சென்னை: லீடர் நடிகருக்கு வேறு யாரும் தனியாக ஆப்பு வைக்கத் தேவையில்லை.
லீடர் படத்தில் நடித்த நடிகர் அதை ரிலீஸ் செய்யவே படாதபாடு பட்டார். அதற்கு காரணம் டைம் டூ லீட் என்ற வாசகம் என்று கூறப்பட்டது. இதையடுத்து அவர் அரசியலுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்று இருக்கிறார்.
அண்மையில் கூட அவர் அரசியல் விவகாரம் தொடர்பாக தனது ரசிகர்களை கேரளாவில் சந்தித்தாகக் கூறப்பட்டது. இதை அறிந்து பதறிய நடிகர் அப்படி எந்த கூட்டமும் நடக்கவில்லை என்று அவசர அவசரமாக மறுப்பு தெரிவித்தார்.
ஆனால் நடிகரின் பெயரில் ட்விட்டரில் கணக்கு உள்ளது. அதை அவரது ரசிகர்கள் தான் மெயின்டெய்ன் செய்து வருகின்றனர். அதில் லீடரை அடுத்த தலைவராக சித்தரித்து வாசகங்கள் வருகின்றன. இது நடிகர் கண்ணில் பட்டதா என்று தெரியவில்லை. அவர் பிரச்சனை இன்றி இருக்க வேண்டும் என்றால் முதலில் இந்த கணக்கை அவர் கண்காணிக்க வேண்டும்.