சென்னை: தளபதியின் மாவட்ட பட நாயகி தனது தொழில் அதிபர் காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தளபதியுடன் சேர்ந்து கன், மாவட்டம் படங்களில் நடித்த அந்த நடிகை ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த தொழில் அதிபரின் வீட்டில் நடிகையை ஏற்க மறுக்கிறார்களாம். மேலும் அவருக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வருகிறார்களாம்.
எங்கே வேறு பெண்ணை கட்டி வைத்து விடுவார்களோ என்று அஞ்சிய தொழில் அதிபர் நடிகையிடம் நாம் ரகசிய திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினாராம். அதற்கு நடிகையோ எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். உங்கள் வீட்டில் நடக்கும் பிரச்சனை அடங்கியதும் காதும் காதும் வைத்தது போன்று திருமணம் செய்து கொள்வோம் என்று கூறியிருக்கிறாராம்.
இதற்கு தொழில் அதிபர் சம்மதம் தெரிவித்தபோதிலும் தனது வீட்டாரை நினைத்து கலக்கத்திலேயே உள்ளாராம்.