உபயோகப்பொருட்களை பரிசாக வழங்குகின்றனர் மக்கள் தொலைக்காட்சி நிறுவனத்தினர். இரவு நேரத்தில் மூளைக்கு சுறுசுறுப்பை தரும் நிகழ்ச்சி என்பதால் வரவேற்பு அதிகரித்துள்ளது.

 

சார்மிளாவிற்கு அடித்த லக்!

Sharmila Gets Lucky With Captan Tv
ஒயிலாட்டம் படத்தில் ஒயிலாக வந்த நடிகை சார்மிளாவை நினைவிருக்கிறதா? மலையாள நடிகையான சார்மிளாவை பாபு ஆன்டனி என்ற வில்லன் நடிகரை காதலித்து, அந்தக் காதல் நிறைவேறாத சோகத்தில் தற்கொலைக்கு முயன்று, ஒட்டுமொத்த திரையுலகின் அனுதாபத்தை சம்பாதித்தவர்.

கொஞ்ச காலம் மீடியாக்களின் கண்களில் சிக்காமல் ஒதுங்கியிருந்த அவர் கம்ப்யூட்டர் என்ஜினியரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் பெரிய கேரக்டர்கள் கிடைக்காத காரணத்தால் சின்னத் திரைக்கு வந்தார். இப்போது கேப்டன் டிவியில் இன்னொரு பொறுப்பான பதவி கிடைத்திருக்கிறதாம். 'கேப்டன் டிவி' நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களில் முக்கிய இடத்தை அளித்திருக்கிறார் சார்மிளாவுக்கு. கேப்டன் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. பம்பரமாகச் சுழன்று வேலை பார்க்கும் சார்மிளா, முன்னணி சேனல்களுக்கு சவால் விடுகிற மாதிரி புதுப்புது நிகழ்ச்சிகளுக்கு ஐடியா கொடுக்கிறாராம்.

சார்மிளா என்றாலே சார்மிங் என்பதை நிரூபித்து விட்டார் என்றே மீடியா உலகில் பேச்சு அடிபடுகிறது.
 

இம்ரானுக்கு 16 தடவை பளார் விட்ட கத்ரீனா

11 Katrina Kaif Slaps Imran Khan 16 Times Aid0128   | மேரே பிரதர் கி துல்ஹன்   | இம்ரான் கான்  
பாலிவுட் நடிகர் இம்ரான் கானை சக நடிகை கத்ரீனா கைப் பளார் பளான கன்னத்தில் அறைந்துள்ளார். அதுவும் 16 தடவை!

உடனே கற்பனையைத் தட்டிவிடாதீங்க. செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் பாலிவுட் படம் 'மேரே பிரதர் கி துல்ஹன்'. அந்த படத்தில் ஆமீர் கான் மருமகன் இம்ரான் கான், கத்ரீனா கைப், பாகிஸ்தானிய நடிகர் அலி ஜாபர் ஆகியோர் நடிக்கின்றனர். அதில் ஒரு காட்சியில் கத்ரீனா இம்ரானை அறைய வேண்டும்.

கத்ரீனாவுக்கு இம்ரான் மேல் என்ன கடுப்போ என்னவோ தெரியவில்லை. 16 டேக் வாங்கியிருக்கிறார். கன்னம் சிவக்க, சிவக்க அறை வாங்கியிருக்கிறார் இம்ரான்.

16 டேக்குக்கு பிறகு இயக்குனர் ஓகே சொல்ல அன்றைய படபிடிப்பு முடிந்தது.

மறுநாள் படபிடிப்புக்கு வந்த இம்ரானுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. செட்டில் நுழைந்ததும், நுழையாததுமாய் நேற்று எடுத்த காட்சியில் கத்ரீனாவுக்கு திருப்தி இல்லையாம். அதனால் இன்றும் கன்னதில் அறையும் காட்சி தான் என்று சொல்லியிருக்கின்றனர். பாவம் இம்ரான் என்ன சொல்ல முடியும், அமைதியாக அறை வாங்கினார்.

காதல் படங்களுக்குப் புகழ்பெற்ற யாஷ் ராஜ் பிலிம்ஸ்-ன் மேரே பிரதர் கி துல்ஹன் ஒரு முக்கோணக் காதல் கதை. சகோதரனுக்காக பெண் பார்க்கச் சென்றவன் அந்த பெண் மீது காதல் கொள்கிறான். இறுதியில் அந்த பெண் யாருக்கு என்பதுதான் கதை!
 

சீரியல் ஹீரோக்கள் எல்லோரும் ஜீரோக்கள் தானா?

Tamil Tv Serial Heros Or Zeros
சினிமா என்றாலே அது கதாநாயகனைச் சுற்றிய கதையாகத்தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத நியதி. திரைப்படங்களில் கதாநாயகி என்பவர் கதாநாயகனை காதலிக்கவும், டூயட் பாடவும்தான் என்று முடிவு செய்து விடுகின்றனர். இந்த நியதியை கே. பாலசந்தர் போன்ற ஒரு சில இயக்குநர்கள்தான் மாற்றியிருக்கின்றனர்.

20 வயது கதாநாயகியுடன் ஜோடியாக நடித்த 30 வயது கதாநாயகனுக்கு 50 வயதானாலும் ஹீரோ வேஷம்தான் கொடுப்பார்கள். அதேசமயம் அந்த கதாநாயகியை ஹீரோவின் அம்மாவாக்கிவிடுவார்கள். இது சினிமாவில் எழுதப்படாத நியதி.

இதையெல்லாம் பார்த்து பொங்கி எழுந்த நடிகைகள் சிலர் சீரியலில் தங்களின் பலத்தை காட்ட ஆரம்பித்துவிட்டனர். விளைவு சின்னத்திரையில் ஹீரோக்களை ஜீரோக்களாக்கிவிட்டு தாங்கள்தான் ஆல் இன் ஆல் அழகுராணிகள் என்பது போல சீரியல்களில் வலம் வருகின்றனர். அதேசமயம் தங்களின் எண்ணப்படியே கதாநாயகர்களை டம்மியாக்கி எல்லாமே தாம்தான் தம்மால் மட்டுமே அதை சாதிக்க முடியும் என்ற அளவில் கதை, திரைக்கதையை அமைத்து விடுகின்றனர்.

இன்றைக்கு தனியார் தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்களின் பெயர்களை எடுத்துக்கொண்டாலே தெரியும் அனைத்து தொடர்களும் கதாநாயகியை போற்றும் விதமாகவே இருக்கும். ஒரு சில சீரியர்களின் பெயர்களைத் தவிர அனைத்து சீரியல்களின் தலைப்பும் பெண் தொடர்புடையதாவே இருக்கும். உதாரணமாக திருமதி செல்வம், சாந்தி நிலையம், செல்லமே, அழகி, முத்தாரம், தங்கம் போன்ற தொடர்களில் மட்டுமல்ல நூற்றுக்கு 90 சதவிகித தொடர்களில் கதாநாயகி ஆதிக்கம்தான்.

போனால் போகட்டும் என்று சில தொடர்களின் ஹீரோக்களை பேச விட்டிருப்பார்கள்.

சீரியல் கதாநாயகர்கள் எல்லாம் கதாநாயகி சொல்வதை கேட்கவேண்டும். வீட்டில் ஒரு ஆளாக இருக்க வேண்டும். கதாநாயாகியின் செயல்பாடுகளுக்கு துணையாக இருக்க வேண்டும் என்ற அளவிலேயே கதைகள் பின்னப்படுகின்றன. இதைத்தான் சீரியல் பார்க்கும் பெண்களும் விரும்புகின்றனர் என்று வேறு கூறப்படுகிறது. இதனால்தான் சீரியல் ஹீரோக்கள் எல்லாம் ஜீரோக்களாக மாற்றப்படுகின்றனரோ என்ற எண்ணம் எழுந்துள்ளது.

அதையெல்லாம் விட ஒரு கொடுமை என்னவென்றால் கதாநாயகிக்கு 50 வயதாகும் ஆனால் கதாநாயகனோ 35 வயது உடையவராக இருப்பார். அந்த கதாநாயகனும் பிரபலமான ஒரு தொடரில் கதாநாயகன் என்ற அந்தஸ்து கிடைக்கிறதே என்பதற்காக வேறு வழியின்றி வயது கூடிய நடிகைகளுக்கு ஜோடியாக நடிக்க சம்மதிக்கின்றனர்.

அதேபோல் சினிமாவில் தங்களுடன் ஜோடியாக நடித்த நடிகர்களை எல்லாம் சீரியலில் அப்பாவாக்கி அழகு பார்க்கின்றனர் சீரியல் கதாநாயகிகள். இது எப்படி இருக்கு?.

இப்படி சீரியல் ஹீரோக்கள் பற்றி எழுத ஆரம்பித்தால் நாம் ஒரு தொடர் போடலாம். நமக்கெல்லாம் ஒரு விமோசனம் கிடைக்காத என்று ஏங்கித் தவிக்கும் எங்களுக்கு ஆறுதல் செய்யவாவது ஒரு சீரியல் எடுங்கப்பா என்கின்றனர் பாதிக்கப்பட்ட ஹீரோக்கள். யாராவது கை தூக்கி விட்டா சரிதான்.
 

விஜய் டிவி நிகழ்ச்சியில் ரூ.1 கோடி வெல்வார்களா 'ஜெயம்' சகோதரர்கள்?

Jayam Raja Ravi Neengalum Vellalam Oru Kodi
தொலைக்காட்சிகளின் ரியாலிட்டி ஷோக்களில் சினிமா, சின்னத்திரை நடிகர்களை பங்கு பெற வைத்து அவர்கள் வெல்லும் பரிசுத் தொகையை நற்காரியங்களுக்கு பயன்படுத்துவது இன்றைக்கு பிரபலமடைந்து வருகின்றது. இதனால் நிகழ்ச்சியைப் பார்க்கும் நேயர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். நிகழ்ச்சிக்கான வரவேற்பும் கூடும்.

விஜய் டிவியின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் அடிக்கடி பிரபல நட்சத்திரங்கள் பங்கு பெற்று வருகின்றனர். நடிகை ஸ்ருதி, நடிகர் கார்த்தி, சின்னத்திரை நட்சத்திரங்கள் போன்றோர் பங்கு பெற்றிருக்கின்றனர். அந்த வரிசையில் வியாழக்கிழமை இரவு இயக்குநர் ராஜா, அவரது சகோதரர் ஜெயம் ரவி ஆகியோர் பங்கு பெற்றனர்.இந்த நிகழ்ச்சியில் தாங்கள் வெல்லும் பரிசுத்தொகையை இசையமைப்பாளர் மகேஸ் அவர்களின் புற்றுநோய் அறக்கட்டளைக்கு கொடுக்கப்போவதாக தெரிவித்தனர் சகோதர்ரகள்.

மிகவும் சுவாரஸ்யமாகவும், கலகலப்பாகவும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜாவும், ஜெயம் ரவியும் தங்கள் குழந்தை பருவ நினைவுகளை சூர்யாவுடன் பகிர்ந்து கொண்டது நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பம்சமாக இருந்தது. நிகழ்ச்சியின் இடையே நடிகர் ஜெயம் ரவி சென்னை செந்தமிழ் பாடலுக்கு அபிநயம் பிடித்து அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டார்.

நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் கூறி 12 கேள்விகள் வரை பதில் கூறி 12 லட்சத்து 50 ஆயிரம் வரை பரிசுத்தொகையை பெற்றனர். நிகழ்ச்சியை தொடர்ந்து விளையாடுவதற்கும் நேரம் முடிவடைந்து விட்டது. இதனையடுத்து அவர்கள் திங்கட்கிழமை அவர்கள் தொடர்ந்து விளையாடுவார்கள் என்று அறிவித்தார் நிகழ்ச்சி தொகுப்பாளர் சூர்யா. இதனால் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நீங்களும் வெல்லலாம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் சகோதரர்கள் ஒருகோடி வெல்வார்களா என்பதைக் காண திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டும். அவர்கள் ஜெயிக்கும் பணம் அறக்கட்டளைக்கு செல்லப்போகிறது என்பதால் அதிக அளவில் பணம் வெல்ல வேண்டும் என்றே நேயர்களும் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
 

சகுனியில் நான் ரஜினி.. சந்தானம் கமல்! - கார்த்தி

Karthi Is Rajini Saguni
சகுனி படத்தின் இசைவெளியீட்டுக்குத் தேதி குறித்து அழைப்பிதழும் வைத்துவிட்டார்கள்.

சிறுத்தைக்குப் பிறகு கொஞ்சம் இடைவெளிவிட்டு வரும் இந்தப் படத்தில் கார்த்தி ரஜினியாகவும், சந்தானம் கமலாகவும் வருகிறார்களாம்.

இதுகுறித்து ஹீரோ கார்த்தி கூறுகையில், "சகுனி எனக்கு ரொம்ப பிடிச்ச படமாக வந்திருக்கு. ஒரு பொதுவான பிரச்சினையை என் புத்திசாலித்தனத்தால தீர்த்து, கூடவே தன்னையும் காப்பாத்திக்கிற கேரக்டர். இது அரசியல் படமா என்பதை பார்த்துவிட்டு நீங்கள்தான் சொல்லணும். காரணம், எதுலதான் அரசியல் இல்லாம இருக்கு... அப்படி பார்த்தா இது அரசியல் படம்தான்...

இந்தப் படத்தில் சந்தானம் என்னை ரஜினி என்று அழைப்பார், நான் அவரை கமல் என்று அழைப்பேன்," என்றார்.

ஜூன் 2-ம் தேதி படத்தின் இசை வெளியாகிறது. மொத்தம் 5 பாடல்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே கார்த்தி பிறந்த நாளான மே 25-ல் இரண்டு பாடல்களின் முன்னோட்டத்தை வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
 

ஜெனிலியா, தபு, வித்யா பாலனை நினைச்சிட்டு உற்சாகத்தோடு போனேன், ஆனால்..! - ஆர்யாவின் ஏமாற்றம்

Arya S Disappointment   
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்துள்ள உருமி திரைப்படத்தின் நாயகர்கள் ஆர்யா, பிரித்விராஜ் உள்ளிட்டோர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து, அந்தப் படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளரான நடிகர் பிருத்விராஜ், “நேற்று (புதன் கிழமை) இரவுக் காட்சிக்கு சத்யம் திரையரங்குக்குச் சென்ற போது இது நம்ம படம்தானா என்கிற சந்தேகமே வந்துவிட்டது... அந்த அளவிற்கு அரங்கு நிறைந்த காட்சிகளாக உருமி à®"டிக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி…

உருமி மலையாளத்தில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். சந்தோஷ் சிவனின் திட்டமிட்ட உழைப்பில் கிட்டத்தட்ட 65 நாட்களில் எடுக்கப்பட்ட படம்.

மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் பேசிவிட்ட உருமி விரைவில் ஆங்கிலம் பேச இருக்கிறது. இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை ஜப்பான் வாங்கியிருப்பதே உருமியின் வெற்றிக்குச் சான்று.

தமிழில் கலைப்புலி எஸ் தாணு முன்வந்தது போல ஹிந்தியில் யாராவது முன்வந்தால் நிச்சயம் ஹிந்தியிலும் உருமி வெளியாகும்," என்றார்.

ஆர்யா இந்தப் படத்தில் பிருத்விராஜுக்கு அப்பாவாக நடித்திருக்கிறார்

இதுபற்றி அவர் கூறுகையில், "பிருத்திவிராஜுக்கு அப்பாவாக நடிக்கணும் என்ற போது கொஞ்சம் யோசித்தேன். ஆனால் கதையில் அந்த கதாபாத்திரத்திற்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து தான் நடித்தேன்.

படத்தில் வித்யாபாலன், ஜெனீலியா, தபு, நித்யாமேனன் என பலர் நடிக்கின்றனர் என்று கூறியதால் படப்பிடிப்பு ஜாலியாக இருக்கும்னு நெனச்சிக்கிட்டு உற்சாகவா போனேன். ஆனா என்னை மட்டும் தனியா வச்சி எடுத்திட்டாங்க.

அதுவும் மூணே நாட்களில் எடுத்துட்டாங்க. à®'ருவேளை நான் கதைப்படி முந்தைய தலைமுறை ஆள் என்பதால், இந்த ஹீரோயின்களை கண்ணுலயே காட்டல போலிருக்கு...” என்றார்.
 

'நான் ராஜாவாகப் போகிறேன்' - சாந்தினிக்கு கிடைத்த 'பிரேக்!'

Santhini Naan Raajavaaga Pogiren
இயக்குநர் கே.பாக்யராஜின் அறிமுகங்கள் சோடை போனதில்லை. இதற்கு முந்தைய உதாரணங்கள் அம்பிகா, ஊர்வசி, சுலக்ஷனா, கல்பனா என நிறைய பேரைச் சொல்லலாம்.

பாக்யராஜின் 'சித்து +2' வில் அறிமுகமானவர் சாந்தினி. சொல்லிக் கொள்கிற நடிப்பு வாய்ப்புள்ள படங்களாக மட்டும் தேர்வு செய்து à®"சைப்படாமல் முன்னேறி வருகிறார்.

விஸ்காம் மாணவி சாந்தினி. முதல்படம் வர்த்தக ரீதியில் பெரிய வெற்றியாக அமையாவிட்டாலும், இவரது நடிப்புக்கு ஏக பாராட்டுக்களாம்.

"முதல் படத்திக்குப் பின் விளம்பர வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தன. நான் நடித்த இரண்டாவது படம் 'படித்துறை' படப்பிடிப்பு முடிந்துவிட்டது. முதல் படத்துக்கு மாறாக கிராமத்துப் பெண் வேடம். இதற்கிடையே ஏகப்பட்ட விளம்பரங்கள் வந்தன.

குறிப்பாக போத்தீஸ் விளம்பரங்களில் பிரபல முகமாகிவிட்டேன். சிங்கப்பூர்,துபாய் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் விளம்பர மாடலிங் செய்து விட்டேன்.

போத்தீஸ் விளம்பரம் பார்த்து மூன்று படங்கள் வந்துள்ளன. தமிழில் நகுலுடன் 'நான் ராஜாவாகப் போகிறேனில் நடிக்கிறேன். இதை இயக்குபவர் ப்ருத்வி. இவர் வெற்றிமாறனின் உதவி இயக்குநர். இப்படத்துக்கு வெற்றி மாறன்தான் வசனம் எழுதுகிறார். இதுதவிர இரண்டு தெலுங்குப் பட வாய்ப்புகள்.

'நான் ராஜாவாகப் போகிறேன்' வித்தியாசமான ஆக்ஷன் படம். இதில் நான் சட்டக் கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். திருநெல்வேலி ஸ்லாங் பேசும் என் கேரக்டர். 'புதுசாக இருக்கும்'," என்கிறார் சாந்தினி.

சாந்தினியைப் பார்க்கும் பலரும் கேட்கும் கேள்வி... 'நீங்கள் நடிகை ஜெனிலியா போலவே இருக்கிறீர்களே...? என்பதுதானாம்.

இதுபற்றி அவர் கூறுகையில், "எனக்கு இதைக் கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது," என்கிறார்.
 

அஜீத் - ஆர்யா படம் தொடங்கியாச்சு!

Ajith Arya Movie Launched Without Fanfare
அஜீத் - ஆர்யா முதல் முறையாக இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு சத்தமில்லாமல் தொடங்கிவிட்டது.

விஷ்ணுவர்தன் இயக்கும் இந்த மெகா பட்ஜெட் படத்தை ஏ எம் ரத்னம் மேற்பார்வையில் ஸ்ரீசத்ய சாய் மூவீஸ் தயாரிக்கிறது.

படத்தின் முதல்நாள் ஷூட்டிங், ஏ எம் ரத்னம் புதிதாகக் கட்டியுள்ள விஸ்வரூப ஸ்ரீஷிர்டி சாய் பாபா மந்திரில் பூஜையுடன் தொடங்கியது.

நடிகர் அஜீத், ஆர்யா, இயக்குநர் விஷ்ணுவர்தன், எழுத்தாளர்கள் சுபா, எடிட்டர் நானி, காமிராமேன் பிஎஸ் வினோத், காஸ்ட்யூம் டிசைனர் அனுவர்தன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வந்திருந்த அனைவரையும் ஏ எம் ரத்னம், தயாரிப்பாளர் ரகுராம் வரவேற்றனர்.

படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நாளை மும்பையில் தொடங்குகிறது. படத்தின் நாயகிகள் நயன்தாரா, டாப்ஸி ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர்.

தமிழ் சினிமாவின் மிகப் பிரமாண்ட படமாக இது அமையும் என தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் நம்பிக்கையுடன் கூறினார்.
 

தம்மடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் - உதயநிதி ஸ்டாலின்

Udayanidhi Says No Smoking Scenes
புகைப்பிடிக்கும் காட்சிகளில் à®'ருபோதும் நடிக்க மாட்டேன் என்று நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று கும்பகோணம் வந்தார். அவர் நடித்த à®'ரு கல் à®'ரு கண்ணாடி படத்தின் 50-வது நாள் விழாவில் பங்கேற்றார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், "சினிமாவில் சீர்திருந்த படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பேன். புகைப் பிடிக்கும் காட்சி, புகையிலை பயன்படுத்தும் காட்சியில் நடிக்க மாட்டேன். குடிப்பது போன்ற காட்சிகளைக் கூட தவிர்க்க முயற்சிக்கிறேன்.

வித்தியாசமான கதைகளுக்காக காத்திருக்கிறேன். ஜனரஞ்சகமான, காமெடி படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பேன். à®'ரு கல் à®'ரு கண்ணாடி படத்தில் எனது நடிப்பில் குறைகள் இருக்கலாம். அதை என்னிடம் தாராளமாக சொல்லுங்கள். எனக்கேற்ற மாதிரி வித்தியாசமான ஆக்ஷன் படங்களிலும் நடிப்பேன். அட வில்லன் ரோலாக வந்தாலும் வித்தியாசமாக இருந்தால் நடிக்க ஆசை.

எனக்கு எல்லா இயக்குநர்களும் பிடிக்கும். ஆனாலும் ராஜேஷ் படத்தில் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன். சந்தானத்துடன் கூட்டணி மீண்டும் தொடரும். வடிவேல் நல்ல நண்பர். அவருடனும் சேர்ந்த நடிக்க விரும்புகிறேன்," என்றார்.

முன்னதாக நிகழ்ச்சியில் தஞ்சை, கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்.

தமிழில் முதல் இடத்தைப் பிடித்த 6 மாணவ - மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கினார்.
 

நடிகர் சங்கத் தேர்தலில் விதிகள் மீறல்: நிர்வாகிகளாக சரத்குமார், ராதாரவி நீடிக்க தடை கோரி வழக்கு

Case Against Sarathklumar Radharavi Retain
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விதிகளை மீறி, நிர்வாகிகளாக சரத்குமார், ராதாரவி ஆகியோர் நீடிப்பதற்கு தடை கோரி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் எஸ்.முருகன் என்ற பூச்சி முருகன் தாக்கல் செய்த மனுவில், "நான் 2006-ம் ஆண்டில் இருந்து தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறேன். இந்த சங்கத்தின் 2012-15-ம் ஆண்டுக்கான தேர்தல் அறிவிக்கை 30.4.12 அன்று வெளியானது. தேர்தல் அலுவலராக பிறைசூடன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் ஜுன் 10-ந் தேதி நடக்க உள்ளது.

நகல் தரவில்லை

இந்த நிலையில் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராதாரவி, தலைவர் சரத்குமார் ஆகியோருடன் இணைந்து அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் அலுவலர் செயல்பட்டு வருகிறார். இவர்கள் தற்போது வகிக்கும் பதவி ஜுலை வரை நீடித்தாலும், அவசரமாக தேர்தலை நடத்துகின்றனர்.

இதற்காக சங்க விதிகளையும், தமிழ்நாடு சங்க பதிவுச் சட்டங்களையும் மீறி செயல்படுகின்றனர். இந்த தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின் நகலைக் கேட்டு கடந்த மே 14-ந் தேதி விண்ணப்பித்தேன். ஆனால் இதுவரை பட்டியலை எனக்கு தரவில்லை.

நடிகர் குமரிமுத்து உள்ளிட்ட மேலும் சிலருக்கும் தேர்தல் சம்பந்தப்பட்ட தகவல்களை கொடுக்க மறுக்கின்றனர். சங்க பதிவுச் சட்டத்தின்படி தொடர்ந்து ஆண்டுக் கணக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அந்த சட்டம் மீறப்பட்டுள்ளது.

இதற்காகவே இந்த சங்கத்தை சங்கப் பதிவாளர் எடுத்துக் கொண்டு நடத்த முடியும். இவர்களே மீண்டும் சங்க நிர்வாகப் பொறுப்புக்கு வரும் நோக்கத்தோடு விதிகளை மீறி செயல்படுகின்றனர். எனவே அவர்கள் இந்த சங்கத்தின் தேர்தலை முன்னிட்டு நிர்வாகப் பொறுப்பில் நீடிக்க தடை விதிக்க வேண்டும்," என்று கோரியுள்ளார்.

நோட்டீஸ்

இந்த மனுவை சிட்டிசிவில் கோர்ட்டு நீதிபதி பி.சரவணன் விசாரித்தார். விசாரணையை ஜுன் 5-ந் தேதிக்கு தள்ளி வைத்த அவர், அன்று பிரதிவாதிகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.