கமலையும் மோகன்லாலையும் ஒப்பிடாதீர்கள்! - ஜீது ஜோசப்

கமல் ஹாஸனையும் மோகன்லாலையும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார் இயக்குநர் ஜீது ஜோசப்.

மோகன்லால் - மீனா நடித்த மலையாளப் படமான த்ரிஷ்யம், தமிழில் கமல் - கவுதமி நடிக்க பாபநாசம் என ரீமேக் ஆகி வெளியாகியுள்ளது.

Dont compare Kamal and Mohan Lal, says Jeethu Joseph

படத்தை பெரும்பாலானோர் பாராட்டினாலும், மோகன் லால் - மீனா நடிப்பை, கமல் - கவுதமி நடிப்போடு ஒப்பிட்டு பேசினர், எழுதினர்.

குறிப்பாக சமூக வலைத் தளங்களில் இந்த மாதிரி ஒப்பீடு அதிக அளவில் காணப்பட்டது. இதுகுறித்து இரு படங்களையும் இயக்கிய ஜீது ஜோசப்பிடம் கேட்டோம். அதற்கு அவர் பதிலளிக்கையில், "இருவருமே பெரும் கலைஞர்கள். ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள்.

நடிப்பில் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி உள்ளது. மோகன்லாலும் கமலும் அவரவர் பாணியில் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். மீனாவின் பாத்திரத்தில் கவுதமியை நடிக்க் கேட்டது நான்தான். அவர் நடித்தது அந்தப் பாத்திரத்துக்கு வேறு வண்ணத்தைத் தந்தது," என்றார்.

 

பாகுபலி என்ற யானையின் கால்களுக்கிடையில்...

தமிழ், தெலுங்கு தேசங்களில் எங்கு திரும்பினாலும் பாகுபலிமயம்... ஏதோ பொது விடுமுறை விட்ட மாதிரி தியேட்டர்களும் அவற்றைச் சார்ந்த இடங்களிலும் திருவிழாக் கூட்டம்.

குறிப்பாக மால்கள் அமைந்துள்ள சாலைகளில் வாகன நெரிசல் மூச்சுத் திணற வைக்கிறது. எல்லாம் பாகுபலி மகிமை.

Bagubali kicked out small Tamil movies from malls

இந்த கோலாகலத்துக்கிடையில் ஒரு வருத்தம் தயாரிப்பாளர்களுக்கு...

அது பாகுபலி படத்துக்காக தூக்கப்பட்ட அல்லது காட்சிகள் குறைக்கப்பட்ட தங்களின் படங்களை நினைத்துத்தான்.

கடந்த சில வாரங்களாக குறைந்தது நான்கு அல்லது ஐந்து படங்கள் வெளியாகி வருகின்றன கோடம்பாக்கத்தில். தெலுங்கிலும் இதே நிலைதான்.

கடந்த வெள்ளிக்கிழமை பாபநாசம், பாலக்காட்டு மாதவன், பேபி, ஒரு தோழன் ஒரு தோழி மற்றும் பரஞ்சோதி போன்ற படங்கள் வெளியாகின. இந்த 5 படங்களுமே நல்ல மற்றும் பார்க்கக் கூடிய வகைப் படங்களே. பாபநாசத்துக்கு 400க்கும் மேற்பட்ட அரங்குகள் கிடைத்தன. பாலக்காட்டு மாதவனுக்கு 150-க்கும் மேற்பட்ட அரங்குகள் கிடைத்தன.

மற்ற படங்கள் கிடைத்த அரங்குகளில் வெளியாகின.

இன்று பாகுபலி 600 அரங்குகளில் தமிழ்நாட்டில் வெளியானது. ஆந்திராவில் 1500 அரங்குகளில் வெளியானது.

பாபநாசம் ஓடிக் கொண்டிருந்த பல அரங்குகளிலிருந்து அந்தப் படம் தூக்கப்பட்டு, அவற்றில் பாகுபலி வெளியிடப்பட்டுள்ளது. பாலக்காட்டு மாதவன் ஓடும் அரங்குகளில் காட்சிகள் குறைக்கப்பட்டு அவற்றில் பாபநாசம் வெளியிடப்பட்டுள்ளது. மல்டிப்ளெக்ஸ்களில் பெரும்பாலானவை பாகுபலிக்கே முன்னுரிமை தந்துள்ளன.

இதனால் சிறு படங்கள் நிலைமை ரொம்பவே சிரமமாகிவிட்டது. இதுகுறித்து பாலக்காட்டு மாதவன் படத்தின் தயாரிப்பாளர் லாரன்ஸ் கூறுகையில், "இந்த நிலைமைக்கு யாரை குற்றம் சொல்வதென்றே தெரியவில்லை. பாகுபலி மாதிரி பிரமாண்டங்கள் வரும்போது எங்களை மாதிரி சின்னப் படங்களின் நிலைமைதான் கஷ்டமாகிவிடுகிறது. படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்து படமும் பிக்கப்பாகி ஓடும் நேரத்தில் இப்படி நேர்ந்துவிட்டது. இந்த பிரமாண்டத்துக்கு மத்தியிலும் எங்கள் படம் ஓடிக் கொண்டிருப்பதை நினைத்து ஆறுதல் அடைய வேண்டியதுதான். அடுத்த வாரம் நிலைமை மாறும்," என்றார்.

 

அண்ணனும், தம்பியும் அடுத்தடுத்து ஆப்பு வச்சிட்டாங்களே.. புலம்பும் வாரிசு இயக்குநர்

சென்னை: நண்பர்களைக் கொண்டு இயக்கிய தலைநகர் படத்திலேயே சிக்சர் அடித்து அனைவரையும் அவுட் ஆக்கியவர் இந்த வாரிசு இயக்குநர். இவர் கோட் நடிகர் படம் உட்பட அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்தார்.

இந்நிலையில், பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சாப்பாட்டு படம் ஒன்றை தம்பி நடிகரை வைத்து இயக்கினார். பில்டப்புகளுக்கு தக்கபடி படம் ஓடவில்லை.

எனவே, அடுத்ததாக வெற்றிப் பட நாயகனாக வலம் வரும் அண்ணனை இயக்கினார். பேய், பூதம் என எவ்வளவோ பிலிம் காட்டியும் அந்தப் படமும் எதிர்பார்த்தபடி ஓடவில்லை.

அடுத்தடுத்து படத் தோல்விகளால் இந்த இயக்குநரிடம் கதை கேட்கக் கூட மற்ற நடிகர்கள் நேரம் தர மறுக்கிறார்களாம். இதனால் உடனடியாக ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இயக்குநர் இருக்கிறார். இந்தப் படத்தை முன்னணி நடிகர்கள் இல்லாமல் எடுக்க அவர் முடிவு செய்துள்ளாராம்.

தமிழ் சினிமாவில் தனக்கிருந்த பெயரை தம்பியும், அண்ணனும் அடுத்தடுத்து நடித்து ஆப்பு வைத்து விட்டார்களே என பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பி வருகிறாராம் இந்த இயக்குநர்.

 

பிச்சைக்காரி வேஷம்னாலும் ஓகேதான்… ஆனா அவார்டு வாங்கணும்

பிரபல சேனல்களில் தொகுப்பாளினியாக இருக்கும் அந்த ‘ஷா'விற்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதுவரை 15 படங்களில் நடித்து முடித்து விட்டார் எல்லாமே கேரக்டர் கதாபாத்திரங்கள்தான்.

ஹீரோயினாக அழைப்பு வந்தால் பெரிசா ஒரு கும்பிடு என்று கூறும் அந்த தொகுப்பாளினிக்கு தற்போது கடவுள் பட இயக்குநரின் கரகாட்ட படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

Ready for even a begger rols, says a compere

டிவியில் தொகுப்பாளினியாக இருந்தாலும் சீரியலில் நடிக்க ஆசையில்லை என்று கூறும் அந்த ‘ஷா'விற்கு சினிமாவில் ஹீரோயின் ஆக நடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசையில்லையாம். பிச்சைக்காரி வேஷம் கொடுத்தாலும் ஓகேதான் என்னோட கேரக்டர் வெயிட் ஆ இருக்கணும் என்று கூறும் இவருக்கு நடிப்பில் தேசிய விருது வாங்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறதாம்.

பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணும்

டிவி நடன நிகழ்ச்சியில் நடனமாடி தொகுப்பாளினியாக உயர்ந்தவர் அந்த மகிழ்ச்சியான சீரியல் நடிகை. தற்போது சினிமாவில் நடித்து வரும் இவருக்கும் கடவுள் பட இயக்குநர்தான் வாய்ப்பு கொடுத்து வருகிறார். கரகாட்டக்காரியாக துணை ஆட்டம் போட்டாலும் ஹீரோயின் ஆக வேண்டும் என்பதால் ‘தி' நடிகையின் ஆசையாம்.

ஏற்கனவே பிக் அப் நடிகரின் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்தார். தற்போது சினிமா வாய்ப்புகள் வருவதால் அதில் கவனம் செலுத்தப்போவதாக கூறும் ‘தி' நடிகை, இனிமேல் சீரியல்களின் நடிக்கமாட்டேன் என்றும் சபதம் எடுத்துள்ளாராம்.

 

பாகுபலிக்கு கர்நாடகாவிலும் பெரும் வரவேற்பு.. தியேட்டர் கண்ணாடி உடைப்பு

பெங்களூர்: பாகுபலி திரைப்படத்துக்கு கர்நாடகாவிலும் ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்து வருகின்றனர். ரசிகர்கள் டிக்கெட் எடுக்க முந்தியடித்து முயன்றபோது தியேட்டர் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவமும் இங்கு நடந்துள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்ட படைப்பாக வெளியாகியுள்ளது பாகுபலி திரைப்படம். பெங்களூரில் 25 தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. பெரும்பாலும் தெலுங்கு மொழியிலும், சில தியேட்டர்களில் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் இப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

Bahubali gets huge support in Karnataka too

இதேபோல கர்நாடகாவின் பல நகரங்களிலும் பாகுபலி இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. ஆந்திராவை ஒட்டிய கர்நாடக மாவட்டங்களில் அதிக தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. கன்னட ரசிகர்களுக்கும் தெலுங்கு எளிதில் விளங்கும் என்பதால், தெலுங்கு ரசிகர்களோடு சேர்ந்து, அவர்களும் தியேட்டர்களில் முந்தியடிக்கின்றனர்.

ராய்ச்சூர் நகரிலுள்ள பூர்ணிமா தியேட்டரில், இன்று காலை காட்சியின்போது, டிக்கெட் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சத்தால், ரசிகர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கியடித்தனர். இதனால், தியேட்டரின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. சில ரசிகர்கள் அந்த ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து சென்றனர்.

கோலார் நகரில், உள்ள நாராயணி தியேட்டரில், ஒரு டிக்கெட் விலையை ரூ.500 என நிர்ணயித்தும், அங்கு கூட்டம் அலைமோதுகிறது. கதாநாயகன் பிரபாஸ், பிரமாண்ட கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

பெங்களூரின் பிரபல ஊர்வசி தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னட திரையுலக முக்கிய பிரமுகர்கள் பலரும் இங்கு வந்து சினிமா பார்த்தனர். மெஜஸ்டிக் பகுதியிலுள்ள பூமிகா தியேட்டரில், நடிகர்களுக்கு மட்டுமின்றி, இயக்குநர் ராஜமவுலிக்கும் பிரமாண்ட கட்-அவுட் அமைக்கப்பட்டு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இயக்குநர் ஒருவருக்கு கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது பெங்களூரில் அனேகமாக இதுதான் முதல்முறை என்கிறார்கள். கர்நாடகாவில் முதல் காட்சி காலை 7 மணி முதல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

 

“கத்துக்குட்டி” யால் சேற்றில் மாட்டிக் கொண்ட ஸ்ருஷ்டி

சென்னை: மேகா படத்தில் புத்தம்புது காலை பொன்னிற வேளை என்று அஷ்வினுடன் கன்னத்தில் குழிவிழ ஆடிப் பாடிய நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, கத்துக்குட்டி படப்பிடிப்பின் போது சேற்றில் இறங்கி மாட்டிக் கொண்டாராம்.

உடனே பதறி விடாதீர்கள் என்ன நடந்தது என்று பார்ப்போம், புதுமுக இயக்குநர் சரவணன் இயக்கும் படம் கத்துக்குட்டி. நரேன், ஸ்ருஷ்டி இவர்களுடன் சூரியும் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் வேகமாக நடந்து கொண்டிருந்த போது, ஒரு பாடல் காட்சிக்காக ஸ்ருஷ்டியை சேற்றில் இறங்கி நாற்று நடச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சரவணன்.

மும்பையில் பிறந்து வளர்ந்த ஸ்ருஷ்டிக்கு அரிசியே தெரியாது அவரிடம் போய் நாற்று நடச் சொன்னால் பாவம் என்ன செய்வார், தயங்கித் தயங்கி நின்றிருக்கிறார். இதைப் பார்த்த இயக்குநர் உடனே கிராமத்துப் பெண்கள் சிலரை வரவழைத்து அவர்கள் உதவியுடன், ஸ்ருஷ்டியை வயலில் இறக்கி விட்டிருக்கிறார்.

Kathukutty Movie-Shooting Spot

வயலில் இறங்கிய ஸ்ருஷ்டி கிராமத்துப் பெண்கள் சொல்லிக் கொடுத்தபடி, நாற்று நட்டு இயக்குனரிடம் பாராட்டு வாங்கி விட்டார். ஆனால் அதன்பிறகு தான் ஆரம்பித்தது சிக்கல், வெளியே வர காலை எடுத்த ஸ்ருஷ்டி கால்கள் இரண்டும் சேற்றில் புதைந்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டாராம்.

கால்களை வெளியே எடுக்க முடியாமல் ஸ்ருஷ்டி தத்தளிக்க, ஒருவழியாக கிராமத்தினரும் படக்குழுவினரும் வயலுக்குள் இறங்கி ஸ்ருஷ்டியை மீட்டிருக்கிறார்கள்.

அவ்வளவு தான் ஸ்ருஷ்டி காப்பற்றப்பட்டு விட்டார்...

 

பாகுபலி.. முதல் நாள் வசூல் ரூ. 30 கோடியைத் தாண்டும் - இது பாக்ஸ் ஆபீஸ் கணிப்பு!

சென்னை: இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இன்று வெளியாகி இருக்கும் பாகுபலி படம், முதல் நாள் முடிவில் 30 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா என ஏராளமான தென்னிந்திய நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் படம் பாகுபலி, 2 பாகங்களில் இன்று முதல் பாகம் உலகெங்கும் வெளியாகி உள்ளது.

Baahubali' First Day Collection at Box Office

படம் வெளியான எல்லா மாநிலங்களிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி அனைத்து மொழிகளிலும் படம் தியேட்டர்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் போர்டு வெளியில் தொங்கும் காட்சியை இன்று காண முடிகிறது, இதனால் தியேட்டர் அதிபர்கள் பலரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

இந்தியா முழுவதும் சுமார் 4000அரங்குகளில் படம் வெளியாகி இருக்கிறது, இதைத் தவிர அமெரிக்காவில் கிட்டத்தட்ட 118 திரையரங்குகளில் படம் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவில் இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமாக படம் வசூலித்து இருக்கிறது என்று கூருகிறார்கள்.

இந்தியா முழுவதும் பாகுபலி எவ்வளவு அள்ளி இருக்கிறது என்று இன்று இரவு அல்லது நாளைக் காலையில்தான் தெரியவரும். எனினும் அனைத்து திரையரங்குகளிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக படம் ஓடிக் கொண்டிருப்பதால், இன்று சுமார் 30 கோடியை பாகுபலி வசூலிக்கலாம் என்று திரையுலகைச் சார்ந்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பாகுபலி படத்தின் முதல் பாகம் 250 கோடியில் எடுக்கப்பட்டுள்ளது, இதே வேகத்தில் சென்றால் வசூலில் போட்ட பணத்தை விட இருமடங்குத் தொகையை பாகுபலி எடுத்து விடும்.

 

பாகுபலி.. பேசித் தீராத பிரம்மாண்டம்!

Rating:
4.5/5
எஸ் ஷங்கர்

பாகுபலி... இந்த ஆண்டு முழுவதும் பேசினாலும் தீராத பிரமிப்பு இந்தப் படம்.

டென் கமாண்ட்மென்ட்ஸ், லாரன்ஸ் ஆப் அரேபியா, க்ளாடியேட்டர், அவதார் என பிரம்மாண்டத்துக்கும் செய்நேர்த்திக்கும் ஹாலிவுட் படங்களை இந்தியர்கள் உதாரணம் காட்டி வந்த காலம் மலையேறிவிட்டது.

இதோ.. நம்மிடமே ஒரு அழுத்தமான அற்புதமான உதாரணம் இருக்கிறது... ராஜமவுலியின் பாகுபலி!

Bahubali.. Grandeur Unlimited!

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் எத்தனையோ மகா சாகசக் கதைகள் புதைந்து கிடக்கின்றன. கரிகாலன்கள், ராஜராஜன்கள், மருது சகோதரர்கள், மகாபலிகள், புலிகேசிகள், அசோகர்கள், கனிஷ்கர்கள் என வம்சங்களைத் தோண்டத் தோண்ட கிடைக்கும் கதைகளுக்கு நிகராக எத்தனை அதியுச்சக் கற்பனைகளும் இருக்க முடியாது. அந்த அழுத்தமான நம்பிக்கைதான் இந்த பாகுபலி.

ஈர்ப்பான காட்சிகள், சம்பவங்களற்ற பிரம்மாண்டத்துக்கு எந்த மதிப்பும் இருப்பதில்லை. ஆனால் பாகுபலியில் ராஜமவுலி காட்டியிருக்கும் பிரம்மாண்டம் கதையோடும் காட்சிகளோடும் இயல்பாகப் பொருந்திப் போவதால் ஆச்சர்யத்தில் வாய் பிளக்கிறோமே தவிர, பிரம்மாண்டத்தை மட்டும் தனித்துப் பார்க்க முடியவில்லை.

Bahubali.. Grandeur Unlimited!

உலகிலேயே பிரமாண்டமானது, அழகு மிக்கது இயற்கைதான். அந்த இயற்கையை இன்னும் பேரழகுபடுத்திக் காட்டியிருக்கிறார்கள் ராஜமவுலியும் அவரது ஒளிப்பதிவாளர் செந்தில்குமாரும். அதிரப்பள்ளி அருவியை நேரில் பார்த்தபோது கூட வராத ஆச்சர்யமும் ஆனந்தமும் இந்தப் படத்தில் கிடைத்தது.

கோட்டையும் கொத்தளமும் போர்க் கருவிகளும் போர்ப் படைகளும்... ஒரு கால எந்திரத்தில் பயணித்து பாகுபலியின் காலத்துக்கே போன உணர்வைத் தந்தன. எங்கும் சிறு பிசிறு கூட தெரியாத அளவுக்கு அத்தனை நேர்த்தியாக காட்சிகளைச் செதுக்கியிருக்கிறார்கள் ராஜமவுலி அன்ட் டீம். ஏ.. அப்பா.. எத்தனை தத்ரூபமான ரத்தமும் சதையும் தெறிக்கும் மாபெரும் யுத்தகளம்!

Bahubali.. Grandeur Unlimited!

இந்தப் படத்தில் நடித்த யாரும் அந்தப் பாத்திரத்தை மீறி இம்மியளவுக்குக் கூட மிகையாக நடிக்கவில்லை. பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாஸர், ரம்யா கிருஷ்ணன் என ஒவ்வொருவருமே வாழ்நாளில் சொல்லிக் கொள்ளும் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். தமன்னாவின் அழகையும் நடிப்பையும் பாராட்டி இன்னும் நாலு பாரா எழுதலாம்.

ஒளிப்பதிவாளரின் தோளில் கைபோட்டுக் கொண்டே வேலை வாங்கியிருப்பார் போலிருக்கிறது இயக்குநர். ஒவ்வொரு காட்சியிலும், இப்படி ஒரு கோணத்திலும் இதைப் பார்க்க முடியுமா என்ற பிரமிப்பு மேலோங்குகிறது. எம்எம் கீரவாணியின் இசை இந்தப் படத்தின் காட்சிகளுக்கு இன்னும் உயிரோட்டம் தருகிறது.

Bahubali.. Grandeur Unlimited!

2.40 மணி நேரப் படம்... ஆனால் 'என்னங்க.. படம் அதுக்குள்ள முடிஞ்சிருச்சே... அந்த இன்னொரு பார்ட் காட்சிகளையும் சேர்த்தே ரிலீஸ் பண்ணிருக்கலாம்!' என்று சிலர் அடித்த கமெண்ட்தான் இந்தப் படத்துக்குக் கிடைத்த உச்சபட்ச பாராட்டாக இருக்கும் என நம்புகிறேன்.

நூறாண்டு கண்ட இந்திய சினிமாவுக்கு மகுடம் சூட்டியிருக்கிறார் எஸ் எஸ் ராஜமவுலி.

அடுத்த பாகம் எப்போது வரும்? ஆவலுடன் காத்திருக்கிறது இந்திய சினிமா!

 

சூறாவளி வேகத்தில் சுழன்று நடிக்கும் கமல்

சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு இருக்கும் நடிகர் யாரென்று கேட்டால், நிச்சயமாகக் கமலைக் கைகாட்டலாம். அந்த அளவிற்கு சூறாவளி வேகத்தில் தன் படங்களை வேகமாக முடித்துக் கொண்டிருக்கிறார் கமல்.

உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம் இந்த மூன்று படங்களில் உத்தமவில்லன் மற்றும் பாபநாசம் என 2 படங்கள் ஏற்கனவே வெளியாகி விட்டன, பாபநாசம் தற்போது திரைகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Kamal Haasan's Movie is Fast Progressing

பாபநாசம் படத்தை வெறும் 39 நாட்களில் நடித்து முடித்த கமல், தற்போது அடுத்த படமான தூங்காவனத்தையும் முடிக்கப் போகிறார். வெறும் இரண்டே மாதங்களில் தமிழ்,தெலுங்கு என 2 மொழிகளிலும் படத்தை எடுத்து முடித்திருக்கிறார் கமல்.

இந்த வேகம் மற்றவர்களை வியப்பில் ஆழ்த்த என்ன காரணம் என்று நெருங்கி விசாரித்ததில், கமல் அடுத்து ஒரு மிகப்பெரிய படத்தைக் கையில் எடுக்கப் போகிறாராம். கண்டிப்பாக அந்தப் படம் 2 வருடங்கள் இழுத்து விடும் எனவே அந்த இடைவெளியைச் சமாளிக்கத்தான் இந்த ஓட்டம் என்கிறார்கள்.

உலகநாயகன்னு சும்மாவா சொன்னாங்க....