ஆர்யா – விஜய் சேதுபதியில் யார் புறம்போக்கு?

ஆர்யா – விஜய் சேதுபதியில் யார் புறம்போக்கு?

யார் புறம்போக்கு என்பதில் ஆர்யா, விஜய் சேதுபதி இடையே போட்டி நிலவியதாம்.

‘இயற்கை', ‘பேராண்மை' ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் புதிய படம் ‘புறம்போக்கு'.

இந்த படத்தை யூடிவி மோஷன் பிக்சர்ஸ் வழங்க, எஸ்.பி.ஜனநாதன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் பைனரி பிக்சர்ஸ் மூலமாக முதன்முதலாக தயாரிக்கிறார். இப்படத்தின் தலைப்பை பெரும் பிரச்சினைகளுக்கிடையே இப்படக்குழு வாங்கியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஜனவரி மாதம் குலு மணாலியில் தொடங்கவிருக்கிறார்கள். இந்த நிலையில், இந்த படத்தின் போட்டோஷுட் சென்னையில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் படத்தின் கதாநாயகர்களான ஆர்யாவும், விஜய் சேதுபதியும் கலந்து கொண்டனர்.

இந்த போட்டோஷுட்டின் போது விஜய்சேதுபதியிடம் ஆர்யா, படத்திற்கு புறம்போக்கு என பெயர் வைத்திருக்கிறார்கள். இதுல நான் புறம்போக்கா? இல்ல நீ புறம்போக்கா? என கேட்டிருக்கிறார்.

புறம்போக்கு நான்கூட இருக்கலாம், இல்ல நீங்ககூட இருக்கலாம் யார்னு சரியா தெரியல என விஜய் சேதுபதி கூறினாராம்.

ஜாலியாக பேசிக்கொண்டிருந்த இந்த இருவரிடமும், படத்தின் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பொதுமக்களுக்கு பயன்படுகிற எல்லாமும், எல்லோரும் புறம்போக்குதான். இப்ப உங்க ரெண்டுபேர்ல யார் புறம்போக்குன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க என்று சொன்னாராம்.

 

தகராறு - விமர்சனம்

எஸ் ஷங்கர்

Rating:
3.5/5

நடிப்பு: அருள்நிதி, பூர்ணா, பவன், சுலீல் குமார், ஜெயப்பிரகாஷ், முருகதாஸ், அருள்தாஸ்

இசை: தரண்குமார், பிரவீண் சத்யா

ஒளிப்பதிவு: தில் ராஜ்

தயாரிப்பு; தயாநிதி அழகிரி

இயக்கம்: கணேஷ் விநாயக்


'ஆக்ஷன் த்ரில்லரா... இப்படி இருக்கணும்டா' என்று மெச்சும் அளவுக்கு வந்திருக்கும் இன்னொரு அசத்தல் படம் தகராறு (சின்னச் சின்ன நெருடல்கள் இருந்தாலும்!).

ஒரு கொலையில் பிடிக்கிற வேகம், பரபரவென க்ளைமாக்ஸ் வரை தொடர்கிறது. சின்னச் சின்ன தகராறுகள், பெரிய வில்லங்கங்களாக மாறி, கொலைகளில் முடிவதை காட்சிப்படுத்தியிருப்பதில் ஒரு த்ரில்லருக்கான நேர்த்தி தெரிகிறது.

தகராறு - விமர்சனம்

மதுரைல அருள்நிதி, சுலீல் குமார், பவன், முருகதாஸ் என நாலு நண்பர்கள். அவர்களுக்கு துணையாய் பாவா லட்சுமணன். தொழில் சின்னச் சின்ன திருட்டுகள். இவர்களில் அருள்நிதிக்கு கந்துவட்டி ஜெயப்பிரகாஷ் மகள் பூர்ணா மீது காதல். இந்தக் காதல் நட்பையே பலி வாங்குகிறது. எப்படி என்பதுதான் புத்திசாலித்தனமான விறுவிறு க்ளைமாக்ஸ்.

தகராறு - விமர்சனம்

இடைவேளைக்கு முன்பே மூன்று நான்கு பெரிய தகராறுகளில் சிக்கிக் கொள்கிறது அருள்நிதி அண்ட் கோ. அதன் விளைவாக உயிருக்குயிரான நண்பனை பலி கொடுக்கிறார்கள். அந்த கொலையைச் செய்தது யாராக இருக்கும் என்ற பரபர தேடல் ஒவ்வொன்றும் சப்பென்று முடிய, உண்மைக் கொலையாளி தெரிய வரும் காட்சி, சதக் கென்று கத்தி இறங்குவது மாதிரி ஷார்ப்!

காதலுக்காக வழிவது, நட்புக்காக கண்ணீர்விடுவது, தகராறு என்று வந்ததும் மின்னலாய் தாக்குவது... என சகலமும் சரியாய் செய்ய வருகிறது அருள்நிதிக்கு. டான்ஸ் ஆடக் கூட முயன்றிருக்கிறார். சொன்னமாதிரியே அருள்நிதியும் முன்னணி ஹீரோக்களின் வரிசைக்கு வந்துவிட்டார் இந்தப் படம் மூலம்!

தகராறு - விமர்சனம்

பூர்ணா கலக்கியிருக்கிறார். பாவாடை தாவணியிலும், புடவையிலும் பார்க்க அம்சமாக இருக்கிறார். அழகு, நடிப்பு, மதுரைக்காரப் பெண்ணுக்கே உரிய தைரியமும் அலட்சியமும் கலந்த உடல்மொழி... வெல்டன். சமீப நாட்களில் வந்த படங்களில் நடிப்பிலும் அழகிலும் ரசிக்கும்படியாக இருந்தது பூர்ணாதான் என்றால் மிகையல்ல!

அருள்நிதியின் நண்பர்களாக வரும் தருண் சத்ரியா என்கிற சுலீல் குமார், பவன், முருகதாஸ் மூவருக்கமே சமமான வாய்ப்புகள். மூவருமே நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்.

சுலீல் குமாருக்கு அந்த முறுக்கு மீசையும் முரட்டுப் பார்வையும் பக்காவாகப் பொருந்துகிறது. நண்பன் மீது அவர் காட்டும் முரட்டுப் பாசம் மனதைத் தொடுகிறது.

தகராறு - விமர்சனம்

நட்பைக் கூட முரட்டுத்தனமாகவே காட்டும் பவன் நடிப்பு அருமை. நல்ல நடிகர் வெறும் வில்லனாகவே இருந்துவிட்டார் இத்தனை நாளாய். அவ்வப்போது கைப்பிள்ளையாக வந்து, கடையில் சம்பவம் முடிக்கும் முருகதாஸும் மனதைக் கவர்கிறார்.

நண்பர்களுக்கு உதவும் பாவா லட்சுமணன், தன்னைத் தாக்கியவர்களையும் இரண்டுமுறை மன்னிக்கும் அருள்தாஸ், அந்த ஆக்ரோஷ இன்ஸ்பெக்டர், கந்துவட்டி ஜெயப்பிரகாஷ் (அவர் மனைவியாக வருபவருக்கு அடுத்தடுத்த படங்களில் வசனங்களே வைக்காமல் இருந்தால் காது தப்பும்!)... என அனைவருமே தேர்ந்த நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

சண்டைக் காட்சிகள் அமைத்தவருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். மிகையான சண்டைகள்தான் என்றாலும், செம விறுவிறுப்பு. குறிப்பாக அருள்தாஸ் மற்றும் இன்பெக்டருடன் நண்பர்கள் மோதும் காட்சிகளில் அனல் பறக்கிறது.

தகராறு - விமர்சனம்

இருக்கையில் உட்கார்ந்திருந்தாலும், காட்சிகளோடு நாமும் சேர்ந்து ஓடிக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறார்கள் ஒளிப்பதிவாளர் தில்ராஜும் பின்னணி இசைத்த பிரவீண் சத்யாவும். எடிட்டர் சுரேஷும் தன் கைவண்ணத்தை கச்சிதமாகக் காட்டியுள்ளார். தருண் இசையில் திருட்டுப் பயபுள்ள... இன்னமும் காதுகளில் ஒலிக்கிறது.

குறை என்று பார்த்தால், சுப்பிரமணியபுரம் மற்றும் ரேணிகுண்டாவை சில காட்சிகள் நினைவுபடுத்துவதுதான்.

மற்றபடி தேர்ந்த இயக்குநரின் நேர்த்தி தெரிகிறது புதியவரான கணேஷ் விநாயக் இயக்கத்தில். வாழ்த்தி வரவேற்போம்.

தகராறு.. நேர்த்தியான ஆக்ஷன் த்ரில்லர்!

 

மோகினி சீரியல்: நோ சொன்ன நமீதா!

சினிமா வாய்ப்பு குறைந்து போனாலும் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக அமர்ந்து மார்க் போடுகிறார் நமீதா.

எப்படியாவது சீரியலில் நடிக்க வைத்து விடலாம் என புது சேனல் ஒன்று நமீதாவை அணுகியுள்ளனர். ஆனால் அதற்கு நோ சொல்லிவிட்டாராம் நமீதா.

ஜெகன் மோகினி ரீமேக் படத்தில் மோகினியாக நடித்து பயமுறுத்தினார் நமீதா. இதை நினைவில் வைத்திருந்த இயக்குநர் ஒருவர் நமீதாவிற்காகவே ஒரு ஸ்கிரிப்டை தயார் செய்து வைத்துள்ளாராம்.

மோகினி சீரியல்: நோ சொன்ன நமீதா!

கடைதிறப்பு

சினிமா வாய்ப்பு இல்லாத நமீதா, காதுகுத்து, கல்யாணம், கடை திறப்பு என்று பிசியாக இருக்கிறார்.

மச்சான்களுக்கு மார்க்

சின்னத்திரையில் டான்ஸ் ஆடும் மச்சான்களுக்கு மார்க் போடுகிறார். நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கவர்ச்சி உடையில் ஆடியும் பயமுறுத்துகிறார்.

சீரியலில் நடிங்களேன்

நமீதாவை எப்பாடு பட்டாவது சீரியலில் நடிக்க வைத்துவிட வேண்டும் என சில தயாரிப்பு நிறுவனங்களும், புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சேனல் ஒன்றும் முயற்சி செய்துள்ளனர்.

நோ சொன்ன நமீதா

எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், என்ன ஆனாலும் சீரியலில் மட்டும் நடிக்க மாட்டேன்" என்று உறுதியாக மறுத்து விட்டாராம். நமீதா.

நிகழ்ச்சித் தொகுப்பு

நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டுமா, நடுவராக வரவேண்டுமா அதற்கு மட்டும்தான் ஓகே என்று சொன்னாராம் நமீதா.

மோகினி

ஆனாலும் மனம் தளராமல் நமீதாவிற்காக ஒரு ஸ்கிரிப்டை தயாராக வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் ஒரு இயக்குநர். சீரியலின் தலைப்பு மோகினி. ஃபேண்டசியான ஸ்கிரிப்ட்" என்கிறார் அந்த சீரியல் தயாரிப்பாளர்.

டிவி ரசிகர்களுக்கு நமீதாவை பார்க்க கொடுத்து வைத்திருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.