விஜய் பக்கம் திரும்பும் பெரிய இயக்குனர்கள்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விஜய் பக்கம் திரும்பும் பெரிய இயக்குனர்கள்!

2/7/2011 11:49:50 AM

இளைய தளபதி விஜய்க்கு இந்த ஆண்டு சிறப்பாக தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு வெளிவந்த அவரது படமான் காவலன் ஹிட்டானது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த விஜய், ஷங்கர் மற்றும் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது என்று கூறினார். இதனையடுத்து அவர் எதர்பார்த்தபடி ஷங்கரின் ‘நண்பன்’ படத்தில் நடிக்கிறார் விஜய், தொடர்ந்து ராவணாவுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய், – விக்ரம் மற்றும்- விஷாலலுடன் (வி3!) இணைந்து நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது, இந்தப் படம் பொன்னியின் செல்வன் சரித்திரக் கதையின் தழுவலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Source: Dinakaran
 

பெரிய ஹீரோவா?ஒரு பாட்டுக்கு ரெடி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பெரிய ஹீரோவா? ஒரு பாட்டுக்கு ரெடி

2/7/2011 2:12:04 PM

கீர்த்தி சாவ்லா கூறியது: குமரன் இயக்கும் 'முதல் இடம்Õ என்ற படத்திற்கு 'ஊரு ஊரு தஞ்சாவூருÕ என்ற பாடலுக்கு ஹீரோ விதார்த்துடன் நடனம் ஆடிய காட்சி தஞ்சாவூர் தெருக்களில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியது ஏன்? எனக் கேட்கிறார்கள். ஒரு பாடலுக்கு ஹீரோயின்கள் ஆடுவது புதிதல்ல. மேலும் இப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கிறது. பெரிய பேனர் என்பதால் ஒப்புக்கொண்டேன். அதுபோல் பெரிய ஹீரோக்கள் படத்தில் இப்படியொரு வாய்ப்பு வந்தால் ஏற்பேன். ஒரு பாடலுக்கு ஆடுவது, கவரவ வேடத்தில் தோன்றுவதெல்லாம் இப்போது பாலிவுட்டில் புது டிரெண்டாக உருவாகி இருக்கிறது. தமிழிலும் ஹீரோ, ஹீரோயின்கள் அப்படி நடிக்கின்றனர். ஏற்கனவே ஹீரோயினாக நடித்து வரும் 'திருமதி தமிழ்Õ படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. இதுதவிர எஸ்.வி.சேகர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். எந்த நேரத்திலும் வாய்ப்புக்காக எல்லை மீறி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்.


Source: Dinakaran