கண்டதும் காணாததும்! - சினிமா விமர்சனம்

Kandathum Kanaathathum Review
நடிப்பு: விகாஷ், சுவாஷிகா, பரோட்டா சூரி, ஆர் சுந்தரராஜன், சூப்பர் குட் லட்சுமணன், ரிஷா

ஒளிப்பதிவு: வின்ஷி பாஸ்கி

பிஆர்ஓ: சக்திவேல்

இசை: விஏ சார்லி

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: சீலன்

தயாரிப்பு: எஸ்பி பிலிம்ஸ்

காமம் களவு

காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்

-இந்தக் குறளைச் சொல்லித்தான் படத்தையே ஆரம்பிக்கிறார் புதிய இயக்குநர் சீலன். நோக்கம், சொல்ல நினைத்த கருத்து நல்ல விஷயம்தான் என்றாலும், அதை அழுத்தமாகச் சொல்லாமல் போனதால், பார்வையாளர்களுக்கு படத்தின் மீது ஈர்ப்பில்லாமல் போகிறது.

கல்லூரியில் படிக்கும் முகிலுக்கும் (விகாஷ்) உடன் படிக்கும் கவிதா (சுவாஷிகா) வுக்கும் நெருக்கமான நட்பு. அந்த நட்பை காதலாகும் தருணத்தில், விகாஷின் காமம் அந்தக் காதலை கெடுக்கிறது. தவறை உணர்ந்து மீண்டும் அவளுடன் நட்பு பாராட்ட முனைகிறான். ஆனால் அவனை கடைசி வரை மன்னிக்கவே மறுக்கிறாள் கவிதா. விளைவு தாடி வளர்த்து, குடித்து, தெருவில் விழுந்து கதறுகிறான் முகில்.

இருவருக்கும் மீண்டும் காதல் வந்ததா.. என்பதுதான் கிட்டத்தட்ட கதை!

விகாஷ் கல்லூரி மாணவராக இயல்பாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக வரும் சுவாஷிகாவும் பரவாயில்லை.

பரோட்டா சூரிக்கு சோலோ காமெடி. அவரை இன்னும் கூட நன்றாகப் பயன்படுத்தியிருந்தால், காட்சிகளை எளிதில் கடந்திருக்க முடியும்!

ஒளிப்பதிவாளர் தீவிர மணிரத்னம் பட ரசிகர் போலிருக்கிறது. பல காட்சிகள் அரை இருட்டில் அல்லது முக்காலிருட்டில்!

ஆனால் பாடல்கள் பரவாயில்லை.

பெரும் பணத்தை செலவழித்து படம் எடுக்கிறார்கள். கைவசம் ஸ்கிரிப்ட் இருந்தாலும், அதை சரியாக காட்சிப்படுத்தும் முறையில் கோட்டைவிடுவதால், கண்டதும், மறந்துவிடும் ரகத்தில் சேர்ந்துவிடுகின்றன இந்த மாதிரிப் படங்கள்!

-எஸ் எஸ்
Close
 
 

எதுக்கு இந்தப் பொழப்பு? - டாப்ஸி மீது பாயும் ரிச்சா

Richa Scolds Tapsi    | டாப்ஸி    | ஒஸ்தி    | மயக்கம் என்ன  
சினிமாவுக்கு வெளியே நடிகைகள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வது நாம் அடிக்கடி பார்க்கும் 'சீன்'தான்... அந்த வகையில் இந்த சம்மர் சீஸன் சீன்... டாப்ஸி - ரிச்சா மோதல்!

ஆடுகளம், வந்தான் வென்றான் என இரு படங்களில் டாப்ஸி நடித்துள்ளார். ரிச்சாவும் மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் ரசிகர்களைப் பொறுத்தவரை, டாப்ஸியை விட, ரிச்சாவுக்குதான் அதிக ஓட்டு. அவர் கவர்ச்சியில் 'ரிச்' எக்கச்சக்கம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ரசிகர்கள் மட்டுமல்ல, இயக்குநர்கள் - தயாரிப்பாளர்களுக்கும் கூட ரிச்சாதான் முதல் சாய்ஸ்.

தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது நாயகியாக ரிச்சாவைத்தான் முடிவு செய்து வைத்திருந்தனர். அஜீத் படத்தில் நடிப்பதன் மூலம், தன் ரேஞ்ச் கொஞ்சம் உயரப் போகும் சந்தோஷத்தில் இருந்தார் ரிச்சா.

அதில் மண்ணள்ளிப் போட்டார் டாப்ஸி. எப்படியோ விஷ்ணுவர்தனை சரிகட்டி, படத்தில் இரண்டாவது நாயகி வாய்ப்பைப் பெற்றுவிட்டார்.

ரிச்சா இதில் கடும் கோபமடைந்துள்ளாராம். அடுத்தவர் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் இது ஒரு பிழைப்பா? என டாப்ஸியைப் போட்டுத் தாக்க ஆரம்பித்துள்ளாராம்!

பிழை செய்தால்தான் பிழைக்க முடியும் என்பது சினிமா நீதி!!
Close
 
 

கலகலப்பு இரண்டாம் பாகத்துக்கு தயாராகும் சுந்தர் சி & கோ!

Sundar C Is Gearing Up The Sequel Kalakalappu   
கரண்ட் இல்லாத கொடுமை, பாக்கெட்டைக் கிழிக்கும் விலைவாசி, எப்போதுமில்லாத உக்கிர வெயில், ஒன்றுமே செய்யாவிட்டாலும் கோடிக்கணக்கில் விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அரசியல்வாதிகள்... இந்த இம்சைகளையெல்லாம் மறந்துவிட்டு, மூன்று மணி நேரத்தைச் செலவிட வேண்டும் என்றால்... அது சினிமாதான்.

அந்த சினிமாவும் அழுது வடியாமல்... கலகலவென கடைசி வரை சிரிப்பும் கும்மாளுமாக இருந்தால் எவ்வளவு நல்லாருக்கும் என மக்கள் விரும்புவதை அப்படியே பிரதிபலிப்பது போல படங்களும் அமைந்துவிட்டால்...

அப்படி அமைந்ததால்தான் ஒரு கல் ஒரு கண்ணாடியும், கலகலப்பும் மெகா வெற்றியைப் பெற்றுள்ளன.

இப்போது கோடம்பாக்கம் எங்கும் காமெடி படங்களுக்கான டிஸ்கஷன்தான் சீரியஸாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

புதிதாக ஒரு கான்செப்டை உருவாக்கி திரைக்கதை அமைப்பதைவிட, ஏற்கெனவே வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது தமிழிலும் வெற்றியைக் கொடுக்க ஆரம்பித்துள்ளதால், கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர் யுடிவி நிறுவனத்தினர்.

விமல், அஞ்சலி, ஓவியா, சிவா, சந்தானம், இளவரசு என அதே கூட்டணியுடன் கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குகிறார்கள். சுந்தர் சி இயக்குகிறார். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவதில் உறுதியாக உள்ளது யுடிவி நிறுவனம்.
Close
 
 

முதல் முறையாக டபுள் ரோல்..கமல் ஆலோசனைக்குக் காத்திருக்கும் ஜெயம் ரவி!

Jayam Ravi Seek Kamal S Tips On Make Up    | ஜெயம் ரவி  
பூலோகம் படத்தில் முதல் முறையாக டபுள் ரோலில் நடிக்கவிருக்கும் ஜெயம் ரவி, அதில் வரும் ஒரு கேரக்டருக்கு மெருகேற்ற கமல்ஹாசனிடம் ஆலோசனை பெறப் போகிறாராம்.

நடிப்பு, மேக்கப்... இந்த இரண்டுக்கும் புது இலக்கணம் வகுத்தவர் கமல்ஹாசன். கமல்ஹாசனின் நடிப்பைப் போலவே, தனது கேரக்டருக்காக அவர் மாறும் விதமும், அதற்காக அவர் மெனக்கெடுவதும், மேக்கப்புக்காக சிரமப்படுவதும் இன்று வரை பேசப்படும் விஷயமாகவே உள்ளது.

மேக்கப் என்றால் பவுடர் பூசி, தலையில் விக் வைக்கும் விஷயமல்ல, அதையும் தாண்டிய சீரியஸ் விஷயம் என்பதைப் புரிய வைத்தவர் கமல். அவரது கேரக்டர்களைப் போலவே அவரது மேக்கப் ஜாலங்களும் வெகுவாக ரசிக்கப்படும்.

தசாவதாரம் படத்தில் அவர் போட்ட பத்து விதமான மேக்கப்களும் கமல்ஹாசனின் லேட்டஸ்ட் ரகளையாகும்.

இந்த நிலையில் இதே மேக்கப் சமாச்சாரத்துக்காக கமல்ஹாசனிடம் ஐடியா கேட்கப் போகிறார் தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி.

அமீர் இயக்கத்தில் ஆதி பகவந் படத்தில் நடித்துக் கொண்டுள்ளார் ஜெயம் ரவி. ஷூட்டிங்கை சற்று லேட்டாக நடத்தினாலும் தற்போது முடிக்கும் தருவாயை நெருங்கி விட்டாராம் அமீர். இதையடுத்து அடுத்த படத்துக்குத் தயாராகிறார் ஜெயம் ரவி.

சமுத்திரக்கனியின் இயக்கத்தில் பூலோகம் படத்தில் நடிக்கவுள்ளார் ஜெயம் ரவி. இதில் அவர் முதல் முறையாக டபுள் ரோலில் நடிக்கப் போகிறார். அதாவது அப்பா, மகன் கேரக்டர். இதில் அப்பா கேரக்டரில் நடிக்கத்தான் கமல்ஹாசனின் யோசனைகளை எதிர்பார்த்துள்ளாராம் ஜெயம் ரவி.

இந்த கேரக்டருக்காக நடுத்தர வயது கொண்டவராக தோன்றவுள்ளார் ஜெயம் ரவி. இந்த தோற்றத்தை எப்படி தத்ரூபமாக பெறுவது என்பதற்காக கமல்ஹாசனை நாடி அவரிடம் மேக்கப் குறித்து சில டிப்ஸ்களைப் பெறுவதே அவரது திட்டமாம்.

தற்போது தனது விஸ்வரூபம் பட வேலைகளில் பிசியாக இருக்கிறார் கமல். அமெரிக்காவில் முகாமிட்டுள்ள அவர் சென்னை திரும்பியதும் ஜெயம் ரவி சந்திக்கப் போகிறாராம்.
Close
 
 

ஜூன் மாத இறுதியில் கோச்சடையான் இசை!

Kochadaiyaan Music June End   
இந்த ஆண்டில் மிக ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படும் இசை ஆல்பங்களுள் ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள கோச்சடையான்தான்.

இந்தப் படத்துக்காக ஏ ஆர் ரஹ்மான் 5 பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக் தந்துள்ளார்.

படத்தின் இசை வெளியீடு குறித்து தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன. வரும் ஜூன் மாதம் கோச்சடையான் இசையை வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.

படமே செப்டம்பரில் வெளியாகிவிடும் என தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் கூறியுள்ள நிலையில், ஜூன் இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் கோச்சடையான் இசை வெளியாகவிருக்கிறது.

சோனி நிறுவனம் கோச்சடையான் இசையை வெளியிடுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழில் 3 டி தொழில் நுட்பத்தில் வெளியாகும் கோச்சடையான் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டுள்ளது.
Close
 
 

இந்தியிலும் 'சொதப்புவாரா' அமலா பால்?

Will Amala Paul Enter Into Bollywood   
தமிழில் எப்படியோ ஹிட்டாகி விட்ட காதலில் சொதப்புவது எப்படி படம் இப்போது இந்திக்கும் போகிறதாம். இதிலும் தானே நாயகியாகி விட அமலா பால், இயக்குநரிடம் துண்டைப் போட்டு வைத்துள்ளாராம்.

அமலா பால், சித்தார்த் ஜோடியாக நடிக்க பாலாஜி இயக்கத்தில் உருவான படம் காதலில் சொதப்புவது எப்படி. இப்படம் எப்படியோ தமிழில் ஹிட்டாகி விட்டது. சத்தம் போடாமல் ஓடினாலும் கூட சத்தான முறையில் ஓடியதால் இப்போது இப்படத்தை இந்திக்கும் கொண்டு போகிறார்களாம்.

இதே பாலாஜிதான் இந்தியிலும் இயக்கப் போகிறார். படத்தின் நாயகன், நாயகியாக யாரைப் போடலாம் என்ற பரிசீலனை நடந்து வருவதாக தெரிகிறது. இதைக் கேள்விப்பட்ட அமலா பால், உடனே இயக்குநரைத் தொடர்பு கொண்டு, இந்தியிலும் நானே நடிக்க விரும்புகிறேன், வேறு யாரையும் முடிவு செய்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. இருப்பினும் பாலாஜி சரி என்று சத்தியம் செய்து கொடுத்துள்ளாரா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை.

சமீப காலமாக தெற்கத்தி நடிகைகள் பாலிவுட்டை நோக்கி பாய்ந்து வருகின்றனர். இருந்தாலும் யாரும் செமத்தியான ஹிட்டடிக்கவில்லை. இதனால் அடுத்த ஸ்ரீதேவி என்ற பெயரையும் யாராலும் எடுக்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் அமலா பாலும், இந்திக்குச் சென்று சொதப்புவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Close
 
 

'தனுஷ் - ஸ்ருதி நெருக்கத்தைப் பார்த்து ஐஸ்வர்யா டென்ஷனானது உண்மைதான்!'

Kasturiraja Speaks On Dhanush Shruthi Relationship
தனுஷ் - ஸ்ருதி விவகாரம் இன்னும் ஓய்ந்த மாதிரி தெரியவில்லை. இருவருக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகள், தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியிருப்பதாகவும், இதனால் தனுஷ் தனியாக ஒரு வீட்டில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் மனைவி ஐஸ்வர்யா மற்றும் குழந்தைகளுடன் தனுஷ் தென் ஆப்ரிக்காவுக்குப் போயிருப்பதாக அவர் தரப்பிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது.

தனுஷ் - ஐஸ்வர்யா - ஸ்ருதி விவகாரம் குறித்து, தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா கூறுகையில், " தனுஷ் - ஐஸ்வர்யா இடையே சண்டை இருப்பது உண்மைதான். ஆனால் அது சாதாரணமாக கணவன் - மனைவி போட்டுக் கொள்ளும் சண்டையே. எந்த வீட்டுலதான் சண்டை இல்லாம இருக்கு.

தனுஷ் - ஐஸ்வர்யா சண்டைக்கு ஸ்ருதியைக் காரணம் காட்டுவது சரியல்ல. ஸ்ருதியுடன் தனுஷ் ரொம்ப நெருக்கமாக நடிப்பதைப் பார்த்து மருமகள் கடும் கோபமடைந்தது உண்மைதான். எந்தப் பெண்தான் இது சரி என்று சொல்வார்? ஒரு டைரக்டரா அந்த சீன் சரியா வந்தாலும், மனைவியா அவங்க நெருக்கத்தைப் பார்த்து ஐஸ்வர்யா ரொம்ப கோபமானது உண்மைதான். காரணம், ஐஸ்வர்யாவோட அன்பு அப்படி. மருமகளுக்கும் மகனுக்கும் அப்பப்போ இப்படி சின்னச்சின்ன சண்டை வரும். ஆனா அவங்க பிரிஞ்சு வாழறாங்கன்னு சொல்றது தப்பு.

தனுஷ் இருக்கும் வீட்டில் அவரோடு ஐஸ் வர்யாவும் அவர்களது குழந்தைகள் யாத்ரா, லிங்கா... எல்லோரும் இருக்கிறார்கள். நாங்கள் எல்லோரும் அன்பான குடும்பமா இருக்கோம். இதை எவனாலும் உடைக்க முடியாது!", என்றார்.
Close
 
 

இளையராஜாவின் புத்தகங்கள் வெளியீடு!

Ilayaraaja S Book Release June
இசை என்றல்ல... கவிதை, பாடல்கள், எழுத்து, புகைப்படம் என பல கலைகளில் ஜீனியஸ் நம்ம இசைஞானி!

இவர் எடுத்துள்ள ஓவியங்களை வைத்து இன்னும் கூட சில கண்காட்சிகள் நடத்தலாம்.

ராஜா எழுதிய கட்டுரைகளின் தொகுப்புகள் பல புத்தகங்களாக வந்துள்ளன. ஒவ்வொரு புத்தகமுமே ரசிகர்கள் பொக்கிஷமாய் மதிக்கிறார்கள். கவிஞர் வாலி உள்ளிட்ட ஜாம்பவான்களின் பாராட்டுகளைப் பெற்றவை இந்தப் பத்தகங்கள் என்பது ராஜாவின் எழுத்தாளுமைக்குச் சான்று.

வெட்ட வெளியில் கொட்டிக் கிடக்குது, பால் நிலாப் பாதை, ஞான கங்கா...போன்றவை வாசிப்பு சுவாரஸ்யம் மிக்கவை!

இப்போது இசைஞானி மீண்டும் மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார். இவை மூன்றும் வரும் ஜூன் முதல் வாரத்தில் வெளியாகின்றன.

ராஜாவின் ஹிட் பாடல்களை லட்சுமண் ஸ்ருதி இசைக் குழுவினர் வாசிக்க, தமிழ் சினிமா உலகமே திரண்டு வந்து அந்த இசைமழையில் நனையவிருக்கிறார்கள்.
Close
 
 

தனுஷுடன் தொழில்ரீதியான தொடர்பு மட்டுமே! - ஸ்ருதிஹாஸன்

I Maintains Professional Relationship With Dhanush
தனுஷ் போன்ற நடிகர்களுடன் என்னை இணைத்து வரும் கிசுகிசுக்களைப் படித்தால் கடுப்பாக உள்ளது. தனுஷ், சித்தார்த் போன்றவர்களுடன் எனக்கு தொழில்ரீதியிலான உறவு மட்டுமே உள்ளது, என்கிறார் ஸ்ருதி.

முதலில் சித்தார்த்துடன் சில மாதங்கள் ஒன்றாக வாழ்ந்தார் என்றும், அடுத்து 3 படத்தில் நடித்த போது தனுஷுடன் காதலாகி, அவர்கள் குடும்பத்தில் குழப்பம் உண்டுபண்ணார் என்றும் ஸ்ருதி ஹாசன் குறித்து கிசுகிசுக்கள் பரவின.

இதுகுறித்து ஸ்ருதி கூறுகையில், "சித்தார்த், தனுஷ் போன்ற நடிகர்களுடன் என்னை இணைத்து வரும் கிசுகிசுக்களைப் படிக்கவே கடுப்பாக உள்ளது.

இருவருடனும் நான் இணைந்து நடித்துள்ளேன். தொழில்ரீதியான தொடர்பு மட்டுமே எனக்கும் தனுஷுக்கும் உள்ளது. என்னால் அவர் குடும்பத்தில் பிரச்சினை என்பதில் உண்மையில்லை.

தனுஷ் திறமையான நடிகர். அவர் மனைவி இயக்கிய படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்," என்றார்.
Close
 
 

நியூயார்க் விழாவில் 3 - நேரில் பங்கேற்கும் ஐஸ்வர்யா!

3 Azhagarsamiyin Kudhirai Varnam
நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்க ஐஸ்வர்யா இயக்கிய 3, சுசீந்திரனின் அழகர்சாமியின் குதிரை, எஸ்எம் ராஜு இயக்கிய வர்ணம் உள்ளிட்ட 4 படங்கள் திரையிடப்படுகின்றன.

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளமும் இந்த விழாவுக்கு தேர்வாகியுள்ளது.

மற்ற இயக்குநர்களைவிட இதில் அதிகம் சந்தோஷப்படுபவர் ஐஸ்வர்யாதான். அவர் இயக்கிய 3 படம் இங்கே கடும் விமர்சனத்துக்குள்ளானது. போதாக்குறைக்கு நஷ்டக் குரல்கள் வேறு.

ஆனால் ஒரு இயக்குநராக ஐஸ்வர்யாவின் பெயர் சொல்லுமளவுக்கு இந்தப் படம் அமைந்தது.

இந்த நிலையில், சர்வதேச பட விழாக்களில் இந்தப் படத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பது, புதிய இயக்குநராக ஐஸ்வர்யாவுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

இதுகுறித்து ஐஸ்வர்யா கூறுகையில், "ஒரு இயக்குநராக இந்த செய்தி என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புதிய இயக்குநர் என்ற முறையில் என்னை கவுரவிக்கவிருக்கிறார்கள். வரும் மே 23 முதல் 27 வரை நடக்கும் இந்த விழாவில் நான் கலந்து கொள்ளப் போகிறேன். அங்குள்ள எங்கள் குடும்ப நண்பர்களையும் பார்க்கவிருக்கிறேன்," என்றார்.

ஷூட்டிங்கில் இருப்பதால், தனுஷ் இதில் கலந்து கொள்ளவில்லையாம். இத்தனைக்கும் அவர் நடித்த இரு படங்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றன!
Close
 
 

ஜிஸ்ம் 2ல் நெருக்கமான காட்சிகளில் நடிக்க சன்னி லியோன் கூச்சம்-இயக்குநர் மகேஷ் பட்

Sunny Leone Shy Do Intimate Scenes   
ஜிஸ்ம் 2 படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஆபாச பட நடிகை சன்னி லியோனுக்கு கூச்சமாக இருந்ததாம். இதை அந்தப் படத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.

கனடாவில், ஆபாச படங்களில் நடித்துப் பிரபலமானவர் சன்னி லியோன். பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் இந்தியாவில் பிரபலமானார். இதையடுத்து அவர் பிரபல பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் ஜிஸ்ம் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நெருக்கமான காட்சிகள், படுக்கையறை காட்சிகள் நிறைய உள்ளனவாம்.

படுக்கையறை காட்சிகளில் நடிப்பது சன்னிக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி என்று அனைவரும் நினைக்கலாம். ஆனால் படுக்கையறை மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க அவருக்கு கூச்சமாக உள்ளதாம். அதிலும், ரந்தீப் ஹூடாவுடனான படுக்கையறைக் காட்சிகளில் நடிக்கும்போது சன்னி மிகவும் கூச்சப்பட்டார் என்று மகேஷ் பட் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

சன்னி மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவர் என்று எனக்கு தெரியும். அவர் ஆபாச படங்களில் நடிப்பவர் என்பதால் அவருக்கு கூச்சம் இல்லை என்பது அர்த்தம் இல்லை. ரந்தீப்புடன் படுக்கையறை காட்சிகளில் நடிக்கையில் அவர் மிகவும் கூச்சப்பட்டார் என்றார்.

சன்னியும் பெண் தானே...!
Close
 
 

அபிராமி ராமநாதன் சகோதரர் மரணம்!

சென்னை: அபிராமி ராமநாதனின் சகோதரரும் ஸ்பின்னிங் மில் அதிபருமான செட்டியப்பன் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 79.

அபிராமி ராமநாதனின் மூத்த சகோதரர் செட்டியப்பன். இவர் சென்னையில் வசித்து வந்தார். ஸ்பின்னிங் மில் அதிபராக இருந்தார்.

உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்றுவந்த அவர், இன்று காலை மரணமடைந்தார்.

அவருக்கு மனைவி, 4 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பூலாங்குறிச்சி கிராமத்தில் செட்டியப்பன் உடலுக்கு நாளை மாலை 4 மணிக்கு இறுதி மரியாதை செய்யப்படுகிறது.

சென்னையில், திரையுலகப் பிரமுகர்கள் செட்டியப்பனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Close
 
 

நம்பர் ஒன் நடிகையா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மணிரத்னத்தின் 'கடல்', கவுதம் வாசுதேவ் மேனனின், 'நீதானே என் பொன்வசந்தம்', 'நான் ஈ' படங்களில் நடித்து வரும் சமந்தா கூறியதாவது: சினிமாவுக்கு வந்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. இந்த வருடம் நான் நடித்து எட்டு படங்கள் வெளியாகின்றன. இதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துள்ளேன். அறிமுகமானபோது இவ்வளவு வாய்ப்புகள் வரும் என்று நினைக்கவில்லை. குறுகிய காலத்திலேயே பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தது எனது அதிர்ஷ்டம்தான். பெரும்பாலான நடிகைகளை நம்பர் ஒன் என்கிறார்கள். எத்தனை நம்பர் ஒன்கள் சினிமா துறையில் இருக்க முடியும்? ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த நம்பர்கள் மாறிக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அதனால் இதில் நம்பிக்கை இல்லை. அதிகமான படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். எத்தனை படங்கள், யார் ஹீரோ என்பதையெல்லாம் இப்போது சொல்ல இயலாது. அந்த படங்களின் ஷூட்டிங் ஆரம்பிக்கும்போது சொல்கிறேன்.
'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் நித்யா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். இந்த கேரக்டர் என் மனசுக்கு நெருக்கமானது. ஸ்கூல், கல்லூரி அதற்கு அடுத்த காலகட்டங்களில் நடக்கும் காதல் கதை இது. இந்தப் படத்தை பார்த்த பிறகு எல்லோருமே தங்கள் வாழ்க்கையை அந்த கேரக்டரோடு ஒப்பிட்டு பார்ப்பார்கள். இதே போல 'நான் ஈ' படத்திலும் என் கேரக்டர் வித்தியாசமாக இருக்கும். இவ்வாறு சமந்தா கூறினார்.


 

வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவிலிருந்து விலக நினைத்தேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டு விலக நினைத்தேன் என்று இயக்குனர் எழில் கூறினார். 'மனம் கொத்திப் பறவை' படத்தை இயக்கி தயாரித்துள்ள எழில் படம் பற்றி நிருபர்களிடம் கூறியதாவது: இதுவரை 6 படங்கள் இயக்கி இருக்கிறேன். ஏழாவது படத்துக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. பெரிய இடைவெளி ஏற்பட்டது. சினிமாவை விட்டு விலகி சொந்த ஊருக்கு போய்விடலாம் என்று நினைத்தபோதுதான், என் நண்பர்கள் அம்பேத்குமார், ரஞ்சீவ் மேனன் ஆகியோர் நாம் இணைந்து சொந்தப் படம் எடுப்போம் என்றார்கள். அவர்களோடு கிராமத்தில் நான் வாழ்ந்த வாழ்க்கையை நகைச்சுவை கலந்த திரைக்கதையாக அமைத்தேன். அதுதான் இந்தப் படம். சிவகார்த்திக்கேயன், ஆத்மிகா ஜோடி. காமெடிக்கு இடையில் மெல்லிய காதலை சொல்லியிருக்கிறேன். பெரிய நட்சத்திர பட்டாளம் படத்தில் இருக்கிறது. இதுவரை வில்லனாக நடித்த ரவிமரியா முதன் முறையாக காமெடி வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தை பார்த்த எல்லோரும் பாராட்டினார்கள். ஆஞ்சநேயா பிக்சர்ஸ் எம்.சதீஷ் படத்தை வெளியிடுகிறார். இவ்வாறு எழில் கூறினார்.


 

சேட்டையில் சுஜா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்தியில் ஹிட்டான 'டெல்லி பெல்லி' படம், தமிழில் 'சேட்டை' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. ஆர்யா, சந்தானம், ஹன்சிகா உட்பட பலர் நடிக்கின்றனர். இதை ஆர்.கண்ணன் இயக்குகிறார். யுடிவி தயாரிக்கும் இந்த படத்தில் சுஜா வாருனீ, நடிகையாக நடிக்கிறார். 'இதில் சின்ன கேரக்டர் என்றாலும் சிறப்பான கேரக்டரில் நடிக்கிறேன். இந்த கேரக்டர் எனது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இருக்கும் என்று இயக்குனர் கண்ணன் பாராட்டினார். இதைத் தொடர்ந்து அமளிதுமளி, தப்பு தாளங்கள், மறந்தேன் மன்னித்தேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்' என்றார் சுஜா வாருனீ.