உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டிவியில் விஜய்யின் தலைவா- பொங்கல் ஸ்பெஷல்

சென்னை: இந்த பொங்கலுக்கு சன் டிவியில் விஜய் நடித்து, பெரும் சர்ச்சைக்குள்ளான உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டிவியில் விஜய்யின் தலைவா- பொங்கல் ஸ்பெஷல்  

படத்திலிருந்து சில காட்சிகள், டைம் டு லீட் வாசகம் போன்றவை நீக்கப்பட்ட பிறகே வெளியிட முடிந்தது. ஆனால் ஏன் படம் வெளியாகவில்லை என்பதை மட்டும் கடைசி வரை சொல்ல மறுத்து மவுனம் காத்து வருகிறார் விஜய்.

அந்தப் படம் வெளியாகு தோல்வியைத் தழுவியது. மோசமான விமர்சனங்களையும் சந்தித்தது.

இந்த நிலையில் அந்தப் படத்தை வரும் பொங்கல் தின ஸ்பெஷலாக சன் டிவி ஒளிபரப்புகிறது.

விஜய் போன்ற பெரிய நடிகரின் படம் வெளியான மிகக் குறுகிய காலத்தில் சின்னத்திரைக்கு வருவது இதுவே முதல்முறை.

 

ரஜினி ரசிகன் நான்... அவருக்கு எதிராகப் பேசியதாக வதந்தி பரப்பிட்டாய்ங்க!- பரோட்டோ சூரி

சென்னை: ரஜினியை நான் ரொம்ப நேசிக்கிற ஆள். அவரை தப்பா பேசிட்டதா யாரோ இன்டர்நெட்ல வதந்தி பரப்பி என்னை ரஜினி ரசிகர்களின் விரோதியாக்கப் பார்க்கிறார்கள் என்றார் நடிகர் பரோட்டா சூரி.

இவன் வேற மாதிரி என்ற படத்தைப் பாராட்டி சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு அறிக்கை கொடுத்திருந்தார்.

இதை படக்குழுவினர், விளம்பரமாகப் பயன்படுத்திக் கொண்டனர். அடுத்த நாள் பரோட்டா சூரியின் ட்விட்டர் (Im_Actor_Soori) பக்கத்தில் ரஜினி கடிதம் கொடுத்ததைக் கிண்டலடித்து ஒரு ட்விட் வெளியானது. அதில் பிரபலங்கள் சொல்லிவிட்டார் என்பதற்காக ஒரு படத்தைப் பார்க்காதீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

ரஜினி ரசிகன் நான்... அவருக்கு எதிராகப் பேசியதாக வதந்தி பரப்பிட்டாய்ங்க!- பரோட்டோ சூரி

இந்த ட்விட்டர் பக்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன், ஹன்சிகா, உதயநிதி உள்ளிட்ட பல பிரபலங்களும் தொடர்வதால், அது சூரியின் உண்மையான பக்கம்தான் என பலரும் நம்பினர். மீடியாவிலும் இந்த செய்தி வெளியானது.

இந்த நிலையில் சூரி தரப்பில், இந்த செய்திக்கு மறுப்பு வெளியானது.

அந்த மறுப்பு வெளியான சில மணி நேரங்களில் மீண்டும் அதே ட்விட்டர் பக்கத்தில், 'ரஜினி சொன்னதற்காகவே இவன் வேற மாதிரி படத்தை நான்கு முறை பார்த்தேன்' என்று நக்கலான ட்விட் வெளியானது.

இது மீடியாவில் குழப்பத்தையும், ரஜினி ரசிகர்கள் மத்தியில் கோபத்தையும் உண்டாக்கியது.

இதைத் தொடர்ந்துதான் பரோட்டா சூரி போலீசில் இதுகுறித்து புகார் செய்தார்.

இதுகுறித்து பரோட்டா சூரியிடம் நாம் கேட்டபோது, "சூப்பர் ஸ்டார் அண்ணன் ரஜினி மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவரது ரசிகன் நான். அவரைப் போய் தவறாகவோ கிண்டலாகவோ பேசுவேனா...இதெல்லாம் யாரோ திட்டமிட்டு செய்யும் வதந்தி சார்," என்றார்.

 

பரோட்டா சூரி பெயரில் இயங்கிய போலி ட்விட்டர் பக்கம் மூடப்பட்டது!

பரோட்டா சூரி பெயரில் இயங்கிய போலி ட்விட்டர் பக்கம் மூடப்பட்டது!

சென்னை: போலீசில் புகார் தந்ததைத் தொடர்ந்து பரோட்டா சூரி பெயரில் இயங்கிய போலி ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமாகி பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வரும் பரோட்டா சூரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் கொடுத்தார்.

அதில், ரஜினி குறித்து தவறாகக் கருத்து சொன்னதாக ட்விட்டரில் எனது பெயரில் விஷமிகள் சிலர் அவதூறு கருத்துக்களை பரப்பி வருவது தெரிய வந்தது.

ட்விட்டர் பேஸ்புக்கில் பங்கேற்கும் அளவுக்கு நான் படித்தவன் இல்லை.

எனவே, எனது பெயரிலான பேஸ்புக், ட்விட்டர் கணக்குகளை முடக்கி வைக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன், என்று புகார் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து சூரி பெயரில் இயங்கிய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. பேஸ்புக் கணக்குகளும் முடக்கப்பட்டது.

 

சத்தியம் டிவியில் புது பொழுது

உங்களின் காலை பொழுதை சிறப்பாக்க வரும் புத்தம்புதிய நிகழ்ச்சி "புதுபொழுது". உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் வரும் திங்கள் முதல் வெள்ளிவரைகாலை 8.30 மணிமுதல் 9.00 மணிவரை ஒளிப்பரப்பாகிறது.

இந்தநிகழ்ச்சியில் உங்களின் உடலிற்கும், மனதிற்கும் பயன்தரும் செய்திகள் ஏராளம். ஒரு மனிதனின் சிறப்பான செயல்பாட்டில் தான் சமுதாயம் சிறக்கும்.

சத்தியம் டிவியில் புது பொழுது

அந்த மனிதன் சிறப்பாக செயல்பட அவனுக்கு ஆரோக்கியமும்,அழகும் அவசியம். ஆரோக்கியத்திற்காகவும், அழகை மேம்படுத்திக்கொள்ளவும் தேவைப்படும் தகவல்களை தாங்கிவருகிறது இந்தநிகழ்ச்சி.

இயற்கைஉணவுபற்றிய விழிப்புணர்வு செய்திகள், உங்களின் மனதிற்கு இதம் தரும் தன்னம்பிக்கை செய்திகள் என உங்களின் காலைபொழுதை இதுசிறப்பாய் மாற்றுகிறது.

அழகு, ஆரோக்கியம், இயற்கை உணவு, தன்னம்பிக்கை என அனைத்தையும் தாங்கிவருகிறது சத்தியம் புதுபொழுது...

 

புதுயுகம் டிவியில் ‘6 டாக்டர்களும் 1008 கேள்விகளும்’

இன்றைய அவசர யுகத்தில் விதவிதமாக தோன்றியிருக்கும் நோய்களுக்கு சாதி, இன பேதங்கள் கிடையாது; ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமும் கிடையாது.

அதிகாரம் கொண்டவர்களுக்கும் சாமானியர்களுக்கும்கூட இன்று புதுப் புது வடிவில் நோய்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. வசதிகொண்டவர்கள் பிரபல டாக்டர்களைச் சந்தித்து நோய்கள் குறித்த ஆலோசனைகளைப் பெறுகிறார்கள்; வசதியில்லாதவர்கள் வழியில்லாமல் போராடுகிறார்கள்.

புதுயுகம் டிவியில் ‘6 டாக்டர்களும் 1008 கேள்விகளும்’

உங்களிடம் நோய்கள் இருக்கலாம்; அதுபற்றிய சந்தேகங்கள் இருக்கலாம். அவற்றை எல்லாம் தீர்க்க உங்களைத் தேடி உங்கள் வீட்டு வரவேற்பறைக்கே ஒரு இன்ஸ்டண்ட் கிளினிக்காக வருகிறது புதுயுகத்தின் ‘6 டாக்டர்களும் 1008 சந்தேகங்களும்' என்ற நிகழ்ச்சி. இந்தக் குழுவில் இருப்பவர்கள் அனைவரும் வெவ்வேறு மருத்துவ துறை சார்ந்த நிபுணர்கள்.

பிரபலமான இவர்கள் உங்களுக்கு கொடுக்கப் போவது மருந்துகளை அல்ல; நம்பிக்கைகளை! உங்களை அச்சப்பட வைக்கும், துவள வைக்கும் எந்தவிதமான நோய்கள் குறித்தும் நீங்கள் இந்த மருத்துவர்களைக் கேட்கலாம்; அவர்களிடமிருந்து அற்புதமான ஆலோசனைகளைப் பெறலாம்; மனத்தின் கலக்கத்தை இறக்கி வைக்கலாம்.

புதுயுகம் டிவியில் ‘6 டாக்டர்களும் 1008 கேள்விகளும்’

புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘6 டாக்டர்களும் 1008 கேள்விகளும்' என்ற இந்த நேரடி நிகழ்ச்சி உங்கள் வீட்டுக்கான கிளினிக்காகவே இருக்கும் என்கின்றனர் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்.

வாருங்கள், உங்கள் தொலைப்பேசியை எடுங்கள், எங்கள் நிகழ்ச்சியின் தொலைபேசி எண்ணான - 044 - 4569 444 என்ற எண்ணை தொடர்புகொள்ளுங்கள்.. நோய் சார்ந்து எதையும் கேளுங்கள், சந்தேகங்களை தெளிவு பெறுங்கள்.

 

'எல்லாரும் மறக்காம திருட்டு விசிடில படம் பாருங்க!' - டங் ஸ்லிப்பான ஜீவா

தனது பிறந்த நாள் விழாவின் போது ரசிகர்கள் மத்தியில் பேசிய ஜீவா, தவறுதலாக 'எல்லாரும் மறக்காம திருட்டு விசிடில படம் பாருங்க' என வாய் தவறிப் பேசியதால் சிரிப்பில் அரங்கம் கலகலத்தது.

நடிகர் ஜீவாவுக்கு இன்று முப்பதாவது பிறந்த நாள். தன் பிறந்த நாளையொட்டி 20 பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கினார்.

'எல்லாரும் மறக்காம திருட்டு விசிடில படம் பாருங்க!' - டங் ஸ்லிப்பான ஜீவா

இந்த நிகழ்ச்சி சென்னை ஆர்கேவி அரங்கில் நடந்தது. உதவிகள் வழங்கிய பிறகு ஜீவா பேசுகையில், "இந்த முறை ஒரு நடிகராக மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறேன். அண்ணன் விஜய் நடிக்கும் ஜில்லா படத்துக்கு நானும் அண்ணனும் இணைத் தயாரிப்பாளர்கள்.

எல்லோரது படங்களும் நன்றாக ஓடணும். சினிமா என்பது ஒருவரையொருவர் சார்ந்து இயங்கும் உலகம். அதனால் படங்கள் ஓடணும். அதற்கு நீங்கள் எல்லாம் படத்தை தியேட்டரில் போய் பார்க்கணும். எல்லாரும் மறக்காம திருட்டு விசிடில பாருங்க, என்றார் வாய் தவறி. உடனே வந்திருந்தவர்கள் சத்தமாக சிரித்து வைக்க, சாரி, விஜய் - அஜீத் பற்றி பேசினாலே இப்படித்தான் தடுமாறுகிறது. டெலிட் பண்ணிடுங்க, என்றார்.

மீண்டும் மறக்காம திருட்டு விசிடில படம் பார்க்காதீங்க என்பதற்கு பதில், பாருங்க என்றே தவறுதலாகக் குறிப்பிட்டார். மூன்றாவது முறைதான் திருட்டு விசிடில பார்க்காதீங்க என்றார்.

 

வீரமும் ஓடணும் ஜில்லாவும் ஓடணும்... அஜீத், விஜய் ரசிகர்கள் அமைதி காக்கணும்! - ஜீவாவின் ஆசை

பொங்கலுக்கு வெளியாகும் வீரம், ஜில்லா படங்கள் இரண்டுமே நன்றாக ஓட வேண்டும். விஜய், அஜீத் ரசிகர்கள் மோதிக் கொள்ளாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று ஜீவா கேட்டுக் கொண்டார்.

இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு ஏழைப் பெண்களுக்கு தையல் எந்திரங்கள் வழங்கிய ஜீவா பின்னர் பேசுகையில், "இந்த பொங்கலுக்கு அண்ணன் விஜய் நடித்த ஜில்லா படமும், தல அஜீத் நடித்த ஜில்லாவும் வெளியாகின்றன.

வீரமும் ஓடணும் ஜில்லாவும் ஓடணும்... அஜீத், விஜய் ரசிகர்கள் அமைதி காக்கணும்! - ஜீவாவின் ஆசை

இந்த இரண்டு படங்களுமே நல்லா ஓடணும்.. தமிழ் சினிமாவுக்கு மகிழ்ச்சியை தரணும்.

சமீபத்தில் கூட பிரியாணியும் என்றென்றும் புன்னகையும் ஒரே நாளில் வெளியாகி, வெற்றி பெற்றன. அந்த மாதிரி ஜில்லாவும் வீரமும் வெற்றி பெறணும்.

இந்த நேரத்துல நான் சொல்லி விரும்பறதெல்லாம், இந்த இரு படங்களின் நாயகர்களுடைய ரசிகர்கள் அமைதியாக இருக்க வேண்டும். இரு படங்களையும் நன்றாக ஓட வைக்க வேண்டும் என்பதுதான்.

ஆங்காங்கே விஜய், அஜீத் ரசிகர்கள் மோதல்னு செய்திகள் வருது. அதெல்லாம் இல்லாம பாத்துக்கங்க, ப்ளீஸ்," என்றார்.

 

மேனேஜருக்கு கால்ஷீட் கொடுத்த விஜய்

மேனேஜருக்கு கால்ஷீட் கொடுத்த விஜய்

நடிகர் விஜய்யின் மேனேஜரும், பிஆர்ஓ - வுமான பி.டி.செல்வகுமாருக்கு கால்ஷீட் தந்திருக்கிறார் விஜய். இந்த வருடம் விஜய் நடிக்கும் இரண்டு படங்களில் ஒன்றாக இது இருக்கும்.

நடிகர் விஜய் நடித்து பொங்கல் ரிலீசாக வெளிவர இருக்கும் படம் ஜில்லா. அதையடுத்து ஐங்கரன் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை. இசை அனிருத். இந்தப் படம் முடிந்த பிறகு செல்வகுமார் தயாரிக்கும் படத்தில் நடிக்க விஜய் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இவர் நடிகர் விஜயின் பிஆர்ஓவாக பல ஆண்டுகள் இருந்தவர். ஒன்பதில் குரு படம் மூலமாக இயக்குநர் அவதாரம் எடுத்தார். அடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார். அதுவும் நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கே தயாரிப்பாளர் ஆகிறார்.

எனினும், படத்திற்கான தலைப்பு , நடிகர்கள் மற்றும் மற்ற விவரங்களை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதன்படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் நடைபெறலாம் என தெரிகிறது. இந்த படத்தை பி.டி.செல்வகுமாருடன் சேர்ந்து தமீன் என்பவரும் தயாரிக்கிறார்.

 

இயக்குநர் ஜீவனுடன் ரிஷிவந்தியம் ரங்கநாதர் கோவிலுக்கு விசிட் அடித்த சீதா

இயக்குநர் ஜீவனுடன் ரிஷிவந்தியம் ரங்கநாதர் கோவிலுக்கு விசிட் அடித்த சீதா

ரிஷிவந்தியம்: விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தை அடுத்த திருவரங்கத்தில் பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவில் உள்ளது.

சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் இந்த கோவிலுக்கு நடிகை சீதா காரில் வந்தார். டைரக்டர் ஜீவன், உதவியாளர் உள்பட 3 பேர் உடன் வந்தனர்.

கோவிலில் நடிகை சீதாவுக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்படடது. ரங்கநாத பெருமாள், ரங்கவல்லி தாயார் சன்னதிகளுக்கு சென்று நடிகை சீதா பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார்.

அவர் கோவிலை சுற்றி பார்த்துவிட்டு சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் காரில் புறப்பட்டு சென்றார்.

 

கலைஞர் டிவியில் மடிப்பாக்கம் மாதவனின் நகைச்சுவை

கலைஞர் டிவியில் மடிப்பாக்கம் மாதவனின் நகைச்சுவை

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘மடிப்பாக்கம் மாதவன்' நகைச்சுவைத் தொடர் ஐம்பதாவது எபிசோடை எட்டியிருக்கிறது.

வெளிநாட்டு மந்திரவாதியால் ஒரே குடும்பத்தின் மாதவன், பண்டரிபாய், கவுசல்யா, ஆகிய மூவரும் சுண்டு விரல் அளவு தோற்றம் கொண்ட மனிதர்கள் ஆகி விடுகின்றனர்.

இம் மூவரும் மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் எப்படி அங்கிருந்து மீண்டார்கள் என்பது அடுத்தடுத்த காமெடி.

ராம்ஜி, நளினி, மதுமிதா ஆகியோரின் கலக்கல் காமெடி, சிரிப்பில் வீடுகளை குலுக்குகிறது. இவர்களுடன் காத்தாடி ராமமூர்த்தி, சாந்தி ஆனந்தராஜ், தீபாஸ்ரீ, ஸ்ரீஜீத், முல்லை, டெலிபோன் மணி, மங்கீ ரவி, சிவராஜ், ஸ்ரீமதி அம்மாள், கலாதர், ரங்கம்மா பாட்டி, கண்ணாயிரம் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை திரைக்கதை தயாரிப்பு: சினி ஸ்டார் மீடியா பிரைவேட் லிமிடெட். இயக்கம்: எஸ்.மோகன். இவர் மாமா மாப்ளே, சூப்பர் சுந்தரி போன்ற வெற்றித் தொடர்களை இயக்கியவர்.

 

மன்சூர் அலிகானின் அடுத்த ‘அதிரடி’ ஆரம்பம்

சினிமாவில் எதையாவது வித்தியாசமாக செய்வது மன்சூரலிகானின் வாடிக்கை. பூனையை குறுக்கே விடுவது. ராகுகாலத்தில் படபூஜை போடுவது என்பது இவரது முந்தைய செயல்படுகள்.

அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் சார்பில் ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட... என்ற நீளமான பெயர் கொண்ட படத்தை எடுத்தார். வாழ்க ஜனநாயகம் என்ற அரசியல் கிண்டல் படம் எடுத்தார். இவர் எடுத்த படங்கள் பிளாப் ஆனாலும் அடுத்தடுத்து படம் எடுப்பது அவரது தன்னம்பிக்கை.

மன்சூர் அலிகானின் அடுத்த ‘அதிரடி’ ஆரம்பம்

இந்த வரிசையில் இப்போது அவர் எடுக்கப்போகும் படத்தின் பெயர் அதிரடி.ரோட்டில் வித்தை காட்டி பிழைக்கும் ஒருவனுக்கு வரும் காதலும், அவனது வாழ்க்கையும்தான் கதையாம்.

கதை, திரைக்கதை வசனம், இயக்கம், இசை, ஹீரோ எல்லாமே மன்சூர்அலிகான்தான். ஒளிப்பதிவை மட்டும் க.முத்துகுமார் கவனிக்கிறார். சென்னை மற்றும் கூவம் ஆற்று கரையில் ஒரே ஷெட்யூலில் படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டிருக்கிறாராம்.

மன்சூர் அலிகானின் அடுத்த ‘அதிரடி’ ஆரம்பம்

இன்று காலை ஆர்கேவி ஸ்டூடியோவில் 50 முட்டைகளை விழுங்கி, வயிற்றில் பாறாங்கல்லை உடைத்து, தனது குழந்தைகளுடன் பாட்டுபாடி என பல அதிரடி வேலைகளை செய்து படத்தை துவக்கினார். விழாவுக்கு வந்திருந்தவர்கள் மிரண்டு ஓடாத குறையாக இருந்தது அவரது அதிரடிகள்.

 

மோசடி புகாருக்கு எதிராக நடிகை அனுராதா மானபங்க புகார்: பட அதிபர் கைது

மோசடி புகாருக்கு எதிராக நடிகை அனுராதா மானபங்க புகார்: பட அதிபர் கைது

சென்னை: தன்மீது பண மோசடி புகார் கொடுத்த பட அதிபர் மீது மானபங்க புகார் கொடுத்துள்ளார் புதுமுக நடிகை அனுராதா. இதனையடுத்து பட அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தியாகராயநகர், பத்மநாபன் தெருவில் வசிப்பவர் அனுராதா. இவர் சினிமாவில் தற்போது நடித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் இன்னும் வெளியாக வில்லை. இவர் மீது ஸ்ரீதரன் (35) என்ற பட அதிபர், கடந்த மாதம் புகார் கொடுத்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பணத்தை மோசடி செய்து விட்டார், என்று புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தோம். இதுமட்டுமல்லாமல் பணம்,சொத்து, நகை என மொத்தம் ஒன்றைரை கோடிக்கு மேல் என்னிடம் இருந்து அனுராதா கறந்துவிட்டார். இப்போது அதை திருப்பி கேட்டால் கொலைமிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த புகார் மனு மீது விசாரணை நடந்து வரும் வேளையில், நடிகை அனுராதா, ஸ்ரீதரன் மீது பதிலடியாக பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

தன்னை, சேலையை பிடித்து இழுத்து, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி மானபங்கம் செய்தார் என்றும், ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டு, அவமானப்படுத்திவிடுவேன் என்று, மிரட்டுவதாகவும், அனுராதா தனது புகாரில் தெரிவித்து இருந்தார்.

இந்த புகார் மனு மீது பாண்டிபஜார் போலீசார் சனிக்கிழமை இரவு வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்காக வேளச்சேரியில் வசிக்கும் ஸ்ரீதரன் அழைத்து வரப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்தவுடன் அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் இரவு 10.30 மணிக்கு தெரிவித்தனர்.