நஸ்ரியா தொப்புள் பரபரப்புக்குப் பின்னணியில் தனுஷ்?

நஸ்ரியா தொப்புள் பரபரப்புக்குப் பின்னணியில் தனுஷ்?

சென்னை: கடந்த சில தினங்களாக பரபரப்பாக பேசப்பட்டு, கமிஷனர் ஆபீஸ், கோர்ட் என வில்லங்கமாகி வரும் நஸ்ரியா விவகாரத்தை பின்னிருந்து இயக்குபவர் படத்தின் ஹீரோ தனுஷ்தான் என்ற பேச்சு கிளம்பியுள்ளது கோடம்பாக்கத்தில்.

ஒய் திஸ் கொல வெறி என்ற ஒரு பாட்டுக்கு உலகம் முழுக்க பரபரப்பு கிளம்பியதல்லவா...

அந்தப் பரபரப்பு திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுதானாம். மும்பையில் உள்ள பிரபல விளம்பர ஏஜென்சி மூலம் இந்த வேலையைச் செய்தாராம் தனுஷ்.

அதன் பிறகு தான் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளுக்கான பப்ளிசிட்டியையும் இந்த விளம்பர நிறுவனத்தின் பொறுப்பிலேயே விட்டுவிட்டாராம் தனுஷ்.

அவர் என்ன மாதிரி உடை அணிய வேண்டும், எப்போது பட்டு வேட்டி சட்டை போட வேண்டும், எப்போது ஜிப்பா போட வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிப்பது இந்த விளம்பர நிறுவனம்தானாம்.

இனி தன் படங்களின் செய்திகளைக் கூட வழக்கமான பிஆர்ஓ மூலம் தராமல், அந்த விளம்பர நிறுவனம் மூலம்தான் தரப்போகிறாராம்.

இந்தப் பாணியை தனக்கு ஜோடியாக நடித்த நஸ்ரியாவுக்கும் அறிமுகப்படுத்தினாராம் தனுஷ். 'ஒய் திஸ் கொல வெறிக்கு நிகரான விளம்பரம் இந்த தொப்புள் மேட்டருக்குக் கிடைக்கும்... அந்த விளம்பர ஏஜென்சியை வைத்து அனைத்தையும் செய்' என்று வழி காட்டியதாக பேசிக் கொள்கிறார்கள்.

நிஜமாவா தனுஷ்...!

 

இரண்டாவது குழந்தை பற்றி நீங்களாக எதையும் கற்பனை செய்ய வேண்டாம் - ஐஸ்வர்யா

இரண்டாவது குழந்தை பற்றி நீங்களாக எதையும் கற்பனை செய்ய வேண்டாம் - ஐஸ்வர்யா

மும்பை: எங்களது இரண்டாவது குழந்தை பற்றி இப்போதே நீங்களாக எதையும் யூகிக்க வேண்டாம். அப்படி ஒரு நேரம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நடிகை ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

அபிஷேக் பச்சன் -ஐஸ்வர்யா ராய் நட்சத்திர தம்பதிகளுக்கு ஆராதியா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நவம்பர் வந்தால் ஆராதியாவுக்கு 2 வயது.

இப்போது படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் ஐஸ்வர்யா. ஒரு படத்தில் கணவர் அபிஷேக் பச்சனுடன் நடிக்கிறார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயைச் சந்திப்பவர்கள், அவரது இரண்டாவது குழந்தைப் பற்றிப் பேசுகிறார்களாம்.

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஸ்டெம் செல் வங்கி விழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராயிடம், நிருபர்கள் சிலர் அடுத்த குழந்தை பற்றி மறைமுகமாகக் கேள்வி கேட்டனர்.

உடனே ஐஸ்வர்யா, "நீங்கள் என்னிடம் என்ன கேட்க போகிறீர்கள் என்று புரிகிறது. அதற்கான நேரம் வரட்டும். உங்களுக்கெல்லாம் தெரியாமலா போகிறது.

அது வரை நீங்கள் வேறு எதையும் யூகிக்க வேண்டாம. ஆராதியா எங்கள் வாழ்விற்கு கிடைத்த ஆசிர்வாதம். நீங்களும் ஆசீர்வதியுங்கள்," என்றார்.

 

பேட் லக்... பெயரை மாற்றிய சுனைனா.. இனி அனுஷா!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால், தன் பெயரை அனுஷா என்று மாற்றிக் கொண்டுள்ளார் சுனைனா.

காதலில் விழுந்தேன் படத்தில் அறிமுகமான சுனைனா, தொடர்ந்து குறிப்பிடத்தக்க படங்களில் நடித்தார். வம்சம், சமர், நீர்ப்பறவை போன்ற படங்களில் அவர் நடித்திருந்தார்.

பேட் லக்... பெயரை மாற்றிய சுனைனா.. இனி அனுஷா!  

நல்ல பெயர் கிடைத்தாலும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால், கோடம்பாக்கத்தில் நடிகைகள் வழக்கமாக செய்யும் வேலையைச் செய்துள்ளார் சுனைனா.

அதுதான் நியூமராலஜிப்படி பெயர் மாற்றுவது. இதுவரை சுனைனா என்ற பெயரில் நடித்து வந்த அவர், இனி அனுஷா என்ற பெயரில் நடிக்கப் போகிறாராம்.

தான் இப்போது நடித்து வரும் நம்பியார் படத்திலிருந்து இந்தப் புதிய பெயரை டைட்டிலில் போடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் சுனைனா.

"இந்தப் பெயர் என் பெற்றோர்களின் தேர்வு. இனி அதிகாரப்பூர்வமாக என் பெயர் அனுஷாதான். புதிய நம்பிக்கை மற்றும நல்ல வாய்ப்புகளை இந்த பெயர் மாற்றம் தரும் என நம்புகிறேன்," என்று தெரிவித்துள்ளார் அனுஷா.

 

நய்யாண்டி... போஸ்டர்களில் நஸ்ரியாவுக்கு கல்தா!

நய்யாண்டி பட விவகாரத்தை சந்தி சிரிக்குமளவுக்கு நாறடித்த நஸ்ரியாவின் படங்களை அப்படத்தின் விளம்பரங்களிலிருந்து நீக்கியுள்ளனர்.

பாவாடை தாவணியில் நஸ்ரியா ஆடும்போது, அவரது தொப்புளை தனுஷ் தடவுவது போன்ற ஒரு காட்சியை வைத்திருந்தார் சற்குணம். அந்தக் காட்சியில் நஸ்ரியா பின்னர் நடித்துள்ளார்.

நய்யாண்டி... போஸ்டர்களில் நஸ்ரியாவுக்கு கல்தா!  

ஆனால் படம் முடிந்து நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் கடந்த மூன்று நாட்களாக அந்தத் தொப்புள் என்னுடையதல்ல, வேறு பெண்ணை வைத்து எடுத்து என் தலையை ஒட்ட வைத்து மோசடி பண்ணிவிட்டார் இயக்குநர் என பரபரப்பு கிளப்பி வருகிறார்.

நேற்று கமிஷனர் அலுவலகத்தில் சற்குணம் மீது புகார் சொன்ன நஸ்ரியா, உச்சகட்டமாக படத்தையே நிறுத்தக் கோரினார்.

இந்த நிலையில், படத்தின் விளம்பரங்கள், போஸ்டர்கள் எதிலும் நஸ்ரியாவின் படங்கள் இடம்பெறாத வகையில் வடிவமைத்து வருகிறார்கள்.

இவற்றில் தனுஷ் அல்லது அவருடன் காமெடியன் பரோட்ட சூரி மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

 

நடிகர்களுக்கு தந்த சம்பளத்துக்கு வரி செலுத்தவில்லை லிங்குசாமி! - சோதனை தொடர்கிறது

நடிகர்களுக்கு தந்த சம்பளத்துக்கு வரி செலுத்தவில்லை லிங்குசாமி! - இரண்டாவது நாளாக சோதனை

சென்னை: நடிகர் நடிகைகளுக்கு தந்த சம்பளத்துக்கு இயக்குநரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி வரி செலுத்தாததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் இன்றும் லிங்குசாமி அலுவலகங்கள், வீடுகளில் சோதனை நடந்தது.

இயக்குநர் லிங்குசாமி, தன் சகோதரர் சுபாஷ் சந்திரபோசுடன் இணைந்து படங்களையும் தயாரிக்கிறார். கடந்த ஆண்டு அதிக படங்களைத் தயாரித்தது இவர்கள் நிறுவனம்தான்.

இந்த ஆண்டும் ஒரே நேரத்தில் 6 படங்களைத் தயாரித்து வருகிறார். இவற்றில் கமல், சூர்யா நடிக்கும் படங்களும் அடங்கும்.

நேற்று முன் தினம் மட்டும் இவர் தயாரிக்கும் மூன்று படங்களின் அறிவிப்புகள் மற்றும் செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன.

அவை, கமல் நடிக்கும் உத்தம வில்லன், சூர்யா நடிக்கும் படம் மற்றும் கோலிசோடா போன்றவையாகும்.

இந்த நிலையில் நேற்று காலையிலிருந்து வருமான வரி அதிகாரிகள் லிங்குசாமி அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த அதிகாரிகள் அனைவரும் டெல்லியிலிருந்து வந்திருந்தனர்.

நேற்று இரவு முழுவதும் விடிவிடிய இந்த சோதனை நடந்தது. அப்போது ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்த சோதனையில், பல கோடி ரூபாய்க்கு லிங்குசாமி வரி கட்டாதது தெரிய வந்துள்ளது. குறிப்பாக நடிகர் நடிகைகளுக்கு சந்த சம்பளம் மற்றும் முன் பணத்துக்கு வரியே கட்டவில்லையாம் லிங்குசாமி.

மேலும் படத்தயாரிப்புக்கென செலவழித்த தொகை குறித்து முறையான கணக்கு வழக்குகள் இல்லாததையும் பார்த்த அதிகாரிகள், இன்றும் சோதனையைத் தொடர்ந்தனர்.

மாலை வரை நடந 'மராத்தான் சோதனை'களுக்குப் பிறகு ஏராளமான ஆவணங்களுடன் அதிகாரிகள் கிளம்பினர்.

இந்த சோதனை விவரங்கள் குறித்து எதுவும் சொல்வதற்கில்லை என்று கூறிவிட்டுச் சென்றனர் அதிகாரிகள்.

இயக்குநர் லிங்குசாமியோ, இதெல்லாம் வழக்கமான சோதனைங்க என்றார்.

 

ரஜினி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ.. அவருடன் பணியாற்றுவது பெருமை!- ஹ்ரித்திக்

மும்பை: நிஜ வாழ்க்கையிலும் ரஜினி ஒரு ஹீரோ... அவருடன் பணியாற்றுவது ஒரு பெருமை என்று கூறியுள்ளார் பாலிவுட் ஹீரோ ஹ்ரித்திக் ரோஷன்.

பாலிவுட் முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் புகழ் பாடுவது இப்போது சகஜமாகிவிட்டது. குறிப்பாக அவர்களின் புதிய படங்கள் வெளியாகும்போது, ரஜினிக்கு செலுத்தும் மரியாதையே தனி!

இப்போது அந்தப் பட்டியலில் ஹ்ரித்திக் ரோஷனும் இடம் பெற்றுள்ளார்.

ரஜினி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ.. அவருடன் பணியாற்றுவது பெருமை!- ஹ்ரித்திக்

சூப்பர் ஸ்டார் ரஜினிதான் தனக்குப் பிடித்த ஹீரோ என்று குறிப்பிட்டுள்ள அவர், ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக தான் நடித்ததை நினைவு கூர்ந்துள்ளார்.

1986-ல் வெளியான பகவான் தாதா படத்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஹ்ரித்திக்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "எத்தனையோ ஹீரோக்கள் இருந்தாலும், ரஜினி சாருடன் இணைந்து பணியாற்றத்தான் நான் பெரிதும் விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்கு முன் அவர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நான் நடித்துள்ளேன். ரஜினி மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு.

அவர் எனக்கு வழிகாட்டியைப் போன்றவர். ஒரு உதாரண புருஷராக நின்று எனக்கு பல விஷயங்களைக் கற்றுத் தந்திருக்கிறார். நிஜ வாழ்க்கையிலும் அவரே ஹீரோ. என் தந்தைக்கு நிகராக நான் மதிக்கும் மனிதர். அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகப் பெரிய பெருமை," என்றார்.

ஹ்ரித்திக் ரோஷனின் தந்தை ராகேஷ் ரோஷனும் ரஜினியும் பல ஆண்டுகளாக நண்பர்களாகத் திகழ்கிறார்கள். சில படங்களில் இணைந்து நடித்தும் உள்ளனர்.

 

கமல் வில்லனாக நடிக்கும் உத்தம வில்லன்! - ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்

சென்னை: விஸ்வரூபம் 2 படத்துக்குப் பிறகு கமல் நடிக்கும் படத்துக்கு உத்தம வில்லன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கமல் வில்லனாக நடிக்கிறார்.

லிங்குசாமி தயாரிக்கும் இந்தப் படத்தில் கமல் வில்லனாக நடித்தாலும், நல்ல வில்லனாகத்தான் வருகிறாராம்.

ஆரம்பத்தில் இந்தப் படத்தை கமலே இயக்குவதாக இருந்தது. ஆனால் பின்னர் அந்த வாய்ப்பை தன் நண்பரான ரமேஷ் அர்விந்துக்கு தந்துவிட்டார். இதை கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும்விட்டார்.

கமல் வில்லனாக நடிக்கும் உத்தம வில்லன்! - ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்

கமல் படத்தை இயக்குவது குறித்து ரமேஷ் அரவிந்த் கூறுகையில், "கமல் நடிக்கும் படத்தை இயக்குவது மகிழ்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது. ஏற்கனவே கமலை வைத்து கன்னடத்தில் ‘சதிலீலாவதி' படத்தை ரீமேக் செய்து இயக்கினேன்.

தற்போது லிங்குசாமி தயாரிப்பில் கமலை வைத்து இயக்குகிறேன். மெகா பட்ஜெட் படமாக தயாராகிறது. இப்படத்துக்கு ‘உத்தம வில்லன்' என பெயர் வைத்துள்ளோம். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

நானும் கமலும் பலதடவை சந்தித்து பேசி இதன் கதையை தயார் செய்துள்ளோம். காமெடி, பொழுதுபோக்கு அம்சங்கள், ஆக்ஷன் அனைத்தும் படத்தில் இருக்கும்.

கமல் இதுவரை நடிக்காத பாத்திரம் என எதுவும் இல்லை. ஆனால் இதில் அவர் நடிப்பது ரசிகர்களை ரொம்ப கவரும் வேடமாக இருக்கும்," என்றார்.