பாலச்சந்தர், ஷங்கருடன் பேசிய ரஜினி!


கோடம்பாக்கத்தில் இன்ஸ்டன்ட் நியூஸ் என்றால் அது ரஜினியிடமிருந்து முக்கிய திரையுலக விஐபிக்களுக்கு வரும் போன்கால்கள் பற்றியதுதான்.

கிட்டத்தட்ட மறுபிறவி எடுத்திருக்கிறார் ரஜினி. இப்போதைக்கு சிங்கப்பூரில் சில தினங்கள் பூரண ஓய்வில் இருக்கும் ரஜினி, அடுத்த மாதம் சென்னை திரும்பப் போகிறார்.

இந்த நிலையில் திரையுலகில் தனது நெருங்கிய நண்பர்களுடன் போனில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார் சூப்பர் ஸ்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன் தனது குருநாதர் பாலச்சந்தருக்கு போன் செய்த ரஜினி, தனது உடல்நிலை குறித்த தகவல்களைக் கூறினார். ரஜினியைப் பார்க்க சிங்கப்பூருக்கு வர விரும்புவதாக பாலச்சந்தர் தெரிவிக்க, வேண்டாம் சார். நீங்க உங்கள் உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் விரைவில் வந்துவிடுவேன், என்று கூறியுள்ளார்.

ஷங்கருடன்...

நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது அபிமான இயக்குநர்களில் ஒருவரான ஷங்கருக்குப் போன் செய்து சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தாராம் ரஜினி. சிவாஜி, எந்திரன் பட அனுபவங்கள் பற்றி இருவரும் பேசினராம். மேலும் எந்திரனுக்கு கிடைத்து வரும் விருதுகள் குறித்தும் இருவரும் பேசிக் கொண்டிருந்தாக, இயக்குநர் ஷங்கரே தெரிவித்துள்ளார்.
 

பொய் சொல்கிறார் காஜல்! - விளக்கத்தை ஏற்க மறுக்கும் தெலுங்கு படவுலகம்


"நான் வட இந்தியப் பெண், என்னை தென்னிந்திய நடிகை என்று கூறாதீர்கள்", என்று மேடையில் முழங்கி, பின்னர் நான் அப்படிச் சொல்லவே இல்லை என்று மறுத்த காஜல் அகர்வாலுக்கு தெலுங்கு திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காஜல் அகர்வால் தெலுங்குப் பட வாய்ப்புகளுக்காக பொய் சொல்கிறார், என்று சக நடிகைகள் மற்றும் முன்னணி இயக்குநர்கள் அவர் மீது புகார் கூறியுள்ளனர்.

சிங்கம் படத்தின் இந்திப் பதிப்பில் நடிக்கிறார் காஜல். இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தன்னை எல்லோரும் தென்னிந்திய நடிகை என குறிப்பிடுவது பிடிக்கவில்லை என்றார்.

ஒரே ஒரு இந்திப் படத்தில் நடித்த உடன் வாழ்க்கை தந்த தமிழ் - தெலுங்குப் பட உலகை அவமானப்படுத்துகிறார் காஜல் என அவருக்கு எதிராகக் கிளம்பினர் தென்னிந்தியப் பட உலகினர்.

இந்த நிலையில், நான் அப்படிச் சொல்லவே இல்லை. நான் சொன்னதை தப்பா எழுதிட்டாங்க, என்று சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார் காஜல். தென்னிந்தியப் படங்களில் நடிப்பதில் நான் பெருமை அடைகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இதனை ஏற்க தெலுங்கு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் தயாராக இல்லை.

"காஜல் இப்போது தொடர்ந்து பொய் பேசுகிறார். அவர் பேசியது தவறு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், வட இந்திய நடிகை என்பதை பெருமையாக நினைக்கும் அவருக்கு தமிழ் - தெலுங்கு சினிமாவில் என்ன வேலை?," என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
 

கார்த்தி - ரஞ்சனி திருமணம்... ஏற்பாடுகள் மும்முரம்!!


நடிகர் கார்த்தி - ரஞ்சனி திருமண ஏற்பாடுகள் வெகு வேகமாக நடந்து வருகின்றன. கோவை கொடீஷியா அரங்கில் நடக்கும் இந்தத் திருமணத்துக்கு பல ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால், அதற்கேற்ற வகையில் சமையல், போக்குவரத்து வசதிகளைச் செய்வதில் சிவகுமார் குடும்பமே மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இளம் நடிகர்களில் முன்னணியி்ல் உள்ளவர் கார்த்தி. சிவகுமாரின் இளையமகன். இவருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த சின்னசாமி - ஜோதி மீனாட்சி தம்பதியின் மகள் ரஞ்சனிக்கும் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் ஈரோட்டில் உள்ள மணமகள் வீட்டில் நடந்தது.

தற்போது திருமண ஏற்பாடுகளில் கார்த்தி குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கார்த்தியின் பூர்வீகம் கோவை. இப்போதும் அவரது குடும்பத்தினருக்கு நெருக்கமான உறவுக்காரர்கள் இங்கே வசிக்கிறார்கள். அது மட்டுமின்றி, மாவட்டம் முழுவதிலும் இவர்களுக்கு உறவினர்கள் உள்ளனர்.

கோவை மண்டலத்தில் உள்ள தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் அனைவருமே இந்தத் திருமணத்துக்கு வரவிருக்கிறார்கள். இவர்களைத் தவிர, தென்னிந்திய திரையுலகமே அன்றைய தினம் கோவையில் குவியவிருக்கிறது.

அதே நாளில் இயக்குநர் செல்வராகவனுக்கும் திருமணம் என்பதால், நடிகர் நடிகைகள் படப்பிடிப்பை ரத்து செய்துள்ளனர். எனவே ஒட்டுமொத்த திரையுலகமும் கோவைக்கு வருகிறது.

மணமகளுக்கு பக்கத்து மாவட்டமான ஈரோடுதான் சொந்த ஊர். இவர்களுக்கும் உறவுக்காரர்கள், நண்பர்கள் ஏராளம் என்பதால் பல ஆயிரக்கணக்கானோர் இந்தத் திருமணத்துக்கு திரண்டு வருவார்கள் என எதி்ர்ப்பார்க்கப்படுகிறது.

அனைவரையும் சிறப்பாக உபசரிக்க வேண்டும் என்பதற்காக சிவகுமார் குடும்பமே ஒவ்வொரு வசதியையும் பார்த்துப் பார்த்து செய்து வருகிறது.

விருந்தினர்கள் உணவு அருந்த, வாகனங்கள் நிறுத்த, ஓய்வாக அமர என எல்லாவற்றுக்கும் மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து இன்று நடந்த பிரஸ்மீட்டில் நடிகர் கார்த்தி கூறுகையில், "எங்களுக்கு சொந்தக்காரர்கள் நிறைய பேர். ஊரே சொந்தக்காரர்கள்தான். எல்லாரையும் கூப்பிட்டு வைத்து திருமணம் செய்வது எனக்கு மிகுந்த நிறைவாக உள்ளது. இவர்கள் அனைவருக்கும் எந்த சிறு குறையும் நேராத அளவுக்கு உபசரிப்பு நடக்க ஏற்பாடு செய்துள்ளோம். அதற்காகத்தான் கொடீசியா அரங்கை தேர்வு செய்தோம். திருமண நாள் நெருங்க நெருங்க இனம் புரியாத பரபரப்பை உணர்கிறேன்," என்றார்.

முதல்வர் பங்கேற்பு

திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் 7-ந்தேதி மாலை 7 மணிக்கு நடக்கிறது. இதில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் திரளாக பங்கேற்று வாழ்த்த உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சூர்யா - ஜோதிகா திருமணத்தை நடத்தி வைத்தவரும் முதல்வர் ஜெயலலிதாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

IIFA awards : ரோபோட்டுக்கு 3 விருதுகள்!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

IIFA awards : ரோபோட்டுக்கு 3 விருதுகள்!

6/27/2011 4:06:30 PM

இந்தியா சர்வதேச திரைப்பட விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. ஷாருக் கான் சிறந்த நடிகராகவும், அனுஷ்கா சர்மா சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தி சினிமாவுக்காக, இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளில் மட்டுமே நடத்தப்படும் விழாதான் இஃபா எனப்படும் இந்தியா சர்வதேச திரைப்பட விழா. இதில் இந்தித் திரைப்படங்களுக்கும், இந்தி நடிகர், நடிகையருக்கும் மட்டுமே விருதுகள் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு கொழும்பில் இந்த விழா நடத்தப்பட்டது. ஆனால் உலகத் தமிழரக்ளின் ஒட்டுமொத்த கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா உள்ளிட்ட சூப்பர் ஸ்டார் நடிகர், நடிகைகள் விழாவை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விழாவையே சப்பென்றாக்கி, பெரும் பிளாப் ஷோவாக்கி ராஜபக்சே அன் கோ முகத்தில் கரியைப் பூசினர்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விழா டோரண்டோவில் நடந்தது. இதில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. தபாங் படம் நிறைய விருதுகளைப் பெற்றது. சோனு சூத் சிறந்த வில்லனாக தேர்வானார். சோனாக்ஷி சின்ஹா சிறந்த புதுமுக நடிகையாக தேர்வு பெற்றார்.

சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், மை நேம் இஸ் கான் படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதைத் தட்டிச் சென்றார். அப்படத்தை இயக்கிய கரண் ஜோஹர் சிறந்த இயக்குநராக தேர்வானார்.

சிறந்த நடிகை விருது அனுஷ்கா சர்மாவுக்குக் கிடைத்தது. பந்த் பாஜா பாராத் படத்துக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்தது.

சிறந்த பின்னணிப் பாடகியாக மம்தா சர்மா விருது பெற்றார்.

ரோபோட்டுக்கு 3 விருதுகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் இயக்கி, ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடித்த ரோபோட் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்தன.

சிறந்த மேக்கப் கலைஞர் பானு, சிறந்த கலை இயக்குநர் சாபு சிரில், சிறந்த ஸ்பெஷல் எபக்ட் ஆகிய மூன்று பேருக்கும் ரோபோட் படத்துக்காக விருது கிடைத்தன.

 

நண்பனுக்கு ரஜினி வாழ்த்து!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நண்பனுக்கு ரஜினி வாழ்த்து!

6/27/2011 3:52:55 PM

ஷங்கர் இயக்கததில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கும் படம் 'நண்பன்'. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வரும் நிலையில், சிங்கப்பூரிலிருந்து ரஜினி தனக்கு தொலைபேசி மூலம் அழைத்து வாழ்த்து தெரிவித்ததாக ஷங்கர் தன்னுடைய வலையதளத்தில் தெரிவித்துள்ளார். தன்னுடைய வலையதளத்தில் நண்பன் சூட்டிங் ஸ்பாட்டில் தான் பிசியாக இருந்த போது தனக்கு சிங்கப்பூரிலிருந்து call ஒன்று வந்ததாகவும் அதில் ரஜினி சார் குரலை கேட்டதும் சந்தோஷ அடைந்தாகவும் ஷங்கர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரை தான் நலம் விசாரித்ததாக கூறிய ஷங்கர் (ரஜினி சார்)அவருடைய பேச்சில் புது தெம்பும் புத்துணர்ச்சியும் தெரிந்ததாக கூறினார். நண்பன் வெற்றி பெற வாழத்த தெரிவித்த ரஜினி இன்னும் 45 நாட்களில் சென்னை திரும்புவேன் என்று தன்னிடம் தொலைபேசியில் கூறினார் என்று ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.




 

விஜய் டி.வி சினிமா விருது 2010!

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial
விஜய் டி.வி சினிமா விருது 2010!

6/27/2011 3:32:34 PM

விஜய் டி.வி. சார்பில் ஆண்டுதோறும் பிரமாண்டமான முறையில், கலை நிகழ்ச்சிகளுடன் விருதுகள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்தாண்டும் 2010ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சிறந்த நடிகருக்கான விருது, "ராவணன்" படத்திற்காக விக்ரமுக்கும், சிறந்த நடிகைக்கான விருது, "அங்காடித் தெரு" படத்திற்காக அஞ்சலிக்கும் கிடைத்தது. சிறந்த வில்லன் நடிகனாக 'எந்திரன்' படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வழங்கப்பட்டது.

விருதுகள் விவரம் பின்வருமாறு:

சிறந்த நடிகர் : விக்ரம் (ராவணன்)

சிறந்த நடிகை : அஞ்சலி (அங்காடித் தெரு)

சிறந்த வில்லன் நடிகர் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (எந்திரன்)

சிறந்த நகைச்சுவை நடிகர் ; சந்தானம் (பாஸ் என்கிற பாஸ்கரன்)

சிறந்த இயக்குனர் : வசந்த பாலன் (அங்காடித் தெரு)

சிறந்த கதை மற்றும் திரைக்கதை : பிரபு சாலன் (மைனா)

சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர்,ரகுமான் (விண்ணைத் தாண்டி வருவாயா)

சிறந்த குணச்சித்திர நடிகர் : தம்பி ராம்மையா (மைனா)

சிறந்த குணச்சித்திர நடிகை : சரண்யா (தென்மேற்கு பருவாக்காற்று)

சிறந்த ஒளிப்பதிவு : ரத்னவேலு (எந்திரன்)

சிறந்த புதுமுக நடிகர் : வித்தார்த் (மைனா)

சிறந்த புதுமுக நடிகை : அமலா பால் (மைனா)

சிறந்த பொழுதுபோக்கு படம் : சிங்கம்

சிவாஜி கணேசன் விருது : இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்

மக்களால் தேர்வு செய்யப்பட்ட விருதுகள்!

Favourite ஹீரோ : ரஜினிகாந்த் (எந்திரன்)

Favourite ஹீரோயின் : த்ரிஷா (விண்ணைத் தாண்டி வருவாயா)

Favourite டைரக்டர் : ஷங்கர் (எந்திரன்)

Favourite படம் : எந்திரன்




 

விஜய் டி.வி சினிமா விருது 2010!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விஜய் டி.வி சினிமா விருது 2010!

6/27/2011 3:32:53 PM

விஜய் டி.வி. சார்பில் ஆண்டுதோறும் பிரமாண்டமான முறையில், கலை நிகழ்ச்சிகளுடன் விருதுகள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்தாண்டும் 2010ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சிறந்த நடிகருக்கான விருது, "ராவணன்" படத்திற்காக விக்ரமுக்கும், சிறந்த நடிகைக்கான விருது, "அங்காடித் தெரு" படத்திற்காக அஞ்சலிக்கும் கிடைத்தது. சிறந்த வில்லன் நடிகனாக 'எந்திரன்' படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வழங்கப்பட்டது.

விருதுகள் விவரம் பின்வருமாறு:

சிறந்த நடிகர் : விக்ரம் (ராவணன்)

சிறந்த நடிகை : அஞ்சலி (அங்காடித் தெரு)

சிறந்த வில்லன் நடிகர் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (எந்திரன்)

சிறந்த நகைச்சுவை நடிகர் ; சந்தானம் (பாஸ் என்கிற பாஸ்கரன்)

சிறந்த இயக்குனர் : வசந்த பாலன் (அங்காடித் தெரு)

சிறந்த கதை மற்றும் திரைக்கதை : பிரபு சாலன் (மைனா)

சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர்,ரகுமான் (விண்ணைத் தாண்டி வருவாயா)

சிறந்த குணச்சித்திர நடிகர் : தம்பி ராம்மையா (மைனா)

சிறந்த குணச்சித்திர நடிகை : சரண்யா (தென்மேற்கு பருவாக்காற்று)

சிறந்த ஒளிப்பதிவு : ரத்னவேலு (எந்திரன்)

சிறந்த புதுமுக நடிகர் : வித்தார்த் (மைனா)

சிறந்த புதுமுக நடிகை : அமலா பால் (மைனா)

சிறந்த பொழுதுபோக்கு படம் : சிங்கம்

சிவாஜி கணேசன் விருது : இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்

மக்களால் தேர்வு செய்யப்பட்ட விருதுகள்!

Favourite ஹீரோ : ரஜினிகாந்த் (எந்திரன்)

Favourite ஹீரோயின் : த்ரிஷா (விண்ணைத் தாண்டி வருவாயா)

Favourite டைரக்டர் : ஷங்கர் (எந்திரன்)

Favourite படம் : எந்திரன்




 

நடிகை அனுஷ்கா சர்மாவிடம் சுங்க அதிகாரிகள் அதிரடி விசாரணை


மும்பை : விமான நிலையத்திற்கு வந்த இந்தி நடிகை அனுஷ்கா சர்மா கொண்டு வந்திருந்த பொருட்களுக்கு உரிய சுங்க வரி செலுத்தாத காரணத்தால் அவரிடம் சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பாலிவுட் கலைஞர்கள் வெளிநாடுகளுக்குப் போய் விட்டுத் திரும்பும்போது கை நிறைய, பை நிறைய பல்வேறு பொருட்களை அள்ளி வருகிறார்கள். ஆனால் அதற்குண்டான சுங்க வரியை மட்டும் மறக்காமல் செலுத்துவதில்லை.

இதனால் சமீப காலமாக பாலிவுட் கலைஞர்களை பிடித்து விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது சுங்கத்துறை. பிபாஷா பாசு சமீபத்தில் இதுபோல பிடிபட்டார். இந்த நிலையில் இன்று அனுஷ்கா சர்மாவைப் பிடித்து விசாரித்துள்ளனர்.

டோரன்டோவில் நடந்த இஃபா விழாவுக்காக போயிருந்த அனுஷ்கா, திரும்பி வந்தபோது பல்வேறு பொருட்களுடன் மும்பைக்கு வந்து சேர்ந்தார். ஆனால் அதற்கான சுங்க வரியை அவர் செலுத்தவில்லை. இதையடுத்து விமான நிலையத்தில் வைத்து அவர் கொண்டு வந்த பொருட்கள் குறித்து சுங்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
 

அவன் இவன் படத்தில் குர்பானியை அவமதித்ததாக பாலா மீது தேசிய லீக் புகார்!


இயக்குநர் பாலா, இஸ்லாமியர்களின் குர்பானியை அவமதித்துள்ளார். அவன் இவன் படத்தில் குர்பானியை அவமதிக்கும் வகையில் அவர் வைத்துள்ள காட்சிகளுக்காக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என தேசிய லீக் கட்சி அறிவித்துள்ளது.

அவன் இவன் படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இப்படத்தில் சொரிமுத்து ஐய்யனார் சாமியைக் கேலி செய்யும் வகையிலும், சிங்கம்பட்டி ஜமீனை அவமதிக்கும் வகையிலும், அவதூறு செய்யும் வகையிலும் காட்சிகள் வைத்திருப்பதாக கூறி சிங்கம்பட்டி ஜமீன் தரப்பு கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில் இஸ்லாமியர்களும் பாலாவுக்கு எதிராக திரண்டுள்ளனர். இப்படத்தில் வரும் சில காட்சிகள் இஸ்லாமியர்களின் குர்பானியை அவமதிப்பதாக உள்ளதாக தேசிய லீக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து இன்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர், போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் தேசிய லீக் சார்பில் புகார் தரப்பட்டது. அதில் குர்பானியை அவமதிக்கும் வகையிலான காட்சிகளைத் தடை செய்யக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் குர்பானியை அவமதிக்கும் வகையில் காட்சிகளை வைத்த இயக்குநர் பாலா மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் தேசிய லீக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

திருமண பந்தத்தில் இணைந்தார் 'ஜேம்ஸ் பாண்ட்' டேனியல் கிரேக்


லண்டன்: நடப்பு 'ஜேம்ஸ் பாண்ட்' டேனியல் கிரேக் தனது சக நடிகையான ராசெல் வேஷை திருமணம் செய்து கொண்டார்.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் டேனியல் கிரேக் (43). தற்போதைய ஜேம்ஸ் பாண்ட் நடிகர். இவரும் இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகை ராசெல் வேஷும் சேர்ந்து ட்ரீம் ஹவுஸ் என்ற படத்தில் கணவன், மனைவியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் யாரும் எதிர்பாரா வண்ணம் நிஜ வாழ்விலும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

டேனியலும், ரேசெலும் கடந்த புதன்கிழமை நியூயார்க்கில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர் என்று டேனியலின் செய்தித் தொடர்பாளர் ராபின் பௌன் தெரிவித்தார்.

இந்த திருமணத்தில் இரண்டு பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள். அதில் ஒருவர் ரேசெலின் 4 வயது மகன் ஹென்ரி, மற்றொருவர் டேனியலின் 18 வயது மகள் எல்லா.

டேனியல் சட்சுகி மிட்ஷெல் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். அன்மையில் தான் இந்த ஜோடி பிரிந்தது. இதேபோன்று ரேசெல் பிளாக் ஸ்வான் என்ற படத்தின் இயக்குனர் டாரன் அரோனோப்ஸ்கியுடன் நீண்ட காலமாக இருந்தார். அவர் தான் ஹென்ரியின் தந்தை (தலை 'லைட்டா' சுத்துதுல்ல!).

தி கான்ஸ்டன்ட் கார்டனர் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ரேசெல் வேஷ் கடந்த 2005-ம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றவர்.
 

விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்


விஜய் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிகராக விக்ரமும், சிறந்த நடிகையாக அஞ்சலியும் தேர்வாகியுள்ளனர். சிறந்த வில்லனுக்கான விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது. எந்திரன் படத்தில் நடித்ததற்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் மொத்தம் 149 படங்கள் விருதுப் போட்டியில் கலந்து கொண்டன. அதிலிருந்து ரசிகர்கள் தேர்வு செய்த கலைஞர்களுக்கு விருது அளிக்கப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு சிறந்த வில்லன் நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. எந்திரன் படத்தில் அவர் நடித்த ரோபோ கதாபாத்திரத்திற்காக இந்த விருது கிடைத்துள்ளது. விருதினை ரஜினியின் மருமகன் தனுஷ் பெற்றுக் கொண்டார்.

ராவணன் படத்தில் நடித்த விக்ரமுக்கு சிறந்த நடிகர் விருதும், அங்காடித் தெரு படத்தில் நடித்த அஞ்சலிக்கு சிறந்த நடிகை விருதும் கிடைத்தன.

அங்காடித் தெரு படத்தின் இயக்குநர் வசந்த பாலனுக்கு சிறந்த இயக்குநர் விருது கிடைத்தது. இந்தப் படமே சிறந்த படமாகவும் தேர்வானது.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார். மைனா பட நாயகன் விதார்த் சிறந்த அறிமுக நாயகனாகவும், அமலா பால் சிறந்த அறிமுக நாயகி விருதையும் பெற்றனர்.

சிறந்த துணை நடிகையாக சரண்யாவும், சிறந்த துணை நடிகராக தம்பி ராமையாவும் விருது பெற்றனர். காமெடியனாக சந்தானம் தேர்வானார்.

பாடலாசிரியருக்கான விருதை வைரமுத்தவும், சிவாஜி கணேசன் விருது கே.பாலச்சந்தருக்கும், பொழுதுபோக்கு படத்துக்கான விருது சிங்கம் படத்துக்காக சூர்யாவுக்கும் கிடைத்தது.

தேர்வுக் குழு என்று எதையும் நியமிக்காமல் முற்றிலும் ரசிகர்களே ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த விருதுகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
 

கனடாவில் அமர்க்களமாக நடந்த ஐஃபா விழா!


டொரண்டா: கடந்த ஆண்டு கொழும்பில் சந்தித்த தோல்விக்கு வட்டியும் முதலுமாக சேர்த்து அமர்க்களமாக ஐஃபா விழாவை நடத்தினர் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி ஏற்பாட்டாளர்கள்.

கனடா தலைநகர் டொராண்டாவில் சர்வதேச இந்திய திரை அகாடமி விருதுகள் வழங்கும் விழா நடந்தது. பல்வேறு கலைஞர்களும் கலந்து கொண்டு, இசை, நடனம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர்.

மைக்கேல் ஜாக்ஸனுக்கு அஞ்சலி

பாப் பாடகர் மறைந்த மைக்கேல் ஜாக்சனின் தம்பி ஜெர்மைன் ஜாக்சன் மற்றும் இந்திப் பாடலாசிரியர் சோனு நிகாம் இணைந்து இசை விருந்து படைத்தனர்.

மைக்கேல் ஜாக்சனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தின் சமயத்தில் இந்த விழா நடந்ததால், மைக்கேல் ஜாக்சனை நினைவு கூறும் பாடல்கள் பாடப்பட்டன. சோனு நிகாம் பாடல்களை எழுதியிருந்தார். அப்போது, அரங்கத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் எழுந்து நின்று ஆர்ப்பரித்தனர்.

ஷாரூக் நடனம்

பின்னர் 4 மணி நேரம் நடந்த ராக் ஷோவில், ஷாருக்கான், அனுஷ்கா, சர்மா, தியா மிர்சா, மல்லிகா ஷெராவத் உள்ளிட்ட இந்திய சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டு இசை, நடனம், பேஷன் ஷோ போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினர். நிகழ்ச்சியை கரன் ஜோகர் தொகுத்து வழங்கினார்.

முழங்காலில் கடும் காயம் ஏற்பட்டிருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் ஆடினார் ஷாரூக்.

பின்னர் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் சல்மான்கான் நடித்த தபாங் ஏழு விருதுகளை அள்ளியது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் 3 விருதுகளையும், பாண்ட் பஜா பாரா இந்திப் படம் 3 விருதுகளையும் பெற்றன.

ஷாரூக்கானின் மைநேம் ஈஸ் கானுக்கு சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த பின்னணி இசை ஆகிய மூன்று முக்கிய விருதுகள் கிடைத்தன.
 

ராணா சண்டைக் காட்சிகளில் ரஜினிக்கு 'டூப்'-டாக்டர்கள் அட்வைஸ்


உடல் நலக்குறைவு ஏற்பட்டு சரியாகியுள்ள நிலையில் சண்டைக் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்குமாறும், சண்டைக் காட்சிகளுக்கு டூப் போட்டு நடிக்குமாறும் ரஜினிக்கு டாக்டர்கள் அறிவுரை கூறியுள்ளனராம்.

ராணா படப்பிடிப்பு தொடங்கிய சமயத்தில் ரஜினிக்கு கடும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரது உடல் நலம் குறித்து பல்வேறு குழப்பமான தகவல்கள் வெளியாகின. அவருக்கு என்ன பிரச்சினை என்பதே பெரும் குழப்பமாக இருந்தது.

இறுதியில் அவர் சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, சிங்கப்பூரிலேயே தங்கி ஓய்வெடுத்து வருகிறார். விரைவில் அவர் வருவார் என்று அவரது மருமகன் தனுஷ் கூறியுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் ராணா பட வேலைகளை முடுக்கி விட்டுள்ளனர். ரஜினிகாந்த் திரும்பியதும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறுகிறார்கள்.

அதேசமயம், ராணா படத்தில் சண்டைக் காட்சிகளில் ரஜினி நடிக்கக் கூடாது என்று சிங்கப்பூர் டாக்டர்கள் அறிவுரை கூறியுள்ளனராம். பழையபடி சண்டைக் காட்சிகளில் நடித்தால் உடல் நலம் பாதிக்கப்படலாம் என்பதால் டூப் போட்டு சண்டைக் காட்சிகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனராம்.

ரஜினி டூப் போட்டு நடிப்பது புதிதல்ல. பல படங்களில் ரஜினி சண்டைக் காட்சிகளில் டூப்பை பயன்படுத்தியுள்ளனர் என்பதால் ராணாவிலும் டூப் பயன்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.
 

25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மது குடிப்பதை ஆதரித்தேனா? - ஸ்ரேயா விளக்கம்


தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் நடிகை ஸ்ரேயா. கடந்த வாரம், இடுப்புக் கீழே போட்டோ எடுக்கக் கூடாது என புகைப்படக்காரர்களைத் திட்டியதால் பரபரப்பாக செய்திகளில் இடம் பெற்றார்.

இந்த வாரம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மது குடித்தால் தப்பில்லை என்பதுபோல கருத்து சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் 25 வயதுக்கு உட்பட்டோர் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவர்கள் மதுக்கடைகளில் மது வாங்கவும் அனுமதிக்கப்படவில்லை. இச்சட்டத்தை நடிகை ஸ்ரேயா விமர்சித்ததாக செய்திகள் வந்தன.

18 வயது உடையவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். ஓட்டு போடவும் அனுமதி இருக்கிறது. ஆனால் மது அருந்த மட்டும் தடை போடுகிறார்கள் என்று ஸ்ரேயா கண்டித்ததாக கூறப்பட்டது.

ஸ்ரேயா கருத்துக்கு அரசியல் ரீதியான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதை அறிந்த ஸ்ரேயா உடனே தனது கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டதாக, பழியை பத்திரிகைகள் மீது போட்டுள்ளார்.

"மது குடிப்பதை ஆதரித்து நான் எந்த கருத்தும் சொல்லவே இல்லை. நான் சொல்லாத விஷயத்துக்கு என் மீது கண்டனம் தெரிவித்தால் என்ன அர்த்தம்?", என்று திருப்பிக் கேட்டுள்ளார் ஸ்ரேயா.
 

கார்த்தியின் திருமண ஏற்பாடுகளில் பம்பரமாக சுற்றும் ஜோதிகா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கார்த்தியின் திருமண ஏற்பாடுகளில் பம்பரமாக சுற்றும் ஜோதிகா!

6/27/2011 12:55:48 PM

நடிகர் கார்த்தி திருமணம் வருகிற 3-ந்தேதி கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடக்கிறது. கார்த்தி-ரஞ்சனி திருமண ஏற்பாடுகளில் கார்த்தி குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நடிகர், நடிகைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அழைப்பிதழ் இனிப்பு உதிர்ந்த பழ வகைகளை வைத்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.  மணப்பெண் மற்றும் குடும்பத்தினருக்கான புடவைகள், நகைகள் தேர்வு செய்யும் பணியில் அண்ணன் சூர்யா மனைவி ஜோதிகா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவருடன் கார்த்தியின் தாய் லட்சுமி, சகோதரி பிருந்தா ஆகியோரும் பிரபல ஜவுளி கடைகளில் ஏறி இறங்கி புடவைகளை தேர்வு செய்கிறார்கள்.

 

சமீரா ரெட்டியுடன் ஜாகிங் செல்லும் ஆர்யா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சமீரா ரெட்டியுடன் ஜாகிங் செல்லும் ஆர்யா!

6/27/2011 12:51:33 PM

தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் கலகலப்பான ஹீரோ ஆர்யா. தன்னுடைய சக நடிகர்களை கிண்டல் செய்வதிலும் சரி, புகழ்வதும் சரி ஆர்யா தான் நம்பர் 1 என்று சொல்லாம், குசும்பிலும் ஆர்யா தான் நம்பர் 1. தற்போது லிங்குசாமி இயக்கத்தில் நடித்து வரும் ஆர்யா, ஷூட்டிங் முடிந்ததும் சமீரா ரெட்டியுடன் மாலையில் ஜாகிங் செய்யகிறாராம். ஆனாலும் ஆர்யாவுக்கு குசும்பு ஜாஸ்தி.




 

கிசு கிசு - நடிகரின் ரகசிய சந்திப்பு!

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நடிகரின் ரகசிய சந்திப்பு!

6/27/2011 12:43:38 PM

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

வாலிப கவிஞரை சமீபத்துல கேப்டன் ஹீரோ ரகசியமா சந்திச்சாராம்... சந்திச்சாராம்... ரெண்டு பேரும் 4 மணி நேரம் பேச¤னாங்களாம்... பேசினாங்களாம்... இந்த ரகசியத்தை சமீபத்துல நடந்த கேசட் விழாவுல பேசும்போது கவிஞரே போட்டு உடைச்சாராம்... உடைச்சாராம்... கட்சிக்கு பாடல் எழுதக் கேட்டாரா, இல்லை வேற விஷயமான்னு கேட்டா, Ôஅதெல்லாம் வெளிய சொல்ல முடியாதுÕன்னு கவிஞரு எஸ்ஸாயிட்டாராம்... எஸ்ஸாயிட்டாராம்...

உலக ஹீரோ படத்துலேருந்து நீக்கப்பட்டதால செல்வ இயக்கம் அப்செட்ல இருக்காராம்... இருக்காராம்... யாராவது அது பற்றி கேட்டா, ப்ளீஸ் எங்கிட்ட இது பற்றி எதுவும் கேட்காதீங்கன்னு சொல்றாராம்... சொல்றாராம்... சமீபத்துல பத்திரிகையாளர்களை சந்திச்ச இயக்கம், உலக ஹீரோ படம் சம்பந்தமா எதுவும் கேட்காதீங்கன்னு முன்னாடியே சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்...

ஏழாவது சென்ஸ் படத்தை முடிச்சிட்டு இந்திக்கு போற ஐடியால இருக்கிறாராம் முருக இயக்குனரு. ஆனா கில்லி நடிகரோட அப்பாவோ, இயக்குனரோட கால்ஷீட்டை வாங்க தவம் கிடக்கிறாராம்... கிடக்கிறாராம்... Ôகில்லியை வச்சு ஒரு படம் பண்ணிட்டு போயிடுங்கÕன்னு முருக டைரக்டர்கிட்ட நைசா பேசிட்டிருக்கிறாராம்... பேசிட்டிருக்கிறாராம்...




 

சீரியஸ் வேடங்கள் : ரீமா சென் சலிப்பு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சீரியஸ் வேடங்கள் : ரீமா சென் சலிப்பு!

6/27/2011 12:41:17 PM

ரீமா சென் கூறியது: கடைசியாக 'ஆயிரத்தில் ஒருவன்' மற்றும் இந்தியில் நடித்த 'ஆக்ரோஷ்' என இரண்டு படங்களிலும் நான் ஏற்ற வேடங்கள் கனமானவை. சீரியஸான ரோல். இதை நேர்த்தியாக செய்வதற்கு அதிகபட்ச உழைப்பை செலவிட்டேன். அனுராக் கஷ்யப்பின் 'கேங்க்ஸ் ஆஃப் வஸெப்பூர்' படமும் இதே வகையை சேர்ந்தது. இதுபோன்ற கடினமான வேடங்களிலிருந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பதற்காகவே வி.என்.ஆதித்யாவின் தெலுங்கு படத்தில் நடிக்கிறேன். இது காமெடி கலந்த கதாபாத்திரம். சீரியஸான வேடங்களிலிருந்து ரிலாக்ஸ் ஆக இப்படம் உதவும். 'கேங்க்ஸ் ஆஃப் வஸெப்பூர்' படத்தில் மனோஜ் பாஜ்பாயின் கேர்ள் பிரெண்ட் வேடம். ரொம்பவும் வேகம் நிறைந்த கேரக்டர். இதன் ஷூட்டிங் முடிந்தது. ரிலீஸுக்காக காத்திருக்கிறேன். இப்படம் தமிழில் ஹிட்டான 'சுப்ரமணியபுரம்Õ பட ரீமேக்கா என்கிறார்கள். ஆனால் அதன் ரீமேக் கிடையாது.




 

ஹாலிவுட் ஸ்டேண்ட்டர்டில் படமெடுக்கிறார் ஷங்கர் : விஜய்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஹாலிவுட் ஸ்டேண்ட்டர்டில் படமெடுக்கிறார் ஷங்கர் : விஜய்!

6/27/2011 12:29:28 PM

ஷங்கர் இயக்கததில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கும் படம் ‘நண்பன்’. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வரும் நிலையில், ஷங்க‌ரின் இயக்கம் குறித்து விஜய் பலமுறை புகழ்ந்து பேசியிருக்கிறார். ஆரம்ப காலத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் அசிஸ்டெண்டாக பணிபு‌ரிந்தவர் ஷங்கர். இப்போது ஷங்கர் இந்தியாவின் முன்னணி இயக்குனர். ஷங்கர் படம் என்பதால் நண்பனில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக விஜய் நடித்து வருகிறார். தன்னுடைய சினிமா கே‌ரிய‌ரில் ‘நண்பன்’ முக்கியமான படமாக இருக்கும் எனக் கூறிய விஜய், ஹாலிவுட் ஸ்டேண்ட்டர்டில் படமெடுக்கிறார் ஷங்கர் என மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

 

பெயர் குழப்பத்தில் தனுஷ் படம்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பெயர் குழப்பத்தில் தனுஷ் படம்?

6/27/2011 12:21:25 PM

தன்னுடைய அண்ணன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘இரண்டாம் உலகம்’. தனுஷ், ஆண்ட்‌ரியா நடிப்பில் தொடங்கப்பட்ட படம் இரண்டாம் உலகம். பிறகு ஆண்ட்‌ரியா படத்திலிருந்து விலக ‌ரிச்சா என்பவர் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்ணன் இயக்கத்தில் நான் நடிக்கும் படத்தின் பெயர் இரண்டாம் உலகம் அல்ல என்று தனுஷ் தெ‌ரிவித்துள்ளார். செல்வராகவன் உள்பட யாரும் இதற்கு மறுப்பு தெ‌ரி‌வி‌க்கவில்லை. அப்படியானால் படத்தின் பெயர்? அது பற்றி தனுஷிடம் எந்த பதிலுமில்லை. இது மாலை நேரத்து மயக்கம் என்று பெயர் வைத்தாலும் ஆச்ச‌ரியமில்லை.

 

விரைவில் விடிவி இரண்டாம் பாகம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விரைவில் விடிவி இரண்டாம் பாகம்!

6/27/2011 12:17:26 PM

அழகி படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு தொடர்ந்து கௌதம் மேனனின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படமும் இரண்டாம் பாகத்திற்கு தயாராக உள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் – பாலசந்தர் உள்ளிட்ட அனைவரையும் கவர்ந்த காதல் படம் விண்ணைத்தாண்டி வருவாயா. தற்போது ஜீவா வைத்து படம் இயக்கும் திட்டமிட்டிருக்கும் கௌதம், அந்த படம் முடிந்த பிறகு விடிவி இரண்டாம் பாகத்தை இயக்கலாம் என தெரிகிறது. சிம்புவும், த்‌ரிஷாவும் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளதால் விரைவில் விடிவி இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கலாம்.

 

அழகியின் இரண்டாம் பாகம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அழகியின் இரண்டாம் பாகம்!

6/27/2011 12:12:05 PM

2002ல் வெளியான தங்கர் பச்சானின் ‘அழகி’ மிக பெரிய வெற்றி படம் ஆனது. அந்த இரண்டாம் பாகத்தை நடிகர் பார்த்திபன் இயக்குகிறார். படத்திற்கு சண்முகத்தின் தனலட்சுமி என்று பெயர் வைத்துள்ளார். முதல் பாகத்தில் நடித்த நடிகர் பார்த்திபன், நந்திதாதாஸ் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை பார்த்திபன் இயக்கி நடிக்கிறார்.

 

கௌதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கௌதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா!

6/27/2011 12:02:33 PM

கௌதம் மேனன் இயக்கும் புது படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்கிறார். ஜீவாவுக்கு ஜோடியாக சமந்தாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார் கௌதம். தன்னுடைய படங்களில் நடிக்கும் ஹீரோ மற்றும் ஹீரோயினைப் பிடித்துவிட்டால் அவரை வைத்து அடுத்தடுத்துப் படங்கள் பண்ணுவது கௌதம் ஸ்டைல். இதற்கு உதாரணம் சூர்யா, ஜோதிகா மற்றும் சமீராரெட்டி, போன்ற ஸ்டார்கள் அடுத்தடுத்த கௌதம் மேனன் படங்களில் நடித்தவர்கள். அந்த வரிசையில் தற்போது இப்போது சமந்தாவும் இடம்பெற்றுள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சின்ன வேடத்தில் வந்த சமந்தா தெலுங்கு விண்ணைத்தாண்டி வருவாயில் த்‌ரிஷா நடித்த மெயின் கதாபாத்திரத்தில் நடித்தார். அவரையே தனது அடுத்த தமிழ்ப் படத்துக்கும் ஒப்பந்தம் செய்திருக்கிறார் என தகவல்கள் கூறுகின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவுள்ளது.




 

இந்திக்கு போகிறார் சமந்தா

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

இந்திக்கு போகிறார் சமந்தா

6/27/2011 10:35:23 AM

இந்திப் படத்தில் அபிஷேக் பச்சன் ஜோடியாக நடிக்கிறார் சமந்தா. தமிழில் 'பாணா காத்தாடி', 'மாஸ்கோவின் காவிரி' படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சமந்தா. தெலுங்கு 'விண்ணைத்தாண்டி வருவாயா'வில் ஹீரோயினாக நடித்ததையடுத்து, தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் இப்போது, ரோஷித் ஷெட்டி இயக்கும் 'போல் பச்சான்' என்ற இந்திப் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். இதில் அபிஷேக் பச்சன், அஜய்தேவ்கன் ஹீரோக்கள். 'இந்த கதைக்கு தென்னிந்திய நடிகைதான் பொருத்தமாக இருப்பார் என்று ரோஹித் விரும்பினார். சமந்தா நடித்த படங்களை பார்த்ததில் அவரது நடிப்பு பிடித்திருந்தது. இதையடுத்து அவரை ஹீரோயினாக தேர்வு செய்ய இருக்கிறார்' என பட வட்டாரங்கள் தெரிவித்தன.

 

விளம்பரங்களில் பணம் அள்ளும் பாலிவுட் நட்சத்திரங்கள்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

விளம்பரங்களில் பணம் அள்ளும் பாலிவுட் நட்சத்திரங்கள்

6/27/2011 10:36:51 AM

சினிமாவை விட விளம்பர படங்களால் இந்தி நட்சத்திரங்கள் அமோகமாக சம்பாதிக்கின்றனர். இந்திய ஹீரோக்கள் கோடிகளில் சம்பளம் வாங்குவது சகஜமாகிவிட்டது. ஆனால், இந்தி நடிகர், நடிகைகளை விட தமிழ், நடிகர், நடிகைகள் விளம்பர படங்களில் நடிப்பது குறைவு. பாலிவுட் ஸ்டார்கள் சினிமா மட்டுமின்றி, விளம்பரத்திலும் பட்டையை கிளப்பி வருகின்றனர். ஒரு விளம்பரத்தில் நடிக்க ஆமிர்கான் அதிகபட்சமாக 14 கோடி ரூபாய் வாங்குகிறார். விளம்பரத்தால் மட்டுமே ஆண்டுக்கு ரூ.60 கோடி சம்பாதிக்கிறார். சராசரியாக ஆண்டுக்கு ஒரு படத்தில் நடிக்கிறார். அதற்கு 20 கோடி முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்து ஒரு படத்தில் நடித்து முடித்து சம்பாதிப்பதை விட 6 நாள் விளம்பர படத்தில் நடித்துவிட்டு, இரண்டு மடங்கு சம்பாதித்துவிடுகிறார் என்கிறது இந்தி வட்டாரம்.

நடிகைகள் கேத்ரினா கைப், தீபிகா படுகோன் ஆகியோரின் மொத்த சம்பளத்தில் 60 சதவீதமும், ஜெனிலியாவின் சம்பளத்தில் 90 சதவீதமும் விளம்பர படங்கள் மூலமாகவே கிடைக்கிறது. ஒவ்வொரு முன்னணி நடிகர், நடிகையும் விளம்பர படங்களில் நடிக்க வருடத்தில் 30 நாட்கள் செலவிடுகின்றனர். சில சமயம் 90 நாள். இதுபற்றி கரீனா கபூர் கூறும்போது, '14 விளம்பர நிறுவனங்களில் நடிக்கிறேன். எனக்கு எவ்வளவு தகுதியோ அந்த அளவு சம்பளம் வாங்குகிறேன். என் பர்சனாலிட்டியை பொருத்து விளம்பர படங்களில் வரவேற்பு அமைகிறது' என்றார். ஆமிர்கான், ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன், ரன்பீர் கபூர் ஆகியோர் வருடத்துக்கு ஒரு படம் மட்டுமே நடிக்கின்றனர். இதன் மூலம் தரமான படங்களை அவர்களால் தர முடிகிறது. அந்த படங்களின் வெற்றி அவர்களின் விளம்பர தகுதியை தக்க வைக்கிறது. ஆமிரை விட ஷாருக் அதிக விளம்பர படங்களில் நடிக்கிறார். அவர் வருடத்துக்கு 75 கோடி ரூபாயும், ஹிருத்திக் ரோஷன் 35 கோடி ரூபாயும் சம்பாதிக்கின்றனர். அமிதாப்பச்சன், சல்மான் கான் தலா 8 கோடி, ஐஸ்வர்யாராய் 4 கோடி, கேத்ரினா கைப், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், கரீனா கபூர் தலா 3 கோடி என ஒரு விளம்பரத்தில் நடிக்க சம்பளம் பெறுகின்றனராம்.

 

இந்திக்கு போகிறார் சமந்தா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இந்திக்கு போகிறார் சமந்தா

6/27/2011 10:34:06 AM

இந்திப் படத்தில் அபிஷேக் பச்சன் ஜோடியாக நடிக்கிறார் சமந்தா. தமிழில் 'பாணா காத்தாடி', 'மாஸ்கோவின் காவிரி' படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சமந்தா. தெலுங்கு 'விண்ணைத்தாண்டி வருவாயா'வில் ஹீரோயினாக நடித்ததையடுத்து, தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் இப்போது, ரோஷித் ஷெட்டி இயக்கும் 'போல் பச்சான்' என்ற இந்திப் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். இதில் அபிஷேக் பச்சன், அஜய்தேவ்கன் ஹீரோக்கள். 'இந்த கதைக்கு தென்னிந்திய நடிகைதான் பொருத்தமாக இருப்பார் என்று ரோஹித் விரும்பினார். சமந்தா நடித்த படங்களை பார்த்ததில் அவரது நடிப்பு பிடித்திருந்தது. இதையடுத்து அவரை ஹீரோயினாக தேர்வு செய்ய இருக்கிறார்' என பட வட்டாரங்கள் தெரிவித்தன.

 

தபாங் ரீமேக் : காஜல் நீக்கம்! ஸ்ருதிக்கு வாய்ப்பு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தபாங் ரீமேக் : காஜல் நீக்கம்! ஸ்ருதிக்கு வாய்ப்பு!

6/27/2011 10:33:06 AM

சல்மான் கான், சோனாக்ஷி சின்கா நடித்து ஹிட்டான இந்தி படம் 'தபாங்'. இந்த படம் தமிழில் சிம்பு நடிக்க, 'ஒஸ்தி' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்க, 'கப்பார் சிங்' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் சோனாக்ஷி கேரக்டரில் நடிக்க, காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், அவர் கொடுத்த தேதியில் ஷூட்டிங் ஆரம்பிக்காததால் கால்ஷீட் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவருக்குப் பதில் ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ருதி தற்போது, சித்தார்த்துடன் 'ஓ மை பிரண்ட்', ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் தெலுங்கு படங்களிலும் தமிழில் சூர்யாவுடன் '7ஆம் அறிவு' படத்திலும் நடித்து வருகிறார்.

 

எங்கேயும் எப்போதும்" இரண்டு காதல் கதை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

எங்கேயும் எப்போதும்’ இரண்டு காதல் கதை!

6/27/2011 10:31:49 AM

ஏ.ஆர்.முருகதாஸ், ஃபோக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவுடன் இணைந்து தயாரிக்கும் படம் 'எங்கேயும் எப்போதும்'. அவரது உதவியாளர் எம்.சரவணன் இயக்குகிறார். ஜெய், அஞ்சலி, ஷர்வானந்த், அனன்யா நடிக்கிறார்கள். படம் பற்றி சரவணன் கூறியதாவது: 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ளது. இரண்டு தனித்தனி காதல் ஜோடிகளின் கதை. கிளைமாக்சில் இரு ஜோடிகளும் இணைவது மாதிரியான திரைக்கதை. படத்தில் வில்லன் கிடையாது. இரு ஹீரோயின்கள் நடிப்பதால் அவர்களுக்குள் ஈகோ வரலாம் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். இந்தப் படத்தில் அப்படி இல்லை. அஞ்சலியும், அனன்யாவும் இணைந்து நடிக்கும் காட்சிகள் இல்லை. திரைக்கதையில் இருவருக்குமே சம வாய்ப்பு உள்ளது. சில காட்சிகள் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னது தவிர, தயாரிப்பாளர் என்ற முறையில் ஏ.ஆர்.முருகதாசின் தலையீடு இல்லை. படப்பிடிப்புக்குகூட அவர் வந்ததில்லை. எடுத்த வரை பார்த்துவிட்டு பாராட்டினார்.

 

ஆக்ஷன் படங்களில் நடிக்க கணேஷ் வெங்கட்ராம் ஆசை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஆக்ஷன் படங்களில் நடிக்க கணேஷ் வெங்கட்ராம் ஆசை!

6/27/2011 10:30:23 AM

'அபியும் நானும்', 'உன்னைப்போல் ஒருவன்', 'கந்தகார்' படங்களில் நடித்துள்ளவர் கணேஷ் வெங்கட்ராம்.  இப்போது மகேஷ்பட் தயாரிக்கும், 'குச் லோக்' என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: தமிழில் நான் நடித்துள்ள 'முறியடி' விரைவில் ரிலீஸ் ஆகும். இதையடுத்து 'பனித்துளி' என்ற படத்தில் நடித்துள்ளேன். ரொமான்டிக் த்ரில்லர் கதையான இது, வித்தியாசமான திரைக்கதையை கொண்ட படம். இந்தப் படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவில் நடந்துள்ளது. இப்போது இந்தியில் 'குச் லோக்', தெலுங்கில் 'தமருகம்' படங்களில் நடித்து வருகிறேன். இந்தி படத்தில் ஊர்வசி சர்மா, அனுபம் கெர், ரதி, குல்ஷன் குரோவர் ஆகியோருடன் நடித்து வருவது புதிய அனுபவமாக இருக்கிறது. தெலுங்கு படத்தில் நாகார்ஜுனா ஹீரோ. அனுஷ்கா ஹீரோயின். இந்தப் படத்தில் 50 சதவிகிதம் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது.

சினிமாவுக்கு வந்த சில வருடங்களிலேயே கமல்ஹாசன், அமிதாப், மோகன்லால், பிரகாஷ்ராஜ், நாகார்ஜுனா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டேன். இன்னும் ரஜினிகாந்த் மட்டுமே பாக்கி. அவருடனும் நடித்துவிட்டால் என் ஆசை நிறைவேறிவிடும். சமீபத்தில் ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய போட்டோ ஷூட் நடத்தினேன். இது ஏன் என்று கேட்கிறார்கள். எல்லா ஹீரோகளுக்கும் ஆக்ஷன் ஆசை இருக்கும். அது எனக்கும் இருப்பதால் அப்படி போட்டோ ஷூட் எடுத்தேன். இவ்வாறு கணேஷ் வெங்கட்ராம் கூறினார்.

 

மக்கள் விரும்பும்வரை குத்தாட்டம் போடுவேன்: மல்லிகா ஷெராவத்


டொரண்டோ: மக்கள் விரும்பும் வரை தான் தொடர்ந்து குத்துப்பாட்டுகளுக்கு ஆடப்போவதாக இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார்.

கனடாவில் நடந்த ஐஐஎப்ஏ விழாவில் இந்தி நடிகை மல்லிகா ஷெராவத்தின் முதல் ஹாலிவுட் படமான பாலிடிக்ஸ் ஆப் லவ் திரையிடப்பட்டது.

அப்போது மல்லிகா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது,

இந்தியாவில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடிப்பது எனக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. இப்பொழுதெல்லாம் நான் மிகுந்த கவனத்துடன் படங்களைத் தேர்வு செய்கிறேன்.

எனது குத்தாட்டப் பாடல்கள் பற்றி மக்கள் பாராட்டும்போது பெரு மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் விரும்பும் வரை நான் குத்துப் பாட்டுகளுக்கு ஆடுவேன். பாலிவுட்டுக்கும், ஹாலிவுட்டுக்கும் பட்ஜெட்டைத் தவிர வேறு பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

அப்போது மல்லிகாவுடன் இருந்த பாலிடிக்ஸ் ஆப் லவ் நாயகன் ஹாலிவுட் நடனக் கலைஞர் பிரயன் ஜே. ஒயிட் கூறியதாவது,

பாலிவுட் செயல்பாடுகளைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். இந்திய மக்களுக்காக பாலிடிக்ஸ் ஆப் லவ் அடுத்த பாகம் கொண்டு வர விரும்புகிறேன். ஐஐஎப்ஏ விழாவில் எனக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பைப் பார்த்து எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எனது நடனக் குழுவுடன் இந்தியாவுக்கு செல்வது என் கனவு என்றார்.

அடுத்து மல்லிகா கூறுகையில், இந்திய திரையுலகத்தைப் பற்றி தெரிந்துகொள்ளத் தான் பிரயனை ஐஐஎப்ஏ விழாவுக்கு அழைத்து வந்தேன் என்றார்.
 

மொட்டை மாடியில் தேன்நிலவு! - செல்வராகவன் கலகல பேட்டி!


பார்க்க ரொம்ப ‘ரிசர்வ்டு டைப்’ மாதிரி தெரிந்தாலும், பழகியவர்களிடம் இயக்குநர் செல்வராகவன் அடிக்கும் கமெண்டுகள் செம கலாட்டா ரகம்.

செல்வராகவன்-கீதாஞ்சலி திருமணம், வருகிற (ஜுலை) 3-ந் தேதி காலை 6 மணிக்கு, சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நடக்கிறது.

மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி, ஜுலை 4-ந் தேதி மாலை 6-30 மணிக்கு சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

தன்னிடம் உதவி இயக்குநராக இருந்து, காதலியாக மாறி இப்போது வாழ்க்கைத் துணைவியாகப் போகும் கீதாஞ்சலியுடன் காதல் மலர்ந்தது, தேனிலவு திட்டம் குறித்தெல்லாம் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்களிடம் பேசினார் செல்வா.

ஆரம்பத்தில், “எல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க. அவ்வளவுதான்”, என சுருக்கமாக பிரஸ் மீட்டை முடித்த அவரிடம், மெல்ல ஒவ்வொரு நிருபராக பேச்சுக் கொடுக்க, மனம் திறந்தார் செல்வா.

“கீதாஞ்சலி ரொம்ப நல்ல பொண்ணு. ‘இரண்டாம் உலகம்’ படப்பிடிப்பில்தான் இருவரும் சந்தித்துக்கொண்டோம். இருவருக்குமான முதல் சந்திப்பு, முதல் காதல் பரிமாற்றம் பற்றியெல்லாம் இப்போது யோசித்தால் எதுவுமே தெரியவில்லை.

என்னை அவர் நன்றாக கவனித்துக்கொள்கிறார் என்பதே கீதாஞ்சலியிடம் எனக்குப் பிடித்த விஷயம். அதேபோல், கீதாஞ்சலிக்கு என் மனசு பிடிக்கும். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற என் மனசு அவருக்குப் பிடிக்கும்.

கீதாஞ்சலி இல்லாத வாழ்க்கையை இப்போது என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. என் வாழ்க்கை முழுக்க இனி அவங்கதான்.

மொட்டைமாடிதான்…

தேன்நிலவுக்கு எங்கே போகிறீர்கள்? என்று எல்லோரும் கேட்கிறார்கள். ‘இரண்டாம் உலகம்’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய அவசரத்தில் இருக்கிறேன். இந்த நிலையில், எங்கே தேன்நிலவு போவது? மொட்டை மாடியில் நின்று நிலவைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்!!

என் மீது நம்பிக்கை வைத்து, கீதாஞ்சலி தன்னை என்னிடம் ஒப்படைத்து இருப்பதை மிகப் பெரிய பரிசாக, பொறுப்பாகக் கருதுகிறேன். என்னைப்பற்றி வந்த எந்த தவறான தகவலையும் நம்பாமல், என் மீது நம்பிக்கை முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளார் அவர். அந்த நம்பிக்கைக்கு ஒரு போதும் பங்கம் வராமல் பார்த்துக் கொள்வேன். எல்லோருடைய ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும்!,” என்றார்.

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் செல்வா – கீதாஞ்சலி!

 

இயக்குனர் பாலாவுக்கு பக்குவம் இல்லை: சிங்கம்பட்டி ஜமீன்


அம்பாசமுத்திரம்: அவன் இவன் படத்தில் தரமில்லாத வசனங்களை பயன்படுத்தியுள்ள இயக்குனர் பாலாவுக்கு பக்குவம் இல்லை என்று சிங்கம்பட்டி சமஸ்தான இளைய ஜமீன்தார் தாயப்பராஜா கூறியுள்ளார்.

பாலா இயக்கி வெளிவந்துள்ள “அவன் இவன்” திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஜமீன் தீர்த்தப்பதி மற்றும் சொரிமுத்து அய்யனார் கோயில் குறித்த காட்சிகளும், வசனங்களும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்னை தொடர்பாக சிங்கம்பட்டி சமஸ்தானம் சார்பில் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாலாவை கண்டித்து கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கண்டன அறிக்கைகளும் வந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையே சமீபத்தில் ஒரு வாரஇதழுக்கு பாலா அளித்த பேட்டி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் பாலா பேட்டி குறித்து சிங்கம்பட்டி இளைய ஜமீன் தாயப்பராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

தமிழகத்தில் பட்டம் சூட்டி வாழ்ந்து கொண்டிருப்பவர் சிங்கம்பட்டி ஜமீன்தார் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி ராஜா. இயக்குனர் பாலா அவன் இவன் படத்தில் ஜமீன், சொரிமுத்து அய்யனார் கோயில் குறித்து சித்தரித்துள்ள காட்சிகள் எங்கள் மனதை புண்படுத்தியுள்ளது. இக்காட்சிகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.

ஜனநாயகத்தில் கண்டனம் தெரிவிக்கவும், எதிர்ப்பு தெரிவிக்கவும் உரிமை உண்டு. இச்சூழ்நிலையில் வார இதழுக்கு இயக்குனர் பாலா அளித்துள்ள பேட்டியில் அவர்கள் வீட்டில் கொள்ளையடித்தேனா? அவர்கள் வீட்டுப் பெண்களை கையை பிடித்து இழுத்தேனா? என தரமில்லாத வாசகங்களை பயன்படுத்தியுள்ளார்.

வருங்காலத்தில் இயக்குனர் பாலா தன்னை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.