12/22/2010 12:56:30 PM
கவுதம் மேனன் இயக்கிய 'விண்ணைத்தாண்டி வருவாயாÕபடத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. கவுதமே இயக்க ஆரம்பித்தார். ஷூட்டிங் தொடங்கியதிலிருந்தே பிரச்னைகளும் தொடங்கிவிட்டது. திடீரென ஹீரோயின் த்ரிஷா விலகினார். ஹீரோ பிரதீக் பாப்பரும் விலகிவிட்டதாக தகவல் வெளியானது. த்ரிஷாவுக்கு பதிலாக தேர்வான 'மதராசபட்டினம்Õ பட ஹீரோயின் எமி ஜாக்ஸனும் இந்திய பழக்க வழக்கங்களை கடைபிடிப்பது கடினமாக இருப்பதாக கூறி லண்டனுக்கு சென்றுவிட்டதால் படம் டிராப் ஆனதாக கூறப்பட்டது.
இது குறித்து கவுதம் மேனன் கூறியது: இந்தி Ôவிண்ணைத் தாண்டி வருவாயாÕ டிராப் ஆகிவ¤ட்டதாக தகவல் வருக¤றது. ஹீரோ பிரதீக் பாப்பர் தற்போது ஆமிர் கான் தயாரிப்பில், கிரண் ராவ் இயக்கியுள்ள 'தோபி காட்Õ படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றிருக்கிறார். வரும் ஜனவரி மாதம் அப்படம் ரிலீஸ். அந்த வேலை முடிந்த பிறகு என்னுடைய படத்தில் நடிக்க உள்ளார். எமி ஜாக்ஸன் சமீபத்தில் இந்தியா வந்து ஒரு மாதம் தங்கி இருந்தார். அப்போது ஸ்பெஷல் டியூஷன் மூலம் இந்தி கற்றுக் கொண்டார். அது முடிந்துவிட்டதால் புறப்பட்டு சென்றிருக்கிறார். ஷூட்டிங் எப்போது தொடங்குகிறதோ அப்போது சொன்னால் உடனே வருவதாக கூறி இருக்கிறார்.