சம்பந்தமில்லாமல் எப்படிங்க கவர்ச்சி காட்டுவது... சலித்துக் கொள்ளும் தீப்தி

I Am Against Improper Glamour Says Deepthi Nambiar

சென்னை: காட்சிக்குத் தொடர்புடையதாக இருக்கும்போது கவர்ச்சி காட்டலாம். அதை நான் மறுக்கவும் இல்லை. அதேசமயம், காட்சிக்கு சம்பந்தமே இல்லாமல் எப்படிங்க கவர்ச்சி காட்டுவது என்று கேட்கிறார் நடிகை தீப்தி நம்பியார்.

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தவர் தீப்தி. தற்போது துள்ளி விளையாடு என்ற புதிய படத்தில் நடிக்கிறார். மேலும், முருகதாஸின் துப்பாக்கி படத்திலும் முக்கிய வேடத்தில் வருகிறாராம்.

சரி, கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறுகிறீர்களாமே என்று தீப்தியிடம் கேட்டால், பொங்கி விடுகிறார். அதெல்லாம் வதந்திங்க. காட்சிக்கு சம்பந்தமானது என்றால் கவர்ச்சி காட்ட நான்ஒருபோதும் தயங்க மாட்டேன். ஆனால் சம்பந்தமே இல்லாமல் எப்படிங்க கவர்ச்சி காட்டுவதை. அதைத்தான் நான் வெறுக்கிறேன் என்றார்.

சரி, துப்பாக்கி படத்தில் சின்ன கேரக்டரா என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. எனக்கு முருகதாஸ் மீது நம்பிக்கை உள்ளது. எங்கேயும் எப்போதும் படத்தில் நான் நடிக்கவில்லையா என்று திருப்பிக் கேட்கிறார்.

தீப்தி சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் கூட சத்தமில்லாமல் எம்.பி.ஏ. படிப்பும் படித்து வருகிறாராம்.

சேச்சியாச்சே... சேஃபாகத்தான் இருக்கிறார்

 

படம் பூராவும் 'பலான சீன்'... இந்தப் படத்துக்கு அனுமதி கொடுத்த சென்சார்!

படத்தில் வன்முறை அதிகமாக இருக்கிறது, ஆபாசம் இருக்கிறது என்று கூறி பல படங்களுக்கு சர்டிபிகேட் தராமல் சென்சார் போர்டு கேட் போட்டு வரும் நிலையில், ஆபாசக் காட்சிகள் ஏகத்துக்கும் நிரம்பிய ஒரு படத்துக்கு அனுமதி அளித்துள்ளது சென்சார் போர்டு.

கள்ளப் பருந்து என்பது இப்படத்தின் பெயர். இதயன் என்பவர் டைரக்ட் செய்துள்ளார். புதுமுகங்கள் நிறையப் பேர் நடித்துள்ளனர்.

kallaparunthu gets certificate from censor tribunal
Close
 

இந்தப் படத்தின் கதையே விகாரமானது. அதாவது ஒரு பணக்காரருக்கு மனைவி, 3 மகள்கள். இவர்களை வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே வைத்து பொத்திப் பொத்தி பாதுகாத்து வருகிறார் அந்த கோடீஸ்வரன். இந்த நிலையில் வீட்டுக்கு புதிதாக வேலைக்கு வருகிறார் ஒரு டிரைவர். வீட்டின் சூழலை புரிந்து கொண்ட அவர் வீட்டில் உள்ள பெண்களை தனது வலையில் வீழ்த்தி ஒவ்வொருவராக பிராக்கெட் போட்டு காம இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்.

இந்த காம லீலைகள் ரொம்ப நாளைக்குப் பிறகுதான் கோடீஸ்வரருக்குத் தெரிய வருகிறதாம். இதையடுத்து ஐவரையும் கொலை செய்யும் கோடீஸ்வரர், தானும் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போகிறாராம்.

இப்படிப்பட்ட அபாரமான கதைக் கருவுடன் கூடிய இப்படத்தில், ஏகப்பட்ட பலான சீன்களாம். இந்தப் படத்தை பார்த்த சென்னை சென்சார் போர்டு அதிகாரிகள், கண் கூசிப் போய் சீச்சீ இதெல்லாம் ஒரு படமா என்று தூக்கிப் போட்டு விட்டனர்.

இதையடுத்து ரிவைசரி கமிட்டியிடம் போனது படத் தயாரிப்புக் குழு. அங்கும் ரிஜக்ட் ஆகி விட்டது படம். இதையடுத்து டெல்லி டிரிப்யூனலில் முறையிட்டுள்ளனர். அவர்கள் படத்தைப் பார்த்து சில பல சீன்களை வெட்டி விட்டு ஏ சான்றிதழ் கொடுத்து திரையிட்டுக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டனராம். அத்தோடு நில்லாமல் இது சமூகத்திற்குத் தேவையான கதை என்றும் பாராட்டிவிட்டார்களாம்.

என்ன கொடுமை சார் இது என்று சொல்வது பழைய ஸ்டைல் என்பதால் அதை இந்த ஸ்டோரிக்குச் சொல்லவில்லை...!

 

பிரபுதேவாவே ஆடுறார்னா... உணர்ச்சிவசப்படும் சோனாக்ஷி!

Sonakshi Raised The Bar Match Prabh Deva

மும்பை: பிரபுதேவா நமக்கு டான்ஸ் சொல்லித் தரும்வரை எந்தப் பயமும் இல்லை. ஆனால் அவரே நம்முடன் இறங்கி ஆட வந்து விட்டால் நாம் அம்பேல்தான். கண்டிப்பாக அவருக்கு சமமாக ஆடினால்தான் நாம் பிழைக்க முடியும் என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறுகிறார் பாலிவுட்டின் இளம் புயல் சோனாக்ஷி சின்ஹா.

அக்ஷய் குமார் நடிக்கும் ஓ மை காட் படத்தில் கெஸ்ட் ரோலில் வருகிறார் சோனாக்ஷி. அதாவது அவரும் பிரபுதேவாவும் இணைந்து கோ கோ கோவி்ந்தா என்ற பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளனர்.

அந்தப் பாடலுக்கு ஆடிய அனுபவம் குறித்து சோனாக்ஷி கூறுகையில், பிரபுதேவா சார் நமக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் ஜாலியாக சொல்லிக் கொடுப்பார். அவர் சொல்லிக் கொடுப்பதை அப்படியே செய்தால் போதும். ஆனால் அவர் நம்முடன் சேர்ந்து டான்ஸ் ஆட வந்து விட்டால் நாம் செத்தோம். அவர் ஒரு அபாரமான ஆட்டக்காரர். அவருடன் இணைந்து ஆடுவது என்பதை நினைத்தாலே நடுங்கிப் போய் விடும்.

இருந்தாலும் அவருக்கு இணையாக ஓரளவுக்காவது ஆடினால்தான் நாம் பிழைத்தோம். அவருடன் இணைந்து ஆடும்போது தானாகே நமது டான்ஸும் சிறப்பாக மாறி விடுகிறது என்றார் சோனாக்ஷி.

இந்தப் பாடலுக்காக செமத்தியான மூவ்மென்ட்களை சோனாக்ஷிக்காக வைத்துள்ளாராம் பிரபுதேவா. அதை கஷ்டப்பட்டாலும் கூட சிறப்பாக செய்து அசத்தி விட்டாராம் சோனாவும்.

பட்டையைக் கிளப்பும் மூவ்மென்ட்களை வைப்பதில் பிரபுதேவாவுக்கு நிகர் அவர்தான்...!

 

அட்டகாசமான ஸ்விம் சூட்டில் சூட்டைக் கிளப்பும் கிம் கர்தஷியான்

Call Me Swim Kardashian   

லாஸ் ஏஞ்சலெஸ்: கவர்ச்சிக்கும், எடுப்பான அழகுக்கும் பெயர் போன கிம் கர்தஷியான் இன்னும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். எக்ஸ் வடிவிலான புதிய கவர்ச்சிகரமாக நீச்சல் உடையில் தோன்றி தனது ரசிகர்களிடையே சூட்டைக் கிளப்பியுள்ளார் கிம்.

அமெரிக்க ரியாலிட்டி ஷோ ஸ்டாரான கிம்மைப் பற்றி செய்தி வராத நாளே இல்லை. ஏதாவது ஒரு பிட்டைப் போட்டு பிரளயத்தை ஏற்படுத்துவது கிம்மின் வழக்கம். அந்த வகையில், புத்தம் புதிய எக்ஸ் வடிவிலான கவர்ச்சிகரமான நீச்சல் உடையை அணிந்து கவர்ச்சிப் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளார் கிம்.

இந்த நீச்சல் உடையில் கிம்மின் அழகுகள் முழுமையாக வெளிப்பட்டு புதிய பொலிவைக் காட்டுகிறது. 31 வயதான கிம், தற்போது ரேப் கலைஞர் கேயின் வெஸ்ட்டைக் காதலித்து வருகிறார். அவர்களது காதலை விட இப்போது கிம்மின் கலக்கல் நீச்சல் உடைதான் படு ஹாட்டாக பேசப்பட்டு வருகிறது.

கிம் என்ன செய்தாலும் 'கும்'முன்னுதான் இருக்கப்பா...!

 

தொங்கிப் போன மார்புகளுடன் லின்ட்சே லோஹன்... இதுவும் நியூஸ்!

Lindsay S Lo Hung Sideboob Gets An Airing

ஷாப்பிங்குக்குப் போன லின்ட்சே லோஹன், பிரா அணியாமல் தனது தொங்கிப் போன மார்புகளுடன் வந்தது ஒரு செய்தியாகி விட்டது.

உலகம் பூராவும் ஒரே கதைதான். அவர்களுக்குப் பின்னால் கேமராக் கண்கள் சுழன்றபடியே பின் தொடரும். பிரபலங்கள் என்ன செய்தாலும், எப்படி காணப்பட்டாலும் அது செய்தியாகி விடுகிறது. இதனால்தான் நடிகர்கள், குறிப்பாக நடிகையர் பொது இடங்களுக்குப் போகும்போது ரொம்பக் கவனமாக இருப்பது வழக்கமாகியுள்ளது.

இந்த நிலையில் ஷாப்பிங் போன ஹாலிவுட் நடிகை லின்ட்சே லோஹன், பிரா அணியாத மார்புடன் வலம் வந்தது சலசலப்பாகி விட்டது. காரணம், பிரா அணியாமல் அவரது மார்புகள் கீழ் நோக்கி தொங்கிப் போய் காணப்பட்டதால்தான்.

26 வயதான லின்ட்சே, அரை டிரவுசர் மற்றும் பிரா அணியாத மேலாடையுடன் முதுகு முழுக்க திறந்த நிலையில் ஷாப்பிங்குக்குப் போயிருந்தார். அவருடன் அவரது சகோதரர் கோடியும் சென்றிருந்தார். ஒரு கடையில் டிரஸ் வாங்கினர். அப்போது கடைக்கு வந்தவர்கள் லின்ட்சேவின் உடையைப் பார்த்து வாய் பிளந்து நின்றனராம்.

காரணம், பிரா அணியாததால், லின்ட்சேவின் மார்புகள் கீழ்நோக்கி தொங்கிய நிலையில் காணப்பட்டது. மேலும் சைட் பார்வையில் மார்புகள் முழுமையாக தொங்கிக் காணப்பட்டது தெரிந்ததால் பலரும் அதையே வேடிக்கை பார்த்தனர். இதை சிலர் படம் பிடித்து வெளியிலும் விட்டு விட்டனர்.

கடைக்கு வெளியே கையில் ஒரு சிகரெட்டுடன் செல்போனில் யாருடனோ ஸ்டைலாக பேசியபடி நின்றிருந்தபோதுதான் அவரை படம் பிடித்து விட்டனர்.

லின்ட்சே தனது மார்பழகைப் பற்றி பெருமையுடன் பேசி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது... ஆனால் இப்போது எல்லோரும் பேசும்படியாகி விட்டதே லோஹன்.