பெப்சி அமைப்புக்கு தேர்தல் - 9-ந் தேதி நடக்கிறது

சென்னை: பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு வரும் ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

பெப்சிக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். 2012-2014-ம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.

அன்று காலை 9 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெறும்.

அன்று இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், தேர்தல் அதிகாரியாக ஸ்டண்ட் ïனியன் முன்னாள் செயலாளர் கே.நாராயணன் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் 'பெப்சி' செயலாளர் ஜி.சிவா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்.

 

சிரஞ்சீவி மகன் கல்யாணத்தில் டான்ஸ் ஆடும் தமன்னா, ஷ்ரேயா!

Tamannah Shriya Saran Shake Legs At Ram Charan Marriage
சிரஞ்சீவியின் மகன் ராம் சரன் கல்யாணத்தின்போது டான்ஸ் ஆடுவதற்கு தமன்னாவையும், ஷ்ரேயாவையும் புக் செய்துள்ளனராம்.

தெலுங்கில் வெற்றிகரமான நடிகராக வலம் வருபவர் ராம் சரன். இவருக்கு இப்போது கல்யாணம் பேசி முடித்து விட்டனர். அப்பல்லோ மருத்துவமனை அதிபர் பிரதாப் சி ரெட்டியின் பேத்தி உபாசனாவை ஜூன் 14ம் தேதி ஹைதராபாத்தில் வைத்து கரம் பிடிக்கிறார் ராம் சரன்.

இவர்களது திருமண சடங்குகள் ஜூன் 11ம் தேதியே பிரமாண்டமாக தொடங்குகிறது. சங்கீத் உள்ளிட்டவை விமரிசையாக நடைபெறவுள்ளன. இதில் தமன்னா மற்றும் ஷ்ரேயா ஆகியோர் டான்ஸ் ஆடப் போகிறார்கள். இதற்காக இருவரையும் அணுகியபோது உடனே ஓ.கே. சொல்லி விட்டார்களாம். இதற்காக காசு வாங்குவார்களா அல்லது இலவச ஆட்டமா என்பது தெரியவில்லை.

ராம் சரன் படங்களில் இடம் பெற்ற சில பாடல்களுக்கு இவர்கள் ஆட்டம் போடுவார்களாம்.

 

இசையமைப்பாளர் தேவா தாயார் மரணம் - ஜெயலலிதா இரங்கல்

சென்னை: பிரபல இசையமைப்பாளர் தேவாவின் தாயார் கிருஷ்ணவேணி சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81.

மறைந்த கிருஷ்ணவேணியின் கணவர் பெயர் சொக்கலிங்கம். கிருஷ்ணவேணி-சொக்கலிங்கம் தம்பதிக்கு, தேவா, சம்பத், சபேஷ், முரளி, சிவா ஆகிய 5 மகன்களும், செல்வி என்ற ஒரேயொரு மகளும் இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தேவாவின் தாயார் கிருஷ்ணவேணி மறைவு குறித்து, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவரும், திரைப்பட இசையமைப்பாளருமான தேவாவின் தாயார் கிருஷ்ணவேணி உடல்நலக்குறைவு காரணமாக 4-ந் தேதி (நேற்று) காலை இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

தாயாரை இழந்து வாடும் தேவாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்," என்று கூறப்பட்டுள்ளது.

 

இளையராஜாவை தலையணையில் அழுத்திக் கொன்றிருப்பேன்... அவ்வளவு பொறாமை!- கமல் பேச்சு

Tamilnadu Kamal S Speech Ilayaraaja Book Release Function
சென்னை: நான் மட்டும் இசையமைப்பாளராக இருந்திருந்தால் இளையராஜாவை தலையணையில் அழுத்திக் கொன்றிருப்பேன். அவர் மீது அவ்வளவு பொறாமை எனக்கு, என்றார் கமல்ஹாஸன்.

இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய பால் நிலாப் பாதை, எனக்கு எதுவோ உனக்கும் அதுவே என்ற இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பால் நிலாப் பாதை புத்தகத்தை வெளியிட்ட கமல் பேசியதாவது:

இங்கு நான் எந்த ஒத்திகையும் இல்லாமல் பேச வந்திருக்கிறேன். இளையராஜாவைப் பற்றி பேச ஒத்திகை எதற்கு எந்தத மேடை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவரைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பேன். இந்த விழாவுக்கு சம்பிரதாயம் ஏதும் இல்லாமல் ஒரு சாமானியனாகவே வந்திருக்கிறேன்.

பல கெட்டிக்காரர்கள் இருப்பார்கள், ஆனால் ஊர் ஒத்துக்கொள்ள வேண்டுமே. அப்படி அனைவரும் ஒத்துக்கொண்ட ஒருவர் இளையராஜா.

அதற்குக் காரணம் அவரது எளிமை. அவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது கூட சொன்னார். இங்கு நமக்கு தண்ணீர் ஊற்றி குளிர வைத்துக்கொண்டே இருப்பார்கள். அதனால் நாம்தான் நமக்குள் இருக்கும் நெருப்பை அணையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

எங்கள் துறையில் புகழ் என்ற விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். நான் இளையராஜாவுக்கு பி.ஆர்.ஓ. (பத்திரிகை தொடர்பாளன்) போன்றவன். சம்பளம் தராவிட்டாலும் அவருடைய புகழைப் பரப்பிக்கொண்டே இருப்பேன். இரண்டு நாள்களுக்கு முன்பு அவருக்கு பிறந்த நாள் வந்தது. வாழ்த்தினீர்களா என சிலர் கேட்டனர்.

அய்யோ, அதையெல்லாம் நான் செய்ய மாட்டேன். வயதாவதை எல்லாம் அவருக்கு நினைவுபடுத்தக் கூடாது. அவர் அவருடைய வேலையை நிம்மதியாகச் செய்யட்டும்.

வயது கூடுதல் என்பது என்னைப் பொருத்தவரை வெறும் நம்பர் விஷயம்தான்.

அவரிடம் சில கவிதைகளை எழுதிக் காண்பிப்பேன். அதைப் படித்த கோபத்தில் மிகச் சிறந்த கவிதைகளை அவர் எழுதுவார். அதனால் அவருடைய புத்தகங்களைப் பற்றி நான் பேசப்போவதில்லை. பல வேலைகள் இருந்தாலும் இந்த விழாவுக்கு நான் வந்தே ஆக வேண்டும் என்பதால்தான் கலந்துகொண்டேன்.

ராஜாவிடம் இசை கற்றேன்...

நானும் அவரும் பல ஆண்டுகளாக பல விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறோம். இவர்கள் நண்பர்களா என்று மற்றவர்கள் சந்தேகப்படும் அளவுக்கு காரசாரமாக விவாதங்களை நடத்தியிருக்கிறோம். அவருடைய கோபத்தை எல்லாம் அவரது ஆர்மோனியப் பெட்டியில் வைத்துவிடுவார். காலத்துக்கும் தேவைக்கும் ஏற்றவாறு இசையாக வெளிப்படுத்துவார். அவரிடம் இருந்துதான் இசையைக் கற்றுக்கொண்டேன்.

நான் மட்டும் இசையமைப்பாளராக இருந்திருந்தால் இளையராஜாவை தலையணையில் அழுத்திக் கொன்றிருப்பேன். அவர் மீது அவ்வளவு பொறாமை எனக்கு. மற்றவர்களிடம் வேலை பார்க்கும்போது இதை என்னால் அதிமாக உணரமுடிந்திருக்கிறது.

அவருடைய தன்னம்பிக்கையை கர்வம் என்றோ திமிர் என்றோ கருதிவிடக் கூடாது. அவற்றையெல்லாம் தாண்டியவர் அவர். அவர் ஒரு பீடியாட்ரிசியன் (குழந்தைமருத்துவர்) போன்றவர். குழந்தை அழும். ஏன் என்று தெரியாது. ஆனால் அதன் குறிப்பறிந்து மருந்து கொடுப்பவர்தான் மருத்துவர். நானும் பல முறை அழுதிருக்கிறேன். எனக்கு ஏற்ற மருந்தை கொடுத்திருக்கிறார் இளையராஜா.

இவர்தான் இசைக் கடவுள்... நான் ஒப்புக் கொள்கிறேன்!

எவ்வளவு பழகினாலும் வியப்பு அடங்காத மாபெரும் மேதை அவர். இளையராஜாவை இசைக் கடவுள் என்றும் நான் அதை மறுக்க மாட்டேன் என்றும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் கூறினார். இதுதான் கடவுள். இவர்தான் கடவுள் என சொல்லுங்கள் நான் ஒத்துக்கொள்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு வகையில் பக்தி இருக்கும். நான் நம்பும் ஒன்றின் மீது நம்பும் ஒருவரின் மீதுதான் எனக்கு பக்தி செலுத்தத் தெரியும்.

இளையராவைப் பற்றி பல நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். 100 படங்களுக்கு மேல் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். யாருக்கும் வாய்க்காத எத்தனை எத்தனையோ அனுபவங்கள் இருக்கின்றன. எங்களுடைய நட்பு இன்னும் நீண்ட காலத்துக்கு நீடிக்கும்," என்றார் கமல்ஹாசன்.

இளையராஜா

இளையராஜா தனது ஏற்புரையில், "என்னை சிறு வயதில் பள்ளி உள்பட பல இடங்களிலும் முட்டாள், அறிவு கெட்டவன் என்றெல்லாம் பலர் திட்டியிருக்கிறார்கள். ஆனால் அவை எவையும் என்னை பாதித்ததில்லை. ஆனால் இப்போது எல்லோரும் புகழ்கிறார்கள். இதைத் தாங்கிக் கொள்வதுதான் சிரமமாக இருக்கிறது. புகழ் எவ்வளவு பெரிய போதை என்பது எனக்கு நன்கு தெரியும். அதனால்தான் சற்று விலகியே இருக்கிறேன். இசை என்பது மிக எளிமையான விஷயம். அதை ஏன் இவ்வளவு கடினமாக்கி சிக்கலாக்குகிறார்கள் எனத் தெரியவில்லை. இப்போதுள்ள இசை அப்படி ஆகிவிட்டது.

இன்று எங்கு பார்த்தாலும் கருத்து சொல்பவர்கள் நிரம்பியிருக்கிறார்கள். இறைவன் என்னை இசையோடோ இரு என பணித்துவிட்டார். அப்படிப்பட்ட இறைவனுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை," என்றார்.

 

மீண்டும் நடிக்க வந்தார் பூர்ணிமா பாக்யராஜ்!

Poornima Back Kollywood
மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் பாக்யராஜ் மனைவியும், எண்பதுகளில் முன்னணி நாயகியாகத் திகழ்ந்தவருமான பூர்ணிமா.

பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள், விதி, டார்லிங் டார்லிங் டார்லிங், தங்கமகன் உள்பட ஏராளமான வெள்ளிவிழாப் படங்களில் நடித்து முதலிடத்தில் இருந்தவர் பூர்ணிமா (ஜெயராம்).

முந்தானை முடிச்சுக்குப் பிறகு இயக்குநர் பாக்யராஜை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அதன் பிறகு ஏராளமான வாய்ப்புகள் வந்தும் நடிக்க மறுத்துவிட்டார். கணவரின் படங்களில் மட்டும் உடை அலங்கார நிபுணராகப் பணியாற்றினார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் பூர்ணிமா.

சுசீந்திரன் இயக்கும் ஆதலால் காதல் செய்வீர் என்ற புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பூர்ணிமா பாக்யராஜ். இப்படத்தில் புதுமுகம் சந்தோஷ் என்பவர் கதாநாயகனாகவும், வழக்கு எண் 18/6 புகழ் மனிஷா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

இந்தப் பாத்திரத்துக்கு இந்தத் தலைமுறை ரசிகர்கள் பார்த்திராத நடிகையை நடிக்க வைக்க சுசீந்திரன் முயற்சித்தாராம். பூர்ணிமாவிடம் இதுகுறித்துப் பேசி சம்மதம் வாங்கியுள்ளார்.

இதற்கு முன் ஒரு சமையல் எண்ணெய் விளம்பரத்தில் மட்டும் கணவருடன் நடித்திருந்தார் பூர்ணிமா என்பது குறிப்பிடத்தக்கது.

 

சன்னி லியோனை தலையில் வைத்து ஆடுவதா?: தஸ்லிமா கண்டனம்

Taslima Nasreen Slams Porn Star Sunny Leone   
ஆபாச நடிகை சன்னி லியோனை தலையில் வைத்து கொண்டாடுவதா என்று எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடிப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சன்னி லியோன். பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் அவர் இந்தியாவில் பிரபலமானார். இதையடுத்து பூஜா பட் தனது படமான ஜிஸ்ம் 2ல் சன்னி லியோனை நடிக்க வைத்துள்ளார். இதையடுத்து அவர் பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

ஆபாச நடிகையான அவர் தற்போது பெரிய நட்சத்திரம் அளவுக்கு கொண்டாடப்படுகிறார். இது எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினை எரிச்சல் அடைய வைத்துள்ளது.

இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

ஒரு ஆபாச நடிகையை கொண்டாடுவதன் மூலம் நீங்கள் உங்கள் மகள்களை விஞ்ஞானி, டாக்டர், என்ஜினியர் ஆகுவதற்கு பதிலாக ஆபாச நடிகையாக கனவு காண ஊக்கப்படுத்துகிறீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் தஸ்லிமா.

 

காசு கொடுத்து தங்களை நம்பர் ஒன் என சர்வே பண்ண வைக்கும் தொலைக்காட்சிகள்!

உரக்க உண்மை சொல்வதாக சொல்வதாக தமுக்கடித்துக் கொள்ளும் சில தொலைக்காட்சிகள், தங்களை முதல் நிலையில் உள்ளதாகக் காட்ட டெல்லி வரை போய் செய்யும் சில மூன்றாம் தர வேலைகள் சந்திக்கு வந்து சிரிப்பாய் சிரிக்க ஆரம்பித்துள்ளன.

தேசிய அளவில் 'சர்வே' என்ற பெயரில் தனிப்பட்ட சிலருக்காக பிஆர் வேலை பார்க்கும் சில ஏஜென்சிகள்தான் இதன் சூத்திரதாரிகள்.

கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கும் கறுப்புப் பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல், இந்த மாதிரி ஏஜென்சிகளிடம் கொட்டிக் கொடுத்து டுபாக்கூர் சர்வேக்களை நடத்த வைக்கின்றனர் சேனல் முதலாளிகள் (ஓடாத படத்துக்கு பைனான்ஸ் செய்து, லாபம் வந்ததாகக் காட்டும் கோல்மால்கள் தனிக் கதை!).

அப்படி நடத்தப்பட்ட சர்வேக்கள் எந்த காலகட்டத்தில், எந்தெந்த பகுதிகளில் நடத்தப்பட்டன என்ற விவரங்களோ ஆதாரங்களோ தரப்படாமலேயே, 'இந்த சேனல்தான் தமிழின் நம்பர் ஒன்' என அறிவிக்கிறார்கள்.

இதன் மூலம் பணரீதியான ஆதாயம் வருகிறதோ இல்லையோ... அரசியல் சார்ந்த ஆதாயங்கள் நிறையவே கிடைக்கின்றன இவர்களுக்கு.

கிராமங்களில் உள்ளவர்களால் சரியாக உச்சரிக்கக்கூட தெரியாத, எந்த பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாத ஒரு சேனலுக்கு நம்பர் ஒன் அந்தஸ்தைத் தந்து, அதை மற்ற மீடியாக்களும் வெளியிட வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். சேனல்காரர்கள் மூலம் கிடைக்கும் வேறு வகை ஆதாயங்கள், அரசியல் மாச்சரியங்களுக்காக இந்த பொய்யை சில முன்னணி செய்தி நிறுவனங்கள் பிரதானப்படுத்துவதும் நடக்கிறது.

சேனலின் இந்த தகிடுதத்தத்தைப் பார்த்த பழைய சேனல்காரர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா... இவர்கள் படித்த கல்லூரியில் பிரின்சிபாலாக இருந்தவர்கள் அல்லவா அவர்கள்...

என்றும் எங்கும் எப்போதும் நம்பர் ஒன் நாங்களே என்ற புதிய முழக்கம், மற்றும் அதே ஸ்டைல் சர்வே முடிவுகளோடு களத்தில் குதிக்க தயாராகி வருகின்றனர்.

 

விஜய் பிறந்த நாளில் வெளியாகும் அஜீத் படம்!!

Ajith S Billa 2 Hit Screens On June 22   
அஜீத் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் பில்லா 2 வரும் ஜூன் 22-ம் தேதி உலகம் எங்கும் வெளியாகிறது.

அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

அஜீத், பார்வதி ஓமனக்குட்டன் ஜோடியாக நடித்துள்ள படம் பில்லா 2. பில்லா படத்தின் முதல் பகுதி கதை இது.

சக்ரி டோலட்டி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன் என்டர்டெயின்மெட் தயாரித்துள்ளது.

பில்லா 2 ரிலீஸ் தேதி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இப்போது தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து அறிவித்துள்ளது.

வரும் ஜூன் 22-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. இதனை தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அறிவித்துள்ளார்.

ஜூன் 22- அஜீத்தின் திரையுலக போட்டியாளரான விஜய்யின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது!!

 

கிசு கிசு - வேக நடிகை காதை கடித்த பிரெண்ட்ஸ்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

கன்னத்துல கிஸ் படத்துல லேசா லங்க பிரச்னையை தொட்ட பெல் இயக்கம் 'சமுத்திரÕ படத்துல மறுபடியும் அதை டச் பண்ணிருக்காராம்... இருக்காராம்... சமீபத்துல போராளி பத்திய கதையை மையமா வச்சி உருவான ஹனிகூடு படத்தை பத்தி கேள்விப்பட்ட பெல் இயக்கம் ரொம்ப பரவசமாயிட்டாராம். அந்த படத்தை பாக்கணும்னு இயக்கத்துக்கு சொல்லிவிட்டாராம். அவருக்கு ஸ்பெஷல் ஷோ போட்டப்போ இமை கொட்டாம பாத்து உருகிட்டாராம். இதோட பாதிப்பு 'சமுத்திரÕ படத்துல எதிரொலிக்கும்னு கூட இருக்க¤றவங்க சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்...     

வேகமான பிரிய ஹீரோயினுக்கும் சான்டல்வுட் நாட்டு மாஜி முதல் மினிஸ்டர் மகனுக்கும் லிங்க்குன்னு ரொம்ப நாளாவே கிசுகிசு வந்துச்சாம்... வந்துச்சாம்... இது காதுல விழுந்தும் எந்த எதிர்ப்பும் சொல்லாம நடிகை வேடிக்க பாத்தாராம். ஏற்கனவே குட்டியான ஒரு ஹீரோயின் இன்னொரு மாஜி முதல் மினிஸ்டரோட லிங்க் ஆகி செட்டிலானதால இவரும் அதுக்கான நேரம் பாத்துக்கிட்டிருந்தாராம். ஆனா ரெய்டு அது இதுன்னு மேட்டர் தாறுமாறா திசை மாறனதுல அப்செட்டாம்... நடிகை அப்செட்டாம்... இதுக்கு மேலேயும் வேடிக்கை பாக்காதேன்னு பிரண்ட்ஸுங்க காதை கடிச்சாங்களாம்... கடிச் சாங்களாம்... உஷாரான நடிகை மினிஸ்டர் மகன் யாருன்னே தெரியாதுன்னு சட்டன்னு ஸ்டேட்மென்ட் விட்டுட்டாராம்... விட்டுட்டாராம்..

ஓரளவுக்கு பேர் சொல்ற ஹீரோக்களுக்கே சில ஹீரோயினுங்க ஜோடி சேர மறுக்கி¢றாங்களாம்... மறுக்க¤றாங்களாம்... இந்த விஷயத்துல அப்பான குட்டி நடிகருக்கு யோகம்தானாம். அ.ச. குதிரை படத்துல சரணமான நடிகை ஜோடி சேர்ந்தாரு. அடுத்து நடிக்க¤ற படத்துல ராட்டினம் பட நடிகை ஜோடி சேர்றாராம். விஷயத்தை கேள்விப்பட்ட சில ஹீரோங்க, 'இவனுக்கு வந்த வாழ்வை பாருய்யாÕனு புலம்புறாங்களாம்... புலம்புறாங்களாம்...


 

விமர்சிப்பவர்களை பற்றி கவலையில்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
என் படத்தை விமர்சிப்பவர்களைப் பற்றி கவலை இல்லை என்றார் பிரபு தேவா. இதுபற்றி பிரபு தேவா கூறியதாவது: இந்தியில் இயக்கிய 'ரவுடி ரத்தோர்' படம் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி. கடந்த கால படங்களின் வசூலை இப்படம் முறியடித்துள்ளது. முதல்வார தொடக்கத்திலேயே ரூ.48.3 கோடி வசூலித்துள்ளது. தெலுங்கு படத்தின் ரீமேக்தான் இப்படம். பொருத்தமான பொழுதுபோக்கு படமாக அமைந்திருந்தது. ஆனால் இந்த வெற்றி பற்றி பாராட்டாமல் சிலர் படத்தை விமர்சிக்கிறார்கள். எந்த சீனுக்கும் காரணம் இல்லை, லாஜிக் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களின் விமர்சனத்தை மதிக்கிறேன். ஆனால் விமர்சகர்களுக்காக நான் படம் இயக்கவில்லை. எல்லா படங்களும் ரசிகர்களை கவரும் எண்ணத்துடனே உருவாக்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு கமர்ஷியல் படங்களுக்கு தலைவணங்குகிறேன். அப்படங்கள் அதிகபட்ச பொழுதுபோக்கு படங்களாக அமைந்துள்ளது. இந்த இருமொழி படங்களின் பார்முலாதான் இந்திய சினிமாவின் கமர்ஷியல் படங்களுக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. மற்ற எந்த பாணியிலான படங்களை இயக்குவதைவிடவும் மாஸ் படங்களை இயக்குவது கடினம். தென்னிந்திய மொழிப் படங்களை ரீமேக் செய்வதில் பெருமை. அந்த வரிசையில் 'வான்டட்', 'ரவுடி ரத்தோர்' படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இவ்வாறு பிரபுதேவா கூறினார்.


 

உண்மையை உரக்கச் சொல்லும் தொலைக்காட்சிகள்!

New Competition Tamil Nadu Tv Channels
பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சிய தொலைக்காட்சிகளையும், அரசியல் பின்னணி உள்ள தொலைக்காட்சிகளையும் பின்னுக்கு தள்ளி தன் தனித்திறமையினால் ஒரு ஆண்டுகளுக்குள்ளாகவே முன்னணிக்கு வந்து விட்டது புதிய தலைமுறை தொலைக்காட்சி. இதற்கான காரணம் அந்த தொலைக்காட்சி வழங்கும் செய்தியின் தன்மையும், நிகழ்ச்சிகளில் காட்டும் வித்தியாசமும்தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள் அது பற்றிய ஒரு சின்ன ரவுண்ட் அப்.

தமிழ்நாட்டில் 1992 வரை தூர்தர்சன் எனப்படும் அரசு தொலைக்காட்சி மட்டுமே இருந்தது. அவர்களின் நிகழ்ச்சியை பார்ப்பதற்கே வரிசை கட்டி நிற்பார்கள் ஜனங்கள். கேபிள் டிவியின் வரவினாலும் 1993ல் சன் டிவி தொடங்கப்பட்ட பின்னரும் மக்களின் ரசனையே மாறியது.

உங்க வீட்ல சன்டிவி இருக்கா? என்று கேட்பதையே பெருமையாக நினைத்தனர் மக்கள். அப்பொழுது சினிமாதான் பிரதானமாக இருந்தது. அதனால் தொலைக்காட்சியில் சினிமா நடிகர்களின் பேட்டி, சினிமா நடிகர்கள் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு அதிகரித்தது. செய்தி என்பதெல்லாம் டிடியோடு சரி. சன், ராஜ், ஜெஜெ( இப்போதைய ஜெயா) போன்ற தொலைக்காட்சிகள்தான் போட்டி போட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினர்.

அப்பொழுது ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் நடந்த நிகழ்வுகளை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும், மீண்டும் திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தவேண்டும் என்ற நோக்கத்தோடு சன் தொலைக்காட்சியில் செய்திகள் தொடங்கப்பட்டன. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்திகளை மக்கள் ஆவலுடன் பார்த்தனர் அவர்களின் விருப்பமும் நிறைவேறியது. இந்த போட்டியில் ஜெஜெ டிவி சில வருடங்கள் காணமல் போய் பின்னர் அது ஜெயா டிவியாக உருவெடுத்தது.

சன் டிவி குழுமத்தில் இருந்து 24 மணிநேர செய்திகளை ஒளிபரப்ப சன் நியூஸ் தொடங்கப்பட்டது. அதேபோல் ஜெயா டிவியில் ஜெயா ப்ளஸ் தொடங்கப்பட்டன. சீரியல் போன்ற ஜனரஞ்சகமான நிகழ்ச்சிகள் மட்டும் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டன. இதனிடையே சகோதர யுத்தத்தில் 2007 செப்டம்பர் 15ம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சி உதயமானது. அது சன், ஜெயா, தொலைக்காட்சிகளுக்கு மிகப்பெரிய போட்டியாக உருவெடுத்தது.

திமுக ஆளும்கட்சியாக இருந்த காரணத்தினால் விளம்பரங்கள் அதிக அளவில் குவிந்தன. சில நிறுவனங்களிடம் மிரட்டியும் வாங்கப்பட்டன!. இதே நிறுவனத்தில் இருந்து 24மணிநேர செய்தி சேனலும் உருவானது.

ஆனால் எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு தொலைக்காட்சி உதயமானது. புதிய தலைமுறை பத்திரிக்கை இளைஞர்களை கவரும் பத்திரிக்கையாக வெற்றி பெற்றிருந்ததால் அதே பெயரே தொலைக்காட்சிக்கும் சூட்டப்பட்டது. முன்னணி நிறுவனங்களில் இருந்த பணியாளர்களுக்கு எல்லாம் சம்பளத்தை கொட்டிக்கொடுத்து புதிய தலைமுறைக்கு அழைத்து வந்தனர்.

புதிய களம், புதிய நிகழ்ச்சிகள், புதிய கோணம் என புதுமையாக இருந்த காரணத்தால் எந்த ஒரு ஜனரஞ்சகமான நிகழ்ச்சிகள் இல்லாமலேயே புதிய தலைமுறை முதலிடத்தை எளிதில் எட்டியது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். 2012 மே 12 ம் தேதிவரை TAM எனப்படும் டெலிவிஷன் ஆடியன்ஸ் மெசர்மென்ட் எடுத்த கணக்கெடுப்பின் படி புதிய தலைமுறை தொலைக்காட்சிதான் நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

புதிய தலைமுறை ரேட்டிங்கில் 29.15 சதவிகிதம் என்றால் சன் நியூஸ் 16.39 சதவிகித இடம் பெற்றுள்ளது. இது சன் குழுமத்திற்கு மிகப்பெரிய போட்டியாக உருவெடுத்துள்ளது. இதற்கு அரசு கேபிள் தொடங்கப்பட்டதும் ஒரு காரணம் என்கின்றனர்.

சன் குழுமத்தின் சுமங்கலி கேபிள் விஷன் மட்டும் இருந்தால் புதிய தலைமுறை இந்த அளவிற்கு மக்களை சென்றடைந்திருக்காது என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சன் தொலைக்காட்சியின் விளம்பர வருமானம் கூட குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

அதிமுகவினர் ஜெயா தொலைக்காட்சியை பார்க்கின்றனர், திமுகவினர் கலைஞர், சன் தொலைக்காட்சியை பார்க்கின்றனர் ஆனால் நடுநிலையான மக்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சியை பார்க்கின்றனர். உண்மையை உரக்கச் சொல்வோம் என்னும் தாரக மந்திரத்துடன் தொடங்கப்பட்ட இந்த தொலைக்காட்சி பிற சேனல்களுக்கு சிம்ம சொம்மனமாக உருவெடுத்துள்ளது என்றே அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
 

மந்திர எந்திரம் விற்கும் தொலைக்காட்சிகள்... மாடல்களான நாயகர்கள்!

Tv Actors Help Sell Manthira Enthi
காலை நேரத்தில் தொலைக்காட்சியை பார்ப்பதே ஒரு சிரமமான அனுபவம்தான் போலிருக்கிறது. பெரும்பாலான சேனல்களில் டெலிசாப்பிங் போட்டு ஏதாவது விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். அதை பார்க்க பிடிக்காமல் சேனல் மாறினால் அதை விட கொடுமை ஏதாவது தகடு, எந்திரம் என்று கூவி கூவி விற்பனை செய்கின்றனர் சின்னத்திரை நடிகர் நடிகையர்கள்.

‘கடை ஆரம்பித்தேன் எனக்கு வியாபாரம் ரொம்ப டல்லாகத்தான் இருந்தது பேசாமல் கடையை மூடிவிட்டு போங்க என்று எல்லோரும் கூறினார்கள். ஆனால் இந்த எந்திரத்தை கழுத்தில் போட்டேன் எனக்கு பிசினஸ் நல்ல முறையில நடக்குது’ என்கிறார் ஒருவர். அவரின் கருத்தை ஆமோதிக்கும் விதமாக பேசுகின்றனர் சின்னத்திரை நடிகர் சேத்தன், தேவதர்ஷினி தம்பதியர்.

அதேபோல் மற்றொரு தொலைக்காட்சியில் நவரத்தினங்கள் ராசிக்காக போடுங்கள் என்று விற்றுக் கொண்டிருக்கின்றனர் சின்னத்திரை நடிகர் தம்பதியர். இப்பவே புக் பண்ணுங்க பல ஆயிரக்கணக்கான மதிப்புள்ள இந்த பொருள் தள்ளுபடி போக குறைந்த விலையில் உங்களுக்குத் தருகிறோம் என்று கூறி ஏதாவது ஒரு எந்திரத்தையோ, ராசி கற்களையோ தலையில் கட்டிவிடுகின்றனர்.

இந்த நடிகர்களின் விளம்பரங்களை நம்பி அவர்கள் கூறுவதை கேட்டு எந்திரத்தையோ, ராசி கற்களையோ வாங்கினால் அவர்களின் வாழ்க்கையில் சுபிட்சம் ஏற்படுமா? என்பதை வாங்கி உபயோகித்தவர்கள் சொன்னால்தான் உண்டு.
 

எனக்கு சரியான ஜோடி அக்ஷய குமார் தான் : அசின்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
பாலிவுட்டில் கலக்கி வரும் நம்ம அசின், தனக்கு சரியான ஜோடி அக்ஷய குமார் தான் என்று கூறியுள்ளார். சமீபத்தில் வெளியான 'ஹவுஸ் ஃபுல் 2' படத்தில் அக்ஷய குமாருக்கு ஜோடியாக நடித்த அசின், அவரது அடுத்த படமான 'கில்லாடி 786' என்ற படத்தில் அசின் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது பற்றி அசின் கூறும்போது 'அக்ஷய குமாருடன் நடிப்படி சுலபம், அவர் கலகலப்பானவர், எளிமையுடன் பழகுவார், அவருடன் நடிப்பது மறக்க முடியாத அனுபவம்.' என்று கூறினார்.


 

எம்ஜிஆர் - சிவாஜியை சுமக்க வைத்த கமல், இன்னும் பல காலம் கதாநாயகிகளைச் சுமக்கட்டும்! - வைரமுத்து

Kamal Vairamuthu Launches Ponmaalai Pozhuthu Audio   

எம்.ஜி.ஆர், சிவாஜி இரண்டு பேரும் சிறு வயது கமல்ஹாசனை தூக்கி சுமந்திருக்கிறார்கள். அவர்களை சுமக்க வைத்த பாவம் கமல்ஹாசனை சும்மா விடுமா? அதனால்தான் இப்போது அவர் கதாநாயகிகளைத் தூக்கிச் சுமக்கிறார். இன்னும் பல காலம் இதை அவர் செய்து கொண்டே இருக்கட்டும், என கவிஞர் வைரமுத்து கூறினார்.

மறைந்த கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன், ‘பொன்மாலைப் பொழுது’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது.

பாடல்களை, நடிகர் கமல்ஹாசன் வெளியிட, கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். விழாவில், கமல்ஹாசன் பேசுகையில், “இந்த விழாவில் கலந்து கொள்வது கடன், கடமை என்று வைரமுத்து பேசும்போது சொன்னார். எனக்கும் அந்த கடனும் இருக்கிறது. கடமையும் இருக்கிறது.

படத்தின் கதாநாயகனின் தந்தை கலைவாணன் கண்ணதாசன் இப்போது உயிருடன் இருந்திருந்தால், இந்த படத்தின் தயாரிப்பாளராக அல்லது கவிஞராக அவருடைய பங்கு இருந்திருக்கும்.

கலைவாணன், நகைச்சுவை உணர்வு உள்ளவர். அவரைப்போல் அவருடைய மகன் ஆதவ் கண்ணதாசனும் நகைச்சுவை உணர்வு உடையவராக இருக்கிறார். கண்ணதாசனை நான் தொட்டுப்பார்த்து இருக்கிறேன். அதேபோல் பெரியாரின் கால்களைத் தொட்டுப்பார்த்து இருக்கிறேன்.

நடிகர்களுக்கு, ரசிகர்களின் கைத்தட்டல்தான் பெரிய பலம். அது ரசிகர்களுக்கே தெரியாது. எங்களுக்குத்தான் தெரியும். எங்களுக்கு கொடுத்த கைத்தட்டலை இந்த படத்தின் கதாநாயகன் ஆதவ் கண்ணதாசனுக்கும் கொடுக்க வேண்டும்,” என்றார்.

வைரமுத்து

விழாவில், கவிஞர் வைரமுத்து பேசுகையில், “எனக்கு கமல்ஹாசன் மீது ஒரு செல்லப் பொறாமை உண்டு. நான் பார்த்து வியந்த எம்.ஜி.ஆர், சிவாஜி இரண்டு சிகரங்களும் சிறு வயது கமல்ஹாசனை தூக்கிச் சுமந்திருக்கிறார்கள். அவர்களை சுமக்க வைத்த ‘பாவம்’ கமல்ஹாசனை சும்மா விடுமா?

எம்.ஜி.ஆரையும், சிவாஜியையும் சுமக்க வைத்தவரே, எதிர்காலத்தில் நீ கதாநாயகிகளை தூக்கி சுமக்கக் கடவது என்று காலம் அவரை சந்தோஷமாக சபித்திருக்கிறது. நானும் அந்த சந்தோஷ சாபத்தை வழிமொழிகிறேன்,” என்று கூற, கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது.

விழாவில் இயக்குநர்கள் சரவணன், ஜி.என்.ஆர்.குமரவேல், பாண்டிராஜ், ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் சாந்தனு, விஷ்ணு, பிருத்வி பாண்டியராஜன், கிஷோர், ஆதவ் கண்ணதாசன், நடிகை காயத்ரி, பாடல் ஆசிரியர்கள் மதன் கார்க்கி, கார்த்திக் மேத்தா, இசையமைப்பாளர் சத்யா ஆகியோரும் பேசினார்கள்.

பட அதிபர் அமிர்தா கவுரி வரவேற்று பேசினார். இயக்குநர் ஏ.சி.துரை நன்றி கூறினார்.

 

மண்ணின் இசையை விண்ணுக்கு உயர்த்திவர் இளையராஜா! - இறையன்பு

Iraiyanbu Praises Ilayaraaja

தெரு இசையை நாட்டுக்கும், மண்ணிலுள்ள இசையை விண்ணுக்கும் அழைத்துச் சென்றதுடன், இசையால் திரைபடத்தை பார்க்க வைக்கும் மரபை ஏற்படுத்தியவர் இசைஞானி இளையராஜா, என்று தமிழ்நாடு அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் பாராட்டினார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் பிறந்த நாள் விழா சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது. விழாவில் “பால் நிலாப் பாதை” என்ற நூலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட இறையன்பு பெற்றுக் கொண்டார்.

“எனக்கு எதுவோ உனக்கும் அதுவே ” என்ற நூலை கவிஞர் மு.மேத்தா வெளியிட கவிஞர் முத்துலிங்கம் பெற்றுக் கொண்டார். தொடந்து பிறந்த நாள் கேக்கை இளையராஜா வெட்டி நடிகர் கமல்ஹாசனுக்கு ஊட்டினார்.

மேற்கத்திய இசையை எளிமைப்படுத்தியவர்…

விழாவில் தமிழ்நாடு இறையன்பு பேசுகையில், “பாமரர்களுக்கும் புரியும் வகையில் மேற்கத்திய இசையையும் தன்னுடைய பாடல்கள் மூலம் இளையராஜா எளிமையாக வழங்கினார். அத்துடன் தெரு இசையை நாட்டுக்கும், மண்ணிலுள்ள இசையை விண்ணுக்கும் அழைத்தும் சென்றதுடன், இசையால் திரைபடத்தை பார்க்க வைக்கும் மரபை ஏற்படுத்தினார்.

ஓவியம், நடனம், சிற்பம் மற்றும் தியானத்திலும் இசை உள்ளது. உலகில் ஏதாவது மாற்றத்தை கொண்டு வருவதாக இருந்தால் அது இசையால் மட்டுமே முடியும்.

பறவைகள் தங்களுடைய சந்தோஷத்திற்காக பாடுகின்றன, ஆனால் மனிதன் பிறருடைய சந்தோஷத்துக்காக பாடுகிறான். இந்த பணியை செய்து வரும் இளையராஜாவை பாராட்டுவதில் பெருமை அடைகிறேன்,” என்றார்.

விழாவில் இளையராஜாவின் பாடல்கள் அடங்கிய இன்னிசைக் கச்சேரி நடந்தது.

 

திரும்பிப் பார்க்கிறேன் ஜெயா டிவியில் ஒரு ஃப்ளாஸ்பேக்

Jaya Tv S Tirumbi Parkiren

எந்த ஒரு சம்பவத்தையும் மனதில் மறுபடியும் மனதில் ரீவைண்டு செய்து பார்த்தால் அது மகிழ்ச்சியை தரும். அது போல ஒரு நிகழ்ச்சிதான் திரும்பி பார்க்கிறேன். ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி பழங்கால திரைப்பட நடிகர்கள் தாங்கள் நடித்த சிறந்த திரைப்படங்கள், தங்களுடன் பணிபுரிந்த கடந்த கால நிகழ்வுகளை மாறாத நினைவுகளோடு எடுத்துக்கூறுகின்றனர்.

அவர்கள் கூறும் நினைவுகளை காட்சிகளாக ஒளிபரப்புவது சிறப்பம்சமாகும். பழைய பாடல்களையும், திரைப்படங்களையும் அதே நடிகர், நடிகையர்களின் மூலமே கேட்டு அந்த காட்சிகளை தொலைக்காட்சியில் பார்ப்பது சிறப்பம்சமாகும்.

திரைப்பட நடிகை சச்சு, சோ, தொடங்கி ராமராஜன் வரை பல நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களின் சுவையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். திரைப்பட ரசிகர்களுக்கு தங்களின் பழைய கனவுக்கன்னிகளை இன்றைய –சூழ்நிலையில் பார்ப்பது சுவாரஸ்யமான அனுபவம்தான்.