3/2/2011 12:14:37 PM
தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு பகலவன் ஷூட்டிங்!
3/2/2011 12:14:37 PM
இரண்டே வாரத்தில் ”பில்லா 2” வின் முழு திரைக்கதை
3/2/2011 12:21:39 PM
சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம்
3/2/2011 11:48:19 AM
விக்ரம் நடிப்பில் செல்வராகவன் தொடங்கிய படம் சிந்துபாத். ரமேஷ்பாபு படத்தின் தயாரிப்பாளர். லடாக்கில் விக்ரம் மற்றும் ஸ்வாதியை வைத்து சில காட்சிகள் படமாக்கவும் செய்தார் செல்வராகவன். சில காரணங்களால் சிந்துபாத் கைவிடப்பட்டது. அதன் பிறகு விக்ரம் கே.குமார், பூபதி பாண்டியன் என பல மலர்கள் தாவி இறுதியாக விஜய் இயக்கத்தில் தெய்வமகன் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். விக்ரமின் கால்ஷீட் கைவசம் இருப்பதால் சிந்துபாத் தயாரிப்பாளர் விக்ரமுக்கான படத்தை வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்க முடிவு செய்துள்ளார். சுசீந்திரன் தற்போது கௌதம் தயாரிப்பில் அழகர்சாமியின் குதிரை படத்தை இயக்கி வருகிறார். இதற்கு பிறகு விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து விக்ரமுக்கு ஜோடியாக தீக்ஷா சேத் ஹீரோயினாக நடிக்கிறார்.
தடையறத் தாக்க திகில் படத்தில் அருண் விஜய்
3/2/2011 10:51:43 AM
'மலை மலை', 'மாஞ்சா வேலு' படங்களை தயாரித்த பெதர் டச் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் 'தடையறத் தாக்க'. மகிழ்திருமேனி இயக்குகிறார். அருண் விஜய் ஹீரோ. ஜோடியாக பிராச்சி தேசாய் அறிமுகமாகிறார். தமன் இசை அமைக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு. படம் பற்றி அருண் விஜய் கூறியதாவது: எனது முந்தைய படங்கள், என்னை ஆக்ஷன் ஹிரோவாக அடையாளம் காட்டியது. அதிலிருந்து வித்தியாசமாக அடுத்த படம் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அதற்கேற்ற வகையில் இந்தப் படம் அமைந்துள்ளது. இது திகில், மர்மம் கலந்த ஆக்ஷன் கதை. லாஜிக் மீறாத யதார்த்தமான கதையம்சம் கொண்ட படமாக இது இருக்கும். வரும் 7-ம் தேதி பழனியில் படப்பிடிப்பு துவங்குகிறது. ஜுன் மாதம் நிறைவடையும்.
கமல் சாருடன் இணைந்து நடிக்க வேண்டும்
3/2/2011 12:10:08 PM
சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு காணாமல் போன ரீமா சென், கமல் சாருடன் நடிக்க வேண்டும் என்பது தன்னுடைய நீண்ட நாள் ஆசை என தெரிவித்துள்ளார். மேலும் இப்போதைக்கு எனக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று கூறிய ரீமா சென், நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. குறிப்பாக கமல் சார் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. ஆனால் அது இன்றுவரை நிறைவேறவில்லை. விரைவில் அது நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன் எனக் கூறினார்.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய்,விக்ரம்,மகேஷ்பாபு
3/2/2011 10:57:05 AM
மணிரத்னம் இயக்கும் படம் மூலம் தமிழுக்கு வருகிறார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு. விக்ரம், விஜய் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குகிறார் மணிரத்னம். இதில் இன்னொரு ஹீரோவாக விஷால் நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. இப்போது அவருக்கு பதில் தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபுவை மணிரத்னம் ஒப்பந்தம் செய்துள்ளார். இது கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக் கொண்ட கதை என்று கூறப்படுகிறது. இதுபற்றி டிவிட்டர் இணையதளத்தில் மகேஷ்பாபு, 'மணிரத்னத்தை சந்தித்தேன். எனது கனவு இப்போது நிறைவேறியுள்ளது. அவரது இயக்கத்தில் நடிக்க இருக்கிறேன்' என்று கூறியுள்ளார். இந்தப் படம் மூலம் மகேஷ்பாபு தமிழில் அறிமுகமாகிறார்.
தமிழில் நடிக்க அதிக சம்பளம் கேட்ட இந்தி நடிகை
3/2/2011 11:34:05 AM
பாலிவுட் ஹீரோயின் பிராச்சி தேசாய் கோலிவுட்டில் என்ட்ரி ஆகிறார். அருண் விஜய் நடிக்க, மகிழ் திருமேனி இயக்கும் ‘தடையறத் தாக்க’ படத்தில் இவர் அறிமுகமாகிறார். இது பற்றி இயக்குனர் மகிழ்திருமேனி கூறியது: சிட்டியில் டிராவல்ஸ் வைத்து நடத்தும் ஒரு இளைஞனின் வாழ்க்கை. அவன் சந்திக்கும் போராட்டம், காதல்தான் கதை. அருண் விஜய்க்கு ஜோடியாக புதுமுகம் பலரை பரிசீலித்தும் பலனில்லை. இந்தியில் ‘ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மும்பை’, ‘ராக் ஆன்’ படங்களை பார்த்தேன். அதில் நடித்த ஹீரோயின் பிராச்சி தேசாய் நடிப்பு என்னை கவர்ந்தது. ஹீரோயின் கேரக்டருக்கு அவர்தான் பொருத்தம் என்று தயாரிப்பாளரிடம் கூறினேன். ஒகே சொன்னார். மும்பையில் பிராச்சியை சந்தித்தபோது முதலில் நடிக்க மறுத்தார். 'தமிழில் நிறைய படங்கள் வந்தது. ஒப்புக்கொள்ளவில்லை. கதையும், கேரக்டரும் முக்கியம்Õ என்றார். வற்புறுத்தி கதை கேட்க வைத்தேன். அவருக்கு பிடித்துவிட்டது. ஆனால் சம்பளம் பேசும்போது எதிர்பார்க்காத தொகையை கேட்டார். சம்பளம் குறைக்கவும் பலமுறை பேசிய பின் ஒரு வழியாக சம்மதித்தார்.
வாய்ப்புக்கு காத்திருக்கிறார் பார்வதி
3/2/2011 11:29:29 AM
'பூ' பார்வதி நடித்த 'சிட்டி ஆஃப் காட்' மலையாளப் படம் வரும் 9ம் தேதி வெளிவருகிறது. இதில் அவர் தமிழ்ப் பெண்ணாக நடித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது: 'பூ' படத்திற்கு பிறகு தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. ஆனாலும் 'சிட்டி ஆஃப் காட்' படத்தில் தமிழ்ப் பெண்ணாக நடித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. பொள்ளாச்சியிலிருந்து கேரளா வந்து கட்டிட வேலை செய்யும் ஏழைப் பெண்ணாக நடிக்கிறேன். என் கேரியரில் முக்கியமான கேரக்டராக இது இருக்கும். பொள்ளாச்சி பகுதிக்கு சென்று அங்குள்ள பெண்களிடம் பழகி அவர்களின் மேனரிசம், குணநலன்கள், பேச்சு வழக்கு இவற்றை கற்றுக் கொண்ட பிறகுதான் அந்த கேரக்டரில் நடித்தேன். உண்மையில் தமிழ்ப் பெண்களை நான் நேசிக்கிறேன். ஒரே நேரத்தில் ஒரு படத்தில்தான் நடிப்பது என்ற எனது பாலிசியை மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் பல வாய்ப்புகள் நழுவிப் போயிருக்கிறது. தற்போது எம்.ஏ இறுதியாண்டு படிக்கிறேன். தேர்வு எழுதி முடித்த பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பேன்.
வாய்ப்புக்காக காத்திருக்க மாட்டேன் பத்மப்ரியா
3/2/2011 11:32:23 AM
பத்மப்ரியா கூறியது: ‘தவமாய் தவமிருந்து’, ‘மிருகம்’, ‘பழஸிராஜா’, ‘பொக்கிஷம்’ என நான் நடித்த படங்களில் எனது வேடம் வலுவாக அமைந்திருந்தது. ஆனால் சில ரோல்களில் நடிக்கும்போது, ஏன் இப்படி நடித்தீர்கள் என்கிறார்கள். எந்த இயக்குனரிடமும் இப்படித்தான் எனக்கு கதை வேண்டும், கேரக்டர் வேண்டும் என்று கேட்க முடியாது. ஆனால் எதிர்பார்க்கும் வேடம் கிடைத்துவிட்டால் மகிழ்ச்சி. அதற்காக காத்திருக்கவும் முடியாது. வேற்று மொழிகளில் நல்ல வேடங்கள் வரும்போது அதை தவிர்க்க எண்ணமில்லை. பெங்காலியில் அருமையான ரோல் வந்தது. ஒப்புக்கொண்டேன். என்னைப் பார்ப்பவர்கள், 'தோற்றமே மாறி இருக்கிறதே, உடற்பயிற்சி செய்கிறீர்களா?Õ என்கிறார்கள். ஹீரோயின் என்றால் சும்மா இல்லை. உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக நிறைய பயிற்சிகள் செய்கிறேன். உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்கிறேன்.
கிடார் வாசிக்க ஸ்டீவ் வாட்ஸியிடம் கற்ற சூர்யா
3/2/2011 11:40:47 AM
முருகதாஸ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகும் ஏழாம் அறிவு படத்தில் கமல் மகள் ஸ்ருதி ஹாஸன் முதல்முறையாக தமிழில் நடிக்கிறார். இதுவரை தமிழில் காணாத அசத்தல் சாகஸங்களை இந்தப் படத்தில் செய்யவிருக்கிறாராம் சூர்யா. அதுமட்டுமின்றி கிடார் வாசிக்கும் ஸ்டைலை கிடார் ஸ்பெஷலிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸியிடம் கற்றாராம் சூர்யா.
கார்த்தியின் அடுத்த படத்தை இயக்கப் போவது யாரு?
3/2/2011 12:04:02 PM
தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும், அடுத்த படத்திற்குகாக கதையை கேட்டு வருகிறார். பொதுவாக இளம் இயக்குனர்களை குறி வைக்கும் கார்த்தி, முன்னணி இயக்குனர்களின் கதையையும் கேட்டு வருகிறார். மேலும் கார்த்தியின் அடுத்த படத்தை இயக்க ஒரு போட்டா போட்டி நடக்கிறது. தனுஷை வைத்து “தேவதையை கண்டேன்”, “திருவிளையாடல் ஆரம்பம்” போன்ற ஹிட் படங்களை கொடுத்த பூபதி பாண்டியன் கார்த்தியை வைத்து படம் இயக்க ஆசைப்படுவதாக தெரிகிறது. அதேபோல் “ராமன் தேடிய சீதை” என்ற படத்தை இயக்கிய ஜெகனும் கார்த்தியை வைத்து படம் இயக்க ஆசைப்படுவதாக தெரிகிறது. கார்த்தி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருவதால் அவரை வைத்து இயக்க இந்த இரண்டு டைரக்டர் இடையே போட்டா போட்டி நடக்கிறது.
அஜீத்தை பாராட்டிய குத்தாட்ட நடிகை
3/2/2011 11:56:42 AM
க்ளவுடு நயன் மூவிஸ் சார்பில் துரை தயாநிதி அழகிரி தயாரிப்பில், அஜீத் நடிக்கும் 50வது படம் மங்காத்தா. இதில் அஜீத்துக்கு த்ரிஷா ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் அர்ஜூன், லட்சுமிராய், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வெங்கட்பிரபு இயக்கும் இந்த படத்தில் ஒரு குத்தாட்ட பாடல் இடம்பெறுகிறது. இதற்காக பாலிவுட்டில் இருந்து கைநாட் அரோரா என்ற நடிகை குத்தாட்ட பாடலுக்கு ஆடி உள்ளார். அஜீத்துடன் இணைந்து நடித்தது குறித்த கைநாட் அரோராவிடம் கேட்டபோது, அஜீத் சிறந்த நடிகர் மட்டுமல்ல, ஒரு சிறந்த மனிதரும் கூட என்று பாராட்டியுள்ளார்.