சென்னை: ஆர்யா, நடிகைளை எப்படி பிக்கப் பண்றார், எங்கு டிராப் பண்றார்னே தெரியவில்லை என்று நடிகர், இயக்குநர் பார்த்திபன் கலாய்க்க, பட விழாவே பயங்க சிரிப்பொலியில் மூழ்கிப் போனது.
டிவி நடிகராகவும், சினிமாவில் சின்னச் சின்னதாக தலையைக் காட்டியவருமான விஜய் ஆதிராஜ் இப்போது இயக்குநராகி விட்டார். புத்தகம் என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார். இதில் விசேஷம் என்னவென்றால், ஆர்யாவின் தம்பி சத்யாதான் இதில் நாயகனாக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. எஸ்.பி.முத்துராமன் முதல் சிடியை வெளியிட, பி.வாசு வாங்கிக் கொண்டார்.
விழாவில் வழக்கம் போல பார்த்திபனின் பேச்சுதான் படு கலாய்ப்பாக இருந்தது. அவர் பேசுகையில், நடிகைகளை முத்தமிடும் கலாசாரத்தை கமல் சார் பரப்பினார். ஆர்யாவும் இப்போது நடிகைக்கு முத்தம் கொடுத்துள்ளார்.
ஆனால் அவர் நடிகைகளை எப்படி பிக்கப் பண்றார் எங்கு டிராப் பண்றார்னு தெரியல. இந்த புத்தகம் படம் தமிழ் திரையுலகை புரட்டிப்போடும் என்று பேசியபோது ஆர்யா உள்பட அனைவருமே விழுந்து விழுந்து சிரித்தனர்.
பதிலுக்கு ஆர்யா பேசுகையில், பார்த்திபன் நடிகைகளை நான் பிக்கப் செய்வது பற்றி பேசினார். நான் பிக்கப் செய்யும் நடிகைகளை டிராப் செய்வது இல்லை. டிராப் பண்ணினால் மற்றவர்கள் பிக்கப் செய்து விடுகிறார்கள் என்று பதிலுக்குக் கலாய்த்தார்.
ஹய்யோ, ஹய்யோ...!