2/24/2011 2:53:37 PM
இலியானாவின் அம்மா காஸ்டியூம் டிசைனர். இலியானாவின் தங்கையுடன் சேர்ந்து அவர் ஐதராபாத்தில் ஷோரூம் ஒன்றையும் வைத்த¤ருக்கிறார். இதற்கிடையே தனது படங்களுக்கு தனது அம்மாவையே காஸ்டியூம் டிசைனராக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என நிபந்தனை போடுகிறாராம் இலியானா. Ôஷக்திÕ தெலுங்கு படத்தில் இலியானாவின் காஸ்டியூம்களை வடிவமைத்தது அவரது அம்மாதான். இது குறித்து இலியானா கூறியது:
எனது அம்மா, எங¢கள் சொந்த ஊரான கோவாவில் பிரபல காஸ்டியூம¢ டிசைனர். விழாக்களுக்கு அவர் தேர்வு செய்யும் உடைகளைத்தான் நான் அணிந்து செல்வேன். இப்போது அவர் ஐதராபாத்தில் ஷோரூம் திறந்திருக்கிறார். இங்கே என்னுடன்தான் தங்கியுள்ளார். அதனால் Ôஷக்திÕ படத்தில் பணியாற்றுமாறு கேட்டேன். அதற்குள் எனது அம்மாவுக்கு நான் சிபாரிசு செய்வதாக தகவல் பரப்புகிறார்கள். எனது அம்மாவின் திறமை, Ôஷக்திÕ படக்குழுவினருக்கு தெரியும். முதல் நாள் ஷூட்டிங்கில் அவர் வடிவமைத்த உடையை அணிந்து சென்றேன். யூனிட்டார் அனைவரும் Ôடிரஸ் சூப¢பர்Õ என்றார்கள். படத்தில் எனக்கு மட்டும்தான் அவர் டிசைனர். அதனால் இதில் ஒன்றும் தவறில்லை.