போராளி - விமர்சனம்


நடிப்பு: சசிகுமார், அல்லரி நரேஷ், கஞ்சா கருப்பு, பரோட்டா சூரி, ஸ்வாதி, வசுந்தரா, ஜெய்ப்பிரகாஷ்

இசை: சுந்தர் சி பாபு

ஒளிப்பதிவு: கதிர்

தயாரிப்பு: சசிகுமார்

இயக்கம் : சமுத்திரக்கனி

பிஆர்ஓ: நிகில் முருகன்

'மனிதன் ஒவ்வொருவனும் ஒரு சமூக விலங்குதான்... சூழல்தான் ஒருவனை போராளியாக்குகிறது' என்ற ஒருவரி தத்துவத்தை, 'போராளி'யாக்கியிருக்கிறார்கள் இயக்குநர் சமுத்திரக்கனியும் சசிகுமாரும்.

காட்சிகளில் சில நமக்கு ஏற்கெனவே பரிச்சயப்பட்ட மாதிரி தெரிந்தாலும், சசிக்குமாரும் சமுத்திரக்கனியும் சொல்ல வந்திருக்கும் செய்தி, அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் அடிக்க வைக்கிறது.

ஒரு மனநல காப்பகத்திலிருந்து தப்பி சென்னை வரும் நண்பர்களான சசிகுமார் - அல்லரி நரேஷ் இருவரும் கஞ்சா கருப்புடன் வலுக்கட்டாயமாக தங்குகிறார்கள். அக்கம்பக்கத்தில் வசிப்போர் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெறும் அவர்கள், அப்படியே அருகாமையிலுள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலைக்குச் சேர்ந்து, பின் புதுசாக ஒரு வியாபாரம் ஆரம்பித்து, அப்படியே வளர ஆரம்பிக்கும்போது, அவர்களுக்கும் பிரச்சினை ஆரம்பமாகிறது.

அந்தப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க சசிகுமாரும் நரேஷும் ஓடுகிறார்கள். எவ்வளவு காலத்துக்குதான் ஓடுவது, திருப்பியடிப்போம் என்று அவர்களை நிமிர வைக்கிறது சூழ்நிலை.

எதற்காக ஒடுகிறார்கள்... பிரச்சினையை வென்றார்களா... என்பது ப்ளாஷ்பேக்காக சொல்லப்பட்டிருக்கிறது.

அன்றாடம் நாம் எத்தனையோ மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்களைப் பார்க்கிறோம். ஆனால் இவர்கள் ஏன் இப்படி ஆனார்கள் என்று யோசிக்க நேரமோ, மனிதாபிமானமோ நம்மில் பெரும்பாலானோருக்கு இல்லை. அவர்களை அந்த சூழலுக்கு தள்ளியது எது? அவர்களின் உலகம் என்ன என்பதை சசிகுமார் வெளிப்படுத்தும் காட்சிகள் மனதைத் தைக்கின்றன.

இதற்கு முன் சசிகுமார் நடித்த இரு படங்களை விட இந்தப் படத்தில்தான் அசத்தியிருக்கிறார் எனலாம். அப்பாவித்தனம், இயலாமை, மனிதாபிமானம், நட்புக்காக எதையும் தாங்கத் தயாராகும் உன்னத குணம், ஆத்திரம் என அனைத்தையும் இயல்பாக காட்டியிருக்கிறார். காட்சிகளின் தன்மைக்கேற்ப வசனங்களை உச்சரிக்கும் பாங்கில் சசிகுமார் டிஸ்டிங்ஷனே வாங்கிவிட்டார்!

சூரியும் அவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் ரகளை.

சசிகுமாரின் நண்பனாக வரும் அல்லரி நரேஷ், மனநிலை பிறழ்ந்த காட்சிகளில் பார்ப்பவர்களின் இரக்கத்தை மொத்தமாக அள்ளிக் கொள்கிறார்.

தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருந்த கஞ்சா கருப்புக்கு இந்தப் படம் இன்னொரு லைஃப்!

கதாநாயகி என்ற கிரீடத்துடன் வரும் ஸ்வாதியை விட, நான்கே காட்சிகளில் வந்தாலும் வசுந்தராவுக்கே அதிக ஓட்டு.

ப்ளாஷ்பேக்கில் வரும் கொலைவெறிக் காட்சிகள் ஒரு பக்கம் கோபத்தை ஏற்படுத்துவோடு, அது அடுத்தடுத்து தொடர்ந்து கொண்டே இருப்பதில் சலிப்புத் தட்டுவதை இயக்குநரும் ஹீரோவும் கவனித்திருக்கலாம்.

அதேபோல அத்தனை கொடிய ரத்தக்களறியான காட்சிகளுக்குப் பிறகு, ஒரு சந்தோஷ முடிவை காட்ட முயல்வது இயல்பை மீறிய ஒரு திணிப்பாகவே தெரிகிறது.

வசனங்கள் செம ஷார்ப். வசனங்களுக்காகவே ஒரு படத்தை சிலாகிப்பது இன்றைக்கு ரொம்ப அரிது. அந்த அரிய லிஸ்டில் போராளியும் இடம்பெறுகிறது. குறிப்பாக அந்த சிலோன் பரோட்டா, வாடகைக்கு வீடு தர மறுக்கும் நகரவாசிகளைச் சாடும் வசனங்கள் ('தன் மனைவி, மகளை நம்பாதவன்தான் பேச்சுலருக்கு வீடு தரமாட்டான்') இடம்பெறும் காட்சிகள் கைத்தட்டல்களை அள்ளுகின்றன.

படத்தின் முக்கிய மைனஸ் இசை. பாடல்கள் மட்டுமல்ல, பின்னணி இசையிலும் கோட்டைவிட்டுவிட்டார் சுந்தர் சி பாபு. ஆனால் இந்தக் குறையை மறந்து காட்சிகளை ரசிக்க வைப்பவர் ஒளிப்பதிவாளர் கதிர். அந்த ஆட்டுக் கிடையும், அதில் நடக்கும் சண்டையையும் அப்படியே நேரில் பார்க்கிற ஒரு உணர்வு.

நல்ல கருத்துக்களைச் சொல்ல வேண்டும், சமூகத்துக்கு தங்கள் படைப்பால் ஒரு சின்ன விழிப்புணர்வாவது வரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கங்களுடன் போராடுபவர்கள் சினிமாவில் ரொம்ப ரொம்ப குறைவே.

அத்தகைய போராளிகளாக நம்முன் நிற்கும் சசிகுமார் மற்றும் இயக்குநர் சமுத்திரக்கனியின் இத்தகைய படைப்புகளுக்கு முழு ஆதரவு தர வேண்டியதே நல்ல ரசிகனுக்கு அழகு!

இந்தப் போராளிக்கு வெற்றி கிட்டட்டும்!
 

காட்டுக்குள் விபத்து... தப்பிய ப்ரியாமணி!


கன்னடப் படப்பிடிப்புக்காக சென்றபோது காட்டுக்குள் நடந்த விபத்தில் சிக்கினார் ப்ரியாமணி. ஆனால் அவர் காயமின்றி தப்பித்தார். படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.

பருத்திவீரன் புகழ் ப்ரியாமணிக்கு இப்போது கன்னடப் படவுலகம்தான் கைகொடுத்து வருகிறது.

அங்கு ஓரளவு வாய்ப்புகள் வருவதால் பெரும்பாலும பெங்களூரில்தான் வாசம் செய்கிறார். தமிழில் அவருக்கு எந்த வாய்ப்பும் இல்லை.

சமீபத்தில் கன்னடப் படம் ஒன்றின் படப்பிடிபு்புக்காக கர்நாடகத்தில் உள்ள முத்தாநதி காட்டுக்கு காரில் சென்றார். அவருடன் மேக்கப் கலைஞர்களும் இருந்தனர்.

படப்பிடிப்பு நடந்த இடத்தை நெருங்கிய போது கார் திடீரென நிலை தடுமாறி அருகில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி நொறுங்கியது.

அருகாமையிலிருந்து பொதுமக்கள் ஓடிச்சென்று காருக்குள் இருந்த பிரியாமணியையும் மற்றவர்களையும் மீட்டனர். இந்த விபத்தில் பிரியாமணி காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த விபத்தால் சில மணி நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் தாமதமாக வந்து சேர்ந்தார் ப்ரியாமணி. படப்பிடிப்பு பின்னர் தொடர்ந்தது.
 

வீணா மாலிக்கின் முழு நீள நிர்வாணப் படம் ஒரிஜினல்தான்-எப்எச்எம் விளக்கம்


பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்கின் நிர்வாணப் படம் மார்பிங் செய்யப்பட்டதல்ல, ஒரிஜினல் படம்தான் என்று எப்எச்எம் பத்திரிக்கை விளக்கம் அளித்துள்ளது.

எப்எச்எம் இந்தியா இதழின் அட்டைப் படத்தில் வீணா மாலிக் முழு நீள நிர்வாண கோலத்தில் இருப்பது போலவும், தனது முன்னழகை இரு கைககளாலும் மறைத்தபடியும், தோள்பட்டையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் பெயரைப் பொறித்தபடியும் அவர் காட்சி தருவதாக உள்ளது.

இந்த அட்டைப் படம் டிசம்பர் மாத பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளது. இது இன்னும் விற்பனைக்கு வரவில்லை.

இது பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வீணா மாலிக்குக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து விசாரிக்கப்படும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், இது மார்பிங்செய்யப்பட்ட படம், நான் இப்படி போஸ் தரவே இல்லை. இதற்காக எப்எச்எம் நிறுவனம் எனக்கு ரூ. 10 கோடி நஷ்டம் தர வேண்டும் என்று கூறி அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் வீணா மாலிக்.

ஆனால் இந்தப் படம் ஒரிஜினல்தான், மார்பிங் செய்யப்பட்டதல்ல என்று எப்எச்எம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பத்திரிக்கையின் எடிட்டர் கபீர் சர்மா கூறுகையில், வீணா மாலிக்கின் புகார்கள் அபத்தமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. அவருக்கு இதுதொடர்பாக எதிர்ப்புகள் கிளம்பியிருப்பதால் இப்படி மாற்றிப் பேசுகிறார் என்று கருதுகிறோம்.

அவரது புகைப்படம் அசல்தான். அதை நாங்கள் மார்பிங் செய்யவில்லை. அவர் எப்படி இருக்கிறாரோ அதேதான் இந்தப் புகைப்படத்திலும் உள்ளது. அவரது உடல் அழகு மிகவும் ஆச்சரியகரமானது, வியப்புக்குரியது. அவரது அழகு இயற்கையானது. இதனால்தான் அவரது நிர்வாணப் படத்துக்காக அவரை நாங்கள் அணுகினோம்.

இந்தப் புகைப்படம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்தப் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க மிகவும் தைரியம் வேண்டும். அது இருந்ததால்தான் வீணா மாலிக் போஸ் கொடுத்தார். ஆனால் தற்போது அவர் பயப்படுகிறார் என்றார் சர்மா.

வீணா மாலிக் தனது நிர்வாணப் போஸை மறுத்து பேட்டி அளித்ததுமே கபீர் சர்மா பேட்டி அளிக்கையில், வீணா நிர்வாண போஸ் கொடுத்தது உண்மைதான். இதை நிரூபிக்க அவர் நிர்வாணமாக போஸ் கொடுத்தபோது எடுத்த விதம் விதமான புகைப்படங்களை விரைவில் வெளியிடுவோம் என்று கூறியது நினைவிருக்கலாம். தற்போது அந்தப் படங்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 

முல்லைப் பெரியாறு... கேரள நடிகர்கள் போராட்டம்!


முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை தீர்க்கக் கோரி கேரள நடிகர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

முல்லைப் பெரியாறு அணையை உடைக்கவும், புதிய அணை கட்டவும், கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஆதரவை திரட்டி வருகிறது. போராட்டங்கள் நடத்தவும் தூண்டப்படுகிறது.

கேரளாவில் தமிழகத்தில் இருந்து சென்ற அய்யப்ப பக்தர்கள் தாக்கப்பட்டனர். இந்த நிலையில் மலையாள திரையுலகமும், போராட்டத்தில் குதித்துள்ளது. மலையாள நடிகர்- நடிகைகள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். கேரளா உயர் நீதிமன்றம் அருகில் நேற்று இரவு இப்போராட்டம் நடந்தது.

இதில் நடிகர்கள் சுரேஷ் கோபி, திலீப், முகேஷ், இன்நோசென்ட், இயக்குனர்கள் கமல், உன்னி கிருஷ்ணன் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டனர்.

மலையாள நடிகர் சங்கம், மலையாள திரைப்பட தொழிலாளர் சங்கம், மலையாள திரைப்பட விநியோகஸ்தர் சங்கம், போன்றவை இந்த போராட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தன.

இதில் கலந்து கொண்டவர்கள் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு அமைதியான முறையில் விரைவாக தீர்வு காண வேண்டும் என்று வற்புறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி கோஷமிட்டனர். கேரள மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் பிரச்சினை தீர வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

நடிகர்களில் சிலர் அணையை உடைத்துவிட்டு, புதிய அணை கட்டி அதன் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்றனர்.
 

திருமணம் லேட்டாகும்! - ஸ்னேகா


பிரசன்னாவுடன் காதல் இருப்பது உண்மைதான். ஆனால் கல்யாணம் இப்போதைக்கில்லை. லேட்டாகும், என்று கூறியுள்ளார் ஸ்னேகா.

நடிகை ஸ்னேகாவுக்கும் தனக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் பிரசன்னா சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

ஆனால் இந்தத் திருமணம் குறித்து ஸ்னேகா இதுவரை எதுவும் பேசாமல் இருந்தார்.

சமீபத்தில் அவரிடம் இருவருக்கும் திருமணம் எப்போது என்று கேட்டபோது "உடனடியாக திருமணம் செய்து கொள்ளமாட்டோம், கொஞ்சம் லேட்டாகும்," என்றார்.

ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடிக்க ஸ்னேகா ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தவிர வேறு சில பட வாய்ப்புகளும் அவருக்கு வந்துள்ளன. எனவே இப்போதைக்கு திருமணம் குறித்து யோசிக்கும் நிலையில் அவர் இல்லை என்று தெரிகிறது.
 

ரஹ்மான் இருக்காரா இல்லையா? - குழப்பும் கவுதம் மேனன்


நீதானே என் பொன்வசந்தம் என்றொரு படத்துக்கு அறிவிப்பு வந்தது நினைவிருக்கலாம்.

ஜீவா, சமந்தா, சந்தானம் நடிக்கும் இந்தப் படத்தை கவுதம் வாசுதேவ் மேன் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இப்படம் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படத்துக்கு இசை ஏ ஆர் ரஹ்மான் என்று முதலில் செய்திகள் வெளியாகின.

பின்னர் ரஹ்மான் மிகவும் பிஸியாக இருப்பதால் அவர் கௌதம் மேனன் படத்திலிருந்து விலகிவிட்டார் என்றும் கூறி வந்தனர்.

இந்த நிலையில் ரஹ்மான் இருக்கிறாரா இல்லையா என்றே நான் சொல்லவில்லையே என்று கூறியுள்ள கவுதம், "இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது சர்ப்ரைஸ்... அப்புறமா சொல்றேன்," என்று தனது குழப்பத்தையே விளம்பமாக்கியுள்ளார்.

சரி ஏ.ஆர்.ரஹ்மான் உங்கள் படங்களுக்கு இனி இசையமைக்க மாட்டார் என்பது உண்மைதானா? என்று கேட்டால், "இல்லை... அது உண்மையில்லை " என்கிறார்.

படத்துக்கு நீங்கதான் இயக்குநர் என்பதாவது உண்மையா!
 

படத்தலைப்புகளுக்கு என் பெயரைப் பயன்படுத்த வேண்டாம்! - ரஜினிகாந்த்


ரஜினியின் பெயர் மட்டுமே ஒரு படத்துக்கு எந்த அளவு விளம்பரத்தையும் ஆரம்ப வசூலையும் குவிக்கும் என்பதற்கு ரா ஒன் ஒரு நல்ல உதாரணம்.

இன்றைக்கு ரஜினியின் பெயரை எப்படியாவது தலைப்பில் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது நிறைய பேரின் விருப்பமாக உள்ளது.

விரைவில் வெளியாகவிருக்கும் ஒரு புதிய தமிழ்ப் படத்தின் பெயர், பெருமான் - தி ரஜினிகாந்த். ராஜேஷ் கன்னா என்பவர் இயக்கும் படம் இது. இந்தத் தலைப்புக்கு முதலில் ரஜினி தரப்பில் ஆட்சேபணை எதுவும் சொல்லவில்லை. ஆனால் பின்னர், இந்தத் தலைப்பில் உள்ள தனது பெயரை மட்டும் நீக்கிவிடுமாறு கேட்டுக் கொண்டாராம் ரஜினி, தனது செய்தித் தொடர்பாளர் சுதாகர் மூலம்.

இதுகுறித்து சுதாகர் கூறுகையில், "பெருமான் என்றால் அனைத்துக்கும் மேலான இறைவனைக் குறிக்கும். இறைவனை விட மேலானவர் ஒருவர் இல்லை என்பதை நம்புவர் ரஜினி சார். இந்தத் தலைப்பை அனுமதித்தால் அது தவறான புரிதலுக்கு வழி வகுக்கும் என்பதால், நீக்கும்படி கேட்டுக் கொண்டார் ரஜினி," என்றார்.

கன்னடத்தில் 'ரஜினிகாந்தா' என்ற தலைப்பில் மஜ்னு என்பவர் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். இரட்டையர் பற்றிய கதை இது.

இதுகுறித்து மஜ்னு கூறுகையில், "அனைவருக்குமே முன்மாதிரி ரஜினி சார்தான். எனது படம் குறித்து அவருக்கு விளக்கிச் சொல்லிவிட்டேன். தலைப்பு மட்டும்தான் சார் பெயரைக் குறிப்பது போலிருக்கும். மற்றபடி எந்த இடத்தில் அவரைத் தொடர்பு படுத்தவில்லை. இதைக் கேட்டபிறகு ரஜினி சார் ஒப்புதல் அளித்துவிட்டார்," என்றார்.

மராத்தியில் ஒருபடம் ரஜினிகாந்த் என்ற பெயரிலேயே தொடங்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டுள்ளது.

ரஜினி பெயருடன் கூடிய 10-க்கும் மேற்பட்ட தலைப்புகள் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இவர்கள் அனைவருக்குமே ரஜினி தரப்பிலிருந்து பொதுவான ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுதாகர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், "இனி யாரும் தயவு செய்து தன் பெயரைத் தொடர்புபடுத்தி தலைப்பு வைக்காதீர்கள் என்று ரஜினியே கூறிவிட்டார்," என்று தெரிவித்துள்ளார்.
 

பூர்விகா செல்போன் கடையிடம் ரூ.20 லட்சம் கேட்டு அஞ்சலி நீதிமன்றத்தில் புகார்


பூர்விகா செல்போன் கடை விளம்பரத்தில் நடித்ததற்காக தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை கொடுக்காமல் இழுத்தடிப்பதற்காக அந்த கடை உரிமையாளரிடம் இருந்து ரூ.20 லட்சத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்று நடிகை அஞ்சலி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

நடிகை அஞச்லி நடிக்க வந்த புதிதில் பூர்விகா செல்போன் கடை விளம்பரத்தில் நடித்தார். அதற்காக ரூ.5 லட்சம் சம்பளம் பேசிய கடைக்காரர்கள் வெறும் ரூ.46,000 மட்டும் தான் கொடுத்துள்ளனர். மீதிப் பணத்தைக் கேட்டதற்கு இந்தா, அந்தா என்று 5 ஆண்டுகளாக இழுத்தடிக்கின்றனர்.

சம்பள பாக்கியைக் கொடுக்காவிட்டாலும் கடந்த 5 ஆண்டுகளாக அஞ்சலி நடித்த அந்த விளம்பரத்தை பூர்விகா கடை பயன்படுத்தி வருகிறது. பொறுத்துப் பொறு்ததுப் பார்த்த அஞ்சலி இறுதியாக நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

தனக்கு சம்பள பாக்கியையும் கொடுக்காமல் கடந்த 5 ஆண்டுகளாக தான் நடித்த விளம்பரத்தைப் பயன்படுத்துவதற்காக அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் பெற்றுத் தருமாறு அஞ்சலி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

பூர்விகாவின் அனைத்துக் கிளைகளிலும் அஞ்சலியின் புன்னகை நிறைந்த படம் உள்ளது. ஆனால் அதற்கு சிரித்தவாறு போஸ் கொடுத்தவருக்கு சம்பளத்தை கொடுக்காமல் அவரை கடுப்பேற்றியுள்ளனர்.
 

சென்னை சர்வதேச படவிழாவில் அழகர்சாமியின் குதிரை உள்பட 12 தமிழ்ப் படங்கள்!


சென்னையில் நடக்கும் 9வது சர்வதேச திரைப்பட விழாவில் அழகர்சாமியின் குதிரை, வாகை சூடவா உள்பட 12 தமிழ்ப் படங்கள் பங்கேற்கின்றன.

9-வது சர்வதேச படவிழா, சென்னையில் வருகிற 14-ந் தேதி தொடங்கி, 22-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெற இருக்கிறது. சென்னை உட்லண்ட்ஸ், ஐநாக்ஸ், சத்யம், பிலிம்சேம்பர் ஆகிய தியேட்டர்களில் சர்வதேச படங்கள் திரையிடப்பட உள்ளன.

பிரான்சு, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பின்லாந்து, எகிப்து, ஈரான், இத்தாலி உள்பட 44 நாடுகளில் தயாரான மொத்தம் 154 படங்கள், இந்த படவிழாவில் திரையிடப்படுகின்றன. அதில், 9 படங்கள் இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டவை. 'கான்' படவிழாவில் திரையிடப்பட்ட 8 படங்களும் பங்கேற்கின்றன.

சர்வதேச படவிழாவையொட்டி நடைபெறும் தமிழ் படங்களுக்கான போட்டியில், 12 படங்கள் கலந்துகொள்கின்றன.

அந்த படங்கள் வருமாறு:

அவன் இவன், அழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும், ஆடுகளம், வெங்காயம், மைதானம், வாகை சூடவா, முரண், கோ, தெய்வத்திருமகள், வர்ணம், தூங்கா நகரம்.

போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த படத்துக்கு, முதல் பரிசாக ரூ.2 லட்சம் வழங்கப்படும். இந்த தகவல்களை, சர்வதேச படவிழா இயக்குனர் ஈ.தங்கராஜ் தெரிவித்தார்.
 

ஒஸ்தி படத்தை நாங்கள் திரையிட மாட்டோம்! - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு


ஒஸ்தி படம் வருமா வராதா... இந்தக் கேள்வி ரசிகர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ, அந்தப் பட யூனிட்டைச் சேர்ந்தவர்களுக்கு நிச்சயம் இருக்கிறது.

காரணம், கடந்த ஒரு வாரமாக இந்தப் படம் டிசம்பர் 8-ம் தேதி ரீலீஸ் என்று ஒரு தரப்பும், இல்லையில்லை ரிலீஸாக விடமாட்டோம் என்று இன்னொரு தரப்பும் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கிறது.

வரவிடமாட்டோம் என்பதற்கு முக்கிய காரண், இந்தப் படத்தை சன் டிவி வாங்கியிருப்பதுதான். சன் பிக்சர்ஸ் தரவேண்டிய ரூ 4 கோடியை தியேட்டர் உரிமையாளர்களுக்கு தந்தால்தான் படத்தை ரிலீசாக விடுவோம் என்கிறது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம். பிரசாந்த் நடித்த மம்பட்டியான் படத்துக்கும் இதே சிக்கல்தான்.

ஆனால் இரு தினங்களுக்கு முன் தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பும் கலந்துபேசி, இந்தப் படத்தை வெளியிடத் தடையில்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன், சென்னை திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் என பலரும் கையெழுத்திட்டிருந்தனர்.

அறிக்கை வெளியான அன்று மாலையே மீண்டும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம், "அந்த அறிக்கையே செல்லாது. அதில் நாங்கள் கையெழுத்துப் போடவுமில்லை," என்றார்.

மேலும் கூறுகையில், "ஒஸ்தி, மம்பட்டியான் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என்று எடுத்த முடிவில் மாற்றம் இல்லை. எங்களுக்குள் சமரசம் ஏற்பட்டதாக வெளியான செய்தி உண்மை இல்லை. இருபடங்களையும் திரையிட மாட்டோம். எங்கள் டெபாசிட்டை தருவதாக முதலில் ஒப்புக் கொண்டு இப்போது மீண்டும் முரண்டு பிடிக்கிறது சன் பிக்சர்ஸ். ஆனால் அபிராமி ராமநாதனுக்கு மட்டும் அவரது பங்கான ரூ 80 லட்சத்தைக் கொடுத்துவிட்டது. இதனால் அவர் கையெழுத்துப் போடுகிறார்.

எங்கள் நலனுக்கு எதிராக செயல்படும் அபிராமி ராமநாதனுக்கு இனி எந்த வகையிலும் ஒத்துழைப்பு தருவதாக இல்லை. அவர் திரையரங்கில் வெளியாகும் படங்களை இனி நாங்கள் திரையிட மாட்டோம்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகர் இப்படி செய்திருக்கக் கூடாது. நாங்கள் வராமலேயே எங்கள் சங்கத்தின் பெயரைப் பயன்படுத்தி அறிக்கையில் யாரையோ விட்டு கையொப்பமிடச் சொல்வது நல்ல செயல் அல்ல.

ஒஸ்தியை நாங்கள் யாரும் திரையிட மாட்டோம். இது நிச்சயம்," என்றார்.

ஆனால், ஒஸ்தி படம் திட்டமிட்டபடி வரும் என்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர்.

என்னதான் நடக்குது... அறிக்கை சண்டையை நிறுத்திவிட்டு ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்க!
 

படத்தலைப்புகளுக்கு என் பெயரைப் பயன்படுத்த வேண்டாம்! - ரஜினிகாந்த்


ரஜினியின் பெயர் மட்டுமே ஒரு படத்துக்கு எந்த அளவு விளம்பரத்தையும் ஆரம்ப வசூலையும் குவிக்கும் என்பதற்கு ரா ஒன் ஒரு நல்ல உதாரணம்.

இன்றைக்கு ரஜினியின் பெயரை எப்படியாவது தலைப்பில் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது நிறைய பேரின் விருப்பமாக உள்ளது.

விரைவில் வெளியாகவிருக்கும் ஒரு புதிய தமிழ்ப் படத்தின் பெயர், பெருமான் - தி ரஜினிகாந்த். ராஜேஷ் கன்னா என்பவர் இயக்கும் படம் இது. இந்தத் தலைப்புக்கு முதலில் ரஜினி தரப்பில் ஆட்சேபணை எதுவும் சொல்லவில்லை. ஆனால் பின்னர், இந்தத் தலைப்பில் உள்ள தனது பெயரை மட்டும் நீக்கிவிடுமாறு கேட்டுக் கொண்டாராம் ரஜினி, தனது செய்தித் தொடர்பாளர் சுதாகர் மூலம்.

இதுகுறித்து சுதாகர் கூறுகையில், "பெருமான் என்றால் அனைத்துக்கும் மேலான இறைவனைக் குறிக்கும். இறைவனை விட மேலானவர் ஒருவர் இல்லை என்பதை நம்புவர் ரஜினி சார். இந்தத் தலைப்பை அனுமதித்தால் அது தவறான புரிதலுக்கு வழி வகுக்கும் என்பதால், நீக்கும்படி கேட்டுக் கொண்டார் ரஜினி," என்றார்.

கன்னடத்தில் 'ரஜினிகாந்தா' என்ற தலைப்பில் மஜ்னு என்பவர் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். இரட்டையர் பற்றிய கதை இது.

இதுகுறித்து மஜ்னு கூறுகையில், "அனைவருக்குமே முன்மாதிரி ரஜினி சார்தான். எனது படம் குறித்து அவருக்கு விளக்கிச் சொல்லிவிட்டேன். தலைப்பு மட்டும்தான் சார் பெயரைக் குறிப்பது போலிருக்கும். மற்றபடி எந்த இடத்தில் அவரைத் தொடர்பு படுத்தவில்லை. இதைக் கேட்டபிறகு ரஜினி சார் ஒப்புதல் அளித்துவிட்டார்," என்றார்.

மராத்தியில் ஒருபடம் ரஜினிகாந்த் என்ற பெயரிலேயே தொடங்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டுள்ளது.

ரஜினி பெயருடன் கூடிய 10-க்கும் மேற்பட்ட தலைப்புகள் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இவர்கள் அனைவருக்குமே ரஜினி தரப்பிலிருந்து பொதுவான ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுதாகர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், "இனி யாரும் தயவு செய்து தன் பெயரைத் தொடர்புபடுத்தி தலைப்பு வைக்காதீர்கள் என்று ரஜினியே கூறிவிட்டார்," என்று தெரிவித்துள்ளார்.
 

சென்னை சர்வதேச படவிழாவில் அழகர்சாமியின் குதிரை உள்பட 12 தமிழ்ப் படங்கள்!


சென்னையில் நடக்கும் 9வது சர்வதேச திரைப்பட விழாவில் அழகர்சாமியின் குதிரை, வாகை சூடவா உள்பட 12 தமிழ்ப் படங்கள் பங்கேற்கின்றன.

9-வது சர்வதேச படவிழா, சென்னையில் வருகிற 14-ந் தேதி தொடங்கி, 22-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெற இருக்கிறது. சென்னை உட்லண்ட்ஸ், ஐநாக்ஸ், சத்யம், பிலிம்சேம்பர் ஆகிய தியேட்டர்களில் சர்வதேச படங்கள் திரையிடப்பட உள்ளன.

பிரான்சு, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பின்லாந்து, எகிப்து, ஈரான், இத்தாலி உள்பட 44 நாடுகளில் தயாரான மொத்தம் 154 படங்கள், இந்த படவிழாவில் திரையிடப்படுகின்றன. அதில், 9 படங்கள் இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டவை. 'கான்' படவிழாவில் திரையிடப்பட்ட 8 படங்களும் பங்கேற்கின்றன.

சர்வதேச படவிழாவையொட்டி நடைபெறும் தமிழ் படங்களுக்கான போட்டியில், 12 படங்கள் கலந்துகொள்கின்றன.

அந்த படங்கள் வருமாறு:

அவன் இவன், அழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும், ஆடுகளம், வெங்காயம், மைதானம், வாகை சூடவா, முரண், கோ, தெய்வத்திருமகள், வர்ணம், தூங்கா நகரம்.

போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த படத்துக்கு, முதல் பரிசாக ரூ.2 லட்சம் வழங்கப்படும். இந்த தகவல்களை, சர்வதேச படவிழா இயக்குனர் ஈ.தங்கராஜ் தெரிவித்தார்.
 

முல்லைப் பெரியாறு- கேரளாவைக் கண்டித்து தமிழகத்தில் தியேட்டர்கள் மூடப்படுகின்றன


முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளம் நடந்து கொள்ளும் போக்கைக் கண்டித்து ஒரு நாள் தியேட்டர்களை மூடி போராட்டம் நடத்த தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் கூறுகையில்,

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரள அரசின் அராஜக போக்கை திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கண்டிக்கிறது. இந்த பிரச்சினையில் எங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில், அவர் கரத்தை வலுப்படுத்தும் வகையில், திரையரங்குகளை மூட முடிவு செய்து இருக்கிறோம்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள 1450 திரையரங்குகளும் அன்று மூடப்படும். அந்த தியேட்டர்களில் அன்று ஒருநாள் மட்டும் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படும் என்றார் அவர்.

தியேட்டர்கள் எப்போது மூடப்படும் என்பதை இன்று சங்கம் அறிவிக்கவுள்ளது.