சங்கத்து உறுப்பினர்களை சந்தோசப்படுத்தும் தலைவி!

சாமியாடி நடிகை சின்னத்திரையில் வில்லி, காமெடி என கலந்து கட்டி நடித்து வருகிறார். சின்னத்திரை சங்கத்திற்கு தலைவியான பின்னரும் சீரியல்களும், சினிமாவும் தொடர்ந்து வருவதால் சங்கத்தை கவனிக்க முடியாமல் கஷ்டப்பட்டார்.

இதுபற்றி எதிர்கோஷ்டிகள் புகார் வாசிக்கவே, பதவியை பட்டென்று ராஜினாமா செய்தார். ஒரே நாளில் ராஜினாமாவை வாபஸ் பெற்றார். இப்போது சங்கத்து நிகழ்ச்சிகளில் பிஸியாக பங்கேற்கிறாராம்.

டப்பிங் சீரியல்களுக்கு எதிராக சின்னத்திரை கலைஞர்கள் இருந்த உண்ணாவிரதம் பலனளிக்கவே நட்சத்திரங்கள் பாராட்டு பத்திரம் வாசிக்கின்றனராம். அதோடு மட்டுமல்லாது சங்கத்தின் நிதியை அதிகரிக்க கலைநிகழ்ச்சியும் நடத்தி வெற்றி பெற்றுள்ளாராம். இதனால் சங்கத்து கணக்கில் பணம் ஓரளவு கையிருப்பு சேர்ந்துள்ளதாம். அதை வைத்து சிரமத்தில் உள்ள சின்னத்திரை சங்க உறுப்பினர்களுக்கு நற்பணிகளை செய்யப்போகிறாராம்.

படிப்பில் படுசுட்டியாக உள்ள சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு பொறியியல் கல்லூரியில் இலவசமாக சீர் வாங்கி கொடுத்துள்ளாராம் தலைவி. தலைவியின் செயல்பாடுகள் சங்க உறுப்பினர்களை சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

 

"ஆட்டோ ஜானி"யில் "மெகா" சிரஞ்சீவிக்கு ஜோடி "பல்க்கி" நமீதாவா?

ஹைதராபாத்: தமிழில் நமீதா என்று ஒரு நடிகை இருந்தாரே ஞாபகம் இருக்கிறதா?ஞாபகம் இல்லாதவர்கள் ஆட்டோ ஜானி வரும்போது பார்த்து ரீவைண்ட் செய்து கொள்ளுங்கள்.

நம்ம விஜயகாந்த் படமான எங்கள் அண்ணா என்ற தமிழ் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக 2004ல் அறிமுகமான நமீதா தொடர்ந்து ஏய்,இங்கிலீஷ் காரன், பில்லா மற்றும் ஜெகன்மோகினி போன்ற படங்களில் நடித்து ஏராளாமான இளைஞர்களை தன் "தாராள" நடிப்பால் கவர்ந்தவர்.

Namitha New Movie Opening

தமிழில் கடைசியாக இளைஞன் என்ற ஒருபடத்தில் நடித்ததோடு காணாமல் போன நமிதா தற்போது கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார், விரைவில் அரசியலில் குதிக்கப் போகிறேன் என்று ஒரு அறிக்கையைக் கொடுத்து தான் இருப்பதைக் கட்டிக்கொண்ட நமீதா தற்போது தான் நடிகையாக அறிமுகமான தெலுங்குலகில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஆமாம் நம்ம மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆட்டோ ஜானி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார், மற்ற நடிகைகள் யார் என்ன என்பது இன்னும் உறுதியாகாத நிலையில் நமீதா இந்தப் படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஆட்டோ ஜானி படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையைக் குறைத்து வருகிறாராம் மெகா ஸ்டார்.

ஜோடிப் பொருத்தம் சும்மா அள்ளுது போங்க......!

 

மேகி நூடுல்சில் நடித்த அத்தனை பேர் மீது எப்.ஐ.ஆர் போடுங்க... பீகார் கோர்ட் அதிரடி

மும்பை: நெஸ்லேநிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த அத்தனை பேர் மீதும் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய பீகார் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேகி நூடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட உப்பு மற்றும் ரசாயனம் அதிகமாக இருந்ததைக் கண்டுபிடித்த உத்திரப் பிரதேச அரசு அந்த நூடுல்சைத் தடை செய்ய சொல்லியதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் நெஸ்லே நூடுல்ஸ் தடை செய்யப்பட்டுள்ளது.

Bihar court orders FIR against Amitabh Bachchan, Madhuri Dixit and Preity Zinta for endorsing Maggi

மேலும் அந்த நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த நடிகர் அமிதாப் பச்சன் நடிகைகள் மாதுரி தீக்சித் மற்றும் பிரீத்தி ஜிந்தா மீது உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பாரபங்கி என்ற இடத்தில வழக்குப்பதிவு செய்யப் பட்டது. மூவர் மீதும் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர் நகர் கோர்ட்டிலும் நூடுல்சைத் தடை செய்யக் கோரி வழக்குத் தொடரப்பட்டது.

இன்று காலை கோர்ட்டில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணை நடந்தது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் மேகி நூடுல்சில் நடித்த நடிகர் அமிதாப் பச்சன் நடிகைகள் மாதுரி தீட்சித் , பிரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ்லே அதிகாரிகள் ஆகியோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய சொல்லி காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

 

ரஜினியுடன் அட்டக்கத்தி தினேஷும் நடிக்கப் போறாராமே.. நயன் தான் ஹீரோயினாமே?

சென்னை: அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகும் படத்தில் அட்டக்கத்தி நாயகன் தினேஷும் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் உலா வர ஆரம்பித்துள்ளது.

ரஜினி படம் என்றாலே ஒருவித பரபரப்பு எல்லோருக்கும் வந்து விடுகிறது. ரஜினி புதிதாக மூன்று படங்களில் நடிக்கிறார், இரண்டு படங்களை மட்டுமே இயக்கியிருக்கும் ரஞ்சித்துடன் இணைகிறார், படத்தில் ஹீரோயின் கிடையாது இது ஒரு கேங்க்ஸ்டார் பற்றிய படம் மற்றும் புதிய படத்தைப் பற்றிய எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை என்ற வதந்திகளுக்கெல்லாம் நேற்று தான் படத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தனர்.

Is Attakathi Dinesh joins with Rajini?

அதற்குள் இன்னொரு பரபரப்பு கிளம்பி விட்டது. அதாவது இந்தப் படத்தில் ரஜினியுடன் இன்னொரு இளம் ஹீரோவும் நடிக்கப் போகிறாராம். ஹீரோயின் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய தேர்வு எல்லாம் முடிந்தவுடன் தான் அதைப் பற்றி முறையாக தெரிவிக்க இருக்கின்றனராம்.தற்போதைய நிலவரப்படி கதாநாயகியாக நடிக்க நயன்தாராவைக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.

ரஜினியுடன் நடிக்க இருக்கும் அந்த இன்னொரு ஹீரோ ரஞ்சித்தின் முதல் பட ஹீரோ அட்டக்கத்தி தினேஷ் என்கிறார்கள், படம் முழுவதும் வரும் வேடத்தை தினேஷுக்கு கொடுக்க இருக்கிறாராம் ரஞ்சித்.

படத்தில் ஒரு முக்கியமான வேடத்தை தினேஷுக்கு கொடுக்க இருக்கும் ரஞ்சித், படத்தில் நடிக்க இருப்பவர்களின் தேர்வு முடிந்தவுடன் இதைப் பற்றி கடைசியாக தெரிவிப்பார் என்று கூறுகிறார்கள்.

 

மறுபடியும் அஜீத்தை நாடி வரும் "கணபதி"!

சென்னை: அஜித்தின் புதிய படத்தை தற்போது சிறுத்தை சிவா இயக்குகிறார் என்பது அரதப் பழசான செய்தி, படத்தில் 16 வருடங்களுக்குப் பின் விநாயகர் பாடல் தல அஜித்தின் ஓபனிங் பாடலாக இருப்பது புதிய செய்தி.

ஆமாம் வான்மதி படத்தில் இடம்பெற்ற பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா கணேசா என்ற பாடலையும், அமர்க்களம் படத்தில் வந்த பாடலையும் தொடர்ந்து தற்போது நீண்ட வருடங்கள் கழித்து அஜித் நடித்து வரும் புதிய படத்தில் விநாயகர் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

Another Vinayagar Chathurthi song for Ajith?

அஜித் - ஷாலினி முதல்முறையாக இணைந்த அஜித்தின் 25 வது படமான அமர்க்களம் படத்தில் விநாயகர் பாடலாக காலம் கலிகாலம் ஆகிப் போச்சுடா என்று ஆடிப்பாடிய ராகவா லாரன்ஸ் தான் நடனமாடிய முதல் பாடலுக்கே எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றார். அதே போன்று இந்தப் பாடலும் அடுத்த ஒரு ஹிட்டான விநாயகர் பாடலாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

அனிருத் இசையமைப்பில் உருவாக்கி வரும் இந்தப் படத்தில் இதுவரை 2 பாடல்கள் தயாராகி விட்டன, ஷோபி மாஸ்டர் நடன அமைப்பில் 150 பேர் ஆடிப்பாடி இருக்கும் பாடல் ஒன்று படத்தில் இடம்பெற உள்ளது.

அது இந்த விநாயகர் பாடலாக இருக்கலாம் என்றும் இந்த பாடலில் லட்சுமி மேனன் மற்றும் சூரி ஆகியோர் இடம்பெறுகிறார்கள் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

எல்லோருக்கும் ஹீரோ நீதான்பா கணேசா...!

 

"தல" சார்.. லத்திகா பிஜிஎம் இருக்கு. வாங்க யூஸ் பண்ணிக்கலாம்.. அஜீத்தை அலற வைக்கும் "பவர்"!

சென்னை: அஜீத் படத்திற்கு தனது லத்திகா பட பிஜிஎம்மை தருவதாக பவர் ஸ்டார் சீனிவாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நான் தான் பவர், சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக வந்துள்ள பவர்ஸ்டார் என்று சீனிவாசன் மைக் போட்டு கூவியபோது எல்லாம் அதை யாரும் காதில் வாங்கவில்லை. யாருடா இவரு காமெடி செய்கிறார் என்று மக்கள் சென்றனர். இந்நிலையில் சந்தானம் ஒரே படத்தின் மூலம் பவரை பட்டிதொட்டி எல்லாம் பிரபலமாக்கிவிட்டார்.

ஆமாம், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை பற்றி தான் கூறுகிறோம். அதன் பிறகு பவர் தனது பெயர் அவ்வப்போது செய்தியில் அடிபடுமாறு பார்த்துக் கொள்கிறார். மனிதருக்கு பிஆர்ஓவே தேவை இல்லை. அந்த அளவுக்கு ரூம் போட்டு யோசித்து எதையாவது கூறி செய்தியில் இடம்பிடித்துவிடுகிறார்.

இந்நிலையில் அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஹீரோ சூர்யா கத்தி பிஜிஎம்மை பயன்படுத்தினார்
நகைச்சுவை நடிகர் ராஜேந்திரன் வீரம் பிஜிஎம்மை பயன்படுத்தினார்
மை டியர் தல உங்களுக்கு என் லத்திகா பட பிஜிஎம்மை தர தயாராக உள்ளேன்
கவலைப்படாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

சினிமாவைப் பார்த்துட்டு போய்ட்டே இருங்க, பாலோ பண்ணாதீங்க.. ரோகினி நச் பேச்சு!

சென்னை: சினிமாவை வெறும் படமாக மட்டும் பாருங்கள் அதனை வாழ்க்கையோடு முடிச்சுப் போட்டு, சினிமாவில் நடிப்பவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று அவர்களை அரியணையில் வைத்துக் கொண்டாடாதீர்கள் என்று நடிகை ரோகினி சுள்ளென்று கூறியுள்ளார்.

பச்சை மிளகாயைக் கடித்தது போன்ற உணர்வு அவரின் பேச்சைக் கேட்டவர்களுக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.

Actress Rohini Advice For The Young Generation

திருவாரூரில் நடந்த தேசிய நெல் விழாவில் கலந்துகொண்ட நடிகை ரோகினி "பூச்சிகளும் நண்பர்களே" என்னும் தலைப்பிலான புத்தகம் ஒன்றை வெளியிட்டுப் பின்வருமாறு பேசினார்.

"படத்தில் நடிகர் சூர்யா அடிப்பதை சீரியஸாக எடுத்துக் கொள்ளும் நீங்கள் நிஜத்தில் அவர் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் குறித்து அவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்.

சினிமாவில் நாங்கள் பயன்படுத்தும் ஆடைகள் மற்றும் நகைகள் எப்படி எங்களுடையது இல்லையோ அதே போன்று தான் நாங்கள் பேசும் வசனங்களும் எங்களுடையது கிடையாது, யாரோ ஒருவர் எழுதிக் கொடுக்க நாங்கள் அதனைப் பேசிச் செல்கிறோம்.

சினிமாவில் நாலு காட்சி பார்த்தோமா அதோடு அதனை மறந்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க சென்று விட வேண்டும், அதனை விடுத்தது அதில் நடித்தவர்களை அரியணையில் தூக்கி வைத்துக் கொண்டாடக் கூடாது.

சினிமா என்பது அனைவரையும் கவரும் ஒரு ஊடகமாக இருப்பதால் நாங்கள் என்ன பேசினாலும் அது மற்றவர்களுக்கு பளிச்செனத் தெரிகிறது எனவே இதனை உண்மை என்று நம்பி ஏமாறாதீர்கள் என்று அவர் உண்மையைச் சற்று உரக்கக் கூறித் தனது பேச்சை நிறைவு செய்தார்.

நல்ல பேச்சு, நாகரிகமான அறிவுரை.......!

 

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் 73வது பிறந்த நாள் கொண்டாடிய இளையராஜா

இசைஞானி... பண்டிதரும் படித்தவரும் பாமரரும் இந்தப் பட்டப் பெயரைப் பயன்படுத்துவது இளையராஜாவைக் குறிப்பிட மட்டும்தான்.

40 ஆண்டுகள் தமிழ் சமூகத்தை தன் இசையால் தாலாட்டிக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் இசைக் கலைஞருக்கு இன்று 73வது பிறந்த நாள்.

இந்த எழுபத்து மூன்று வயதிலும், எந்த இளைஞனையும் விட வேகமாகவும் வீரியமாகவும் ஓடிக் கொண்டிருக்கும் இளையராஜா, திரைத் துறையில் தடம் பதிக்கவும், தனக்கான அங்கீகாரத்தைப் பெறவும் பட்ட பாடுகள் சரித்திரம்!

Ilaiyaraaja celebrates 73rd birthday at Kollur

அறுபதுகளின் இறுதியில் பண்ணைப்புரத்திலிருந்து தன் சகோதரர்கள் மற்றும் பாரதிராஜாவுடன் சென்னைக்கு வந்த இளையராஜா, ஆரம்பத்தில் பாவலர் பிரதர்ஸ் என்ற பெயரிலேயே வாய்ப்புகள் தேடினார். ஆர்டி பாஸ்கர், ராசய்யா, கங்கை அமரன் என்ற மூவர் கூட்டணிதான் பாவலர் பிரதர்ஸ்.

இந்தப் பெயரில் அவர்கள் முதல் முதலில் இசையமைத்து வெளி வந்த ரிகார்டு 'முஸ்லிம் இன்டரஸ்ட்'. அதில் பாடியவர் யார் தெரியுமா.. மறைந்த இசை முரசு நாகூர் ஹனீபா. ஆம்.. இளையராஜா முதன் முதலில் இசையமைத்து வெளிவந்த இசைத் தட்டு இதுதான்!

அதன் பிறகு சில சினிமா வாய்ப்புகள் வந்தன. எம்எஸ்வியின் உதவியாளரான கோவர்தனத்துடன் இணைந்து ஓரிரு படங்களில் பாவலர் பிரதர்ஸ் என்ற பெயரிலேயே இசையமைத்தனர்.

இந்த நிலையில்தான் பஞ்சு அருணாச்சலத்தின் அன்னக்கிளி பட வாய்ப்பு வந்தது. அந்தப் படத்திலும் பாவலர் பிரதர்ஸ் என்றே இசையமைக்க முடிவெடுத்திருந்தாராம் ராஜா. ஆனால் அவரது சகோதரர் பாஸ்கர், ராசய்யா என்ற தனிப் பெயரிலேயே இசையமைக்குமாறு அறிவுறுத்த, அதை ஏற்றுக் கொண்டார் ராஜா. ராஜா பின்னர் இளையராஜாவாக ஆனது எப்படி என்பதெல்லாம் இசை ரசிகர்கள் அறிந்ததுதானே.

1976-ம் ஏப்ரல் 14-ம் தேதி 'இளையராஜா' உதயமானார். அன்னக்கிளி வெளியான தினம் அது. அதன் பிறகு தமிழனின் மூச்சும் பேச்சுமாக மாறிப் போனார்.

முதல் படம் வெளியாகி மூன்றாண்டுகள் முடிவதற்குள், 100 படங்களைத் தொட்டிருந்தார் இளையராஜா. எவரும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பெரும் சாதனை இது.

இந்த 39 ஆண்டுகளில் இளையராஜா மொத்தம் 1002 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இன்றும் 30 படங்கள் பல்வேறு மொழிகளில் அவரது இசையில் தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஒரு இளைஞனின் உற்சாகத்துடன், போட்டியாளர்கள் என்று யாரும் நெருங்க முடியாத தூரத்தில் இளையராஜாவின் பயணம் தொடர்கிறது.

இன்று அவருக்கு 73 வயது பிறக்கிறது. இந்த பிறந்த நாளை தனது இசையில் பாடல்கள் எழுதிய கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், நண்பர்களுடன் முதலில் கொண்டாட நினைத்தார் இளையராஜா. பின்னர் திடீரென முடிவை மாற்றிக் கொண்டு, தனது இஷ்ட தெய்வமான கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு நேற்று மாலையே சென்றுவிட்டார். இரவு அம்மனை தனது குடும்பத்தினருடன் வழிபட்டார். இன்று கொல்லூரிலேயே தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் இளையராஜா.

நாளை சென்னை திரும்பும் அவர், நண்பர்கள், ரசிகர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்களின் வாழ்த்துகளைப் பெறுகிறார்.

 

ஒருவழியாக வெளியானது பாகுபாலி டிரைலர்

ஹைதராபாத்:அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பாகுபாலி டிரைலர் ஒருவழியாக.... வெளிவந்துவிட்டது, நேற்று மாலை

சுமார் 5 மணி அளவில் படத்தின் டிரைலரைவெளியிட்டு ரசிகர்களின் புண்ணியத்தைக் கட்டிக் கொண்டுள்ளார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. கிட்டத் தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக எடுக்கப் பட்டு வந்த இந்தப்படம்தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

சரித்திரப் படமான பாகுபாலிக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவு அதிகரித்துக்கொண்டேசெல்லும் இந்த வேளையில் வெளியான டிரைலர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும்வகையில்உள்ளது. பிரமாண்டமான அரண்மனையும், போர்க்களக் காட்சிகளும் மற்றும் அழகுநீர்வீழ்ச்சிகள் என அதிரடியாக அமைந்துள்ளது டிரைலர்.

இயக்குனரின் இரண்டு வருட உழைப்பு வீண்போகவில்லை என்று கூறலாம், தமிழ்,தெலுங்குமற்றும் ஹிந்தி மொழிகளில் படம் வெளியாவதால் மூன்று மொழிகளிலும் டிரைலரைவெளியிட்டுஇருக்கிறார்கள். கீரவாணியின் பின்னணி இசை சான்சே இல்ல ப்ரோ, கிட்டத்தட்டஹாலிவுட் படங்களுக்கு இணையான பிரமாண்டம் படத்தின் டிரைலரில் தெரிகிறது.பிரபாஸ்,அனுஷ்கா,தமன்னா,

சத்யராஜ்,ரம்யா கிருஷ்ணன்,சுதீப்,நாசர் மற்றும் ராணா எனஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்தப் படமானது ஜூலை மாதம் திரைக்குவரவிருக்கிறது.

டிரைலர் சான்சே இல்ல ப்ரோ.........

 

சினிமாக்காரன் சாலை 24: ராஜாவுக்கு ஆயுள் முழுக்க தீராக்கடனாளிகள்தான் நாம்!

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

இன்று என் இனிய இசையராஜாவுக்கு 73 வது பிறந்தநாள். சாதா ராஜாக்களையே பாடி வாழ்த்தவேண்டியது புலவர்களின் கடமை எனும்போது அற்புதங்களுக்கெல்லாம் அற்புதமான இசைஞானியை வாழ்த்தாவிடில் இப்பிறவி எடுத்து என்ன பயன்?

பதினோரு ஆண்டுகளாக செல்போனில் ஒரே ரிங் டோனை வைத்திருப்பவனை சரியான பைத்தியக்காரன் என்றே நீங்கள் அழைக்க விரும்புவீர்கள்,எனில் என்னையும் அப்படியே அழையுங்கள்.

2003-ன் இறுதியில் ‘பிதாமகன்' ரிலீஸாகி சில தினங்களே ஆன நிலையில், நானும் பாலாவும், காரில் அமர்ந்து பீர் குடித்த படியே, ஏற்காடு மலையேறிக்கொண்டிருந்த போதுதான், முதன்முதலாக, ‘விருமாண்டி' சண்டியரை நோக்கி, சங்கீதத்தின் ஒரே சண்டியர் ராஜா சொன்ன 'உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல' பாடலைக் கேட்டுக் கிறங்கினேன். மலையிலிருந்து இறங்கின உடனே என் செல்போனின் ரிங்டோனாக அன்று அரியணை ஏறிய பாட்டு இன்று வரை இறங்கவில்லை.

Cinemakkaran Saalai -24

'சலங்கை ஒலி' இது மவுனமான நேரம்..., ‘நாயகன்' நீ ஒரு காதல் சங்கீதம்..., 'புன்னகை மன்னன்' என்ன சத்தம் இந்த நேரம்?..., 'மவுனராகம்' நிலாவே வா..., 'காத்திருக்க நேரமில்லை' வா காத்திருக்க நேரமில்லை..., 'நாடோடித் தென்றல்' ஒரு கணம் ஒரு யுகமாக..., 'சிப்பிக்குள் முத்து' மனசு மயங்கும்..., 'சத்யா' வளையோசை கலகலவென..... வரிசையில் நான் அந்தப் பாடலை இதுவரை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன். பாடலில் கமலுடன் நாட்டுப்புறத் தமிழில் கொஞ்சியிருந்த ஷ்ரேயா கோஷலுக்கு எனது இதயத்தின் இடது ஓரத்தில் சின்னதாக ஒரு கோயில் கூட கட்டியிருந்தேன். 'என்னவிட உன்ன சரி வரப் புரிஞ்சிக்க யாருமில்ல ...' என்று ஷ்ரேயா எனக்காகப் பாடுவதாக நினைத்துக் கொள்வது சொல்லவொண்ணா சுகமாக இருக்கிறது.

தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல்களைக் கேட்டு வளர்ந்திருந்தாலும், சின்ன வயசிலிருந்தே ராஜாவின் மீது வெறிகொண்ட ரசிகன் நான். அவருக்கு என்னைபோல் லட்சக்கணக்கில் பைத்தியங்கள் உண்டென்றாலும், 'ராஜா பைத்தியங்களிலேயே ராஜபைத்தியம் நான் தான்' என்ற தலைமைப் பொறுப்பை என்னிடம் தயவு செய்து விட்டு விடுங்கள். அப்படி விட்டுக்கொடுக்க நீங்கள் முன்வரும் பட்சத்தில் என் வாழ்நாள் முழுக்க,எம்.எல்.ஏ, மந்திரி, முதல் அமைச்சர், பிரதமர், அமெரிக்க பிரதமர் போன்ற எந்தப் பதவிகளுக்கும் நான் உங்களோடு போட்டியிட மாட்டேன் என்று எத்தனை ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் வேண்டுமானாலும் எழுதி கையெழுத்திடுகிறேன்.

வைரமுத்துவை எனக்குப் பிடிக்கும், அவர் இளையராஜாவுடன் இருந்தவரை. பாரதிராஜாவை எனக்குப் பிடிக்கும், அவர் படத்துக்கு ராஜா இசையமைக்கும்போது மட்டும். ‘நீ தானே என் பொன் வசந்தம்' படம் ,ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜிடமிருந்து எங்கள் ராஜா கைக்கு மாறும்போது, ‘படம் பிரமாதமா வந்துருக்காம்' என்று சல்லி பைசா அட்வான்ஸ் வாங்காமல் மிஸ்டர் திகில் முருகன் பார்க்க வேண்டிய பி.ஆர்.ஓ. வேலையை நான் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.

என்னைப் பொறுத்தவரை என் வாழ்வின் இனிமையான தருணங்கள் என்பவை ராஜாவின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த, கேட்டுக்கொண்டிருக்கும் தருணங்கள்தான். இது சங்கீதம் அறிந்த அறியாத தமிழர்கள் சகலருக்கும் பொருந்தும் என்பதே என் கருத்து.

Cinemakkaran Saalai -24

மிகவும் வறுமையான பின்னணியில் எட்டுப் பிள்ளைகளைப்பெற்று வளர்க்க, நாள்தோறும் நள்ளிரவில் தோட்டம் போய் தண்ணீர் பாய்ச்சிய என் தாய் லச்சம்மாளின் நினைவு வரும்போதெல்லாம் ‘பொன்னப் போல ஆத்தா என்னப் பெத்துப் போட்டா' (என்னை விட்டுப்போகாதே) பாட்டுக் கேட்டு அழுதிருக்கிறேன். மனசு சரியில்லாத வேளைகளில், ‘நான் யாரு எனக்கேதும் தெரியலையே, ஆலோலம் பாடி ‘ மாதிரி பாடல்கள் கொண்டு என் கண்ணீர் துடைப்பது ராஜாவின் சுரங்கள். ஒரு பூ மலர்வதைக் கூட சங்கீதமாகச் சொல்ல முடியும் என்று மலர்ந்த ‘வெள்ளி முளைத்தது' (கீதவழிபாடு) கேட்டு விடிந்தது எத்தனை காலைப் பொழுதுகள் என்று சொல்லிமாளாது.

Cinemakkaran Saalai -24

அமெரிக்கன் கல்லூரியில்* படித்துக்கொண்டிருந்தபோது, நானும் எனது நண்பர்களும். வகுப்பறைகளில் இருந்ததை விட ,கல்லூரிக்கு எதிரே இருந்த கணேஷ் டீ ஸ்டாலில் தான் அதிகம் நின்றிருப்போம்.

மண்வாசனை, கரையெல்லாம் செண்பகப்பூ, நான் பாடும் பாடல், பயணங்கள் முடிவதில்லை, இளமைக் காலங்கள்' என்று கேட்டு எங்களைத் திகைக்க வைப்பதையே ராஜா சலிப்பின்றி செய்து வந்தார். கணேஷ் ஸ்டாலில் டீ கேட்பதுவும், ராஜாவின் பாட்'டீ குடிப்பதுமே கல்லூரி காலங்களில் எங்களது முக்கியமான பணியாக இருந்தது.

அன்றுமுதல் இன்று ராஜாவின் பிறந்தநாளை ஒட்டி இக்கட்டுரையை எழுதுகிற நிமிடம் வரை என் ராஜவிசுவாசம் துளியும் குறையவில்லை.

ஒவ்வொரு காலகட்டத்திலும், ராஜா குறித்த சர்ச்சைகளை, அவரைப் போலவே, நான் எப்போதும் இடதுகையால் புறந்தள்ளி விடுவேன். அவர்கள் ஒன்று பிறவிச் செவிடர்களாக இருக்கவேண்டும் அல்லது ஞானசூன்யங்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்.

சமீப தினங்களில் எஃப்.எம். காரர்களிடம் ராஜா ராயல்டி கேட்டது குறித்து சில ஞானசூன்யங்கள் இணையங்களில் பகடிகள் செய்து வருவதைக் கவனித்துக் கொண்டே இருக்கிறேன்.

Cinemakkaran Saalai -24

எஃப்.எம் காரர்கள் நொடிக்கு சில ஆயிரங்களை விளம்பரங்களுக்காக வாங்குபவர்கள். ராஜாவின் பாடல்கள் அவர்களுக்கு அமுதசுரபி போல என்பதை உலகே அறியும். கோடிகளில் வருமானம் வரும்போது அதில் சில லட்சங்களை ராயல்டியாக தர மனசு இல்லையெனில், அவர்கள் சூடுசொரணை உள்ளவர்களெனில் ராஜா பாடல்கள் இல்லாமல் அவர்களின் ரேடியோ பாடட்டும்.

இந்த எஃப்.எம் காரர்கள் குறித்து குறிப்பாக சொல்லவேண்டிய ஒன்றும் இருக்கிறது. பணம் கொட்டிக் குவிப்பதே இவர்களின் பிரதான குறிக்கோள். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பவர்கள் என்பது சினிமாக்காரர்கள் அனைவருக்கும் தெரியும்.
ஒருமுறை நண்பர் ஒருவரின் படப்பாடல்களை ஒளிபரப்புக்குத் தருவதற்காக ஒரு முன்னணி எஃப்.எம். ஒன்றுக்குப் போயிருந்தேன். சி.டிக்களைக் கொடுத்துவிட்டு கிளம்பும்போது, அங்கு பணிபுரியும் நண்பர் ஒருவர் கீழே வந்து டீ சாப்பிடும்போது சொன்னார். 'பாஸ் இங்க சில லட்சங்களுக்கு விளம்பரம் தராம வெறுமனே சி.டி. மட்டும் குடுத்தா பாட்டை ஒலிபரப்ப மாட்டாங்க. இது எங்க எஃப்.எம்.ல மட்டுமில்ல எல்லா எஃப்.எம்.லயும் உள்ள பழக்கம்'

‘பாட்டு பிரமாதமா இருந்தாலுமா?' அப்பாவியாக நான் கேட்க அவர் அதிர்ந்து சிரித்தபடி சொன்னார்.

‘பிரிச்சிக்கூட பாக்காம டஸ்ட்பின்ல போடுற சிடியில பாட்டு பிரமாதமா இருக்குன்னு யாருக்குத் தெரியும்?'

இப்படிப்பட்ட கிராதகர்கள்தான் இந்த எஃப்.எம் காரர்கள். இவர்களிடம் ராஜா ராயல்டி கேட்கலாமா கூடாதா என்று மனசாட்சி உள்ளவர்கள் சொல்லுங்கள்.

சில சமயம் ஏழாவது, எட்டாவது மாடிகளில் ராஜா குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கும்போது, எனது நெருங்கிய நண்பர் ஒருவர் எதிராளிகளை இப்படி பயமுறுத்துவார்.

‘ராஜாவைப் பத்தி விமர்சனம் பண்றத இப்பிடியே நிறுத்திக்கங்க. அப்புறம் முத்து உங்களை மாடியிலருந்து த்ள்ளிவிடக்கூட யோசிக்கமாட்டார்'.

அடுத்து ஒரு மயான அமைதி நிலவும்.

இந்த ராஜாவின் பிறந்தநாளன்று எனக்கு அவ்விதம் தான் தோன்றுகிறது. சற்றும் ஞானமின்றி ராஜாவைக் கிண்டலடிக்கும் ஒரு நூறுபேரை எதாவது ஒரு ஹோட்டலின் பத்தாவது மாடிக்கு இழுத்துச்சென்று மொத்தமாய் அள்ளிக்கீழே போட்டால் என்ன என்று?'

உங்களுக்கு அம்மாவிலிருந்து அத்தனை உறவுகளையும் நினவூட்ட, காதலிக்க, கண்கலங்க, ஆனந்தப்பட, துக்கப்பட, கோபப்பட, நிம்மதியாய் நித்திரை கொள்ள என்று அத்தனைக்கும் ராஜாவின் பாடல்கள் வேண்டும். ஆனால் சம்பாதிப்பவர்களிடம் தனது ரத்தத்துக்கான ராயல்டியை அவர் கேட்டால் கிண்டல் அடிப்பீர்கள்?

ராஜாவுக்கு ராயல்டி என தமிழகத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பையும் எழுதிவைத்தாலும், நமது உடல்பொருள் ஆவி அத்தனையும் அவருக்கே தந்தபின்னும் நாம் என்றுமே அவருக்கு தீராக் கடனாளிகள்தான்!

(தொடர்வேன்...)

 

பாகுபலி படத்தை ரஜினிகாந்துக்குத்தான் முதலில் காட்ட ஆசை! - பிரபாஸ், அனுஷ்கா

பாகுபலி படத்தை முதலில் ரஜினிகாந்துக்குக் காட்டவே விரும்புவதாக நடிகை அனுஷ்கா மற்றும் பிரபாஸ் கூறினர்.

பாகுபலி படத்தின் ட்ரைலர்தான் இன்றைக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

இந்த ட்ரைலரை இணையத்தில் நேற்று வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த பிரபாஸும் அனுஷ்காவும் பங்கேற்றனர்.

Anushka, Prabhas want to screen Bahubali to Rajinikanth

அப்போது பாகுபலியை முதலில் யாருக்கு திரையிட்டுக் காட்ட விரும்புகிறீர்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அனுஷ்கா, 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு முதலில் காட்ட விரும்புகிறேன்," என்றார்.

இதே கேள்வியை பிரபாஸுடம் கேட்டபோது, அவரும் 'ரஜினிகாந்துக்குதான் இந்தப் படத்தை முதலில் காட்ட விரும்புகிறேன்," என்றார்.

பாகுபலி படத்தை எஸ்எஸ் ராஜமவுலி இயக்கியுள்ளார். நேற்று வெளியான இந்தப் படத்தின் ட்ரைலரை ஆந்திரா - தெலங்கானா முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட அரங்குகளில் இலவசமாகத் திரையிட்டுக் காட்டினர். திரையிட்ட அத்தனை அரங்குகளில் ட்ரைலரைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.

 

சொல்வதெல்லாம் உண்மை... லட்சுமி அவுட்.. "மயூரி" சுதா சந்திரன் இன்!

சென்னை: என்னம்மா இப்படிப் பண்றிங்களேம்மா இந்த டயலாக்க சொன்னா எவ்வளவு சீரியசான விஷயமா இருந்தாலும் அது காமெடியா மாறிடுது, எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சிடுறாங்க.

ஒரு ஆதங்கத்தில நம்ம லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம், தான் நடத்திய சொல்வதெல்லாம் உண்மைங்கிற நிகழ்ச்சியில சொன்னத இந்த விஜய் டிவி காரங்க காமெடியா மாத்திவிட இப்போ ஊரே அந்த டயலாக்க பேசி எல்லா சமூக வலைதளங்களிலும் வைரலாக்கி விட்டுட்டாங்க.

Zee Tamizh ropes in Actress Sudha Chandran as new anchor for Solvathellam Unmai

ஒரு படம் இல்லே ஒரு பாட்டு இது மூலமா தமிழ் சினிமாவில புகழ் பெற்றவங்கள பாத்துருக்கோம். ஆனா ஒரே ஒரு டயலாக் அதுவும் எண்ணி மூணே வார்த்தை ஒருத்தவங்க வாழ்க்கையையே மாற்றியது ஆச்சரியம்தான்.

என்னம்மா இப்படிப் பண்றிங்களேம்மா இந்த ஒரே ஒரு டயலாக்கால அந்த நிகழ்ச்சியை நடத்திய லட்சுமி ராமகிருஷ்ணன் இப்போ அதையே டைட்டிலா வச்சு ஒரு புது நிகழ்ச்சியையே நடத்துற அளவுக்கு முன்னேறிட்டாங்க.

ஒருபக்கம் நம்ம சூர்யா தன்னோட படத்துல இந்த டயலாக்க பேச, இன்னொருபக்கம் சிவகார்த்திகேயனோட ரஜினிமுருகன் படத்துல ஒரு பாட்டையே இந்த டயலாக்க வச்சு எடுக்க நாம சொன்ன வார்த்தைக்கு ஊருக்குள்ள இவ்ளோ மதிப்பான்னு யோசிச்ச லட்சுமி மேடம் இந்த டயலாக்கோடா ஓனரே நான்தான் நாம ஏன் இதை வச்சு ஏதாவது பண்ணக் கூடாதுன்னு இப்போ சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில இருந்து வெளியேறி இப்போ "என்னம்மா இப்படிப் பண்றிங்களேம்மா"ன்னு சொந்தமா நிகழ்ச்சி நடத்தப் போறாங்க.

அவங்களுக்குப் பதிலா சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிய தொடர்ந்து நடத்த வந்து விட்டார் மயூரி படப் புகழ் சுதா சந்திரன். டிவி சீரியல்களில் நடித்து வந்தவரான சுதா தற்போது இந்த ரியாலிட்டி டாக் ஷோவுக்கு வந்துள்ளது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

என்னம்மா இப்படிப் பண்ணிட்டிங்களேமா......!

 

மேகியால் நொந்து நூடுல்ஸான மாதுரிக்கு வாய்ஸ் கொடுக்கும் நடிகர் ரிஷி கபூர்

மும்பை: மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்ததற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள பாலிவுட் நடிகை மாதுரி தீக்சித்திற்கு ஆதரவாக இந்தி நடிகர் ரிஷி கபூர் கருத்து தெரிவித்துள்ளார்.

நெஸ்ட்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக மோனோசோடியம் க்ளூட்டமேட் என்ற ரசாயன உப்பும், ஈயமும் இருப்பதை உத்தர பிரதேச மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் கண்டுபிடித்தது. இதையடுத்து நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்து அது சத்தானது என்று கூறிய பாலிவுட் நடிகை மாதுரி தீக்சித்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுடன் அவர் மீது பாரபங்கி வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார். எதன் அடிப்படையில் மாதுரி மேகியை சத்தானது என்று கூறியது பற்றி 15 நாட்களுக்குள் விளக்கம் தெரிவிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

இந்த சூழலில் இது குறித்து பாலிவுட் நடிகரும், நடிகர் ரன்பீர் கபூரின் தந்தையுமான ரிஷி கபூர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

யோசித்துப் பாருங்கள். ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பிராண்டை விளம்பரப்படுத்தியதற்காக அதற்கு மாதுரி தீக்சித் பொறுப்பு என்றால், டிவி சேனல்கள், ரேடியோ, விளம்பர பலகைகளும் தானே பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.

 

பாகுபலி ட்ரைலர்... 17 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்கள்!

எஸ்எஸ் ராஜமவுலியின் பாகுபலி பட ட்ரைலர் இணையத்தைக் கலக்க ஆரம்பித்துள்ளது.

ட்ரைலர் வெளியான 24 மணி நேரத்துக்குள் இந்தப் படம் 1 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் வேறு எந்தப் படத்தின் ட்ரைலரையும் இத்தனை பேர் பார்த்ததில்லை.

Bahubali trailer touches 1 million views

பாகுபலி ட்ரைலர் நேற்று காலை 10.30 மணிக்கு ஆந்திரா - தெலுங்கானாவில் உள்ள ஆயிரம் திரையரங்குகளில் ரசிகர்களுக்கு இலவசமாக திரையிடப்பட்டது. இதனைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

நேற்று மாலை ட்ரைலரை ஆன்லைனில் வெளியிட்டனர். வெளியான 24 மணி நேரத்துக்குள் சுமார் ஒரு மில்லியன் பேர் ட்ரைலரைப் பார்த்துள்ளனர்.

இந்த ட்ரைலர் இந்திய சினிமாவை சர்வதேச அளவில் பெருமையாகப் பேச வைக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ட்ரைலர் பார்த்த திரைப் பிரபலங்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

 

ஸ்ரீ சங்கரா டிவியின் குரு வந்தனா... பஜனை உபன்யாசம் கேளுங்க

இந்திய கலாச்சாத்தின் எண்ணற்ற கருத்துக்களை உலகெங்கும் உள்ள மக்கள் அறிந்து மனிதகுலம் செம்மையடைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் செயல்பட்டுவரும் ஒரே ஆன்மீக பன்மொழி தொலைக்காட்சி தான் ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி.

Guru Vandhana on Sri Sankara Tv

சங்கராவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சநாதன தர்மத்தின் மேன்மையை விளக்கும் வகையில் உருவாக்கப்படுவதால் ஆன்மீகத்தலைவர்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைநது செயல்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் "குரு வந்தனா" எனும் புதிய நிகழ்ச்சியும் நமது ஆன்மீக சிந்தனையைத்தூண்டும் வகையில் குருவரேண்யர்கள் பலரின் அருளுரைகள் இடம்பெருகின்றன. இனிய மாலைவேளையை பயனுள்ளதாக மாற்றுகின்ற இந்நிகழ்ச்சி 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

Guru Vandhana on Sri Sankara Tv

ஒரு குறிப்பிட்ட ஆன்மீக நிறுவனத்தின் பஜனைப்பாடல்கள் 15 நிமிடங்களுக்கு முதற்பகுதியில் இடம்பெறும்.

Guru Vandhana on Sri Sankara Tv

அந்த ஆன்மீக நிறுவனத்தைச்சேர்ந்த பிரதிநிதி ஒருவர் அந்நிறுவனம் உருவாகுவதற்குக் காரணமாக இருந்த குருவைப்பற்றியும், அந்நிறுவனம் செய்துவரும் தொண்டுகள் பற்றியும் சுமார் 15 நிமிடங்களுக்கு விவரிப்பார். ஆன்மீக குரு ஒருவர் ஆற்றும் அருளுரை அல்லது உபன்யாசம் 3ம் பகுதியில் ஒளிபரப்பாகும். குரு வந்தனா நிகழ்ச்சி வியாழக்கிழமையைத் தவிர மற்ற நாட்களில் மாலை 6 .00மணி முதல் 7.00 மணி வரை ஒளிபரப்பாகிறது.

Guru Vandhana on Sri Sankara Tv
 

ஈராஸ் நிறுவனத்திலிருந்து வெளியேறினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமைப் பொறுப்பிலிருந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் ராஜினாமா செய்துள்ளார். இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

சௌந்தர்யா அஸ்வின் ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை பொறுப்பிலிருந்து தான் விலகுவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ‘எனது குழந்தையுடன் நேரம் செலவிட வேண்டி ஈராஸ் நிறுவனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறேன். மேலும் எனது அடுத்த கட்ட பணியிலும் ஈடுபட உள்ளேன்,' என்று அவர் தெரிவித்துள்ளார்.

Soundarya Rajini quits from Eros

'கோச்சடையான்' படத்தின் இசை வெளியீட்டின் போதே ரஜினி சௌந்தர்யாவை அவரது குடும்ப வாழ்க்கையை முதலில் கவனிக்கவும் என கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதே போல் இப்போது குழந்தை பிறந்த பிறகு, குழந்தையுடன் நேரம் செலவிடும்படி ரஜினி அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார் சௌந்தர்யா அஸ்வின். லிங்கா விவகாரத்தில் ஈராஸ் நிறுவனத்தின் பாராமுகமும் கூட இந்த முடிவுக்குக் காரணம் என்கிறார்கள்.

'எப்படியோ.. ஈராஸை விட்டு ரஜினியும் அவர் குடும்பத்தினரும் விலகி வந்தது நல்லதுதான்.. தேவையில்லாமல் ரஜினியை சிக்கலில் மாட்டிவிட்டதில் ஈராஸுக்கும் பங்கிருக்கிறது' என்பதே கோலிவுட்டில் நிலவி வரும் பரவலான கருத்து.

 

அரண்மனை 2... பூனம் பஜ்வாவுக்கு சிபாரிசு த்ரிஷாவா?

சென்னை: அரண்மனை பார்ட் 2 படத்தில் ஒப்பந்தமாகியிருக்கும் நடிகை த்ரிஷா, இயக்குனர் சுந்தர்.சி அப்படத்திற்கு இன்னொரு ஹீரோயின் தேடுவதை அறிந்து நடிகை பூனம் பஜ்வாவை அப்படத்திற்கு சிபாரிசு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் இன்னொரு நடிகரை சிபாரிசு செய்வது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் ஒரு நடிகை இன்னொரு நடிகையை சிபாரிசு செய்வது கனவிலும் நடவாத ஒன்று, என்ற பழைய விதிகளை உடைத்துக் காட்டியுள்ளார் நடிகை த்ரிஷா.

Poonam Bajwa to join the cast of Aranmanai 2

தமிழில் சேவல் என்ற படத்தில் அறிமுகமான நடிகை பூனம் பஜ்வா அதற்குப் பின் நடித்த படங்களான தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் மற்றும் தம்பிக் கோட்டை உள்ளிட்ட எந்த படங்களும் ஓடாததால், நடிகர் விஷாலுடன் ஒருபாட்டுக்கு ஆம்பள படத்தில் ஆடியிருந்தார். ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட்டில் இன்னொரு நாயகியாக நடித்தவருக்கு கைவசம் புதிய படங்கள் எதுவும் இல்லை.

ஏற்கனவே நடிகை த்ரிஷாவுடன் இணைந்து போகி என்ற புதிய படத்தில் (தமிழ், தெலுங்கு) நடித்து வந்தார், அந்த நட்பின் அடிப்படையில் தான் தற்போது பூனத்துக்கு சிபாரிசு செய்திருக்கிறார் த்ரிஷா. ஏற்கனவே ஹன்ஷிகா மற்றும் த்ரிஷா என இரண்டு நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் தற்போது பூனம் பஜ்வா மூன்றாவது ஹீரோயினாக சேர்க்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சுந்தர்.சியின் ஆஸ்தான நாயகனான சித்தார்த் இதில் பேயின் கணவராக சாரி கதையின் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

கதையே இல்லாமக் கூட சுந்தர்.சி படம் எடுத்திடுவாரு,ஆனா ஹன்ஷிகா இல்லாம எடுக்க மாட்றாரு.......!

 

25 வசதியில்லாத மாணவர்களின் கல்வி செலவை ஏற்றுக் கொண்ட விஜய்!

சென்னை: ஆண்டுதோறும் படிக்க வசதியில்லாத 25 ஏழை மாணவர்களின் படிப்புச் செலவை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளும் நடிகர் விஜய், இந்த வருடமும் அதே போன்று 25 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் கல்விச் செலவை முழுவதுமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

தனது மக்கள் நற்பணி மன்றத்தின் சார்பாக இந்த உதவிகளை செய்து வரும் விஜய் தேர்ந்தெடுத்த மாணவர்களின் முழுகல்விச் செலவையும் தனது சொந்த செலவில் செய்து வருகிறார்.

Kolly Star Actor Vijay Help To Poor Students

அதே போன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 5 லட்சம் மாணவ,மாணவியருக்கான நோட்டு மற்றும் புத்தகங்களை இலவசமாக வழங்கி வருகிறார்

Kolly Star Actor Vijay Help To Poor Students

இந்த வருடமும் 5 லட்சம் நோட்டு மற்றும் புத்தகங்களை தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைத்த நடிகர் விஜய் அவற்றை தனது மக்கள் நற்பணி மன்றத்தின் மூலமாக விநியோகம் செய்ய சொல்லியுள்ளார்.

Kolly Star Actor Vijay Help To Poor Students

மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மாவட்டத் தலைவர்கள் மூலமாக இவை விநியோகம் செய்யப் படும். ஏற்கனவே நாடையே அதிர வைத்த நேபாள பூகம்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான பொருட்களை நடிகர் விஜய் தனது மக்கள் நற்பணி மன்றத்தின் மூலமாக அளித்தது குறிப்பிடத்தக்கது.