உயர்ரக சொகுசு கார்கள் பற்றி தெரிஞ்சுக்க ரோட்ஸ்டர் பாருங்க…

கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? சொகுசு கார்களைப் பற்றி தெரிந்து கொள்ள யு.எஃப்.எக்ஸ் சேனலில் ரோட்ஸ்டர் நிகழ்ச்சியைப் பாருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றனர்.

உயர்ரக சொகுசு கார்கள் குறித்த நுணுக்கமான தகவல்களை பரிமாறும் இந்நிகழ்ச்சியின் இந்த வார எப்பிசோடில் பி.எம்.டபிள்யூ எக்ஸ்-6 (BMW X6)மாடல் கார் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் ஷெரீஃப் அந்த வாகனத்தை பயன்படுத்தி அதன் அனுபவத்தை நேயர்களுடன் பரிமாறிக்கொள்கிறார்.

உயர்ரக சொகுசு கார்கள் பற்றி தெரிஞ்சுக்க ரோட்ஸ்டர் பாருங்க…

ரோட்ஸ்டர் நிகழ்ச்சியில் பல்வேறு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் சிறப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்தும் அதன் மாடல் சார்ந்த சிறப்புகளும் விளக்கப்படுகிறது.

சேனல் யு.எஃப்.எக்ஸ் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 10.45 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. பிறகு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11.45 மறுஒளிபரப்பாகிறது.

 

பாலிவுட்டில் நுழைகிறாராம் பிரமாண்ட இயக்குனர்?

சென்னை: பிரமாண்ட இயக்குனர் பாலிவுட் பாதுஷாவை வைத்து படம் எடுக்க திட்டமிட்டுள்ளாராம்.

பிரமாண்ட இயக்குனர் தன் உருவத்தை அடிக்கடி மாற்றும் நடிகரை வைத்து ஆண்டுக் கணக்கில் ஒரு படத்தை எடுத்து வெளியிட்டார். அந்த படம் வெளியான பிறகு மும்பை போன இயக்குனர் அங்கேயே தங்கியுள்ளாராம்.

கோலிவுட் ஹீரோக்கள் வரிசையில் நிற்க பாலிவுட் செல்லும் பிரமாண்டம்?

அவர் உச்ச நடிகரை வைத்து ஒரு படத்தை எடுக்கக்கூடும் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் தற்போது தமிழில் படம் எடுக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

அண்மை காலமாக பாக்ஸ் ஆபீஸில் கில்லியாக சொல்லி அடிக்கும் பாலிவுட் பாதுஷாவை வைத்து படம் எடுக்க பிரமாண்ட இயக்குனர் திட்டமிட்டுள்ளாராம். தெலுங்கில் ஒரு படத்தை விரைவில் இயக்குவேன் என்று தெரிவித்த இயக்குனர் தற்போது பாலிவுட்டில் நுழைகிறாராம்.

அவரின் படத்தில் நடிக்க கோலிவுட் ஹீரோக்கள் காத்திருக்க அவரோ பாலிவுட் ஹீரோவைத் தேடி மும்பை சென்றுள்ளார்.

 

படப்பிடிப்பில் சந்து கேப்பில் சிந்து பாடிவிட்டு வந்த வாரிசு நடிகர், பாச நடிகை

சென்னை: வாரிசு நடிகரும், பெயரில் அன்பை வைத்திருக்கும் நடிகையும் சொகுசு கப்பலில் படப்பிடிப்பு நடந்தபோது ஒரு மணிநேரம் மாயமாகிவிட்டார்களாம்.

பெரிய இடத்து பெண் வாரிசு நடிகரையும், பெயரில் அன்பை வைத்திருக்கும் நடிகையையும் வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பெரிய இடத்து பெண் தனது டான்ஸ் தோழியையும் நடிக்க வைத்துள்ளார்.

படப்பிடிப்பில் சந்து கேப்பில் சிந்து பாடிய வாரிசு நடிகர், பாச நடிகை

அவர் சில காட்சிகளை வெளிநாட்டில் அதுவும் சொகுசு கப்பலில் படமாக்கினார். சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட போட்டிகளில் ஹீரோ கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றாராம். வென்ற பரிசுகளை ஹீரோயினுக்கு கொடுத்துவிட்டாராம்.

வாரிசு நடிகருக்கும், அந்த நடிகைக்கும் இடையே காதல் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் சொகுசு கப்பலில் படப்பிடிப்பு நடந்தபோது காதல் ஜோடி திடீர் என மாயமாகிவிட்டதாம்.

ஒரு மணிநேரம் கழித்து அவர்களாக வந்து படக்கழுவினருடன் சேர்ந்துள்ளனர். திரும்பி வந்தபோது காதல் ஜோடி மிகவும் களைப்பாக காணப்பட்டதாம்.

 

மஞ்சள் சிவப்பழகி அனுஷ்கா ஆகிறார் ... இஞ்சி இடுப்பழகி....!

மெல்லிய இடையாள் என்றும் இஞ்சி இடுப்பழகி என்றுப் பெண்களை பாராட்டுவது சங்க காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. இன்று அந்த அடைமொழியை, வர்ணனையை விரும்பும் பெண்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே வருகிறது.

இதைக் காசாக்கத்தான் எண்ணற்ற விவாதங்கள், ஆலோசனை கூட்டங்கள், வர்த்தக விளம்பர யுத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மஞ்சள் சிவப்பழகி அனுஷ்கா ஆகிறார் ... இஞ்சி இடுப்பழகி....!

பரவலாக பேசப்படும் இந்த விஷயத்தைத்தான் பி வி பி சினிமா நகைசுவை மிளிர சொல்ல வருகிறது.

பழம்பெரும் இயக்குனர் ராகவேந்திர ராவ் அவர்களின் மகனும், தெலுங்கில் பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியவருமான கே .எஸ். பிரகாஷ் தனது இயக்கத்தில் 'இஞ்சி இடுப்பழகி' என்ற தலைப்பில் இந்தப் படத்தை இயக்குகிறார்.

படம் குறித்து பிரகாஷிடம் பேசினோம்...

'இஞ்சி இடுப்பழகி என்ற இந்தத் தலைப்பே கதை சொல்லும். உடல் வாகைப் பற்றிய படம் என்பதால் உலகமே போற்றும் ஆணழகனும், பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகைக் கொண்ட அனுஷ்காவும் தான் நடிக்க வேண்டும் என்பதை எந்த விவாதமும் இன்றி ஒருமனதாகத் தீர்மானித்தோம்.

அப்படி ஒரு அபூர்வ ஜோடியான ஆர்யாவும் அனுஷ்காவும் நடிக்கும் பொழுது அதை கண்கவர் வண்ணத்தில் பதிவு செய்ய நீரவ் ஷாவே பொருத்தமானவர் என்பதால் அவருடன் இணைந்து பணி செய்கிறேன்.. செவிகளுக்கு தேனூட்டும் இசையைத் தர மரகதமணி இசையமைக்கிறார்.

மஞ்சள் சிவப்பழகி அனுஷ்கா ஆகிறார் ... இஞ்சி இடுப்பழகி....!

எனது தகப்பானார் ராகவேந்திர ராவ் அவர்களுக்கு தமிழ் திரை உலகில் இருக்கும் மரியாதையையும், நன்மதிப்பையும் கண்டு வியந்து போனேன். நானும் அவர் வழியில் நல்ல திரைப்படங்களை இயக்கி அந்த நற்பெயரையும் ரசிகர்களையும் சம்பாதிப்பேன்," என்றார் நம்பிக்கையுட ன்.

இன்று 'இஞ்சி இடுப்பழகி' படத்தின் பூஜை ஏ வி எம் அரங்கில் உள்ள பிள்ளையார் கோவிலில் விமரிசையாக நடந்தது. பல்வேறு நட்சத்திரங்கள் , தொழில் நுட்ப கலைஞர்கள் , தயாரிப்பாளர்கள் என திரை உலக பிரமுகர்கள் திரண்டு வந்து படக் குழுவினரை வாழ்த்தினர்.

 

மும்பையில் சூர்யாவின் புதிய படத்துக்காக ரூ 4 கோடியில் பிரமாண்ட செட்!

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் 24-ன் படப்பிடிப்பு மும்பையில் இம்மாத இறுதியில் தொடங்குகிறது.

இந்தப் படத்துக்காக ரூ 4 கோடி செலவில் பிரமாண்டமாக மும்பையில் செட் போடப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்து வரும் மாஸ் படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் முடிந்துவிடுகிறது.

மும்பையில் சூர்யாவின் புதிய படத்துக்காக ரூ 4 கோடியில் பிரமாண்ட செட்!

அதைத் தொடர்ந்து 24 படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார் சூர்யா.

யாவரும் நலம், மனம் படங்களைத் தொடர்ந்து விக்ரம் குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இது முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகவிருக்கிறது.

சூர்யா இப்போது நடித்துக் கொண்டிருக்கும் மாஸ் படமும் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.

 

யுவன்தான் எங்க மாஸ் இசையமைப்பாளர்! - வெங்கட் பிரபு

மாஸ் படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாதான். அதில் மாற்றம் இல்லை என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபுவின் தம்பியும் அவரது ஆஸ்தான இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா பற்றித்தான் கடந்த இரு தினங்களாக செய்திகள்.

யுவன்தான் எங்க மாஸ் இசையமைப்பாளர்! - வெங்கட் பிரபு

இப்போது அவர் சூர்யா நடிக்கும் மாஸ் படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார்.

திடீரென இந்தப் படத்தின் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

அவருக்குப் பதில் தமனை இசையமைக்குமாறு சூர்யா கூறிவிட்டார் என்றும், அவர் இசையில் ஒரு பாடல் உருவாக்கப்பட்டு, படப்பிடிப்பும் நடக்கிறது என்று கூறப்பட்டது.

இன்னொரு பக்கம், யுவன் சம்மதத்தோடுதான் தமன் இசையில் ஒரு பாடல் இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டதாக சிலர் புது விளக்கம் கூறினர்.

இந்த நிலையில் இந்த குழப்பத்துக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் வெங்கட் பிரபு ட்விட்டரில் ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளார்.

அதில் யுவன்தான் எங்க மாஸ் இசையமைப்பாளர், அதில் மாற்றமில்லை என்று தெரிவித்துள்ளார்.

எப்படியோ.. குழப்பம் தீர்ந்தால் சரி!

 

அப்பாடக்கர்.... ஜெயம் ரவியுடன் வெளிநாடுகளில் டூயட் பாடும் த்ரிஷா!

அப்பாடக்கர் படத்துக்காக வெளிநாடுகளில் ஹீரோ ஜெயம் ரவியுடன் டூயட் பாடப் போகிறார் நடிகை த்ரிஷா.

சுராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டுவிட்டன.

அப்பாடக்கர்.... ஜெயம் ரவியுடன் வெளிநாடுகளில் டூயட் பாடும் த்ரிஷா!

பட காட்சிகளை படமாக்கிவிட்ட படக்குழுவினர் தற்போது இரண்டு பாடல்களை மட்டும் படமாக்கவுள்ளனர். இதற்காக ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் படக் குழுவினர் வெளிநாடு செல்லவுள்ளனர்.

காமெடி கலந்த பொழுது போக்கு படமாக உருவாகி வரும் அப்பாடக்கரில் விவேக், சூரி நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் அஞ்சலி நடிக்கிறார்.

இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

 

தடையை மீறி ஜேகே படத்தை வெளியிட்டதற்காக சேரன் மீது ஜெமினி நிறுவனம் வழக்கு

ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை என்ற திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை மீறி, அந்த படத்தை வெளியிட்டுவிட்டார் என்று இயக்குநர் சேரன் மீது ஜெமினி நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

தடையை மீறி ஜேகே படத்தை வெளியிட்டதற்காக சேரன் மீது ஜெமினி நிறுவனம் வழக்கு

ஜெமினி இன்டஸ்ட்ரிஸ் இமேஜிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஏ.மனோகர் பிரசாத் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்தார்.

அதில், டிரீம் தியேட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் பி.சேரன், ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்கியுள்ளார். இந்தப் படத்தை தயாரிப்பதற்காக எங்கள் நிறுவனத்திடம் இருந்து ரூ.2 கோடி கடன் பெற்றார்.

கடன் தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்திய பிறகே படத்தை வெளியிடுவதாக ஒப்பந்தம் செய்து உத்தரவாதம் அளித்தார். ஆனால், எங்களுக்குத் தர வேண்டிய பணத்தை திருப்பித் தராமல், படம் வெளியாகும் தேதியை சேரன் அறிவித்தார். கடன் தொகையை வட்டியுடன் திருப்பித் தராமல் படத்தை வெளியிடுவதற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.

இதை விசாரித்த நீதிமன்றம், கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல், திரைப்படத்தை வெளியிட கடந்த ஜனவரி 12-ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

ஆனால், கடந்த 7-ஆம் தேதி ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை டிவிடி மூலமாக சேரன் வெளியிட்டார். நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் படத்தை அவர் வெளியிட்டுள்ளார். எனவே, சேரன் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணை செய்த நீதிபதி மனுவுக்கு பதில் அளிக்குமாறு சேரனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

 

அதான் ஒரிஜினல் டிவிடியே தர்றோமே.. திருட்டு விசிடி எதுக்குங்க? - சேரன்

திருட்டு சி.டி.யை மக்கள் ஆதரிக்கக் கூடாது என திரைப்பட இயக்குநர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருட்டு சி.டி. பிரச்னை தொடர்பாக வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர, காவல் துறை ஆணையரகத்துக்கு மனு கொடுக்க புதன்கிழமை வந்த சேரன், அங்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

அதான் ஒரிஜினல் டிவிடியே தர்றோமே.. திருட்டு விசிடி எதுக்குங்க? - சேரன்

நான் இயக்கிய "ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை' என்ற திரைப்படத்தை மக்களிடம் நேரடியாகக் கொண்டு செல்லும் வகையில் டி.வி.டி.யாக முதல் நாளிலேயே வெளியிட்டேன். இதை எனது நிறுவனமான சி2எச் நிறுவனம் மாநிலம் முழுவதும் மக்களிடம் கொண்டு சென்றது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை.

இன்று ஒரு குடும்பம் திரையரங்குக்குச் சென்று திரைப்படம் பார்க்க ஆயிரம் ரூபாய் கட்டாயமாக தேவைப்படுகிறது. அதைவிட ரூ. 50 செலுத்தினாலே இந்த திரைப்படத்தின் ஓரிஜினல் டிவிடியை எங்களிடம் பெற்று, மக்கள் வீடுகளில் இருந்தபடியே திரைப்படத்தை எவ்வித சிரமமும் இன்றி கண்டு ரசிக்கலாம்.

இந்தத் திட்டத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதனிடையே எங்களது ஒரிஜினல் சி.டியிலிருந்து காப்பி செய்து திருட்டு சி.டி. தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு விற்பனை செய்ததாக மாநிலம் முழுவதும் 16 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதேபோல கேபிளிலும் இந்த திரைப்படம் எவ்வித அனுமதியும் இன்றி ஒளிபரப்பப்படுகிறது.

இது தொடர்பாக 4 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. திருட்டு சி.டி.க்கு மக்கள் எந்த சூழ்நிலையிலும் ஆதரவு அளிக்கக் கூடாது. நாங்கள் தரமான ஒரிஜினல் டிவிடியை குறைந்த விலைக்குக் கொடுத்தபோதும், மக்கள் திருட்டு சிடி வாங்குவது வருத்தம் தருகிறது.

திருட்டு சி.டி. விற்பவர்கள், கேபிள் ஒளிபரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் ஏற்கெனவே புகார் செய்துள்ளேன். இப்போது ஆணையரிடம் புகார் செய்ய வந்தேன். இந்தப் பிரச்னையில் தமிழக காவல்துறை எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது," என்றார் சேரன்.

 

'போடா.. ஆண்டவனே என் பக்கம்'

'போடா.. ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்...' படையப்பா படத்தில் ரஜினி பேசும் புகழ்பெற்ற பஞ்ச் வசனம் இது.

இது பல ஆயிரம் ரசிகர்களின் மொபைல்களில் ரிங் டோனும் கூட.

என்னடா இத்தனை நாட்களாக இதை எந்தப் படத்துக்கும் தலைப்பாக வைக்கவில்லையே என்று பார்த்தால்... இதோ வச்சிட்டாங்க!

'போடா.. ஆண்டவனே என் பக்கம்'

ஜெயம்கொண்டான் படத்தை இயக்கிய கண்ணன் இயக்கும் அடுத்த படத்துக்கு தலைப்பு, 'போடா.. ஆண்டவனே என் பக்கம்' என்பதுதான்.

இந்தப் படத்தின் நாயகனாக விஷ்ணு நடிக்கிறார். ஜோடியாக பிரயாகா நடிக்கிறார். இவர் பிசாசு படத்தில் நடித்தவர்.

'போடா.. ஆண்டவனே என் பக்கம்'

காமெடி படமாக உருவாக இருக்கும் இப்படத்தை விஜய் ராஜ் ஜோதி தயாரிக்கிறார். இப்படத்தில் முதலில் அட்டகத்தி தினேஷ் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. தற்போது விஷ்ணு நடிக்கிறார். பிசாசு நாயகி ப்ரயாகா நடிக்கும் அடுத்த படம் இது.

படபிடிப்பு மே மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. சென்னையில் தொடர்ந்து 45 நாட்கள் படபிடிப்பு நடைபெறும். பாடல் காட்சிகள் கனடாவில் 10 நாட்கள் படமாக்க உள்ளது.

இந்தப் படத்துக்காக சென்னை ரிட்சி தெரு போன்று பிரம்மாண்டமான செட் வடிவமைக்க படுகிறது. முன்னணி நகைச்சுவை நடிகர் மற்றும் முன்னணி இசை அமைப்பாளர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது.

படத்தை செப்டம்பரில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

 

லிங்கா 100வது நாள்.. ஆல்பர்ட் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம்

ரஜினி நடித்த லிங்கா படத்தின் நூறாவது நாள் விழா சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் வரும் மார்ச் 22-ம் தேதி நடக்கிறது.

ரஜினி - சோனாக்ஷி சின்ஹா - அனுஷ்கா நடிப்பி், கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான லிங்கா திரைப்படம் கடந்த டிசம்பர் 12-ம் தேதி உலகெங்கும் பிரமாண்டமாய் வெளியானது.

லிங்கா 100வது நாள்.. ஆல்பர்ட் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம்

படத்துக்கு மிகப் பெரிய ஆரம்ப வசூல் கிடைத்தாலும், முதல் வாரத்திலிருந்தே திட்டமிட்டு பரப்பப்பட்ட எதிர்மறைப் பிரச்சாரத்தால் படம் பாதிக்கப்பட்டது. படம் நஷ்டம் என்று கூறி உண்ணாவிரதம், பிச்சைப் போராட்டம் என்றெல்லாம் அறிவிப்புகள் ஒருபக்கம், படத்தை செத்த பிணம் என்று கீழ்த்தரமாகக் கூறி பிரச்சாரம் என்று தொடர்ந்தனர்.

இத்தனைக்கும் நடுவில் 35 நாட்கள் வரை நூற்றுக்கணக்கான அரங்குகளில் ஓடிய இந்தப் படம், பின்னர் சொற்ப அரங்குகளில் மட்டுமே ஓடியது. சென்னையில் அபிராமி, தேவி, ஆல்பர்ட் வளாகங்களில் இந்தப் படம் 100 நாட்களை நோக்கி ஓடிக் கொண்டுள்ளது.

இந்தப் படத்தின் நூறாவது நாள் விழா சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் வரும் மாரச் 22-ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.

இதனை சென்னை ரஜினி ரசிகர்கள் பிரமாண்டமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனர். ஆல்பர்ட் திரையரங்கில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அன்று திரண்டு வந்து இந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள். நூறாவது நாளையொட்டி நடக்கும் லிங்கா சிறப்புக் காட்சிகளுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

 

இயக்குனராக அவதாரமெடுக்கும் பிரபல சண்டைப் பயிற்சியாளர்

கமல் ஹாஸனுடன் வேட்டையாடு விளையாடு, விஜய்யுடன் காவலன், சூர்யாவுடன் கஜினி என முன்னணி நட்சத்திரங்களின் சண்டைப் பயிற்சயாளராக பணியாற்றி வந்த 'ஸ்டன்' சிவா தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

7 ஸ்டார் யூனிவர்சல் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடட் சார்பாக லேனி ஹவ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கெவின், ஸ்டிவின், லேனி ஹவ், ரோஹினி, ஜுனியர் பாலையா, நந்தா பெரியசாமி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இயக்குனராக அவதாரமெடுக்கும் பிரபல சண்டைப் பயிற்சியாளர்

லேனி ஹவ் எழுதிய கதைக்கு, திரைக்கதை எழுதி இயக்குகிறார் 'ஸ்டன்' சிவா.
இப்படத்தின் நாயகன் கதாபாத்திரத்துடன் படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் தன்னை ஒப்பிட்டு பார்க்கும் வகையிலும், நாயகனை போன்ற குணாதிசயங்கள் நமக்கும் தோன்றாதா என்று என்னும் வகையிலும் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இயக்குனராக அவதாரமெடுக்கும் பிரபல சண்டைப் பயிற்சியாளர்

கேரா ஜெரிமீயா இசையமைக்க, என் எஸ் உதய் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டன் சிவாவே சண்டைப் பயிற்சியையும் கவனிக்க, மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றுகிறார் நிகில் முருகன்.

படக்குழுவினரை நேரில் சந்தித்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ் தாணு, சிவாவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.