3 நிமிட நிகழ்ச்சிக்காக ரூ. 75 லட்சம் சம்பளம் வாங்கிய ஜாக்குலின்!

மும்பை: சய்பை மகோத்சவத்தில் 3 நிமிட நிகழ்ச்சி ஒன்றிற்காக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ரூ. 75 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம்.

கிக் படத்தில் சல்மான் கானிற்கு ஜோடியாக நடித்திருந்தவர் இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜாக்குலின் தனது சம்பளத்தை ஏகத்திற்கும் உயர்த்தி உள்ளாராம். படங்கள் மட்டுமின்றி விளம்பரம், நிகழ்ச்சிகள் என எல்லாவற்றிலும் கலந்து கொண்டு வருகிறார்.

3 நிமிட நிகழ்ச்சிக்காக ரூ. 75 லட்சம் சம்பளம் வாங்கிய ஜாக்குலின்!

இந்நிலையில், சய்பை மகோத்சவிற்காக 3 நிமிட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஜாக்குலின் ரூ. 75 லட்சம் சம்பளம் பெற்றுள்ளாராம். இந்த சய்பை என்பது உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் சொந்த கிராமமும் கூட.

வழக்கமாக இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு பிரபலங்கள் பங்கு பெறுவர். எனவே, இதில் நிகழ்ச்சி நடத்துவதற்கு திரைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப் படுவது வழக்கம்.

அந்தவகையில் இந்தாண்டு ஜாக்குலினுக்கு 3 நிமிட நிகழ்ச்சிக்கு ரூ. 75 லட்சம் சம்பளம் வழங்கப் பட்டுள்ளதாம். இந்த சய்பை விழாவில் பரினீதி சோப்ரா, ரிச்சா சட்டா, ஹூமா குரேஷி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது சல்மான் கான் போய் ராஜபக்சேவுக்கு ஓட்டுப் போடுமாறு கேட்டு பிரசாரம் செய்தார். அவருடன் ஜாக்குலினும் கலந்து கொண்டார். ஜாக்குலின் மூலமாகவே சல்மானை ராஜக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வரவழைத்தார் என்று பேச்சு எழுந்தது நினைவிருக்கலாம்.

 

மாஜி காதலரின் பெயரை கையில் இருந்து அழித்த ஏமி ஜாக்சன்

மும்பை: மாஜி காதலரின் பெயரை கையில் இருந்து அழித்த ஏமி ஜாக்சன்

சில காலம் அவர்கள் ஜோடி போட்டு பல இடங்களுக்கு சென்றனர். காதலில் விழுந்த ஏமி தனது கையில் மேரா பியார், மேரா பிரதீக் என்று பச்சைக் குத்திக் கொண்டார். இந்நிலையில் ஏமியும், பிரதீக்கும் பிரிந்துவிட்டனர்.

இருப்பினும் ஏமி கையில் பச்சை மட்டும் அப்படியே இருந்து வந்தது. இந்நிலையில் அவர் அந்த பச்சையை அழித்துவிட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

என் கையில் இருந்த பச்சையை அழித்துவிட்டேன். இனி நான் பச்சையே குத்த மாட்டேன். அப்படியே பச்சை குத்துவது என்றாலும் பல முறை யோசிப்பேன் என்றார்.

 

ஆம்பள படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

சென்னை: விஷாலின் ஆம்பள படத்தின் தலைப்புக்கு எதிராக வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

விஷால் - ஹன்சிகா நடிக்க, சுந்தர் சி இயக்கியுள்ள படம் ஆம்பள. இந்தப் படம் நாளை மறுநாள் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது.

படத்தின் தியேட்டர்கள் லிஸ்ட் எல்லாம் அறிவிக்கப்பட்ட பிறகு, நேற்று திடீரென்று ஸ்ரீசாய் சினி சர்க்யூட் என்ற பட நிறுவனத்தைச் சேர்ந்த கோபாலன் என்பவர் படத்தின் தலைப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆம்பள படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

அதில், ஆம்பள என்ற தலைப்பை தயாரிப்பாளர் சங்க கில்டில் தான் ஏற்கெனவே பதிவு செய்து 40 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டதாகவும், இதற்காக ரூ 40 லட்சம் செலவழித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

எனவே விஷாலின் ஆம்பள வெளியானால் தனக்கு பெரிய நஷ்டம் ஏற்படும் என்று கூறி, படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.

மனுவை விசாரித்த சென்னை சிட்டி 15வது சிவில் நீதிமன்றம், இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

விசாரணையில், மனுதாரரின் வாதத்துக்கு போதிய ஆதாரம் இல்லாததாலும், கில்டில் பதிவு செய்யும் படங்களுக்கு சென்சார் அனுமதியில்லை என்பதாலும் இந்த மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

 

லிங்காவுக்கு எதிரான பிரச்சாரம்... நடிகர் விஜய் தூண்டுதலா? - விநியோகஸ்தர்கள் விளக்கம்

லிங்கா படம் சரியில்லை, நஷ்டம் என்றெல்லாம் சில விநியோகஸ்தர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்யக் காரணம் நடிகர் விஜய் மற்றும் அவரது ஆதரவாளர்களின் தூண்டுதல் ஏதுமில்லை என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

லிங்கா படம் பல ஊர்களிலும் நன்றாக ஓடிக் கொண்டிருந்த நேரத்திலேயே இந்தப் படம் நஷ்டம் என்றும், படம் சரியில்லை, ரஜினி ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது, ரஜினிக்கு சினிமா போக்கு தெரியவில்லை என்றெல்லாம் விமர்சித்தனர். இதனை படம் வெளியான ஆறாவது நாள், அதாவது டிசம்பர் 18-ம் தேதியிலிருந்து தொடர்ந்து செய்து வந்தனர்.

லிங்காவுக்கு எதிரான பிரச்சாரம்... நடிகர் விஜய் தூண்டுதலா?  - விநியோகஸ்தர்கள் விளக்கம்

இது லிங்கா படத்தை பாதித்தது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களே அதைக் கொன்றுவிட்டதாக தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் செய்தியாளர்கள் மத்தியில் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இன்னொரு பக்கம் லிங்கா படத்துக்கும் ரஜினிக்கும் எதிராக நடிகர் விஜய்யும் அவரது ஆட்களும் மறைமுகமாக வேலைப் பார்ப்பதாகவும், அவர்கள் தூண்டுதலால்தான் இந்த விநியோகஸ்தர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்றும் ரஜினி ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் கடுமையாக குற்றம்சாட்டி வந்தனர்.

ரஜினியின் இடத்தை அடையவே அவர் இப்படிச் செய்கிறார் என்றும் கூறப்பட்டது. இதனை நேற்று சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களிடம் செய்தியாளர்கள் நேரடியாகவே கேட்டுவிட்டனர்.

ஆனால், இதனை அவர்கள் மறுத்தனர். இந்தப் பிரச்சினைக்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றனர்.

லிங்கா விவகாரத்தை தினமும் பேசி வரும் சிங்கார வேலன் என்ற விநியோகஸ்தர், இரு தினங்களுக்கு முன்பு வரை ரஜினி பாடலை ரிங் டோனாக வைத்திருந்ததாகவும், ஆனால் இப்போது விஜய்யின் வசனத்தை ரிங்டோனாக்கிவிட்டதாகவும், அதனால்தான் இப்படிக் கேட்க நேர்ந்தது என்றும் செய்தியாளர்கள் பிரஸ் மீட்டில் தெரிவித்தனர்.

 

50 ஆண்டு திரையுலக சாதனை.. கே ஜே யேசுதாசுக்கு சென்னையில் பாராட்டு விழா!

சென்னை: தனது கந்தர்வ குரலால் கடந்த 50 ஆண்டுகளாக ரசிகர்களை கிறங்கடித்து வரும் கேஜே யேசுதாசுக்கு வரும் ஜனவரி 25-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு... கண்ணே கலைமானே.... அதிசயராகம் ஆனந்த ராகம்... செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்... அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே என காலத்தால் அழிக்க முடியாத காவியப் பாடல்களைப் பாடியவர் யேசுதாஸ்.

50 ஆண்டு திரையுலக சாதனை.. கே ஜே யேசுதாசுக்கு சென்னையில் பாராட்டு விழா!

அவருக்கு 75 வயது பிறந்துள்ளது. மலையாளக் கரையில் இருந்து வந்திருந்தாலும் தமிழ் இசையின் தவப்புதல்வனாகவே மாறிப்போனார்.

தமிழில் எஸ்.பாலசந்தரின் பொம்மை படத்தில் நீயும் பொம்மை நானும் பொம்மை நினைத்து பார்த்தால் எல்லாம் பொம்மை என்ற தத்துவ பாடல் பாடி முதன்முதல் அறிமுகமானார்.

இந்த 50 ஆண்டுகளில் 17 மொழிகளில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.

சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 7 முறையும், பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளை 43 முறையும் வென்றவர்.

சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த யேசுதாசுக்கு ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை தரங்கிணி, வி ரெக்கார்ட்ஸ், ராஜ் ஈவண்ட்ஸ் இணைந்து ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

ஜனவரி 25ம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

 

அவதூறு பேச்சு.. ரஜினியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறோம்! - விநியோகஸ்தர்கள்

லிங்கா பட விவகாரத்தில் ரஜினியைப் பற்றி அவதூறாகப் பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர் விநியோகஸ்தர்கள்.

லிங்கா படம் நஷ்டம் என்று கூறி, ஆரம்பத்திலிருந்தே சில விநியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர். கடந்த சில தினங்களாக இதை ஒரு தினசரி பிரச்சாரமாகவே செய்து வருகின்றனர்.

இந்தப் பிரச்சினையில் சுமூகத் தீர்வு ஏற்பட ரஜினி தலையிட வேண்டும் என்று கோரி சீமான், வேல்முருகன் துணையுடன் ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும் இருந்தனர்.

அவதூறு பேச்சு.. ரஜினியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறோம்! - விநியோகஸ்தர்கள்

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், லிங்கா விவகாரத்தில் விநியோகஸ்தர்கள் தங்களை காயப்படுத்தி விட்டதாக அறிவித்தார். படத்தை சிங்காரவேலன் என்ற விநியோகஸ்தர் கொன்றுவிட்டார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், இன்று சிங்கார வேலன், செங்கல்பட்டு விநியோகஸ்தர் மன்னன் உள்ளிட்ட சில விநியோகஸ்தர்கள் சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் கூறும்போது, "லிங்கா படத்துக்கு நஷ்டஈடு கோரி நாங்கள் இருந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு வேந்தர் மூவிஸ் சிவா எங்களிடம் மன்னிப்பு கடிதம் கோரியுள்ளார். நாங்கள் ஏன் அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

மேலும், நடிகர் ரஜினியை காயப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், நாங்கள் அவரை காயப்படுத்தும் விதமாக எதுவும் செய்யவில்லை.

படம் வெளியான சில நாட்களிலேயே படத்தின் வசூல் குறித்து வெளியிட்டது, எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தால், பதட்டமடைந்து சொல்லிவிட்டோம். மேலும், ரஜினி பிறந்தநாள் தேசிய விடுமுறையா? அன்றைய தேதியில் ஏன் படத்தை வெளியிடுகிறீர்கள்? ரஜினி ரசிகர்கள் வயது குறித்தெல்லாம் பேசியதற்கு ரஜினியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

மற்றபடி, இந்த படத்திற்கு உரிய நஷ்டஈடு தராவிட்டால் உண்ணாவிரதம் தொடரும்," என்றனர்.

 

விஷாலின் ஆம்பள படத் தலைப்புக்கு எதிராக வழக்கு - இன்று விசாரணை

சென்னை: விஷாலின் ஆம்பள படத்தின் தலைப்புக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

விஷால் - ஹன்சிகா நடிக்க, சுந்தர் சி இயக்கியுள்ள படம் ஆம்பள. இந்தப் படம் நாளை மறுநாள் பொங்கல் தினத்தில் வெளியாகிறது.

படத்தின் தியேட்டர்கள் லிஸ்ட் எல்லாம் அறிவிக்கப்பட்ட பிறகு, நேற்று திடீரென்று ஸ்ரீசாய் சினி சர்க்யூட் என்ற பட நிறுவனத்தைச் சேர்ந்த கோபாலன் என்பவர் படத்தின் தலைப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

விஷாலின் ஆம்பள படத் தலைப்புக்கு எதிராக வழக்கு - இன்று விசாரணை

அதில், ஆம்பள என்ற தலைப்பை தயாரிப்பாளர் சங்க கில்டில் தான் ஏற்கெனவே பதிவு செய்து 40 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டதாகவும், இதற்காக ரூ 40 லட்சம் செலவழித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

எனவே விஷாலின் ஆம்பள வெளியானால் தனக்கு பெரிய நஷ்டம் ஏற்படும் என்று கூறி, படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.

மனுவை விசாரித்த சென்னை சிட்டி 15வது சிவில் நீதிமன்றம், இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டார்.

 

வெளியானது கமலின் உத்தம வில்லன் ட்ரைலர்

சென்னை: கமல் ஹாஸன் நடித்துள்ள உத்தம வில்லன் படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் உத்தம வில்லன். பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகியோர் கமலுக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்தப் படம் கடந்த ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால் ரிலீசாவதில் தாமதம் ஏற்பட்டது.

இப்போது படத்தை பிப்ரவரி மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு முன்னோட்டமாக படத்தின் ட்ரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.

இதில் கமல் சினிமா இயக்குநர் மற்றும் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நாடகக் கலைஞர் என இரு வேடங்களில் வருகிறார். அவருடன் மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தர் சில காட்சிகளில் தோன்றுகிறார்.

 

ரூ 1000 கோடிக்கு சத்யம் சினிமாஸை வாங்குகிறது பிவிஆர்!

சென்னையில் சினிமா பார்க்கும் அனுபவத்தை இனிமையாக்கிய அரங்குகளில் முக்கியமானது சத்யம் சினிமா அரங்கம். தமிழகத்தின் முதல் நவீன மல்டிப்ளெக்ஸ் என்றால் அது இந்த காம்ப்ளெக்ஸ்தான்.

இன்றைக்கு சென்னையில் பல நவீன அரங்குகள் இருந்தாலும், படம் பார்க்க நட்சத்திரங்களின் முதல் தேர்வு சத்யமாகத்தான் இருக்கும்.

ரூ 1000 கோடிக்கு சத்யம் சினிமாஸை வாங்குகிறது பிவிஆர்!

இன்று சத்யம் குழுமத்தில் 50க்கும் மேற்பட்ட நவீன அரங்குகள் உள்ளன. தமிழகத்தில் சென்னையில் சத்யம், எஸ்கேப், லக்ஸ், எஸ்2 பெரம்பூர், எஸ் 2 தியாகராஜா போன்ற அரங்குகள் உள்ளன. விரைவில் வடபழனியில் ஒரு மல்டிப்ளெக்ஸை ஆரம்பிக்க உள்ளது. கோவையில் தி சினிமா என்ற மாலும் சத்யம் குழுமத்தில் உள்ளது.

இந்த சத்யம் அரங்கங்களை மற்றொரு மெகா தியேட்டர் குழுமமான பிவிஆர் வாங்கப் போவதாக செய்திகள் உலா வருகின்றன. பிவிஆர் தரப்பில், இது குறித்து பேச்சு நடந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ரூ 1000 கோடி வரை இதற்காக விலை பேசப்படுவதாகக் கூறப்படுகிறது.

 

பெர்மிஷன் இல்லாம ஷூட்டிங்கா... நிறுத்து... கார்த்திக் மகன் கவுதமின் "ரங்கூனுக்கு" வந்த சோதனை!

சென்னை: முறையான அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தி, போக்குவரத்திற்கு இடையூறு செய்ததால் கௌதம் கார்த்திக்கின் ரங்கூன் படப்பிடிப்பிற்கு போலீஸ் தடை விதித்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக் தற்போது ரங்கூன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை வியாசர்பாடி பிவி காலனியில் உள்ள வீட்டில் நடைபெற்றது.

பெர்மிஷன் இல்லாம ஷூட்டிங்கா... நிறுத்து... கார்த்திக் மகன் கவுதமின்

அப்போது படப்பிடிப்பை நேரில் காணும் ஆர்வத்தில் அங்கு ஏராளமான மக்கள் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு எம்.கே.பி. நகர் போலீசார் விரைந்து படப்பிடிப்பு குழுவினரிடம் படப்பிடிப்பை நிறுத்துமாறு கூறினர். இதுதொடர்பாக போலீசாருக்கும், படக்குழுவினருக்கும் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து அனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என படப்பிடிப்பிற்கு போலீசார் தடை விதித்தனர். இதனால், படிப்பிடிப்பை ரத்து செய்து விட்டு படக்குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

 

கட்டாதே, ரன்பிர் கபூரை கட்டாதே: கத்ரீனாவுக்கு தீபிகா அறிவுரை

மும்பை: ரன்பிர் கபூரை திருமணம் செய்ய வேண்டாம் என்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சக நடிகையான கத்ரீனா கைஃபுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஸ்டார் டஸ்ட் விருது விழாவில் கலந்து கொண்டார். இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழக்கமாக அவர் தனது காதலரான நடிகர் ரன்வீர் சிங்குடன் வருவார். விழாவில் நடிகைகள் ஆலியா பட் மற்றும் பரினீத்தி சோப்ராவை கட்டிப்பிடித்துவிட்டு ரன்வீருடனேயே ஒட்டிக் கொண்டிருப்பார்.

கட்டாதே, ரன்பிர் கபூரை கட்டாதே: கத்ரீனாவுக்கு தீபிகா அறிவுரை

இந்நிலையில் இந்த விருது விழாவுக்கு தீபிகா தனியாக வந்திருந்தார். அப்போது தீபிகாவிடம் கத்ரீனா கைஃபுக்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு தீபிகாவோ, ரன்பிர் கபூரை திருமணம் செய்யாதீர்கள் என்பது தான் கத்ரீனாவுக்கு என் அறிவுரை என்றார்.

ரன்பிரும், கத்ரீனாவும் தங்கள் காதலை ஒப்புக் கொள்ளவில்லை. இந்நிலையில் அண்மையில் லண்டனில் அவர்களுக்கு ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தீபிகா இப்படி ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார்.

தீபிகா ஒரு காலத்தில் ரன்பிர் கபூரை காதலித்தார். ஆனால் அவர்களின் காதலுக்கு ரன்பிரின் அம்மா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் பிரிந்துவிட்டனர் என்று செய்திகள் வெளியாகின.

 

அனேகன் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் - மதுரை கமிஷனரிடம் சலவைத் தொழிலாளிகள் மனு

மதுரை: தனுஷ் நடித்த அனேகன் படத்துக்கு தடை கோரி மதுரை போலீஸ் கமிஷனரிடம் சலவைத் தொழிலாளர்கள் மனு கொடுத்துள்ளனர்.

மதுரை வண்டியூரைச் சேர்ந்த வக்கீல் சாலின்மணி, கே.கே.நகர் வக்கீல் ரமேஷ் மற்றும் 50-க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர்கள் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.

அனேகன் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் - மதுரை கமிஷனரிடம் சலவைத் தொழிலாளிகள் மனு

அந்த மனுவில், "கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அனேகன் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அந்த படத்தில் சலவைத் தொழிலாளர் சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

எனவே அந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட தடை விதிக்க வேண்டும். படத்தில் இழிவு வசனங்கள் இடம்பெறச் செய்த இயக்குனர் கே.வி.ஆனந்த், அதை பேசி நடித்த நடிகர்கள் ஜெகன், தனுஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.

இதனை விசாரித்து நடவடிக்கை எடுப்பசாத கமிஷனர் சஞ்சய் மாத்தூர் தெரிவித்தனர்.

 

சேரனின் சி2எச் திட்டம் தள்ளி வைப்பு.. தியேட்டர்காரர்கள் கேட்டுக் கொண்டதால் எடுத்த முடிவாம்!

இயக்குனர் சேரன் சமீபத்தில் இயக்கியுள்ள படம் ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை'. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், ரிலீசாகாமல் நீண்ட நாளாக முடங்கியே கிடக்கிறது.

சேரன், புதுமுயற்சியாக ‘சி2எச்' (C2H) சினிமா டு ஹோம் என்ற திட்டத்தை தொடங்கி, அதன்மூலம், புதிய திரைப்படங்களை நேரடியாக டிவிடி மூலம் வீட்டிலிருந்தே கண்டுகளிக்கும் வசதியை உருவாக்கி வந்தார்.

சேரனின் சி2எச் திட்டம் தள்ளி வைப்பு.. தியேட்டர்காரர்கள் கேட்டுக் கொண்டதால் எடுத்த முடிவாம்!

இந்த முறையிலேயே நீண்ட நாளாக கிடப்பிலிருக்கும் தனது ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தையும் வெளியிடவிருந்தார்.

வருகிற ஜனவரி மாதம் 15-ந் தேதி தனது ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தை சி2எச் திட்டத்தின் மூலம் வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார்.

ஒரு டிவிடிக்கான தொகையான ரூ.50-ல் முன்தொகையாக ரூ.10 மட்டும் கொடுத்து பதிவு செய்து கொள்ளும் திட்டமும் பல மாவட்டங்களில் தொடங்கப்பட்டிருந்தது. அதற்கு பல ஊர்களில் நல்ல வரவேற்பும் இருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் இன்று சேரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அ

தில் டிவிடி வெளியான அன்றே தியேட்டர்களிலும் படம் வெளியாகும் என்று அறிவித்த தங்களின் நல்ல நோக்கத்தைப் புரிந்து கொண்ட விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் தன்னிடம் பேசி நல்ல முடிவெடுக்க முன்வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதில் நல்ல உடன்பாடு எட்டப்பட்ட பிறகு சி2எச் சேவை தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

ரஜினி படத்துக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் வெளியாகிறது ஐ

ஷங்கரின் ரஜினி படத்துக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் வெளியாகிறது ஐ  

ஆஸ்கார் பிலிம்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கியுள்ள ஐ படம் உலகம் முழுவதும் வருகிற ஜனவரி 14-ந் தேதி வெளியாகவிருக்கிறது. .

உலகின் பல்வேறு நாடுகளில் ஐ யை வெளியிடுகிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.

பாகிஸ்தானிலும் இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள். பாகிஸ்தானில் வெளியாகும் இரண்டாவது தமிழ்ப் படம் ஐதான். ரஜினி நடித்த சிவாஜிதான் அங்கு முதலில் வெளியானது. எந்திரன், பாட்ஷா போன்ற படங்கள் இந்தியில்தான் அங்கு வெளியாகின.