அஜீத் பட இயக்குனர் கவிகாளிதாஸ் திடீரென மரணம் அடைந்தார்

திரைப்பட இயக்குநர் கவிகாளிதாஸ் உடல்நலக் கோளாறு காரணமாக திடீர் மரணமடைந்தார். அவருக்கு வயது 45.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கொல்லபாளையத்தை சேர்ந்தவர் கவிகாளிதாஸ் (வயது 45). திரைப்பட இயக்குனர். இவருடைய மனைவி பிரியா (25), இவர்களுக்கு மூன்று வயதில் அஷ்மிதா என்ற குழந்தை உள்ளது.

அஜீத் பட இயக்குனர் கவிகாளிதாஸ் திடீரென மரணம் அடைந்தார்

அஜீத் பட இயக்குநர்

நடிகர் அஜீத் நடித்த ‘உன்னைக்கொடு என்னை தருவேன்‘ என்ற படத்தை கவிகாளிதாஸ் இயக்கியுள்ளார். மேலும் திரைப்பட இயக்குனர் பாக்யராஜிடம், ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, சித்து பிளஸ்2, பாரிஜாதம், சொக்கத்தங்கம்‘ போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய ‘பீமாபுரம் பெல்லாடு‘ என்ற படத்திற்கு கதை வசனமும் எழுதி உள்ளார்.

படம் இயக்கத்திட்டம்

தற்போது பாடலாசிரியரும், நடிகருமான பா.விஜயை வைத்து ‘ராஜகுமாரனும், மந்திரிமார்களும்‘ என்ற படத்தை இயக்க கவிகாளிதாஸ் முயற்சித்து வந்தார். இந்தநிலையில்தான் கடந்த சில நாட்களாக மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை

கடந்த 20 ஆண்டுகளாக சென்னை டிரஸ்ட்புரத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவின் பக்கத்து வீட்டில் குடும்பத்துடன் வசித்துவந்த கவிகாளிதாஸ், சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்தியூர் வீட்டில்

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் நோய் குணமாகவில்லை. உயிரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டதால், அவரை வீட்டிற்கு அழைத்து செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதைத்தொடர்ந்து அந்தியூர் கொல்லபாளையத்தில் உள்ள அவருடைய சொந்த வீட்டிற்கு கவிகாளிதாஸ் அழைத்து வரப்பட்டார்.

மோசமான உடல்நிலை

இந்தநிலையில் நேற்று மதியம் 2.30 மணி அளவில் கவிகாளிதாசின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அப்போது அவருடைய மனைவி பிரியா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

அந்தியூரைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பிரமுகர்கள் கவிகாளிதாசின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து மாலை அந்தியூர் பெரிய ஏரியில் கவிகாளிதாசின் உடல் எரியூட்டப்பட்டது.

 

ரஜினிகாந்த் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதியா?: கே.எஸ். ரவிக்குமார் விளக்கம்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என்று இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து வரும் படம் லிங்கா. கே. எஸ். ரவிக்குமார் இயக்கும் இந்த படத்தில் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா என்று இரண்டு நாயகிகள் உள்ளனர். படத்தின் படபப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ரஜினிகாந்த் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதியா?: கே.எஸ். ரவிக்குமார் விளக்கம்

இந்நிலையில் சண்டை காட்சிகளை படமாக்கியபோது ரஜினி மயங்கி விழுந்துவிட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று காலை முதல் செய்திகள் வெளியாகின. இதை பார்த்த ரசிகர்கள் ரஜினிக்கு என்ன ஆனதோ என்று நினைத்து கவலை அடைந்தனர்.

இதை அறிந்த கே.எஸ். ரவிக்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

லிங்கா படப்பிடிப்பின்போது ரஜினிக்கு உடல்நலம் சரியில்லை என்று பிரபல தமிழ் செய்தித்தாளில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த செய்தி உண்மை இல்லை. ரஜினிகாந்த் நலமாக உள்ளார். அவர் சந்தோஷமாக படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

 

யுடியூப் ஹிட்டுக்காக கொண்டாட்டம் தேவையில்லை: இயக்குநர் வசந்தபாலன்

சென்னை: யுடியூப்பில் வெளியான ட்ரெயிலர்,டீசர் ஹிட்டுக்கெல்லாம் கொண்டாட்டம் தேவையில்லை என்று வசந்தபாலன் கூறியுள்ளார். சினிமாக்காரர்கள் களத்தில் இறங்கி போராட்டும் நேரம் வந்து விட்டதாகவும் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘பூஜை' படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இதற்காக விஷால் காரைக்குடியிலேயே முகாமிட்டு நடித்து வருகிறார்.

யுடியூப் ஹிட்டுக்காக கொண்டாட்டம் தேவையில்லை: இயக்குநர் வசந்தபாலன்

இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் கேபிள் சேனல்களில் சமீபத்தில் வெளியான ‘வடகறி' மற்றும் ‘உன் சமையலறையில்' ஆகிய படங்களை திருட்டுத்தனமான ஒளிபரப்புவதாக விஷாலுக்கு தகவல் கிடைத்தது.

அவை இரண்டுமே தனது படங்கள் இல்லாவிட்டாலும், இது குறித்து காரைக்குடியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்து, போலீசாருடன் நேராக சம்பந்தப்பட்ட லோக்கல் கேபிள் சேனல்களுக்கு நேரடியாக சென்றார். இந்த விவகாரத்தில் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காரைக்குடியில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷால், இதுபோன்ற முறையற்ற செயல்களில் ஈடுபடும் சேனல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உதவுமாறு பத்திரிகையாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

இயக்குநர் வந்தபாலன் பாராட்டு

திருட்டு விசிடி எதிராக போராடியதற்காக நடிகர் விஷாலை பலரும் பாராட்டி வருகிறார்கள். இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விஷாலை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

திருட்டு விசிடி ஒளிபரப்பு

அப்பதிவில், "திருட்டு விசிடிக்கு எதிரான விஷாலின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.விஷாலை போன்று ஒவ்வொரு கதாநாயகனும் இயக்குநரும் ஏன் ஒவ்வொரு சினிமாக்காரனும் களத்தில் இறங்கினால் தான் இந்த திருட்டு விசிடி பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும். ஆம்னி பஸ்ஸில் ஏன் அரசு நெடுந்தொலைவு பேருந்துகளில் திருட்டு விசிடி ஒளிப்பரப்புகிறார்கள்.

தியேட்டர்களில் கூட்டமில்லை

சென்னை கோயமுத்துரர் தவிர அனைத்து சிறு நகரங்களில் சனிக்கிழமை மாலைக்காட்சி, இரவுக்காட்சி, ஞாயிறு மாலைக்காட்சியை தவிர திரையரங்குகளில் கூட்டமே இல்லை. பெருநகரங்களை தவிர சிறு நகரங்களில் திரையரங்குகளில் படம் ஓடி சம்பாதிப்பது சிறு படங்களுக்கு பெரும் கனவு தான்.

பெரிய நடிகர்கள் படம்

ரஜினி, கமல், அஜீத்,விஜய்.சூர்யா படங்களுக்கு கூட்டம் வருகிறது. மற்ற அனைத்து கதாநாயகர்களின் நிலைமை மிக மோசம். படம் நல்லாயிருக்கிறது என்ற செய்தி பரவி கூட்டம் திரையரங்குக்கு வர நாள் ஆகிறது.

வரிவிதிப்பு

சேட்டிலேட் விற்பனையையும் சென்னை நகரத்தில் படம் ஓடுவதையும் நம்பி தான் சினிமா இருக்கிறது.ஆடியோ பிசினஸ் இல்லை.இதில் U/A...A படங்களுக்கு 30% வரி விதிப்பு வேறு சினிமாவை ஆட்டிப்படைக்கிறது.

யுடியூப் ஹிட்டுக்கு

யுடியூப்பில் நம் டிரைலரை 21 லட்சம் பேர் பார்த்து விட்டார்கள் என்ற கொண்டாட்டம் ஒரு பக்கம் என்றால் இந்த 21 லட்சம் பேர் நம் படத்தின் பாடல்களை இலவசமாக டவுண்லோடு செய்து கேட்பார்கள் என்று அர்த்தம்.

சந்தோசப்பட வேண்டாம்

படம் வெளிவந்தால் இந்த 21 லட்சம் பேரும் திரையரங்குக்கு வருபவர்கள் அல்ல. பாதி பேர் முடிந்தால் நம் படத்தையும் டவுண்லோடு செய்து பார்த்துவிடுவார்கள் என்று தான் அர்த்தம். யுடியூப் ஹிட்டிற்காக நாம் சந்தோசப்பட ஒன்றுமில்லை நண்பர்களே.

போஸ்டர் ஒட்ட முடிவதில்லை

சினிமா போஸ்டர்களின் முலம் விளம்பரத்தை நிறுவமுடியாத நிலை உள்ளது. ஏனெனில் போஸ்டர் ஒட்டுவதற்கான சுவர்கள் குறைந்து விட்டன. கட்டுப்பாடுகள் பெருகி விட்டன. ஒட்டப்பட்ட போஸ்டர்கள் ஒரு நாள் கூட சுவரில் இருப்பதில்லை அதைக்கிழித்துவிட்டு அதன் மீது அடுத்த போஸ்டர் ஒட்டப்படுகிறது.

தொலைக்காட்சி விளம்பரங்கள்

தனியார் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வது தான் ஓரே வழி. அதன் விளம்பர செலவு மிக அதிகமாக இருக்கிறது. சில கோடிகளை முழுங்குகிறது.

சினிமாக்காரர்கள் களமிறங்கவேண்டும்

நாம் இலவசமாக கொடுக்கும் பாடல்களை காமெடி காட்சிகளை சண்டை காட்சிகளை விதவிதமாக பிரித்துபிரித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் போடுகிறார்கள். ஆனால் நாம் விளம்பரமுன்னு போய் நின்றால் பல லட்சங்களை கேட்கிறார்கள். ஒட்டுமொத்தமாக சினிமாக்காரர்கள் களத்தில் இறங்கி நம் வாழ்வாதாரத்திற்கு போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது." என்று வசந்தபாலன் கூறியுள்ளார்.

 

அந்த ஹீரோயின் படுத்திய பாடு கொஞ்சமா நஞ்சமா: புலம்பும் தயாரிப்பாளர்

சென்னை: மலையாளத்தில் பல வகை மதுவை மிக்ஸிங் செய்தால் வரும் பெயர் கொண்ட படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் நடித்த நாடோடிகள் நடிகை படுத்திய பாடு பற்றி தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நாடோடிகள் நடிகை மலையாள படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் நடித்தார். அ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் அந்த மூன்று எழுத்து படம் அண்மையில் வெளியானது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரின் மகனும் நடித்திருந்தார்.

இந்நிலையில் தயாரிப்பாளரின் மகன் நடிகையை பற்றி கூறுகையில்,

நாங்கள் எல்லாம் காலை 8 மணிக்கு படப்பிடிப்புக்கு வந்தால் அந்த நடிகை 11 மணிக்கு சாவகாசமாக வருவார். அண்ணா சாலையில் இருக்கும் 5 நட்சத்திர ஹோட்டலில் தான் தங்குவேன் என்பார். அவரது கணவருக்கும் சேர்த்து நாங்கள் செலவு செய்தோம். நடிகைக்கு தமிழில் மார்க்கெட் இல்லாதபோதிலும் அவருக்கு ரூ. 22 லட்சம் சம்பளம் கொடுத்தோம்.

இந்நிலையில் நான் இந்த படத்தில் நடிக்க என் கணவருடன் வெளிநாடு செல்ல எடுத்திருந்த டிக்கெட்டை ரத்து செய்துவிட்டேன் என்று கூறி ரூ.2.5 லட்சம் வாங்கிக் கொண்டார். நடிகையால் தினமும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை எங்களுக்கு நஷ்டம். படம் ரிலீஸாவதற்கு முன்பு இதை எல்லாம் கூற வேண்டாம் என்று தான் இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்தோம் என்றார்.

ஆனால் நடிகையின் தரப்போ இதை எல்லாம் மறுத்துள்ளது.

 

வெளிநாட்டு ஹோட்டலில் விபச்சார ரெய்டு: தெலுங்கு ஹீரோவுடன் சிக்கிய புஸு புஸு நடிகை

சென்னை: தெலுங்கு பட ஷூட்டிங்கிற்காக வெளிநாட்டுக்கு சென்ற இடத்தில் புஸு புஸு நடிகை புது பிரச்சனையை சந்தித்துள்ளார்.

புஸு புஸு நடிகை படப்பிடிப்பு இடத்தில் உள்ள அனைவரிடமும் ஜாலியாக பேசுவார். அதனால் அவருடன் நடிக்கும் படம் என்றால் நேரம் போவதே தெரியாது என்று ஹீரோக்கள் நினைப்பார்கள். இதை பார்த்த நடிகையின் அம்மாவும் எதுவும் சொல்லவில்லையாம்.

இந்நிலையில் நடிகை தேஜஸான தெலுங்கு நடிகருடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக வெளிநாடு சென்றுள்ளனர். வெளிநாட்டு ஹோட்டலில் ஹீரோவின் அறைக்கு சென்று நடிகை அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரம் பார்த்து அந்த ஹோட்டலில் விபச்சாரம் நடப்பதாக தகவல் கிடைத்து போலீசார் வந்து அறை, அறையாக சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரே அறையில் இருந்த ஹீரோவையும், நடிகையையும் போலீசார் தவறாக நினைத்துள்ளனர்.

இது குறித்து அறிந்த படக்குழுவினர் ஓடி வந்து இவர்கள் எங்கள் படத்தின் ஹீரோ, ஹீரோயின் என்று விளக்கம் கூறிய பிறகே போலீசார் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் நடிகை பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து ஹீரோக்களின் அறைக்கு சென்று அரட்டை அடிக்கும் வேலை எல்லாம் வேண்டாம் என்று நடிகைக்கு அவரது அம்மா உத்தரவிட்டுள்ளாராம்.

 

இவ்ளோ ‘அட்ஜஸ்ட்’ பண்ணி நடிச்சும் ஒரு தேங்க்ஸ் கூட சொல்லலையே... ஆதங்கத்தில் நடிகை!

வைத்தியர் படத்தில் நடித்துள்ள வளர்ந்து வரும் நடிகை அவர். தொடர்ந்து குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து வரும் இந்த நடிகைக்கு, வைத்தியர் படத்தில் நடித்த போது தங்குவதற்கு சரிவர வசதி செய்து தரப்படவில்லையாம்.

ஆனபோதும், தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைக்க விரும்பாத நடிகை ஒன்றும் பேசாமல் படத்தில் நடித்துள்ளார். இவ்வளவிற்கும் படத்தயாரிப்பாளர்கள் ஒன்றும் பாவப்பட்டவர்கள் இல்லை. ஆனபோதும், ஏனோ நாயகியை மட்டும் டீலில் விட்டு விட்டார்கள்.

ஆனால், இதைக் காரணம் காட்டி நடிகை ஒன்றும் சண்டை போடவில்லையாம். தன் திறமையான நடிப்பை இப்படத்திலும் காட்டியுள்ளாராம். இத்தனை அசவுகரியங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டு நடித்த நடிகைக்கு ஒரே ஒரு மனக்குறை மட்டும் தானாம்.

தயாரிப்புக் குழுவின் குறைகளை பொருட்படுத்தாமல் சிரமப்பட்டு நடித்துக் கொடுத்த தன்னைப் பாராட்டி ஒரு நன்றி கூட தயாரிப்பு தரப்பு கூறவில்லை என்பது தானாம் அது.

இதுவரை குடும்பக் குத்துவிளக்காக வலம் வந்த இந்த நடிகை, இந்த வைத்தியப் படத்தில் முதன்முறையாக குத்துப்பாட்டு ஒன்றிற்கு நடனமாடியிருக்கிறார் என்பது கொசுறுச் செய்தி.

 

அஞ்சலிக்கு கல்யாணம் ஆகிடுச்சா...?

சென்னை: சிலகாலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த அஞ்சலி தற்போது மீண்டும் சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் தமிழ் படமொன்றில் நடித்து வருகிறார்.

சித்தியின் கொடுமை எனப் பிரச்சினையை ஆரம்பித்த அஞ்சலி கடந்தாண்டு திடீர் என காணாமல் போனார். மீண்டும் நடிக்கலாம் என திட்டமிட்ட அஞ்சலிக்கு, இயக்குநர் களஞ்சியத்தின் படத்தை முடித்துக் கொடுத்தால் தான் புதிய பட வாய்ப்பு என தடங்கல் உண்டானது.

ஆனால், அனைத்துப் பிரச்சினைகளையும் சட்டரீதியாக பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவோடு தமிழ் ரசிகர்களுக்காக மீண்டும் நடிக்க வந்து விட்டார் அஞ்சலி.

அஞ்சலிக்கு கல்யாணம் ஆகிடுச்சா...?

படப்பிடிப்பிற்கு இடையே, அஞ்சலி தன்னைக் குறித்து வெளியான செய்திகளுக்கு விளக்கமளித்துள்ளார். முதலாவதாக தனக்கு அமெரிக்காவில் ரகசிய திருமணம் நடந்ததாக வெளியான செய்திக்கு அவர் மறுப்புத் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஆனந்த விகடனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :-

ஏகப்பட்ட பிரண்ட்ஸ்...

தமிழ், தெலுங்கு, கன்னடம்னு கிட்டத்தட்ட தென்னிந்திய மொழி எல்லாத்துலயும் நடிச்சுட்டு இருக்கேன். அத்தனை மொழி சினிமாவிலும் எனக்கு ஏகப்பட்ட பிரண்ட்ஸ் இருக்காங்க.

ரகசிய திருமணமா...

அப்படி இருக்கிறப்ப, ரகசியமா கல்யாணம் பண்ற அளவுக்கு எனக்கு என்ன தேவை?

பிரச்சினைகள் உண்மை தான்...

ஆனா, நான் கொஞ்சம் பிரச்சினைல இருந்தேன்ங்கிறது மட்டும் உண்மை. அதுல இருந்து இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா வெளில வந்துட்டு இருக்கேன்' எனத் தெரிவித்தார்.

உடம்பு சரியில்லையா...?

தொடர்ந்து ‘அஞ்சலிக்கு உடல் நலம் சரியில்லை' என வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, நீங்களே பார்க்கிறீங்களே... உங்க முன்னாடி தானே உக்காந்துருக்கேன்.

நீங்களே சொல்லுங்க...

ஆரோக்கியமாத் தானே இருக்கேன், ஒரு சீன் நடிச்சுட்டு வந்து தானே உங்க கூடப் பேசிட்டு இருக்கேன், உடம்பு முடியலைனா நடிக்க முடியுமா?

வதந்தி...

பிடிக்காதவங்க ஆயிரத்தெட்டு விஷயம் பரப்புவாங்க. அவங்களுக்கு வேற வேலை இல்லை. அதுக்கெல்லாம் நாம பதில் சொல்லிட்டு இருக்க முடியுமா?

நடக்கப் போறத பத்தி மட்டும்....

அதான் நல்லபடியா வந்துட்டேன்ல இனி நடக்கப் போறதைப் பத்தி மட்டும் பேசுவோம்' என பதிலளித்தார் அஞ்சலி.

களஞ்சியம் படம்...

தனது சினிமா மறுபிரவேசம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அஞ்சலி களஞ்சியம் படத்தில் நடிப்பது குறித்த கேள்விக்கு, ‘அவரோட படத்துல நடிக்க மாட்டேன்னு சொன்னது தான் பிரச்சினை, இப்ப அது கோர்ட்ல இருக்கு. அதைப் பத்தி பேச வேணாமே' என வாய் திறக்க மறுத்துள்ளார்.

 

துபாயில் மலையாள சினிமா தயாரிப்பாளர், மனைவி, மகளுடன் பிணமாகக் கண்டுபிடிப்பு

துபாய்: மலையாள சினிமா தயாரிப்பாளரான சந்தோஷ் குமார், அவரது மனைவி மஞ்சு மற்றும் மகள் கௌரி ஆகியோர் துபாயில் உள்ள வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். சவுபர்னிகா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர். அவர் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான மாதம்பி படத்தின் துணை தயாரிப்பாளர். துபாயில் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்த அவர் தனது மனைவி மஞ்சு மற்றும் மகள் கௌரியுடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் செட்டில் ஆனார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையில் இருந்து அவரது வீடு திறக்காமல் உள்ளதாக அவரது உறவினர் போலீசாருக்கு தெரிவித்தார். போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்தபோது சந்தோஷ் குடும்பத்துடன் பிணமாகக் கிடந்தது தெரிய வந்தது. அதிலும் மகள் கௌரியின் உடம்பில் பலமுறை கத்தியால் குத்திய அடையாளம் இருந்தது.

சந்தோஷ் குமார் குடும்பத்தோடு தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தோஷ் நிதி பிரச்சனையால் தான் குடும்பத்தோடு தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

மூன்று உடல்களும் படுக்கையறையில் அழுகிய நிலையில் கிடந்தன. யாரும் வீட்டை உடைத்து உள்ளே வந்ததற்காகன அடையாளம் இல்லை என்று சந்தோஷ் குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.