12/14/2010 12:07:24 PM
ஒருகாலத்தில் ஹீரோவுக்கு மீசை இல்லை என்றால் கருப்பு மை வைத்து, ஹீரோவுக்கு மீசை வரைந்து நடிக்க வைத்தனர். ஆனால் தற்போது மீசை வளரும் வரை காத்திருக்கின்றனர் இன்றைய ஹீரோக்கள். தமிழ் சினிமாவில் சாக்லெட் ஹீரோவாக வலம் ஜெயம் ரவி, பேராண்மை படத்தை தவிர வேறு எந்த படத்திலும் மீசை வைத்து நடித்ததில்லை. பேராண்மை படத்திற்கு பிறகு மீசையுடன் அமீர் இயக்கும் 'ஆதிபகவன்' படத்தில் நடித்து வருகிறார். 'ஆதிபகவன்' படத்தில் மீசையுடன் நடித்துவந்த 'ஜெயம்' ரவி, 'எங்கேயும் காதல்' படத்துக்காக, மீசை மழித்தார். அவருக்கு மீசை வளரும் வரை, 'ஆதிபகவன்' 2வது கட்ட ஷூட்டிங்கை தள்ளி வைத்துள்ளார் அமீர்.