சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம்

1/6/2011 11:10:16 AM

விக்ரம் நடிப்பில் செல்வராகவன் தொடங்கிய படம் சிந்துபாத். ரமேஷ்பாபு படத்தின் தயா‌ரிப்பாளர். லடாக்கில் விக்ரம் மற்றும் ஸ்வாதியை வைத்து சில காட்சிகள் படமாக்கவும் செய்தார் செல்வராகவன்.

சில காரணங்களால் சிந்துபாத் கைவிடப்பட்டது. அதன் பிறகு விக்ரம் கே.குமார், பூபதி பாண்டியன் என பல மலர்கள் தாவி இறுதியாக விஜய் இயக்கத்தில் தெய்வமகன் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.

விக்ரமின் கால்ஷீட் கைவசம் இருப்பதால் சிந்துபாத் தயா‌ரிப்பாளர் விக்ரமுக்கான இயக்குனர் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளார். அனேகமாக விக்ரமை வைத்து அவர் தயா‌ரிக்கும் படத்தை சுசீந்திரன் இயக்குவார் என தெ‌ரிகிறது.

வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல படங்களை இயக்கிய சுசீந்திரன் தற்போது கௌதம் தயா‌ரிப்பில் அழகர்சாமியின் குதிரை படத்தை இயக்கி வருகிறார்.


Source: Dinakaran
 

மீனா குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் சூப்பர் ஸ்டார்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மீனா குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் சூப்பர் ஸ்டார்!

1/6/2011 10:53:07 AM

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த மீனா கடந்த 2009, ஜூலை 12ம் தேதி திருப்பதியில் திருமணம் நடந்தது. இந்நிலையில், அவருக்கு ஜனவரி 1ந் தேதி காலை 11.30 மணியளவில் பெண் குழந்தை பிறந்தது. அடுத்து, குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை சைதாப்பேட்டையில் உள்ள மீனா வீட்டில் விமரிசையாக நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

வரும் சனிக்கிழமை இந்த விழா நடக்கிறது. விழாவுக்கு நடிகர் நடிகைகளையும் நெருங்கிய தோழிகளையும் மீனா அழைத்து வருகிறார். குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சிக்கு கட்டாயம் வாங்க என்று வேண்டி விரும்பி மீனா அழைத்துள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை.


Source: Dinakaran
 

கிசு கிசு -முக்கியத்துவம் யாருக்கு?ஹீரோ அப்செட்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

முக்கியத்துவம் யாருக்கு? ஹீரோ அப்செட்

1/6/2011 10:43:02 AM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

அருணான நடிகரு தன்னோட புது படத்துக்கு ஆக்ஷன் காட்சிகளை தானே எழுதியிருக்கிறாராம்… எழுதியிருக்கிறாராம்… இதை அப்படியே சேர்க¢கலாம்னு டைரக்டருகிட்ட சொன்னாராம். எதையும் சொல்ல முடியாம டைரக்டரு தவிக்கிறாராம்… தவிக்கிறாராம்…

தம்பியை வச்சு படம் இயக்குற செல்வமான இயக்கம், ஷூட்டிங்கை நிறுத்தியிருக்கிறாராம்… நிறுத்திய¤ருக்கிறாராம்… செலவு அதிமானதால நிறுத்தலையாம். அடுத்து எந்த காட்சியை படமாக்கலாம்னு யூனிட்டோடு உட்கார்ந்து யோசிக்கிறாராம்… யோச¤க்கிறாராம்… முழு ஸ்கிரிப்ட்டும் ரெடியான பிறகுதான் அடுத்த கட்ட ஷூட்டிங்குக்கு போவாராம்… போவாராம்…

அஞ்சாத வில்லன் நடிகரு அப்செட்ல இருக்கிறாராம்… இருக்கிறாராம்… கைவசம் ஒரு படம்தான் இருக்கு. அதுலேயும் ஹீரோவா நடிக்கிற டைரக்டருக்குத்தான் முக்கியத்துவமாம்… முக்கியத்துவமாம்… அதனாலதான் நடிகரு அப்செட்டா இருக்காராம்… இருக்காராம்…


Source: Dinakaran
 

த்ரிஷாவுக்கு பதில் ஹன்ஸிகா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

த்ரிஷாவுக்கு பதில் ஹன்ஸிகா?

1/6/2011 10:56:22 AM

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் படம் நண்பே‌ண்டா. ரொமாண்டிக் காமெடியான இந்தப் படத்தை சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்குகிறார்.

நண்பே‌ண்டா படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்க ஸ்ருதி கமலிடம் கால்ஷீட் கேட்கப்பட்டதாகவும், தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் அவர் பிஸியாக இருப்பதால் கால்ஷீட் தர முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

தற்போது ‌ஸ்ருதிக்குப் பதில் த்‌ரிஷாவை ஒப்பந்தம் செயதுள்ளனர். இப்போது த்ரிஷாவுக்கு பதில் ஹன்ஸிகா மோத்வானி நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

இதுகுறித்து ஹன்ஸிகா கூறுகையில், “இந்தக் கதை மிக அருமையாக இருந்தது. அதுமட்டுமல்ல, உதயநிதி ஸ்டாலின் எனக்குப் பிடித்த தயாரிப்பாளர். பெரிய பேனர், புதுமுகம் என்றாலும் பெரிய ஹீரோ… சந்தோஷமாக ஒப்புக் கொண்டேன். இந்தப் படம் நிச்சயம் என் வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையைத் தரும் என நம்புகிறேன்,” என்றார்.


Source: Dinakaran
 

என்னுடைய சினிமா கே‌ரிய‌ரில் பெஸ்ட் ஃபிலிம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

என்னுடைய சினிமா கே‌ரிய‌ரில் பெஸ்ட் ஃபிலிம்

1/6/2011 11:11:06 AM

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் தனுஷின் ஆடுகளம் பொங்கலுக்கு வெளியாகிறது. பொல்லாதவன் படத்தை இயக்கிய வெற்றிமாறனின் படைப்பு என்பதால் அனைத்து தரப்பினரும் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

மதுரை பின்னணியில் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் வெற்றிமாறன். தனுஷுடன் கவிஞர் வஐசா ஜெயபாலன், சம்பத் ஆகியோரும் நடித்துள்ளனர். டெல்லி மாடல் டாப்ஸி ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

ஆடுகளத்தைப் பற்றி தனுஷ் குறிப்பிடுகையில், என்னுடைய சினிமா கே‌ரிய‌ரில் பெஸ்ட் ஃபிலிம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறேன். படம் பார்க்கும் போது நீங்களும் அதை உணர்ந்து கொள்வீர்கள் என்றார்.


Source: Dinakaran