ஒன்றரை பிளேட் பிரியாணியை வெளுத்துக்கட்டும் நயன்தாரா

Wanna Know Nayanthara Diet   

சென்னை: நயன்தாரா டயட்டில் இருந்தாலும் பிரியாணியை மட்டும் வெளுத்துக்கட்டுவாராம்.

நயன்தாரா எப்படி ஸ்லிம்மாக அழகாக இருக்கிறார். டயட்டில் இருக்கும் அவர் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறார். ஆனால் அம்மணிக்கு பிரியாணி என்றால் மட்டும் ஓவர் பிரியம். அதனால் என்ன தான் டயட்டில் இருந்தாலும் பிரியாணி கிடைத்தால் மட்டும் ஒன்றரை பிளேட் சாப்பிடுவாராம்.

பார்த்தா ஒன்றரை பிளேட் பிரியாணி சாப்பிடுகிறவர் மாதிரியா இருக்கிறார்? ஆளைப் பார்த்து எதையும் முடிவு செய்துவிடக் கூடாது போலும். நயன் அஜீத்துடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் பெயரை மட்டும் கேட்காதீர்கள். ஏனென்றால் இயக்குனர் விஷ்ணுவர்தன் பெயரை சொல்வேனா என்று அடம் பிடிக்கிறார்.

இனி பிகினி காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ள நயன் அண்மையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் குத்தாட்டம் போட வந்த வாய்ப்பை தட்டிக் கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சித்தார்த்துடன் காதல்? மறுக்கும் சமந்தா!

Samantha Denies Affair With Sidharth   

சித்தார்த்தை நான் காதலிப்பதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்று மறுத்துள்ளார் சமந்தா.

சித்தார்த்துடன் கிசுகிசுக்கப்படாத நடிகைகளே இல்லை எனும் அளவுக்கு தொடர்ந்து கிசுகிசுக்களின் நாயகனாகத் திகழ்கிறார்.

ஸ்ருதிஹாஸன், அமலா பால் போன்றவர்களுடன் அவருக்கு ரகசிய உறவு இருப்பதாக எழுதிப் போரடித்துவிட்ட நிலையில், இப்போது சமந்தாவும் அவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.

தெலுங்கில் இந்த செய்தி இடம்பெறாத மீடியாவே இல்லை எனும் அளவுக்கு பரபரப்பாக பேசினர். ஆனால் சமந்தாவோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், சித்தார்த்துடன் நெருக்கமாக சுற்றி வந்தார்.

படவிழாக்களில் அருகருகே நெருக்கமாக அமர்ந்து, சமந்தா மேல் சாய்ந்தபடி சித்தார்த் சிரித்து பேசுவது போட்டோகிராபர்களுக்கு நல்ல தீனியாக அமைந்தது.

ஆனால் இதுபற்றி கேட்ட போது வழக்கம் போல மறுத்துவிட்டார் சமந்தார்.

"என்னைப் பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள் பரப்பப்படுகின்றன. யாருடன் ஜோடியாக நடித்தாலும் அவரோடு இணைத்து பேசுகிறார்கள். சித்தார்த்துக்கும் எனக்கும் இடையில் இருப்பது காதல் அல்ல.. நட்பு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்," என்றார்.

 

ஒன்இந்தியா தமிழுக்கு சிறந்த இணையதள செய்தியாளர் விருது!

சென்னை: சிறந்த இணையதள செய்தியாளருக்கான எடிசன் விருது ஒன்இந்தியா தமிழ் செய்தியாளர் டாக்டர் எஸ் சங்கருக்கு வழங்கப்பட்டது.

6வது எடிசன் விருது வழங்கும் விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை வண்ணமயமாக நடந்தது. தமிழ் திரையுலகின் முன்னணிக் கலைஞர்கள் விக்ரம், பிரபு சாலமன், உதயநிதி, ஓவியா, தன்ஷிகா, ராதாரவி, ரோகினி, இமான், அனிருத், விஜய் சேதுபதி, வேல்முருகன் உள்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மலேசிய எம்பியும், இந்திய மலேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான சையது பின் காதிர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

ஒன் இந்தியா தமிழுக்கு...

பொதுவாக ஊடகத் துறைக்கு விருது வழங்கும் வழக்கமே இல்லாமல் போய்விட்ட சூழலில், எடிசன் விருது நிறுவனர் ஜெ செல்வகுமார் ஊடகத்துறையை ஊக்குவிப்பதற்காக சிறந்த செய்தியாளர்களுக்கான விருதுகளை வழங்கி வருகிறார்.

oneindia s dr shankar gets 6th edison best online journ
இந்த ஆண்டு சிறந்த இணையதள செய்தியாளருக்கான நடுவர் விருது ஒன்இந்தியா தமிழ் செய்தியாளரும், இந்திய இணையதள செய்தியாளர் சங்க தலைவருமான டாக்டர் எஸ் சங்கருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த அச்சு ஊடக செய்தியாளர் விருது தினமலர் செய்யார் பாலுவுக்கு வழங்கப்பட்டது.

இருவருக்கும் இந்த விருதுகளை மலேசிய எம்பி முகமதி பின் காதிர் வழங்கினார். செய்தியாளர்களுக்கு விருது கொடுப்பது மிகுந்த நிறைவைத் தருவதாக அவர் தனது வாழ்த்தில் குறிப்பிட்டார்.

Read in English: Shankar gets Best Journo Award
 

இன்னும் சில மாதங்களில் விஸ்வரூபம் 2! - கமல்

Viswaroopam Part 2 Will Be Released This Year Kamal

விஸ்வரூபம் படத்தின் கர்நாடக விநியோகஸ்தர் கங்கராஜ் பெங்களூரில் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கமல்ஹாஸன் கூறுகையில், "விஸ்வரூபம் முதல் பாகத்துக்கு காத்திருந்தது போல, அடுத்த பாகத்துக்கு காத்திருக்கத் தேவையில்லை. சீக்கிரமே அந்தப் படம் வந்திவிடும்.

இந்தப் படத்தின் தலைப்பு 'மூ'. இதைப் பதிவு செய்துவிட்டேன். முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்தில் தொடர்வார்கள். ஓரிரு பாத்திரங்கள் புதிதாக வரலாம்," என்றார்.

கமல் ஹாஸன் விஸ்வரூபம் படத்தை கடந்த மே மாதமே முடித்துவிட்டார். அதன் இரண்டாம் பாகத்தின் பெரும்பகுதியை முடித்து, கூடவே போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் முடித்து வைத்துள்ளார். இந்தப் படத்தை வெளியிட்ட கையோடு அவர் அமெரிக்காவுக்குப் போவதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனவே அவர் சொல்வது போல, இந்த இரண்டாம் பாகம் சீக்கிரமே வெளியாகக் கூடும். அதனால்தான் விளம்பரத்தை இப்போதிலிருந்தே ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது!

 

23ல் நியூஜெர்சியில் இளையராஜா இசை நிகழ்ச்சி: எஸ்.பி.பி., சித்ரா, ஹிரஹரன், யுவன் பங்கேற்பு

Ilayaraja Live Concert New Jersey On Feb 23

நியூ ஜெர்சி: அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வரும் 23ம் தேதி இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.

நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கமும், ஐ ட்ரீம் மீடியாவும் சேர்ந்து இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்த நிகழ்ச்சி நியூ ஜெர்சியில் உள்ள ப்ருடென்ஷில் சென்டரில் வரும் 23ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இளையராஜாவுடன் பிரபல பின்னணி பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஹரிஹரன், மனோ, கார்த்திக், விஜய் யேசுதாஸ், பாடகிகள் சித்ரா, சாதனா சர்கம், ஸ்வேதா மோகன் மற்றும் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர் njtamilsangam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இமெயில் அனுப்பிலாம். அல்லது 732-800-2336 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த நிகழ்ச்சிக்கான நுழைவு டிக்கெட் வினியோகம் துவங்கிவிட்டது.

 

'பிரசன்னாவுக்கு திரும்பவும் வீடு எடுத்துக் கொடுத்துடாதீங்க!!'

Kalyana Samayal Sadham Comic Movie

பிரசன்னா - சினேகா காதலுக்கு அடித்தளம் போட்டு, அதைத் திருமணம் வரை கொண்டு வந்த பெருமை அருண் வைத்தியநாதனுக்கு உண்டு.

அவர்தான் இருவரையும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஜோடியாக நடிக்க வைத்தவர். படப்பிடிப்பின்போது ஒத்திகைக்காக இருவரும் ஒரே வீட்டில் தங்கும்படியான ஏற்பாட்டையும் செய்தவர். அதுவே இருவருக்கும் நெருக்கமான காதலாகிவிட்டது.

எதற்கு இந்தக் கதை என்கிறீர்களா...

சாதாரணமாக இருந்தவர்களை கணவன் - மனைவியாக்கிய அருண்... இப்போது அந்த ஜோடியைப் 'பிரித்து' கணவனை மட்டும் மீண்டும் கதாநாயகனாக்கியிருக்கிறார் கல்யாண சமையல் சாதம் படத்தில்.

ஆனால் அருண் வைத்தியநாதன் இதில் தயாரிப்பாளர் மட்டுமே. குறும்பட இயக்குநர் ஆர் எஸ் பிரசன்னா இயக்குகிறார். ஒரு திருமணம் , அதைச் சுற்றி நடக்கும் பல வேடிக்கையான சம்பவங்களை மையமாக வைத்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதத்தில் இந்த படத்தை உருவாக்கி வருகிறாராம் இயக்குநர். திருமணத்துக்குப் பிறகு பிரசன்னா ஒப்பந்தமாகியுள்ள முதல் படம்.

டெல்லி கணேஷ், உமா பத்மநாபன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதில் பிரசன்னாவுக்கு ஜோடி, லேகா வாஷிங்டன்.

அருண், திரும்பவும் ஹீரோ ஹீரோயினுக்கு வீடு எடுத்துக் கொடுத்துடாதீங்க!!

 

அஜீத்துடன் இப்போதைக்கு எந்தப் படமும் இல்லை! - ஏ ஆர் முருகதாஸ்

Ar Murugadass Denied His Project With Ajith

சென்னை: அஜீத்துடன் இணைந்து படம் பண்ணும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை. இதுபற்றி வருவதெல்லாம் யூகங்களே என்று இயக்குநர் முருகதாஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு படம், சிவா இயக்கத்தில் இன்னொரு படம் என நடித்துக் கொண்டிருக்கும் அஜீத், அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பார் என செய்திகள் கிளம்பின.

சில தினங்களுக்கு முன் கிட்டத்தட்ட இந்த புராஜெக்ட் உறுதி எனும் அளவுக்கு பேசப்பட்டது. தலைப்பு கூட ரெட்டைத் தலை என்று வைத்ததாகக் கூறப்பட்டது.

இதனை தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, "என்னுடைய இயக்கத்தில் அஜீத் நடிப்பதாக வெளிவந்த செய்திகளை நானும் படித்தேன். சரி நல்ல விஷயம்தானே என்று பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால் அவை எல்லாமே யூகத்தின் அடிப்படையிலான செய்திகள்.

அஜீத்துடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கும் உண்டு. அவருக்கும் உண்டு. ஆனால் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. வரும்போது சேர்ந்து பணியாற்றுவோம்.

நான் இப்போது ‘துப்பாக்கி' இந்தி ரீமேக்கில் பிசியாக இருக்கிறேன். அக்ஷய்குமார், சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார்கள். இதற்கே எனக்கு ஒரு வருடம் ஆகிவிடும்", என்றார்.