அஜீத் பிறந்த நாளில் ஆடம்பரமில்லாமல் பில்லா 2 இசைவெளியீடு


பில்லா 2 படத்தின் இசைக்கு நல்ல எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது ரசிகர்கள் மத்தியில்.

ஏப்ரல் இறுதியில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட இந்தப் படத்தின் இசை, மேலும ஒரு வாரம் தள்ளிப் போகிறது.

இதன்படி வரும் மே 1 ம் தேதி அஜீத்தின் பிறந்த நாளில் இசை வெளியீடு நடைபெற உள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பில்லா 2-ன் இசை உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. மொத்தம் ஆறு பாடல்கள். படத்துக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இசைவெளியீட்டு விழாவை ஆரம்பத்தில் பெரிய நிகழ்ச்சியாகக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்போது ரஜினி வீட்டில் அல்லது மண்டபத்தில் எளிய நிகழ்ச்சி மூலம் இந்த ஆடியோ வெளியீடு நடக்கும் எனத் தெரிகிறது.

சக்ரி டோலெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள பில்லா 2 மூலம் தென்னிந்திய சினிமாவில் நுழைகிறது பிரபல வர்த்தக நிறுவனமான இந்துஜா குழுமம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரஜினிக்காக தனுஷை மன்னிச்சிட்டேன்!


கொலைவெறி பாட்டுக்கு நடனமாட தன்னை ஒப்பந்தம் செய்து ஏமாற்றிய தனுஷை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக மன்னித்துவிட்டேன், என்று கூறியுள்ளார் நடிகை ராக்கி சாவந்த்.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கிய ’3′ படத்தில் அவரது கணவர் தனுஷ் பாடிய ‘கொலை வெறி’ பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் கொலை வெறி பாடலுக்கு தனுஷுடன் ஆட இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி ஷாவந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடைசி நேரத்தில் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை ராக்கி ஷாவந்த், மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனுஷை கடுமையாகச் சாடினார்.

அப்போது அவர், “கொலை வெறி பாடலுக்கு நடனம் ஆட மிகவும் ஆர்வமாக இருந்தேன். அந்த பாடலுக்கு நடனம் ஆட என்னை ஒப்பந்தம் செய்து விட்டு கடைசி நேரத்தில் அதை ரத்து செய்தது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. என்னை நம்ப வைத்து மோசம் செய்து விட்டார் தனுஷ்” என்று தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.

ஆனால் இப்போது கூலாகிவிட்டார் ராக்கி. நேற்று நிருபர்களிடம் அவர் கூறுகையில், “கொலைவெறி’ பாட லுக்கு நான் தனுஷுடன் சேர்ந்து நடனம் ஆடி இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். எனக்கு அந்த வாய்ப்பு பறிபோனதால் அவரை திட்டினேன். இப்போது மன்னித்து விட்டேன்.

ரஜினி சாரை நான் மிகவும் மதிக்கிறேன். அவருக்காக தனுஷை விட்டுவிடுகிறேன். அந்தப் பாட்டும் எனக்குப் பிடித்திருந்தது. நான் திரையுலகிற்கு வந்த போது எனக்கு வழிகாட்டி என்று யாரும் கிடையாது. எனக்கு நானே வழிகாட்டி. தனுஷ் இந்தியில் நடிக்க வருகிறார். அவருக்கு வாழ்த்துகள்,” என்றார்.

 

கோச்சடையான் படப்பிடிப்பு... திருவனந்தபுரம் வந்தார் தீபிகா!


கோச்சடையான் படப்பிடிப்பின் லண்டன் முதல் ஷெட்யூலில் தீபிகா படுகோன் பங்கேற்கவில்லை. காரணம் அவர் இந்திப் படத்தில் பிஸியாக இருந்தார்.

இப்போது இரண்டாவது ஷெட்யூல் கேரளாவில் தொடங்கியதுமே அவருக்கு அழைப்பு அனுப்பினார் சௌந்தர்யா. அப்போது அவர் மனாலியில் Yeh Jawaani Hai Deewani படப்பிடிப்பில் இருந்தார். தீபிகாவின் வேலை நான்கு தினங்கள்தான் என்பதால், இந்தி இயக்குநரிடம் அனுமதி கேட்டு திருவனந்தபுரம் வந்துவிட்டார் தீபிகா.

ரஜினியுடன் அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் அவுட்டோர் தொடர்புடையவை அல்ல. முழுக்க ஸ்டுடியோவில் எடுக்க வேண்டியவை என்பதால், திருவனந்தபுரம் ஸ்டுடியோவில் வைத்து சௌந்தர்யா படமாக்கி வருகிறார்.

இன்றும் நாளையும் படப்பிடிப்பு முடிந்ததும், மீண்டும் இந்திப் படத்துக்குத் திரும்பிவிடுவாராம் தீபிகா.

இருந்தாலும் அடுத்த ஷெட்யூலின்போது தீபிகாவால் வரமுடியாமல் போனால் என்ன செய்வது என்பதற்காக, கூடுதலாக சில காட்சிகளுக்கும் சேர்த்து நாளை ஷூட் செய்யப்போகிறாராம் சௌந்தர்யா. அனிமேஷன் என்பதால் ஸ்டுடியோவில் வைத்து மேட்ச் பண்ணிக் கொள்ளலாம் எனத் திட்டமாம்!

 

விஜய்யுடன் குத்தாட்டம் போட்ட மீனா இப்போது 'அக்கா'வாகிறார்!


Vijay and Meena
நடிகை மீனாவின் தீவிர ரசிகர் விஜய். இதை பலமுறை அவரே கூறியுள்ளார். முன்பு ஷாஜகான் படத்தில் சரக்கு வெச்சிருக்கேன் என விஜய்யுடன் குத்தாட்டம் போட்டுள்ளார் மீனா.

இப்போது விஜய் படத்தில் அக்காவாக நடிக்கப் போகிறார். இருங்க இருங்க... விஜய்க்கு அக்கா அல்ல... விஜய் தயாரிக்கும் படத்தில் ஹீரோவுக்கு அக்கா!

நடிகை மீனாவுக்கு கடந்த 2009-ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் அவர் சினிமாவில் நடிக்கவில்லை. 2011-ல் பெண் குழந்தை பிறந்தது. திருமணமான பிறகு ஒரு சில படங்களில் தலைகாட்டினார்.

தமிழில் தம்பிக்கோட்டை படத்தில் நரேனுக்கு அக்காவாக நடித்தார். தெலுங்கிலும் ஒரு படம் பண்ணார். ஆனால் தொடர்ந்து பல இயக்குனர்கள் அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க மீனாவை அணுகியபோது மறுத்துவிட்டார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். சட்டம் ஒரு இருட்டறை படத்தில் அக்கா வேடத்தில் நடிக்க மீனாவுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

30 வருடங்களுக்கு முன் இப்படத்தை விஜயகாந்தை வைத்து எஸ்.ஏ. சந்திசேகரன் இயக்கி இருந்தார். அது தற்போது ரீமேக் செய்யப்படுகிறது. விஜய்யே இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

எஸ்.ஏ. சந்திசேகரன் இப்படத்தை தயாரிக்கிறார். இதில் கதாநாயகனின் அக்கா வேடத்துக்கு பலரை பரிசீலித்தனர். இறுதியில் மீனா பொருத்தமாக இருப்பார் என்று வாய்ப்பளித்துள்ளனர். விஜய்யே அவர் பெயரை பரிந்துரைத்தாராம்.

மீனா எனக்கு அம்மாவா நடிக்கணும் என ரஜினி ஒரு விழாவில் கூறியிருந்தது நினைவிருக்கலாம். நடந்துரும் போலிருக்கே!
 

ரூ 256 கோடி மோசடி வழக்கில் ஜெனிலியாவுக்கு நோட்டீஸ்


Genelia
ஹைதராபாத்: ரூ 256 கோடி ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில், சம்பந்தப்பச்ச நிறுவனத்தின் விளம்பர தூதரான ஜெனிலியாவுக்கும் நோட்டீஸ் அனுப்ப ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஞ்சனிபுத்திரா என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் வீடு கட்டித் தரும் திட்டத்தை அறிவித்து, பெரும் பணத்தை வசூலித்து மோசடி செய்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதராக ஜெனிலியா நியமிக்கப்பட்டிருந்தார். அவர் விளம்பரத்தில் நடித்து ஊக்கப்படுத்தியதால்தான் இந்தத் திட்டத்தில் அபார்மென்ட்களுக்கு பணம் கட்டினோம். ஆனால் அந்த நிறுவனம் ஏமாற்றிவிட்டது. எனவே இதுதொடர்பாக ஜெனிலியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஎச்.திருப்பதியாக் என்பவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இதுதொடர்பாக ஜெனிலியாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதி கேசி.பானு ஒரு வாரத்துக்குள் இதுகுறித்து பதிலளிக்குமாறு தெரிவித்துள்ளார்.
 

தனுஷை மீண்டும் இயக்குகிறார் வெற்றிமாறன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தனுஷ் நடிக்கும் படத்தை மீண்டும் இயக்க இருப்பதாக வெற்றிமாறன் கூறினார். சிம்பு நடிக்கும் 'வடசென்னை' படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக இருந்தது. இதில் தெலுங்கு நடிகர் ராணாவும் முக்கியமான கேரக்டரில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. திடீரென்று, ராணா விலகினார். இதையடுத்து சிம்பு அமெரிக்கா சென்றதால் படப்பிடிப்பு தள்ளிப் போனது. சென்னை திரும்பிய சிம்பு, 'வேட்டை மன்னன்', 'போடா போடி' படங்களில் கவனம் செலுத்தி வருவதால் 'வடசென்னை' ஷூட்டிங் தள்ளிப்போனதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் நடிக்கும் படத்தை வெற்றிமாறன் மீண்டும் இயக்குகிறார். இதுபற்றி வெற்றிமாறனிடம் கேட்டபோது, ''வடசென்னை படம் தவிரிக்க முடியாத சூழலால் தள்ளிப்போகிறது. அதில் சிம்புதான் ஹீரோவாக நடிக்கிறார். இப்போது தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறேன். இது வேறு கதை. தற்போது நான் தயாரிக்கும் 'தேசிய நெடுஞ்சாலை' படத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். இதில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். மே 2-ம் தேதியிலிருந்து ஷூட்டிங் தொடங்குகிறது'' என்றார்.


 

‘மசாலா கபே’ டூ ‘கலகலப்பு’

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'மசாலா கபே' படத்தின் பெயர், 'கலகலப்பு' என்று மாற்றப்பட்டுள்ளது. யுடிவி மோஷன் பிக்சர்ஸ், அவ்னி சினிமேக்ஸ் தயாரித்துள்ள படம், 'மசாலா கபே'. சுந்தர்.சி இயக்கியுள்ள இந்தப் படத்தில் விமல், அஞ்சலி, சிவா, சந்தானம், ஓவியா, இளவரசு உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் தலைப்பு 'கலகலப்பு' என்று மாற்றப்பட்டுள்ளது. 'மசாலா கபே' ஆங்கிலமாக இருப்பதால் தமிழ் தலைப்புக்கு மாறி உள்ளதாக படக்குழு தெரிவித்தது. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது.



 

இந்திக்கு போகும் தென்னிந்திய ஹீரோக்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இயக்குனர்களை அடுத்து தென்னிந்திய ஹீரோக்களும் இந்தி படங்களில் அதிகமாக நடிக்கத் தொடங்கியுள்ளனர். தமிழில் ஹிட்டான 'கஜினி'யை ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் 2008-ல் ரீமேக் செய்து இயக்கினார். சூர்யா நடித்த கேரக்டரில் ஆமிர்கான் நடித்திருந்தார். இந்தப் படம் மெகா ஹிட் ஆனது. இதற்கு முன் பல்வேறு படங் களை தமிழ் இயக்குனர்கள் இந்தியில் ரீமேக் செய்திருந்தாலும் அந்த படங்கள் பெரிய கவனிப்பை பெறவில்லை. ஆனால், இந்தி 'கஜினி'க்குப் பிறகு தமிழ் இயக்குனர்களுக்கு இந்தியில் வரவேற்பு அதிகமானது. பிரபுதேவா, 'போக்கிரி' படத்தை 'வான்டட்' என சல்மான் நடிப்பில் இயக்கினார். ஹிட்டானது. இப்போது, 'ரவுடி ரத்தோர்' என்ற படத்தை இயக்கியுள்ளார். கவுதம் மேனன், 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தை, 'ஏக் தீவானா தா' என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஆனால், எதிர்பார்த்த அளவு ஹிட்டாகவில்லை. தமிழ் 'காவலனை' சித்திக் 'பாடிகாட்' என்ற பெயரில் இந்தியில் இயக்கினார். சல்மான்கான் நடித்த இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து, இந்தி ஹீரோக்களின் கவனம் தமிழ் இயக்குனர்கள் மீது திரும்பியுள்ளது.

சித்திக் மீண்டும் ஒரு இந்தி படத்தை இயக்க இருக்கிறார். லிங்குசாமி 'வேட்டை' படத்தின் இந்தி ரீமேக்கை இயக்குகிறார். இதில் ஷாகித் கபூர் ஹீரோ. தற்போது சுசி கணேசன், 'திருட்டு பயலே' படத்தை இந்தியில், 'ஷார்ட்கட் ரோமியோ' என்ற பெயரில் தயாரித்து இயக்கி வருகிறார். நீல் நிதின் முகேஷ் நடித்து வருகிறார். தென்னிந்திய இயக்குனர்களுக்கு இந்தியில் மவுசு அதிகரித்து வரும் நிலையில் ஹீரோக்களும் இந்தியில் நடிக்கத் தொடங்கியுள்ளனர். மாதவனும் சித்தார்த்தும் ஏற்கனவே இந்தி படங்களில் நடித்து வருகின்றனர். சூர்யா 'ரக்த சரித்திரா' படம் மூலம் இந்திக்குப் போனார். 'ராவண்' படத்துக்குப் பிறகு 'டேவிட்' என்ற இந்திப் படத்தில் நடிக்கிறார் விக்ரம். 'கொலவெறி' ஹிட்டுக்குப் பிறகு இந்தி சினிமாவுக்கு அறிமுகமாகியுள்ள தனுஷ், 'ரான்ஜ்னா' என்ற இந்திப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். பிருத்விராஜ் 'அயா', என்ற படத்திலும் ராணா 'டிபார்ட்மென்ட்' என்ற இந்தி படத்திலும் நடித்து வருகின்றனர். ராணா ஏற்கனவே 'தம் மாரோ தம்' என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். ராம் சரண் தேஜா 'சாஞ்சீர்' என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார்.  அவர் ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார்.

''சினிமாவுக்கு மொழி கிடையாது. சாயாஜி ஷிண்டேவிலிருந்து சோனு சூட் வரை இந்தி வில்லன் நடிகர்கள் இங்கு நடித்துக் கொண்டிருக்கும்போது நம் ஹீரோக்கள் அங்கு நடிப்பதில் என்ன தவறு? இது ஆரோக்கியமான விஷயம்தான். பிசினஸ் என்பதை தாண்டி, மொழி கடந்து நடிகர்களை பார்ப்பது வரவேற்கத்தக்கது'' என்கிறார் யுடிவியின் (தென்னிந்திய) தலைமை செயல் அதிகாரி தனஞ்செயன்.
''இன்றைய காலகட்டத்தில் வட இந்திய, தென்னிந்திய நடிகர்கள் என்று அடையாளப்படுத்துவது அர்த்தமற்றது. இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து நடிக்க வந்தாலும், நடிகர்தான். அதனால் தென்னிந்திய நடிகர்கள் என்று சொல்வதே தேவையில்லாதது'' என்கிறார் ராம்சரண் தேஜா.


 

எனக்கென்று தனி இடம் இல்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
எனக்கென்று தனி இடம் எதுவும் இல்லை என்று தமன்னா கூறினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'ஏனென்றால் காதல் என்பேன்' படம் மூலம் தமிழுக்கு வரும் தமன்னா, கூறியதாவது:
தமிழ்ப் படங்களில் நடித்து ஒன்றரை வருடம் ஆகிறது. தெலுங்கில் பிசியாக இருக்கிறேன். ஆனால்  தமிழ் சினிமாவிலிருந்து விலகியது போல் பேசுகிறார்கள். நல்ல கதை, நல்ல கேரக்டர் அமையும்போது நிச்சயம் நடிப்பேன். ஒரே மாதிரியாக நடித்ததால்தான் தமிழில் வாய்ப்பு குறைந்ததாக சொல்வதை ஒப்புக்கொள்ள மாட்டேன். ஸ்கிரிப்ட்தான் ஹீரோயினை தீர்மானிக்கிறது. தமிழில் இப்போது நிறைய ஹீரோயின்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் என் இடத்தை பிடித்து விட்டார்கள் என்பதை ஏற்கமாட்டேன். காரணம் எனக்கென்று எந்த தனி இடமும் கிடையாது. நான் நடிகை, எனக்கு பிடித்த, என்னால் முடிகிற கேரக்டர்களில் நடிக்கிறேன். அது எந்த மொழியாக இருந்தாலும் சரி.


 

இந்தி ரீமேக்கில் மன்சூரலிகான்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்தியில் ரிலீசான 'குல்லு தாதா', தமிழில் 'லொள்ளு தாதா பராக் பராக்' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. புவியரசி சினி பிளானர் வழங்க, ராஜ்கென்னடி பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஒளிப்பதிவு, ரவி சீனிவாஸ். இதில் ஹீரோவாக நடிக்கும் மன்சூரலிகான் கூறியதாவது: கந்துவட்டிக்குப் பணம் கொடுத்து, அடவாடியாகப் பணம் வசூலிக்கும் தாதா வேடத்தில் நடிக்கிறேன். நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவனாக வருவேன். 'ஒழுங்கா பணம் கட்டினா, ஒஸ்தியா வாழ்வே. இல்லாட்டி, நாஸ்தியா போயிடுவே' என்று, பஞ்ச் டயலாக் பேசுவேன். முழுநீள காமெடிப் படமாக உருவாகும் இப்படத்துக்கு நானே பாடல்கள் எழுதி, இசையமைக்கிறேன். புதுமுகம் ஷில்பா ஜோடி. ஊட்டி, குன்னூர், ஏலகிரி பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது.


 

ரஜினிக்கு பொருத்தமான வில்லன் நான் தான் : ஜாக்கி ஷெராஃப்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'கோச்சடையான்' படத்தில் ரஜினிக்கு பொருத்தமான வில்லனாக இருப்பேன் என்று இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் கூறினார். ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா இயக்கும் படம், 'கோச்சடையான்'. ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். 'பெர்பாமன்ஸ் கேப்சரிங்' என்ற நவீன தொழில்நுட்பத்தில் தயாராகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இதில் வில்லனாக நடிக்கும் ஜாக்கி ஷெராஃப் கூறியதாவது:

நான் நடிக்க வேண்டிய காட்சிகள் லண்டனின் படமாக்கப்பட்டுவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியுடன் நடித்தது சிறந்த அனுபவம். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். இந்தப் படத்தில் ரஜினிக்கு பொருத்தமான வில்லனாக நடித்துள்ளேன். தமிழில் 'ஆரண்யகாண்டம்' படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் அதிலிருந்து இது மாறுபட்டு இருக்கும். இதுவரை இந்திய படங்களில் பயன்படுத்தியிராத நவீன டெக்னாலஜியை பயன்படுத்தி சவுந்தர்யா இந்த படத்தை உருவாக்கி வருகிறார். இதன் மூலம் இந்திய சினிமாவில் சவுந்தர்யா புதிய டிரெண்டை உருவாக்குவார் என நம்புகிறேன். இவ்வாறு ஜாக்கி ஷெராஃப் கூறினார்.


 

செல்வராகவனின் இரண்டாம் உலகம் - முதல் பார்வை


Irandam Ulagam
மயக்கம் என்ன படத்துக்குப் பிறகு இயக்குநர் செல்வராகவன் உருவாக்கி வரும் இரண்டாம் உலகம் படத்தின் முதல் பார்வைக்கான படங்கள் வெளியாகியுள்ளன.

செல்வராகவன் - யுவன் - அரவிந்த் கிருஷ்ணா கூட்டணியாக இருந்தபோது உருவான ஐடியா இந்தப் படம். இவர்களின் 'ஒயிட் எலிபென்ட்' நிறுவனம் உடைந்து சிதறியதில், இந்தப் படம் உருவாவதும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது, கிட்டத்தட்ட 6 ஆண்டுகள்.

இந்தப் படத்தின் ஹீரோக்கள் தனுஷ், ராணா, அல்லு அர்ஜூன் என மாறிக்கொண்டே இருந்தார்கள். கடைசியில் ஆர்யா -அனுஷ்கா என்பது உறுதியானது.

ஆரம்பத்தில் யுவன், பின்னர் ஜீவி பிரகாஷ், மீண்டும் யுவன், இப்போது ஹாரிஸ் ஜெயராஜ்... இசையமைப்பாளர்கள் மாறிய 'ஆர்டர்' இது.

ஒளிப்பதிவு ராம்ஜி. ஷுட்டிங் தொடங்குவதும் நிற்பதுமாக இதோ அதோ என இழுத்தடித்த ஒரு படம்.. இப்போது படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்கிறார்கள்.

ஸ்டில்களைப் பார்த்தால், ஒரு இனிமையான உணர்வு வருகிறது. படம் பார்க்கும்போது அந்த உணர்வு இருந்தால் நன்றாக இருக்கும்!
 

வனிதா - ராஜன் விவாகரத்து வழக்கு ஜூன் மாதத்துக்கு தள்ளி வைப்பு


Vanitha and Rajan
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார், அவரது இரண்டாவது கணவர் ராஜன் விவாகரத்து மனு வரும் ஜூன் மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மகன் விஜய் ஸ்ரீ ஹரிக்காக நடிகை வனிதா மீண்டும் தனது முதலாவது கணவர் ஆகாஷுடன் சேர்ந்துவிட்ட நிலையில், தனது இரண்டாவது கணவர் ஆனந்தராஜ் எனும் ராஜனிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதற்காக 2 பேரும் இணைந்து, பரஸ்பரம் விவாகரத்து பெறும் மனுவை தாக்கல் செய்தனர்.

விவாகரத்து பெறுவதற்கு 2 பேருக்கும் 6 மாதகால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று சென்னை குடும்பநல கோர்ட்டு முதன்மை நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்பு வனிதா மற்றும் ஆனந்தராஜ் ஆஜரானார்கள். இந்த வழக்கு விசாரணையை ஜுன் மாதத்துக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

அப்போதே இருவருக்கும் விவாகரத்து கிடைத்துவிடும் எனத் தெரிகிறது.
 

மனைவியுடன் சேர்த்து வைக்கக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் 'கனல்' கண்ணன் மனு!


Kanal Kannan and Babilona
சென்னை: குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து போன மனைவியை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்குமாறு நடிகரும் ஸ்டன்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர் 'கனல்' கண்ணன் என்ற வி.கண்ணன். இவர், 'அவ்வை சண்முகி' உட்பட பல சினிமா படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கும் இவர் மனைவிக்கும் நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இந்த நிலையில், சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் அவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மனைவி ஹேமாவதியுடன் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், மனைவியை சேர்த்து வைத்து தனது தாம்பத்ய உரிமையை மீட்டுத் தரும்படி அந்த வழக்கில் அவர் கோரியுள்ளார்.

இந்த வழக்கு முதலாவது கூடுதல் குடும்பநல கோர்ட்டில் மே 25-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.