நீச்சல் உடைக்கு தயாரா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நீச்சல் உடைக்கு தயாரா?

6/25/2011 12:49:29 PM

மேக்னா கூறியது: தமிழில் 'காதல் சொல்ல வந்தேன்' படத்தில் நடிப்பு பற்றி கற்றுக்கொண்டேன். தற்போது 'உயர்திரு நானூற்றி இருபது' படத்தில் கார் கம்பெனியில் வேலை செய்யும் மாடர்ன் கேர்ளாக நடிக்கிறேன். இதன் ஷூட்டிங் மலேசியா, சென்னை, பெங்களூரில் நடந்தது. அடுத்து 'கள்ளச் சிரிப்பழகா', 'நந்தா நந்திதா' ஆகிய படங்களிலும் மலையாளத்தில் சரத்குமாருடன் 'அச்சன்ட ஆண்மக்கள்' உள்பட 2 படங்களிலும், கன்னடத்தில் ஒரு படமும் நடிக்கிறேன். கிளாமர் வேடங்களில் மட்டுமில்லாமல் கிராமத்து பெண் வேடத்திலும் நடிக்க ஆசை. 'நந்தா நந்திதா' படத்தில் கிராமத்து டச்சுடன் எனது வேடம் அமைந்துள்ளது. 'நயன்தாரா, த்ரிஷா, ஸ்ரேயா போன்ற முன்னணி நடிகைகளில் எந்த நடிகையின் இடத்தை பிடிக்க ஆசை?' என்கிறார்கள். அவரவர்களுக்கு உள்ள இடத்தை யாரும் பிடிக்க முடியாது. எனக்கென்று ஒரு இடம் நிச்சயம் பிடிப்பேன். 'நீச்சல் உடையில் நடிப்பீர்களா?' என்றும் கேட்கிறார்கள். இதுவரை நீச்சல் உடையில் நடிக்க யாரும் கேட்க வில்லை. அப்படி கேட்கும்போது அதுபற்றி முடிவு செய்வேன்.

 

அவன்-இவன்: பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்


அவன் இவன் படத்தில் அவதூறாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகள் குறித்து தொடரப்பட்ட வழக்கில் இயக்குநர் பாலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது அம்பாசமுத்திரம் நீதிமன்றம்.

அவன்-இவன் திரைப்படத்தில் ஜமீ்ன் தீர்த்தப்பதி மற்றும் சொரிமுத்து அய்யனார் கோயில் குறித்த அவதூறு காட்சிகளையும், வசனங்களையும் நீக்க கோரி சிங்கம்பட்டி சமஸ்தானம் இளைய ஜமீன்தார் டிஎன்எஸ்எம் சங்கர் ஆத்மஜன் அம்பாசமுத்திரம் கூடுதல செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கில் இடைக்கால பரிகாரம் கோரி மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ராமசுப்பிரமணியன், வக்கீ்ல்கள் ராஜங்கம், ராமு, சண்முகசுந்தரம், சந்திரன், முத்துராமன் வாதிட்டனர்.

வாதங்களை கேட்ட நீதிபதி மும்மூர்த்தி, இப்படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ் அகோரம், டைரக்டர் பாலா, நடிகர்கள் ஆரியா ஜிஎம் குமார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
 

அவன் இவனில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்க வேணடும் : போலீஸ் அதிகாரிகள்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அவன் இவனில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்க வேணடும் : போலீஸ் அதிகாரிகள்!

6/25/2011 12:28:54 PM

பாலாவின் அவன் இவன் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளில் இடம்பெற்றுள்ள ஆட்சேபணைக்குரிய சில காட்சிகளை நீக்குமாறு படக்குழுவினரைக் கேட்டுக் கொண்டுள்ளார் கோவை மாநகர கமிஷனர் அம்ரேஷ் பூஜாரி. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் குறிப்பிட்ட சமூக மக்களின் இஷ்டதெய்வமான சொரிமுத்து அய்யனாரை கேலி செய்வதாகவும் சில காட்சிகளில் ஜமீனைக் கேலி செய்வதாகவும் கூறி சில அமைப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். கோவையைச் சேர்ந்த அரசியல் கட்சி ஒன்றும் இதுகுறித்து மாநகர கமிஷனர் அம்ரேஷ் பூஜாரியை சந்தித்து, பாலா, விஷால், ஆர்யா மீது வழக்கு பதிவு செய்யவுமாறு புகார் கொடுத்தனர். இதையடுத்து இரு போலீசாரை நேற்று இரவு தியேட்டருக்கு அனுப்பி அவன்-இவன் படத்தை பார்க்கச் செய்த கமிஷனர், சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கும்படி படக்குழுவினரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை கமிஷனரும் நிருபர்களிடம் உறுதிப்படுத்தினார். போலீசாரின் வேண்டுகோளுக்கு பாலாவின் பதில் என்ன என்பது நாளை தெரிந்துவிடும்.




 

'சத்தமில்லாமல்' வந்த கருணாநிதி பேரன் படம்!


கடந்த ஆண்டு கிட்டத்தட்ட சீஸனில் வெளியான படம் வம்சம். ஹீரோ அருள்நிதி. அன்றைய முதல்வர் கருணாநிதியின் பேரன்.

இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ், பட வெளியீடு எல்லாமே பிரமாண்டமாக இருந்தன. ஒவ்வொரு நிகழ்வும் கருணாநிதி முன்னிலையில் நடந்தது. பாண்டிராஜன் இயக்கிய இந்தப் படமும் ஓரளவு நன்றாகவே ஓடியது.

சரியாக ஒரே ஆண்டில் நிலைமை தலைகீழ். யாரோ ஒரு புதுமுகத்தின் படம் வெளியாவதைப் போல சத்தமில்லாமல் வெளிவந்துள்ளது அருள் நிதி நடிப்பில் தயாராகியுள்ள உதயன்.

பரணிதா ஜோடியாக நடிக்க, சாப்ளின் இயக்கியுள்ள இந்தப் படம் வெள்ளிக்கிழமை வெளியானது.

திமுக ஆட்சிக் காலத்தில் அவர்களது குடும்பத்தினர் தயாரிப்பில் அல்லது விநியோகத்தில் வெளியான படங்களுக்குத்தான் திரையரங்குகள் முதலிடம் தந்தன. இப்போதோ, இதிலும் நிலைமை தலைகீழ் என்கிறார்கள் திரையுலகினர்.
 

பிரபுதேவாவைச் சந்திக்காமல் விரதமிருந்த நயன்தாரா!


தெலுங்கில் ஸ்ரீ ராமராஜ்யம் என்று ஒரு படம் தயாராகிறது. இதில் நயன்தாரா சீதை வேடத்தில் நடிப்பதும் அதற்கு எதிர்ப்பு கிளம்பி அடங்கியதும் தெரிந்த விஷயம்.

தெரியாதது, சீதையாக நடிக்கும் நயன்தாரா கடும் விரதமிருந்த சமாச்சாரம்!

படப்பிடிப்பு முடியும் வரை நயனதாரா அசைவ உணவையே தொடவில்லையாம். அதுவும் வீட்டில் சமைத்த உணவை மட்டுமே எடுத்துக் கொண்டாராம்.

அதைவிட முக்கியம், இடையில் பிரபுதேவாவைச் சந்தித்தால் விரதத்துக்கு பங்கம் வந்துவிடும் என்பதால் அவரைக் கூட பார்க்காமல் தனிமையில் இருந்தாராம் நயன்.

சீதை வேடத்துடன் ஒன்றிப் போக வேண்டும் என்பதாலேயே இத்தனை சுய கட்டுப்பாடுகளையும் போட்டுக் கொண்டாராம் நயன்தாரா. எந்த நிகழ்ச்சிக்கும் போவதுமில்லையாம்.

இந்தப் படம்தான் நயன்தாரா கைவசமுள்ள கடைசிபடம். அதன் பிறகு சினிமாவுக்கு குட்பைதானாம்!
 

சிம்புவை இந்தியில் அறிமுகப்படுத்த துடிக்கும் கெளதம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிம்புவை இந்தியில் அறிமுகப்படுத்த துடிக்கும் கெளதம்

6/25/2011 12:33:38 PM

கெளதம் வாசுதேவ் மேனன் - சிம்பு இருவரும் இணைந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. பஞ்ச் டயலாக், ஸ்டைல் மற்றும் சண்டைக்காட்சிகள் என்று தனக்கென ஒரு பாணி வைத்திருந்த சிம்புவை வேறு தளத்திற்கு கொண்டு சென்ற படம் விண்ணைத்தாண்டி வருவாயா விண்ணைத்தாண்டி வருவாயா ஷூட்டிங்கின் போது சிம்புவின் நடிப்பைப் ரசித்த கௌதம் மேனன், சிம்பு நடிக்க அதை இந்தியில் ரீமேக் செய்ய விருப்பப்பட்டாராம். அப்படமே சிம்புவிற்கு இந்தியில் முதல் படமாக இருக்க வேண்டும் என்று விரும்பி, இந்தி ரீமேக்கில் நடிக்க சொல்ல, சிம்புவோ இந்தி திரையுலக பிரவேசம் இப்போது வேண்டாம், அப்பறம் பாத்துக்கலாம் என்று தவிர்த்து விட்டாராம். தற்போது இந்தியில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இயக்கி வரும் கெளதம், அப்படத்தை அடுத்து தமிழில் ஒரு டி.வி. சீரியலும், ஒரு படமும் இயக்க இருக்கிறார்.




 

25 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம்: விவேக்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
25 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம்: விவேக்

6/25/2011 12:21:43 PM

தனது நற்பணி மன்றங்கள் மூலம் தமிழகத்தில் 25 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். இந்த கன்றுகளை வனத்துறையினர், தனியார் நிறுவனம், இதுபற்றி பேசிய நடிகர் விவேக் தொண்டு நிறுவனம் போன்றவற்றிடம் இருந்து பெற இருக்கிறோம். மரக்கன்று நடுதல் மூலம் மூலம் உலகம் வெப்பமாதலை ஓரளவு தடுக்க முடியும்'' என்று கூறினார்.




 

குட்டி ராதிகா தயாரிப்பில் திவ்யா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

குட்டி ராதிகா தயாரிப்பில் திவ்யா!

6/25/2011 11:04:44 AM

குட்டி ராதிகா தயாரிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் திவ்யா. தமிழில் 'இயற்கை', 'வர்ண ஜாலம்' உட்பட பல படங்களில் நடித்தவர் கன்னட நடிகை குட்டி ராதிகா. சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்த ராதிகா, திடீரென கன்னட அரசியல்வாதி குமாரசாமியை திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தைக்கு அம்மா ஆனார். இப்போது அவர் பட தயாரிப்புகளில் இறங்கியுள்ளார். அவர் தயாரிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் திவ்யா. இதுபற்றி திவ்யா கூறும்போது, 'சமிக்ஷா ஆர்ட்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துள்ளார் ராதிகா. சமிக்ஷா அவரது குழந்தையின் பெயர். ராதிகாவுடன் கன்னடப் படங்களில் சேர்ந்து நடிக்க முடியவில்லை. இப்போது அவரது தயாரிப்பில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன். இது காதல் கதைதான். டாக்டர் சூரி இயக்குகிறார். விரைவில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது' என்றார்.

 

சாட்டையில் பிளஸ் 2 மாணவி ஹீரோயின்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சாட்டையில் பிளஸ் 2 மாணவி ஹீரோயின்!

6/25/2011 11:03:47 AM

ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபு சாலமன், ஜான் மேக்ஸ், தரணி இணைந்து தயாரிக்கும் படம், 'சாட்டை'. ஒளிப்பதிவு, ஜீவன். இசை, இமான். பாடல்கள், யுகபாரதி. படத்தை இயக்கும் எம்.அன்பழகன் கூறியதாவது: பள்ளி எப்படி இருக்க வேண்டும். மாணவர்களிடம் ஆசிரியர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து படம் உருவாகிறது. ஆசிரியராக சமுத்திரக்கனி, உதவி தலைமை ஆசிரியராக தம்பி ராமய்யா, மாணவனாக யுவன், மாணவியாக மஹிமா நடிக்கின்றனர். அடுத்த மாதம் முதல் ஷூட்டிங் நடக்கிறது. இப்பகுதியைச் சேர்ந்த யதார்த்தமான மனிதர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ஒர்க்ஷாப் மூலம் நடிப்பு மற்றும் வசனப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கதைக்குப் பொருத்தமான ஹீரோயினை தேடினோம். இறுதியில், கேரளாவை சேர்ந்த கோபிகா தேர்வு செய்யப்பட்டார். பிளஸ் டூ படித்து வரும் இவர், படத்திலும் பிளஸ் டூ மாணவியாக நடிக்கிறார். சினிமாவுக்காக அவரது பெயரை, மஹிமா என்று மாற்றியுள்ளோம்.




 

மலையாள படத்தில் அமலா விலகல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மலையாள படத்தில் அமலா விலகல்

6/25/2011 11:02:44 AM

மலையாள படத்தில் பிருத்வி ராஜூடன் நடிக்கவில்லை என்றார் அமலா பால். மலையாளத்தில், பிருத்விராஜ் ஜோடியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ' மலையாளத்தில் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க கேட்டது உண்மை. அந்தப் படத்துக்கு கேட்ட தேதிகள் என்னிடம் இல்லை. எனவே, அப்படத்தில் இருந்து விலகி விட்டேன். தெலுங்கு, கன்னடத்திலும் வாய்ப்புகள் வருகிறது. தமிழ் படங்களில் நடிக்கவே முக்கியத்துவம் தருக்கிறேன்' என்றார்.

 

போஜ்புரி படத்தில் நடிக்கிறாரா த்ரிஷா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

போஜ்புரி படத்தில் நடிக்கிறாரா த்ரிஷா?

6/25/2011 11:01:16 AM

போஜ்புரி படத்தில் நடிப்பதாக வந்த தகவலில் உண்மை இல்லை என்றார் த்ரிஷா. இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, 'போஜ்புரி படத்தில் நடிக்க, இதுவரை யாரும் என்னை கேட்கவில்லை. கவுதம் மேனன் 'சென்னையில் ஒரு மழைக்காலம்' படத்தை மீண்டும் தொடங்குவார் எனத் தெரிகிறது. தொடங்கினால் நடிப்பேன். தமிழில் அஜீத்துடன் நடித்த 'மங்காத்தா' முடிந்து விட்டது. தெலுங்கில் 'பாடிகார்ட்' படத்தில் நடித்து வருகிறேன்' என்றார்.

 

காதல் கதைக்கு காத்திருக்கிறார் ஜனனி அய்யர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

காதல் கதைக்கு காத்திருக்கிறார் ஜனனி அய்யர்

6/25/2011 11:00:18 AM

'காதல் கதைகளுக்காக காத்திருக்கிறேன்' என்றார் ஜனனி அய்யர். மேலும் அவர் கூறியதாவது: 'அவன் இவன்' படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவம். முதல் படத்திலேயே என்னை டப்பிங் பேச வைத்தார் இயக்குனர் பாலா. என் குரல் நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள். நான் பார்க்க, அமுல் பேபி மாதிரி இருக்கிறேன் என்கிறார்கள். மற்றவர்கள் சொல்வதை ரசிக்கிறேன். 'அலைபாயுதே' போல் மென்மையான காதல் கதைகளுக்காகக் காத்திருக்கிறேன். அது போன்ற கதைகளில்தான் என் திறமைகளை காட்ட முடியும் என நினைக்கிறேன். இன்னும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது.

 

டாக்டரை வைத்துக்கொண்டு ஷூட்டிங் பிந்து மாதவியின் கழுகு அனுபவம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

டாக்டரை வைத்துக்கொண்டு ஷூட்டிங் பிந்து மாதவியின் கழுகு அனுபவம்

6/25/2011 10:58:55 AM

பட்டியல் சேகர் தயாரிப்பில், சத்யசிவா இயக்கும் படம் 'கழுகு'. இதில் கிருஷ்ணா ஜோடியாக நடிக்கும் பிந்து மாதவி கூறியதாவது: தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்துள்ளேன். தமிழில் கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிக்கும் 'வெப்பம்' படத்தில் அறிமுமாகிறேன். அடுத்து நடிக்கும் படம், 'கழுகு'. இதன் ஷூட்டிங் மூணாறு மலைப்பகுதிகளில் நடந்தது. தினமும் இரவு நேரத்தில் ஷூட்டிங் நடக்கும். கடுமையான குளிரில் காய்ச்சல் வந்துவிடும். தினமும், டாக்டரை அருகில் வைத்துக்கொண்டே ஷூட்டிங் நடந்தது. இதில் நானும், ஹீரோ கிருஷ்ணாவும் நேரில் சந்திக்கும் காட்சி புதுமையாக இருக்கும். காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் நெஞ்சை உருக்குவதாக இருக்கும். எனது கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளேன். அடுத்து 'ஈரம்' அறிவழகன் இயக்கத்தில், நகுலன் ஜோடியாக நடிக்கிறேன்.

 

நடிகையின் கதையில் பத்மப்பிரியா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகையின் கதையில் பத்மப்பிரியா

6/25/2011 10:56:40 AM

பழம்பெரும் நடிகை சாரதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. சாரதாவாக பத்மப்பிரியா நடிக்கிறார். தமிழில் அறுபதுகளில் வெளியான 'குங்குமம்', 'அருணகிரி நாதர்', 'வாழ்க்கை வாழ்வதற்கே' படங்களில் நடித்தவர் சாரதா. தெலுங்கு நடிகையாக இருந்தாலும் இவர் மலையாளத்தில்தான் அதிகப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்காக மூன்று முறை தேசிய விருது பெற்றுள்ள இவருக்கு இப்போது 66 வயது. ஆந்திராவில் வசித்து வரும் இவரது வாழ்க்கை வரலாறு மலையாளத்தில் படமாகிறது. ஜெயராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு 'நாயிகா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் இளவயது சாரதாவாக பத்மப்பிரியா நடிக்கிறார். வயதான தோற்றத்தில் சாரதாவே நடிக்க இருக்கிறார். புகழ் பெற்ற நடிகையாக இருக்கும் ஒருவர், திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போகிறார். அவர் எங்கு போனார், ஏன் எதற்கு? என்கிற விஷயங்கள் திரைக்கதை. இதில் ஜெயராம் ஹீரோ. மம்தா பத்திரிகையாளராக நடிக்கிறார். தாமஸ் பெஞ்சமின் தயாரிக்கும் இந்தப் படம் வெளியானால், மலையாள சினிமாவின் பின்னணியில் இருக்கும் சில ரகசியங்கள் வெளிச்சத்துக்கு வரும் என்று கூறப்படுகிறது.

 

சினிமாவில் நாகரிகம் வளர வேண்டும்: வாலி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சினிமாவில் நாகரிகம் வளர வேண்டும்: வாலி

6/25/2011 10:57:58 AM

சினிமாவில் நாகரிகம் வளர வேண்டும் என்று கவிஞர் வாலி கூறினார். ரிச் இண்டியா நிறுவனத்தின் சார்பில் ஆர்.சந்திரசேகர் தயாரிக்கும் படம், 'உயர்திரு நானுற்று இருபது'. பாடலாசிரியர் சினேகன், மேக்னா, வசீகரன் நடிக்கிறார்கள். மணிசர்மா இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. விழாவில் கவிஞர் வாலி பேசியதாவது: சினிமாவில் நட்பும், நயத்தக்க நாகரிகமும் வளர வேண்டிய காலகட்டம் இது. யாரும் யாருடைய உணவையும் தட்டிப் பறித்து விட முடியாது. குர்ஆனில் குறிப்பிடப் படுவதைப்போல ஒவ்வொருவர் உண்ணும் அரிசியில் அவர் பெயர் எழுதப்பட்டிருக்கிறது. எனவே நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் வேறுபாடு காட்டாமல் நாகரிகத்தோடு பழக வேண்டும். தான் இசை அமைக்காத படமாக இருந்தாலும் கவிஞர் சினேகனுக்காக இந்த விழாவுக்கு வந்து பெருமைப்படுத்தியுள்ளார் யுவன் சங்கர் ராஜா. சினேகன் இதே படத்தில் மற்ற பாடலாசிரியர்களுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட நாகரிகம் சினிமாவுக்கு ஆரோக்கியமானது. இவ்வாறு வாலி பேசினார். விழாவில், யுவன் சங்கர் ராஜா, அபிராமி ராமநாதன், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், களஞ்சியம், பாடலாசிரியர்கள் அறிவுமதி, கிருதியா, தயாரிப்பாளர் முரளிதரன், கலைப்புலி சேகரன், வசீகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இயக்குனர் பிரேம்நாத் வரவேற்றார். முடிவில்  சினேகன் நன்றி கூறினார்.

 

சத்யராஜின் தலைமை

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
சத்யராஜின் தலைமை

6/25/2011 10:21:10 AM

ஹெப்ரூஸ் இன் என்ற அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து ரோஷிணி பிலிம் மேக்கர்ஸ் தயாரிக்கும் படம் 'தலைமை'. சத்யராஜ் ஹீரோ. இளம் காதல் ஜோடி மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு நடக்கிறது. ஒளிப்பதிவு, கிருஷ்ணா. இசை, கவி பெரியதம்பி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து, கே.ரவிகுமார் இயக்குகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு நடக்கிறது. 'கேட்பாரற்றுக் கிடக்கும் அரசு பள்ளியிலுள்ள மாணவர்களை நல்வழிப்படுத்தி, ஆசிரியர்களையும் ஒருநிலைப்படுத்தி, தமிழகத்தையே தன் திசை நோக்கி திரும்ப வைக்கும் வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார்' என்றார் இயக்குனர்.




 

பிரபல ஜவுளிக்கடைக்கு விளம்பர மாடலான ஹன்ஸிகா!


இப்போதெல்லாம் ஒரு நடிகையின் மார்க்கெட் நிலவரம், அவர் எந்த ஜவுளிக்கடையின் விளம்பரத்துக்கு ஒப்பந்தமாகிறாரோ அதைவைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது.

த்ரிஷா, நயன்தாரா, அசின் போன்றவர்கள் உச்சத்திலிருந்தபோது, சென்னையில் டாப் ஜவுளிக் கடைகளின் மாடல்களாக ஒய்யார நடைபோட்டு கோடிகளில் சம்பளம் பெற்றனர்.

இந்த வரிசையில் இப்போது இடம் பெற்றுள்ளவர் ஹன்ஸிகா மோத்வானி. நடித்த இரண்டு படங்களும் பெரிதாக போகவில்லை என்றாலும், அடுத்து விஜய் படத்தில் நாயகியாக நடித்திருப்பதால், இவர் மீது இன்னும் எதிர்ப்பார்ப்பு குறையவில்லை.

இதன் விளைவு, தமிழகத்தின் பிரபல ஜவுளி நிறுவனமான சென்னை சில்க்ஸ் தங்களின் அடுத்த விளம்பரத்துக்கு ஹன்ஸிகாவை புக் செய்துள்ளது.

இதற்காக அவருக்கு ரூ 50 லட்சம் சம்பளம் என்று கூறப்படுகிறது. இது ஒரு படத்துக்கு அவர் பெறும் சம்பளத்தை விட இரண்டு மடங்காகும்!

இன்றைய தேதிக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் தலா மூன்று படங்களுடன் ரேஸில் முந்திக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா.

 

பூசணிக்காய் உடைப்பதற்கு பதில்.... ரத்ததானம் செய்த '180' படக்குழு !


’180′… படத்தின் தலைப்பைப் போலவே இந்த படக் குழுவினரின் செயலும் வித்தியாசமாக அமைந்துள்ளது.

பொதுவாக ஒரு படம் முடிந்ததும், அந்த யூனிட் ஆட்கள் பூசணிக்காய் உடைப்பது தமிழ் சினிமாவில் தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்.

ஆனால் ’180′ படக்குழுவினர் பூசணிக்காய் உடைக்கவில்லை. அதற்கு பதில், படத்தின் வெளியீட்டு தினமான இன்று, படக் குழுவினர் ரத்த தானம் செய்தனர்.

சத்யம் சினிமாஸ் – அகல் பிலிம்ஸ் தயாரித்து, ஜெயேந்திரா இயக்கியுள்ள படம் நூற்றெண்பது. இந்தப் படம் இன்று உலகமெங்கும் வெளியாகிறது.

இதையொட்டி, ‘நூற்றெண்பது’ படக்குழுவினர் நேற்று ரத்த தானம் செய்தனர். இயக்குநர் ஜெயேந்திராவும், படத்தின் ஹீரோயின் ப்ரியா ஆனந்தும் ரத்ததானம் செய்தார்.

படத்தின் எழுத்தாளர்கள் சுபா, நடிகர் ஸ்ரீசரண், நடிகை ஜானகி சபேஷ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.

சென்னை ரோட்டரி, டிடிகே ரத்த வங்கியுடன் இணைந்து, 180 படக்குழுவினர் சத்யம் தியேட்டர் வளாகத்தில் இன்று சனிக்கிழமை காலை இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.

 

ரஜினி பழையபடி சுறுசுறுப்பாகிவிட்டார்! - சிங்கப்பூரிலிருந்து திரும்பிய தனுஷ் பேட்டி


சென்னை: ரஜினி நலமுடன் உள்ளார். பழைய சுறுசுறுப்புக்கு திரும்பிவிட்டார். சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து அடுத்த மாதம் சென்னை திரும்புவார், என்று, நடிகர் தனுஷ் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் மூச்சுதிணறல், சிறுநீரக பாதிப்பு போன்ற உடல் நலக் கோளாறுகளுக்காக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதால், அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் தனியாக ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார். டாக்டர்கள் தினமும் அவரை வீட்டில் போய் பார்த்து வேண்டிய சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் கூறி வருகின்றனர்.

ரஜினி பூரண நலத்துடன் இருப்பதால், அவருடன் தங்கியிருந்த மனைவி லதா ரஜினி வியாழக்கிழமை இரவு சென்னை திரும்பினார். அடுத்து ரஜினிகாந்தை பார்க்க சிங்கப்பூர் சென்றிருந்த அவரது மூத்த மருமகன் நடிகர் தனுஷ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இரவு 10-30 மணிக்கு சென்னை திரும்பினார்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார். தனி வீட்டில் அவர் தங்கி இருந்தபடியே, டாக்டர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பழைய சுறுசுறுப்புக்குத் திரும்பிவிட்டார்.

சிங்கப்பூரில் ஷாப்பிங் போக விரும்புகிறார். அந்த அளவு அவர் நார்மலாகிவிட்டார்.

வழக்கமான சில சிகிச்சைகள் முடிந்ததும், அடுத்த மாதம் அவர் சென்னை திரும்புவார்.

இவ்வாறு தனுஷ் கூறினார்.