திரைப்படமாகும் நடிகைகளின் நிஜக் கதைகள்


நடிகைகளின் நிஜ வாழ்க்கையை படமாக எடுக்க இயக்குனர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கற்பனைக் கதைகளைப் போன்று நடிகைகளின் நிஜ வாழ்க்கையை படமாக எடுக்க இயக்குனர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். என்ன விசேஷம் என்றால் கற்பனைக் கதைகளை விட இந்த நிஜக் கதைகளில் சோகம், அதிரடி, டிராஜெடி ஆகியவை எக்கச்சக்கமாக உள்ளன.

புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை ஸ்ரீவித்யாவின் கதை மலையாளத்தில் திரக்கதா என்ற பெயரில் படமானது. அதில் ஸ்ரீவித்யாவாக பிரியாமணி நடித்தார். இறுதிக்காலத்தில் புற்று நோய்க்குப் பலியானார் ஸ்ரீவித்யா. அவரது வாழ்க்கைத் துளிகளை சித்தரிப்பதாக அமைந்தது இந்தப் படம்.

அதேபோல செக்ஸ் பாம் என்ற சொல்லுக்கு புது இலக்கண் படைத்தவரான சில்க் ஸ்மிதாவின் கதையை இப்போது டர்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் இந்தியில் படமாக்கி வருகின்றனர். வித்யா பாலனை சில்க் வேடத்தில் நடிக்க வைத்துள்ளனர்.

1980-களில் கவர்ச்சி நடிகை வேண்டுமா, கூப்பிடுங்க சில்க் ஸ்மிதாவை என்று சொல்லும் அளவிற்கு அவர் மகா பிரபலம். அவரை பலர் காதல் என்ற பெயரில் ஏமாற்றினர். ஒரு கட்டத்தில் விரக்தியை தாங்க முடியாமல் சில்க் தற்கொலை செய்து கொண்டார். சில்க் ஸ்மிதா என்றால் கவர்ச்சி என்று சொல்லும் ரசிகர்களுக்கு அவருடைய பரிதாபமான வாழ்க்கையை பற்றிக் காட்டத் தான் இந்த படம்.

இந்த வரிசையில் இன்னொரு நடிகையின் கதை படமாகப் போகிறது. அவர் சாரதா. அந்தக் காலத்து அழகு நடிகை, தேசிய விருது பெற்றவர். ஊர்வசி சாரதா என்றுதான் அவருக்குப் பெயர்.

மலையாளத்தில் படமாகிறது சாரதாவின் கதை. படத்திற்கு நயிகா என்று பெயரிட்டுள்ளனர். இது சாரதாவின் காதல் தோல்விகள் பற்றிய படமாம்.

இதேபோல சோனியா அகர்வாலின் கதையை ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற பெயரில் சோனியாவை வைத்தே தயாரிக்கின்றனர். சோனாவும் தனது சொந்தக் கதையை படமாக்கப் போவதாக கூறியுள்ளார்.

இன்னும் எந்தெந்த நடிகையின் கதையெல்லாம் படமாகப் போகிறதோ தெரியவில்லை.

அங்கே சுட்டு, இங்கே சுட்டு கடைசியில் சினிமா உலகதுக்குள்ளேயே கதை தேட ஆரம்பித்து விட்டனர் இயக்குநர்கள். இது கற்பனை வறட்சியைக் காட்டுகிறதா அல்லது கவர்ச்சியை வைத்து காசாக்கும் நோக்கைக் காட்டுகிறதா என்பது புரியவில்லை.
 

விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியனை இயக்கப் போவது பூபதி பாண்டியன்?


அதிரடி வேடங்களில் அதகளம் செய்து அமர்க்களப்படுத்திய (ஒருகாலத்தில்) விஜயகாந்த்தின் மகன் சண்முகப் பாண்டியன் முழு நீள ஹீரோவாக களம் இறங்குகிறார் என்பது பழைய செய்தி. இப்போது அவருக்கான முதல் இயக்குநரை கேப்டன் கண்டுபிடித்து விட்டார் என்பது புதுச் செய்தி.

சண்முகப் பாண்டியனை, இயக்குநர் பூபதி பாண்டியன் ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன் என்று கூறி இயக்கலாம் என்று தெரிகிறது.

கிட்டத்தட்ட சினிமாவிலிருந்து விஜயகாந்த் ஓய்வு பெற்று விட்டார் என்றே கூறலாம். இனி அவருடைய பாதை அரசியல் பாதையாக மட்டும் இருக்கும். அப்படியே சினிமாப் பக்கம் வந்தாலும் கூட தயாரிப்பாளராகவே அவர் இனி முகம் காட்டுவார்என்று தெரிகிறது.

இந்த நிலையில்,தனது இளைய மகன் சண்முகப்பாண்டியனை களம் இறக்குகிறார் விஜயகாந்த். இதற்காக, சண்முகத்திற்கு ஏற்ற கதையை அவர் தேடி வருகிறார்.

கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் டைரக்டர் பூபதி பாண்டியன் அழைத்த கேப்டன், குடும்பத்துடன் உட்கார்ந்து கதை கேட்டுள்ளார். இதில் பூபதி பாண்டியன் கூறிய ஒரு கதை அனைவருக்கும் பிடித்து போக, அடுத்த கட்ட வேலைகளில் இறங்கியிருக்கிறாராம் விஜயகாந்த்.

எனவே விரைவில், விஜயகாந்த் ஸ்டைலில் கை, கால்களை காற்றில் பறக்க விட்டு அனாயசமாக அட்டாக் செய்யும் ஜூனியர் விஜயகாந்த்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.
 

மாவட்டம் தோறும் ரசிகர்களைச் சந்திப்பார் ரஜினி-முத்துராமன் தகவல்


சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது புதிய அவதாரத்தை விரைவில் உலகுக்கு அறிவிக்கப் போகிறார்.

இத்தனை நாளும் தலைவர் தங்களைப் பார்ப்பாரா என ஏங்கிக் கிடந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் இனி மாவட்டம்தோறும் அவரே வந்து ரசிகர்களைச் சந்திக்கப் போகிறார்.

இந்த தகவலை ரஜினிக்கு மிக நெருக்கமான எஸ்பி முத்துராமன் நேற்று திருப்பூரில் அறிவித்தார்.

நடிகர் ரஜினி உடல் நலம் பெற்றுள்ளதை அடுத்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருப்பூரில் உள்ள சாமுண்டிபுரம் ரஜினிகாந்த் திருமண மஹாலில் நடந்தது.

சிறப்பு விருந்தினராக இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் கலந்து கொண்டு ஏழைகளுக்கு 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் அவர் பேசும்போது, "ரஜினி ரசிகர்களின் பொது நல சேவைகள் தொடர வேண்டும். அவர்கள் ரஜினியின் புகழ் பாடுவதை விட அவர் பெயரில் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

ரஜினிகாந்த் விரைவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் வந்து மாநாடு நடத்தி ரசிகர்களையும், பொது மக்களையும் நேரில் சந்தித்து பேசுகிறார்.

ரஜினியை தெய்வங்கள் காப்பாற்றியது என்று கூறுவதை விட ரஜினிக்காக சிறப்பு பூஜைகள், பிரார்த்தனை செய்த ரசிகர்கள்தான் தெய்வங்களாக நின்று காத்தார்கள். ரசிகர்களின் பிரார்த்தனையால்தான் ரஜினி குணமடைந்து உயிர் வாழ்கிறார்.

ரசிகர்கள் அனைவரும் மனம் மகிழும் வண்ணம் அவர் பல புதிய அறிவிப்புகளை வெளியிடவிருக்கிறார்," என்றார்.

இந்த விழாவில் ரஜினியின் நண்பர் ராஜ்பகதூரும் பங்கேற்றார்.

சென்னை தலைமை மன்ற நிர்வாகி என் ராமதாஸ், பெங்களூரிலிருந்து கோபிநாத் ராவ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 

எகிறும் வேலாயுதம் பட்ஜெட்.... பதறும் ஆஸ்கர் ரவிச்சந்திரன்!


விஜய்யின் வேலாயுதம் படத்துக்கு திட்டமிட்டதை விட பட்ஜெட் அதிகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

காவலன் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் வேலாயுதம். விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன், சந்தானம் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை ஜெயம் ராஜா இயக்கியுள்ளார்.

ஆஸ்கார் ரவிச்சந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார். தெலுங்கில் வெளியான ஆசாத் படத்தின் ரீமேக் இந்த வேலாயுதம்.

இப்படத்திற்கான பட்ஜெட் ஆரம்பத்தில் ரூ.35 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது கிராபிக்ஸ், பாடல்களில் பிரமாண்டம் என நிர்ணயித்த பட்ஜெட்டையும் தாண்டி ரூ.10 கோடி அதிகரித்து விட்டதாம்.

இதனால் தயாரிப்பாளர் அதிர்ந்து போயிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய சூழலில் முதல் ஒரு வாரத்தில் இந்த ரூ 45 கோடியை விஜய் படம் வசூலித்துத் தருமா என்ற சந்தேகம்தான்.

இயக்குநர் சந்திரசேகரன் மற்றும் விஜய் ஆகியோர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருப்பதால், திரையரங்குகள் மற்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் பெரிய அளவு பிரச்சினை இருக்காது.

மேலும் ஓவர்சீஸ் மற்றும் தமிழகத்தின் கிராமப்புறங்களில் ஓரளவு வசூல் கிடைக்க வாய்ப்புள்ளது இந்தப் படத்துக்கு. இந்த இரண்டு நம்பிக்கைகளில்தான் தயாரிப்பாளர் தைரியமாக படத்தை ரிலீஸ் செய்கிறாராம்.

மேலும் விஜய் படங்கள் கேரளாவில் ஓரளவு ஓடக் கூடியவை என்பதால், ஓரளவு நம்பிக்கையுடன் உள்ளாராம் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
 

அரசு மருத்துவமனைக்கு விசிட் அடித்த இலியானா-என்னவோ, ஏதோவென பதறிய ரசிகர்கள்!


நடிகை இலியானாவை சென்னை திருவல்லிக்கேணி்யில் உள்ள கோஷா மருத்துவமனையில் பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்னாச்சோ, ஏதாச்சோ என்று பதறிப் போய்விட்டனர்.

தெலுங்கில் கொடி கட்டிப் பறக்கும் நடிகை இலியானா. கேடி படம் மூலம் தமிழிலும், தெலுங்கிலும் அறிமுகமான இவரை படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்றால் கோடி வேண்டும். சில சமயம் கோடி கொடுத்தாலும் முடியாது.

தற்போது இலியானா ஷங்கர் இயக்கி வரும் நண்பன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கோஷா மகப்பேறு மருத்துவமனைக்கு இலியானா அடிக்கடி வந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் குழம்பிப் போய் விட்டனர். இது மகப்பேறு மருத்துவமனையாச்சே, இங்கே எதுக்கு இலியானா உலாவி வருகிறார். அவருக்கு என்னாச்சோ, ஏதாச்சோ என்று பதறிப்போய்விட்டனர்.

அதில் சிலர் மருத்துவமனை ஊழியர்களை அணுகி இலியானா உடம்பிற்கு என்ன, அவர் ஏன் அடிக்கடி இங்கு வருகிறார் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் இலியானா உடம்புக்கெல்லாம் ஒன்றுமில்லை, அவர் நண்பன் பட ஷூட்டிங்கிற்காக இங்கு வருகிறார் என்றனர்.

ஷூட்டிங்கா, வேற என்னமோன்னு பதறிப் போயிட்டோம் போங்க என்று நிம்மதிப் பெருமூச்சூடன் அவர்கள் கலைந்தார்களாம்.

பாசக்கார பயபுள்ளைகப்பா..!


 

பிரபாகரன் தலைப்பை மாற்றும் விஷால்!


தமிழ் உணர்வாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக தனது படத்துக்கு வைக்கப்பட்ட பிரபாகரன் என்ற தலைப்பை மாற்றுகிறார் நடிகர் விஷால்.

பிரபு தேவா இயக்கத்தில் நடிகர் விஷால் 'பிரபாகரன்' என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடிக்கிறார்.

பிரபாகரன் என்ற பெயர் தமிழ் சமூகத்தின் தேசிய அடையாளமாகப் பார்க்கப்படுவதால், அந்தப் பெயரை ஒரு வணிக ரீதியான மசாலா படத்துக்கு வைக்கக் கூடாது என தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த தலைப்பு மாற்றப்படுவதாக விஷால் தெரிவித்தார்.

இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் விஷால் வியாழக்கிழமை கூறுகையில், "பிரபாகரன் படத்தில் நான் உதவி கமிஷனர் வேடத்தில் வருகிறேன். என் கேரக்டர் பெயர் பிரபாகரன். அதையே தலைப்பாக்க நினைத்தோம். அது சர்ச்சையாகி இருப்பதால் ரசிகர்கள் மனநிலை வியாபாரம், மக்கள் உணர்வுகள் போன்ற அனைத்தையும் கருத்தில் கொண்டு வேறு பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அவன் இவன் படம் வெற்றிகரமாக ஓடி லாபம் ஈட்டிக் கொடுத்துள்ளது. தெலுங்கில் இந்தப் படம் நல்ல வெற்றியைத் தந்துள்ளது.

இப்படத்தில் ஒன்றரைக் கண்ணனாக கஷ்டப்பட்டு நடித்தேன். கண்களில் வலி இருந்தது. பாலாவிடம் சொன்னால் படப்பிடிப்பை நிறுத்தி விடுவார் என பயந்து சிரமங்களை பொறுத்துக்கொண்டு நடித்தேன். அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஒன்றரைக் கண் பாவத்தோடு யாரும் இதுவரை நடித்தது இல்லை. எனவே கின்னஸ் சாதனைக்கு இப்படத்தை அனுப்ப முயற்சி நடக்கிறது.

இயக்குனர் பாலா கதாநாயகர்களை அடிமைபோல் நடத்துவார் என்றும் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு கதை சொல்ல மாட்டார் என்றும் பேசப்படுவதில் உண்மை இல்லை. என்னிடம் முழு கதையும் சொன்னார்.

அவர் படத்தில் நடிக்க ஒவ்வொரு நடிகரும் கனவு காண்கிறார்கள் என்பதே உண்மை. நானே அவரிடம் 'நீங்கள் வெளியில் அதிகம் பேசாததால் சைக்கோ என்கிறார்கள். எனவே எல்லோரிடமும் சகஜமாக பேசுங்கள்' என்று சொல்லி ஒரு கூட்டத்தில் வலுக் கட்டாயமாக இழுத்து போய் உட்கார வைத்தேன்.

தனது உழைப்பு, திறமையை தியாகம் செய்து எனக்கு அவன் இவன் படத்தில் பெயர் கிடைக்கச் செய்துள்ளார். தேசிய விருது பெறுவதில் விக்ரமுக்கும் எனக்கும் போட்டி என்கிறார்கள். நான் அப்படியெல்லாம் எந்த நினைப்பையும் வைத்துக் கொள்ளவில்லை.

விருது பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. இன்னும் பல படங்கள் ரிலீஸாக உள்ளன. அவன் இவன் படத்துக்கு விருது கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்" என்றார்.
 

சூப்பர்ஸ்டார் வீடுகளில் ஐடி ரெய்டு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

போலிசாமியார்கள் பற்றிய படம்

7/20/2011 11:53:08 AM

பூவப்பா கலைக்கூடம் சார்பில் எஸ்.எம்.மாணிக்கம், பெரப்பேரி திலீபன் இணைந்து தயாரிக்கும் படம், 'வெங்காயம்'. அலெக்சாண்டர், பவீனா ஜோடி. முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். பரணி இசையில் சுப.வீரபாண்டியன், அறிவுமதி, எஸ்.எம்.மாணிக்கம் பாடல்கள் எழுதுகின்றனர். சங்ககிரி ராச்குமார் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னை ஏவி.எம் ஸ்டுடியோவில் நடந்தது. ஜானய்யா என்ற துப்புரவுத் தொழிலாளியும் ஏழுமலை என்ற விவசாயியும் பாடலை வெளியிட்டனர். விழாவில் சத்யராஜ் பேசும்போது, 'இந்தப் படத்தில் நடிகர் சத்யராஜாக வருகிறேன். புரட்சிகரமான பாடல் காட்சியிலும் நடித்துள்ளேன். இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றவகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. போலிசாமியார்களின் முகத்திரையைக் கிழிக்க வருகிறது இப்படம். இதுபோன்ற படங்களை ரசிகர்கள் ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும்' என்றார். விழாவில் சுப.வீரபாண்டியன், கவிஞர் காசி ஆனந்தன், இயக்குனர் வ.கவுதமன், தயாரிப்பாளர் மணிவண்ணன், பவீனா, அலெக்சாண்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா?

7/22/2011 12:25:58 PM

தற்போது தன்னுடைய தம்பி தனுஷை வைத்து ‘இரண்டாம் உலகம்’ படத்தின் ஷூட்டிங்கை படுவேகமாக நடத்தி வரும் செல்வராகன் தனது அடுத்த படத்தில் ஆர்யாவுடன் கைகோர்க்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. அவன் இவனுக்குப் பிறகு ஆர்யாவின் அடுத்த ரிலீஸ் லிங்குசாமியின் வேட்டை. ஆனால் வேட்டைக்குப் பிறகு வேறு புதிய படங்களையே ஒப்புக் கொள்ளவில்லை ஆர்யா. இடையில் அவர் கையெழுத்திட்ட மணிரத்னம் படமும் ட்ராப்பாகிவிட்டது. இதனையடுத்து ஆர்யா செல்வராகவன் படத்தில் சத்தமில்லாமல் ஒப்பந்தமாகிவிட்டதுதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் நாயகியாக அனுஷ்கா நடிக்கக் கூடும் என்கிறார்கள்.

 

ஜான் ஆபிரகாமைப் பிரிந்தார் பிபாஷா?

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

ஜான் ஆபிரகாமைப் பிரிந்தார் பிபாஷா?

7/22/2011 12:16:29 PM

நடிகர் ஜான் ஆப்ரஹாம் – பிபாஷாவும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இப்போது இவர்கள் காதல் முடிவுக்கு வந்துவிட்டது. பிபாஷா – ஜான் காதலர்களாக இருந்தபோதே, பாலிவுட்டின் பிற நாயகர்களான சாபிஃப் அலிகான் மற்றும் ரன்பீருடன் இணைத்துப் பேசப்பட்டார் பிபாஷா என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதெல்லாம் கோயிங் ஸ்டெடியாக இருந்த பிபாஷா – ஜான் காதல் இப்போது பிரியக் காரணம் ஷாகித் கபூர் என்கிறார்கள். இருவரும் மிக நெருக்கமாக உள்ளதாக மீடியாவில் புகைப்படங்களுடன் செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. இதைத் தொடர்ந்து பிபாஷாவிடமிருந்து ஜான் விலகிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.

 

சிக்கலில் அஜீத்தின் மங்காத்தா... வெளியிட தியேட்டர்கள் அச்சம்!


முன்பு விஜய்க்கு காவலனால் பிரச்சினை என்றால் இப்போது அஜீத்துக்கு மங்காத்தா.

பெரும் எதிர்ப்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள படம் இந்த மங்காத்தா. காரணம் அஜீத்தின் 50வது படம் இது என்பது மட்டுமல்ல... முதல் முறையாக அஜீத்தும் அர்ஜூனும் இணைந்து நடித்துள்ள மல்டி ஸ்டாரர் படம் இது. த்ரிஷா, லட்சுமிராய் என பெரும் நடசத்திரப்பட்டாளமே உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். யுவன் இசையமைத்துள்ளார். எப்படிப் பார்த்தாலும் இந்தப் படம் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவருக்குமே நம்பிக்கை தரும் வகையில் அமைந்திருந்தாலும், இவர்கள் அனைவருமே படத்தை வாங்கத் தயங்குகிறார்கள்.

காரணம்?

படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி, மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன்!

இது ஒன்று போதாதா இன்றைய சூழலில் அத்தனை பேரையும் அச்சப்பட வைக்க!

இப்போது படம் முழுவதும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், இதன் கேரள, ஆந்திர மற்றும் ஓவர்ஸீஸ் உரிமைகள் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் இன்னும் பிஸினஸ் ஆகவில்லை படம்.

தயாநிதி அழகிரியின் பேனரில் படம் வெளியானால் படத்தை வாங்குவது பாதுகாப்பில்லை என விநியோகஸ்தர்கள் கருதுகிறார்களாம். தியேட்டர்காரர்களின் மனநிலையும் அதுவே.

எனவே அம்மாவின் ஆசி பெற்ற அஜீத் தனது சொந்தப் பொறுப்பில் இந்தப் படத்தை வெளியிட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. ஆனால் அஜீத்தோ, நான் அம்மாவைப் போய் பார்க்க மாட்டேன். அப்படிப் பார்த்தால் சுயநலத்துக்காக செய்த மாதிரி ஆகிவிடும். படத்தை தைரியமாக வெளியிடுங்கள், ஒன்றும் ஆகாது என்கிறாராம்.

சினிமாவே பெரிய ரிஸ்க்கான தொழில்.... இதில் இந்த மாதிரி பெரிய சோதனையை எல்லாம் செய்து பார்க்க முடியாது, என்று கூறிவிட்டு அஜீத்தின் பதிலுக்காக காத்திருக்கிறார்களாம் தியேட்டர்காரர்கள்.

அஜீத் என்ன செய்யப் போகிறார்?
 

கோமாவில் நடிகர் ரவிச்சந்திரன்- உயிரைக் காக்க டாக்டர்கள் போராட்டம்


பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் உடல் நலம் மிகவும் மோசமடைந்துள்ளது. அவர் தற்போது கோமாவுக்குப் போய் விட்டார். அவரது உயிரைக் காக்க டாக்டர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், நடிகர் ரவிச்சந்திரன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. அவர் கோமாவுக்குப் போய் விட்டதாக அவரது மகனும், நடிகருமான அம்சவிர்தன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது தந்தைக்கு சர்க்கரை வியாதி இருந்து வந்தது. இருப்பினும் அதைக் கட்டுக்குள் வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு திடீரென நுரையீரல் பிரச்சினை வந்து அது செயலிழக்கத் தொடங்கியது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்த்தோம். தற்போது அவர் கோமா நிலைக்குப் போய் விட்டார். டாக்டர்கள் கடுமையாக போராடி வருகின்றனர் என்றார்.

71 வயதாகும் ரவிச்சந்திரனுக்கு விமலா என்ற மனைவியும், இரு மகன்கள்,ஒரு மகள் உள்ளனர். அனைவரும் அருகில் இருந்து கவனித்தபடி உள்ளனர்.

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரவிச்சந்திரன் ஸ்டைல் நடிப்பை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய முதல் ஹீரோ. காதலிக்க நேரமில்லை படத்திலேயே அந்தக் காலத்து இளைய தலைமுறையைக் கவர்ந்தவர் ரவிச்சந்திரன். தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்தவர். ஊமை விழிகள் படத்தில் வில்லனாக கலக்கிய அவர், அருணாச்சல் படத்தில் ரஜினிக்கு தந்தையாகவும், பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமல்ஹாசனுக்கு தந்தையாகவும் நடித்திருந்தார்.

கடைசியாக அவர் கண்டேன் காதலைப் படத்தில் அவர் நடித்திருந்தார்.

 

பிக்பாஸ் ஷோவில் நிர்வாணமாக தரிசனம் தர பூனம் பாண்டேவுக்கு ரூ.2 கோடி சம்பளம்?


பிக்பாஸ் டிவி நிகழ்ச்சியில் மாடல் அழகி பூனம் பாண்டே நிர்வாணமாக தரிசனம் தர தர, ரூ.2 கோடி பேரம் நடக்கிறது.

கடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா கோப்பையை வென்றால், கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக ஓடப் போவதாக, கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் மாடல் அழகி பூனம் பாண்டே. இந்தியா உலக கோப்பையை வென்றாலும், கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து தனது முடிவை அவர் வாபஸ் பெற்றார்.

வீரர்களுக்காக மட்டும் தனியாக நிர்வாண ஷோ நடத்த தயார் என்று அறிவித்தார். ஆனால் அதை கிரிக்கெட் வாரியம் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில், பங்கேற்க, அவருக்கு அழைப்பு வந்துள்ளது. அதற்கு ரூ.2 கோடி சம்பளமும் தருவதாக நிகழ்ச்சியாளர்கள் அவரை உற்சாகப்படுத்தி உள்ளனர்.

இந்த ஷோவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரும் கலந்து கொள்ள உள்ளார். பூனம் கலந்து கொள்ளும் பட்சத்தில், அவர் பூனமிடம் ‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அளித்த வாக்குறுதி (நிர்வாண போஸ்) குறித்து கேட்பார்.

அப்போது நிகழ்ச்சியில் பூனம் நிர்வாண போஸ் தர வேண்டிய நிலை ஏற்படும். 2 கோடி ரூபாய் சம்பளம் தருவதாக நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கூறியுள்ள நிலையில், என்ன முடிவு எடுப்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளாராம் பூனம்.

 

புதிதாக ஓட்டுப்போட்டவர்களில் 50% பேர் விஜய் ரசிகர்கள்: எஸ்.ஏ.சந்திரசேகர்


விருப்பாட்சி: இதுவரை அடுத்தவர்களுக்காக உழைத்து தேய்ந்துபோன நாம் இனி நமக்காக உழைத்து முன்னுக்கு வரவேண்டும் என்று விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருபாட்சிபுரத்தில் நடந்தது.

அதில் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கலந்துரையாடினர்.

பின்னர் கூட்டத்தி்ல் பேசிய சந்திரசேகர், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமையவேண்டும், தவறு செய்தவர்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று விஜய் விரும்பினார். அவரது ஆசை ரசிகர்களாகிய உங்கள் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டசபைத் தேர்தலில் 80 லட்சம் இளைஞர்கள் புதிதாக ஓட்டுப் போட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 50 சதவீதம் பேர் விஜய் ரசிகர்கள் தான்.

இதுவரை அடுத்தவர்களுக்காக உழைத்து தேய்ந்துபோன நாம் இனி நமக்காக உழைத்து முன்னுக்கு வரவேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஒரு உள்ளாட்சி அமைப்புக்கு ஒரு உறுப்பினர் வெற்றி பெற்றால்கூட தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 1000 பேர் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

உங்கள் ஆதரவு மூலம் விஜய் இளைய தளபதியாக வளர்ந்துள்ளார். தற்போது அவர் பெயரை வைத்து நீங்கள் முன்னுக்கு வரவேண்டும். செயலில் கில்லி மாதிரி இருக்கவேண்டும். மக்கள் விழிப்புடன் உள்ளனர். எனவே கொள்ளையடிக்கும் எண்ணத்தில் யாரும் அரசியலுக்கு வரவேண்டாம்.

விஜய் முழுநேர நடிகர்தான். நேரடியாக அவர் அரசியலுக்கு வரமாட்டார். நான்தான் உங்களுக்கு பாலமாக இருப்பேன் என்றார்.

 

செல்வராகவனுடன் இணையும் ஆர்யா!


இரண்டாம் உலகம் படத்தை தம்பி தனுஷை வைத்து இயக்கி வரும் செல்வராகவன், தனது அடுத்த படத்தில் ஆர்யாவுடன் கைகோர்க்கிறார்.

அவன் இவனுக்குப் பிறகு ஆர்யாவின் அடுத்த ரிலீஸ் லிங்குசாமியின் வேட்டை. ஆனால் வேட்டைக்குப் பிறகு வேறு புதிய படங்களையே ஒப்புக் கொள்ளவில்லை ஆர்யா. இடையில் அவர் கையெழுத்திட்ட மணிரத்னம் படமும் ட்ராப்பாகிவிட்டது.

ஆர்யாவின் இந்த அமைதிக்குக் காரணம் செல்வராகவன் படத்தில் அவர் சத்தமில்லாமல் ஒப்பந்தமாகிவிட்டதுதானாம்.

இந்தப் புதிய படம் குறித்து விவாதிக்க இருவரும் பல முறை சந்தித்துப் பேசியுள்ளனர், கடந்த வாரத்தில் மட்டும்.

இந்தப் படத்தில் நாயகியாக அனுஷ்கா நடிக்கக் கூடும் என்கிறார்கள். இடையில் செல்வராகவன் அல்லு அர்ஜுனை வைத்து தெலுங்குப் படம் இயக்குவதாகவும் செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

 

கசந்த காதல்... ஜான் ஆபிரகாமைப் பிரிந்தார் பிபாஷா!


பாலிவுட்டில் காதலனைப் பிரிந்த நாயகிகள் பட்டியல் பெரியது. கிட்டத்தட்ட எல்லா பாலிவுட் நாயகிகளுக்கும் குறைந்த பட்சம் ஒரு காதல் தோல்வி / பிரிவு பின்னணியாவது இருக்கும்.

அந்தப் பட்டியலில் சேர்ந்திருப்பவர் பிபாஷா பாசு.

நடிகர் ஜான் ஆப்ரஹாம் – பிபாஷாவும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இப்போது இவர்கள் காதல் முடிவுக்கு வந்துவிட்டது.

பிபாஷா – ஜான் காதலர்களாக இருந்தபோதே, பாலிவுட்டின் பிற நாயகர்களான சாபிஃப் அலிகான் மற்றும் ரன்பீருடன் இணைத்துப் பேசப்பட்டார் பிபாஷா என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போதெல்லாம் கோயிங் ஸ்டெடியாக இருந்த பிபாஷா – ஜான் காதல் இப்போது பிரியக் காரணம் ஷாகித் கபூர் என்கிறார்கள்.

இருவரும் மிக நெருக்கமாக உள்ளதாக மீடியாவில் புகைப்படங்களுடன் செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.

இதைத் தொடர்ந்து பிபாஷாவிடமிருந்து ஜான் விலகிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.

இதுகுறித்து ஜான் ஆபிரகாமுக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், “ஜான் இப்போது எதையும் பேசும் நிலையில் இல்லை. காரணம் பிபாஷாவின் நடவடிக்கைகளால் அவர் மனம் வெறுத்துப் போயுள்ளார். இனி அவர் பிபாஷா இல்லை என்பது மட்டும் உறுதி”, என்கிறார்கள்.

இந்தக் காதல் முறிவு வேதனையால், படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு, தனிமையில் இருக்கிறாராம் ஜான் ஆபிரகாம்.

 

பிந்து மாதவி, நித்யா மேனனின் 'வெப்பம்'


மனிதர்களின் மனதுக்குள் புதைந்து கிடக்கும் வெவ்வேறு வகையான வெப்பத்தை கதையாக்கி படமாக்கியுள்ளாராம் அஞ்சனா, தனது வெப்பம் படத்தில்.

அஞ்சனா, கெளதம் வாசுதேவ மேனனின் அசோசியேட்டாக இருந்தவர். இப்போது மேனனின் தயாரிப்பில் அஞ்சனா இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படத்தில் இரு நாயகிகள் பிந்து மாதவி மற்றும் நித்யா மேனன். நாயகனாக நடிப்பது கார்த்திக்குமார்.

அது என்ன வெப்பம் என்ற பெயரில் ஒரு கதை என்றுகேட்டால், ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு விதமான வெப்பம் புதைந்து கிடக்கும். ஏதாவது தக்க தருணத்தில் அது வெளியாகி வெடித்துப் புறப்படும்.

ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள இந்த இறுக்கமான மன நிலையை வைத்துத்தான் படத்தை உருவாக்கியுள்ளேன். இப்படத்தில் காதல் இருக்கிறது, நட்பு இருக்கிறது, குடும்பப் பாசம், மரணம் என அனைத்துமே நிரம்பியுள்ளது.

இது சுத்தமான சென்னைக் கதை. சென்னையின் வாழ்க்கையை இதில் பார்க்கலாம். இருப்பினும் அனைவருக்கும் இது பிடித்தமான படமாக இருக்கும் என்றார் அஞ்சனா.

படம் வரட்டும், பிடிக்கிறதா, இல்லையா என்று பார்க்கலாம்!

 

மலையாள சூப்பர்ஸ்டார்கள் மம்முட்டி,மோகன்லால் வீடுகளில் ஐடி ரெய்டு


சென்னை: மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோரது வீடுகளில் இன்றுகாலையில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு மேற்கொண்டனர்.

சென்னை, பெங்களூர், கொச்சி ஆகிய நகரங்களில் இவர்களுக்குச் சொந்தமான வீடுகள் உள்ளன. இங்கு காலையில் புகுந்த தனித் தனி அதிகாரிகள் படையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். வீடுகள் மட்டுமல்லாமல், அலுவலகங்களிலும் ரெய்டு நடந்தது.

சோதனை குறித்து இரு நடிகர்களுக்கும் முறைப்படியான தகவல் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த சோதனையின்போது கைப்பற்றப்படும் ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்து இரு நடிகர்களுக்கும் முறைப்படி தெரிவிக்கப்படும் என வருமான வரித்துறை வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

எது தொடர்பாக இந்த ரெய்டு என்பது தெரியவில்லை. இந்த ரெய்டு காரணமாக மலையாளத் திரையுலகில் பரபரப்பு நிலவுகிறது.

 

மங்காத்தாவில் நான் கெட்டவன் : அ‌‌ஜீத்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மங்காத்தாவில் நான் கெட்டவன் : அ‌‌ஜீத்!

7/21/2011 12:04:44 PM

மங்காத்தாவில் தனது கதாபாத்திரம் குறித்து முதல் முறையாக மனம் திறந்த பேசியிருக்கிறார் அ‌‌ஜீத். அ‌‌ஜீத்தின் 50வது படமான குறித்து நாளுக்கு நாள் சுவாரசியமான தகவல்கள் வருகின்றன.மங்காத்தா ப இந்தப் படத்தில் நான் கெட்டவனாக வருகிறேன். மொத்தம் 5 கெட்டவர்கள் இதில் இருக்கிறார்கள். அவர்களில் நான்தான் ரொம்ப கெட்டவன். நான் வொர்க் பண்ணியதில் வெங்கட்பிரபுவின் டெடிகேஷன் யா‌ரிடமும் பார்த்தில்லை. அவரது டெடிகேஷன் காரணமாக மங்காத்தா சிறப்பாக வந்திருக்கிறது ஐயம் ஹேப்பி. யுவன் இசையமைத்திருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.




 

நடிகர் ரவிச்சந்திரன் சீரியஸ் : கோமா நிலையில் உயிருக்கு போராடுகிறார்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகர் ரவிச்சந்திரன் சீரியஸ் : கோமா நிலையில் உயிருக்கு போராடுகிறார்!

7/21/2011 12:34:55 PM

நடிகர் ரவிச்சந்திரன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். 'காதலிக்க நேரமில்லை' படத்தில் அறிமுகமானவர் நடிகர் ரவிச்சந்திரன். மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, குமரிப்பெண், நான் உட்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து டயாலிசிஸ் செய்து வந்தார்.

கடந்த 17ம் தேதி அவரது நுரையீரலும் பாதிக்கப்பட்டது. இதனால் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவரது நுரையீரல் செயல் இழக்க தொடங்கியது. இதை தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் இரவு கோமா நிலையை அடைந்தார். இப்போது அவரை இன்குபேட்டரில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் தற்போது ஆபத்தான கட்டத்திலேயே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து அவரது மகன் அம்சவர்த்தன் கூறும்போது, 'சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டாலும் அதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, நுரையீரல் செயல் இழக்க துவங்கியது. மருத்துவமனையில் சேர்த்தோம். கோமா நிலைக்கு சென்று விட்டதாக நேற்று முன்தினம் இரவு டாக்டர்கள் அறிவித்தனர். தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். நாங்கள் கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறோம்' என்றார். ரவிச்சந்திரனுக்கு 71 வயதாகிறது. அவருக்கு விமலா என்ற மனைவியும், பாலாஜி, அம்சவர்த்தன் என்ற மகன்களும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர்.