இசை அமைப்பாளர் பி.ஏ.சிதம்பரநாதன் பேரன் அறிமுகம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பழம்பெரும் இசை அமைப்பாளர் பி.ஏ.சிதம்பரநாதன். தமிழ் மற்றும் மலையாள  படங்களுக்கு இசை அமைத்தவர். இவரது மகன் ராஜாமணி, தமிழில் 'வானமே எல்லை', 'வாஞ்சிநாதன்', 'எல்லாம் அவன் செயல்' படங்களுக்கு இசை அமைத்தார். மலையாளத்தில் 700 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். இப்போது இவரது மகன் அச்சு, 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே' என்ற படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழுக்குப் புதிது என்றாலும், 'பொல்லாதவன்', 'என்னை தெரியுமா' தெலுங்கு ரீமேக்குக்கு இசை அமைத்தேன். மலையாளத்தில் 'குருஷேத்திரா' படத்துக்கு இசை அமைத்தேன். இதுவரை 200 படங்களுக்கு மேல் பின்னணி இசை அமைத்துள்ளேன். முதல் தமிழ் படம், 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே'. தொடர்ந்து சிறந்த படங்களுக்கு இசை அமைத்து புகழ் பெற ஆசை. பின்னணி இசையில் இளையராஜா போன்று சாதனை படைக்க ஆசை.


 

ரஜினியுடன் நடிப்பதில் பெருமை: சரத்குமார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'கோச்சடையான்' படத்தில் ரஜினிகாந்துடன் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன் என்று சரத்குமார் கூறினார். நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: தற்போது, தமிழ், தெலுங்கில் உருவாகும் 'ஹிஸ்ட்ரி' படத்தில் நடிக்கிறேன். மே மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. சுதந்திரத்திற்கு முன், பின் என இரு காலகட்டங்களில் உருவாகும் 'விடியல்', மே மாதம் ரிலீசாகிறது. மலையாளத்தில் உருவான 'டிராபிக்' கை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை ராடான் நிறுவனமும், லிஸ்டனும் வாங்கியுள்ளனர். ஐ பிக்சர்ஸ் சார்பில் தயாராகும் இப்படத்தில், டிரைவராக நடிக்கிறேன். ராதிகா, பிரகாஷ்ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கின்றனர். ரஜினியுடன் சில வருடங்களுக்கு முன்பே நடித்திருக்க வேண்டியது. நாங்கள் சேர்ந்து நடிக்க வேண்டிய படத்தை சுரேஷ்கிருஷ்ணா இயக்கவும் முடிவானது. சில காரணங்களால் அந்த வாய்ப்பு அமையவில்லை. இப்போது அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ரஜினியின் 'கோச்சடையான்' படத்தில் முக்கிய வேடம் ஏற்கிறேன். போட்டோ ஷூட்டே பிரமிக்க வைத்தது. உலக அளவில் ரஜினிக்கு வரவேற்பு இருக்கிறது. அவருடன் சேர்ந்து நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன்.


 

2வது முறையாக சாம்பியன் : சென்னை ரைனோஸ் த்ரில் வெற்றி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் டி20 தொடரில், கர்நாடகா புல்டோசர்ஸ் அணியுடனான  இறுதிப் போட்டியில் சென்னை ரைனோஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது. தொடக்க வீரர் விக்ராந்த் ஆட்டமிழக்காமல் 95 ரன் விளாசினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பை மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்ற செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் டி20 தொடரின் 2வது சீசன், கடந்த மாதம் 13ம் தேதி ஷார்ஜாவில் கோலாகலமாகத் தொடங்கியது. விஷால் தலைமையிலான சென்னை ரைனோஸ் உட்பட மொத்தம் 6 அணிகள் இந்த தொடரில் களமிறங்கின.

லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த தெலுங்கு வாரியர்ஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ் மற்றும் சென்னை ரைனோஸ் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அரை இறுதி ஆட்டங்களில் சென்னை ரைனோஸ் அணி 15 ரன் வித்தியாசத்தில் தெலுங்கு வாரியர்ஸ் அணியையும், கர்நாடகா புல்டோசர்ஸ் அணி 53 ரன் வித்தியாசத்தில் மும்பை ஹீரோஸ் அணியையும் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறின.

ஐதராபாத், ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சென்னை ரைனோஸ் & கர்நாடகா புல்டோசர்ஸ் அணிகள் மோதின. டாசில் வென்ற சென்னை ரைனோஸ் கேப்டன் விஷால் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். தொடக்க வீரர்களாக ஜீவா, விக்ராந்த் களமிறங்கினர். கார்த்திக் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஜீவா டக் அவுட் ஆகி வெளியேற சென்னை ரைனோஸ் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

அடுத்து வந்த பாலாஜி 7 ரன்னில் வெளியேறினார். அரை இறுதியில் ஆல் ரவுண்டராக ஜொலித்து ஆட்ட நாயகன் விருது பெற்று அசத்திய விஷ்ணு 3 ரன் மட்டுமே எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறியது ரைனோஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அடுத்து விக்ராந்த்துடன் பிருத்வி ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் பிருத்வி பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, மறுமுனையில் விக்ராந்த் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். அபாரமாக விளையாடிய விக்ராந்த் அரை சதம் அடித்து அசத்தினார். விக்ராந்த் & பிருத்வி ஜோடி 3வது விக்கெட்டுக்கு 99 ரன் சேர்த்தது. பிருத்வி 20 ரன் எடுத்து அபிமன்யு பந்துவீச்சில் சுதிர் வசம் பிடிபட்டார்.

கடைசி கட்டத்தில் ரமணா கம்பெனி கொடுக்க விக்ராந்த் சதம் விளாசுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ரமணா 8 ரன்னில் ஆட்டமிழந்தார். சென்னை ரைனோஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது. விக்ராந்த் 95 ரன் (69 பந்து, 14 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் விஷால் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கர்நாடகா புல்டோசர்ஸ் பந்துவீச்சில் கார்த்திக், துருவா, பிரதீப், அபிமன்யு தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 20 ஓவரில் 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா புல்டோசர்ஸ் களமிறங்கியது. பாஸ்கர், ராஜிவ் இருவரும் துரத்த்தலை தொடங்கினர். அந்த அணி & ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 32 ரன் எடுத்து திணறியது. சென்னை ரைனோஸ் பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் துடிப்புடன் செயல்பட்டு அசத்தினர்.


 

தவறுகளில் இருந்து பாடம் கற்றேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'அன்பே ஆருயிரே', 'லீ', 'மருதமலை', 'ஜகன்மோகினி' உட்பட தமிழ், தெலுங்கில் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் நிலா. இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரான இவர், மீரா சோப்ரா என்ற பெயரில் தெலுங்கு படங்களில் நடித்துவருகிறார். இப்போது இந்தியில் அறிமுகமாகிறார். இதுபற்றி நிலா கூறியதாவது: இந்தியில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். எப்போதோ இந்தியில் அறிமுகமாகியிருக்க வேண்டும். இப்போதுதான் சரியான நேரம் கிடைத்திருக்கிறது.

தென்னிந்திய நடிகைகள் இப்போது அதிகளவில் இந்தியில் அறிமுகமாகிறார்கள். அவர்களுடன் போட்டியிட விரும்பவில்லை. இந்தி சினிமா என்பது கடல் மாதிரி பெரியது. இங்கு அவரவர்களுக்கான இடம் நிச்சயம் இருக்கிறது. கேத்ரினா, கரீனா கபூர் போல் ஒரு பாடலுக்கு ஆட ஆர்வம் காட்டுவீர்களா என்கிறார்கள். ஆரம்பத்தில் அப்படி ஆடுவதை விரும்பாமல் இருந்தேன். இப்போது விரும்புகிறேன். சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது என்னை திமிர் பிடித்தவள் என்றார்கள்.

ஏனென்றால் நான் கார்பரேட் பின்னணியில் இருந்து வந்தவள். சினிமாவில் பணிபுரியும் ஸ்டைல் பற்றி அதிகம் தெரியாமல் இருந்தேன். அதே நேரம் கூச்ச சுபாவம் கொண்டவள் என்பதால் என் பிரச்னைகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமலும் இருந்தேன். இப்போது எனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன்.


 

தமிழில் நடிக்காதது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நல்ல கதைகள் அமையாததுதான் தமிழில் நடிக்காததற்கு காரணம் என்று தமன்னா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: ராம் சரணுடன் ரச்சா, பிரபாஸுடன் ரிபெல், ராமுடன் தமிழ், தெலுங்கில் வெளியாகும் 'எதுகண்டே பிரேமண்டா' படங்களில் நடித்துவருகிறேன். ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிப்பதால் அதிகப் படங்களில் நடிப்பதாக அர்த்தம் இல்லை. ஒரே நேரத்தில் ஏழு படங்களில் நடிக்கும் ஹீரோயின்களும் இருக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. கவனமே செலுத்தமுடியாமல் அதிக படங்களில் நடிப்பதால் என்ன பயன் கிடைத்துவிடும்? சமீப காலமாக தமிழில் ஏன் நடிக்கவில்லை என்று கேட்கிறார்கள். தெலுங்கில் பிசியாக இருப்பது ஒரு காரணம் என்றாலும் நல்ல கதைகள் அமையவில்லை என்பதுதான் உண்மை. வருகிற எல்லா கேரக்டரையும் ஏற்றுக்கொண்டு என்னால் நடிக்க முடியாது. ஆனாலும் சிறந்த கதைக்கு காத்திருக்கிறேன். இவ்வாறு தமன்னா கூறினார்.


 

கழுகு படத்தில் வித்தியாசமான பாடல் அன்றிலிருந்து இன்றுவரை காதல் எப்படி?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
டாக்கிங் டைம்ஸ் மூவிஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் பட்டியல் சேகர் தயாரித்துள்ள படம், 'கழுகு'. கிருஷ்ணா, பிந்து மாதவி, தம்பி ராமய்யா, கருணாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தை இயக்கியுள்ள சத்யசிவா கூறியதாவது: கொடைக்கானலில் தற்கொலை செய்துகொள்பவர்களின் பிணங்களைத் தூக்குகிறவர்களின் வாழ்க்கை பற்றிய கதை இது. தற்கொலை என்கிற செய்தியை பேப்பரில் படத்துவிட்டு 'உச்' கொட்டிவிட்டு சென்றுவிடுகிறோம். அதற்கு பின் நடக்கும் விஷயங்கள் கொடூரமானவை. இதை, கொடைக்கானலில் பிணம் தூக்குகிற ஒருவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர் சொன்ன தகவல்களின் அடிப்படையில் இக்கதையை உருவாக்கியுள்ளோம். யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பலம். 'அன்றைய காதல் எப்படியிருந்தது, இப்போது எப்படியிருக்கிறது' என்பது பற்றி 'ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்' என்ற பாடலை சினேகன் எழுதியிருக்கிறார். இது பேசப்படும் விதமாக இருக்கும். படத்தின் டிஐ வேலைகள் மும்பையில் நடந்தது. தமிழ் தெரியாதவர்கள் கலர் கரெக்ஷன் செய்தார்கள். படத்தை பார்த்துவிட்டு எங்கள் டீமை கட்டிப்பிடித்துப் பாராட்டினார்கள். இம்மாத இறுதியில் படம் ரிலீஸ் ஆகிறது. இவ்வாறு சத்யசிவா கூறினார்.


 

பிரபுதேவாவின் போருடா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரபுதேவா உருவாக்கியுள்ள இசை ஆல்பத்துக்கு 'போருடா' என்று தலைப்பு வைத்துள்ளார். சிம்புவின் 'லவ் ஆன்தம்', தனுஷின் 'சச்சின் ஆன்தம்' இசை ஆல்பங்களுக்கு அடுத்து பிரபுதேவாவும் இசை ஆல்பம் வெளியிட இருக்கிறார். இந்த ஆல்பம் காதலர் தினமான நாளை வெளியாவதாக இருந்தது. இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 'போருடா' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த இசை ஆல்பத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா நடனமாடியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, "எனது நண்பர்களும் வியாபார நிறுவனமும் ஆல்பம் ரிலீஸை தள்ளி வைக்கக் கூறினர். இதையடுத்து ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. இந்தியில் எனது இயக்கத்தில் அக்ஷய் குமார், சோனாக்ஷி நடிக்கும் 'ரவுடி ரத்தோர்' படம் பெரும்பாலும் முடிந்துவிட்டது" என்றார்.


 

நடிகர்களுக்கு முன்கூட்டியே பயிற்சி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
எஸ்.மைக்கேல் ராயப்பன் வழங்க, சிட்டி லைட்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாராகும் படம், 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி'. வெங்கடேஷ், அக்ஷரா ஜோடியுடன் 71 புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். ஷண்முகராஜ் எழுதி, இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. சினேகா வெளியிட, சேரன், அமீர் பெற்றுக்கொண்டனர். விழாவில் அமீர் பேசியதாவது:
 71 புதுமுகங்களுக்கு பயிற்சி அளித்து, அதை வீடியோவில் படமாக்கி, பிறகு சினிமாவாக உருவாக்கிய ஷண்முகராஜ் பாராட்டுக்குரியவர். ஒவ்வொரு காட்சியையும் ஒரே ஷாட்டில் படமாக்கியுள்ளார். அனைவரும் பிரமாதமாக நடித்துள்ளனர். காரணம், ஒர்க்ஷாப். நடிகர், நடிகைகளுக்கு முன்கூட்டியே பயிற்சி அளித்துவிட்டால், ஷூட்டிங்கில் பிரமாதமாக நடிப்பார்கள். அதை புரிந்துகொண்டேன். இனி நானும் ஒர்க்ஷாப் மூலம் நடிப்புப் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், சேரன், பாண்டிராஜ், ராமகிருஷ்ணன், எஸ்.மைக்கேல் ராயப்பன், தாஜ்நூர், பாடகர் வேல்முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


 

இடது கை பழக்கமுள்ளவராக அருண் விஜய்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'தடையறத் தாக்க' படத்தில் இடது கை பழக்கமுள்ளவராக அருண் விஜய் நடிக்கிறார். பெதர் டச் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம், 'தடையறத் தாக்க'. அருண்விஜய், மம்தா ஜோடி. தமன் இசை அமைக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மகிழ் திருமேனி இயக்குகிறார். படம் பற்றி அருண்விஜய் கூறியதாவது: இது ஆக்ஷன், திரில்லர் படம். பெரும்பாலான காட்சிகளை நள்ளிரவு நேரத்தில் சென்னையில் படமாக்கியுள்ளோம். படத்தின் திரைக்கதை வித்தியாசமாக இருக்கும். இதில், புதுமையாக இடது கை பழக்கமுள்ளவனாக நடித்துள்ளேன். இதற்காக மூன்று மாதம் தினமும் பயிற்சி செய்தேன். ஒரு பழக்கத்திலிருந்து திடீரென்று மாறுவது எவ்வளவு கஷ்டம் என்பது புரிந்தது. மற்றக் காட்சிகளில் நடித்தாலும் சண்டைக்காட்சியில் இடது கை பழக்கமுள்ளவனாக நடிக்க சிரமப்பட்டேன். படத்துக்காக அப்படி பழகி பழகி, இப்போது நிஜமாகவே இடது கை பழக்கம் வந்துவிட்டது. படம் முடிந்துவிட்டது. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி இருக்கிறது. பெப்சி பிரச்னை முடிந்ததும் ஷூட்டிங் தொடங்கும். ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய முயன்று வருகிறோம்.


 

கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கார்த்தி நடிக்கும் படத்துக்கு 'அலெக்ஸ் பாண்டியன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் படம், 'அலெக்ஸ் பாண்டியன்'.  கார்த்தி ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். மற்றும் சந்தானம், அகன்ஷ்கா பூரி, சனுஷா, மிலிந்த் சோமன், சுமன், மனோபாலா உட்பட பலர் நடிக்கின்றனர். சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் சுராஜ் கூறும்போது, 'மூன்று முகம்' படத்தில் ரஜினிகாந்தின் பெயர் 'அலெக்ஸ் பாண்டியன்'. இன்றும் ரசிகர்களிடையே அந்த பெயருக்கு நல்ல மவுசு இருக்கிறது. அதனால் அந்தப் பெயரை வைத்தோம். கார்த்தி நடித்த படத்திலேயே அதிகப் பொருட்செலவில் தயாராகும் படம் இது. கதைப்படி சந்தானத்துக்கு 2 தங்கைகள். அவர்களை கலாட்டா செய்துகொண்டிருக்கும் கேரக்டரில் கார்த்தி நடிக்கிறார். முழுக்க முழுக்க காமெடி கதை. விழுந்து விழுந்து சிரிப்பது போல் படம் இருக்கும். சாலக்குடியில் செட் அமைத்து படமாக்கினோம். இப்போது பின்னிமில்லில் பிரமாண்ட செட் அமைத்துள்ளோம். பெப்சி பிரச்னை முடிந்ததும் ஷூட்டிங் தொடங்கும்' என்றார்.


 

மும்பை சாலைகளில் துப்பாக்கி ஷூட்டிங்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விஜய் நடிக்கும், 'துப்பாக்கி' படத்தின் ஷூட்டிங் மும்பை சாலைகளில் நடக்க இருக்கிறது. கலைப்புலி எஸ்.தாணு ஏராளமானப் பொருட்செலவில் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம், 'துப்பாக்கி'. விஜய் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படத்தின் ஷுட்டிங் மும்பையில் நடந்து வந்தது. பெப்சி பிரச்னை காரணமாக, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இதன் ஷூட்டிங், வரும் 20ம் தேதி முதல் மும்பையில் மீண்டும் தொடங்குகிறது.

மும்பை நகரத்தின் முக்கிய சாலைகளில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. 'சில நாட்களுக்கு முன்பு மும்பை பிலிம்சிட்டி இருக்கும் கோரேக்கான் மேம்பாலத்தில் சிறப்பு அனுமதி வாங்கி ஷூட்டிங் நடத்தினோம். படப்பிடிப்பு நடந்தது தெரிந்து ஏராளமான தமிழர்கள் அங்கு கூடிவிட்டனர். இதனால் மாலை நான்கு மணிக்கே படப்பிடிப்பை நிறுத்திவிட்டு வேறு இடத்தில் ஷூட் செய்தோம். வரும் 20ம் தேதி முதல் மக்கள் கூடும் முக்கிய சாலைகளில் படப்பிடிப்பு நடக்க உள்ளது' என்று பட யூனிட் தெரிவித்தது. இதற்கிடையே, "துப்பாக்கியின் நீண்ட ஷெட்யூலை முடித்துள்ளோம். சமீபத்தில், பாடல் கம்போஸிங் நடந்தது. சிறப்பான ட்யூன்கள் கிடைத்துள்ளன" என்று முருகதாஸ் தெரிவித்துள்ளார். கிடைத்துள்ள இடைவெளியில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், விவசாயிகள் பற்றிய குறும்படத்தை எடுத்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.