பெப்சி சம்பள உயர்வு பிரச்னைக்கு சுமூக தீர்வு காண நடிகர் சங்கம் கோரிக்கை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பெப்சி சம்பள உயர்வு பிரச்னைக்கு சுமூக தீர்வு காண நடிகர் சங்கம் கோரிக்கை!

9/12/2011 10:03:00 AM

ஊதிய உயர்வு குறித்து பெப்சியுடன் தயாரிப்பாளர்கள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ராதாரவி மற்றும் நிர்வாகிகள், நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்.  இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  முதல்வராக பொறுப்பு ஏற்ற ஜெயலலிதா, சட்டசபை உறுப்பினர் பொறுப்பேற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி, எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த், எம்எல்ஏக்கள் சரத்குமார், அருண்பாண்டியன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை  உடனடியாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் (பெப்சி) ஊதிய உயர்வு குறித்து பேசி படப்பிடிப்புகள் சுமூகமான முறையில் நடக்க வழிவகுக்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ப¤ன்னர் நிருபர்களிடம் சரத்குமார் கூறியதாவது: புது நடிகர், நடிகைகள் அக்டோபர் 31ம் தேதிக்குள் சங்கத்தில் உறுப்பினராக சேர வேண்டும். சங்க உறுப்பினர்களின் வாரிசுகள் படிப்பதற்காக, எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை இதுவரை அளிக்கப்பட்ட ரூ2 ஆயிரம் உதவித் தொகை, இனி ரூ2,500ஆக அளிக்கப்படும். 6வது முதல் 10வது வரை படிப்பவர்களுக்கு இனி ரூ3 ஆயிரம் வழங்கப்படும். பிளஸ் ஒன், பிளஸ் டூ படிப்பவர்களுக்கு ஸி3 ஆயிரத்தில் இருந்து ஸி4 ஆயிரமாக உதவித் தொகை உயர்த்தப்படுகிறது. மேற்படிப்புக்கு இனி ரூ7,500 வழங்கப்படும்.

 

ஹனிரோஸுடன் பிரச்னையா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஹனிரோஸுடன் பிரச்னையா

9/12/2011 10:06:04 AM

தாமரை மூவீஸ் வழங்கும் சவுத் இந்தியா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம், 'காந்தர்வன்'. கதிர் ஹீரோ. ஹனிரோஸ் ஹீரோயின். மற்றும் கஞ்சா கருப்பு, தண்டபாணி, கிரேன் மனோகர், நெல்லை சிவா நடிக்கின்றனர். படத்தை இயக்கும் சலங்கை துரை கூறியதாவது: சென்னையில் தண்ணீர் லாரி டிரைவராக இருக்கும் கதிருக்கும், கல்லூரி மாணவி ஹனிரோசுக்கும் காதல் மலர்கிறது. திடீரென்று அவர்கள் காதலுக்கு தடை ஏற்படுகிறது. இதற்கு அவர்களே காரணமாகிறார்கள். அது ஏன்? எப்படி என்பதுதான் கதை. காதல் காட்சிகள் ஒவ்வொன்றும் புதுமையாக இருக்கும். படத்தில் ஒப்பந்தமாகும்போது, ஹனிரோஸ் கதை கேட்கவில்லை. பிறகு ஷூட்டிங்கில் அவருக்கும், கதிருக்கும் முத்தக்காட்சியை படமாக்க முயன்றபோது, நடிக்க மறுத்தார். இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தோம். அவர்கள் விசாரித்தனர். நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு படமாக்கினோம். மற்றபடி எங்களுக்கும், ஹனிரோசுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

 

வந்தான் வென்றானில் வில்லனா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வந்தான் வென்றானில் வில்லனா?

9/12/2011 10:00:29 AM

நந்தா நடித்த 'வந்தான் வென்றான்', 'வேலூர் மாவட்டம்' படங்கள் இம்மாதம் ரிலீசாக உள்ளன. இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நான் நடிக்க வந்து 10 வருடங்களாகி விட்டது. இன்னும் 15 படங்கள் கூட முடிக்கவில்லை. ஒரே மாதத்தில் எனது இரு படங்கள் ரிலீசாவது மகிழ்ச்சி அளிக்கிறது. 'வந்தான் வென்றான்' படத்தில், இதுவரை நான் ஏற்று நடிக்காத கேரக்டர். வில்லன் என்கிறார்கள். படம் பார்த்தால், அப்படி தெரியாது. ஜீவா, நான், டாப்ஸி மூவரும், நாங்கள் நினைப்பதே சரி என்று செயல்படுவோம். நாங்கள் எங்கே, எப்படி, ஏன் சந்திக்கிறோம் என்பது விறுவிறுப்பான திரைக்கதை. ஜீவா கதைக்கு அதிக முக்கியத்துவம் தருவார். இப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்க என்னை அனுமதித்தது, அவருடைய பெருந்தன்மை. 'வேலூர் மாவட்டம்' படத்தில் போலீஸ் ஆபீசராக நடிக்கிறேன். எனக்கு ஜோடி பூர்ணா. அரசியல்வாதியுடன் மோதும் நான், கடைசிவரை துப்பாக்கி எடுக்க மாட்டேன். படம் யதார்த்தமாக இருக்கும். ஐதராபாத் போலீஸ் அகாடமியில், 35 நாட்கள் விசேஷ பயிற்சி பெற்ற பிறகு இப்படத்தில் நடித்தேன். முதல்முறையாக டெல்லி போலீஸ் அகாடமியில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. கண்டிப்பாக இவ்விரு படங்களும் திருப்புமுனையாக அமையும். அடுத்து 'திருப்பங்கள்' படத்தில் நடிக்கிறேன். என் திருமணம் விரைவில் நடக்கும். பெண் பார்க்கும் பொறுப்பை குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விட்டேன்.

 

சினிமாவில் எனக்கு உதவ யாருமில்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சினிமாவில் எனக்கு உதவ யாருமில்லை

9/12/2011 10:02:11 AM

சினிமாவில் எனக்கு உதவ யாருமில்லை என்று பிரசன்னா வேதனையுடன் குறிப்பிட்டார். யுடிவி தயாரிக்கும் படம் 'முரண்'. சேரன், பிரசன்னா, ஹரிப்பிரியா, நிகிதா நடித்துள்ளனர். மிஷ்கின் உதவியாளர் ராஜன் மாதவ் இயக்கி உள்ளார். இம்மாத இறுதியில் படம் வெளிவருகிறது. படம் பற்றி பிரசன்னா பேசியதாவது: சினிமா உலகில் எனக்கு யாருடைய உதவியும் இல்லை. என் முயற்சியால் பல படம் நடித்திருக்கிறேன். சில தப்பான படங்களிலும் நடித்திருக்கிறேன். நல்ல படங்களுக்கு பாராட்டவும், தவறான படங்களிலிருந்து வழிநடத்தவும் எனக்கு யாருமில்லை. அறிமுகப்படுத்திய சுசி கணேசன், பிரகாஷ்ராஜ், இன்னொரு அடையாளம் தந்த மிஷ்கின் இப்படிச் சிலர் இருந்தாலும் முழுமையான ஆதரவு எனக்கு இல்லை. 'பிரசன்னாவா அவர் வேண்டாமே' என்று சொல்ல, ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். இந்தப் படத்தின் கதையை பல தயாரிப்பாளர்கள் நிராகரித்ததற்கு காரணம், நான் நடிக்கிறேன் என்பதால்தான். இப்போது தயாரித்துள்ள தயாரிப்பாளர் கூட, மாற்று ஏற்பாடு செய்யலாமே என்றுதான் சொன்னார். ஆனால் இயக்குனர்தான் பிடிவாதமாக நடிக்க வைத்தார். இது என் சினிமா வாழ்க்கையை தீர்மானிக்கப்போகும் படம் என்பதால் இரண்டு வருடங்கள் வேறெந்த படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் நடித்துள்ளேன். யாரெல்லாம் பிரசன்னா வேண்டாம் என்று சொன்னார்களோ அவர்களெல்லாம் பிரசன்னாவை தவிர வேறு யாரும் இந்த கேரக்டருக்கு பொருந்தியிருக்க மாட்டார்கள் என்று சொல்ல வேண்டும். அதுதான் என் ஆசை. அதற்காகத்தான் கடுமையாக உழைத்திருக்கிறேன். இவ்வாறு பிரசன்னா கூறினார். நிகழ்ச்சியில் சேரன், இயக்குனர் ராஜன் மாதவ், இசை அமைப்பாளர் சாஜன் மாதவ், ஒளிப்பதிவாளர் பத்மேஷ், நடிகை ஹரிப்ரியா, தயாரிப்பாளர் தனஞ்செயன் கலந்து கொண்டனர்.

 

பிரகாஷ் ராஜின் டோனி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிரகாஷ் ராஜின் டோனி

9/12/2011 9:55:58 AM

தனது டூயட் மூவீஸ் சார்பாக, பிரகாஷ் ராஜ் இயக்கி தயாரிக்கும் படம், 'டோனி'. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார். கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார். வசனம் த.செ.ஞானவேல். நா.முத்துக்குமார் பாடல்கள். பிரகாஷ் ராஜ் ஜோடியாக முக்தா கோட்ஸே நடிக்கிறார். படம் பற்றி பிரகாஷ் ராஜ் கூறும்போது, ''இன்னொரு நல்ல படத்தை கொடுக்கும்  முயற்சியில் இந்த படத்தை ஆரம்பித்திருக்கிறேன். ஒரு படத்தை தயாரித்து இயக்கி நடிக்கும்போது சந்தோஷம் மூன்று மடங்காகிறது. அதே நேரம் பொறுப்பும் மூன்று மடங்காகிறது. கபில்தேவுக்கு பிறகு நமக்கு கிரிக்கெட் உலகக் கோப்பையை பெற்று தந்த கேப்டன் 'டோனி'யின் பெயரை படத்துக்கு வைத்துள்ளோம்'' என்றார். குழந்தைகளின் உளவியல் பற்றிய கதையான இது டிசம்பரில் வெளியாகிறது.

 

பட்டம் வேண்டாம் : சொல்கிறார் விவேக்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பட்டம் வேண்டாம் : சொல்கிறார் விவேக்

9/12/2011 9:57:05 AM

கதையின் நாயகனாக நடிக்க உள்ள படத்தின் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்த விவேக் கூறியதாவது: அப்துல் கலாம் ஆலோசனைப்படி, 'பசுமை கலாம்' என்ற திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதை பொதுநல நோக்கோடு எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செய்து வருகிறேன். நம் எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமாக வாழவும், மழை பொய்த்துப் போகாமல் இருக்கவும், சுற்றுச்சூழல் தூய்மையாக அமையவும் ஏதுவாக மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. நடுவதுடன் நின்றுவிடாமல், அவை சரியாக பரமாரிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்ய, பறக்கும் படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 'பசுமை கலாம்' திட்டத்தில் என் பணியை பாராட்டிய ஒரு அமைப்பு, 'பசுமை நாயகன்' என்ற பட்டத்தை அளிக்க முன்வந்தது. அவர்களிடம், 'மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ பட்டமும், மக்கள் கொடுத்த 'ஜனங்களின் கலைஞன்' என்ற பட்டமும் போதும்' என்று அன்புடன் மறுத்து விட்டேன். பட்டம் கொடுப்பதற்கு பதிலாக, பத்து மரக்கன்றுகள் கொடுத்து உதவுங்கள் என்று சொல்லி இருக்கிறேன்.

 

மீண்டும் தெலுங்கில் நடிக்கிறார் மதுமிதா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மீண்டும் தெலுங்கில் நடிக்கிறார் மதுமிதா

9/12/2011 10:03:44 AM

திருமணத்துக்கு பிறகு மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார் மதுமிதா. இது குறித்து அவர் கூறியதாவது: தமிழில் 'யோகிÕக்கு பிறகு நல்ல வாய்ப்புகள் அமையாதது என் துரதிருஷ்டம். வந்த சில வாய்ப்புகள் திருப்தி அளிக்கவில்லை. திருமணம், தேனிலவு என்று சில காலம் ஓடிவிட்டது. சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் தெலுங்கில் நடிக்கத் தொடங்கியிருக்கிறேன். மனோஜ் ஹீரோ. தீட்சிதாவும் நானும் ஹீரோயினாக நடிக்கிறோம். நல்ல குடும்ப பெண் கேரக்டர். தமிழில் ஒரு படத்தில் நடிக்க பேச்சு நடக்கிறது. ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று நிபந்தனை விதிப்பதில்லை. நல்ல கேரக்டராக இருந்தால் போதும். ஆனால் கிளாமராக மட்டும் நடிக்க மாட்டேன். திருமணமாகிவிட்டதால் சொல்லவில்லை. எப்போதுமே அப்படி நடித்ததில்லை.

 

வேலாயுதம்... ஒரு லட்சம் பேர் பங்கேற்ற காட்சி!


வேலாயுதம் படத்துக்காக ஒரு லட்சம் பேர் பங்கேற்ற காட்சியை பிரமாண்டமாகப் படமாக்கியுள்ளார் இயக்குநர் ஜெயம் ராஜா.

விஜய், ஹன்சிகா, ஜெனிலியா மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் 'வேலாயுதம்'. இப்படத்தை ஜெயம் ராஜா இயக்க, விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து வருகிறார்.

இப்படம் குறித்து ஜெயம் ராஜா கூறுகையில், "விஜய் சார் குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் பிடித்தவர். என் பாதையும் அதுதான். குழந்தைகள் மற்றும் குடும்பதினரை நோக்கியே என் படமும் இருக்கும். இந்த ஒத்த சிந்தனையால் எங்களுக்குள் கண்ணுக்கு தெரியாத இணக்கமும் நெருக்கமும் வந்து விட்டன.

'வேலாயுதம்' தீபாவளிக்கு வருகிறது. விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் கொண்டாட்டமான ஒரு படமாக இருக்கும். ஹீரோயிசத்தை சரியாகப் பயன்படுத்தி வெளிப்படுத்தியிருக்கும் படமாக இது இருக்கும்.

ஜெனிலியா, ஹன்சிகா என இரு நாயகிகளுக்குமே என்மேல் கடைசி வரை ஒரு சந்தேகம் இருந்தது. படத்தில் யாருக்கு முக்கியத்துவம் என்கிற சந்தேகம் அது. படத்தில் இருவருக்கும் சமவாய்ப்பு இருக்கிறது. படம் வெளியான பிறகு வகையில் இருவரும் பேசப்படுவார்கள்.

நட்சத்திரங்களின் ஒத்துழைப்பைப் போல தொழில் நுட்ப கலைஞர்களும் ஈடுபாட்டுடன் உழைத்து இருக்கிறார்கள். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி 'வேட்டைக்காரன்' பாடல்களைத் தாண்டி பேசப்பட வேண்டும் என்று கடுமையாக பாடுபட்டார். அதனால்தான் அவர் போட்டுக் காட்டிய 6 மெட்டுகளும் முதல் முறையிலேயே பிடித்துப் போய் பாடலாயின. அதனால்தான் ஆடியோ விற்பனையிலும் 'வேலாயுதம்' சாதனை படைத்தது.

தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் பற்றி சொல்ல வேண்டியதில்லை. படம் நன்றாக வர அவர் ஆகாயம் வரை மேலே போவார். பாதாளம் தாண்டியும் கீழே செல்பவர். ஒரு காட்சிக்கு ஒரு லட்சம் பேர் தேவைப்பட்டனர். ஏன் எதற்கு என்று கேட்கவில்லை. ஏற்பாடு செய்து விட்டார்.. அதுவும் கேரளாவில்... அசந்து போய் விட்டேன்.

இதுவரை 150 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. பொள்ளாச்சி, சென்னை, கொச்சி, லடாக், ஹைதராபாத், விசாகப்பட்டினம், ஒரிசா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. பாக்கியுள்ள ஒரு பாடலுக்காக காஷ்மீர் செல்ல இருக்கிறோம்.

தமிழ் ரசிகர்களுக்கு புத்தம் புது அனுபவமாக வேலாயுதம் அமையும் வகையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன," என்றார்.
 

சரோஜாதேவி மாதிரி இருக்கீங்க: கவிதா நாயருக்கு புகழாரம்!


முதல் இடம் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான கவிதா நாயர் சரோஜாதேவி மாதிரி இருப்பதாக பலரும் சொல்கிறார்களாம். தனது பெயரில் உள்ள நாயரை நீக்கியுள்ளார் அவர்.

முதல் இடம் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு கிடைத்த கதாநாயகி கவிதா நாயர். மும்பையில் வசித்த அவர் தற்போது சென்னையில் குடியேறியுள்ளார். தமிழ் மற்றும் மலையாளப் பட வாய்ப்புகள் அவரைத் தேடி வருகிறதாம். அதனால் தான் இடமாற்றம்.

இது குறித்து கவிதா நாயர் சாரி கவிதா கூறியதாவது,

என்னைப் பார்ப்பவர்கள் நான் சரோஜா தேவி மாதிரி இருப்பதாக புகழ்கிறார்கள். அது எனக்கு பெருமையாக உள்ளது. எனது பெயரில் உள்ள நாயரை நீக்கவிட்டேன். அதனால் இனி அனைவரும் என்னை கவிதா என்று தான் அழைக்க வேண்டும் என்றார்.

 

சினிமா வரலாற்றில் முதல்முறையாக குறியீட்டை தலைப்பாகக் கொண்ட படம்!


உலக சினிமா வரலாற்றில் முதன் முறையாக ஒரு சினிமா படத்தின் தலைப்புக்கு பதிலாக, ஒரு குறியிட்டை (Symbol) தலைப்பாக வைத்திருக்கிறார்கள். இங்கே வெளியாகியுள்ள குறியீடுதான் இப்படத்தின் தலைப்பு. இதன் அர்த்தம் ஆறு மெழுகுவர்த்திகள்.

இப்படியொரு குறியீட்டை மட்டுமே தலைப்பாகக் காட்ட ஒரு காரணம் உண்டு. படத்தின் திரைக்கதை 6 வருடம் , 6 மாதம் , 6 வாரம் , 6 நாட்கள் , 6 மணி நேரம் , 6 நிமிடம் , 6 நொடி என்ற காலப் பிரிவில் வருவது போல அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்காக ஷாம் பிரத்யேகமாக 6 விதமான கெட்டப்புகளில் தோன்றுகிறார்.

இப்படம், தமிழ்நாட்டில் தொடங்கி ஆந்திரா , மகாராஷ்ட்டிரா (மும்பை), போபால் , டெல்லி , கோவா , கான்பூர் , லக்னோ வரை சென்று இறுதியாக கல்கத்தாவில் முடிகிறது. கதை ஒவ்வொரு மாநிலம் வழியாக பயணிக்கும் போது அந்தந்த மாநிலத்தின் நாடக நடிகர்கள், கூத்துக் கலைஞர்களைப் பயன்படுத்தப் போகிறார்களாம்.

இப்படத்திற்காக, ஷாம் இருபதிலிருந்து, இருபத்தைந்து கிலோ வரை தன் உடல் எடையைக் குறைக்கப் போகிறார். இதற்காக டாக்டர் செல்வம் தலைமையில் பிஸியோதெரபிஸ்ட், டயட்டீசியன், யோகா மாஸ்டர், மெடிட்டேசன் குரு, ட்ரெய்னர் ஆகியோரைக் கொண்ட பிரத்யேகமாக மருத்துவக் குழுவே அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குநர் வி இஸட் துரை கூறுகையில், “இந்திய சினிமாவில் ஒரு கதாநாயகன் இவ்வளவு எடையைக் குறைத்து, தன்னை வருத்தி, பாத்திரத்துக்கு மெருகூட்டுவது இதுவே முதல் முறை. உலக சினிமா கலைஞர்கள் டாம் ஹேங்ஸ் (கேஸ்ட் அவே ), கிரிஸ்டின் பேல் (மெஷினிஸ்ட்) இவர்களைப் போல ஷாமும் கதாபாத்திரத்துக்காக மெனக்கெடுகிறார்,” என்றார்.

மேலும், மலையாளத்தில் 1000 படங்களுக்கு மேல் நடித்த ஜெகதி ஸ்ரீ குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தமிழில் முதல் முறையாக இத்திரைப்படத்தில் நடிக்கிறார்.

ஜெயமோகன்

படத்துக்கான வசனத்தை ஜெயமோகன் எழுதுகிறார். மதி ஒளிப்பதிவை கவனிக்க , இசையை ஸ்ரீகாந்த் தேவாவும் , எடிட்டிங்கை ஆண்டனியும் கவனிக்கிறார்கள். கதை , திரைக்கதை இயக்கம் வி இஸட் துரை.

இப்போது போபாலில் இப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு நடக்கிறது!

 

இப்படி அசிங்கப்படுத்திட்டாங்களே... யார் என்னைக் கல்யாணம் பண்ணிப்பா? - நிகிதா


பெங்களூர்: தர்ஷனுடன் காதல் என்பது அடிப்படையில்லாதது... பொய்யானது. ஆனால் அதை வைத்து என்னை தடை செய்வதாக அறிவித்து அசிங்கப்படுத்திவிட்டார்கள். இனிமேல் என்னை யார் திருமணம் செய்து கொள்வார். இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா?," என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை நிகிதா.

கன்னட நடிகர் தர்ஷனுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி 3 ஆண்டுகள் கன்னடப் படங்களில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. இதனால் அதிர்ச்சியாகியுள்ளார் நிகிதா.

இவர் தமிழில் 2003ல் வெளியான குறும்பு படத்தில் அறிமுகமானார். சத்ரபதி, வெற்றி வேல் சக்தி வேல், சரோஜா போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சேரன் மற்றும் பிரசன்னாவுடன் முரண் படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் மூன்று படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். தெலுங்கிலும் நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தடை காரணமாக புதிய கன்னட படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மற்ற மொழிகளில் அவரை யாரும் தடுக்கவி்ல்லை.

ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் தான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக நிகிதா வருந்துகிறார்.

இது குறித்து நிகிதா இன்று அளித்த பேட்டியில், "எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. யாருடனும் எனக்கு தவறான தொடர்பும் கிடையாது. நான் அப்படிப்பட்ட பெண் அல்ல.

நடிகர் தர்ஷினுடன் என்னை இணைத்துப் பேசுவதால் சொந்த வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தர்ஷனுடன் காதல் என்பது அடிப்படையில்லாதது. பொய்யானது. இந்த பொய் குற்றச்சாட்டை வைத்து என்னை அசிங்கப்படுத்திவிட்டார்களே, இனிமேல் என்னை யார் திருமணம் செய்து கொள்வார்? இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா?

நான் ஒரு பெண் என்பதை தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளவர்கள் மறந்து விட்டனர். அவர்களின் தடை உத்தரவு என் சினிமா வாழ்க்கையை மட்டும் பாதிக்கவில்லை. சொந்த வாழ்க்கையையும் நிர்மூலமாக்கி விட்டது. எனது குடும்பத்தினரும் இதனால் மனம் உடைந்து போயுள்ளனர்.

தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு என்பது அவர்களின் குடும்ப பிரச்சினை. அதில் என்னை ஏன் இழுத்தார்கள் என்று புரியவில்லை. நான் வெளி மாநிலத்தில் இருந்து வந்த நடிகை, என்பதால் என்னை தண்டித்துள்ளனர்.

தர்ஷனுடன் எனக்கு தகாத தொடர்பு இருந்ததாக தயாரிப்பாளர் சங்கத்தில் நிரூபிக்க முடியுமா? சில இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நான் தவறு செய்ய வில்லை என்ற உண்மை தெரியும். அவர்கள் என்மேல் அனுதாபம் காட்டுகின்றனர். யார் உண்மையான குற்றவாளி என்பது விரைவிலேயே தெரியும். அப்போது நான் பட்ட அவமானத்துக்கு இழப்பு தர முடியுமா இவர்களால்?", என்றார்.
 

முழுகாமல் இருக்கிறார் பியான்ஸ்


பிரபல பாப் பாடகி பியான்ஸ் நோலஸ் கர்ப்பமாக உள்ளார்.

பிரபல அமெரிக்க பாப் பாடகி பியான்ஸ் நோலஸ். ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த பியான்ஸும், பிரபல பாடகர் ஜே-சியும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கடந்த 4-ம் தேதி பியான்ஸ் தனது 30வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது அவர் 30 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தேன் ஆனால் முடியவில்லை என்று வருத்தப்பட்டார்.

இந்நிலையில் பியான்ஸ் தற்போது கர்ப்பமாக உள்ளார். இதனால் கணவனும், மனைவியும் படுகுஷியாக உள்ளனர். பியான்ஸுக்கு வாழைப்பழத்தை தக்காளி சாஸில் முக்கி சாப்பிடப் பிடித்திருக்காம். இது தவிர ஓரியோ பிஸ்கட், பவுண்டி ஐஸ்க்ரீம் ஆகியவற்றை விரும்பி சாப்பிடுகிறாராம்.

இது மட்டுமில்லை கேலன், கேலனாக ஜின்ஜர் பீர் குடிக்கிறார். நம்ம ஊரில் எல்லாம் பெண்கள் கர்ப்பமடைந்தால் மாங்காய், ஊறுகாய் போன்றவற்றை நிறைய சாப்பிடுவார்கள். அந்த ஊரில் வித்தியாசமாக சாப்பிடுகிறார்கள்.
 

விசித்ராவின் தந்தை முகமூடிக் கொள்ளையர்களால் அரிவாளால் வெட்டிக் கொலை- கமல் படத்தில் நடித்தவர்


சென்னை: முன்னாள் கவர்ச்சி நடிகை விசித்ராவின் தந்தை வில்லியம்ஸ், முகமூடிக் கொள்ளையர்களால் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது தாயாரைத் தாக்கிய கொள்ளையர்கள் அவர் அணிந்திருந்த நகைகளையும், பணத்தையும் திருடிக் கொண்டு தப்பினர்.

நடிகை விசித்ராவின் சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்ச்சத்திரம் அருகே உள்ள செல்லம்பட்டறை ஆகும். இங்கு அவரது தந்தையின் பூர்வீக நிலங்கள், வீடு ஆகியவை உள்ளன.

இந்த வீட்டில், விசித்ராவின் தந்தை வில்லியம்ஸ் மற்றும் தாயார் மேரி வசந்தா ஆகியோர் தங்கியுள்ளனர். இந்தத் தம்பதிக்கு விசித்ரா உள்பட 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவ்வப்போது இந்த வீட்டுக்கு வந்து பெற்றோரை பார்த்து விட்டுச் செல்வார் விசித்ரா.

இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் இங்கு முகமூடி அணிந்த சிலர் புகுந்தனர். ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த அந்த இரு திருடர்களும், முகமூ்டி அணிந்திருந்தனர்.வீட்டுக்குள் புகுந்த அவர்கள் பீரோக்களை சோதனையிட ஆரம்பித்தனர்.

சத்தம் கேட்டு விழித்த வில்லியம்ஸ், யார் அது என்று கேட்டபடி வந்தார். இதைப் பார்த்த கொள்ளையர்கள் அவரை மிரட்டி அமைதியாக இருக்குமாறு கட்டளையி்ட்டனர். பின்னர் நகைகளை எடுத்துத் தரும்படி உத்தரவிட்டனர். ஆனால் வில்லியம்ஸ் அவர்களைத் தாக்க முயற்சித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் வில்லியம்ஸை சரமாரியாக தலையில் வெட்டினர். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சிறிது நேரத்தில் மரணமடைந்தார். இதைப் பார்த்த மேரி வசந்தா கதறித் துடித்தார். அப்போது அவரையும் கொள்ளையர்கள் தாக்கினர். இதில் அவரது தலை மற்றும் நெற்றியில் காயம் ஏற்பட்டது. அவர் மயங்கி விழுந்தார்.

அதன் பின்னர் வீடு முழுவதும் தேடிய கொள்ளையர்கள், வீட்டில் இருந்த 20 பவுன் நகைகள், ரூ. 10,000 பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். பட்டுப் புடவை உள்ளிட்டவற்றையும் கட்டிக் கொண்டு தப்பினர்.

இந்த நிலையில் இன்று காலையில் விசித்ரா வீட்டில் வேலை பார்த்து வந்த காசியம்மாள் வேலைக்காக வந்தார். அப்போது வீடு திறந்து கிடக்கவே உள்ளே போய் பார்த்த அவர் வில்லியம்ஸ் பிணமாக கிடப்பதையும், வசந்தா காயமடைந்து கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து டி.எஸ்.பி. கஜேந்திர குமார், இன்ஸ்பெக்டர் கோபால் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். வில்லியம்ஸ் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வசந்தாவும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய வசந்தா, வந்த கொள்ளையர்களுக்கு வயது 20க்குள் இருக்கும் என்று கூறினார்.

கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சுங்குவார்ச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கமல் படத்தில் நடித்தவர்

கொல்லப்பட்ட வில்லியம்ஸ் முன்பு சினிமாவிலும் நடித்துள்ளார். கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த மனிதரில் எத்தனை நிறங்கள் படத்தில் சிறிய வேடத்தில் வில்லியம்ஸ் நடித்துள்ளாராம்.
 

விஸ்வரூபம்: கமல் ஜோடி ஏமி ஜாக்சன்?


விஸ்வரூபம் படத்தில் கமலுடன் ஜோடியாக மதராசபட்டினம் புகழ் ஏமி ஜாக்சன் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

கமல் இயக்கி நடிக்கும் விஸ்பரூபம் படத்தில் அவருக்கு ஜோடியாக மதராசபட்டினம் கதாநாயகி ஏமி ஜாக்சன் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. விஸ்ரூபம் படத்தை செல்வராகவன் எடுப்பதாக இருந்தது. ஆனால் தானே இயக்கி, நடிக்கப்போவதாக கமல் அறிவித்தார்.

இந்த படத்தின் மூலம் சோனாக்ஷி சின்ஹா தமிழில் அறிமுகமாகிவிருந்தார். கால்ஷீட் பிரச்சனையால் அவர் விலகிக் கொண்டார். அடுத்து நடிகை அனுஷ்கா நடிப்பார் என்று பேசப்பட்டது. அதுவும் புஸ்ஸானது. பின்னர் சமீரா ரெட்டி கமலுடன் ஜோடி சேர்கிறார் என்றார்கள். அதுவும் இல்லை என்றாகிவிட்டது.

இப்படி ஒவ்வொரு கதாநாயகியும் வருவதும், போவதுமாக இருக்கையில் மதராசபட்டினத்தில் அசத்திய ஏமி ஜாக்சன் கமலுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் என்று பேசப்படுகிறது. இந்த படத்தில் கமல் போலீஸ் அதிகாரியாக வருகிறார். கதாநாயகி உளவுத் துறை ஏஜென்டாக வருகிறார்.

ஏமியாவது நடிப்பாரா அல்லது வேறு யாராவது வருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...
 

'ரெபெல்': தமன்னா உள்ளே, அனுஷ்கா வெளியே!


தெலுங்கு படமான ரெபெல்லில் 'உயர அழகி' அனுஷ்காவை ஓரங்கட்டிவிட்டு பிரபாஸுடன் ஜோடி சேர்ந்துள்ளார் 'ஒல்லி அழகி' தமன்னா.

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தெலுங்கில் ரெபெல் என்ற படத்தை எடுக்கிறார். இதில் கதாநாயகியாக நடிக்க அனுஷ்காவை அணுகினார். முதலில் ஓகே சொன்னவர் ராகவா லாரன்ஸுடன் ஏற்பட்ட லடாயால் வாக் அவுட் செய்துவிட்டார். ஏற்கனவே அனுஷ்கா காஞ்சனா படத்தில் நடிக்கவும் மறுத்துவிட்டவர் என்பது நினைவிருக்கலாம். அதன் பிறகுதான் 'அஜால் குஜால்' லக்ஷ்மி ராயை படத்தில் சேர்த்தார் லாரன்ஸ்.

இந்த நிலையில், ரெபெல் படத்திற்கு நாயகியாக வந்து சேர்ந்துள்ளார் தமன்னா. கார்த்தி கல்யாணத்திற்குப் பிறகு தமன்னாவை அதிகம் தமிழில் காண முடியவில்லை. தமிழில் படங்கள் இல்லாமல் ஆந்திரக் கரையிலேயே இருக்கும் தமன்னாவுக்கு அடித்தது அதிர்ஷ்டம். ரெபெல் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். பிரபல நடிகர்பிரபாஸுடன் ஜோடி சேர்கிறார்.

வரும் 15-ம் தேதி ஹைதராபாத்தில் படப்பிடிப்பு துவங்குகிறது. படக்குழுவினர் விரைவில் பாங்காக் பறக்கவிருக்கின்றனர்.

இந்த படத்தில் தீக்ஷா சேத் இரண்டாவது கதாநாயகியாக வருகிறார். படத்திற்கு இசை எஸ். எஸ். தமன். ஸ்ரீ பாலாஜி சினி ஆர்ட்ஸ் மீடியாவைச் சேர்ந்த ஜே பகவான், ஜே புல்லா ராவ் தான் தயாரிப்பாளர்கள்.
 

வித்யா பாலனின் உதடுகளுக்காக காத்திருக்கும் துஷார் கபூர்!


டர்டி பிக்சர் படத்தில் வித்யா பாலனை முத்தமிடுவதில் எனக்கு எந்த டென்ஷனும் இல்லை என்று நடிகர் துஷார் கபூர் தெரிவித்துள்ளார். விரைவில் இவர்கள் இருவரும் பங்கேற்கும் லிப் லாக் காட்சியைப் படமாக்கவுள்ளனராம்.

கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து டர்டி பிக்சர் படம் உருவாகி வருகிறது. இதில் சில்க் ஸ்மிதாவாக வித்யா பாலன் நடிக்கிறார். இந்த படத்தில் நெருக்கமான காட்சிகளுக்கும், முத்தக் காட்சிகளுக்கும் குறைவேயில்லை.

இதில் நடிகர் துஷார் கபூர் ராமாகாந்த் என்ற எழுத்தாளராக நடிக்கிறார். படத்தில் அவருக்கும் வித்யா பாலனுக்கும் லவ்வோ லவ். துஷார் கபூர் தவிர்த்து இரண்டு முக்கிய ஆண் கதாபாத்திரங்களும் உள்ளன. ஒன்று நசீருத்தீன் ஷா, இன்னொன்று முத்தக் காட்சிகளுக்குப் பெயர்போன 'சீரியல் கிஸ்ஸர்' இம்ரான் ஹஷ்மி. அய்யய்யோ இம்ரான் ஹஷ்மியா என்று தானே நினைக்கிறீர்கள். முத்தக் காட்சிகள் என்றதும் இயக்குனருக்கும் இம்ரான் நினைவு வந்துவிட்டது போலும். ஆனாலும் இம்ரானின் உதடுகளுக்கு இதில் வேலை இல்லையாம்.

படத்தில், நசீருத்தீன் ஷா ஒரு வயதான சூப்பர் ஸ்டாராக வருகிறார். அதுவும் வித்யா பாலன் மீது மோகம் கொள்ளும் கதாபாத்திரம். இதில் ஒரு விந்தை என்னவென்றால் படத்தில் இம்ரான் ஹஷ்மிக்கு, வித்யா பாலனை வெறுக்கும் கதாபாத்திரம். அடடா...தப்பிச்சிருச்சே வித்யா உதடு!

துஷார் கபூர் மற்றும் வித்யா பாலன் வரும் நெருக்கமான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. ஆனால் 'இச் இச்' காட்சி மட்டும் இன்னும் எடுக்கவில்லை. விரைவில் உதட்டுப் பக்கம் போகப் போகிறார்களாம்.

இதற்கிடையே, வித்யாவுக்கு முத்தம் கொடுக்கணுமே என்ற டென்ஷனே இல்லாமல் துஷார் படு கூலாக உள்ளார். இது குறித்து அவர் பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது,

நான் கூலாக உள்ளேன். ஏனென்றால் வித்யா தான் எனக்கு முத்தம் கொடுக்க வேண்டும். அவர் என்னைச் சுற்றி, சுற்றி வந்து சூடேற்றி முத்தம் கொடுக்க வேண்டும். எல்லா வேலைகளையும் அவர் தான் செய்யவிருக்கிறார். முத்தத்தை வாங்கிக் கொள்வது தான் என் வேலை என்றார்.

அதானே வேலை பார்ப்பதுதானே கஷ்டம், சும்மா இருப்பதில் என்ன நஷ்டம்... பெஸ்ட் ஆப் 'லாக்' துஷார்!
 

ரஜினிக்கு நாங்கள் செய்யும் மரியாதை 'ரா ஒன்'! - ஷாரூக்கான்


சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நாங்கள் செய்யும் மரியாதை ரா ஒன், என்கிறார் ஷாரூக்கான்.

ரஜினியின் பெயர், ரஜினியின் ரசிகர்களை முடிந்த வரை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதில் கோலிவுட்டுக்குச் சளைத்தவர்களில்லை பாலிவுட் நட்சத்திரங்களும்.

ரா ஒன் படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, அது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் - தி ரோபோ படத்தை அப்படியே காப்பியடிக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டது. காரணம், எந்திரன் தயாராவதற்கு முன் அந்தக் கதையில் நடிக்க இருந்தவர் ஷாரூக்கான்தான். கதை, திரைக்கதை முழுமையாக அவருக்குத் தெரியும் என்பதால், அந்த பாதிப்பில் ரா ஒன்னை எடுத்து வருவதாகக் கூறப்பட்டது.

படத்தின் போஸ்டர்கள், டிசைன்கள், பாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் முன்னோட்டக் காட்சிகள் அனைத்தும் எந்திரனைப் போலவே உள்ளதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் படம் படம் குறித்த நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த ஷாரூக்கானிடம், ரா ஒன், எந்திரன் படத்தின் தழுவலா என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஷாரூக்கான், "இரண்டும் வெவ்வேறு படங்கள். ரஜனி நடித்த எந்திரனுக்கும், எங்களது ரா ஒன்னுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. நான் வேறு எதைப்பற்றியும் பேச விரும்பவில்லை.

ஆனால் ஒன்று... ரஜினி சார் மீது நாங்கள் பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறோம். சொல்லப் போனால், இந்த ரா ஒன் படமே ரஜினி சாருக்கு நாங்கள் செலுத்தும் மரியாதையாகத்தான் நினைக்கிறோம். நாங்கள் அந்த அளவு அவரை நேசிக்கிறோம்," என்றார் ஷாரூக்.

ரா ஒன் படத்தை அபிநவ் சின்ஹா இயக்கியுள்ளார். ஷாரூக்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை இந்தி தவிர, தமிழ் மற்றும் தெலுங்கிலும் ரிலீஸ் செய்கிறார் ஷாரூக்கான்!
 

'நயன்தாராவுக்கு ஒரு நியாயம்... நிகிதாவுக்கு ஒரு நியாயமா?'


கன்னட நடிகர் தர்ஷன் குடும்பப் பிரச்சினைக்கு காரணம் என்று கூறி நடிகை நிகிதாவுக்கு 3 ஆண்டுகள் தடை விதித்திருப்பது, திரையுலகில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெறும் சந்தேகத்தின் பேரில் நிகிதாவுக்கு தடை விதித்தது சரி என்றால், உண்மையிலேயே ஒரு குடும்பத்தைக் கெடுத்து, ஒரு பெண் விவாகரத்தும் பெறும் அளவுக்குப் போகக் காரணமாக இருந்த நயன்தாராவை மட்டும் கண்டுகொள்ளாமல் விட்டது சரியா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் பலரும்.

தெலுங்கு நடிகர்கள் பலரும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கன்னட திரையுலகினரின் முடிவு தங்களைக் கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ளனர் (நிகிதா தெலுங்கில்தான் அதிகப்படங்கள் நடித்துள்ளார்).

தமிழகத்திலும் நிகிதா விவகாரத்தில் சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்து மக்கள் கட்சி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னட நடிகர் தர்ஷனுடன் தொடர்பு வைத்திருந்த நடிகை நிகிதாவுக்கு அங்கு உள்ள தயாரிப்பாளர் சங்கம் 3 வருடம் நடிக்க தடை விதித்துள்ளது. இந்த முடிவை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது.

இதுபோன்ற தண்டனைகள் நடிகர், நடிகைகள் வாழ்க்கையை நெறிமுறைப்படுத்தும். கர்நாடக தயாரிப்பாளர் சங்கத்தை பின்பற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பிரபுதேவா வாழ்க்கையில் நடிகை நயன்தாரா குறுக்கிட்டார். இதனால் ரம்லத் வாழ்க்கையை இழந்தார். நயன்தாராவுக்கும் இதுபோல் தடை விதித்து இருக்கவேண்டும். ஆனால் இங்கு அதை செய்ய தவறி விட்டனர். எனவே கன்னட தயாரிப்பாளர் சங்கத்தின் தடை நடவடிக்கைகளை தமிழகத்திலும் அமல்படுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்," என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது, "கன்னட சினிமாவினர் எடுத்த முடிவு அங்கு மட்டும்தான் பொருந்தும். ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை வேறு, தொழில் வேறு. அதில் நாம் தலையிட முடியாது," என்றார்.
 

அமலா பாலுக்கு நயன்தாரா பாராட்டு!


ப்ரியங்கா சோப்ரா மாதிரி அழகாக இருக்கிறீர்கள் என்று நடிகை அமலா பாலை பாராட்டியுள்ளார் நடிகை நயன்தாரா.

பொதுவாக இரு நடிகைகள் சினேகமாக இருப்பது அபூர்வமான விஷயமாகிவிட்டது சினிமாவில். அதிலும் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்வது மிக அரிதான விஷயமாகிவிட்டது.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வெளியான அமலா பால் புகைப்படங்களைப் பார்த்த நயன்தாரா, "உங்கள் தோற்றம் அசத்தலாக உள்ளது. அப்படியே பிரியங்கா சோப்ராவை பார்ப்பது போல உள்ளது," என்று எஸ்எம்எஸ் அனுப்பினாராம்.

இதில் நெகிழ்ந்துபோன அமலாபால், "நயன்தாராவை நினைத்தால் எனக்குப் பெருமையாக உள்ளது. எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த (மலையாளப் பெருமையாம்!) நயன்தாரா, ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் இந்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர். அவர் வாயால் என்னைப் பாராட்டிதை பல விருதுகளைப் பெற்றதற்கு சமமான உணர்கிறேன். அவர்தான் இனி எனக்கு முன்னோடி," என்றார்.

நடிப்பில் மட்டும் முன்னோடியா எடுத்துக்கங்க... அதான் நல்லது!
 

நான் ரஜினியின் ரசிகன்தான்... ஆனால் ரஜினியாக நடிக்கவில்லை! - சல்மான்


நான் ரஜினியின் ரசிகன்தான். ஆனால் அவரது வேடத்தில் நடிக்கவில்லை. அதை ரசிகர்கள் விரும்புவார்களா என்ற கேள்வி உள்ளதால் நடிக்கவில்லை, என்றார் சல்மான்கான்.

ரஜினியின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் ஒன்றை சல்மான்கானின் மைத்துனரும் பிரபல தயாரிப்பாளருமான அதுல் அக்னிஹோத்ரி தயாரிப்பதாகவும், அதில் ரஜினிகாந்தாக சல்மான் நடிப்பார் என்றும் செய்தி வெளியானது. இதனை அதுல் அக்னிஹோத்ரியும் ஒரு பிரஸ்மீட்டில் அறிவித்தார்.

ஆனால் இதற்கு ரசிகர்கள் மற்றும் சக நடிகர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினி ஒரு சகாப்தம். அவரைப் போல வேறு யார் நடித்தாலும் ஏற்க முடியாது என்று தெரிவித்திருந்தனர்.

இன்னொரு பக்கம், ரஜினியின் குடும்பத்தினர் இந்தப் படத்துக்கு அனுமதி வழங்க முடியாது என்று கூறிவிட்டனர். "இப்படியொரு படம் எடுப்பதை நாங்கள் யாரும் விரும்பவில்லை. இது குறித்து எங்களிடம் இதுவரை யாரும் பேசவுமில்லை," என்று ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முக நரம்பு அறுவைச் சிகிச்சை முடிந்து லண்டன் வந்த சல்மான்கான் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் ரஜினி வாழ்க்கை வரலாறு படம் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சல்மான், "ரஜினியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நான் நடிக்கவில்லை. ரசிகர்கள் அதை எந்த அளவுக்கு ஏற்பார்கள் என்பதில் சந்தேகம் உள்ளது. தேவையில்லாமல் அவர்களின் எதிர்ப்புக்கு ஆளாக விரும்பவில்லை. மற்றபடி நான் ரஜினியின் தீவிர ரசிகன். நானே ரஜினியாக மாற வேண்டும் என ஆசைப்படவில்லை... இந்திய சினிமாவில் ஒரு ரஜினிதான்... ஒரு சல்மான்தான்!," என்றார்.
 

ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத்


சென்னை: சினிமாவை தவிர்த்து ரசிகர்களுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அரசியல் கருத்துக்களை வெளியிட உரிமை இருக்கிறது. என் ரசிகர்களை பொறுத்தவரை அவர்கள் என் படங்களை பார்த்து ரசிக்க வேண்டும். சுதந்திரமான சிந்தனை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மன்றங்களைக் கலைத்தேன், என்கிறார் அஜீத்.

நடிகர் அஜீத்குமார் தனது ரசிகர் மன்றங்களை கடந்த மே மாதம் கலைத்துவிட்டார். அஜீத் அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்த்துக் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு மன்றத்தை அஜீத் கலைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனாலும் மங்காத்தா படத்துக்கு பேனர்கள், கொடி தோரணங்கள் கட்டி கொண்டாடினார்கள். மன்றத்தைக் கலைத்ததால் படம் ஓடாது என்று சிலர் கூறி வந்த நிலையில், அதைப் பொய்யாக்கி மங்காத்தா ஹிட் படமாகியுள்ளது.

இந்த நிலையில் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன் என்பது பற்றி அஜீத் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "சினிமாவுக்கும் அரசியலுக்கும் உள்ள பந்தம் இறுகி வருகிறது. ரசிகர்கள் வெவ்வேறு வாழ்க்கை முறைகளில் இருந்து வருகிறார்கள். அவர்கள் நலன் எனக்கு முக்கியமாக படுகிறது. சினிமாவை தவிர்த்து அவர்களுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. சினிமா என்பது பொழுதுபோக்கு சார்ந்தது. அதை தனிப்பட்டவர்கள் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளக்கூடாது.

ஒவ்வொருவருக்கும் அரசியல் கருத்துக்களை வெளியிட உரிமை இருக்கிறது. என் ரசிகர்களை பொறுத்தவரை அவர்கள் என் படங்களை பார்த்து ரசிக்க வேண்டும். இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ரசிகர்மன்றத்தை கலைத்தேன்.

எனது முடிவை பலரும் பாராட்டினார்கள். அரசியல் முடிவுகளை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அமைப்பில் இருந்துதான் செய்ய வேண்டும் என்பது அல்ல.

சமூகத்தில் இரண்டு பிரிவு மக்கள் உள்ளனர். ஒரு பிரிவினர் நேரடியாக களம் இறங்குவார்கள். இன்னொரு பிரிவினர் தனி மனிதனாக இருந்து கொண்டு என்ன செய்யலாம் என்று கேட்பவர்கள். நான் இதில் இரண்டாவது வகை.

எனக்கு அரசியல் ஆர்வம் கிடையாது. என் சக்திக்கேற்ப மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். ஒவ்வொருவரும் இதுபோல் செயல்பட்டால் உலகம் சிறப்பாக மாறும்.

மங்காத்தா படத்தில் நரைத்த தாடியுடன் வந்தேன். பில்லா-2 படத்தில் இளமையாக வருகிறேன்.

இப்படத்துக்கு பின் என் வயதுக்கேற்ற வேடங்களைத் தேர்வு செய்து நடிப்பேன்," என்றார் அஜீத்.