கடல் ஷூட்டிங்கில் குமுறி, குமுறி அழுத கார்த்திக் மகன்

http://tamil.oneindia.in/img/2012/05/13-manirathnam4-300.jpg
மணிரத்னத்தின் கடல் பட ஹீரோ கௌதம் குமுறி, குமுறி அழுது படக்குழுவை கலங்கடித்துவிட்டாராம்.

மணிரத்னத்தின் கடல் படம் மூலம் ஹீரோவாகிறார் நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம். படப்பிடிப்பு திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு என்ற கிராமத்தில் நடந்து வருகிறது.

படத்தில் நாயகன் அனாதை ஆனாலும் ஊர் மக்களின் உள்ளங்களில் வாழ்பவன். நாயகனை எடுத்து வளர்த்த பொன்வண்ணன் ஒரு நாள் அவர் அனாதை என்ற உண்மையை உடைக்கிறார். இதைக் கேட்ட நாயகன் குமுறி, குமுறி அழ வேண்டும். காட்சியை நாயகனிடம் மணிரத்னம் விவரிக்க கௌதம் இயக்குனர் எதிர்பார்த்த மாதிரியே அழுது உருகிவிட்டாராம். இதைப் பார்த்த படக்குழுவும் கலங்கிவிட்டதாம்.

புதுமுகமாக இருந்தாலும் அவர் நடிப்பை பார்த்து அசந்த படக்குழுவினர் நாயகனை மனதாரப் பாராட்டினார்களாம். நவரச நாயகனின் மகன் அதுவும் மணிரத்னத்தின் இயக்கத்தில் என்றால் கௌதம் நடிப்பைப் பற்றி சொல்லவா வேண்டும்.

இந்த படத்தில் தெலுங்கில் நம்பர் ஒன்னாக இருக்கும் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். அரவிந்த் சாமி இந்த படத்தின் மூலம் திரையுலகில் மறுபிரவேசம் செய்கிறார். ஆக்ஷன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

நடிகை டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!

Tapsee Loves Wear Nose Ring
6 தேசிய விருதுகளை அள்ளிய ஆடுகளம் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்த பஞ்சாப் அழகி டாப்ஸி. வந்தான் வென்றானுக்கு பிறகு தமிழில் பெரிய அளவில் வாய்ப்பு வராததால் ஆந்திராவுக்கு சென்றார். அங்கு கவர்ச்சியில் பின்னிப் பெடலெடுக்கும் டாப்ஸி முன்னணி நடிகைகளில் ஒருவராகிவிட்டார். 3 தெலுங்கு படங்கள் உள்பட 5 படங்கள் கையில் வைத்துள்ளார். அதி்ல் மறந்தேன் மன்னித்தேனும் அடக்கம்.

அவருக்கு மூக்குத்தி அணிய ரொம்ப பிடிக்குமாம். ஆனால் சினிமாவில் நடிப்பதால் மூக்கு குத்திக்க முடியவில்லையாம். அதனால் நேரம் கிடைக்கும்போது ஒட்டு மூக்குத்தி வாங்கி போட்டுக்கொள்கிறார்.

மேலும் டாப்ஸிக்கு திடீர் என்று வாஸ்து மீது நம்பிக்கை அதிகரித்துவிட்டதாம். இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்று கேட்டால், நல்ல விஷயங்கள் சில நடந்துள்ளது. அதனால் தான் வாஸ்து மீது நம்பிக்கை அதிகரித்துவிட்டது என்றார்.

என்ன நல்லது என்று சொன்னால் நாங்களும் தெரிஞ்சுக்குவோம்ல...!
 

பிரியதர்ஷனுக்காக மம்மூட்டி மகனுக்கு தந்தையாகும் மோகன்லால்

Junior Mammooty Act As Mohanlal Son
மலையாளம் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானுக்கு அப்பாவாக நடிக்கிறார்.

மலையாளம் சூப்பர் ஸ்டார் மோகன் லாலுக்கு பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் பிரியதர்ஷன். அவர் தற்போது மீண்டும் மோகன்லாலை வைத்து படம் ஒன்றை எடுக்கிறார். அதில் மோகன்லாலுக்கு மகனாக இன்னொரு சூப்பர் ஸ்டாரான மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிக்கிறார். இதில் விந்தை என்னவென்றால் இதுவரை பிரியதர்ஷன் மம்மூட்டியை தனியாக வைத்து ஒரு படம் கூட இயக்கியதில்லை.

இன்னும் பெயர் வெளியிடப்படாத அந்த படம் ஒரு காமெடிப் படமாம். வரும் ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் துவங்குகிறது. படம் டிசம்பரில் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

மோகன்லாலும், மம்மூட்டியும் தாங்கள் நண்பர்கள் என்று கூறினாலும் ஒருவர் படத்தின் வசூலை இன்னொருவர் முறியடிப்பதே வேலையாகிவிட்டது. ஆனால் தற்போது இருவருமே ஹிட் கொடுக்க போராடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி போட்டா போட்டி போடும்போது மம்மூட்டியின் மகன் மோகன்லாலுக்கு மகனாக நடிக்கப் போவது மாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

மகாராஷ்டிராவின் சுற்றுலா தூதர்: மாதுரி அவுட், ரித்திக் இன்!

Madhuri Out Hrithik For State Camp   
மகாராஷ்டிரா மாநில சுற்றுலாத்துறை அம்பாசிடராக இருக்க நடிகை மாதுரி தீக்ஷித் ரூ.10 கோடி கேட்டதால் அவருக்கு பதிலாக நடிகர் ரித்திக் ரோஷனை அணுகியுள்ளனர்.

மகராஷ்டிரா மாநில சுற்றுலாத்துறை அம்பாசிடராக இருக்குமாறு நடிகை மாதுரி தீக்ஷிதை அம்மாநில அரசு கேட்டுள்ளது. ஆனால் அவர் ரூ.10 கோடி கேட்டதால் அப்படியே ஜகா வாங்கி நடிகர் ரித்திக் ரோஷன் பக்கம் திரும்பிவிட்டனர். கிரிஷ் 3 படப்பிடிப்பில் இருந்த ரித்திகை 3 அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடந்துள்ளது.

ரித்திக் மகாராஷ்டிரா அம்பாசிடராக இருக்க சம்மதித்துள்ளார் என்று கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று மேலும் கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து ரித்திக்கோ அவரது தந்தை ராகேஷ் ரோஷனோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

கிரிக்கெட் வீரர் சச்சினை அம்பாசிடராகப் போடலாம் என்று அரசு நினைத்தது. ஆனால் அவர் கிரிக்கெட்டில் பிசியாக இருப்பதால் அந்த வாய்ப்பு ரித்திகிற்கு கிடைத்துள்ளது.

குஜராத் சுற்றுலாத்துறை மற்றும் இன்கிரெடபிள் இந்தியா அம்பாசிடர்களான் அமிதாபும், ஆமீர் கானும் பைசா சம்பளம் வாங்கவில்லை. ஆனால் மாதுரி தான் பிறந்த மாநிலத்தை விளம்பரப்படுத்த பெருந்தொகையைக் கேட்பது அதிர்ச்சியாக உள்ளது என்று மும்பையைச் சேர்ந்த என்.ஜி.ஓ. ஸ்வாபிமான் சங்கதன் தலைவர் நிதேஷ் ரானே தெரிவித்துள்ளார்.
 

சிரஞ்சீவி குடும்பத்துடன் ஒட்டி உறவாடும் தமன்னா

Tamanna S Too Close With Chiru Family   
நடிகை தமன்னாவுக்கு சிரஞ்சீவியின் குடும்பத்தினர் காட்பாதர்ஸ் போன்றவர்களாம்.

தமன்னாவுக்கு தமிழில் வாய்ப்புகள் தேய்ந்து போனதால் தெலுங்கு பக்கம் போனார். அங்கு அவர் நடித்த படங்கள் ஹிட்டாகவே அம்மணி உச்சத்தில் இருக்கிறார். மேலும் விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார்.

தெலுங்கில் கைநிறைய படங்கள் வைத்திருக்கும் தமன்னா சிரஞ்சீவி குடும்பத்தாருக்கே முன்னுரிமை கொடுக்கிறாராம். இது மற்ற இளம் நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது. மேலும் அவர் பிற நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்றால் கூட சிரஞ்சீவி குடும்பத்தாரிடம் அனுமதி பெற்ற பிறகே நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஏன் தமன்னா இப்படி ஒரு ஓரவஞ்சனை என்று கேட்டால், சிரஞ்சீவி குடும்பத்தார் எனக்கு காட்பாதர்ஸ் போன்றவர்கள். அவர்களுடன் நட்பாக இருப்பது எனக்கு தான் பிளஸ் பாயிண்ட் என்றார்.

முன்னதாக சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா, தமன்னா நடித்த ரச்சா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிரஞ்சீவி தமன்னாவின் அழகை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளியது நினைவிருக்கலாம். மேலும் தமன்னாவுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க ராம் சரண் டிப்ஸ் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

'கடுப்பேத்துறாங்க யுவர் ஆனர்'... கேப்டன் டிவியில் 'வடிவேலு'!

Captain Tv S Kadupethuranga Your Honour
கடுப்பேத்துறான் யுவர் ஆனர்... 'உலகப் புகழ் பெற்ற' வடிவேலு பட வசனம் இது. இந்த தலைப்பில் இப்போது விஜயகாந்த்தின் கேப்டன் டிவியில் ஒரு நிகழ்ச்சி வருகிறது.

ஆர்.கே நடித்த எல்லாம் அவன் செயல் படத்தில் வக்கீல் வண்டு முருகனாக வருவார் வடிவேலு. அதில் வரும் கோர்ட் சீனில், எதிர்த் தரப்பு வக்கீல் புள்ளிவிவரத்தோடு வாதாடுவதைப் பார்த்து கடுப்பாகி கத்துவார். பின்னர் கடுப்பேத்துறான் யுவர் ஆனர் என்று பேசுவார். இந்த வசம் ரொம்ப பாப்புலர்.

இப்போது இந்த வசனத்தையே தலைப்பாக்கி கேப்டன் டிவியில் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றனர். கடுப்பேத்துறாங்க யுவர் ஆனர் என்பது இந்த நிகழ்ச்சியின் பெயராம்.

ஞாயிறுதோறும் மாலை 5.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மக்களோடு கலந்து இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறார்கள் -காமெடி கலந்து.

நிகழ்ச்சி எப்படி இருக்கோ இல்லையோ, விஜயகாந்த் டிவியில், வடிவேலு பட வசனத் தலைப்பு என்பதே ஒரு நியூஸ்தான்!
 

அவரவர் தாய்மொழியில் பேசி கோச்சடையான் குழுவை அசத்தும் ரஜினி

Rajini Surprises Kochadaiyan Team
சூப்பர் ரஜினிகாந்த் கோச்சடையான் குழுவில் பணிபுரிபவர்களுடன் அவரவர் தாய் மொழியில் பேசி அசத்துகிறாராம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகை தீபிகா நடித்து வரும் படம் கோச்சடையான். முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கேரளாவிலும் முடிந்த நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக கோச்சடையான் படக்குழு நேற்று தான் ஹாங்காங் புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் படக்குழுவில் பல்வேறு மொழி பேசுபவர்கள் இடம் பெற்றுள்ளனர். நம்ம சூப்பர் ஸ்டாருக்கு தான் பல மொழிகள் தெரியும் அல்லவா.

அதனால் படக்குழுவினருடன் பேசுகையில் அவரவர் தாய் மொழியில் பேசி அசத்துகிறாராம். இது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளதாம். உதாரணமாக இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப்புடன் பேசுகையில் இந்தியிலும், தீபிகாவுடன் கன்னடத்திலும் பேசுகிறாராம்.

தீபிகா இந்தியில் நடித்தாலும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பணக்காரன் படத்தில் ரஜினி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல்வேறு வில்லன்களுடன் பேசி பேசி அசத்தியது போல் நிஜத்திலும் பல மொழிகளில் பேசி அசத்துகிறார்.
 

தெலுங்கில் முதல் ஹிட் கொடுத்த ஸ்ருதி ஹாசன்

Shruti Hassan Breaks Flop Jinx    | கப்பார் சிங்  
தெலுங்கில் கப்பார் சிங் மூலம் ஸ்ருதி ஹாசன் முதன் முதலாக ஹிட் கொடுத்துள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் தெலுங்கில் சித்தார்த்துடன் சேர்ந்து அனகனகா ஒக்க தீருடு மற்றும் ஓ மை பிரண்ட் ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் இரண்டுமே ஓடவில்லை. இதையடுத்து ஆந்திராவில் ஸ்ருதியின் மார்க்கெட் இறங்கியது. இந்நிலையில் பவன் கல்யாணுடன் சேர்ந்து அவர் நடித்துள்ள கப்பார் சிங் கடந்த 11ம் தேதி ரிலீஸ் ஆனது.

வழக்கமாக ஸ்ருதி படம் ஊத்திக்கும் என்று நினைத்தவர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. காரணம் படம் ரிலீசான முதல் நாளில் ஆந்திராவில் மட்டும் ரூ. 8 கோடி 25 லட்சம் வசூலாகி புதிய சாதனை படைத்துள்ளது. படம் சூப்பர், டூப்பர் ஹிட்டாகிவிட்டது.

இதனால் ஸ்ருதி ராசியில்லாத நடிகை என்று கூறியவர்கள் இனியும் அதைத் தொடர முடியாது. இந்த படத்தின் வெற்றி மூலம் ஸ்ருதி தான் ராசியானவள் என்பதை நிரூபித்துவிட்டார்.

இந்த கப்பார் சிங் வேறு யாருமில்லை இந்தியில் சல்மான், சோனாக்ஷி சின்ஹா நடித்த தபாங் படத்தின் ரீமேக் தான். எது எப்படியோ, தபாங் எப்படி சோனாக்ஷிக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்ததோ அதேபோன்று ஸ்ருதிக்கும் டோலிவுட்டில் பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது.

வாழ்த்துக்கள் ஸ்ருதி...
 

கத்ரீனாவுக்கு போஸ் கொடுக்கவே தெரியல: கரண் ஜோஹார்

Karan Johar Takes Dig At Katrina Kaif   
பாலிவுட் நடிகை க்தீரானா கைப்புக்கு போட்டோவுக்கு போஸ் கொடுக்கவே தெரியவில்லை என்று இந்தி இயக்குனர் கரண் ஜோஹார் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹாருக்கும், நடிகை கத்ரீனா கைபுக்கும் என்ன லடாய் என்று தெரியவில்லை. பத்திரிக்கை அட்டைப் படங்களுக்கு எப்படி போஸ் கொடுப்பது என்றே கத்ரீனாவுக்கு தெரியவில்லை என்று கரண் தெரிவித்துள்ளார்.

எந்த பத்திரிக்கையாக இருந்தாலும் சரி, எந்த பின்னணியில் நின்றாலும் சரி கத்ரீனா எப்பொழுதுமே ஒரே மாதிரியான போஸ் தான் கொடுக்கிறார். அவருக்கு போட்டோவுக்கு போஸ் கொடுக்கவே தெரியவில்லை என்று கரண் ஒரு பார்ட்டியில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

கத்ரினாவை குறை கூறியதோடு அல்லாமல் அவர் எப்படி போஸ் கொடுப்பார் என்றும் செய்து காட்டியுள்ளாராம் கரண்.

கரண் சொல்வதும் உண்மை தான். எந்த பத்திரி்க்கையானாலும் லூஸ் ஹேரில் ஒரே மாதிரியான போஸ் தான் கொடுக்கிறார் கத்ரீனா. கொஞ்சம் போஸையும், ஹேர் ஸ்டைலையும் மாற்றினால் நன்றாகத் தான் இருக்கும்.
 

சினிமாவிலிருந்து டிவி சீரியலுக்குத் தாவினார் திவ்ய பத்மினி!

Divya Padmini Enters Into Tv
சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி மூன்றே மூன்று படங்களில் மட்டுமே நடித்தவரான திவ்ய பத்மினி இப்போது சினிமா வாய்ப்புகள் வராமல் போனதால் டிவி பக்கம் வந்து விட்டார். பிள்ளை நிலா என்ற சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

2011ல் வெளியான புலிவேஷம் படம் மூலம் தமிழுக்கு வந்த மலையாள நடிகைதான் திவ்ய பத்மினி. ஆர்.கேவுடன் இணைந்து நடித்த இப்படம் ஓரளவுக்கு நன்றாகவே ஓடியது. இதையடுத்து திவ்ய பத்மினிக்கு அய்யன், விளையாட வா என இரண்டு புதிய படங்கள் கிடைத்தன.

தமிழுக்கு வருவதற்கு முன்பு மலையாளத்தில் சில படங்களில் நடித்திருந்த திவ்ய பத்மினி, தமிழில் தொடர்ந்து நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. காரணம் வாய்ப்பு குறைந்து போனதே. இதற்காக அதீத கவர்ச்சி, பார்ட்டி என எதிலும் இறங்காமல் அதிரடியாக டிவி பக்கம் வந்து விட்டார் திவ்ய பத்மினி.

பிள்ளை நிலா என்ற புத்தம் புதிய டிவி சீரியலில் இவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் திவ்ய பத்மினி. சன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்தப் புதிய தொடரில் ஒரு குழந்தைதான் நாயகியாக நடிக்கிறது. அதாவது கதையின் முக்கியப் பாத்திரமே இந்தக் குழந்தைதான். இதை பின்னணியாக வைத்து மோதிக் கொள்ளும் இரு பெண்களின் கதைதான் பிள்ளை நிலாவாம். இரண்டு பெண்களில் ஒருவராக திவ்ய பத்மினி நடிக்கிறாராம்.

சினிமாவில் நடித்திருந்தால் குறைந்தபட்ச ரசிகர்களையே திவ்ய பத்மினியால் கவர்ந்திருக்க முடியும். ஆனால் அதிரடியாக டிவி சீரியலுக்கு வந்திருப்பதால், கண்களை சற்றே அழுத்திப் பிழிந்து அழுது வைத்தால் லட்சோபம் லட்சம் பெண்களின் ஆதரவைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் திவ்ய பத்மினி ரொம்ப டேக்டிக்கலாகத்தான் டிவி பெட்டிக்குள் புகுந்துள்ளார் என்று நம்பலாம்..!
 

எடையைக் குறைக்க அமெரிக்கா பறந்த ஹன்சிகா

Hansika Motwani Is On Weight Loss Battle   
நடிகை ஹன்சிகா உடல் எடையைக் குறைக்க அமெரிக்கா சென்றுள்ளாராம்.

கோலிவுட், டோலிவுட்டில் பெரிய நடிகர்களுடன் நடித்துள்ளவர் ஹன்சிகா. தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் அவர் நடித்த ஓ.கே. ஓ.கே. ஹிட்டானதையடுத்து அவருக்கு கோலிவுட்டில் மவுசு அதிகமாகிவிட்டது. சிம்புவுடன் 2 படங்கள், சூர்யாவுடன் சிங்கம் 2 என பிசியாகிவிட்டார்.

சரி நம்ம மேட்டருக்கு வருவோம். ஹன்சிகாவைப் பற்றி பேச்சு எடுத்தாலே ஓ, அந்த கொழுக், மொழுக் நடிகை தானே என்று கூறுவது வழக்கமாகிவிட்டது. மற்ற ஹீரோயின்கள் எல்லாம் உடலை சிக்கென்று வைக்க இவர் மட்டும் கொஞ்சம் வெயிட்டாகத் தான் இருக்கிறார். இந்நிலையில் யார், என்ன சொன்னார்களோ தெரியவில்லை கோலிவுட்டின் கனவுக் கன்னி என்று பெயர் வாங்கிய அவர் பிளைட்டைப் பிடித்து அமெரிக்கா சென்றுவிட்டாராம்.

அங்கு உடல் எடையைக் குறைத்து சிலிம்மான பிறகு நாடு திரும்புவாராம். உடம்பைக் குறைப்பது நல்ல ஐடியா தான் ஆனால் அதற்கு எதற்கு அமெரிக்கா செல்ல வேண்டும். இங்கில்லாத வசதியா என்ன.

அதென்ன நடிகைகள் எல்லாம் உடம்பைக் குறைக்கணும் என்றாலே அமெரிக்கா பறந்துவிடுகிறார்கள்.
 

கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு மகளுடன் செல்லும் ஐஸ்

Will Aishwarya Rai Be At Cannes With Baby Aradhya
கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா தனது மகள் ஆரத்யாவுடன் கலந்துகொள்கிறார் என்று கூறப்படுகிறது.

கேன்ஸ் திரைப்பட விழா வரும் 16ம் தேதி பிரான்சில் துவங்குகிறது. இதி்ல் பிரசவத்திற்கு பிறகு கேமராக்களில் இருந்து ஒதுங்கி இருக்கும் ஐஸ்வர்யா ராய் இதுவரை உலகின் பார்வைக்கு காட்டாமல் வைத்திருக்கும் தனது 6 மாத குழந்தை ஆரத்யாவுடன் கலந்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த விழாவில் 4 இந்திய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. அதில் மூன்று படங்கள் இந்தி இயக்குனர் அனுராக் கஷ்யப்புடையது. பிரபல அழகு சாதன பொருட்கள் விற்கும் நிறுவனமான லாரியலின் பிராண்ட் அம்பாசிடராக ஐஸ்வர்யா இந்த விழாவில் கலந்து கொள்கிறார். அவர் கேன்ஸ் விழாவில் கலந்துகொள்வது இது 11வது முறையாகும்.

மேலும் அதே லாரியலின் இன்னொரு பிராண்ட் அம்பாசிடரான சோனம் கபூரும் கேன்ஸ் விழாவில் கலந்துகொள்கிறார். இவர்கள் தவிர பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பல், அவரது மனைவி மெஹர் ஜெசியா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

பிரசவத்திற்கு பிறகு ஓவர் வெயிட் போட்டுவிட்டார் என்று கூறப்படும் ஐஸ் கலந்து கொள்ளும் முதல் விழா இது. ஒவ்வொரு முறை கேன்ஸ் விழாவில் கலந்துகொள்ளும்போதும் அவரது உடை மற்றும் சிகை அலங்காரம் சரியில்லை என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகின்றன. இந்த முறையாவது ஐஸ் நச்சுன்னு வருவாரா?
 

தீபா ஷாவிடம் மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை: ஓவியா காட்டம்

I Didn T Appologise Deepa Oviya   
தீபா ஷாவிடம் நான் ஒன்றும் மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

சில்லுன்னு ஒரு சந்திப்பு ஷூட்டிங் மாதவரத்தில் நடந்தபோது கேரவனுக்குள் படத்தின் நடிகைகளில் ஒருவரான ஓவியா செய்தியாளருக்கு பேட்டி கொடுக்கையில் இன்னொரு நடிகையான தீபா ஷா தனது செல்போனில் சத்தமாகப் பேசியுள்ளார். இதையடுத்து ஓவியா கொஞ்சம் மெதுவாக பேசுங்கள் என்று கூற தீபா ஷா டென்ஷனாகி வெளிநடப்பு செய்துவிட்டார். பின்னர் சமாதானம் செய்து அழைத்து வந்தார்களாம்.

இந்நிலையில் தீபா ஷாவிடம் ஓவியா மன்னிப்பு கேட்டதாக செய்தி வெளியானது. இது ஓவியாவின் காதுகளுக்கு எட்டவே உடனே அவர் பிரபல பத்திரிக்கை ஒன்றை தொடர்பு கொண்டு கூறுகையில்,

கேரவனுக்குள் நான் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கையில் தீபா செல்போனில் சத்தம் போட்டு பேசியதால் பேட்டிக்கு இடையூறாக இருந்தது. அதனால் தான் மெதுவாக பேசச் சொன்னோம். அவர் என்னவென்றால் பெரிய பிரச்சனையை கிளப்பிவிட்டு என் மேனேஜர் அவரை தாக்க முயன்றதாகக் கூறி ஷூட்டிங்கை விட்டே வெளியேறினார்.

அதன் பிறகு தயாரிப்பாளர் அவரை மீண்டும் ஷூட்டிங்கிற்கு வருமாறு அழைத்த பிறகே திரும்பி வந்தார். ஆனால் அவரிடம் நான் மன்னிப்பு கேட்டதாக அவர் கூறுவதில் உண்மையில்லை. அவர் ஒரு விளம்பரப் பிரியை என்று எனக்கு தெரியாது என்றார்.

அடடா ஓவியாவை இப்படி டென்ஷனாக விட்டுவிட்டார்களே...
 

சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்: இந்த ஆண்டே கல்யாணம்

Chaya Singh Get Married This Year   
நடிகை சாயா சிங் ஒரு வழியாக திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணமாம்.

திருடா திருடி மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் நடிகை சாயாசிங். அந்த படத்தில் வந்த மன்மத ராசா பாட்டுக்கு அவர் போட்ட ஆட்டத்தால் தமிழகம் முழுவதம் பிரபலமானார். அதன் பிறகு நிறைய படங்களில் நடித்தார். ஆனால் எதுவும் சரியாக ஓடவில்லை.

கடைசியாக அவர் நடித்த தமிழ்ப் படம் அனந்தபுரத்து வீடு. இந்தப் படமும் தோல்வியடைந்தது. இதையடுத்து படங்களில் பெரிய அளவுக்கு வாய்ப்பு வராததால் பெரிய திரையில் இருந்து சின்னத் திரைக்கு தாவினார். இயக்கத்திலும் ஆர்வம் காட்டினார்.

இந்நிலையில் அவர் திருமணத்திற்கு சம்மதம் கொடுத்துவிட்டாராம். பல நாட்களாகவே அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது பெற்றோர் கூறி வந்துள்ளனர். இந்தா அந்தா என்று தள்ளிப் போட்டவர் ஒரு வழியாக சரி திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளாராம்.

மகள் ஓ.கே. சொன்ன கையோடு மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை அவர பெற்றோர் துவங்குகிறார்கள். எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடக்கும் என்று சாயா தெரிவித்துள்ளார்.

அப்படின்னா இந்நேரம் மாப்பிள்ளையைத் தேடிக் கொண்டிருப்பார்களே....
 

நயன்தாராவின் தந்தைக்கு 'பிபி' ஏறியது.. மருத்துவமனையில் அனுமதி!

Nayanthara Dad Is Hospitalised   
நடிகை நயன்தாராவின் தந்தை உடல் நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகை நயன்தாராவின் தந்தையின் உடல் நலம் மோசமானதையடுத்து அவரை திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவரின் நிலை தற்போது மேலும் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை செய்து வருகிறார்களாம்.

இதையடுத்து நயன் அப்பாவுக்கு உதவியாக மருத்துவமனையில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. நயனதாராவின் தந்தைக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம். இதனால்தான் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனராம்.

பிரபுதேவாவுடனான உறவு முறிந்து தற்போது தான் அவர் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். ஒரு புறம் நயன் படங்களில் பிசியாக இருக்க மறுபுறம் பிரபுதேவா இந்தி படமான ரவுடி ரத்தோரை இயக்குவதில் பிசியாக இருக்கிறார்.

தல அஜீத்துடன் நயன் நடிக்கும் விஷ்ணுவர்தன் படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் மும்பையில் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.