என் பொண்ணு திரிபுர சுந்தரி (எ) அஞ்சலியை யாரோ கடத்திட்டாங்க: கமிஷனரிடம் சித்தி புகார்

சென்னை: நடிகை அஞ்சலியை யாரோ கடத்தியுள்ளதாக அவரது சித்தி பாரதி தேவி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

நடிகை அஞ்சலியின் சித்தி பாரதிதேவி இன்று எழும்பூரில் இருக்கும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தார்.

anjali is kidnapped aunt approaches police

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

வளசரவாக்கம் பாத்திமா நகரில் கணவர் சூர்யா மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். எனது அக்கா பார்வதி தேவியின் கணவர் பிரிந்து சென்ற பிறகு 2 பெண் மற்றும் ஆண் குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வந்தார். இதனால் அவரது 3 வது குழந்தையான அஞ்சலி என்கிற திரிபுர சுந்தரியை கோடம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி தத்து எடுத்து வளர்த்து வந்தேன். எனது மகள் அஞ்சலியை நடிகையாக்க வேண்டும் என்ற கனவுகளுடன் வாய்ப்புத் தேடி வந்த போது மு.களஞ்சியம் இயக்கி வந்த சத்தமின்றி முத்தமிடு என்ற படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு தந்தார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த படம் இடையில் நின்று போனது. அதன் பிறகு சில படங்களில் சம்பளம் இல்லாமல் அஞ்சலி நடித்து வந்தார். அந்த படங்களும் நின்று போயின. அதன் பிறகு வெயில், அங்காடி தெரு, கலகலப்பு படங்களில் நடித்து புகழ் பெற்றார். அவர் நடித்து வெளிவந்துள்ள சேட்டை என்ற படம் நல்ல முறையில் ஓடிக் கொண்டு இருக்கிறது. சூர்யாவுடன் சிங்கம் 2 உள்பட தெலுங்கில் சில படங்களிலும் நடித்து வருகிறார். சில படங்களுக்கு ஒப்பந்தமும் ஆகியிருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த 8ம் தேதி எனது கணவர் சூர்யாவுடன் படப்பிடிப்புக்காக ஹைதாராபாத் சென்று இருந்த அஞ்சலி மாயமாகிவிட்டார். அவர் எங்கு சென்றார் என்று தெரியாமல் திண்டாடி வந்தோம். இந்த அதிர்ச்சியில் இருந்து நாங்கள் மீள்வதற்குள் என் மீதும், இயக்குனர் மு.களஞ்சியம் மீதும் எனது மகள் அஞ்சலி பொய் செய்திகளை பரப்பி வருகிறார். அவர் சம்பாதித்த பணத்தை எல்லாம் நாங்கள் பறித்துக் கொண்டோம் என அபாண்டமான பழியை சுமத்தி வருகிறார்.

அவர் ஒரு போதும் இப்படியெல்லாம் பேச மாட்டார். அவரை யாரோ சிலர் கடத்திச் சென்றுள்ளனர் என சந்தேகம் அடைகிறேன். அவரை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

அம்மா நான் பத்திரமாக இருக்கேன்: கொஞ்சம் டிஸ்டர்ப் ஆயிட்டேன்- போனில் பேசிய அஞ்சலி

ஹைதராபாத்: ஹைதராபாத் ஹோட்டலில் இருந்து மாயமான நடிகை அஞ்சலி தனது தாய் பார்வதி தேவிக்கு போன் செய்து தான் பத்திரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அஞ்சலி தனது சித்தி பாரதி தேவி மற்றும் இயக்குனர் களஞ்சியம் மீது மோசடி புகார் தெரிவித்தார். இதையடுத்து சென்னையில் இருந்து வெளியேறிய அவர் போல் பச்சன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஹைதராபாத் சென்று அங்கு ஒரு ஹோட்டலில் தங்கி ஷூட்டிங் சென்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் அவரைக் காணவில்லை.

anjali calls mom says i m safe
அவர் மாயனது குறித்து அவரது அண்ணன் ரவிசங்கர் மீது சந்தேகமாக உள்ளதாக அவரது சித்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அஞ்சலி இன்று தனது அம்மா பார்வதிக்கு போன் செய்து தான் பத்திரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். தான் இருக்கும் இடத்தை தெரிவிக்காத அவர் தற்போதைய பிரச்சனைகளால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் அதனால் தான் ஹோட்டலில் இருந்து சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
 

ஏப்ரல் 14-ம் தேதியே கோச்சடையான் ஃபர்ஸ்ட் லுக்?

Kochadaiyaan First Look On April 14

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் - தி லெஜன்ட் படத்தின் சிறிய ட்ரைலர் அல்லது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஏப்ரல் 14-ம் தேதியே வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஜினி, தீபிகா, சரத்குமார், ஷோபனா உள்பட பலரும் நடித்துள்ள 3 டி மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பப் படம் கோச்சடையான்.

தமிழ், ஆங்கிலம், ஜப்பான் உள்பட 7 மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. படத்தின் இரு ஸ்டில்களைத் தவிர வேறு எதையும் இதுவரை தயாரிப்பாளரோ, இயக்குநரோ வெளியிடவில்லை.

இந்த நிலையில் படத்தின் முதல் டீசர் (முன்னோட்டம்) மே மாதம் பிரான்சில் நடக்கும் கேன்ஸ் பட விழாவில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ரஜினியே இதை வெளியிடுவதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் வரும் ஏப்ரல் 14-ம் தேதியே இந்த முதல் டீசரை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்களாம். ஆனால் இது ட்ரைலராக இருக்காது, ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் போஸ்டராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

திட்டமிட்டபடி கேன்ஸ் விழாவில் படத்தின் ஒரு பாடல் மற்றும் டீசர் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கேஎஸ் ரவிக்குமார் இயக்க மேற்பார்வையில், சௌந்தர்யா ரஜினி இயக்கியுள்ளார்.

 

டெய்லர் ரவி மூலம் சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட கன்னட நடிகை

சென்னை: டெய்லர் ரவி என்ற புரோக்கர் மூலம் சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பில் விபச்சாரத்தில் ஈடுபட்ட கன்னட நடிகை பிரியா என்பவரை போலீஸார் பிடித்துள்ளனர்.

சென்னை சேத்துப்பட்டு மெக்னிக்கல்ஸ் சாலையில் பிரபலமான ஒரு மருத்துவமனை இருக்கிறது. அதற்கு அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் சில வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் இங்கு தங்கிச் செல்வது வழக்கம். இதற்கான வாடகையை பன்னீர்செல்வம் என்பவர் வசூலித்து வந்தார்.

இந்த நிலையில் இந்த அடுக்குமாடிக்குடியிருப்பில் இரவில் ஆண்கள் பெண்களுடன் வந்து செல்வதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் கண்காணிக்க ஆரம்பித்தனர்.

நேற்று இரவு தனிப்படை போலீசார் குடியிருப்பில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது 2 வாலிபர்கள் 2 பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுவதற்கு அழைத்து வந்தது தெரியவந்தது. அந்த பெண்களை போலீசார் மீட்டனர்.

அதில் ஒரு பெண்ணின் பெயர் பிரியா. பெங்களூரைச் சேர்ந்த இவர் கன்னட நடிகை ஆவார். இவர்களை அண்ணாநகரைச் சேர்ந்த விபசார புரோக்கர் டெய்லர் ரவி என்பவர்தான் அனுப்பி வைத்து இருந்தது தெரியவந்தது. 2 பெண்களும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

அந்த பெண்களுடன் இருந்த வாலிபர்கள் பிரசன்னா, சிவக்குமார் மற்றும் தங்க இடம்கொடுத்த குடியிருப்பு மானேஜர் பன்னீர்செல்வம் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். டெய்லர் ரவியைத் தேடி வருகின்றனர் போலீஸார்.

 

மறுபடியும் 22 மணி நேரம் 'ப்ரீ'யாக நடித்த ஷெர்லின் சோப்ரா!

Sherlyn Chopra Stays Nude 22 Hours   

மும்பை: பப்ளிசிட்டி பிரியையான ஷெர்லின் சோப்ரா, காமசூத்ரா 3டி படத்துக்காக 22 மணி நேரம் நிர்வாணமாக இருந்ததை மாய்ந்து மாய்ந்து சொல்லி வருகிறார்.

லேசாக சேலையின் முந்தானை நழுவினாலோ அல்லது மார்ப்பு நழுவினாலோ அல்லது இடுப்பு லேசாக தெரிந்து விட்டாலோ அல்லது மார்பின் நடுவே முந்தானை விலகிக் கிடந்தாலோ நம்ம ஊர்ப் பெண்கள் வெட்கப்பட்டு வளைந்து நெளிந்த காலம் இப்போது போய் விட்டது.

நல்லபடியாக கிடக்கும் துணியைக் கூட இழுத்து கோக்குமாக்காக விட்டுக் கொள்வதுதான் இப்போது பேஷனாகி விட்டது. அந்த வரிசையில் ஷெர்லின் சோப்ராவும் தான் கவர்ச்சியாக இருந்த கோலத்தை சொல்லிச் சொல்லி புளகாங்கிதமடைந்து கொண்டிருக்கிறாராம்.

அதாவது காமசூத்ரா 3டி படத்தில் நடிக்கிறார் ஷெர்லின் சோப்ரா. படம் முழுக்க இவருக்கு நிர்வாணக் காட்சிகள்தான் நிறையய . சமீபத்தில் கூட அவரை நிர்வாணமாக வைத்து பல காட்சிகளை எடுத்தனர். அதற்காக பல மணி நேரம் நிர்வாணமாக செட்டுக்குள் இருந்தாராம் ஷெர்லின். நிர்வாணமாக இருந்ததால் ஏற்பட்ட டென்ஷனைக் குறைக்க தம் அடித்தபடி காணப்பட்டாராம்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் நிர்வாணக் கோலத்தில் நடித்துள்ளாராம். இந்தக் காட்சிகளை 22 மணி நேரம் படமாக்கினராம். இந்தக் காட்சியின்போது உடல் முழுக்க பாடி பெயிண்ட் அடித்திருந்தனராம் ஷெர்லினுக்கு. காட்சி தத்ரூபமாக வந்துள்ளதாம். அந்த அளவுக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தாராம் ஷெர்லின்.

அது சரி...

 

பிரபு மகனை அடுத்து கார்த்திக் மகனோடு ஜோடி சேரும் லக்ஷ்மி மேனன்

Gautham Karthik Pairs With Lakshmi

சென்னை: கும்கி புகழ் லக்ஷ்மி மேனன் சரவணன் இயக்கும் படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடிக்கிறார்.

கௌதம் கார்த்திக் மணிரத்னத்தின் கடல் படத்திற்கு பிறகு ஐஷ்வர்யா ரஜினிகாந்தின் படத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் சிலம்பாட்டம் புகழ் இயக்குனர் சரவணன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்கிறார்.

கடல் படத்தில் மீனவராக நடித்த கௌதம் இதில் கல்லூரி மாணவராக நடிக்கிறார். அவரின் காதலி தான் லக்ஷ்மி. ஃபோட்டோஷூட் முடிந்துவிட்டது. வரும் மே மாத இறுதியில் ஷூட்டிங் துவங்கவிருக்கிறது.

கடல் படம் பெரிய பில்ட்அப் கொடுக்கப்பட்டு கடைசியில் புஸ்ஸானதால் கவலையில் இருக்கும் கௌதமிற்கு இந்த படம் கை கொடுக்கட்டும்.

 

இனியும் எஸ்எஸ்எல்சி சொல்லாதீங்க.. நான் இப்போ ப்ளஸ் ஒன்! - லட்சுமி மேனன்

Lakshmi Menon S Wish Study More

கும்கி, சுந்தரபாண்டியன் நாயகி லட்சுமி மேனனை இனி எஸ்எஸ்எல்சி மாணவி என்று யாரும் சொல்ல முடியாது. ஆமாம்... அப்படி யாராவது சொன்னால் அவர் உடனே சொல்வது, 'இனியும் அப்படி சொல்லாதீங்க, நான் ப்ளஸ் ஒன் போயாச்சு!'

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே சினிமாவில் நடிக்க வந்து விட்டார் லட்சுமி மேனன். தமிழில் முதல் நிலை நாயகியாகிவிட்ட லட்சுமி, நடிப்புடன் படிப்பையும் தொடர்கிறார்.

சமீபத்தில் நடிப்புக்கு இரண்டு மாதங்கள் முழுக்குப் போட்டுவிட்டு, கொச்சிக்குப் போய் எஸ்எஸ்எல்சி தேர்வை எழுதி முடித்தார்.

அடுத்து இப்போது ப்ளஸ் ஒன் போகிறாராம். யாராவது அவரைப் பார்த்து பத்தாம் வகுப்பு படிக்கும்போதே முன்னணி நடிகை ஆகிட்டீங்களே என்றால், "அய்யோ.. நான் பத்தாம் வகுப்பு முடிச்சிட்டேன். இப்போ ப்ளஸ் ஒன் போறேன்...," என்கிறார் செல்லமாக.

நடிப்பு, படிப்பு.. எது உங்கள் சாய்ஸ் என்றால், "நடிப்பு படிப்பு இரண்டுமே பிடித்திருக்கிறது. விடுமுறையில் படங்களில் நடிப்பேன். ஆசிரியர்களும், சக மாணவர்களும் படிப்பில் எனக்கு உதவியாக இருக்கிறார்கள். படித்துக் கொண்டே நடிப்பேன்," என்றார்.

 

பல காதலர்களுடன் பல முறை ஓடிப் போனவர் அஞ்சலி: சித்தி பாரதி தேவி

சென்னை: அஞ்சலி ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை காதலித்து அவர்களுடன் வீட்டை விட்டு ஓடிப் போனவர் என்று அவரது சித்தி பாரதி தேவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவருடைய சித்தி பாரதி தேவி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நான் அஞ்சலியின் சித்தி என்பது உண்மையே. அவள் என் அக்கா பார்வதி தேவியின் மகள். என் அக்கா ஆந்திராவில் உள்ள ஜெகன்பேட்டையில் வசித்து வருகிறார். ஒரு ஆண் குழந்தை மற்றும் அஞ்சலியை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்ட என் அக்காவை விட்டுவிட்டு அவரது கணவர் ஓடிவிட்டார். இதையடுத்து என் அக்கா இரண்டாவது முறையாக திருமணம் செய்து 2 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகளை பெற்றார்.

anjali eloped with many persons aunt

இந்நிலையில் பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்த அஞ்சலி ஸ்ரீராம் என்ற பையனை காதலித்து வீட்டை விட்டு ஓடிவிட்டாள். ஒரு மாதம் கழித்து தான் அவளை கண்டுபிடிக்க முடிந்தது. சென்னையில் வசித்த நான் ஜெகன்பேட்டைக்கு சென்று கட்டிய பாவாடை தாவணியுடன் அஞ்சலியை என்னுடன் அழைத்து வந்தேன். எனக்கு பெண் குழந்தை இல்லாததால் அவளை என் மகளாக வளர்த்தேன். நான் கஷ்டப்பட்டு அவளை நடிகையாக்கினேன். அவளுக்கு இயக்குனர் களஞ்சியம் 6 மாதங்கள் நடிப்பு பயிற்சி அளித்தார்.

அஞ்சலி முதன்முறையாக செலுங்கு படம் ஒன்றில் சம்பளம் வாங்காமல் நடித்தாள். அந்த படம் ஓடவில்லை. இதையடுத்து மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தாள். அதுவும் ஓடவில்லை.

அவள் முதன்முதலாக கன்னட படம் ஒன்றுக்கு தான் சம்பளம் வாங்கினாள். அவளுக்கு ரூ.50,000 சம்பளம் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு மலையாள படம் ஒன்றில் நடித்து ரூ.1 லட்சம் சம்பளம் பெற்றாள். கற்றது தமிழ் படத்திற்கு அவளுக்கு சம்பளம் இல்லை. ஆயுதம் செய்வோம் படத்திற்கு ரூ.1 லட்சம் கொடுத்தார்கள். எங்கேயும் எப்போதும் படத்திற்கு ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கினாள். கருங்காலி படத்திற்கு ரூ.8 லட்சம் கொடுத்தனர். சேட்டை படத்திற்கு தான் அவளுக்கு பெரிய தொகையாக ரூ. 20 லட்சம் கிடைத்தது.

அவள் சம்பாதித்த பணத்தில் அவள் பெயரில் வளசரவாக்கத்தில் வீடு வாங்கி கொடுத்தேன். இதற்கிடையே அவள் எத்தனை முறை வீட்டை விட்டு ஓடினாள் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.

ஒரு முறை என்னை வீட்டின் அறைக்குள் பூட்டிவிட்டு கன்னட இயக்குனர் பரத்ஷா என்பவருடன் ஓடிவிட்டாள். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வெளியே வந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு சென்று பெங்களூர் செல்லும் பேருந்தில் இருந்த அவளை வீட்டுக்கு அழைத்து வந்தேன். இவ்வளவு கஷ்டப்பட்டு அவளை நட்சத்திர நடிகையாக்கியதற்கு அவள் பரிசாக என்னை சித்தி என்று கூறிவிட்டாள் என்று கண்கலங்கியபடி கூறினார்.

இந்நிலையில் பாரதிதேவி தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளிக்க பேட்டி வருமாறு,

அஞ்சலி நடிகையானதும் அவள் சம்பளத்தில் ஒரு பங்கு எனக்கும், ஒரு பங்கு அஞ்சலிக்கும், ஒரு பங்கு அவளது அம்மாவுக்கும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. அஞ்சலிக்கு முதலில் பட வாய்ப்பு கொடுத்தவர் என்ற பெயரில் அவளுக்கு களஞ்சியம் சில ஆலோசனைகள் கூறுவார். அவர் குடும்ப விஷயத்தில் தலையிடுவதில்லை. அஞ்சலிக்கு கோடிக் கணக்கில் எல்லாம் சொத்து இல்லை. அவள் எங்கு இருக்கிறாள் என்று தெரிய வந்தாலே போதும். அவளின் அண்ணன் ரவிசங்கர் மீது தான் சந்தேகமாக உள்ளது என்றார்.