மைக் டைசன் மனைவியுடன் படுக்கையில் சிக்கிய பிராட் பிட்

Brad Pitt Was Caught Red Handed Sle

நியூயார்க்: ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசனின் மனைவியுடன் படுக்கையில் இருக்கும்போது கையும், களவுமாக சிக்கியுள்ளார்.

ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் நடிகை ஜெனிபர் ஆனிஸ்டனை திருமணம் செய்தார். ஆனால் நடிகை ஏஞ்சலினா ஜூலியுடன் தொடர்பு ஏற்பட்டதால் மனைவியைப் பிரிந்தார். தற்போது ஜூலியை மணக்காமலேயே அவருடன் குடும்பம் நடத்தி குழந்தைகள் பெற்றுள்ளார்.

இந்நிலையில் பிராட் பிட் பற்றி முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் கூறுகையில்,

1980களில் எனது முன்னாள் மனைவியுடன் படுக்கையில் இருந்தபோது பிராட் பிட் என்னிடம் சிக்கினார். அவர் என்னைப் பார்த்தும் வெளவெளத்துப் போனார். அப்போது அவரது முகத்தைப் பார்க்க வேண்டுமே என்றார்.

பிராட் பிட் சிக்கியபோது டைசன் தனது மனைவி ராபின் கிவன்ஸை விவாகரத்து செய்திருந்தபோதிலும் அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

 

டிராகுலா... 118 வயது மகள்.. மனித காதல்.. - வயிறுகுலுங்க வைக்கும் ஹாலிவுட் ஸ்பெஷல்

பெரிய நட்சத்திரங்கள் இல்லை, மாறுபட்ட லொக்கேஷன்கள் இல்லை, பறந்து பறந்து ஸ்டன் அடிக்கும் காட்சிகள் இல்லை.

hotel transylvania rocks worldwide
இப்படி பல இல்லைகள் கொண்டு ஒரு படம் உருவாக, பெரிய ஸ்டார் பட்ஜெட் படங்களின் வசூலையெல்லாம் தூக்கிக் சாப்பிட்டு விட்டது ஒரு ஹாலிவுட் படம் என்றால் நம்ப முடியவில்லை அல்லவா... ஆனால் இது நிஜம். அந்தப்படம் 'ஹோட்டல் ட்ரான்சில்வேனியா' (Hotel Transylvania). இது குழந்தைகளுக்கான ஒரு 3டி அனிமேஷன் படம்.

முழுக்க சோனி பிக்சர்ஸ் அனிமேஷன் கற்பனையில் வடிவமைப்பில் உருவான படம். இயக்கியுள்ளவர் கெண்டி தார்த்தா கோவ்ஸ்கி (Genndy tartakousky).

ட்ராகுலா என்றால் ரத்தம், பீதி, மனிதர்களை கொல்வது என்று இதுவரை பயமுறுத்தியே வந்திருக்கிறார்கள். ஆனால் இந்த டிராகுலா மூலம் வயிறு வலிக்க சிரிக்க வைத்திருக்கிறார்கள். அதுவும் குழந்தைகளை கவர முடியும் நிரூபித்துள்ளனர்.

'ஹோட்டல் ட்ரான்சில்வேனியா' அனிமேஷன் பாத்திரங்களுக்கு ஆடம் சாண்ட்லர், ஆன்டி சம்பெர்க், ஜெயின் ஜெம்ஸ் போன்ற நட்சத்திரங்கள் குரல் கொடுத்துள்ளனர்.

கதை இதுதான்..

டிராகுலா ஒரு தங்கும் விடுதி கட்டி வைத்துள்ளது. அதன் வடிவமைப்பும் உரிமையும் அதற்கே சொந்தம். ஐந்து நட்சத்திர தகுதி கொண்ட ஹோட்டல் போன்று அனைத்து வசதிகளும் கொண்டது. மனித சஞ்சரமற்ற இடத்தில் அதை அமைந்துள்ளது. தன்னைப் போல டிராக்குலாக்கள், பூதங்கள் அங்கு வந்து தங்கிக் கொள்ளலாம் என்பதற்காக இந்த ஏற்பாடு.

ஒரு வார இறுதியில் தன் மகள் மேவிஸ்ஸின் 118வது பிறந்த நாளை பிரமாண்டமாகக் கொண்டாட நினைக்கும் டிராகுலா, தன் நண்பர்களை அழைக்கிறது. மம்மி, இன்விசியின்மேன் போன்ற பூத கணங்கள் தங்கள் துணையுடன் அங்கு வருகின்றன. பிரமாண்டமானவர்கள் பயங்கரமானவர்கள் கூட்டம் கூடுகிறது. ஆனால் சில எதிர்பாரதவை நடக்கின்றன.

டிராகுலாவுக்கு மனித சஞ்சரம் பிடிக்காது. அதுபோல் காதலும் பிடிக்காது. இவை இரண்டின் நிழல் இல்லாமல் தன் மகள் மேவியை 118 வயது வரை வளர்த்து விட்டது. ஆனால் அவ்வளவு பாதுகாப்பையும் கடந்து அந்த இரண்டும் யதேச்சையாக அங்கே நுழைந்து விடுகின்றன.

மகளை காப்பாற்ற டிராகுலா படும்பாடு நகைச்சுவை ரணகளம். இப்படி முழுக்க சிரிக்க வைக்கும்படி உருவான இந்தப்படம் வசூலான படங்களின் வசூலை அசைத்து முதலிடம் பெற்று பெற்று முந்தியுள்ளது என்றால் பாருங்களேன்.

செப்டம்பர் 28ல் வெளியாகி அடுத்த இரண்டு நாட்களில் வசூலில் பிற படங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டது. நவம்பர் 25 வரையிலான வசூல் 291 455 525 டாலர்கள். அதாவது 85 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட படம் குறுகிய காலத்தில் 291 மில்லியன் டாலர்களை அள்ளியிருக்கிறது (பாத்துப்பா... துப்பாக்கிகாரங்க ஒத்துக்க மாட்டாங்க!).

இந்த அதிரடி வசூலையடுத்து இதன் அடுத்த பாகத்தை 2015ல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளனர்.

 

அஜீத் என்னை அழைக்க மாட்டாரா என்று தான் காத்திருக்கிறேன்: கௌதம் மேனன்

I am waitin for Ajith's calling: vasudev menon அஜீத் குமார் தன்னை வைத்து படம் எடுக்குமாறு அழைக்க மாட்டாரா என்று தான் காத்துக் கொண்டிருப்பதாக இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

அஜீத் குமாரை வைத்து படம் எடுக்க பல இயக்குனர்கள் ஆர்வமாக உள்ளனர்.
காக்க காக்க படத்தில் நடிக்குமாறு இயக்குனர் கௌதம் மேனன் முதலில் அஜீத் குமாரைத் தான் அணுகியுள்ளார். ஆனால் என்ன நடந்ததோ அதில் சூர்யா நடித்தார்

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை முடித்த பிறகு கௌதம் அஜீத் அணுகி துப்பறியும் ஆனந்த் என்ற படத்தில் நடிக்குமாறு கேட்டார். ஆனால் அஜீத் ஒப்புக்கொள்ளாததால் துப்பறியும் ஆனந்த் மங்காத்தாவாக மாற்றப்பட்டு அதை வெங்கட் பிரபு இயக்கினார்.

ஒவ்வொரு முறையும் அஜீத்தை அணுகி ஏமாற்றம் அடைந்த கௌதம் மேனன் கடுப்பாகிவிட்டார். அஜீத்துக்காக எல்லாம் என்னால் காத்திருக்க முடியாது. அவர் இல்லாமலேயே ஹிட் படம் கொடுப்பேன் என்று தெரிவித்தார்.

அஜீத்-கௌதம் மேனன் ராசியாகிவிட்டார்கள் போன்று. அவர் என்னை அழைக்க மாட்டாரா என்று தான் காத்திருக்கிறேன். அவர் மட்டும் சொன்னால் உடனே அவருக்காக ஒரு படம் எடுப்பேன் என்று கூறியிருக்கிறார் கௌதம் மேனன். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் அஜீத்தை சந்தித்தபோது தன்னைப் பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுள்ளாராம் கௌதம். அஜீத்தும் அதை எல்லாம் விடுங்க பாஸ் என்று கூலாக சொல்லிவிட்டாராம்.
 

பிறந்தநாள்.. ரூ.16 கோடிக்கு மது வாங்கிய டைட்டானிக் ஹீரோ டிகேப்ரியோ

Leonardo Dicaprio Spent 3 Mn On Alcohal

நியூயார்க்: ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகேப்ரியோ தனது பிறந்தநாளையொட்டி மது விருந்து அளித்துள்ளார். அந்த விருந்திற்காக அவர் ரூ.16 கோடிக்கு மது வாங்கியுள்ளார்.

ஹாலிவுட் படமான டைட்டானிக் மூலம் உலகப் புகழ்பெற்றவர் நடிகர் லியோனார்டோ டிகேப்ரியோ. அதன் பிறகு அவர் ஹாலிவுட்டில் படிப்படியாக வளர்ந்து தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார். கேப்ரியோ கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

பிறந்தநாள் என்றால் பார்ட்டி இல்லாமலா அதுவும் அதிகம் சம்பாதிக்கும் நடிகராச்சே. நியூயார்க்கில் தனது நண்பர்களுக்கு மது விருந்து அளித்துள்ளார். விருந்துக்கு வந்தவர்களுக்கு கொடுக்க அவர் ரூ.163,846,592 செலவு செய்து மதுபானங்கள் வாங்கியுள்ளார்.

அடப்பாவமே மதுவுக்கு ரூ.16 கோடி செலவா என்று நினைக்கிறீர்களா. ஆனால் அவரோ அந்த பார்ட்டியை சாண்டி புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ ரெட் கிராஸுக்கு பணம் திரட்டும் நிகழ்ச்சியாகவும் ஆக்கிவிட்டார். இந்த மெகா பார்ட்டியில் பாப் பாடகி பியான்ஸே, அவரது கணவர், நடிகர் ராபர்ட் டி நிரோ மற்றும் நடிகை காமரூன் டயஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

போதும் நடிப்பு... ஒதுங்கும் ஏஞ்சலினா ஜுலி!

angelina jolie may quit acting her children   
நடிப்புக்கு குட்பை சொல்லும் மூடுக்கு வந்துவிட்டார் ஹாலிவுட்டின் முன்னணி நாயகி ஏஞ்சலினா ஜுலி.

37 வயதாகும் ஏஞ்சலினா ஜூலி, 6 குழந்தைகளின் தாய். இருங்க... இந்த 6 குழந்தைகளும் அவர் பெற்றவை அல்ல... தத்துப் பிள்ளைகள். ஜூலிக்கு இன்னும் திருமணமாகாவிட்டாலும், அவர் பிரபல நடிகர் பிராட் பிட்டுடன் சேர்ந்து வாழ்கிறார்.

இந்த நிலையில், இவர் சினிமாவுக்கு முழுக்குபோட திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை அவரே தெரிவித்துள்ளார்.

குழந்தைகளை வளர்க்க போதிய நேரமின்மையால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "சினிமாவை விட்டு விலகி குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க விரும்புகிறேன். அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவேன். ஏனெனில் விவரம் தெரிந்த பிறகு அவர்கள் தங்கள் தேவையை தாங்களே பூர்த்தி செய்து கொள்வார்கள். இந்த முடிவை நாளையே எடுத்தாலும் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்," என்றார்.

தனது பார்ட்னர் பிராட் பிட்டுடன் இன்னும் இது பற்றி விவாதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

சிம்புவுடன் ரூமுக்குள்ளிருந்து வந்தாரா லேகா வாஷிங்டன்??

Lekha Refutes Rumour On Her Links W   

சென்னை: ஹோட்டல் அறையிலிருந்து சிம்புவுடன் à®'ன்றாக வெளியே வந்தார் லேகா வாஷிங்டன்... இதுதான் லேட்டஸ்ட் வதந்தி. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் லேகா.

லேகா வாஷிங்டன் அதிக அளவில் படங்களில் நடிப்பதில்லை. ரொம்ப செல்க்ட் செய்தே நடிக்கிறார். விளம்பர் படங்களில்தான் தற்போது அதிக அளவில் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் விரைவில் அவர் சிம்புவுடன் à®'ரு படத்தில் இணைவதாக செய்திகள் வெளியாகின. மேலும் லேகா இயக்கும் குறும்படத்தில் சிம்புவும் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் கூறின.

அதை விட பரபரப்பானது, லேகாவும் சிம்புவும் à®'ரு ஹோட்டலில் தங்கியதாகவும், அறைக்குள்ளிருந்து இருவரும் ஜோடியாக வெளியே வந்ததாகவும் வந்த கிசுகிசுதான். ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் லேகா.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது இயக்கத்தில் உருவாகும் குறும்படத்தில் சிம்பு நடிக்கப் போவதாக சமீபத்தில் à®'ரு நியூஸ் வந்தது. அதேபோல நானும், சிம்புவும் ஹோட்டல் அறையிலிருந்து வெளியே வந்ததாகவும் இன்னொரு செய்தி வெளியானது. இரண்டுமே பொய்யானது, தவறானது.

நான் குறும்படம் எதுவும் இயக்கவில்லை. எந்த ஹோட்டல் அறையிலிருந்தும் சிம்புவுடன் நான் வெளியே வரவில்லை. இதை எனது இணைய தள பக்கத்திலும் தெளிவுபடுத்தி இருந்தேன்.

கெட்டவன் படத்தில் சிம்புவுடன் நடிப்பதாக இருந்தது. அந்த படம் நின்றுவிட்டது. அப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று நான் கூறவில்லை. இது பற்றி பத்திரிகைகளில் தவறாக செய்தி வந்தது. சிம்பு எனக்கு நண்பர். நேரில் பார்க்கும்போது பேசிக்கொள்வோம். அவ்வளவுதான் என்றார் லேகா.

 

விஸ்வரூபம் பிஸினெஸ்.... கமலின் அதிரவைக்கும் முடிவு.. தியேட்டர்காரர்கள் ரெட்கார்ட் பிளான்?

Kamal New Decision On Viswaroopam Release Shocks   

சென்னை: ஹாலிவுட் தயாரிப்பாளரே வியந்து பாராட்டி, ஆங்கிலப் பட வாய்ப்பை கமலுக்கு வழங்கியதாக சொல்லப்படும் விஸ்வரூபம் படம் குறித்து சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல் à®'ட்டு மொத்த திரையுலகையும் அதிரவைத்துள்ளது.

திரையரங்கு உரிமையாளர்கள் கமல் படத்துக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளனர் என்று செய்தி வெளியாகும் அளவுக்குப் போய்விட்டது நிலைமை.

என்ன பிரச்சினை...?

விஸ்வரூபம் படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடிக்கு மேல் என்று கமல் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் இந்தப் பெரும் தொகை கொடுத்து தமிழில் வாங்கி வெளியிட யாரும் தயாராக இல்லை.

சமீபத்தில் à®'ரு பெரிய தயாரிப்பாளர் கமலின் இந்தப் படத்துக்கு ரூ 40 கோடி வரை தமிழக உரிமைக்கு விலை தருவதாகக் கூறியுள்ளார்.

கமலும் அதற்கு à®'ப்புக் கொண்டாராம். ஆனால் அதற்கடுத்து அவர் சொன்னதுதான் தயாரிப்பாளரைத் தூக்கி வாரிப்போட வைத்ததாம்.

அதாவது படத்தை à®'ரே நேரத்தில் டிவி சேனல்களிலும் வெளியிடுவதாகத் திட்டமாம். மேலும் டிவிடி உரிமையையும் கொடுத்துவிடப் போவதாகக் கூறினாராம் கமல்.

இதைத் தொடர்ந்து மிகுந்த அதிர்ச்சியுடன் தனது பேரத்தை முடித்துக் கொண்டாராம் தயாரிப்பாளர். விஷயத்தைக் கேள்விப்பட்ட தியேட்டர்காரர்களோ, கமல் இந்த முடிவில் உறுதியாக இருந்தால், அவர் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்களாம்...

திருட்டு டிவிடியைத் தடுக்க à®'ரே நேரத்தில் திரையரங்குகளிலும், டிவி சேனல்களிலும் வெளியிட வேண்டும், டிவிடி, இன்டெர்நெட் à®'ளிபரப்பு உரிமை தர வேண்டும் என்பது கமல் நீண்ட நாட்களாகச் சொல்லி வரும் விஷயம். எதிர்ப்புகளை மீறி தன் முடிவை நடைமுறைப்படுத்துவாரா கமல்?

பார்க்கலாம்!

 

பட்ட அடி மறந்து, மீண்டும் படம் தயாரிக்க வருகிறது ஐங்கரன்!

Aingaran Restart Enter Film Production

வில்லு, ஏகன், சர்வம் என பெரும் தோல்விப் படங்களைத் தயாரித்த புகழுக்குரிய ஐங்கரன் நிறுவனம், மீண்டும் படம் தயாரிக்க வருகிறதாம்.

இந்த முறை சூர்யா - கவுதம் மேனன் கூட்டணியில் புதிய படத்தைத் தயாரிக்கப் போகிறதாம்.

இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா தற்போது ‘சிங்கம் 2' படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். அந்தப் படத்திற்கு பிறகு லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். அதன்பிறகு கௌதம்மேனன் இயக்கும் படத்தில் இணைவார் என தெரிகிறது.

ஏற்கெனவே துப்பறியும் ஆனந்தன் என்ற தலைப்பில் இருவரும் படம் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர். இந்தப் படத்தை கவுதம் மேனனின் போட்டான் கதாஸ் தயாரிக்கும் என கூறப்பட்டது.

இப்போது ஐங்கரன் தயாரிக்கப் போவது துப்பறியும் ஆனந்தனையா அல்லது புதிய படத்தையா என்பது கவுதம் மேனன் சொன்னால்தான் உண்டு.

ஐங்கரன் நிறுவனம் புதிய படம் தயாரிப்பது இருக்கட்டும், ஏற்கெனவே தயாரித்த பெட்டியில் தூங்கும் களவாடிய பொழுதுகள் என்னாச்சு?

 

மன அழுத்தத்திற்கு என்ன மருந்து?: 'நீயா நானாவில்' சூடான விவாதம்…

Neeya Naana Discussion About Stress

உயர்ந்து கொண்டே போகும் நகை விலை பெண் குழந்தையை பெற்றவர்களுக்கு அச்சத்தையும் மனஅழுத்தத்தை தருகிறது. 20 ஆண்டுகள் பார்த்த வேலை போன உடன் வேறு வேலை கிடைக்கவில்லையே என்பது ஆணுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இன்றைக்கு உலகம் முழுவதும் ஸ்ட்ரெஸ் எனப்படும் உளரீதியான நோயில் சிக்கி உழன்று வருகின்றனர். இந்த மனஉளைச்சல் இதயநோய், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உருவாக காரணமாகிவிடுகிறது.

சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை மனஉளைச்சலில் சிக்கித் தவிக்கும் இன்றைய சூழலில் மனஅழுத்தம் எதனால் ஏற்படுகிறது என்பதைப்பற்றியும், அதைத்தீர்க்க என்ன செய்யலாம் என்பது பற்றியும் விஜய் டிவியின் ‘நீயா நானா' நிகழ்ச்சியில் விவாதித்தனர்.

உளவியல் சிக்கல்

இந்தியாவில் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ளனர். அதற்காக சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள் இல்லை.

எதற்கும் பொறுமை இல்லை. காத்திருப்பதில் கூட கஷ்டம் இருக்கிறது,

எங்கே எதற்காக மனஅழுத்தம் ஏற்படுகிறது என்பது பற்றி நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.

பெண்கள் உலகத்தில் எதற்கெல்லாம் மனஅழுத்தம் ஏற்படுகிறது என்றும், ஆண்கள் உலகத்தில் எதற்கெல்லாம் மனஅழுத்தம் ஏற்படுகிறது என்றும் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

பெண்களின் உலகில் மனஅழுத்தம்

காலையில் அலுவலகம் செல்லும் முன் பரபரப்பாக வேலையை செய்யவேண்டுமே என்பதில் தொடங்குகிறது மனஅழுத்தம். பொருளாதாரா ரீதியாக சிக்கல் எழும்போதும், கடன் சுமை கழுத்தை நெறிக்கும் போதும் மனஅழுத்தம் ஏற்படுகிறது. பிறருடன் à®'ப்பிடும் போதும், நகை இல்லாமல் இருப்பது, சொந்த வீடு இல்லாதது மனஅழுத்தம் ஏற்பட காரணமாகிறது என்று கூறப்பட்டது.

ஆண்களில் உலகில் மனஅழுத்தம்

வேலை சரியாக அமையாவிட்டால் ஆண்களின் உலகத்தில் மனஅழுத்தம் ஏற்படுகிறது. அதேபோல் பார்த்த வேலை போய்விட்டால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மனஅழுத்தத்திற்கு பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த மனஅழுத்தம் தற்கொலைக்கு கூட தூண்டுகிறது என்று கூறினார் à®'ருவர்.

இதற்கு பதிலளித்துப் பேசிய மற்றொருவர், வரவுக்குத் தகுந்த செலவு இருந்தால் போதும் மனஅழுத்தம் ஏற்படாது. நல்லா இருக்கும் போது சிம்பிளாக இருந்தால் ஏற்றத்தாழ்வுகளை சரிசமமாக பார்க்க கற்றுக்கொடுக்க வேண்டும் என்றனர்.

தங்கம் என்பது மனச்சுமை

நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தனர் காசி சிவக்குமார்,

தேவையில்லாத பொருட்களை வாங்குவது மனஅழுத்தம் தருகிறது. நகையைப் பெண்கள் பற்றி நிறைய யோசிக்கின்றனர். பெண்களின் வளையல், கொலுசு இரண்டும் பெண்களுக்கான விலங்கு. இது தெரியாமல் தங்கத்தினால் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்றார். எழுத்துக்கு உரிய அங்கீகாரம் இல்லாதது மனஅழுத்தம் தரும். நம்மை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளவில்லையே என்பது மனவலி. மூர்ச்சையாகப்போகிறது. கவிஞனால் ஜெயிக்க முடியவில்லையே என்ற வலி இலக்கியவாதிகளுக்கு அதிகம் என்றும் கூறினார் காசி. சிவகுமார்.

வரவுக்கு தகுந்த செலவு

உங்களுக்கு கடன் இருக்கும் போது நீங்கள் ஏன் 3 லட்சம் செலவு செய்யவேண்டும் என்று கேள்வி எழுப்பினார் மற்றொரு கவிஞர் வெண்ணிலா. நம்முடைய தகுதிக்கு தகுந்த பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ சேர்த்தால் இந்த மனஅழுத்தத்தினை தவிர்க்கலாம் என்றும் அவர் கூறினார்.

மனஅழுத்தம் போக்கும் அழுகை

மனஅழுத்தத்திற்குக் காரணம் உணர்வுகளை கட்டுப்படுத்துவதுதான். அழுகை என்பது à®'ரு வடிகால். அழுதுவிட்டால் மனஅழுத்தம் ஏற்படாது என்றார் மனநல ஆலோசகர். பிறரின் சிரமங்களைப் பார்த்தால் போதும் பேராசையும் வராது, நமக்கு துன்பங்களும் வராது. நம்முடைய உணர்களை சொல்லாமல் இருப்பதுதான் மனஅழுத்தத்தை தருகிறது என்றும் கூறினார்.

குடும்பம்தான் சிக்கல்களுக்குக் காரணம். அதே குடும்பம்தான் சிக்கல்களை தீர்க்கிறது என்றார் ஞாநி. நம்முடன் இருப்பவர்கள் நம்மை புரிந்து கொண்டவர்களாக இருந்தால் மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும் கூறினார்.

கடனால் மனஅழுத்தம்

சமூகம் உடைந்து போய் இருக்கிறது. சிலரால் மட்டுமே சிறப்பாக வாழ முடிகிறது. பலரால் வாழவே முடியவில்லை. இதனாலேயே பலருக்கும் மனஅழுத்தம் ஏற்படுகிறது. நகையை ஆசை ஆசையாய் வாங்கி அதை போட்டுப் பார்க்க முடியாமல் அது அடகு வைத்திருக்கும் அது மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கடன் சுமை மனஅழுத்தம் தருகிறது. கடன் சுமை என்பது கேன்சரை விட மோசமானது என்று கூறினார் à®'ருவர்.

சமூகத்தின் டிமான்டுகளால்தான் மனஅழுத்தம் ஏற்படுகிறது. எனவே நமக்குக் கிடைத்ததை வைத்து வாழ்க்கையை நகர்த்தினால் மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்று நீயா நானாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் தெரிவித்தனர்.

 

பாட்டெழுதுவது என் வேலையில்லை: இயக்குநர் சீனு ராமசாமி

Writing Lyrics Is Not My Job Says Seenu Ramasamy

நான் கவிஞன்தான்... அதற்காக திரைப்படங்களுக்கு பாட்டெழுவது எனக்குத் தெரியாது.... அது என்வேலையில்லை. அதற்கு என்று சிறப்பாக எழுதுபவர்கள் இருக்கிறார்கள் என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்தார்.

சன் டிவியின் சூரிய வணக்கம் விருந்தினர் பக்கத்தில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் சீனு ராமசாமி, தன்னுடைய நீர்பறவை திரைப்படம் பற்றியும், கவிதை, இலக்கியம், நட்பு வட்டம் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

தன்னுடைய முதல் படமான தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படம் வெளியானபோது தான் பரபரப்பாக இருந்ததாகவும், தன்னைச் சுற்றியிருந்தவர்கள் அமைதியாக இருந்ததாக கூறினார். ஆனால் நீர்பறவை படம் வெளியானபோது நான் அமைதியாக இருந்தேன். என்னைச்சுற்றியிருந்தவர்கள் பரபரப்பாக இருந்தனர் என்றார்.

நீர்பறவை படம் பற்றி அதிகம் பகிர்ந்து கொண்ட சீனு ராமசாமி படத்தில் நடித்த சரண்யா பொன்வண்ணன், நந்திதாதாஸ், சமுத்திரகனி உள்ளிட்ட பலருக்கும் நன்றி தெரிவித்தார். மணிரத்னம் இயக்கும் கடல் படத்திற்கும் நீர்பறவை படத்திற்கும் உள்ள à®'ன்றுமை குறித்து கேள்வி எழுந்த போது அவர் கப்பலில் போய் மீன் பிடிக்கப் போயிருக்கிறார். நான் நாட்டுப்படகில் மீன் பிடித்துக்கொண்டு வந்திருக்கிறேன் என்று அடக்கமாக கூறினார் சீனு ராமசாமி.

பரபரப்பான இயக்குநராக இருந்தாலும் கவிதைத் தொகுப்புகளை வெளியிடுகிறார். நல்ல கவிஞரான நீங்கள் ஏன் உங்கள் படங்களுக்கு பாடல்களை எழுதுவதில்லை என்று கேட்டனர் தொகுப்பாளர்கள். அதற்கு பதிலளித்த சீனு ராமசாமி, நான் டைரி எழுதுவது போலத்தான் கவிதை எழுதுகிறேன். அதற்காக பாட்டெல்லாம் எழுத முடியாது. எனக்கு எழுதவும் தெரியாது. நான் இயக்குநர் வேலையை சிறப்பாக செய்தால் போதும். பாடல்கள் எழுதுவதற்கு என்று சிறப்பான கவிஞர்கள், பாடலாசிரியர்கள் இருக்கின்றனர் என்றார். இனி தன்னுடைய அடுத்ததாக எழுத்தாளர் எஸ். ராமகிருஸ்ணன், எழுத்தாளர் ஜெயமோகன் கதைகளை படமாக்கப்போவதாகவும் கூறினார் சீனு ராமசாமி.

 

மீண்டும் சின்னத் திரைக்கு வருகிறார் சூர்யா!

Surya Appear Small Screen Again

நீங்களும் வெல்லலாம் à®'ரு கோடி என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த நடிகர் சூர்யா, மீண்டும் அதே நிகழ்ச்சியில் அதே டிவியில் தொடர்கிறாராம்.

சூர்யா இப்போது சிங்கம் 2 படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கின்றனர.

இந்தப் படத்துக்குப் பிறகு லிங்குசாமியின் படத்தில் நடிக்க à®'ப்பந்தமாகியுள்ளார். அந்தப் படம் முடிந்த பிறகு படங்களில் நடிக்க சில மாதங்கள் தற்காலிக à®"ய்வு கொடுத்துவிட்டு, கோடிகளை அள்ளித்தரும் டிவி நிகழ்ச்சிக்கு திரும்பப் போகிறாராம். தொடர்ச்சியாக பல எபிசோடுகளை à®'ரே நேரத்தில் முடித்துக் கொடுத்துவிட்டு, கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. படங்களின் ரிசல்ட் மாற்றான் மாதிரி அமைந்துவிட்டால், டிவியில் தோன்றும் முடிவு மாறக்கூடும்!

 

தமிழ் டப்பிங் படங்களுக்கு தடை விதித்தது ஏன்? : கன்னட தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ்

Tamil dubbed films are banned? : Kannada producers Notice தமிழ் உள்ளிட்ட பிறமொழி டப்பிங் படங்களுக்கு தடை விதித்தது ஏன் என்று கன்னட படவுலகுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கர்நாடகாவில் தமிழ் உள்ளிட்ட பிற மொழி படங்களை ரிலீஸ் செய்வதற்கு கடுமையான நிபந்தனைகளை கன்னட திரையுலகினர் வகுத்துள்ளனர். பிறமொழி படங்கள் மற்றும் டிவி சீரியல்களை கன்னடத்தில் டப்பிங் செய்வதற்கு தடை உள்ளது. இதற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பிற மொழி படங்களை தடுப்பதன் மூலம் கர்நாடகாவில் உள்ள ரசிகர்களின் உரிமை மறுக்கப்படுகிறது என்ற கருத்து எழுந்துள்ளது.

இத்தடையை எதிர்த்து கர்நாடக கிரஹகார சங்கம் மற்றும் டப்பிங் மொழி படங்களை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தர் கணேஷ் சேத்தன் ஆகியோர் டெல்லியில் உள்ள காம்பொடிஷன் கமிஷன் ஆப் இந்தியா (சிசிஐ) என்ற அமைப்பிற்கு புகார் அனுப்பி உள்ளனர். சிசிஐ அமைப்பு என்பது மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள அமைப்பாகும். எந்த தொழிலிலும் ஆரோக்கியமான போட்டி உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.

கன்னட படவுலகினரின் தடை குறித்து தரப்பட்டுள்ள புகாரை ஏற்றுக்கொண்ட சிசிஐ, 'பிறமொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்யவோ, ரிலீஸ் செய்யவோ அனுமதிக்காதது ஏன்? என்பதற்கு விளக்கம் கேட்டு கர்நாடக பிலிம் சேம்பருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கர்நாடக தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அமைப்பு, கர்நாடக சலனசித்ர அகாடமி, கர்நாடக டிவி சங்கம் ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
 

ஓட்டல் அறையில் இருந்து சிம்புவுடன் வெளியே வந்தேனா? : லேகா பரபரப்பு பேட்டி

Am I with simbhu? : Lekha ஓட்டல் அறையிலிருந்து சிம்புவுடன் வெளிவந்ததாக பரவிய தகவலை கேட்டு ஷாக் ஆன லேகா வாஷிங்டன், அதற்கு பதில் அளித்தார். ஜெயம் கொண்டான், வகுவாட்டர் கட்டிங் படங்களில் நடித்தவர் லேகா. அவர் கூறியதாவது: கல்யாண சமையல் சாதம் என்ற படத்தில் பிரசன்னாவுடன் நடிக்கிறேன். இப்படத்திற்கான ஒத்திகை இம்மாதம் நடக்க உள்ளது. ஜனவரியில் ஷூட்டிங். நான் கொஞ்சம் வித்தியாசமான நடிகை. ஸ்கிரிப்ட் பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன். இந்தியில் 2 படங்களில் நடித்துள்ளேன். அது இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. 3வது இந்தி பட ஷூட்டிங் தொடங்கிவிட்டேன். படமொன்றுக்கு நான் துணை எழுத்தாளராக பொறுப்பு ஏற்றிருக்கிறேன்.

நான் உருவாக்கும் குறும்படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் சிம்புவுடன் ஒரு ஓட்டல் அறையிலிருந்து நான் வெளியில் வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர். இதில் உண்மை இல்லை. நான் குறும்படம் எதுவும் இயக்கவில்லை. எந்த ஓட்டல் அறையிலிருந்தும் சிம்புவுடன் நான் வெளியே வரவில்லை. இதை எனது இணைய தள பக்கத்திலும் தெளிவுபடுத்தி இருந்தேன். கெட்டவன் படத்தில் சிம்புவுடன் நடிப்பதாக இருந்தது. அந்த படம் நின்றுவிட்டது. அப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று நான் கூறவில்லை. இது பற்றி பத்திரிகைகளில் தவறாக செய்தி வந்தது. சிம்பு எனக்கு நண்பர். நேரில் பார்க்கும்போது பேசிக்கொள்வோம். அவ்வளவுதான். இவ்வாறு லேகா வாஷிங்டன் கூறினார்.
 

ஹீரோயின் ஆனார் குழந்தை நட்சத்திரம்

Child star became a heroine குழந்தை நட்சத்திரமாக நடித்த மனிஷாஜித் ஹீரோயினாக நடிக்கிறார். சஞ்சீவ், வர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படம் 'நண்பர்கள் கவனத்திற்கு. இப்படத்தை கே.ஜெயகுமார் இயக்குகிறார். அவர் கூறியதாவது: படிப்பில் ஆர்வம் இல்லாதவர் சஞ்சீவ். படிப்பிலும், புத்திசாலிதனத்திலும் கெட்டிக்காரர் வர்ஷன். தான் படிக்கவில்லை என்றாலும் தனது மகளை படித்த மாப்பிள்ளைக்கு கட்டித்தரவேண்டும் என்று நினைப்பவரின் மகள் மனிஷாஜித்.

இவர்கள் மூன்றுபேரின் கதையாகவும், நட்புக்கும், காதலுக்கும் இடையேயான உணர்வுகளை பிரதிபலிக்கும் ஸ்கிரிப்ட்டாகவும் இது அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோயினாக நடிக்கும் மனிஷாஜித் சரத்குமார் நடித்த 'கம்பீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பால் லிவிங்ஸ்டன் ஒளிப்பதிவு. வி.பிரபாகரன் வசனம். பிரம்மா இசை. வி.சகாதேவன், ஜே.ஆர்.சுப்ராயன் தயாரிப்பு. சென்னை, சாலக்குடி, மாயவரம், கொல்லிடம், தரங்கம்பட்டி போன்ற இடங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது. இவ்வாறு இயக்குனர் ஜெயகுமார் கூறினார்.
 

கிசு கிசு - வெறுப்பில் ஹீரோ : ஏமாந்த நாயகி

Kodambakkam Kodangi நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

மல்லுவுட்லயிருந்து கோலிவுட்டுக்கு வந்த பிருத்வி நடிகர் திடீர்னு பாலிவுட் மோகத்துக்கு மாற¤னாராம்... மாற¤னாராம்... அங்கேயே செட்லாயிடலாம்னு நெனச்ச திட்டத்துக்கு முதல் படமே மூடுவிழா பண்ணிடுச்சாம். முகர்ஜி நடிகையோட அவர் நடிச்ச பாலிவுட் படம் பெரிசா கைகொடுக்காததால வெறுத்துட்டாராம்... வெறுத்துட்டாராம்... இத்தனை நாள் பாலிவுட் படத்துக்காக ஓட்டல்ல தங்கி நடிச்ச வாழ்க்கை போரடிச்சிடுச்சாம். மீண்டும் மல்லுவுட் படங்கள்லயே நடிக்க முடிவு பண்ணிட்டாராம்... பண்ணிட்டாராம்...

பிரகாச வில்லன் நடிகரு பல படங்கள் நடிச்சாலும் டைரக்ஷன் ஆசை மட்டும் அவரை விட்டு போக மாட்டேங்குதாம்... மாட்டேங்குதாம்... ஏற்கனவே படம் இயக்கி, கையை சுட்டுக்கிட்டாரு. திரும்ப டைரக்ஷன்ல குதிக்கிறாராம். இது அவரோட வீட்டுக்காரம்மாவுக்கு பிடிக்கலையாம். டைரக்ஷன் எல்லாம் வேணாம். நடிப்புலேயே கவனம் செலுத்துங்கன்னு அட்வைஸ் பண்றாராம். ஆனா, நடிகரு கேட்க மாட்டேங்கிறாராம்... மாட்டேங்கிறாராம்...

லார நடன இயக்கத்தோட மூணாவது பார்ட் திகில் படத்துல தான்தான் ஹீரோயினா நடிக்கப்போறதா லட்சுமிகர நடிகை நெனச்சாராம்... நெனச்சாராம்... அந்த நெனப்புல மண்ணுவிழுந்துருச்சாம். டாப் நடிகை அந்த வாய்ப்ப பறிச்சிட்டாராம். இதனால லட்சு நடிகை ஏமாந்துட்டாராம்... ஏமாந்துட்டாராம்... இதுபத்தி இயக்கம் தரப்புல கேட்டா, 'டபுள் லாங்குவேஜ்ல படத்த இயக்கப் போறாரு. அதுக்கு தோதான ஹீரோயினைதான் செலக்ட் பண்ண முடியும்னு பதில் தர்றாங்களாம்... தர்றாங்களாம்...
 

இடைவெளி ஏன்?

சென்னை : தமிழில் 'கொள்ளைக்காரன்' படத்தில் நடித்த சஞ்சிதா ஷெட்டி கூறியதாவது: 'கொள்ளைக்காரன்' ரிலீசுக்கு பிறகு நிறைய கதைகள் கேட்டேன். பொருத்தமான கேரக்டர் 'சூது கவ்வும்' படத்தில் அமைந்தது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கிறேன். கொடைக்கானல் பகுதியில் வசிக்கும் மாடர்ன் பெண் கேரக்டர். 2 கன்னடப் படங்களில் நடிக்கிறேன். ஒரு படத்தில் நடித்தாலும், அதில் ஏற்கும் வேடம் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அதனால் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. நல்ல கேரக்டரை எதிர்பார்த்திருக்கிறேன்.

 

லாரன்ஸ் ஜோடியாக டாப்ஸி

சென்னை : ராகவா லாரன்ஸ் ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். 'முனி', முனி,2 ('காஞ்சனா') படங்களை அடுத்து ராகவா லாரன்ஸ், 'முனி' படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்குகிறார். இதில் லாரன்ஸ் ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் தயாராகும் இதை ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அடுத்த மாதம் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது. தற்போது 'மறந்தேன் மன்னித்தேன்' படத்தில் நடித்து வருகிறார் டாப்ஸி.
 

விஜயசாந்தி இடம் வர்ஷா ஆசை

சென்னை : 'நீர்ப்பறவை' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள வர்ஷா, கூறியதாவது: இந்தப் படத்தில் சுனேனா நடித்த கேரக்டரில் நான்தான் நடிக்க வேண்டியது. எனது ரிச் லுக்கும் வாட்ட சாட்டமான உடல் அமைப்பும் அப்பாவி பெண்ணின் கேரக்டருக்கு பொருந்தவில்லை என்று போலீஸ் அதிகாரியாக நடிக்க வைத்தார் இயக்குனர். நந்திதா தாஸுடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. தற்போது 'அமைதிப்படை பார்ட்,2', 'பனிவிழும் மலர் வனம்' படங்களில் ஹீரோயினாக நடிக்கிறேன். விஜயசாந்தி போன்று ஆக்ஷன் ஹீரோயினாக ஆக வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் இடத்தை நிரப்புவேன் என நினைக்கிறேன்.

 

3 திணைகளின் காதல்

சென்னை : வசந்த் இயக்கியுள்ள படம், 'மூன்று பேர் மூன்று காதல்'. அர்ஜுன், சேரன், விமல், பானு, சுர்வீன், லாசினி நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை. இதன் பாடலை கே.பாலசந்தர் வெளியிட, கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், பிரகாஷ்ராஜ் பெற்றனர். பின்னர் கே.பாலசந்தர் பேசும்போது, 'இந்த பாடல்களை பார்க்கும்போது யுவன் சிகரத்தை தொட்டுவிட்டார் என்று தெரிகிறது. நா.முத்துக்குமாரும் பாடல்களில் சிகரம் தொட்டிருக்கிறார். ரிலீஸுக்கு பிறகு வசந்தும் சிகரம் தொடுவார். வசந்த் என்னிடம் பணியாற்றினாலும் என்னைவிட சிறப்பாகப் படம் எடுப்பவர். எனக்குப் பிறகு என் இடத்தை நிரப்புவது அவர்தான்' என்றார்.

வசந்த் பேசும்போது, 'குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற மூன்று வகையான திணைகளில் உருவாகும் காதல்தான் படம். மூன்று காதலும் ஒரு புள்ளியில் இணைவது கிளைமாக்ஸ். எனது மற்ற படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும். நான் இயக்கிய படங்களில் இது சிறப்பானதாக இருக்கும்' என்றார். லிங்குசாமி, சசி, சரவணன், நா.முத்துகுமார், அறிவுமதி, தமிழச்சி தங்கபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர்கள் மஹேந்திரன், பாரத்குமார், மஹா அஜய் பிரசாத் நன்றி கூறினர்.
 

விஸ்வரூபம் பாடல் 3 நகரங்களில் விழா

சென்னை : கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள படம், 'விஸ்வரூபம்'. பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், ராகுல் போஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம், ஜனவரி 11,ம் தேதி வெளியாகிறது. 'ஆரோ 3 டி' என்ற நவீன தொழில்நுட்பத்தில் ஒலி அமைப்பு செய்யப்பட்டுள்ள இதன் பாடல் வெளியீட்டு விழாவை, கமல் பிறந்த நாளில் நடத்த திட்டமிட்டிருந்தனர். பின்னர் அது தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 7,ம் தேதி சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் ஒரே நாளில் பாடல் வெளியீட்டை  நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக தனி விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலையில் மதுரை வேலம்மாள் கல்லூரி வளாகத்திலும், கோவை இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் பிற்பகலிலும், சென்னையில் அதே நாள் மாலையிலும் பாடல்கள் வெளியிடப்பட இருக்கிறது. சென்னையில் விழா நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்பட இருக்கிறது. இவ்விழாவில் கமல்ஹாசன், வைரமுத்து, ஆண்ட்ரியா, பூஜா குமார், இசை அமைப்பாளர்கள் சங்கர் எஹசான் லாய் உட்பட படக்குழுவினர் பங்கேற்க இருக்கின்றனர்.
 

எவன்டி உன்ன பெத்தான்?

சென்னை : பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்தவர், வேல்முருகன். தற்போது 'எவன்டி உன்ன பெத்தான்?' படத்தை எழுதி இயக்குகிறார். பி டீம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. புதுமுகங்கள் ரகு, கரீஷ்மா ஜோடி. மற்றும் சங்கிலி முருகன், இமான் அண்ணாச்சி உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, காசி விஷ்வா. இசை, 'சொல்லாமலே' பாபி. பாடல்கள்: பேரரசு, திரைவண்ணன், தமிழமுதன். வேல்முருகன் கூறும்போது, 'காதலை எத்தனையோ கோணங்களில் சொல்லிவிட்டார்கள். இதில், காடுகளில் இளம் காதல் ஜோடி சந்திக்கும் பிரச்னைகளை சொல்கிறேன். இதற்காக அடர்ந்த காடுகளில் ஷூட்டிங் நடக்கிறது' என்றார்.
 

ஜெயித்தாலும் தோற்றாலும் பார்ட்டி

சென்னை : அஸ்வின் ஸ்டுடியோஸ் ஆரூர் சுந்தரம், பி.எம்.முகமது மொய்தீன், பி.எம்.ஜெயிலுல்லாப்தீன் வழங்கும் என்.ஜி.பி பிலிம்ஸ் சார்பில் நவநீதன் கணேசன் தயாரிக்கும் படம், 'அடுத்த கட்டம்'. மலேசியா, சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர். முரளி கிருஷ்ணன் முனியன் இயக்கி உள்ளார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் இயக்குனரும், நடிகருமான வ.கவுதமன் பேசும்போது, 'திரையுலகில் இருப்பவர்கள்தான் படங்களை கொச்சைப்படுத்தவும் செய்கிறார்கள். சக கலைஞனை கொண்டாட வேண்டாம். அவன் மனதைப் புண்படுத்தாமலாவது இருக்கலாம். இங்கே ஜெயித்தாலும் பார்ட்டி. தோற்றாலும் பார்ட்டி. முதல் ரீல் பார்த்துக் கொண்டிருக்கும்போதே படம் பற்றி தவறாக எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்கள். தமிழ் சினிமாவை நாம் கொண்டாடவில்லை என்றால், வேறு யார் கொண்டாடுவார்கள்?' என்றார்.
விழாவில் ஸ்ரீகாந்த், சம்பத் ராம், ராஜகுமாரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

பழம்பெரும் ஆர்ட் டைரக்டர் காலமானார்

சென்னை : பழம்பெரும் கலை இயக்குனர் சுப்பராயன் நேற்று காலமானார். அவருக்கு வயது 86. சில காலம் உடல் நலம் குன்றியிருந்த அவர், நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். மறைந்த சுப்பராயன், பி.விட்டலாச்சார்யா இயக்கிய 'ஜகன் மோகினி', 'கந்தர்வ கன்னி' மற்றும் 'வசந்த மாளிகை', 'ரிக்ஷாக்காரன்', 'காவல்காரன்', 'மைதிலி என்னை காதலி' உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களுக்கும், என்.டி.ராமராவ் நடித்த தெலுங்குப் படங்களுக்கும் ஆர்ட் டைரக்டராகப் பணியாற்றியுள்ளார். அவரது உடல் இன்று காலை போரூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. மறைந்த சுப்பராயனுக்கு சரோஜா என்ற மனைவியும் செல்வம் என்ற மகனும் உள்ளனர். இதில் செல்வம், ஆர்ட் டைரக்டர். கார்த்திக் நடித்த 'அழகான நாட்கள்' படத்தையும் தயாரித்தவர்.
 

சென்னை சர்வதேச பட விழா அமிதாப் பச்சன் பங்கேற்கிறார்

சென்னை : பத்தாவது, சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, வரும் 13,ம் தேதி முதல் 20,ம் தேதி வரை நடக்கிறது. தமிழக அரசின் உதவியோடு இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேசன் இவ்விழாவை நடத்துகிறது. இதில் 57 நாடுகளைச் சேர்ந்த 160,க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகின்றன. சென்னையிலுள்ள உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சிம்பொனி, ஐநாக்ஸ், சத்யம், கேசினோ தியேட்டர்களிலும் ராணி சீதை ஹாலிலும் படங்கள் திரையிடப்படும். போட்டிப் பிரிவுக்கு, 'அரவான்', 'ஆரோகணம்', 'அட்டகத்தி', 'மெரினா', 'மௌனக்குரு',

'முப்பொழுதும் உன் கற்பனைகள்', 'நான் ஈ', 'நீர்ப்பறவை', 'பீட்சா', 'சாட்டை', 'சுந்தராபாண்டியன்', வழக்கு எண் 18/9' ஆகிய 12 தமிழ்ப் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சந்திரலேகா (தமிழ்), பதேர் பாஞ்சாலி (வங்காளம்), கைட் (இந்தி) உட்பட 6 இந்திய படங்களும் திரையிடப்படுகின்றன. 16ம் தேதி 'ஆரண்ய காண்டம்' படம் திரையிடப்படும். விழாவில் வெளிநாட்டிலிருந்து பல இயக்குனர்கள் மற்றும் நடிகைகள் கலந்துகொள்கிறார்கள். ஏ.ஆர். ரகுமான் இசைப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் இசை நிகழ்ச்சியுடன் 13,ம் தேதி விழா துவங்குகிறது. விழா முடிவில் அமிதாப்பச்சன் கலந்துகொள்கிறார்.

 

தமிழில் ரீமேக் ஆகிறது இந்தி பேண்ட் பாஜா பாரத்

சென்னை : இந்தியில் பிரபலமான யஷ் ராஜ் பிலிம்ஸ் முதன்முறையாக தமிழ், தெலுங்கில் படம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் இந்தியில் 'பேண்ட் பாஜா பாரத்' என்ற படத்தை தயாரித்திருந்தது. ரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா நடித்து ஹிட்டான இந்தப் படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்கிறது. இதில் ஹீரோவாக நானி ஒப்பந்தம் ஆகி உள்ளார். அடுத்த வருடம் ஷூட்டிங் தொடங்குகிறது. நானி ஜோடியாக முன்னணி இந்தி நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார். இதுபற்றி நானி கூறும்போது, 'யஷ் ராஜ் நிறுவனத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது பெருமையாக இருக்கிறது. இயக்குனர் உள்ளிட்ட விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை. இதன் ஷூட்டிங்கை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்' என்றார்.