கல்லூரி மாணவர்களுக்காக நடிப்புப் பயிற்சி பட்டறை- விஷால்- சுசீந்திரன் தொடங்கினர்!

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கென நடிப்புப் பயிற்சிப் பட்டறை தொடங்கியுள்ளனர் நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் சுசீந்திரன்.

சுசீந்திரனும்-விஷாலும் இணைந்து ‘பாண்டியநாடு' படத்தில் பணியாற்றினர். அந்த படம் பெரிய வெற்றி பெறவே, தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் ‘பாயும் புலி' படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்கள். இந்தப் படம் செப்டம்பர் 4-ந் தேதி வெளியாகிறது.

Vishal and Suseendhiran to conduct acting workshop for college students

சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய விஷால், பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டார். மேலும், பல சமுக சேவை அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றவும் முடிவு செய்துள்ளார்.

சென்னையில் உள்ள எம்.ஒ.பி கல்லூரி மாணவிகளின் ஆதரவுடன் இணைந்து கால்நடை பாதுகாப்பு மற்றும் பசுக்கொலை தடுப்பு குழு (Save cattle stop & killing cows) என்னும் பேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.

மேலும் பசுமைச் சூழல் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கிடையே ஏற்படுத்தும் நோக்கத்தில் எம்.ஒ.பி கல்லூரியின் வளாகத்தில் ஆறு மரக் கன்றுகளையும் அவர் நட்டார்.

Vishal and Suseendhiran to conduct acting workshop for college students

பிறகு நடிகர் விஷால் பேசும்போது, "நான் இதுபோன்ற நல்ல விஷயங்கள் செய்வதை யாரேனும் விளம்பரத்துக்காக செய்கிறேன் என்று கூறினால் அது தவறு. நான் இங்கு மாணவர்களோடு இணைந்து கால்நடைகள் பாதுகாப்பு அமைப்பில் பணியாற்றும் போது நிச்சயம் மக்களை அது எளிதாக சென்றடையும்.

Vishal and Suseendhiran to conduct acting workshop for college students

இதை பார்த்து பலர் இந்த அமைப்போடு இணைந்து இந்த நல்ல நோக்கத்துக்காக பணியாற்றுவார்கள் என்பதுதான் காரணம்.

நானும் இயக்குனர் சுசீந்திரனும் இணைந்து இயக்கம் மற்றும் நடிப்புக்கான பயிற்சிப்பட்டறை ஒன்றை எம்.ஒ.பி கல்லூரி மாணவிகளுக்காக வழங்கவுள்ளோம்," என்றார்.

 

"கபாலி"க்கு சென்னையில் பிள்ளையார் சுழி.. அடுத்து மலேசியா பறக்கிறார்களாம்!

சென்னை: ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் உருவாகவிருக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பை சென்னையில் இருந்து துவங்க, இயக்குநர் பா.ரஞ்சித் முடிவு செய்திருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் போட்டோ ஷுட்டுகளை மிகவும் ரகசியமாக ஏவிஎம்மில் வைத்து ரஞ்சித் நடத்தியிருந்தார், படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ரஜினி தோன்றவிருக்கிறார்.

kabali First schedule Start in Chennai

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை மலேசியாவில் தொடங்கப் போவதாக முன்பு அறிவித்திருந்தனர்,அதற்கான லொக்கேஷன்களை இயக்குநர் ரஞ்சித் தேர்வு செய்திருந்தார்.

மலேசியாவில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, அதன்பின்னர் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்திவிட்டு, அடுத்தக்கட்டமாக மலேசியா புறப்பட, படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அநேகமாக வருகிற விநாயகர் சதுர்த்தியன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று திரையுல வட்டாரங்களில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதற்கு முன்னதாக செப்டம்பர் 17-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட முடிவு செய்துள்ளனர், படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனராம்.

பிரிக்கவே முடியாதது ரஞ்சித்தையும், சென்னையையும் (திருவிளையாடல் பாணியில்.

 

எனது ரகசியப் புத்தகம் அவன்.. தம்பி குறித்து சிலாகிக்கும் ஹன்சிகா

சென்னை: தமிழ் சினிமாவின் குட்டி குஷ்பூ என்று அழைக்கப்படும் நடிகை ஹன்சிகா, இடைவிடாத படப்பிடிப்புகளுக்கு மத்தியிலும் மும்பை பறந்து சென்று தனது அன்பு சகோதரனுடன் ரக்க்ஷா பந்தனை கொண்டாடியிருக்கிறார்.

உலகம் முழுவதும் சகோதரத்துவ தினத்தை (ரக்க்ஷா பந்தன்) இனிதே கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், நடிகை ஹன்சிகாவும் இந்த இனிய தினத்தை தனது சகோதரர் பிரஷாந்துடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்,

தனது சகோதரர் குறித்து ஹன்சிகா கூறுகையில் "எனது மிகப்பெரிய பலமே எனது சகோதரன்தான். எனது பலம், பலவீனம் என்று என்னைப் பற்றிய முழுவதுமே அவனுக்குத் தெரியும்.

சுருக்கமாக சொன்னால் எனது ரகசிய புத்தகம் என்றும் அவனைக் கூறலாம், மேலும் என்மீது அன்பு செலுத்துவதிலும் என்னைப் போற்றி பாதுகாப்பதிலும் அவனுக்கு நிகர் அவனேதான்" என்று தனது சகோதரனின் அன்பு குறித்து நெகிழ்ந்திருக்கிறார் ஹன்சிகா.

மேலும் தனது சகோதரன் பிரஷாந்துடன் ரக்க்ஷா பந்தனை கொண்டாடிய புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் ஹன்சிகா.

பாசமலரே அண்ணன் ஒரு நேசமலரே...

 

செப்டம்பரில் பதுங்கி அக்டோபரில் பாயத் தயாரான புலி... தள்ளிப்போன இஞ்சி இடுப்பழகி

சென்னை: விஜயின் நடிப்பில் மாபெரும் பொருட்செலவில் உருவான புலி திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று அறிவித்து இருந்தனர்.

ஆனால் எதிர்பாராதவிதமாக படத்தின் விஎப்எக்ஸ்(VFX) பணிகள் முடிவடையாததால், படத்தின் வெளியீடு அக்டோபர் 1 ம் தேதி தள்ளிப் போயிருக்கிறது.

Inji Iduppazhagi Movie Postponed

அக்டோபர் 1 ம் தேதி விஜயின் புலியுடன் ஆர்யாவின் இஞ்சி இடுப்பழகி மற்றும் விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான், ஆகிய 2 படங்களும் மோதப்போவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் ஆர்யாவின் இஞ்சி இடுப்பழகி படத்தின் வெளியீடை தற்போது தள்ளி வைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்து இருக்கின்றனர்.

புலியின் ஆக்ரோஷம் அதிகம் இருப்பதால் மோதலை விரும்பாத இஞ்சி இடுப்பழகி தள்ளிப் போயிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

மற்றொரு படமான நானும் ரவுடிதான் படம் அக்டோபர் 2 ம் தேதி திட்டமிட்டபடி வெளியாகுமா அல்லது இஞ்சி இடுப்பழகியைப் போல தள்ளிப் போகுமா என்பது தெரியவில்லை.

ஆனால் அதே நேரம் செப்டம்பர் 17 ம் தேதியில் வெளியாகவிருந்த புலி தள்ளிப் போனதால் அந்த தேதியில் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன், கவுண்டமணியின் 49 போன்ற படங்களுடன் மேலும் 2 படங்களும் களத்தில் குதிக்கின்றன.

புலி பதுங்கினாலும் பிரச்சினை, பாய்ந்தாலும் பிரச்சினை....

 

ஹாலிவுட் நடிகர் அர்னால்டு இறந்துவிட்டதாக காட்டுத் தீயாகப் பரவிய வதந்தி

கலிபோர்னியா: ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்நெக்கர் இறந்துவிட்டதாக பொய்யான தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்நெக்கர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள தனது வீட்டில் இருக்கும் படுக்கையில் பிணமாகக் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர் என்று இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டது.

Arnold Schwarzenegger Death Hoax: Report Claiming Him Died at California Home is False

லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசாருக்கு 911 எண்ணில் அர்னால்டு வீட்டில் இருந்து அழைப்பு வந்ததாகவும், போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அவர் படுக்கையில் இறந்து கிடந்ததாகவும் அந்த இணையதளம் தெரிவித்திருந்தது.

இதை பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் அர்னால்டின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த செய்தி வெளியான மறுநாளே அர்னால்டு உணவகம் ஒன்றுக்கு வந்திருந்ததை பார்த்த மக்கள் வியப்படைந்தனர்.

அர்னால்டு இறந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது இது ஒன்றும் முதல் முறை அல்ல. முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கூட அவர் இறந்துவிட்டதாக செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

கொச்சியில் கோலாகலமாக நடைபெற்றது "தாமிரபரணி" பானுவின் திருமணம்

திருவனந்தபுரம்: நடிகை பானு - ரிங்கு டோமியின் திருமணம் இன்று கொச்சியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

தமிழில் நடிகர் விஷால் ஜோடியாக ‘தாமிரபரணி' படத்தில் அறிமுகமான பானு அந்தப் படத்தின் மாபெரும் வெற்றி காரணமாக, தாமிரபரணி பானு என்றே திரையுலகில் அழைக்கப்பட்டார்.

இந்த நிலையில் மலையாள பின்னணி பாடகி ரிமி டோமியின் சகோதரர் ரிங்கு டோமிக்கும் நடிகை பானுவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதைதொடர்ந்து இரு வீட்டாரின் பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

Actress Bhanu Marriage

அதன்படி கடந்த 23-ந்தேதி கொச்சியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் நடிகை பானு-ரிங்கு டோமிக் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதைதொடர்ந்து நடிகை பானு - ரிங்கு டோமிக் திருமணம் இன்று (30-ந்தேதி) கொச்சி எடப்பள்ளியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்றது.

திருமண நிகழ்வில் மணமக்கள் இருவரும் கேரள பாரம்பரிய உடை அணிந்து இருந்தனர், திருமணத்தில் ஏராளமான மலையாள நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு நடிகை பானுவை வாழ்த்தினார்கள்.

இன்று மாலை இவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொச்சியில் உள்ள கோகுலம் பார்க் ஹோட்டலில் நடைபெறவிருக்கிறது. இந்த திருமண வரவேற்பிலும் ஏராளமான மலையாள திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தவிருக்கின்றனர்.

தமிழில் சமீபத்தில் வெளிவந்த வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தில் சந்தானத்தின் ஜோடியாக பானு நடித்து இருந்தார்.தொடர்ந்து பானுவின் நடிப்பில் சகுந்தலாவின் காதலன், வாய்மை மற்றும் பாம்பு சட்டை போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க பல்லாண்டு கல்யாண வாழ்க்கை நூறாண்டு....

 

புதுமணத் தம்பதி சாந்தனு - கீர்த்திக்கு விருந்தளித்து மகிழ்ந்த விஜய்

சென்னை: புதுமணத்தம்பதி சாந்தனு - கீர்த்தி தம்பதியினருக்கு விருந்து அளித்து அசத்தியிருக்கின்றனர் இளையதளபதி விஜய் - சங்கீதா தம்பதியினர்.

சமீபத்தில் இயக்குனர் கே.பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனுவுக்கும், டிவி தொகுப்பாளினி கீர்த்திக்கும் திருமணம் நடந்தது.

சென்னை ஈ.சி.ஆர். ரோட்டில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய வீட்டில் நடைபெற்ற இவர்களது திருமணத்திற்கு நடிகர் விஜய் முதல் ஆளாக வந்திருந்து, தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை ஆசீர்வதித்து சென்றார்.

இந்நிலையில், சமீபத்தில் புதுமண தம்பதிகளை தனது வீட்டுக்கு வரவழைத்து அவர்களுக்கு விருந்து கொடுத்து உபசரித்துள்ளார் விஜய். இந்த தகவலை நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இந்த சந்தோஷ தருணம் குறித்து சாந்தனு " விஜய் அண்ணாவும், சங்கீதா அக்காவும் எங்களை மிகவும் நன்றாக உபசரித்தனர். இந்த நாளை என் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாது" என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இயக்குநர் பாக்யராஜிற்கு நடிகரும் மக்கள் முதல்வருமான எம்.ஜி.ஆர் தாலி எடுத்துக் கொடுத்து ஆசிர்வதித்திருந்தார். அதே போன்று சாந்தனுவிற்கு விஜய் தாலி எடுத்துக் கொடுத்தார், என்று எம்.ஜி.ஆருடன் விஜயை ஒப்பிட்டுப் பேசியதால் மகிழ்ந்து போன விஜய் இந்த விருந்தை சாந்தனுவிற்கு அளித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விருந்து முடிஞ்சதும் சாந்தனு இப்படிப் பாடியிருப்பாரோ "இது சங்கீதத் திருநாளோ புது சந்தோஷம் வருநாளோ".

 

சமந்தாவின் அழுகையுடன் முடிந்தது 10 எண்றதுக்குள்ள ஷூட்டிங்

சென்னை: நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த 10 எண்றதுக்குள்ள படத்தின் ஷூட்டிங் சமந்தாவின் அழுகையுடன் ஒருவழியாக தற்போது முடிந்திருக்கிறது.

சமந்தா-விக்ரம் நடிப்பில் கூட்டணியில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த ‘10 எண்றதுக்குள்ள' படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

இப்படத்தை ‘கோலிசோடா' இயக்குனர் விஜய் மில்டன் இயக்கியிருக்கிறார் காஷ்மீரில் தொடங்கி நேபாளத்தில் முடியும் ஒரு பயணம் சம்பந்தப்பட்ட கதையை இந்தப் படம் மூலம் கையில் எடுத்திருக்கிறார் விஜய் மில்டன்.

Vikram's '10 Enradhukulla' Shooting Wrapped Up

இடையில் சில பிரச்சினைகளால் நின்று போயிருந்த படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது, தற்போது இந்த படப்பிடிப்பு முடிவுக்கு வந்திருக்கிறது.

10 எண்றதுக்குள்ள படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்ததாக நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது "ரொம்பவும் அற்புதமான டீம் மற்றும் அற்புதமான பணிகள் இவை கிடைப்பது மிகவும் பாக்கியமான ஒன்று. இன்றோடு படப்பிடிப்பு முடிந்தது,கடைசி நாள் படப்பிடிப்பு ரொம்பவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.

‘பத்து எண்றதுக்குள்ள' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது, இதைத் தொடர்ந்து விரைவில் இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோவை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர்.

அக்டோபர் மாதத்தில் இப்படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

முருகதாஸ் இப்போ ஹேப்பி அண்ணாச்சி....

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரிஜினல் தாடியுடன் நடிக்கும் ரஜினி!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக சொந்த தாடியுடன் நடிப்பதாக தயாரிப்பாளர் தாணுவிடம் சொல்லி சந்தோஷப்பட்டாராம் ரஜினி.

பொதுவாக விக் வைத்துக் கொள்வதை விரும்பாதவர் ரஜினி. கொடி பறக்குது படத்துக்காக விக் வைத்து நடித்தபோது இதை பத்திரிகை பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.

Rajini appears in own beard after long gap

ஆனால் இப்போது அவர் விக் வைத்தே தீர வேண்டிய கட்டாயம்.

இப்போது கபாலி படத்துக்காக சொந்தத் தாடியுடன் நடிக்கிறார். "இத்தனை ஆண்டுகளில் சொந்தத் தாடியுடன் வள்ளியில் நடித்தேன். ஆனால் இந்த அளவு தாடி வைத்து நடிப்பது இதுதான் முதல் முறை," என்று தயாரிப்பாளர் தாணுவிடம் கூறினாராம் ரஜினி.

கபாலி படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு முதலில் சென்னையில் தொடங்குகிறது. பிறகு மலேசியா பயணமாகிறார்கள் படக்குழுவினர்.

கபாலி ஷூட்டிங் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மலேசியாவில் தொடங்கும் என முதலில் அறிவித்திருந்தனர். ஆனால் விசா உள்ளிட்ட சில காரணங்களுக்காக ஒரு மாதம் தள்ளிப் போட்டனர்.

இப்போது முதல் பத்து நாட்கள் படப்பிடிப்பை சென்னையிலும், அதன் பிறகு மீதிப் படப்பிடிப்பை மலேசியாவிலும் நடத்த முடிவு செய்துள்ளனர்.

ரஞ்சித் இயக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

 

தனி ஒருவன் - விமர்சனம்

Rating:
4.0/5

எஸ் ஷங்கர்

Thani Oruvan (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

நடிப்பு: ஜெயம் ரவி, நயன்தாரா, அர்விந்த்சாமி, தம்பி ராமய்யா, நாசர்

ஒளிப்பதிவு: ராம்ஜி

இசை: ஹிப் ஹாப் தமிழா

தயாரிப்பு: ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்

எழுத்து - இயக்கம்: மோகன் ராஜா

'ரீமேக் படங்களின் ராஜா' என சற்று கிண்டலாகவே விளிக்கப்பட்ட மோகன் ராஜா, முதல் முறையாக தன் ஒரிஜினல் ஸ்க்ரிப்டோடு தனி ஒருவனாக வந்திருக்கிறார். ரீமேக் படமாக இருந்தாலும், அதை நமக்கேற்ற சுவாரஸ்யங்களோடு தர ஒரு தனித் திறமை வேண்டும். அதில் ராஜா நிஜமாகவே கில்லாடிதான். இந்த ஒரிஜினல் தனி
ஒருவனிலும் தன்னை ஒரு 'ராஜா'வாக நிரூபித்திருக்கும் அவருக்கு முதல் வாழ்த்து!

Thani Oruvan Review

சமீபத்தில் வந்த படங்களிலேயே மிகச் சிறந்த திரைக்கதையுடன் வந்திருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படம் என்றால் அது தனி ஒருவன்தான் என்றால் அதில் மிகையில்லை.

ஒரு ஹீரோ மிளிர வேண்டுமென்றால், அவனுக்கு சமமான வில்லன் வேண்டும் என்பதை உணர்ந்து வில்லனை விஸ்வரூபமெடுக்க வைத்திருக்கும் 'ராஜா பிரதர்ஸின்' தொழில் நேர்மை வியக்க வைக்கிறது.

Thani Oruvan Review

சமூகத்தில் குற்றம் செய்யும் பலரை, ஐபிஎஸ் பயிற்சி முடித்த ஜெயம் ரவியும் அவர் சகாக்களும் சட்டத்தின் முன் நிறுத்துகிறார்கள். ஆனால் மறுநாளே அவர்கள் பல்லைக் காட்டிக் கொண்டு அவர்கள் முன்னே சுதந்திரமாக நடமாடுகிறார்கள். ஆக இந்த கிரிமினல்களுக்குப் பின்னணியில் யாரோ ஒரு பெரிய கிரிமினல் இருக்க வேண்டும் என்ற அனுமானத்தில் தேடலைத் தொடங்க, அது அரவிந்த்சாமி என்ற பெரும்புள்ளியில் போய் நிற்கிறது. மருந்துலக மாபியாவாக, பெரும் தொழிலதிபராக, அசைக்க முடியாத அரசியல் செல்வாக்கு மிக்கவராக உள்ள அந்த பெரும் வில்லனோ, ஜெயம் ரவியின் ஒவ்வொரு அசைவையும் விரல் நுனியில் வைத்து விளையாடுகிறார்.

இந்த ஹீரோ - வில்லன் துரத்தலில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது யாரும் எதிர்ப்பார்க்காத புத்திசாலித்தனமான க்ளைமாக்ஸ்!

Thani Oruvan Review

ஹீரோ ஜெயம் ரவியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ரோமியோவிலிருந்து ஆக்ஷன் ஹீரோவாக ஜிவ்வென உயர்ந்திருக்கிறார். ரசிகர்கள் நம்பும்படியான ஆக்ஷன், க்ளோசப்பிலும் உறுத்தாத ஆண்மைத்தனம் மிக்க அழகு, காதல் காட்சிகளில் அசட்டுத்தனமில்லாத நடிப்பு... மயங்க வைக்கிறார் மனிதர். தமிழ் சினிமாவில் இன்றைய ஹீரோக்களில் ஜெயம் ரவிக்கு இணையான அழகும், திறனும் மிக்கவர் யாருமில்லை எனும் அளவுக்கு ரசிகர்களைக் கவர்கிறார் இந்தப் படத்தில்.

Thani Oruvan Review

ஜெயம் ரவிக்கு நிகரான.. சில இடங்களில் அவரையும் பின்னுக்குத் தள்ளும் வலுவான பாத்திரத்தில் அர்விந்த்சாமி. ஹீரோவாக நடித்த போது இவரைப் பிடிக்காதவர்களுக்கும் இப்போது பிடிக்கும் அளவுக்கு அலட்டலில்லாத, மிரட்டல் நடிப்பு. காதலியையும் தந்தையும் கொல்லச் சொல்லி அவர் உத்தரவிடும் விதம்.. புதுவகை வில்லத்தனம். க்ளைமாக்ஸில் ஹீரோவாகி திட்டிய வாய்களை வாழ்த்த வைக்கிறார்!

Thani Oruvan Review

நயன்தாராவை மிக இயல்பாகக் காட்டியிருக்கிறார்கள். ஹீரோ - வில்லனுக்கு இணையாக கலக்கியிருக்கிறார். வில்லன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறான்... ஆனால் அவனுக்குத் தெரியாமல் காதலைச் சொல்ல வேண்டும் என்ற கட்டத்தில், 'கட்டிப்பிடித்துக் கொண்டே பேசலாமே..' என பலகையில் எழுதும் நயன்தாராவைப் பிடிக்காதவர்கள் யார் இருக்க முடியும்!

தம்பி ராமய்யா மாதிரி ஒரு மந்திரி அப்பா தேடினாலும் கிடைக்காத மிகைதான். ஆனால் இந்தக் கதைக்கு அப்படி ஒரு பாத்திரம் தேவைதான். க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியில் 'பழனி.. அந்த புல்லட் புரூப் உடையைப் போட்டுக்கப்பா' என அவர் தழுதழுக்கும் காட்சி நெகிழ்ச்சி.

Thani Oruvan Review

நாசர், ஜெயம் ரவியின் சகாக்களாக வரும் ஹரீஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராம், ராகுல் மாதவ், ஸ்ரீசரன், அர்விந்த்சாமியின் அடியாளாக வரும் வம்சி என அனைவரையும் மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா.

ஹிப் ஹாப் தமிழாவின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பைக் காப்பாற்ற உதவுகிறது. ஆனால் பாடல்கள் உதவவில்லை. குறிப்பாக அந்த கடைசி டூயட் ஒரு ஸ்பீட் பிரேக்கர்தான்.

Thani Oruvan Review

ராம்ஜியின் ஒளிப்பதிவு திரைக்கதையின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓடுகிறது. புதியவராக இருந்தாலும், கோபிகிருஷ்ணாவின் எடிட்டிங் 'பக்கா'!

Thani Oruvan Review

எந்தக் குறையையும் ரசிகன் உணர முடியாத அளவுக்கு ஒரு திரைக்கதையை எழுதி, அதில் சிறு சமரசமும் இல்லாமல் படமாக்கியிருக்கும் ராஜா, வசனத்திலும் தனித்துவம் காட்டியிருக்கிறார் (சுபாவுடன் இணைந்து). சில படங்களைப் பற்றி எழுதும்போது தொழில்நுட்ப நேர்த்தி என்று பொத்தாம் பொதுவாகக் குறிப்பிடுவார்கள். ஆனால் உண்மையிலேயே அதற்கு தகுதியான படம் இதுதான் என்பதை, கிராபிக்ஸ் துணை அவ்வளவாக இல்லாமலேயே நிரூபித்திருக்கிறார் ராஜா.

தனி ஒருவன்... தனித்துவம் மிக்க படம்!

 

தென் கொரியாவின் சர்வதேச பட விழாவில் பாகுபலி

கொரியாவின் புகழ்பெற்ற பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க பாகுபலி படம் தேர்வாகியுள்ளது.

Baahubali - The Beginning (Tamil) (U/A): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

ஆசியாவில் வெளியாகும் முக்கிய திரைப்படங்களையும், புதிய கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் சிறந்த படைப்புகளை திரையிடுகிறது பூசன் சர்வதேச திரைப்பட விழா.

Baahubali- The Beginning” at Busan International Film Festival

வெற்றிப் படங்கள் மட்டுமல்லாது, புதிய இயக்குநர்களின் படைப்புகளும் இந்த விழாவில் இடம்பெறுகின்றன.

இந்த சர்வதேச திரைப்பட விழாவில் சுமார் 304 படங்கள் திரையிடப்பட உள்ளது. இதில் 75 நாடுகளில் இருந்து, 121 படங்கள் இடம்பெற உள்ளன. பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் உட்பட தலைசிறந்த உலக சினிமா பிரபலங்கள் இவ்வாண்டு இந்த சர்வதேச திரைப்பட விழாவுக்கான சினிமாக்களை தேர்வு செய்யும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

வரும் அக்டோபர் மாதம் 1-10-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் ‘பாகுபலி' திரைப்படம் ‘ஓப்பன் சினிமா' என்ற வகையில் திரையிடப்பட இருக்கிறது. அக்டோபர் மாதம் 4 மற்றும் 7-ம் மற்றும் 9-ம் தேதிகளில் இந்தப் படம் அங்கு திரையிடப்படுகிறது.

படத்தைப் பற்றிய ரசிகர்களது கேள்விகளுக்கு பதிலளிக்க எஸ்.எஸ். ராஜமெளலி இத்திரைப்பட விழாவில் பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விஷாலுக்கு தலைவர் பதவி வேண்டாமாம்.. செயலாளர் பதவி போதுமாம்!

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார், நான் நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் என்று நடிகர் விஷால் அறிவித்து இருக்கிறார்.

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவதற்கு விஷால் தலைமையிலான குழுவினர் மிகவும் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்காக நடிகர்-நடிகைகள், மற்றும் திரைப்படத்துறையின் முக்கிய பிரமுகர்ள் அனைவரையும் சந்தித்து தங்கள் அணிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

Vishal to Contest in Nadigar Sangam Elections

மேலும் ‘நாங்கள் வெற்றி பெற்றால் நடிகர் சங்கத்துக்கு தேவையான அனைத்தையும் செய்வோம்' என்ற கோரிக்கையை முன்வைத்து தங்கள் அணிக்கு ஆதரவை திரட்டி வருகின்றனர்.

சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கும் சென்று அந்தந்த மாவட்டத்தில் உள்ள, நாடக நடிகர்களின் ஆதரவையும் திரட்டி வருகின்றனர்.

2 தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடிய விஷால் ஏழை, எளியவர்கள், ஆதரவற்ற முதியவர்கள், பெண்கள் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு உதவிகளை தனது பிறந்தநாளை நலத்திட்ட பணிகள் வழங்கும் விழாவாக கொண்டாடினார்.

மேலும் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகளின் படிப்புக்கு முழு உதவியும் தான் செய்வதாக தனது பிறந்தநாளில் அறிவித்து இருக்கிறார்.

ஒருவழியாக பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்த பின்பு தற்போது மீண்டும் நடிகர் சங்க தேர்தல் குறித்து விஷால் நடிகர் விஷால் பின்வருமாறு கூறியிருக்கிறார்.

நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுவார், நான் நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்' என்று தெரிவித்து இருக்கிறார்.

சங்கத் தேர்தல் களை கட்டுகிறது போல...

 

இரட்டை வேடங்களில் நடிப்பது உண்மைதான் - ட்விட்டரில் அறிவித்த தனுஷ்

சென்னை: தனுஷ் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று சில நாட்களுக்கு முன்பு, நாம் தட்ஸ் தமிழில் உறுதி இல்லாத ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம்.

தற்போது அந்த செய்தி உண்மைதான் என்று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார் " நான் துரை செந்தில்குமாரின் புதிய படத்தில் இரட்டை வேடங்களில் முதன்முறையாக நடிக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

மேலும் படத்தைப் பற்றி தனுஷ் கூறும்போது "தற்போது நான் நடித்து வரும் பிரபுசாலமனின் படம் முடிவடைந்த பிறகு இந்தப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவோம்.

இந்தப்படத்தில் இரண்டுநாயகிகளில் ஒருவராக ஷாம்லி நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தை வெற்றிமாறனின் க்ராஸ்ரூட் நிறுவனமும் எஸ்கேப்ஆர்டிஸ்ட் மதனும் இணைந்து தயாரிக்கவிருக்கிறார்கள்" என்று சொல்லியிருக்கிறார்.

படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக லட்சுமி மேனன் நடிக்கிறார் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது, ஆனால் தனுஷ் அதுகுறித்து எந்த ஒரு தகவலையும் இந்த அறிவிப்பில் பகிர்ந்து கொள்ளவில்லை.

கடைசி வரைக்கும் லட்சுமி மேனனைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே....

 

அதிபர் - விமர்சனம்

Rating:
2.0/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: ஜீவன், வித்யா, ரஞ்சித், சமுத்திரக்கனி, தம்பி ராமய்யா, சிங்கமுத்து, நந்தா

ஒளிப்பதிவு: பிலிப்ஸ் விஜயகுமார்

இசை: விக்ரம் செல்வா

தயாரிப்பு: டி சிவகுமார்

இயக்கம்: சூர்யபிரகாஷ்

வெளிநாட்டில் செட்டிலான தமிழன், தாயகம் திரும்பி மீண்டும் சுயமாய் தொழில் செய்யும்போது சொந்த நாட்டுக்காரர்களே எப்படியெல்லாம் காலை வாருகிறார்கள், துரோகம் செய்கிறார்கள் என்பதை சொதப்பலாகச் சொல்லியிருக்கிறார்கள் அதிபர் படத்தில்.

Athibar Review

கனடா வாழ் தமிழரான ஜீவன், சொந்த நாடான இந்தியாவுக்கு வருகிறார் (கதைப்படி இவர் ஈழத் தமிழர். அப்படிக் காண்பித்தால் ஈழத்தில் படமாக்கும் சிக்கல் இருப்பதால், எதற்கு தொல்லை என்று இந்தியாவாகக் காட்டிவிட்டார்களாம்.. இதுக்கு வெங்கட்பிரபு பரவால்லயே!) தான் சம்பாதித்ததையெல்லாம் வைத்து ஒரு கட்டுமான நிறுவனத்துக்கு அதிபராகிறார். வக்கீல் ரஞ்சித்தை நம்பி தனது சட்ட ஆலோசகராக்குகிறார். அவரோ கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு, ஜீவனுக்கும் புலிகளுக்கும் தொடர்பிருப்பதாகப் போட்டுக் கொடுத்து உள்ளே தள்ளுகிறார்.

Athibar Review

இந்த சிக்கலிலிருந்து ஜீவன் எப்படி மீண்டு வந்து அதிபராகிறார் என்பது மீதிக் கதை.

நான்கைந்து ஆண்டுகள் காணாமல் போயிருந்த ஜீவன், அதே முடி, வறட்சியான நடிப்போடு திரைக்குத் திரும்பியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் மட்டும் வெளுத்தெடுக்கிறார். வேறொன்றும் சொல்வதற்கில்லை.

அவருக்கு ஜோடியாக வரும் வித்யாவுக்கு பெரிதாக வேலையில்லை. சம்பிரதாய ஹீரோயின்.

Athibar Review

நந்தா, சமுத்திரக்கனி இருவரும் ஜீவனின் நண்பர்களாக வருகிறார்கள். தங்கள் பங்கை கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.

தம்பி ராமய்யாவின் செய்வது 'அவ்ளோ பெரிய காமெடி இல்லை' ரகம். இதனை கவுண்டமணியும் செந்திலும் நாட்டாமையிலேயே செய்துவிட்டார்கள். தாதாவாக இருந்த நந்தா திடீரென திருந்துவதெல்லாம் நம்பக்கூடியதா...

இசை, ஒளிப்பதிவு இரண்டுமே சுமார் ரகம்தான். படத்தை எந்த வகையிலும் தூக்கி நிறுத்த உதவவில்லை.

வெளிநாட்டிலிருந்து தாய் நாடு திரும்பும் ஒருவன் சந்திக்கும் நெருக்கடிகள் என்ற எதார்த்தமான விஷயத்தை கதையாக்கிய இயக்குநர் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டாமா? அதில் தவறியதால் இந்த 'அதிபர்', தன் நாற்காலியைக் கோட்டை விட்டிருக்கிறார்!

 

கவலை வேண்டாம்: கீர்த்தி விலகினார்... காஜல் வந்தார்!

ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கவிருந்த கீர்த்தி சுரேஷ் திடீரென விலக, அவரது இடத்துக்கு வந்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

Keerthi Suresh walks out from Kavalai Vendam

'யாமிருக்க பயமே' இயக்குநர் டி.கே இயக்கத்தில் ஜீவா நடிப்பில் 'கவலை வேண்டாம்' என்கிற புதிய படம் ஆரம்பமாக இருந்தது. அதில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

Keerthi Suresh walks out from Kavalai Vendam

ஜீவா - கீர்த்தி சுரேஷை வைத்து போட்டோஷுட் எடுக்கப்பட்ட நிலையில் கால்ஷீட் பிரச்னையால் கீர்த்தி சுரேஷ் விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார்.

Keerthi Suresh walks out from Kavalai Vendam

படம் தொடங்குவதில் தன்னால் தாமதம் ஏற்பட வேண்டாம் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக கீர்த்தி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு இப்போது காஜல் அகர்வாலுக்குச் சென்றுள்ளது.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இது என்ன மாயம் படம் ஏற்கெனவே வெளியாகியுள்ளது. அடுத்து ரஜினி முருகன் வெளியாகவிருக்கிறது. மேலும் நான்கு படங்களில் அவர் நடித்து வருகிறார்.

 

ராம் சரண் படத்தில் குத்தாட்டம் போட இலியானாவுக்கு ரூ.1.5 கோடி சம்பளமா?

ஹைதராபாத்: ராம் சரண் நடிக்கும் ப்ரூஸ் லீ தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட இலியானாவுக்கு ரூ.1.5 கோடி சம்பளம் அளிக்கிறார்களாம்.

நடிகர் ராம் சரண் தேஜா ப்ரூஸ் லீ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். சீனு வைட்லா இயக்கும் இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். படத்தில் ராம் சரண் ஸ்டண்ட் பார்ட்டியாக வருகிறாராம். அவரின் செல்லப் பெயர் தான் ப்ரூஸ் லீ ஆம்.

Ileana D’Cruz offered Rs.1.5 crore for item number?

இந்நிலையில் பாலிவுட்டில் செட்டிலாகி வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடும் இலியானாவுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அதாவது ப்ரூஸ் லீ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட அவருக்கு ரூ.1.5 கோடி சம்பளம் அளிக்க முன்வந்துள்ளார்களாம்.

பாலிவுட்டில் மவுசு இல்லாததால் மீண்டும் டோலிவுட்டுக்கு திரும்ப நினைத்திருந்தார் இலியானா. கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடந்த நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாள் பார்ட்டியில் இலி கலந்து கொண்டார். அப்போது மீண்டும் டோலிவுட்டுக்கு வர வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவருக்கு ப்ரூஸ் லீ படத்தில் நடனம் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழில் ஜி.வி. பிரகாஷ் நடிக்க உள்ள படத்தின் பெயரும் ப்ரூஸ் லீ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கிராமங்களில்தான் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன! - வசந்த பாலன்

கிராமங்களில் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை அப்படியே படமாக்கினால் உலகத் தரத்துக்கு படங்கள் அமையும் என்றார் இயக்குநர் வசந்தபாலன்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் நிழல் திரைப்பட சங்கம் சார்பில், கம்பம் அமராவதி தியேட்டரில் உலகத் திரைப்பட விழா கடந்த 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற்றன.

Vasantha Balan urges filmmakers to go villages for good stories

விழாவில், இந்தியா, சீனா, போலந்து, ரஷ்யா உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 16 மொழி திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

விழாவின் 2 ஆவது நாளான சனிக்கிழமை இயக்குநர் தாமிரா இயக்கத்தில் உருவான மெஹர் திரைப்படம், போலந்து நாட்டைச் சேர்ந்த கேமரா பப், மலையாளப் படமான ஆதாமிண்ட மகன் அபு, அமெரிக்கப் படமான சாப்ளின் ஆகிய படங்கள் திரையிடப்பட்டன.

பின்னர் இரவு நடந்த விழாவில், இச்சங்கத்தின் மாநிலச் செயலர் எஸ். கருணா தலைமை வகித்தார். திரைப்பட நடிகர் கவிஞர் ஜோ. மல்லூரி, வசனகர்த்தா சுருளிப்பட்டி சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு விருந்தினராக இன்று நேற்று நாளை திரைப்பட இயக்குநர் ஆர் ரவிக்குமார், ரெட்டை சுழி படத்தை இயக்கிய தாமிரா, அங்காடித் தெரு இயக்குநர் வசந்தபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் தாமிரா பேசுகையில், தேனியில் தான் என் சினிமா வாழ்க்கை தொடங்கியது. மெஹர் திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இஸ்லாமிய சமுதாயப் பெண் தனது மகளின் திருமணத்துக்காக படும் கஷ்டமே இப்படத்தின் மையக் கரு. இப்படத்தை பார்த்த பல இளைஞர்கள், வரதட்சணை வாங்கமாட்டேன் எனக் கூறும்போது, படம் வெற்றி பெற்றதாகக் கருதுகிறேன் என்றார்.

இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், "எந்த ஒரு சினிமா, ரசிகனை தூங்கவிடாமல் செய்கிறதோ, அதுதான் உலக சினிமா. உலகத்தில் தோல்வி அடைந்தவனைப் பற்றி சிறுகதை, நாவல், திரைப்படம் இல்லை. வெயில் படத்தில் தோல்வி அடைந்தவனைப் பற்றி எடுத்தேன், வெற்றி அடைந்தேன். அடித்தட்டு மக்களின் துன்பம், வலி, அவர்களின் அரசியல் குறித்தே எனது படம் இருக்கும். சென்னையில் பார்த்த உலக திரைப்படங்களே வெயில், அங்காடித் தெரு போன்ற படங்களை எடுக்கக் காரணமாக இருந்தது.

சென்னையில் இருந்தால் இரண்டு வகையான கதைகள்தான் கிடைக்கும். ஆனால், கிராமங்களில்தான் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. அதை அப்படியே படமாக்கினால், பல உலகப் படங்கள் கிடைக்கும்," என்றார்.

 

தனுஷுக்கு ஜோடியானார் அஜீத் மச்சினி ஷாம்லி!

தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அஜீத்தின் மச்சினி நடிகை ஷாம்லி.

தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு துரை.செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தில் முதன்முதலாக தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பதும், ஒரு வேடத்துக்கு லட்சுமி மேனன் ஜோடி என்பதும் தெரிந்த செய்தி.

Shamli to play as Dhanush's pair

இன்னொரு நாயகியை தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அந்த வேடத்துக்கு அஜித்தின் மச்சினியும், நடிகை ஷாலினியின் தங்கையுமான நடிகை ஷாம்லி ஒப்பந்தமாகியுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாமிலி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நூற்றுக்கணக்கான படங்களில் டித்துள்ளார். தெலுங்கில் ஹீரோயினாக ஓரிரு படங்களில் நடித்துள்ளார். ஆனால் பெரிதாக எடுபடவில்லை.

இப்போது தமிழில் தனது அதிர்ஷ்டத்தை சோதிக்க வருகிறார். தனுஷ் நடிக்கும் படம் தவிர, விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகவிருக்கும் ‘வீரசிவாஜி' படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்க ஷாம்லி ஒப்பந்தமாகியுள்ளார்.

தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ் நிறுவனமும், வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

 

முன்னாள் காதலனை தவிக்கவிடும் நம்பர் நடிகை

சென்னை: ஆன்மீகத்தில் தீவிரமாக இறங்கியிருக்கும் அந்த விரல் நடிகர் சமீபத்தில் வெளியான அந்த இரண்டெழுத்து படம் கொடுத்த தைரியத்தில் கிடப்பில் கிடக்கும் தனது படங்களை தூசு தட்டி எடுக்க முடிவு செய்திருக்கிறார்.

முதல் படமாக முன்னாள் காதலியுடன் இணைந்து நடித்த ஆளான படத்தை வெளியிட முடிவு செய்து அந்த தேசிய விருது வாங்கிய இயக்குனரை ஒருவழியாக சமாதானப்படுத்தி மீண்டும் சம்மதிக்க வைத்துள்ளார்.

சாமி வரம் கொடுத்தும் பூசாரி தடுத்த கதையாக படத்தின் நாயகியான அந்த நம்பர் நடிகை படத்திற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறாராம்.

இன்னும் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தினால் படம் முழுவதும் முடிந்து விடும் இதற்காக நம்பர் நடிகையிடம் கால்ஷீட் கேட்டு சென்றால், என்னால் முடியாது என்று கையை விரித்து விட்டாராம் நடிகை.

கொடுத்த கால்ஷீட்டை எல்லாம் வீணாக்கி விட்டு இப்போது வந்து நடிக்க கூப்பிடுகிறீர்களா? என்னால் முடியாது. முடிந்தால் என்னுடைய சம்பள பாக்கியை கொடுங்கள் என்று நடிகை கேட்டதில் படக்குழுவினர் பயந்து பின்வாங்கி விட்டனர்.

சொந்த கம்பெனி மூலம் படத்தை தயாரித்த நடிகர் இப்போது என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருக்கிறாராம், நடிகரின் இந்தத் தவிப்பை பார்த்தவர்கள் ஷூட்டிங் காலத்தில ஒழுங்கா போய் இருந்தா இப்போ இப்படித் தவிக்கத் தேவையில்லையே என்று நக்கலடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

விநியோகஸ்தர் சிங்காரவேலன் மீது தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார்!

பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டுவதாக விநியோகஸ்தர் சிங்காரவேலன் மீது தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் தாணு, செயலாளர் டி சிவா உள்ளிட்டோர் இன்று சென்னை கமிஷனரிடம் புகார் தந்தனர்.

லிங்கா படத்தை திருச்சி தஞ்சையில் விநியோகித்த நிறுவனத்தின் பங்குதாரரான சிங்காரவேலன், அந்தப் படம் வெளியான நான்காவது நாளே படத்துக்கும் அதன் நாயகன் ரஜினிக்கும் எதிராக பிரச்சாரம் மேற்கொண்டார்.

Producer council lodges complaint on distributor Singaravelan

நஷ்ட ஈடு கேட்டு பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டார். தனக்கு சேரவேண்டிய தொகை என பெரிய அளவில் நஷ்ட ஈடும் பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், வரும் செப்டம்பர் 4-ம் தேதி பாயும் புலி படம் வெளியாகிறது. இந்தப் படத்தை வெளியிட, தனக்கு மேலும் பணம் தரவேண்டும் என்று கேட்டு மிரட்டுவதாகவும், திரையரங்கு உரிமையாளர்களை அதற்கு தூண்டுவதாகவும் படத்தின் தயாரிப்பாளரான வேந்தர் மூவீஸ் குற்றம்சாட்டியது.

பாயும் புலி படத்துக்கு முட்டுக்கட்டை மேலும் நீடிக்கவே, அதற்குக் காரணமான சிங்காரவேலன் மீது இன்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர் தயாரிப்பாளர் சங்கத்தினர்.

சங்கத்தின் தலைவர் கலைப்புலி தாணு, செயலாளர்கள் டி சிவா, ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் பிஎல் தேனப்பன், எஸ் கதிரேசன், வேந்தர் மூவீஸ் மதன் உள்பட பல நிர்வாகிகளும் இணைந்து இந்தப் புகாரை கமிஷனர் ஜார்ஜிடம் அளித்தனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட கமிஷனர் ஜார்ஜ், உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.