தலைவா நஷ்டம்... ரூ 5 கோடியைத் திருப்பித் தந்த விஜய்!

சென்னை: தலைவா படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் அதன் தயாரிப்பாளர் மற்றும் வாங்கி வெளியிட்டவர்களுக்கு ரூ 5 கோடி வரை நடிகர் விஜய் திருப்பித் தந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் சினிமா கேரியரில் மிகவும் சோதனையாக அமைந்த படம் தலைவா. இந்தப் படம் பெரிய சிக்கலுக்கு நடுவில் வெளியானது. விஜய்யின் அரசியல் திட்டங்களுக்கு தற்காலிக முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் நிகழ்வுகள் அரங்கேறின.

தலைவா நஷ்டம்... ரூ 5 கோடியைத் திருப்பித் தந்த விஜய்!

படமும் பல படங்களின் கூட்டு அவியலாக இருந்ததா ரசிகர்கள் ரசிக்கவில்லை. இதனால் படம் தோல்வியைத் தழுவியது.

இந்தப் படத்தை தயாரித்த சந்திரபிரகாஷ் ஜெயினும் வாங்கி வெளியிட்ட வேந்தர் மூவீசும் நஷ்டக் கணக்கு காட்டி அதை ஈடு செய்யுமாறு விஜய்யை நெருக்கினார்கள்.

இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த பஞ்சாயத்தில் சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் வேந்தர் மூவீசுக்கு மொத்தமாக ரூ 5 கோடியை நஷ்ட ஈடாகத் தந்துள்ளார் நடிகர் விஜய்.

இதற்கிடையில் ஜில்லாவும் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாக தென் மாவட்ட விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து போர்க்கொடி கிளம்பியது. விரைவில் அந்த விவரங்கள்...

 

ஹேமமாலினி மகளுக்கு நாளை திருமணம்: டெல்லி தொழில் அதிபரை மணக்கிறார்

ஹேமமாலினி மகளுக்கு நாளை திருமணம்: டெல்லி தொழில் அதிபரை மணக்கிறார்

மும்பை: நடிகை ஹேமமாலினி - தர்மேந்திராவின் இளைய மகள் அஹானாவுக்கு நாளை திருமணம் நடக்கிறது.

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகள் ஹேமமாலினி - தர்மேந்திரா. இவர்களின் இளைய மகள் அஹானாவுக்கும் டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் வைபவ் வோராவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது.

இவர்களின் திருமணம் நாளை நடக்கிறது.

மும்பை ஜுஹூ பகுதியில் உள்ள ஹேமமாலினியின் ஆடம்பர பங்களாவில் இந்தத் திருமணத்தின் முதல் நிகழ்ச்சியான மெகந்தி நடந்தது. நெருங்கிய உறவினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

நாளை நடக்கும் திருமணத்தில் இந்தி நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

 

ஏ ஆர் ரஹ்மானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் - ஸ்காட்லாந்து இசைக் கல்லூரி வழங்கியது!

கிளாஸ்கோ: பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு கவுரவ டாக்டர் வழங்கியது ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக் கல்வி மையமான ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து.

தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவராகத் திகழ்கிறார் ரஹ்மான்.

ஏ ஆர் ரஹ்மானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் - ஸ்காட்லாந்து இசைக் கல்லூரி வழங்கியது!

குறிப்பாக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றதன் மூலம் அவரது புகழ் சர்வதேச அரங்கில் பரவியுள்ளது.

இசைத் துறையில் ரஹ்மானின் சாதனைகளைப் போற்றும் வகையில் அவருக்கு ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

ஸ்காட்லாந்தில் உள்ள க்ளாஸ்கோ நகரில் நடந்த இந்த விழாவுக்கு, தனது கேஎம் இசைப் பள்ளி மாணவர்களுடன் சென்று கவுரவத்தை ஏற்றுக் கொண்டார் ஏஆர் ரஹ்மான்.

1845லிருந்து சர்வதேச அளவில் இசை, நடனம், நடிப்பு என கலைத் துறை கல்வியை சிறப்பாக எடுத்துச் செல்கிறது இந்த ஸ்காட்லாந்து நிறுவனம்.

இந்த விருது தனக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தருவதாக உள்ளது என ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

 

'பெரிய நடிகர்கள் படம் ரெண்டு மூணு வாரம்தான் ஓடுது.. மத்த நேரங்கள்ல படங்களுக்கு எங்கே போறது?'

'பெரிய நடிகர்கள் படம் ரெண்டு மூணு வாரம்தான் ஓடுது.. மத்த நேரங்கள்ல படங்களுக்கு எங்கே போறது?'

இப்போதெல்லாம் பெரிய நடிகர்களின் படங்கள் இரண்டு மூன்று வாரங்கள்தான் ஓடுகின்றன. மற்ற நாட்களில் கை கொடுப்பவை சின்ன படங்கள்தான் என்று பேசினார் திரையரங்க உரிமையாளர் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன்.

துவார் சந்திரசேகரின் எப்சிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் பாக்கணும் போல இருக்கு. எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில், புதுமுகங்கள் பரதன், கீதிகா, பரோட்டா சூரி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் இது. அருள்தேவ் இசையமைத்துள்ளார்.

படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான், திரையரங்க உரிமையாளர் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன், நடிகை நமீதா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய அபிராமி ராமநாதன், "இப்போதெல்லாம் சின்னப் படங்கள்தான் தியேட்டர்களை வாழ வைக்கின்றன. பெரிய நடிகர்களின் படங்களெல்லாம் இப்போது ரெண்டு மூணு வாரங்கள்கூட தாக்குப் பிடிக்கிறதில்ல. அப்புறம் படங்களுக்கு எங்கே போறது.. மிஞ்சிப் போனால் ஒரு ஆண்டுக்கு 12 பெரிய படங்கள் வரும். மீதி நாட்களில் கைகொடுப்பவை சிறு முதலீட்டுப் படங்களே.

இவற்றுக்கு தியேட்டர்கள் தர நாங்கள் தயாராகவே உள்ளோம். ஆனால் ஒரேயடியாக கூட்டமாக வராமல், உங்களுக்குள் ஒரு திட்டமிடலோடு வாருங்கள். சீமான் போன்றவர்களிடம் ஆலோசனை பெற்று ஒரு திட்டம் வகுத்து வாருங்கள். சின்னப் படங்கள் நல்ல லாபம் சம்பாதிக்க முடியும்," என்றார்.