கௌதம் கார்த்திக்கை பிரச்சினையில் சிக்க வைத்த ‘ஹேர்ஸ்டைல்’....

சென்னை: ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வரும் கௌதம் கார்த்திக் ஹேர்ஸ்டைல் விஷயத்தில் புதிய சிக்கலில் மாட்டியுள்ளாராம்.

சரவணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் சிப்பாய் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் இவரது ஜோடி லட்சுமி மேனன். படத்தின் கதைப்படி நீளமான முடி, முகத்தில் சிறிது முடி வளர்ந்தது போன்ற தோற்றமாம் கௌதமிற்கு.

ஆனால், அதே நேரத்தில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் வை ராஜா வை படத்தில் சீராக வெட்டிய தலைமுடி, முழுவதும் ஷேவிங் செய்யப்பட்ட கதாபாத்திரத்தில் கௌதம் நடித்து வருகிறார். இப்படத்தில் இவரது ஜோடி ப்ரியா ஆனந்த். இந்நிலையில், சிப்பாய் படத்திற்காக நீளமான முடி வளர்த்திருந்தார் கௌதம்.

கௌதம் கார்த்திக்கை பிரச்சினையில் சிக்க வைத்த ‘ஹேர்ஸ்டைல்’....

தற்போது முடிப்பிரச்சினையால் சிப்பாய் பட இயக்குநர் சரவணனிற்கும், கௌதமிற்கும் புகைய ஆரம்பித்துள்ளதாம். சிப்பாய்ப் பட ஷூட்டிங் இடைவெளியில் வை ராஜா வை படத்திற்கும் கால்ஷீட் அளித்திருந்தார் கௌதம்.

அதன்படி வை ராஜா வை படப்பிடிப்புக்குச் சென்ற கௌதம் கதைக்காக தனது நீளமான முடியை வெட்டி, முகத்தையும் ஷேவிங் செய்து விட்டாராம். மீண்டும் சிப்பாய் படப்பிடிப்புக்குத் திரும்பிய கௌதமைப் பார்த்து டென்சனாகி விட்டாராம் சரவணன்.

இதனால் படப்பிடிப்பு தளங்களில் இருவரும் நேருக்கு நேர் பார்த்து பேசிக் கொள்வது கூட இல்லையாம். கௌதமின் ஹேர் ஸ்டைலை மறைப்பதற்காக லாங் ஷாட் காட்சிகளாக வைத்து சமாளித்து வருகிறாராம் சரவணன்.