துப்பாக்கியின் வசூல் சத்தம் பாலிவுட்டில் கடுமையாக எதிரொலிக்கிறது. நிச்சயம் படம் வெற்றி பெறும் என்பதால் நூறு கோடியை வசூலிக்கயிருக்கும் படத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. முக்கியமான கத்ரினா, தீபிகா, சோனாக்சி.
தமிழில் நடித்த காஜல் அகர்வால் இந்திக்கு வேண்டாம் என்று அக்சய் குமாரும், விபுல் ஷாவும் தீர்மானமாக முடிவெடுத்திருக்கிறார்கள். ப்ரணித்தா நடிப்பதாக சொல்லப்பட்டதும் சும்மாவாம்.
காஜல் துப்பாக்கியில் ஒரேயொரு காட்சியில் குத்துச்சண்டை வீரர்களுக்கான உடை அணிந்து ஒரேயொரு குத்துவிடுவார். ஆனால் இந்தியில் இந்த கேரக்டரை இன்னும் போல்டாக காட்டயிருக்கிறாராம் முருகதாஸ். மேரி கோமை மனதில் வைத்து இந்த கேரக்டரை பட்டை தீட்டயிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாக்சராக நடிப்பதற்குரிய உடல்வாகு தீபிகா படுகோனுக்குதான் இயல்பாக அமைந்துள்ளது. மேலும் தமிழ் துப்பாக்கியில் நடிக்க முருகதாஸின் முதல் சாய்ஸ் தீபிகாதானாம். கால்ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியவில்லை. இதனால் ரேஸில் தீபிகா முன்னணியில் இருப்பதாக கூறுகிறார்கள்.
படத்தின் முக்கியமான இன்னொரு மாற்றம், வித்யும் ஜம்வால். துப்பாக்கியில் வில்லனாக நடித்த இவரை இந்தியில் பயன்படுத்தப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் விபுல் ஷா. காரணம் ஷா வின் கமாண்டோ படத்தில் வித்யுத் ஹீரோவாக நடிக்கிறார். வில்லனாக போட்டு அவரை வீணடிக்க விரும்பவில்லையாம் விபுல் ஷா.
அடுத்த மாதம் இந்த ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்குகிறது.