லிங்கா இசை... நவம்பர் 9-ம் தேதி சத்யம் சினிமாஸில் நடக்கிறது!

நவம்பர் 9-ம் தேதி ரஜினியின் லிங்கா பட இசை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி, சோனாக்ஷி, அனுஷ்கா நடிக்கும் லிங்கா படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கி வருகிறார். படத்தின் ஒரு பாடல் தவிர மற்றெல்லா காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன.

லிங்கா இசை... நவம்பர் 9-ம் தேதி சத்யம் சினிமாஸில் நடக்கிறது!

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ரஜினியின் பிறந் நாளன்று படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

லிங்காவின் இசை வெளியீடு திபாவளி நாளில் நடக்கும் என்று முதலில் கூறப்பட்டது.

ஆனால் அன்று படத்தின் அதிரடி போஸ்டர் மட்டும் வெளியானது. நவம்பரில்தான் இசை வெளியாகும் என்றனர் தயாரிப்பாளர் தரப்பில்.

இப்போது தேதியை உறுதி செய்துள்ளனர். வரும் நவம்பர் 9-ம் தேதியன்று சத்யம் திரையரங்கில் லிங்கா படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இசை வெளியீட்டைக் கொண்டாட ரசிகர்களும் முடிவு செய்துள்ளனர்.

 

பாலிவுட் நடிகையை படப்பிடிப்புத் தளத்தில் பலாத்காரம் செய்ய முயற்சி!

இந்தி நடிகை ரியா கானை படப்பிடிப்பு அரங்கில் இளைஞர் ஒருவர் கற்பழிக்க முயன்ற சம்பவம் வெளியில் தெரிய வந்துள்ளது.

ரியா கான் இந்திப் படங்களில் நடித்து வருகிறார். மும்பையில் ரியா கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

பாலிவுட் நடிகையை படப்பிடிப்புத் தளத்தில் பலாத்காரம் செய்ய முயற்சி!

இரு தினங்களுக்கு முன் தான் நடிக்க வேண்டிய காட்சிகளை நடித்து முடித்து விட்டு படப்பிடிப்பு அரங்கில் ஓரமாக உட்கார்ந்திருந்தாராம். படக்குழுவினர் வேறு காட்சிகள் எடுப்பதற்காக இன்னொரு இடத்துக்கு சென்று விட்டனர். ரியாகான் மட்டும் தனியாக இருந்தார்.

அப்போது அங்கு வந்த தயாரிப்பு நிர்வாகி, ரியாகான் தனியாக இருப்பதை பார்த்ததும் அவருடன் பேச்சுக் கொடுத்துள்ளார். ஆட்கள் அனைவரும் போகும் வரை பேசிக் கொண்டிருந்தவர், திடீரென ரியா கானின் வாயைப் பொத்தி தூக்கிச் சென்று கற்பழிக்க முயன்றுள்ளார்.

உடனே சுதாரித்துக் கொண்ட ரியாகான் ஆவேசமாக அந்த நபரை அடித்து தள்ளி விட்டு வெளியே ஓடி விட்டார்.

இதுகுறித்து போலீசில் அவர் புகார் செய்யவில்லை. ஆனால் தயாரிப்பாளரிடம் புகார் கூறினார். இதையடுத்து தயாரிப்பு நிர்வாகியை வரவழைத்து கடுமையாக கண்டித்ததோடு, படப்பிடிப்பிலஇருந்து அவரை வெளியேற்றியும் விட்டாராம்.

 

'விஷ்வா பாய்' சிலை: விஜய் என்ன சொல்லப் போகிறார்?

சென்னை: தனக்கு ரசிகர்கள் சிலை வைத்துள்ளது பற்றி விஜய் என்ன சொல்லப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

விஜய்யின் ஃபேஸ்புக் ஃபேன்ஸ் தங்களின் இளையதளபதிக்கு ரூ.1.5 லட்சம் செலவில் சிலை செய்தார்கள். தலைவா படத்தில் வரும் விஷ்வா பாய் கதாபாத்திரத்தில் சிலையை வடித்தனர்.

'விஷ்வா பாய்' சிலை: விஜய் என்ன சொல்லப் போகிறார்?

இந்த சிலை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டர் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் சிலை திறந்து 24 மணிநேரத்திற்கு மேலாகியும் விஜய் இது குறித்து வாய் திறக்கவில்லை.

அதனால் சிலை பற்றி விஜய் என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள அனைவரும் ஆவலுடன் உள்ளனர். மக்களின் ஆசையை நிறைவேற்றி வைப்பாரா விஜய். பொறுத்திருந்து பார்ப்போம்.

விஜய் கத்தி படம் நல்ல வசூல் செய்து வரும் மகிழ்ச்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரசிகர் மன்றத்துக்குப் போகும் விஜய் சிலை

நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் மதுரையில் ஒரு சிலை வைத்தது நினைவிருக்கலாம். அது மார்பளவு சிலை.

இப்போது சென்னை ரசிகர்கள் அவருக்கு ஒரு சிலை ரெடி பண்ணியுள்ளார்கள். இது அவரது முழு உருவச் சிலை.

ரூ 1 லட்சம் செலவில் இதைச் செய்துள்ள பேஸ்புக் விஜய் ரசிகர்கள், இந்த சிலையை சென்னை குரோம்பேட்டையில், கத்தி படம் திரையிடப்பட்டுள்ள வெற்றி தியேட்டர் வளாகத்தில் மக்கள் முன்னிலையில் திறந்து வைத்தனர்.

ரசிகர் மன்றத்துக்குப் போகும் விஜய் சிலை

முதலில் இந்த சிலையை போரூர் ஆலப்பாக்கத்தில் நிறுவத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அங்கு முறையான அனுமதி கிடைக்கவில்லை. எனவே தற்காலிகமாக வெற்றி திரையரங்கில் வைத்துள்ளனர்.

சில தினங்கள் மட்டும் இங்கு வைத்திருப்பார்களாம். அனைத்து ரசிகர்களும் வந்து போகும் இடத்தில் விஜய் சிலை மட்டும் நிரந்தரமாக வைத்திருப்பது சாத்தியமில்லை என்பதால் இந்த முடிவு. விரைவில் ரசிகர் மன்ற அலுவலகத்துக்குக் கொண்டுபோய், நிர்ந்தரமாக ஒரு இடத்தில் வைக்கப் போகிறார்களாம்.

 

5 லட்சம் இந்திய சினிமா தொழிலாளர்களின் தலைவரான ஃபெப்சி சிவா!

அழகியல் கொண்டது சினிமா.. அதே நேரம் இதில் ஜெயிக்க அசாத்திய துணிச்சலும், பொறுமையும் வேண்டும். அப்படி எதிர்நீச்சல் போட்டு இன்று ஓரளவு உயரத்தைத் தொட்டிருக்கிறார் பெப்சியின் தலைவரான ஜி.சிவா.

திரைப்பட இயக்குநராக அறிமுகமாகி, ஃபெப்சி அமைப்பின் தலைவராக உயர்ந்தவர், இன்று அகில இந்திய அளவில் பொறுப்புக்கு வந்திருக்கிறார். அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் என்ற பெரும் பொறுப்பில் இவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஒரு தமிழர் இந்த இடத்துக்கு வந்திருப்பது இதுவே முதல் முறை.

5 லட்சம் இந்திய சினிமா தொழிலாளர்களின் தலைவரான ஃபெப்சி சிவா!

அவரைச் சந்தித்து இந்த வெற்றி எப்படிச் சாத்தியம்? என்றோம்.

பதிலளித்த சிவா, "ஒவ்வொரு படியாக ஏறி ஜெயிப்பது தான் அர்த்தமானது எடுத்தவுடனே உயரத்துக்கு போக முடியாது.

ஆரம்பத்தில் கே.பாலச்சந்தர் சார் இயக்கிய படங்களில் காமிரா உதவியாளராகப் பணியாற்றினேன். ஒளிப்பதிவாளர் ஆர் எச் அசோக் ஒளிப்பதிவு செய்த படங்களில் உதவியாளராக பணியாற்றினேன். கே.பி சார் பெப்சி தலைவராக இருந்த போது அவருடன் இணைந்து பெப்சியில் பணியாற்றினேன். மூன்று முறை செயலாளராக இருந்தேன்.

5 லட்சம் இந்திய சினிமா தொழிலாளர்களின் தலைவரான ஃபெப்சி சிவா!

சினி காமிர அசோசியேசன்ஸிலும் செயலாளராக பணியாற்றினேன். இப்போது பெப்சி தலைவர் என்ற பொறுப்பு. அத்துடன் பெருமையான விஷயம் அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவராக இருக்கிறேன். ஐந்து லட்சம் சினிமா தொழிலாளர்களுக்கு தலைவர் என்கிற பெரும் பொறுப்பு இது.

ஒரு தமிழன் இந்திய அளவில் போட்டியிட்டு வெற்றி என்பது எனது வெற்றி இல்லை தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகவே நினைக்கிறேன். ஐந்து லட்சம் தொழிலாளர்களுக்கு குரல் கொடுத்து உரிமை கேட்கும் பொறுப்பு நிச்சயம் அவள்ளவு தொழிலாளர்களுக்காகவும் உழைப்பேன்.

5 லட்சம் இந்திய சினிமா தொழிலாளர்களின் தலைவரான ஃபெப்சி சிவா!

சரி இப்படியான பொறுப்பு உங்களின் தனிப்பட்ட அடையாளங்களை இழந்து விடாதா?

'தனம்' என்ற தரமான படத்தை இயக்கினேன் நல்ல இயக்குனர் என்ற அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். 'குலசேகரனும் கூலிப்படையும்' என்ற படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. பொறுப்புகள் கூடக் கூடத் தான் தனிமனித அடையாளம் பளீரென தெரியும்.

சினிமா என்கிற பளபளப்பான துறைகளுக்குள் எவ்வளவோ உணர்ச்சிப் போராட்டங்கள். அவ்வளவையும் சமாளித்து பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்," என்கிறார் ஜி சிவா.

 

மெட்ராஸ் ரஞ்சித்துக்கு விரும்பி வந்து கால்ஷீட் தந்த சூர்யா!

மெட்ராஸ் என்ற அழுத்தமான சூப்பர் ஹிட் படம் தந்த ரஞ்சித்துக்கு வாய்ப்புகள் தேடி வருகின்றன.

அதுவும் சாதாரணமான வாய்ப்புகள் அல்ல... சூர்யா மாதிரி சூப்பர் ஹீரோக்களிடமிருந்து வருகின்றன.

இந்தப் படம் பார்த்து மனசாரப் பாராட்டிய ரஜினிகாந்த், ரஞ்சித்தை உரிமையுடன் கலக்கிட்ட கண்ணா என்றாராம்.

மெட்ராஸ் ரஞ்சித்துக்கு விரும்பி வந்து கால்ஷீட் தந்த சூர்யா!

மெட்ராஸ் படத்தை பார்த்து விட்டு, மிகவும் பரவசமாகிவிட்ட சூர்யா, ரஞ்சித்துடன் ஒரு படம் பண்ண வேண்டும் என எண்ணி தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தினை இயக்கும் வாய்ப்பை ரஞ்சித்துக்குக் கொடுத்துள்ளார்.

சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கிவரும் ‘மாஸ்' படத்தில் நயன்தாரா, எமி ஜாக்சனுடன் இணைந்து நடித்துவருகிறார். விக்ரம் குமார் மற்றும் ஹரி இயக்கவிருக்கும் படங்களில் நடிக்கவும் பேசி வரும் நிலையில், அதற்கு முன்பாக ரஞ்சித்தின் படத்தில் நடிக்க விரும்புகிறாராம்.

அடுத்து ஆர்யாவை இயக்கும் ரஞ்சித், அதன் பிறகு சூர்யாவை இயக்குவார் என்கிறார்கள்.

 

கத்தி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய கடும் போட்டி! விஜய் பாத்திரத்தில் பவன் கல்யாண்?

சென்னை: தமிழகத்தில் கத்தி திரைப்படம் அடைந்துள்ள வெற்றியை தொடர்ந்து, தெலுங்கில் அதை ரீமேக் செய்யும் உரிமைக்காக தயாரிப்பாளர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

லைகா தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இளையதளபதி விஜய், சமந்தா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க தீபாவளிக்கு ரிலீசான திரைப்படம் கத்தி. தென் இந்திய மொழி படங்களின் அனைத்து முதல் நாள் வசூல் சாதனைகளையும் முறியடித்து கத்தி மொத்தம் ரூ.23.80 கோடி வசூலித்துள்ளது என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இரு தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

கத்தி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய கடும் போட்டி! விஜய் பாத்திரத்தில் பவன் கல்யாண்?

எனவே அதன் ரீமேக் உரிமைக்காக தயாரிப்பாளர்கள் நடுவே போட்டா போட்டி நிலவுகிறது. "தெலுங்கில் கத்தி திரைப்படத்தை ரீமேக் செய்ய பல தயாரிப்பாளர்கள் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

அவ்வாறு ரீமேக் செய்தால் விஜய் கதாப்பாத்திலத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளதாகவும் தெரிகிறது. அதே நேரம் கத்தியின் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர்கள் யாருக்கும் இதுவரை விற்பனை செய்யவில்லை" என்று கத்தி திரைப்பட தயாரிப்பாளருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்ததாக ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே நேரம், ரீமேக்கிற்கு பதிலாக, அப்படியே தெலுங்கில் டப்பிங் மூலமாக ரிலீஸ் ஆவதையே படத்தின் நாயகன் விஜய் விரும்புவதாக தெரிகிறது. எனவே இந்த விஷயத்தில் இன்னும் இழுபறி நீடிக்கிறது.

 

நவம்பர் 17-ம் தேதி மீண்டும் மேக்கப் போடும் ஜோதிகா

நவம்பர் 17-ம் தேதி முதல் மீண்டும் சினிமா மேக்கப்பைப் போட ஆரம்பிக்கிறார் நடிகை ஜோதிகா.

இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸ் மலையாளத்தில் இயக்கி பெரும் வெற்றிப் பெற்ற படம் ஹவ் ஓல்ட் ஆர் யு. இந்தப் படத்தைத்தான் தமிழில் படமாகத்குகிறார்கள். மலையாளத்தில் இயக்கிய ரோஷன்தான் தமிழ்ப் படத்தையும் இயக்குகிறார்.

நவம்பர் 17-ம் தேதி மீண்டும் மேக்கப் போடும் ஜோதிகா

சென்ன, டெல்லி, ராஜஸ்தான் போன்ற இடங்களில் படமாகும் இந்தப் படத்தில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபிரவேசம் செய்கிறார் ஜோதிகா.

அவருக்கு கணவராக நடிக்கிறார் ரகுமான்.

மலையாள நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர், அவரை விட்டுப் பிரிந்த பிறகு மீண்டும் சினிமாவில் மறுபிரவேசம் செய்த படம் ஹவ் ஓல்ட் ஆர் யு. இப்போது ஜோதிகா தனது சினிமா மறுபிரவேசத்தை அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

 

அனிருத்துக்கு ப்யானோ பரிசளித்த விஜய்

கத்தி படத்துக்கு அனிருத் அமைத்த இசை எங்கிருந்து சுடப்பட்டது என்றெல்லாம் ஆராய்ச்சி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, அவரது இசை படத்தின் நாயகன் விஜய்க்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம்.

பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி பெரிய அளவில் ஹிட்டாகிவிட்டது. படமும் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அனிருத்துக்கு ப்யானோ பரிசளித்த விஜய்

இந்த சந்தோஷத்தில் அனிருத்துக்கு ஒரு பரிசு வழங்கியுள்ளார் விஜய். ஒரு காஸ்ட்லியான பியானோவை வாங்கிப் பரிசாக அளித்துள்ளார்.

இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார் அனிருத்.

இதுபற்றி அவர் கூறுகையில், "நன்றி விஜய் சார். இந்த புதிய பியானோ மிகவும் அழகாக இருக்கிறது. கத்தி படத்தின் மிகப்பெரிய வெற்றி, அதோடு இந்த பியானோ எனக்கு கத்தி படத்திற்காக கிடைத்த இரண்டாவது பரிசு," என்று தெரிவித்துள்ளார்.

விஜய் தந்த ப்யானோவுடன் போஸ் கொடுத்தபடி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

 

ஆரஞ்சு மிட்டாயை ரிலீஸ் பண்ணும் விஜய் சேதுபதி

பரபரவென முன்னேறி வந்தார் விஜய் சேதுபதி. ஆனால் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் என இரு படங்கள் அடுத்தடுத்து விழுந்ததில், மார்க்கெட் ஆடிப் போனது.

இப்போது வன்மம், இடம் பொருள் ஏவல், ஆரஞ்சு மிட்டாய், மெல்லிசை, புறம்போக்கு, நானும் ரௌடிதான் என பல படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் சில முற்றாக முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. ஆரஞ்சு மிட்டாய் அவரது சொந்தப் படம் வேறு.

ஆரஞ்சு மிட்டாயை ரிலீஸ் பண்ணும் விஜய் சேதுபதி

ஆனால் எந்தப் படமும் வெளிவரும் வழியைக் காணோம்.

சரி, மற்ற படங்களின் ரிலீஸ் தேதியை தன்னால் நிர்ணயிக்கமுடியாது.. நம்ம சொந்தப் படத்தையாவது ரிலீஸ் பண்ணலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் விஜய் சேதுபதி.

நவம்பர் கடைசியில் இசை வெளியீடு, டிசம்பரில் படம் ரிலீஸ் என பிளான் செய்து அதற்கான வேலைகளிலும் இறங்கியிருப்பதாக தெரிகிறது.

வயதான தளர்வான தோற்றத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. திரைக்கதையின் பலம் படத்தை பெரிதாகப் பேச வைக்கும் என ந்புகிறார்கள். இந்தப் படத்துக்கு வசனம் எழுதியவரும் விஜய் சேதுபதிதான் என்பது கூடுதல் தகவல்!

 

எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் அஜீத்: இயக்குநர் முருகதாஸ் நெகிழ்ச்சி பேட்டி

சென்னை: நடிகர் அஜீத்குமார் மூலமாக தனக்கு வாழ்க்கை கிடைத்ததாக முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார்.

நேற்றிரவு விஜய் டிவியின் 'காபி வித் டிடி' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முருகதாஸ் கலந்துகொண்டார். அப்போது புகைப்படங்களை பார்த்து கருத்து சொல்லும் ரவுண்டில், அஜீத்-முருகதாஸ் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தொகுப்பாளர் திவ்யதர்ஷினி காண்பித்தார். அப்போது அஜீத் குறித்து முருகதாஸ் கூறியதாவது:

நான் அசிஸ்டெண்ட் இயக்குநராக இருந்த காலகட்டத்தில் ஒருநாள், தயாரிப்பாளர் சக்கரவர்த்தியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, அஜீத்தை பார்த்துள்ளீர்களா என்று சக்கரவர்த்தி என்னிடம் கேட்டார். நான் பார்த்தது கிடையாது என்றேன். அப்போது அஜீத் இங்கேதான் உள்ளார். நான் உங்களை அவரிடம் அறிமுகம் செய்கிறேன், ஒரு ஹலோ சொல்லிவிட்டு போய்விடுங்கள் என்று சக்கரவர்த்தி கூறினார்.

எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் அஜீத்: இயக்குநர் முருகதாஸ் நெகிழ்ச்சி பேட்டி

நானும் சரி என்றேன். கதவை திறந்ததும் அஜீத் எதிர்ப்பட்டார். என்னை பார்த்ததுமே 'He will make it'என்று கூறினார். இரண்டே செகண்ட்தான் என்னை பார்த்திருப்பார், ஆனால் அதற்குள்ளாகவே, என்னைபார்த்து நீங்கள் பெரிய ஆளாக வருவீர்கள் என்று கூறியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இவரால் நல்ல படம் பண்ண முடியும் என்றும் என்னைப்பார்த்து அஜீத் தெரிவித்தார். இதற்காக அஜீத்துக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு நான் எனது வேலைகளை பார்க்க கிளம்பினேன்.

காலம் கடந்தது. அஜீத் சார் மூலமாகவே எனக்கு ஒரு லைஃப் கிடைத்தது. அவருடன்தான் நான் எனது முதல் படத்தை (தீனா) இயக்கினேன். இவ்வாறு அஜீத் குறித்து, நன்றி மறக்காமல் முருகதாஸ் பேட்டியளித்தார்.

அதே நேரம், விஜய் குறித்து கேட்டபோது, சூட்டிங்கில் படு பயங்கரமாக வேலை பார்க்கும் விஜய், பிற நேரங்களில் அமைதியான பிள்ளையாக காட்சியளிப்பார். இந்த இரண்டில் எது நடிப்பு என்று நான் விஜயிடம் விளையாட்டாக கேட்டதுண்டு. கத்தி கிளைமாக்ஸ்சில் விஜய் பேசும் வசனங்களைப்போன்று, பொது மேடையிலும் அவர் பேச வேண்டும் என்பது எனது ஆசை என்ற முருகதாஸ், ஹீரோயின்களில், தனக்கு, சமந்தா 'Sweet Heart' என்றும் குறிப்பிட்டார்.

 

மும்பை மருத்துவமனையில் அனுஷ்கா, கோஹ்லி: எதுக்குன்னு கேட்காதீங்க?

மும்பை: நடிகை அனுஷ்கா சர்மாவும், கிரிக்கெட் வீரர் கோஹ்லியும் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு ஜோடியாக சென்று வந்துள்ளனர்.

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், கிரிக்கெட் வீரர் கோஹ்லியும் காதலர்கள். அவர்கள் ஜோடி போட்டு பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார்கள். நள்ளிரவு நேரத்தில் காரில் மும்பையை சுற்றுகிறார்கள். ஆனால் இது குறித்து கேட்டால் அனுஷ்கா பேச்சை மாற்றிவிடுவார்.

மும்பை மருத்துவமனையில் அனுஷ்கா, கோஹ்லி: எதுக்குன்னு கேட்காதீங்க?

அனுஷ்காவுக்கும், கோஹ்லிக்கும் நிச்சயதார்த்தம் நடத்த அவர்களின் பெற்றோர்கள் அண்மையில் சந்தித்து பேசியதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் காதல் ஜோடி மும்பை அந்தேரி பகுதியில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு சென்றுள்ளது.

மருத்துவமனையில் இருந்து ஜோடியாக வெளியே வந்த அவர்களை பலரும் போட்டோ எடுத்துள்ளனர். கோஹ்லி மேட்சுக்கு பயிற்சி செய்கையில் அரங்கிற்கு அனுஷ்கா செல்வதும், அவரின் படப்பிடிப்பு தளத்திற்கு கோஹ்லி செல்வதும் வழக்கமான ஒன்றாகும்.

அனுஷ்கா சர்மா தற்போது ஆமீர் கானுடன் சேர்ந்து பி.கே. படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.