திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடர்வது தப்பா! - கேட்கிறார் மம்தா

Mamta Continue Her Acting Career

சென்னை: நடிகைகள் திருமணமான பிறகும், நடிப்பைத் தொடர்வது தவறா என்று கேட்டுள்ளார் நடிகை மம்தா.

நடிகை மம்தாமோகன் தாஸ் கடந்த ஆண்டு தொழில் அதிபர் பிரஜித் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் நடிக்க வந்துள்ளார். மலையாளத்தில் தற்போது நான்கு படங்கள் கைவசம் உள்ளன.

தமிழில் தடையறத் தாக்க படத்திலும் நடித்தார்.

திருமணத்துக்கு பிறகு நடிப்பது குறித்து அவரிடம் பேசியபோது, "திருமணத்துக்குப் பின் சினிமாவில் தொடரக் கூடாது என நடிகைகளுக்கு மட்டும் என்ன சட்டமா.. ஆண்கள் நடிக்கத்தானே செய்கிறார்கள். திருமணம் ஆன பிறகும் நடிப்பதில் எந்தத் தவறும் இல்லை.

இனி ஆண்டுக்கு மூன்று படங்களில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன்," என்றார்.

 

'தம்'மடிக்கும் ஹீரோயின் கரீனா - பெண்கள் அமைப்புகள் கண்டனம்!

Kareena Kapoor S Smoking Heroine Draws

மும்பை: மதுர் பண்டார்கரின் ஹீரோயின் படத்தில் தம்மடிக்கும் காட்சியில் நடித்து, அதை பெரிதாக விளம்பரப்படுத்தி வரும் கரீனா கபூருக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஹீரோயின் என்ற இந்தி படத்தில் நடிக்கிறார் கரீனா. ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக இருந்து, கடைசி நேரத்தில் விலகிக் கொண்ட படம் இது.

கதாநாயகிகள் வாழ்க்கைதான் கதை. ரூ. 18 கோடி செலவில் உருவாகியுள்ள இதில் கரீனாகபூர் கவர்ச்சியாகவும் புகை பிடித்தும், மது அருந்துவது போலவும் தத்ரூபமாக நடித்துள்ளாராம்.

செப்டம்பரில் ரிலீஸ் என்றாலும், கரீனா சிகரெட் பிடித்தபடி மது கோப்பையுடன் இருப்பது போல ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மும்பை நகரரெங்கும் ஒட்டப் பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கவர்ச்சியாக நடித்தால், வித்யாபாலனுக்குக் கிடைத்தது போல, தனக்கும் விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கரீனாகபூர் ஆடை குறைப்பு செய்து மது, சிகரெட் என துணிச்சலாக நடித்துள்ளார். இந்த போஸ்டர்களுக்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. போஸ்டர்களும் கிழித்து எறியப்பட்டன.

இதையடுத்து டிரெய்லரில் இருந்து புகை பிடிக்கும் காட்சி நீக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

 

சிங்கப்பூரில் மாற்றான் இசை வெளியீடு - ஆகஸ்ட் 9-ம் தேதி நடக்கிறது!

Maatran Audio Launch Be Held Singap   

சூர்யா நடித்துளள மாற்றான் படத்தின் இசை வெளியீட்டை சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடத்துகிறார்கள்.

கல்பாத்தி அகோரம் தயாரிக்க, கேவி ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடி காஜல் அகர்வால். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

பெரிய படங்களின் இசை வெளியீட்டை வெளிநாடுகளில் பிரமாண்டமாக நடத்தி, அதன் ஒளிபரப்பு உரிமையை பெரிய விலைக்கு விற்பது இன்றைக்கு சகஜமாகிவிட்டது.

அந்த வகையில் மாற்றான் படத்தின் இசை வெளியீட்டையும் சிங்கப்பூரில் நடத்துகிறார்கள். ஆகஸ்ட் 9-ம் தேதி இந்த விழா நடக்கிறது. இதன் ஒளிபரப்பு உரிமையை ஜெயா டிவி பெற்றுள்ளது.

தமிழ் சினிமா நட்சத்திரங்கள், சாதனையாளர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

 

உதிரிப்பூக்களில் திருப்பம்: சக்தியின் திருமணத்தில் சிக்கல் வருமா?

Suntv Serial Uthirippookkal

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி உதிரிப்பூக்கள் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கதையின் நாயகிக்கு திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்க அது நடக்குமா என்பதுதான் வரும் வார சஸ்பென்ஸ்.

சக்தியின் வளர்ப்பு அப்பா சிவநேசன் ஏற்பாடு செய்த திருமணம் சொந்தக்காரர்களின் சதியினால் நின்றுவிடுகிறது. சொந்த அப்பாவிடம் சென்றபின்னர் மீண்டும் அதே மாப்பிள்ளையுடன் ஷக்தி திருமணம் நடக்க ஏற்பாடாகிறது. சொந்த அப்பா தட்சிணாமூர்த்தி திருமணத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டே மறைமுகமாக அந்த திருமணத்தை மணமேடையில் தடுத்து நிறுத்தவும் ஏற்பாடு செய்கிறார். தனது மகளை அக்காள் மகன் இளங்கோவிற்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்து சதி செய்கிறார் தட்சிணாமூர்த்தி.

அவரது சாகச நாடகம் அரங்கேறும் தினம் வருகிறது. மணமேடையில் ஷக்தி விரும்பிய மணமகனுடன் திருமணம் நடந்ததா? அல்லது அவளது சொந்த அப்பா தட்சிணாமூர்த்தியின் திட்டப்படி இளங்கோ அவளுக்கு மாலையிட்டானா? பரபரப்பான திருப்பங்களுடன் தொடர்கிறது, தொடர்.

ஷக்தியாக மானசா நடிக்கிறார். வளர்ப்பு அப்பா சிவநேசனாக சேத்தனும் , சொந்த அப்பாவாக எல். ராஜாவும் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் வடிவுக்கரசி, ஸ்ரீலேகா, ரூபஸ்ரீ ஆகியோரும் நடிக்கிறார்கள். `ஹோம் மீடியா மேக்கர்ஸ்' சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள இந்த தொடரை விக்ரமாதித்தன் இயக்கியுள்ளார்.

 

20 நிமிடங்களில் 20 செய்திகள்!

சின்னச் சின்ன செய்திகள் சுவாரஸ்யத்தை தரக்கூடியவை. அதுபோன்ற ஒரு செய்தி நிகழ்ச்சி சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. கிரிக்கெட்டில் மட்டும்தான் 20-20 இருக்க முடியுமா என்ன? நாங்களும் 20 நிமிடத்தில் 20 செய்திகளைத்தருவோம் என்று களம் இறங்கியிருக்கின்றனர் சத்தியம் தொலைக்காட்சியினர்.

"சத்தியம் 20-20 செய்திகள்'' திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் இடம்பெறும் சூடான 20 செய்திகளை 20 நிமிடங்களில் தொகுத்து ஒரு செய்திக் கதம்பமாக வழங்குகிறார்கள். சர்வதேச அளவில் தொடங்கி மாவட்டம் வரையிலான செய்திகளை இந்த 20-20 செய்திகளில் தெரிந்துகொள்ள முடியும்.

 

சூர்யா - கார்த்தி பெயரைப் பயன்படுத்தி சோனா - சோனியா அகர்வாலிடம் தர்மஅடி வாங்கிய இளைஞர்!

Sona Sonia Agarwal Beat Surya Karthi Brother

தன்னை பிரபல நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் தம்பி என்று சொல்லிக் கொண்டு திரிந்த சரவணன் என்ற இளைஞருக்கு நடிகைகளிடம் தர்ம அடி கிடைத்துள்ளது.

நடிகைகள் சோனியா அகர்வால் மற்றும் சோனாவிடம்தான் இந்த இளைஞர் சிக்கி அடி வாங்கியுள்ளார்.

இந்த இளைஞர் முதலில் பிரபல மால் ஒன்றில் வேலை பார்த்தவராம். எப்படியோ அவர் சூர்யா- கார்த்தி அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டார்.

சூர்யா, கார்த்தி பெயரைச் சொல்லி திரையுலகில் இருப்பவர்களின் கைபேசி எண், சமூக வலைதளங்களில் நட்பு எனப் பெற்று அதை தவறாக பயன்படுத்தி வந்தாராம்.

'என்ன பாக்கனும்னா என் அண்ணனுங்க அலுவலகத்துக்கு வாங்க. நான் அங்க தான் இருப்பேன்' என்று கூறி அனைவரையும் நம்ப வைத்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் சோனியா அகர்வாலை பார்ட்டியில் தற்செயலாக சந்தித்த சரவணன், அவரிடம் ஏதோ தவறாகக் கூறியிருக்கிறார். அவர் தமிழில் பேசியதால் புரிந்து கொள்ளாத சோனியா, அதை சக நடிகை சோனாவிடம் அதை அப்படியே ஒப்பிக்க, சோனாவோ டென்ஷனாகி சரவணனை போட்டு அடித்ததாகக் கூறப்படுகிறது.

சரவணன் கூறியதன் அர்த்தத்தை சோனா விளக்க சோனியா அகர்வாலும், அவரது தம்பியும் ஹோட்டலில் அனைவர் முன்னிலையிலும் சரவணனை புரட்டியெடுத்துவிட்டார்களாம்.

ஹோட்டல் ஊழியர்கள் வந்து தடுத்து சூர்யா, கார்த்திக்கு தகவல் சொன்ன பிறகு, கொஞ்ச நேரத்தில் சண்டை சமாதானமானதாம்.

சரி, யார் இந்த சரவணன்?

 

'பிறந்த நாள் விருந்தெல்லாம் ஓகே.. மனைவி எங்கேப்பா?'

Aishwarya Not Attended Dhanush Birthday

ஆனாலும் புதுசாக, அநியாயத்துக்கு செயற்கையாக நட்பை விளம்பரப்படுத்தி வரும் ஜோடி என்றால் அது தனுஷும் சிம்புவும்தான்!

நாம் இப்படிக் குறிப்பிடுவதற்குக் காரணம், இந்த இருவரும் கடந்த காலங்களில் எவ்வளவு முடியுமோ அந்த அளவு ஒருவரையொருவர் கேவலமாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு அவரவர் ரசிகர்களையும் பயன்படுத்தத் தவறியதில்லை. குறிப்பாக கொலவெறி பாட்டு வெளியான சமயத்தில் பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் சிம்புவின் கமெண்டுகள், அது பற்றி தனுஷ் தந்த பதில்களைப் படித்தவர்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்போதோ, நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க... எங்களைப் போல நண்பர்கள் உண்டா என்றெல்லாம் பேட்டி கொடுத்து வருகிறார்கள். கூடவே இதெல்லாம் மீடியா வேலை என்று வேறு பிட்டைப் போட்டிருக்கிறார்கள்.

இருக்கட்டும்.

இன்று தனுஷுக்குப் பிறந்த நாள். இந்த பிறந்த நாளையொட்டி நேற்று இரவு ஏகப்பட்ட நட்சத்திரங்களை அழைத்து மெகா தண்ணி பார்ட்டி கொடுத்திருக்கிறார் தனுஷ். அதில் சிம்புவும் ஆஜர். கூடவே அவர்கள் வயது 'தோழிகள்' ராதிகா போன்றவர்களும் தவறாமல் ஆஜராகியிருந்தனர். தமன்னா, பிரேம்ஜி என பார்ட்டிகளுக்கென்றே பிறந்தவர்களும் வந்திருந்தனர்.

சேவல் வடிவில் (ஆடுகளம் ஹீரோல்ல...) கேக்கெல்லாம் வெட்டி கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்த பிறந்த நாள் விழா விருந்தில், தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இல்லை!!

 

இந்திக்குப் போகிறது ஈ!

Naan Ee Goes Bollywood   

ஈகா, நான் ஈ என தமிழ் - தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்த ராஜமவுலியின் படம் அடுத்து இந்திக்கும் போகிறது.

இந்த முறை 3 டியில் ஈயை உருவாக்கி பாலிவுட்டை மிரட்டத் திட்டமிட்டுள்ளார் ராஜமவுலி.

இந்தியில் அநேகமாக இந்தப் படத்தில் நானி நடித்த பாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடிக்கக் கூடும் என்கிறார்கள். அவருக்கு சீக்கிரமே படத்தைப் போட்டுக் காட்டவிருக்கிறார் ராஜமவுலி.

அவர் ஓகே சொல்லிவிட்டால், வில்லனாக சுதீப், ஹீரோயினாக சமந்தா என தன் பழைய டீமை அப்படியே பாலிவுட்டுக்கு கூட்டிப் போகத்திட்டம் உள்ளதாம்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட, பாலிவுட் நடிகர்கள் ராஜமவுலியைப் பார்க்க நேரம் கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.

 

நெகடிவ் கதாபாத்திரம்தான் மனதில் பதியும்: டிவி நடிகை பாவ்யகலா

Negative Role Is Very Effective Bhavya Kala

தென்றல் தொடரில் புயலான மருமகளாய் வந்து மாமியாரிடம் மல்லுக்கு நிற்கும் சுதாவின் நிஜப் பெயர் பாவ்யகலா. ஆந்திராவில் பிறந்து பெங்களூரில் செட்டில் ஆகியிருக்கும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் சீரியல்களில் பிஸி நடிகை. தொடரில் வில்லத்தனம் செய்தாலும் நிஜத்தில் அமைதியானவராம். பாவ்யகலா தன்னுடைய சின்னத்திரை பயணம் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் படியுங்களேன்.

என்னுடைய சொந்த ஊர் ஆந்திரா. ஆனால் ரொம்ப நாள் முன்பே பெங்களூருவில் செட்டில் ஆகிவிட்டோம். அதனால் இப்போது கன்னடவாசி என்றும் சொல்லலாம். தொடர்களில் நடிப்பதற்காக பெங்களூருவில் இருந்து சென்னைக்கும் ஆந்திரத்துக்கும் வந்து போகிறேன்.

நான் முதன் முதலில் கன்னட தொடர்களிலும் படங்களிலும் நடித்து கொண்டிருந்தேன். பிறகு தெலுங்கில் ஜெமினி டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும், தொடர்களிலும் நடித்து வருகிறேன்.

தமிழில் மெகா டிவியில் "சுற்றமும் நட்பும்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். அதுதான் தமிழில் எனது முதல் புராஜக்ட். அதை அடுத்து "ருத்ரா' தொடரில் குஷ்புவின் தங்கையாக நடித்துள்ளேன். அதன் பிறகு "கோலங்கள்' தொடரில் ஒரு பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது தென்றலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. "கஸ்தூரி' தொடரில் நடித்திருக்கிறேன். அதையடுத்து "தங்கம்' தொடரில் ரம்யாகிருஷ்ணனின் கணவராக வரும் கலெக்டருக்கு முறைப் பெண்ணாகக் கிராமத்து வேடம் செய்கிறேன்.

"தென்றல்' தொடரில் எனக்கு முழு வில்லத்தனமான கதாபாத்திரம் இல்லை என்றாலும் கொஞ்சம் நெகடிவ்வான ரோல்தான். அந்த வீட்டுக்கு மூத்த மருமகள் நான். பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் மாமியார், மருமகள் சண்டை, ஈகோ, பிரச்னைதான் தென்றல் தொடரிலும் நடக்கிறது. மென்மையான கதாபாத்திரத்தைவிட, இதுபோன்ற கேரக்டர் செய்வதுதான் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. என்னதான் வலுவான கதாபாத்திரமாக இருந்தாலும் மென்மையாக நடிக்கும்போது அந்த அளவுக்கு மக்களிடம் அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதுவே வில்லத்தனம் என்றால் உடனே ரீச் ஆகிவிடுவோம். எனவேதான் இதுமாதிரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கிறேன் என்று கூறிவிட்டு மாமியாருடன் சண்டைக்கு தயாரானார் சுதா.

 

தனுஷ் ஜோடியாக அமலா பால்? டெக்னிக் ஒர்க் ஆவுட் ஆகிடுச்சி போலிருக்கே!


கொஞ்ச நாட்களாக அமலா பால் பற்றி ஆஹா ஓஹோவென்று அவருக்கு வேண்டிய சிலர் பப்ளிசிட்டி செய்ததற்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது.

தனுஷை வைத்து சற்குணம் இயக்கும் சொட்ட வாளக்குட்டியில், அவருக்கு ஜோடியாக நடிக்க அமலா பாலிடம் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்.

அமலாவுக்கு தமிழில் உள்ள ஒரே படம் நிமிர்ந்து நில். வேறு படங்கள் இல்லாத நிலையில், தான் அமெரிக்கா போய் அழகைக் கூட்டிக் கொண்டு வந்த பெருமையை மீடியாவில் பரபரவென பரவவிட்டார்.

விளைவு, ஏற்கெனவே ஜோடி சேரவிருந்து கடைசியில் கைகூடாமல் போன தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாம். 3 படத்தில் தனுஷ் ஜோடியாக முதலில் ஒப்பந்தமாகி பிரஸ் மீட்டில் கூட கலந்து கொண்டவர் அமலா பால் என்பது நினைவிருக்கலாம்.

சொட்ட வாளக்குட்டி படத்தை கதிரேசன் தயாரிக்கிறார். இவர் பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தயாரித்தவர். களவாணி, வாகை சூட வா புகழ் சற்குணம் இயக்குகிறார். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையிலும் ஹீரோயின் முடிவாகாமல் இருந்தது.

அப்போது பார்த்து, மீடியாவில் இந்த திடீர் அழகி அமலாவின் பேட்டியும் படங்களுமாக நிறைக்க, சரி வரவச்சுத்தான் பார்ப்போமே என அழைத்தாராம் சற்குணம். பேச்சு இப்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் அளவுக்குப் போய்விட்டதாம்!
 

இரண்டாவது கணவருடன் வந்து பரஸ்பர விவாகரத்து மனு செய்த வனிதா!


சென்னை: தன் இரண்டாவது கணவர் ஆனந்தராஜிடமிருந்து விவாகரத்து கோரி நேற்று மனு செய்தார் நடிகை வனிதா. அவருடன் ஆனந்தராஜும் வந்து கையெழுத்திட்டார்.

நடிகர் விஜயகுமார், நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதாவுக்கும், நடிகர் ஆகாஷூக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு விஜய் ஸ்ரீ ஹரி (வயது 10), ஜோவிகா (7) என்ற குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் வனிதாவுக்கும், ஆகாஷுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பரஸ்பர விவாகரத்தும் பெற்றுவிட்டனர்.

பின்னர் ஆனந்தராஜன் என்பவரை வனிதா 2-வதாக திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஜெய்னிதா (3) என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் விஜய் ஸ்ரீ ஹரி யாருடன் வாழவேண்டும் என்பதில் வனிதாவுக்கும், முதல் கணவர் ஆகாஷுக்கும் பெரும் சண்டையே ஏற்பட்டது. பின்னர் பலத்த போராட்டத்துக்கிடையே அந்த பிரச்சினை சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டது. மகனுக்காக வனிதா தன் இரண்டாவது கணவரை உதறவும் முடிவு செய்தார்.

எனவே 2-வது கணவர் ஆனந்தராஜனுடன், வனிதாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட்டில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தனர்.

ஆனால் ஜெய்னிதா யாருடன் வாழவேண்டும் என்பது உள்ளிட்ட சில பிரச்சினையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்ததால், பரஸ்பரம் விவாகரத்து கோரும் மனு ஏற்கப்படவில்லை. தற்போது 2 பேரும் சமரசமாகிவிட்டதாகத் தெரிகிறது.

நேற்று மாலை சென்னை குடும்பநல கோர்ட்டுக்கு 2 பேரும் வந்திருந்தனர். பரஸ்பரம் விவாகரத்து கோரும் மனுவில் 2 பேரும் கையெழுத்திட்டு தாக்கல் செய்தனர். இந்த மனு, அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது.
 

விஜய் படத்துக்கு தடை நீட்டிப்பு... கவலையில் கலைப்புலி!


சென்னை: விஜய் படம் துப்பாக்கியின் தலைப்புக்கு தடை மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டிருப்பது, அதன் தயாரிப்பாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளத்துப்பாக்கி படக்குழுவினர் தொடர்ந்த வழக்கில், நடிகர் விஜய் நடிக்கும் `துப்பாக்கி' என்ற படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை, மேலும் ஒருவாரத்துக்கு நீட்டித்து சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த தடையை நீக்கக்கோரி, சிட்டி சிவில் கோர்ட்டில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பதில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி திருமகள் முன்பு கடந்த 19-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் எதிர்மனுதாரர்களான தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, தென்னிந்திய திரைப்படம் மற்றும் டி.வி., தயாரிப்பாளர் கில்டு ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, வழக்கை ஜுலை 25-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அதுவரை படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர், வழக்கு விசாரணையை ஆகஸ்டு 1-ந் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அதுவரை 'துப்பாக்கி' படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

இந்தப் படத்தை வரும் அக்டோபரில் வெளியிட முடிவு செய்திருந்தனர். ஆனால் ஆகஸ்ட் வரை தடை தொடர்கிறது. இதனால் படம் குறித்து விளம்பரம் செய்யக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இந்த நல்ல துப்பாக்கியை கள்ளத்துப்பாக்கி என்ன பண்ணிவிட முடியும் என கூறிவந்தனர். போகிற போக்கைப் பார்த்தால்....
 

நிஜ வாழ்விலும் இணைந்த சந்தோஷி– ஸ்ரீகர்


டிவி தொடரில் தம்பதிகளாக நடிக்கும் ஒரு ஜோடி நிஜத்திலும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகியிருக்கிறார்கள். இளவரசி தொடரில் மனமொத்த தம்பதியர்களாக நடித்த சந்தோஷி - ஸ்ரீகர் ஜோடிதான் அவர்கள்.

ராடன் மீடியா ஒர்க்ஸ் தயாரித்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் டிவி தொடர் இளவரசி. இந்த தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் நடிகை சந்தோஷி. மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இளவரசி தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளனது. இதில் முக்கிய கதாபாத்திரமான இளவரசியாக சந்தோஷி நடித்து வருகிறார். இவர் பிரபல தொலைக்காட்சி நடிகை பூர்ணிமாவின் மகள். இவரது கணவர் சுப்ரமணியாக நடிப்பவர் ஸ்ரீகர். டிவி தொடரில் சந்தோஷமாக குடும்பம் நடத்திய இந்த ஜோடி கடந்த வாரத்தில் பெற்றோர்களின் ஆசீர்வாதங்களுடன் நிஜத்திலும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இளவரசி தொடரில் எவ்வளவோ பிரச்சினைகளை சமாளித்து வெற்றிகரமான தம்பதிகளாக வலம் வரும் இந்த ஜோடி நிஜ வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று இளவரசி டீம் வாழ்த்தியிருக்கிறது.
 

மீண்டும் சக்சேனா… சாக்ஸ் பிக்சர்ஸ் ஆரம்பம்… புதுப்படத்தை ரிலீஸ் செய்கிறார்!


சென்னை: ஹன்ஸ்ராஜ் சக்சேனாவை அத்தனை சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள். கடந்த ஆட்சிக் காலத்தில் சினிமா உலகின் நிழல் முதல்வரைப் போல சகல அதிகாரங்களுடனும் வலம் வந்தவர்.

இவர் சன் டிவிக்காக வாங்கி வெளியிட்ட படங்களைவிட, இவர் மீது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் கொடுத்த புகார்கள் அதிகம்.

ஆட்சி மாறிய கையோடு, அவரைக் கைது செய்தது போலீஸ். சிறையில் அடைத்தனர். தமிழகம் முழுவதும் பல இடங்களில் அவர் மீது மோசடி, கொலை முயற்சி வழக்குகள் பதிவாகின. இவருடன் சேர்ந்து ஐயப்பன் மற்றும் சிலர் கைதாகினர்.

இனி இவர்கள் வெளிவர முடியுமா எனும் அளவுக்கு வழக்குகள் குவிந்தன இவர்கள் மீது. நீதிமன்றத்துக்கு போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டபோது, அய்யோ எங்களைக் காப்பாத்துங்க, அடிச்சே கொன்னுடுவாங்க போலிருக்கு என்று கதறினர் இருவரும். ஆனால் திரையுலகினர் கண்டுகொள்ளவே இல்லை.

ஒரு வழியாக அனைத்து வழ்ககுகளிலும் ஜாமீன் பெற்று சிறையிலிருந்து வெளியில் வந்த சக்சேனா, சன் டிவியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகினார். இப்போது மீண்டும் திரைப்படத் தொழிலில் இறங்கியுள்ளார்.

சாக்ஸ் பிக்சர்ஸ் எனும் பெயரில் புதிய பட நிறுவனத்தை இன்று தொடங்கியுள்ள சக்சேனா, தனது பேனரின் கீழ் சாருலதா என்ற படத்தை வெளியிடுகிறார். ப்ரியாமணி இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம். சூர்யாவின் மாற்றானுக்கு முன்பே உருவான படம் என தயாரிப்பாளர் தர்பபில் கூறி வருவதால், இந்த பரபரப்பை வசூலாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையில் படத்தை வாங்கிவிட்டார் போலிருக்கிறது.

'சரி சரி வரட்டுங்க.., சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில்தானே செலவழிக்க வேண்டும்...!' - இது கோடம்பாக்க வாசிகளின் கமெண்ட்!
 

சகுனி ப்ளாப் படமா… யார் சொன்னது? – கேட்கிறார் கார்த்தி


Saguni Is Not Flop Karthi   
சகுனி படத்துக்கு கொஞ்சம் அப்படி இப்படி விமர்சனம் வந்தது உண்மைதான். ஆனால் அந்தப் படம் ப்ளாப் என்று சொல்வதை ஒப்புக் கொள்ளமாட்டேன். வசூல்ரீதியாக படம் நன்றாகப் போனது," என்றார் நடிகர் கார்த்தி.

சென்னையில் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடிய கார்த்தியிடம், சகுனி தோல்விப் படம்தானே என்று கேட்டனர்.

உடனே இதை மறுத்த கார்த்தி, "இன்றைய அரசியல் சூழலை மையமாக வைத்து லைட்டாக ஒரு படம் எடுத்தோம். அது நன்றாகவே மக்களிடம் ரீச் ஆனது. ஆனால் சிலரது எதிர்ப்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை போலிருக்கிறது. அதனால் படம் குறித்து எதிர்மறையாகப் பேசினார்கள். ஆனால் நாங்கள் நினைத்தது நடந்தது. வியாபார ரீதியிலும் வெற்றி, மக்களைச் சேர்ந்த விதத்திலும் வெற்றிதான்," என்றார்.

அடுத்து நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் மற்றும் பிரியாணி படங்களில் இன்னும் அதிக கவனம் செலுத்தப் போவதாக அவர் தெரிவித்தார்.
 

ரஞ்சிதா வழியில் நித்தியானந்தாவின் சிஷ்யையான நடிகை கவுசல்யா!


Now Kousalya Joins The Club Nithyananda
சென்னை: கவுசல்யாவை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது. தொன்னூறுகளின் மிக முக்கிய நடிகை இவர். விஜய், முரளி, கார்த்திக் என முக்கிய நடிகர்களுடன் நடித்து, பின்னர் குணச்சித்திர வேடங்களுக்குத் தாவி, இப்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு ஒரு பிரச்சினை... அது முதுகுவலி. பல டாக்டர்களிடம் போய் பார்த்தும் கேட்கவில்லையாம். இந்த வலிக்கு நித்தியானந்தா நல்ல ஹீலிங் தெரபி தருகிறார் என்று கேள்விப்பட்டு, தோழிகள் துணையுடன் பிடதிக்குப் போய் வந்தாராம். ஒரு முறை போய் வந்த பிறகு ஆசிரமத்தையே க்ளோஸ் பண்ணிவிட, இப்போது நித்தியானந்தா கேம்ப் போடும் ஆசிரமங்களுக்குப் போய் தன் வலிக்கு வைத்தியம் பார்த்துக் கொள்கிறாராம்.

வலி குணமடைந்ததா இல்லையா என்பது தெரியவில்லை. அது நமக்கு தேவையுமில்லை. ஆனால் இந்த ட்ரீட்மென்டில் முக்கியத் திருப்பமாக அமைந்தது, சிகிச்சைக்கு வந்த கவுசல்யா சிஷ்யையாக மாறிப் போனதுதான்!
வலிக்கு சிகிச்சை வேணும் சாமி என வந்து, நிரந்தர பக்தையானவர்தான் ரஞ்சிதாவும். இவரைத் தவிர, மாளவிகா, ராகசுதா, யுவராணி, அண்ணி சீரியல் மாளவிகா என நடிகைகள் பலரும் இந்த குரூப்பில் உள்ளனர்.
எப்போ யார் மூலம் அடுத்த டேப்போ.. எல்லாம் அந்த சிவனுக்கே வெளிச்சம்.. தென்னாடுடைய சிவனே போற்றி!