கேரளாவில் ஜில்லாவை பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் மோகன்லால்

சென்னை: ஜில்லா படத்தின் கேரள வினியோக உரிமையை வாங்கியுள்ள மோகன்லால் படத்தை 300 தியேட்டர்களில் வெளியிடுகிறாராம்.

ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால் அப்பா மகனாக நடித்துள்ள படம் ஜில்லா. படத்தில் நடித்ததற்கு சம்பளத்திற்கு பதிலாக மோகன்லால் ஜில்லாவின் கேரள வினியோக உரிமையை வாங்கிக் கொண்டார்.

கேரளாவில் ஜில்லாவை பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் மோகன்லால்

விஜய்க்கு தமிழகம் தவிர்த்து கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனால் ஜில்லாவை கேரளாவில் ரிலீஸ் செய்தால் லாபம் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தான் மோகன்லால் அதன் வினியோக உரிமையை வாங்கி இருக்க வேண்டும்.

இந்நிலையில் மோகன்லால் தான் தாதாவாக நடித்துள்ள ஜில்லா படத்தை கேரளாவில் 300 தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறாராம். பொங்கல் அன்று ஜில்லா மட்டுமில்லை அஜீத்தின் வீரம் படமும் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

நட்சத்திர கிரிக்கெட் தூதராக த்ரிஷா தேர்வு - 'பலநாள் காத்திருப்பு நிறைவேறியது!'

சென்னை: சினிமா நட்சத்திரங்கள் விளையாடும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் சென்னை அணி தூதராக நட்சத்திர கிரிக்கெட் தூதராக த்ரிஷா தேர்வு - 'பலநாள் காத்திருப்பு நிறைவேறியது!'

இந்த அணிக்கு விளம்பர தூதுவராக பணியாற்ற நடிகை தேர்வு நடந்தது. தமன்னா உள்ளிட்ட பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் திரிஷா தேர்வாகியுள்ளார். இதற்காக அவருக்கு கணிசமான தொகை சம்பளமாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை அணிக்கு விளம்பர தூதுவராக தேர்வானது குறித்து திரிஷா கூறுகையில், "சென்னை ரைனோஸ் அணிக்கு தூதுவராகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பல வருடங்களாக இந்த பொறுப்புக்கு நான் பரிசீலிக்கப்பட்டேன். பல்வேறு காரணங்களால் அது நடக்கவில்லை. முதல் தடவையாக எனக்கு பிடித்த சென்னை அணிக்கு விளம்பர தூதுராகி உள்ளேன். நட்சத்திர கிரிக்கெட் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்," என்றார்.

சமீபத்தில்தான் சென்னை நட்சத்திர கிரிக்கெட் அணிக்கு நான் தூதராக இல்லை. ஏனோ என்னை தேர்வு செய்யவில்லை என்று ஏக்கத்துடன் அறிக்கை விட்டிருந்தார் த்ரிஷா. இப்போது அவர் ஏக்கம் நிறைவேறிவிட்டது.

 

ஜனவரி 10-ம் தேதி வழக்கு விசாரணை- வருவாரா அஞ்சலி?

சென்னை: நடிகை அஞ்சலி மீதான அவதூறு வழக்கு வரும் ஜனவரி 10-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அஞ்சலி நேரில் ஆஜராவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அங்காடித் தெரு உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அஞ்சலி. இவர், தனது சித்தி பாரதிதேவியும், இயக்குநர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துகளை அபகரிக்க முயல்வதாகக் கூறி இருந்தார்.

ஜனவரி 10-ம் தேதி வழக்கு விசாரணை- வருவாரா அஞ்சலி?

இந்த புகார் தன் மீது கூறப்பட்ட அவதூறு என்றும், பொய்யான புகாரை கூறிய நடிகை அஞ்சலி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் எனவும் கூறி இயக்குநர் களஞ்சியம் தரப்பில் அவரது வக்கீல்கள் ஜெயபிரகாஷ், சுரேஷ்பாபு ஆகியோர் சைதாப்பேட்டை பெருநகர 17-வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

நேற்று இந்த வழக்கு மீதான விசாரணை 17-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு(பொறுப்பு) உமாராணி முன் வந்தது. அப்போது இந்த வழக்கை ஜனவரி மாதம் 10-ந்தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் இதுவரை ஒருமுறை கூட அஞ்சலி ஆஜராகவில்லை. எனவே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அஞ்சலியின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதால், நேரில் ஆஜராக அஞ்சலிக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த முறை அவர் சென்னைக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சித்தியுடனான பிரச்சினைக்குப் பிறகு சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்குப் போன அஞ்சலி, அதன் பிறகு ஒருமுறை கூட சென்னைக்கு வரவில்லை.

 

கரகாட்டக்காரன் தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி மரணம்!

சென்னை: கரகாட்டக்காரன் படத்தைத் தயாரித்த கருமாரி கந்தசாமி இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 73.

1989-ம் வருடம் ராமராஜன் நடிப்பில் வெளிவந்து மூன்று வருடங்கள் ஓடி சாதனை படைத்த படம் ‘கரகாட்டக்காரன்'. ராமராஜன் - கனகா நடித்து, இளையராஜா இசையமைக்க, கங்கை அமரன் இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘வில்லுப்பாட்டுக்காரன்', ‘எல்லாம் அவன் செயல்' ஆகிய படங்களை தயாரித்துள்ளார். தயாரிப்பு மட்டுமின்றி ‘வளர்த்தகடா', ‘கோயில் யானை' ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். பிலிம் சேம்பரில் பொருளாராகவும் பணியாற்றியுள்ளார். 100-க்கும் அதிகமான படங்களின் விநியோகஸ்தராக இருந்துள்ளார்.

இவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் துரை அரசன் தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

நாளை அவரது சொந்த ஊரான திருச்சியில் அடக்கம் செய்யப்படுகிறது. அதற்காக இன்று திருச்சிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்படுகிறது.

இறந்த கருமாரி கந்தசாமியின் குடும்பத்தினருக்கு சினிமாத்துறையை சேர்ந்த பல்வேறு கலைஞர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

 

சென்னை திரைப்பட விழாவில் தங்க மீன்கள், ஹரிதாசுக்கு விருதுகள்

சென்னை: சர்வதேச படவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில், தங்க மீன்கள்-ஹரிதாஸ் ஆகிய 2 படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

11-வது சர்வதேச படவிழா, சென்னையில் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான் ஆகிய இருவரும் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்கள். 8 நாட்களாக நடந்த இந்த விழாவில், 58 நாடுகளை சேர்ந்த 163 படங்கள் திரையிடப்பட்டன.

சென்னை திரைப்பட விழாவில் தங்க மீன்கள், ஹரிதாசுக்கு விருதுகள்

தங்க மீன்கள்

நிறைவு நாள் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று இரவு நடந்தது. அதில், கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில், ராம் இயக்கி, ஜே.சதீஷ்குமார் வெளியிட்ட ‘தங்க மீன்கள்' படத்துக்கு முதல் பரிசு கிடைத்தது. அந்த படத்தை வெளியிட்ட ஜே.சதீஷ்குமாருக்கு ரூ.1 லட்சமும், இயக்குநர் ராமுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்பட்டது.

‘ஹரிதாஸ்'

டாக்டர் ராமதாஸ் தயாரித்து, ஜி.என்.ஆர்.குமரவேலன் டைரக்டு செய்த ‘ஹரிதாஸ்' படத்துக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. தயாரிப்பாளர் டாக்டர் ராமதாஸ், டைரக்டர் ஜி.என்.ஆர்.குமரவேலன் ஆகிய இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.

பாலா டைரக்டு செய்த ‘பரதேசி' படத்தில் நடித்தற்காக அதர்வாவுக்கு விசேஷ விருது வழங்கப்பட்டது. ‘தங்க மீன்கள்' படத்தில் நடித்த சிறுமி சாதனா, ‘ஹரிதாஸ்' படத்தில் நடித்த சிறுவன் பிருதிவிராஜ் ஆகிய இருவருக்கும் சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இசையமைப்பாளர் அனிருத்துக்கு அமிதாப்பச்சன் விருது வழங்கப்பட்டது.

 

வெற்றி இரு மடங்கு பலம் தரும்.. தோல்வி இரு மடங்கு அனுபவம் தரும்!- விஜய்

வெற்றி இரு மடங்கு பலம் தரும்.. தோல்வி இரு மடங்கு அனுபவம் தரும்!- விஜய்

சென்னை: வெற்றி இரு மடங்கு பலத்தைக் கொடுக்கும்... தோல்வி இரு மடங்கு அனுபவத்தைக் கொடுக்கும் என்றார் நடிகர் விஜய்.

ஆரம்ப காலத்தில் தன்னை வைத்துப் படமெடுத்து, பின் நலிவுற்ற நிலையில் இருக்கும் தயாரிப்பாளர்கள் 5 பேருக்கு தலா 5 லட்சம் நிதியுதவி அளித்தார் விஜய்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "பல பேர்களின் கூட்டு முயற்சியில் உருவாவதுதான் சினிமா. அதில், மற்ற எல்லோரும் உழைப்பை மட்டும்தான் தருகிறார்கள். தயாரிப்பாளர்கள் மட்டும்தான் உழைப்பையும், சம்பாதித்த பணத்தையும் போடுகிறார்கள்.

படம் பூஜை போடுவதில் ஆரம்பித்து, அந்த படம் ரிலீஸ் ஆகிற வரை 100 பேர்களுக்கு சம்பளம் கொடுத்து, சாப்பாடும் போட்டு ஒரு தாயைப்போல் கவனித்துக் கொள்கிறார்கள்.

அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் மனசு கஷ்டப்படுகிறது. என் ஆரம்ப கால தயாரிப்பாளர்கள் ஏதோ ஒரு விதத்தில் கஷ்டப்படும்போது, அவர்களுக்கு கை கொடுப்பது என் கடமை என்று தோன்றுகிறது. இத்தனை நாள் இல்லாமல் ஏன் இப்போது தோன்றுகிறது? என்று கேட்கலாம். நல்ல விஷயங்கள் எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். அதை உடனே செயல்படுத்துவதுதான் முக்கியம்.

வெற்றி - தோல்வி

இதைப்பார்த்து இன்னும் சிலர் இதுபோன்ற உதவிகளை செய்தால், சந்தோஷப்படுவேன். வெற்றி, 2 மடங்கு நம்பிக்கையையும், தோல்வி 2 மடங்கு அனுபவத்தையும் கொடுக்கும். அந்த அனுபவங்களை கொண்டு தயாரிப்பாளர்கள் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.''

-இவ்வாறு விஜய் பேசினார்.

 

செக்சுக்கு பார்ட்னரைத் தேர்வு செய்வது அவரவர் விருப்பம்!- ஓரினச்சேர்க்கை குறித்து த்ரிஷா

சென்னை: ஓரினச் சேர்க்கை அல்லது செக்ஸ் வைத்துக் கொள்ள பார்ட்னரைத் தேர்வு செய்வது அவரவர் விருப்பம் என்று நடிகை த்ரிஷா கருத்து தெரிவித்துள்ளார்.

ஓரினச் சேர்க்க கிரிமினல் குற்றம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. அரசியல் தலைவர்கள் ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லி பரபரப்பு கிளப்பி வருகிறார்கள்.

செக்சுக்கு பார்ட்னரைத் தேர்வு செய்வது அவரவர் விருப்பம்!- ஓரினச்சேர்க்கை குறித்து த்ரிஷா

திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா.. அவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு ஓரினச் சேர்க்கை பற்றி பேசி வருகிறார்கள். குறிப்பாக, ஆதரவாகப் பேசி வருகிறார்கள்.

இப்போது த்ரிஷா வாய் திறந்துள்ளார். அவரது கருத்து இது:

‘‘இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் யாருடனும் நட்பு வைத்துக் கொள்ளலாம். பேசிப்பழகலாம். ‘செக்ஸ்,' அவரவர் விருப்பம். இவரோடுதான் ‘செக்ஸ்' வைத்துக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.

‘செக்ஸ்' விஷயத்தில், பார்ட்னரை தேர்ந்தெடுப்பது அவரவர் இஷ்டம். இவர்தான் ‘பார்ட்னர்' என்று மற்றவர்கள் பலவந்தப்படுத்த கூடாது!''

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.