‘மகாபாரதம்’ என் கனவுப் படம்: அமீர்கான்

Mahabharat On Big Screen Is Dream

மகாபாரதம் இதிகாசத்தை இயக்கி நடிக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகர் அமீர்கான் கூறியுள்ளார். இது தனது கனவுப் படம் என்றும் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் அமீர்கான்.

தாரே ஜமீன் பார் படத்தை இயக்கி உலக அளவில் பேச வைத்தவர் பாலிவுட் நடிகர் அமீர்கான். நடிகராக இருந்தாலும் மஞ்சில் மஞ்சில், ஜபர்தஸ்த் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தது தற்போது அமீர்கானுக்கு கை கொடுத்தது. இதேபோல் மகாபாரதம் இதிகாசத்தை இயக்கி நடிக்க இருக்கிறாராம்.

இது குறித்து கருத்து கூறியுள்ள அமீர்கான், நடிகராக எனக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. பீகோ, தூம்3 படங்களில் என் பங்களிப்பை சரியாக செய்ய வேண்டும். தவிர சத்யமேவ ஜெயதே 2 வேறு கைவசம் இருக்கிறது. இவற்றை முடித்து விட்டு மகாபாரதம் கதையை கையில் எடுக்கவேண்டும் என்றார்.

இதிகாச காவியத்தை செய்வது சாதாரண விசயமல்ல. அதற்கான இடங்கள், உடைகள் என பல ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு நாள் நிச்சயம் பெரிய திரையில் என கனவுத் திட்டமான மகாபாரதம் கதையை செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் அமீர்கான்.

அமீர்கான், கரீனாகபூர், ராணி முகார்ஜி ஆகியோர் நடித்துள்ள தலாஷ் படம் நவம்பர் 30ல் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரூ.1,375 கோடி கேட்டு பாப் பாடகி ஷகீரா மீது மாஜி காதலன் வழக்கு

Shakira Sued 250 Million Ex Boy Friend

நியூயார்க்: ரூ.1,375 கோடி கேட்டு பாப் பாடகி ஷகீரா மீது அவரது முன்னாள் காதலர் ஆன்டனியோ டீ லா ருவா வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரபல பாப் பாடகி ஷகீரா முன்னாள் அர்ஜென்டினா அதிபர் பெர்னான்டோ டீ லா ருவாவின் மகன் ஆன்டனியோ டீ லா ருவா என்பவரை 11 ஆண்டுகளாக காதலித்தார். அதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தங்கள் பிசினஸ் பார்ட்னர்ஷிப் காதல் முறிவுக்கு பிறகு மோசமடைந்துவிட்டது என்ற குற்றச்சாட்டை சுமத்தி ஆன்டனியோ நீதிமன்றத்தில் ஷகீராவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஷகீராவை காதலித்தபோது ஆன்டனியோ தனது வேலையை விட்டுவிட்டு காதலியின் பிசினஸ் மேனேஜர் ஆனார் காதல் முறிவுக்கு பிறகு வியாபரத்தில் கிடைக்கும் லாபத்தில் தனக்குரிய பங்கை ஷகீரா உறுதியளித்தபடி கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். இதையடு்தது தனக்கு ரூ.1,375 கோடி அளி்க்கக் கோரி ஆன்டனியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஷகீராவும், ஆன்டனியோவும் கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரிந்தாலும் கடந்த ஜனவரி மாதம் வரை அதை வெளியே தெரிவிக்கவில்லை.

 

நடிகர் நானி வீட்டை அலங்கரிக்கும் கமல் ஓவியம்

Actor Nani Embellish His House With

புதிதாக திருமணமான நடிகர் நானி தனது காதல் மனைவி அஞ்சனாவிற்காக வீட்டை ஸ்பெசலாக அலங்கரித்துள்ளாராம். வீட்டின் மினி தியேட்டரில் தேவர்மகன் கமல் ஒவியம் பிரம்மாண்டமாக இடம் பெற்றுள்ளதாம்.

நான் ஈ பட நாயகன் நானி உலகநாயகன் கமல்ஹாசன் ரசிகர் என்பது நிறைய பேருக்கு தெரியாத சங்கதி. இதனை நிரூபிக்கும் வகையில் தனது வீட்டில் மினி தியேட்டரை வடிவமைத்து அதில் தேவர் மகன் கெட்அப்பில் உள்ள கமல் ஓவியத்தை மாட்டி வைத்துள்ளாராம்.

இது தவிர சினிமாவில் பிரபலமாக உள்ள பலரின் ஓவியங்களையும் வைத்து அழகு படுத்தியுள்ளாராம் நானி. இந்த ஓவியங்களை கமல் காமராஜூ என்ற ஓவியர் வரைந்துள்ளார்.

தேவர்மகன் படத்தில் வேஷ்டி, சட்டை அணிந்து மீசை வைத்து கமல் கம்பீரமாக இருப்பார் அதனால்தான் அந்த ஒவியத்தை வீட்டில் வைத்துள்ளதாக நானி கூறியுள்ளார்.

நான் ஈ படத்தின் வெற்றிக்குப் பின்னர் கவுதம் மேனன் இயக்கத்தில் நீதானே என் பொன்வசந்தம் தெலுங்கு பதிப்பில் நடிக்கிறார் நானி. தவிர கிருஷ்ணவம்சியின் பைசா, போன்ற படங்களும் நானியின் கைவசம் உள்ளன.

 

என்னது நிர்வாணமா நடிச்சேனா... பொய் பொய் முழு பொய்! - ஆன்ட்ரியா ஆவேசம்

Andrea Denies Her Nude Pose   

சென்னை: ஜீவா நடிக்கும் என்றென்றும் புன்னகை படத்தில் நிர்வாண போஸ் கொடுத்து நடித்ததாக வெளியான தகவல்கள் முழு பொய் என்று கூறியுள்ளார் நடிகை ஆன்ட்ரியா.

சர்ச்சைகளின் நாயகியாகத் திகழும் ஆன்ட்ரியா பற்றி இப்போது புதிதாகக் கிளம்பியுள்ள தகவல், அவர் நிர்வாண கோலத்தில் நடித்தார் என்பது.

à®"வியக் கல்லூரி மாணவர் படம் வரைவதற்காக இது போன்று போஸ் கொடுத்து அவர் நடித்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இது குறித்து ஆண்ட்ரியாவிடம் கேட்ட போது நிர்வாண போஸ் என்பதெல்லாம் பொய்யான செய்திகள்.

என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துகிற வகையில் à®'ரு காட்சியில் நடித்து இருக்கிறேன். அந்தக் காட்சி நிச்சயம் எனக்கு பெயர் பெற்றுத் தரும். ஆனால் அந்தக் காட்சி குறித்து இப்போதே சொல்ல முடியாது," என்றார்.

 

22 ஏழை குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைக்கும் நடிகை ரோஜா

Roja Educate 22 Poor Kids

ஹைதராபாத்: 22 ஏழைக் குழந்தைகளின் படிப்பு செலவை நடிகை ரோஜா ஏற்றுக்கொண்டுள்ளார்.

நடிகை ரோஜா ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரச்சார பீரங்கியாக உள்ளார். இந்நிலையில் அவர் ஜெகன் கட்சியின் நகரி சட்டசபை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் ரோஜா அவ்வப்போது நகரி தொகுதிக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டு வருகிறார்.

இந்நிலையில் படிக்க வசதியில்லாத ஏழைக் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் கல்விச் செலவை ஏற்க முடிவு செய்த அவர் 22 குழந்தைகளை தேர்ந்தெடுத்தார். அக்குழந்தைகளின் கல்விச் செலவுக்காக அவர்களுக்கு மாதம் ரூ.300 வழங்கவிருக்கிறார்.

இதற்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட ரோஜா தான் தேர்வு செய்துள்ள 22 குழந்தைகள் தங்கள் படிப்பை முடிக்கும் வரை உதவித் தொகை வழங்கப்படும் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், பள்ளிக்கு செல்லும் ஒவ்வொரு ஏழைக் குழந்தைக்கும் மாதம் ரூ.500 உதவித் தொகை வழங்க ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளார். அவர் மட்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு மேலும் பல பலன்கள் கிடைக்கும் என்றார்.

 

ரஜினி பிறந்த நாளுக்காக ஆல்பம் தயாரிக்கும் ராகவா லாரன்ஸ் - விஜய் ஆன்டனி

Ragava Lawrence Release Albul On 12

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளையொட்டி புதிய ஆல்பம் ஒன்றை வெளியிடுகின்றனர் நடிகர் ராகவா லாரன்ஸும் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனியும்.

வருகிற 12-12-12 அன்று ரஜினிக்கு 62 வயது பூர்த்தியாகிறது. இதையொட்டி அவரது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

திரையுலகில், ரஜினியை கவுரவிக்கும் வகையில் திரைப்பட நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் நடக்கின்றன.

நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸும், இசையமைப்பாளர் விஜய் ஆன்டனியும் இணைந்து இசை ஆல்பம் தயாரித்து வெளியிடுகின்றனர்.

இது குறித்து ராகவா லாரன்ஸ் கூறுகையில், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நானும் அவரது ரசிகன். இந்த ஆண்டு ரஜினியின் பிறந்த நாள் 12-12-12 அன்று வருகிறது. இது விசேஷமான தேதி.

எனவே ரஜினிக்கு அன்பு பரிசாக வழங்க இசை ஆல்பம் ஒன்றை தயாரித்து வருகிறேன். 12-12-12 அன்று இந்த குறுந்தகடு வெளியிடப்படும். ரஜினி மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்புக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த ஆல்பத்தை உருவாக்கி வருகிறேன்.

இதற்கான பாடல்களுக்கு திரைப்பட இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். ரஜினி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இது அமையும்," என்றார்.

பாடல் சிடிக்களை இலவசமாகத்தானே தரப் போறீங்க லாரன்ஸ்?

 

சல்மானுக்கு பதிலாக எல்லாம் என்னால் விருதை வாங்க முடியாது: கத்ரீனா கரார்

மும்பை: விருது வழங்கும் விழா ஒன்றில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு பதில் விருது வாங்க நடிகை கத்ரீனா கைப் மறுத்துவிட்டார்.

katrina kaif refuses accept award on slman khan
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் முன்னாள் காதலி கத்ரீனா கைப் அண்மையில் ஷாருக்கானுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தார். அதில் இருந்து அவர் சல்லுவுக்கு எதிராக திரும்பிவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கத்ரீனா சல்மான் கான் என் அண்ணன் மாதிரி என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

இந்நிலையில் விருது வழங்கும் விழா ஒன்றில் சல்மான் கானுக்கு பதில் அவரது விருதை வாங்க மேடைக்கு வருமாறு கத்ரீனா கைபை அழைத்துள்ளனர். அதற்கு அவர் சல்மானுக்கு பதில் விருதை வாங்க என்னால் முடியாது. சல்மான் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தில் ஒரு தொகையை எனக்கு கொடுத்தால் அவருக்கு பதில் விருதை வாங்குகிறேன் என்று கராராக பேசிவிட்டார்.

கத்ரீனாவின் இந்த பதிலைக் கேட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முதல் அங்கிருந்த அனைவரின் கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தன. ஷாருக்கானுடன் சேர்ந்ததால் தான் கத்ரீனா இவ்வாறு நடந்துகொள்கிறார் என்று சிலர் முணுமுணுக்கின்றனர்.

 

தொகுப்பாளினி மோனிகாவிற்கு ஆண் குழந்தை!

Tv Anchor Monika Gives Birth Baby

சின்னத்திரை தொகுப்பாளினி மோனிகா சின்ன இடைவெளிக்குப் பின் மீண்டும் டிவியில் தலைகாட்டி வருகிறார். இந்த இடைவெளிக்குக் காரணம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதுதானாம்.

சன் டிவியில் வானிலை அறிக்கை சொன்ன மோனிகா, சன் குழும சேனல்களில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.சினிமாவிலும் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் தலைகாட்டிய அவர் காதல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இருந்தாலும் டிவி நிகழ்ச்சித் தொகுப்பை கைவிடவில்லை.

திடீரென்று ஆறுமாதங்களுக்கு மேலாக சின்னத்திரையில் தலை காட்டாமல் இருந்த மோனிகா தற்போது மீண்டும் தொகுப்பாளினியாக வலம் வரத்தொடங்கியுள்ளார். ஏன் இந்த இடைவெளி? என்று கேட்டால் ஓர் ஆண் குழந்தை பிறந்திருப்பதுதான் காரணமாம். ஆறுமாத காலம் குழந்தையுடன் நேரம் செலவழித்த மோனிகா தற்போது தொகுப்பாளினி அவதாரம் எடுத்துள்ளார். குழந்தைக்கு என்ன பெயர் என்று கேட்டால் ஜேடன் என்று கூறுகிறார் மோனிகா. ஜேடன் என்றால் நன்றியுடைய என்று அர்த்தமாம். நல்ல பெயர்தான்.

 

நந்தினி வீட்டுக்கு போகாதே… செல்வத்தை மிரட்டிய டிவி ரசிகைகள்!

‘திருமதி செல்வம்' சீரியல் படப்பிடிப்பிற்குச் சென்ற அர்ச்சனாவின் ரசிகைகள் பலரும் செல்வத்தை சூழ்ந்து கொண்டு மிரட்டல் விடுத்தனர். இனிமே நந்தினி வீட்டுக்குப் போகதே... அவளை மறந்திடு என்று அன்பு(!) கட்டளையும் போட்டுள்ளனர்.

thirumathi selvam archana fans threatens
சன் டிவியில் தினசரி இரவு 8 மணியானால் போதும் திருமதி செல்வம் என்ற சீரியல் பார்க்க உட்கார்ந்து விடுகின்றனர் இல்லத்தரசிகள். 1300 எபிசோடுகளை நெருங்கும் திருமதி செல்வம் சீரியலில் செல்வமாக சஞ்சீவ், அர்ச்சனாவாக அபிதா நடிக்கின்றனர்.

செல்வம் மாறியது ஏன்?

ஏழையாக இருந்தவரை மனைவி அர்ச்சனா சொன்னதை கேட்டு நடந்த செல்வம் இப்போது பணக்காரன் ஆன உடன் தன் தோழி நந்தினியின் பேச்சை கேட்க ஆரம்பித்துவிட்டான். இது இல்லத்தரசிகளுக்கு பொறுக்கவில்லை.

நந்தினியின் நாடகம் தெரியுமா?

செல்வத்திடம் இருந்து அர்ச்சனாவை பிரிக்கிறேன் என்று சபதம் போட்டுள்ள நந்தினி கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடினாள். இப்போது அபார்சன் ஆகிவிட்டது அதுவும் அர்ச்சனாவால்தான் என்று இப்போது நாடகத்தை மாற்றி நடிக்கிறாள்.

அர்ச்சனாவை அடித்த செல்வம்

நந்தினி வெளிநாட்டுக்குச் செல்லவில்லை. உள்ளூரில்தான் இருக்கிறாள் என்று தெரிந்து கொண்ட அர்ச்சனா அவளுடைய வீட்டிற்குச் சென்று சண்டை போட்டு விட்டு வந்து விடுகிறாள். அவளை அடித்து விடுகின்றனர். இதை அப்படியே செல்வத்திடம் போட்டு கொடுத்துவிடுகிறாள் நந்தினி.

எனக்கு நந்தினிதான் முக்கியம்

இதைக் கேட்டு பொறுக்காத செல்வம் கோபத்தோடு வீட்டிற்கு வந்து அர்ச்சனாவை அடிக்கிறான். தனக்கு நந்தினிதான் முக்கியம். அவளால்தான் எல்லாம் கிடைத்தது உனக்கு இதற்கு தகுதியே இல்லை என்று கூறி அழவைக்கிறான்.

நல்ல பையனாதானே இருந்தான்?

செல்வம் தம்பி, மனைவி அர்ச்சனா பேச்சைக் கேட்டுக்கிட்டு அவ்ளோ நல்ல பையனா இருந்துச்சு. இப்ப அது நடந்துக்கறது வயித்தெரிச்சலா வருது. பாவம் அந்தப் பொண்ணு அர்ச்சனா... நிறைமாச கர்ப்பிணியா படாதபாடு படுறா. அந்த செல்வத்தைப் பார்த்தா நறுக்குனு நாலு கேள்வி கேட்கணும்! என்று பெண்கள் புலம்பத் தொடங்கி விட்டனராம்.

சுற்றி வளைத்த பெண்கள்

இது போதாது என்று சூட்டிங் ஸ்பாட்டிற்கே சென்று செல்வத்தை(சஞ்சீவ்) சுற்றி வளைத்த பெண்கள், அர்ச்சனாவை அழவைக்காதே செல்வம், அவ நிறை மாத கர்ப்பிணி கண் கலங்க கூடாது என்று கூறினர். நந்தினி உன்னை ஏமாத்துறா, அவளை மறந்திடு, அவ வீட்டுக்குப் போகதே என்றும் மிரட்டினர்.

கண்ணீர் விட்ட பெண்கள்

நடப்பது சீரியல் சூட்டிங்தான் என்று தெரிந்தும் ஒரு பெண் அர்ச்சனாவின் நிலையை (!) நினைத்து கண் கலங்க ஆரம்பித்து விட்டார். உடனே செல்வம், இதெல்லாம் சூட்டிங்தான். என்னுடைய கதாபாத்திரத்தை நான் செய்கிறேன். எனக்கு இப்போதைக்கு எதுவும் தெரியாது. தெரியவரும்போது நந்தினியை விட்டுவிட்டு அர்ச்சனா சொல்வதை மட்டுமே கேட்பேன் என்று கூறி அவர்களை சமாதானப் படுத்தினார்.

திருந்த மாட்டீங்களா பெண்களே?

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில்தான் திரையில் வரும் காட்சியைக் கண்டு கண் கலங்கி, கதறி அழும் காட்சிகள் தியேட்டரில் நடக்கும். ஆனால் இந்த காலத்தில் சீரியலைப் பார்த்துவிட்டு சூட்டிங் ஸ்பாட்டிற்குச் சென்று பெண்கள் மிரட்டியுள்ளனர். இது என்னைக்கு முடியப்போகுதோ தெரியலையே? டிஆர்பிஐ ஏத்துறதுக்கு இன்னும் என்னவெல்லாம் செய்வாங்களோ தெரியலையே?

 

என் மகள் எனனைத் திட்டித் தீர்த்துவிடுவாள்: ஷாருக்கான்

Shah Rukh Khan Scared Daughter Suhana

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வீட்டில் இருக்கையில் தனது மகள் சுஹானாவைப் பார்த்து தான் அதிகம் பயப்படுவாராம். இதை அவரே கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ஆர்யன்(15) என்ற மகனும், சுஹானா(12) என்ற மகளும் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஷாருக்கான் தனது மகளுக்கு பயப்படுவார் என்பது பலருக்கும் தெரியாது.

இந்நிலையில் இது குறித்து ஷாருக்கான் கூறுகையில்,

குழந்தைகள் என்னைத் திட்டுவதால் நான் வருத்தப்பட்டதில்லை.  ஏன் வீட்டுக்கு சென்றால் என் குழந்தைகள் கூட என்னைத் திட்டுவார்கள். இரவில் வெகு நேரம் கண் விழித்திருந்தால், குழந்தைகளுக்கு பிடிக்காத எதையாவது செய்தால் உடனே என் மகள் சுஹானா என்னை திட்டித் தீர்த்துவிடுவாள். அவள் சிறியவளாக இருந்தாலும் திடமான குரலில் திட்டுவாள். அதனால் நான் அவளுக்கு பயப்படுவேன் என்றார்.

பாலிவுட்டில் பெரிய ஆளாக இருக்கும் ஷாருக் ஒரு குட்டிப் பெண்ணுக்கு பயப்படுகிறார் என்றால் அது பெரிய விஷயம் தான்.

 

கமலா தியேட்டர் உரிமையாளர் சிதம்பரம் மரணம்!

Kamala Theater Owner Chidambaram Passes Away

மதுரை: கமலா திரையரங்க உரிமையாளர் விஎன் சிதம்பரம் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 76.

மதுரை சின்னசொக்கி குளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த வி.என்.சிதம்பரத்துக்கு சில நாட்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வி.என்.சிதம்பரம் இன்று காலை இறந்தார்.

அவருக்கு கமலா என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். மரணமடைந்த வி.என்.சிதம்பரம் செட்டியாரின் சொந்த ஊர் புதுகோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த ராங்கியம் என்ற கிராமம் ஆகும்.

சென்னையில் இவருக்கு சொந்தமாக கமலா மற்றும் கமலா மினி தியேட்டர்கள் உள்ளன.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மிக நெருங்கிய நண்பர் இவர். தூங்காநகரம் படத்தில் வில்லனாகவும், மேலும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு நாளை (ஞாயிற்றுக் கிழமை) அவரது சொந்த ஊரான ராங்கியத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.

 

தமிழ் படங்களை ஏற்க மறுக்கிறார் பிரியாமணி

Priyamani refusing to accept Tamil films 'தமிழ் பட கதைகள் என்னை கவராததால் ஏற்கவில்லை என்றார் பிரியாமணி. இது பற்றி அவர் கூறியதாவது: டோலிவுட்டில் 'அங்குலிகா என்ற படத்தில் நடிக்கிறேன். இதுவொரு பொது கருத்துள்ள கதை. இதற்குமுன் இப்படியொரு கதாபாத்திரம் செய்யவில்லை. இப்படத்தின் கதை இரண்டு காலகட்டங்களில் நடக்கிறது. ஒரு பகுதியில் இளவரசியாக நடிக்கிறேன். இது வழக்கமான இளவரசி கதாபாத்திரம் இல்லை. முந்தைய பிறவியின் கதாபாத்திரம். கடந்த கால வாழ்க்கையை குறிக்கும் இந்த கதையில் ஆத்மாவை சந்திக்கிறேன்.

அதன்பிறகு நடப்பதுதான் கதை. அடுத்தமாதம் முதல்வாரம் ஷூட்டிங். இதுதவிர இன்னொரு தெலுங்கு படத்தில் சமுத்ரா இயக்கத்தில் நடிக்கிறேன். இது ஹீரோயினை மையமாக வைத்த கதை. வித்தியாசமான அணுகுமுறையுடன் இதன் கரு அமைக்கப்பட்டுள்ளது. இதில் எனக்கு ஜோடி கிடையாது. ஆனாலும் முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் பேசி வருகின்றனர். தமிழில் எனக்கு வாய்ப்புகள் வருகிறது. ஆனால் எதுவும் என்னை கவரவில்லை. அதனால் எந்த படத்தையும் ஏற்கவில்லை. இவ்வாறு பிரியாமணி கூறினார்.
 

ஜோடி சேர்ந்த ஹீரோயின்களில் ஹன்சிகா ஒரு தேவதை : சிலிர்க்கிறார் சிம்பு

Hansika is an angel : Simbu 'எனக்கு ஜோடி சேர்ந்த ஹீரோயின்களில் ஹன்சிகாதான் அழகு. அவர் ஒரு தேவதை என்றார் சிம்பு. நயன்தாரா, த்ரிஷா, திவ்யா, சனா கான் உள்பட சமீபத்தில் வெளிவந்த 'போடா போடி வரலட்சுமி வரை சிம்புவுக்கு ஜோடியாக பல ஹீரோயின்கள் நடித்திருக்கின்றனர். தன்னுடன் நடித்த ஹீரோயின்களில் அழகானவர் ஹன்சிகாதான் என கூறியிருக்கிறார் சிம்பு. இது பற்றி அவர் கூறியதாவது: ஹன்சிகா தேவதைபோன்று அழகானவர். யாரையும் திரும்பி பார்க்க வைப்பார். எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்போல் தோன்றும் பெண்களில் அவரும் ஒருவர்.

ஆரம்ப காலத்தில் ஹன்சிகா நடித்த படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை அவருக்கு பெற்றுத்தராவிட்டாலும் நாளுக்கு நாள் அவரது ரசிகர் வட்டம் பெருகிக்கொண்டே இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை எனது எல்லா படங்களிலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள்தான் அதிகம். அடுத்து நான் நடிக்கும் வேட்டை மன்னன், வாலு இரண்டு படங்களிலும் எனக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவைத்தான் தேர்வு செய்திருக்கிறேன். அவரது அழகும், சொக்க வைக்கும் இளமை இரண்டையும் மனதில் வைத்துத்தான் அவரை தேர்வு செய்தேன். அவர் ஒரு தேவதை.
 

ஹீரோவுக்கு 9 மாதம் நடிப்பு பயிற்சி

9 month acting training for a hero காதல் அழகை பார்த்து வராது என்ற கருவுடன் படம் எடுப்பதாக கூறினார் இயக்குனர் நாகராஜ். 'தினந்தோறும் என்ற படத்தை இயக்கிய நாகராஜ் இயக்கும் புதிய படம் 'மத்தாப்பூ.  இதுபற்றி அவர் கூறியதாவது: எவ்வளவுதான் சம்பாதித்தாலும் நிம்மதியாக வாழ வேண்டும். அழகு மட்டும் இருந்தால் காதல் வந்துவிடாது. அதையும் மீறி  ஒரு ஈர்ப்பு இருந்தால்தான் காதல் வரும். உலக அழகியாகவே இருந்தாலும் அவரை மனதுக்கு பிடிக்காவிட்டால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. சாதாரண பெண்ணாக இருந்தாலும் ஏதோ ஒன்று அவர் முகத்தை மறக்க முடியாமல் செய்துவிடும் அதுதான் காதல்.

இதை மையமாக வைத்துதான் இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற ஜெயன் ஹீரோ. இப்படத்தை பொறுத்தவரை சிறு சிறு பாவனைகள்கூட முக்கியம் என்பதால் ஜெயனுக்கு மேலும் பயிற்சி தரப்பட்டது. சுமார் 9 மாத பயிற்சிக்கு பிறகுதான் அவரை ஷூட்டிங்குக்கு அழைத்துச் சென்றேன். இது நல்ல பலன் தந்தது. காயத்ரி ஹீரோயின். கீதா, சித்தாரா, ரேணுகா, கிட்டி, இளவரசு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சென்னை, திருச்சி, கொடைக்கானலில் ஷூட்டிங் நடந்துள்ளது. ஒளிப்பதிவு மாறவர்மன். இசை வேலாயுதம் (அறிமுகம்). தயாரிப்பு சுடலைக்கண் ராஜா. இவ்வாறு இயக்குனர் நாகராஜ் கூறினார்.
 

கிசு கிசு - மேக்அப் மேனை கழற்றிய ரகசியம்

Kodampakkam Kodangi நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

நயன ஹீரோயினுக்கு ரைட் ஹேண்டா இருந்த அவரோட மேக்அப் மேன் கொஞ்ச நாளா மிஸ்ஸிங்காம்... மிஸ்ஸிங்காம்... யார் எதைச் சொன்னாலும் நம்பாத நயனம் தன்னோட மேக் அப் மேன் சொன்னாதான் நம்புவாராம். நம்பிக்கைக்கு பாத்திரமானவர நயனம் திடீர்னு நீக்கிட்டாருனு கோலிவுட்ல பேசறாங்களாம். தன்னோட ரகசியங்கள வெளியில கசியவிட்டதாலதான் மேக்அப்மேனை நயனம் கழற்றிவிட்டாராம்... கழற்றிவிட்டாராம்...

சிக்ஸ் பேக் டிரெண்டு கோலிவுட்ல பழைய பார்முலாவாஆயிடுச்சாம்... ஆயிடுச்சாம்... படாதபாடுபட்டு சிக்ஸ் பேக்குக்கு மாறின ஹீரோக்கள் முகத்துலருந்த வசீகரம் போயிடுச்சின்னு ஃபீலிங்ல இருக்காங்களாம். எல்லாரும் மூட்டகட்டி வக்கற நேரத்துல தல நடிகர ஒரு இயக்கம் சிக்ஸ் பேக்குக்கு மாறச் சொல்லி இருக்காராம். தல ரெடின்னாலும் கூட இருக்கறவங்க விரும்பலையாம். 'இப்ப இருக்கற லுக்தான் பிளஸ்னு அட்வைஸ் பண்றாங்களாம். இயக்கத்தோட பேச்சுக்கு மதிப்பு கொடுத்து ஜிம்முக்கு கிளம்புன நடிகரோட மனச மாத்துற முயற்சிய¤ல நிறைய பேர் ஈடுபட்டிருக்காங்களாம்... ஈடுபட்டிருக்காங்களாம்...

அவன இவன ஜனன ஹீரோயின் கோலிவுட் வாய்ப்புக்காக காத்திருந்து புளிச்சிபோச்சாம்...புளிச்சிபோச்சாம்... மல்லுவுட்ல கவனத்த திருப்புனதுல பலன்கெடச்சிருக்காம். ஒரு படத்துல கமிட் ஆன நடிகைக்கு பெரிய ஹீரோக்களோட நடிக்கற ஆசயும் கூடவே வந்திருக்காம். இதால தன்னோட இணையதள பக்கத்தை பக்காவா யூஸ் பண்றாராம். 'லால் ஹீரோவோட பரம ரசிகை நான். அவரோட ஜோடி சேர்ற நாளுக்காக காத்துகிட்டிருக்கேன்னு சிக்னல் தர்றாராம்... தர்றாராம்...
 

பிக் பாஸ் வீட்டுக்குள் ராக்கி சவாந்த் ஒரு எபிசோடு மட்டும்தானாம்…

Rakhi Sawant Back On Bigg Boss But

கவர்ச்சி சூறாவளி ராக்கி சவாந்த் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வார இறுதி நாள் நிகழ்ச்சியை உற்சாகப்படுத்த ஒரு எபிசோடுக்கு மட்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைகிறாராம்.

பாபா ராம் தேவ் மீது காதல்.... டிவி ரியாலிட்டி ஷோவில் பரபரப்பு என பட்டாசு கொளுத்துபவர் ராக்கி சவாந்த். இவர் சுயம்வரம் நடத்தி ஒரு கணவனை தேர்ந்தெடுத்து அப்புறம் அதே ஆளை அடித்து கழற்றிவிட்டார்.

பாலிவுட் உலகின் ஐட்டம் கேர்ள் என்று பரபரப்பாக பேசப்பட்ட ராக்கி 2006ம் ஆண்டு பிக்பாஸ் ஷோவில் நுழைந்து பிரபலமடைந்தார். இப்போது மீண்டும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் விருந்தினராக நுழைகிறாராம். அதிக நாட்கள் அவர் தங்கப் போவதில்லையாம். ஒரே ஒரு எபிசோடுக்கு மட்டும் அந்த வீட்டிற்குள் தங்கியுள்ளவர்களை குஷிபடுத்தப் போகிறாராம். என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.

 

உதயநிதியின் நீண்ட நாள் ஆசை நிறைவேறிடுச்சி... அடுத்த படத்தில் ஜோடியானார் நயன்தாரா!

Nayanthara Signs Opposite Udhay   

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா.

அணில்(கள்) கடிச்ச பழத்துக்குதான் ஏக கிராக்கி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நயன்தாராவின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. தமிழிலும் தெலுங்கிலும் அவர் கால்ஷீட்டுக்கு கோடிகளில் கொட்டித் தரத் தயாராக உள்ளனர் தயாரிப்பாளர்கள்.

ஏற்கெனவே தமிழில் அஜீத்குமார் மற்றும் ஆர்யா படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் நயன்தாரா. தெலுங்கில் 4 படங்களில் நடிக்கிறார்.

இப்போது அடுத்த தமிழ்ப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஓரு கல் ஒரு கண்ணாடி படத்துக்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

ரெட்ஜெயன்ட் மூவீஸ் தயாரிக்க, சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ் ஆர் பிரபாகரன் இயக்கும் படமிது. வரும் ஜனவரியில் படம் தொடங்குகிறது.

ஒரு கல் ஒரு கண்ணாடியிலேயே நயன்தாராதான் நாயகியாக நடிக்க விருந்தாராம். பிரபு தேவா விவகாரத்தால் அவர் அப்போது படங்களில் நடிப்பதைத் தவிர்த்ததால் அப்போது கால்ஷீட் தரவில்லையாம்.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை வாங்கி வெளியிட்டதிலிருந்தே நயனுடன் உதயநிதிக்கு நல்ல நெருக்கம் என்பது குறிப்பிடத்தக்கது!

 

ஸ்வேதா மேனன் மீது வழக்கு

திருவனந்தபுரம் : சினிமாவுக்காக பிரசவத்தை படம் பிடிக்க அனுமதித்த ஸ்வேதா மேனன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மலையாள நடிகை ஸ்வேதா மேனன், பிளஸ்சி இயக்கும் 'களிமண்' படத்தில் கர்ப்பிணியாக நடித்தார். நிஜமாகவே கர்ப்பிணியாக இருந்த அவரது பிரசவக் காட்சியை படமாக்க நினைத்து அவரிடமும் அவர் கணவர் ஸ்ரீவல்சனிடமும் அனுமதி வாங்கினார் பிளஸ்சி. பின்னர் மும்பை மருத்துவமனை ஒன்றில் ஸ்வேதாவின் பிரசவக் காட்சி படம் பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் சினிமாவுக்காக, பிரசவ காட்சி படமாக்கப்பட்டதை எதிர்த்து  பவுலோஸ் என்பவர் எர்ணாகுளம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், 'பிரசவ காட்சிகள் சினிமாவுக்காக படம் பிடிக்கப்பட்டதின் மூலம் பெண்மையை இழிவுப்படுத்தியுள்ளார் ஸ்வேதா. எனவே இந்த காட்சியில் நடித்த அவர்,, அவர் கணவர் ஸ்ரீவல்சன், பிளஸ்சி மற்றும் கேமராமேன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம் டிசம்பர் 5,ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்துள்ளது.

 

ஹிட் லிஸ்ட் திரில்லர் கதை

சென்னை : தமிழில், 'காதல் கிசுகிசு', 'அன்பு', 'மஞ்சள் வெயில்' உட்பட சில படங்களில் நடித்த பாலா, தற்போது தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் 'ஹிட் லிஸ்ட்' என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். அருணாசலம் பிக்சர்ஸ், டோலிவுட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, சந்தியா, நரேன், ரியாஸ்கான், தலைவாசல் விஜய் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, மது நீலகண்டன். இசை, அல்போன்ஸ். பாடல்கள், பிறைசூடன். வசனம், சீனிவாச மூர்த்தி.

இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பின்னர், நிருபர்களிடம் பாலா கூறும்போது, ''காவல் துறை அதிகாரிகள் சிலர், மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். இதற்காக குழு அமைக்கப்பட்டு, கொலைகாரர்களை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பது கதை. அடுத்த மாதம் ரிலீசாகிறது' என்றார்.

 

கிளாமர் இமேஜ் வேண்டாம்

சென்னை : கிளாமர் இமேஜில் இருந்து விடுபட நினைக்கிறேன் என்று லட்சுமி ராய் கூறினார். பி.டி.செல்வகுமார் இயக்கும் 'ஒன்பதுல குரு' படத்தில் வினய்யுடன் நடித்து வருகிறார் லட்சுமிராய். இதன் படப்பிடிப்பில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு, கன்னடம் மலையாளத்திலும் நடித்து வருகிறேன். மங்காத்தா, காஞ்சனா போன்ற ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் கிளாமர் இமேஜ்தான் ஏற்பட்டிருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்பதற்காக அதுமாதிரியான கதைகளில் நடிக்கவில்லை. விதவிதமான கேரக்டர்களில் நடித்து நடிப்பு திறமையை வெளிப்படுத்தவே விரும்புகிறேன்.

அதனால் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். 'ஒன்பதுல குரு' படத்தில் கிளாமருடன் கலந்த காமெடி கேரக்டர். நான்கு நண்பர்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் பெண்ணாக நடிக்கிறேன். என் அளவுக்கு கிசுகிசுவில் சிக்கியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இப்போது அதிலிருந்து விலகி இருக்கிறேன். இப்போது சினிமா தவிர வேறெதையும் சிந்திக்கவில்லை. எனது அக்கா அஸ்வினி ராயுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. அடுத்து என் திருமணம்தான். நிச்சயம் காதல் திருமணம்தான். எனக்கு முழு சுதந்திரமும் கொடுக்கிற, என்னை புரிந்து கொண்டு அன்பு செலுத்துகிறவர் கிடைத்தால் உடனே திருமணம்தான்.

 

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் 25 நிமிட காட்சிகள் கட்

சென்னை : விஜய் சேதுபதி, காயத்ரி நடித்துள்ள படம், 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்'. பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ள இந்தப் படம், வரும் 30,ம் தேதி ரிலீசாகிறது. படம் பற்றி நிருபர்களிடம் விஜய் சேதுபதி கூறியதாவது: படத்தை பார்த்த மீடியாவும் திரையுலக பிரமுகர்களும் பாராட்டினார்கள். மேற்கொண்டு கவனம் செலுத்தினால், அதிக தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்று சொன்னார்கள். அதனால் லேட்டாக ரிலீஸ் ஆகிறது.

அதுவும் எங்கள் படக் குழுவினருக்கு நல்லதாகத் தோன்றியது. தற்போது இப்படத்தை ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷனுக்காக ஜே.சதீஷ்குமார் வாங்கியுள்ளார். தேவையில்லாமல் இருந்த 25 நிமிட காட்சியை வெட்டியுள்ளோம். கதையோடு வரும் காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் மட்டுமே பிடிக்கும். வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன். அடுத்து 'ரம்மி', 'சூது கவ்வும்', 'பண்ணையாரும் பத்மினியும்' படங்களில் நடிக்க உள்ளேன்.

 

ஒருவர் மீது இருவர் சாய்ந்து பாடல் வெளியீடு

சென்னை : ஏட்ரியா டெக் பிலிம்ஸ் சார்பில் என்.கே.நாராயணராஜூ தயாரிக்கும் படம், 'ஒருவர் மீது இருவர் சாய்ந்து'. பாலசேகரன் இயக்குகிறார். 'ராட்டினம்' லகுபரன், சுவாதி ஜோடி. மற்றும் கே.பாக்யராஜ், விசு, சான்யா உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, விஜய்கோபால். இசை, ஹரிஹரன். பாடல்கள்: சினேகன், விவேகா. இதன் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. கே.பாக்யராஜ் வெளியிட, விசு பெற்றார். எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.எஸ்.சீனிவாசன், அகத்தியன், பிரபு சாலமன், கரு.பழனியப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர். சின்னி ஜெயந்த் தொகுத்து வழங்கினார். பாலசேகரன் நன்றி கூறினார்.

 

தமிழ், தெலுங்கில் கபடம்

சென்னை : சோழா கிரியேஷன்ஸ் சார்பில் பொன்னுரங்கம் தயாரிக்கும் படம், 'கபடம்'. சச்சின், சந்தோஷ், அங்கனா ராவ், ஹனிகா நடிக்கிறார்கள். சதீஷ்குமார் இசை. செல்வராகவன் உதவியாளர் ஜோதிமுருகன் இயக்குகிறார். படம்பற்றி அவர் கூறியதாவது: ஹீரோவுக்கு திருமணம் நிச்சயமாகிறது. நிச்சயித்த பெண்ணை ஹீரோ காதலிக்கிறார். கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் நகரத்தில் பெரிய வேலையில் இருக்கும் ஹீரோயின் தன் கிராமத்து வாழ்க்கையை மறந்து நாகரீக வாழ்க்கைக்கு பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.

அதனால் அவளுக்கு பாரம்பரியத்தை விரும்பும் ஹீரோவை பிடிக்கவில்லை. நிச்சயதார்தத்தை முறிக்கத் திட்டமிடுகிறார். அதை ஹீரோ எப்படி சமாளிக்கிறார் என்பது கதை. சென்னைக்கு வரும் பெண்கள் வாழ்க்கை எப்படி மாறிப்போகிறது என்பதையும் அதனால் அவர்கள் இழக்கும் விஷயங்கள் பற்றியும் பேசும் படம். தெலுங்கில் 'கப்படம்' என்ற பெயரில் தயாராகி இருக்கிறது.

 

சினிமா தலைப்புக்கு லட்சக்கணக்கில் பேரம் கெஸ்ட் இயக்குனர் புகார்

சென்னை : மூர்த்தி ஸ்ரீனிவாசலு, திருமால் ரெட்டி தயாரிக்கும் படம், 'கெஸ்ட்'. ஹரிஷ் கல்யாண், பூனம் கவுர் ஜோடி. ராஜ்,ககனி இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. சரத்குமார் வெளியிட, லிங்குசாமி பெற்றார். இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
படம் பற்றி இயக்குனர் ராஜா கார்த்திக் கூறியதாவது:

காதலிக்கும்போது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறவர்கள், திருமணத்துக்கு பிறகு புரிந்து கொள்வதில்லை. காரணம் இருவருமே வேலைக்குச் செல்வதால் மனம்விட்டு பேசும் சந்தர்ப்பங்கள் குறைந்து விடுகிறது. இந்த இடைவெளியை தவறானவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த உண்மையை படமாக்கியிருக்கிறோம். படத்துக்கு முதலில் 'அக்கம் பக்கம்' என்றுதான் தலைப்பு வைத்திருந்தோம். ஆனால், இந்த தலைப்பை சினிமாவுக்கு தொடர்பில்லாதவர்கள் கில்டில் பதிவு செய்து வைத்திருந்தார்கள்.

தலைப்பை விட்டுக் கொடுக்க, 2 லட்சம் வரை பேரம் பேசினார்கள். அதை கொடுக்க விரும்பாததால் 'கெஸ்ட்' என்று பெயர் வைத்துள்ளோம். கில்டு நல்ல அமைப்பு. அதில் 2ஆயிரத்து 700 ரூபாய் கட்டி உறுப்பினராகி, 500 ரூபாய் கொடுத்து தலைப்பை பதிவு செய்து, அதை லட்சக் கணக்கில் விற்பனை செய்கிறார்கள். பாரம்பரிய அமைப்பை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

கூட்டம்

சென்னை : தி மம்மூத் மீடியா அன்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் எம்.சுமந்த் குமார் ரெட்டி தயாரிக்கும் படம் 'கூட்டம்'. இதில் நவீன் சந்திரா, பியா, கிஷோர், நாசர் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சுதாகர். இசை, ஜேம்ஸ் வசந்தன். பாடல்கள்: மதன் கார்க்கி, மோகன்ராஜ், சுமதி. வசனம், சங்கர் தேவராஜ். எம்.ஜீவன் இயக்குகிறார். அவர் கூறும்போது, 'நவீன் சந்திராவும், அவர் நண்பர்களும் நக்சல்கள். ஒரு கட்டத்தில் மனம் மாறுகிறார்கள். சில அரசியல்வாதிகளும், போலீஸ் அதிகாரிகளும் தங்கள் சுயநலத்துக்காக பழையபடி நக்சல்களாக அவர்களை மாற்றுகின்றனர். பொதுநலன் கருதி நவீன் சந்திராவும், அவரது நண்பர்களும் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது கதை' என்றார்.