1/24/2011 12:04:14 PM
நல்ல கேரக்டருக்காக காத்திருக்கிறேன் என்றார் சுஜா. அவர் மேலும் கூறியதாவது: தமிழில், நான் நடித்துள்ள 'ஆயிரம் விளக்கு' விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளேன். தெலுங்கில் நடித்த 'நாகவல்லி' ரிலீஸ் ஆகிவிட்டது. பெயரிடப்படாத மலையாளப் படத்தில் நடித்து வருகிறேன். தமிழில் முன்னணி இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. தொடர்ந்து கிளாமராக நடித்து வருகிறீர்களே என்கிறார்கள். கதையோடு சேர்ந்த கிளாமர் கேரக்டரில் நடித்து வருகிறேன். ஆனால், அந்த மாதிரியான கேரக்டரில் மட்டுமே நடிக்கவில்லை. தெலுங்கில் ரிலீசான 'நாகவல்லி'யில் குடும்ப பாங்கான வேடத்தில் நடித்தேன். மலையாளம், தெலுங்கில் நல்ல கேரக்டர் கிடைத்து வருகிறது. தமிழில் அந்த மாதிரியான கேரக்டருக்கு காத்திருக்கிறேன். இவ்வாறு சுஜா கூறினார்.