இசைஞானி மகனும் வைரமுத்து வாரிசும்..!

Yuvan Shankar Raaja Joins With Kabilan

கடைசியில் அந்த சந்தோஷ வதந்தி உண்மையாகிவிட்டது. ஆம்... இசைஞானியின் இளையமகன் யுவன் சங்கர் ராஜாவும், வைரமுத்துவின் இளையமகன் கபிலனும் கரம் கோர்த்துவிட்டார்கள் திரையுலகில். அதுவும் இசைஞானியின் ஒப்புதலுடன்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்துக்காகத்தான் இருவரும் இணைந்திருக்கிறார்கள்.

யுவன் இசையில் முதல்முறையாக கபிலன் வைரமுத்து இந்தப் படத்தில் பாடல் எழுதப் போகிறார்.

இசைஞானி இளையராஜாதான் வைரமுத்துவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து தன் ஆதரவை வைரமுத்துவுக்கு பல ஆண்டுகாலம் வழங்கி வந்தார்.

இருவரும் இணைந்த படங்கள் அத்தனையிலும் இசை ராஜ்யம் கொடிகட்டிப் பறந்தது. ஆனால் கடலோரக் கவிதைக்குப் பிறகு, இருவரும் பிரிந்துவிட்டனர். அன்று தொடங்கிய பிரிவு இருவருக்குமிடையே இந்த நிமிடம் வரை தொடர்கிறது.

பாரதிராஜா படத்தில் இருவரும் இணையப் போகிறார்கள் என்று பலரும் கூறிவந்த நிலையில், அது நடக்காமலே போய்விட்டது.

இந்த நிலையில்தான் தந்தைகளால் இயலாத ஒன்றை அவரது தனயன்கள் செய்திருக்கிறார்கள். இந்த இணைவுக்கு இசைஞானியே சம்மதம் தெரிவித்ததுதான் ஹைலைட்!

இந்தத் தொடக்கம், இசைஞானி - கவிப்பேரரசு கூட்டணிக்கு வழிவகுக்கட்டும்!

 

இந்திக்கும் போகிறது 'ஐ'?

Shankar Remake I Hindi   

தனது ஐ படத்தை பாலிவுட்டிலும் ரிலீஸ் பண்ணத் திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர். ஆனால் வழக்கம்போல டப்பிங் படமாக அல்ல... ரீமேக் ஆக!

ஆனால் இந்திப் பதிப்பில் நடிக்கப்போவது விக்ரம் அல்ல. மகேஷ் பாபுவிடம் பேசிக் கொண்டிருக்கிறாராம் ஷங்கர்.

ஷங்கர் இதுவரை உருவாக்கிய அனைத்துப் படங்களுமே இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன. முதல்வன் மட்டும் நாயக் என்ற பெயரில் ரீமேக் ஆகி தோல்வியடைந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஷங்கர் உருவாக்கிய சிவாஜி, எந்திரன் இரண்டுமே பாலிவுட்டை கலக்கின.

இப்போது விக்ரம் - எமி ஜாக்ஸன் நடிக்கும் ஐ படத்தை பிரமாண்டமான ரொமான்டிக் த்ரில்லராக உருவாக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு இந்தியிலும் ஏக விசாரிப்புகள் தொடர்வதாலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளாராம் ஷங்கர்.

மகேஷ் பாபு- எமி ஜாக்ஸனை வைத்து இந்தப் படத்தை செய்யப் போகிறார் ஷங்கர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஷங்கரின் அலுவலகத்தில் தொடர்பு கொண்டபோது, "இது வெறும் வதந்திதான் என்றனர். ஷங்கருக்கு அப்படி எந்தத் திட்டமும் இல்லை. அப்படியே ஐயை இந்தியில் வெளியிட்டாலும், அதை டப் செய்வாரே தவிர, நேரடியாக ரீமேக் செய்யமாட்டார்," என்றனர்.

 

'விளையாடிய' பஞ்சாயத்து... வேடிக்கை பார்த்த கவர்ச்சி நடிகை!

காலம் போன காலத்துல இந்தாளுக்கு தேவையாய்யா இது என்று சினிமாக்காரர்கள் தலையிலடித்துக் கொண்ட ஒரு மேட்டர் இது.

தமிழ் சினிமாவில் பஞ்சாயத்து நடிகர் என்றாலே இவரைத்தான் அடையாளம் காட்டுவார்கள். இவரது குடும்ப விவகாரத்தை மகளே சந்தி சிரிக்குமளவுக்கு போட்டுடைத்தது நினைவிருக்கலாம். பார்ட்டிக்குப் பேர் போன இந்த பஞ்சாயத்துப் பார்ட்டி, ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

படத்துக்குப் பெயர் '... ஊஞ்சலாடுகிறது'.

தலைப்புக்கு ஏற்ற மாதிரி பேரன் பேத்தியெல்லாம் பார்த்து கொள்ளுப் பேத்திக்கு காத்திருக்கும் நடிகரின் வாலிபம் ஊஞ்சலாட ஆரம்பித்திருக்கிறது.

இந்தப் படத்தில் நாயகியாக நடிப்பவர் தொப்பையழகி என்று செல்லமாக சொல்லப்படும் வடக்கத்திய நடிகை. 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு ரவுண்ட் வந்து ஓய்ந்து, சமீபத்தில்தான் மகாபாரத வில்லன் பெயரில் வந்த படத்தில் கீப் வேடத்தில் தோன்றியிருந்தார்.

படப்பிடிப்புத் தளத்தில் ஷாட் முடிந்த கேப்பில், நடிகை ஓய்வாக ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க, நடிகர் பக்கத்தில் போய் உட்கார்ந்திருக்கிறார்.

மெதுவாக நாயகியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, அவரிடம் சில்மிஷத்தை ஆரம்பித்துள்ளார் நடிகர். நடிகையோ அதை ஒரு மேட்டராகவே நினைக்கவில்லையாம். நடிகரோ நேரம் ஆக ஆக வேகமாக வேலை பார்க்கத் தொடங்கிவிட்டாராம். நடிகைக்கு கொஞ்ச நேரத்தில் சிரிப்பு வந்துவிட்டதாம். நான் பார்க்காத விளையாட்டா என்ற தோரணையில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, மூச்சு வாங்கியபடி நடிகர் விளையாட, சிரிப்பாய் சிரித்துப் போனதாம் செட்டில்!!

மேலும் கிசுகிசு செய்திகள்

 

குஷ்புவின் 'புதுக் குடும்பம்'!

Kushboo Lives On Twitter Literally Aid0091

குஷ்புவின் புதுக் குடும்பம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்கு ட்விட்டர் அவருடன் இணை பிரியாத ஒன்றாகி விட்டதாம். சின்னச் சின்ன விஷயங்களைக் கூட ட்விட்டரில் போட்டு வைத்து விடுகிறார்.

காலையில் எழுந்து பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு ரெடி செய்வது முதல் இரவு தூங்கப் போவது வரை என்னென்ன நடக்கிறதோ அத்தனையையும் ட்விட்டரில் சொல்லி விடுகிறார் குஷ்பு.

ஏன் இப்படி என்றால், எனது பிளாக்பெர்ரியிலிருந்து மெசேஜ் செய்வது எளிது, அதனால்தான் என்று கூறிச் சிரிக்கிறார் குஷ்பு. ட்விட்டர் தற்போது குஷ்புவின் விரிவுபடுத்தப்பட்ட ஒரு குடும்பமாகவே மாறிப் போயுள்ளது. ஒரு நாளின் பாதி நேரத்தை ட்விட்டரிலேயே அவர் கழிக்கிறாராம்.

என்னிடம் பலரும் பல கேள்விகளை, சந்தேகங்களை, விளக்கங்களைக் கேட்கிறார்கள். அதற்கு நானும் பொறுமையாக ட்விட்டர் மூலம் பதிலளிக்கிறேன். என்னையும் ட்விட்டரையும் பிரித்துப் பார்க்கவே முடியாது.

மேலும் எனது குடும்பத்தில் நடக்கும் சுவாரஸ்யங்களையும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். எனது குடும்பத்தாரிடம் சொல்ல முடியாத - காரணம் இதெல்லாம் போர்ம்மா என்று அலுத்துக் கொள்வார்கள் - விஷயங்களை ட்விட்டர் மூலம் மற்றவர்களுக்கு சொல்கிறேன் என்று கூறி சிரிக்கிறார் குஷ்பு.

விரைவில் பார்த்த ஞாபகம் இல்லையே என்ற கலைஞர் டிவி சீரியல் மூலம் சின்னத் திரை ரசிகர்களை சந்திக்க வருகிறாராம் குஷ்பு. இந்த சீரியலில் அவர் வித்தியாசமான வில்லத்தனம் செய்துள்ளாராம். திரில்லர் சீரியலாக இது அமைந்துள்ளதாம். இது குஷ்புவின் சொந்தத் தொடராம்.

குஷ்புவின் டிவிட்டர் பக்கம்

 

3 நாளில் ரூ 1.2 கோடி... பாகனை வாங்கியது சன் டிவி!

Sun Tv Acquires Paagan Rights   

ஸ்ரீகாந்த் நடித்த பாகன் படத்தை விலைக்கு வாங்கியது சன் டிவி.

கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான படம் பாகன். ஸ்ரீகாந்த், ஜனனி நடித்த இந்தப் படத்தை அஸ்லம் இயக்கியிருந்தார்.

நகைச்சுவையை மையப்படுத்தி வெளியான இந்தப் படம் முதல் மூன்று நாளும் நல்ல வரவேற்பைப் பெற்றது. சென்னையில் முக்கியத் திரையரங்குகளில் 90 சதவீத கூட்டத்துடன் ஓடியது.

முதல் மூன்று நாளில் இந்தப் படம் ரூ 1.2 கோடியை சென்னையில் மட்டும் ஈட்டியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். பாகன் போன்ற ஒரு நடுத்தர பட்ஜெட் படத்துக்கு இது மிகப்பெரிய விஷயமாகும்.

படத்துக்குக் கிடைத்த இந்த ஓபனிங் காரணமாக, சன் டிவி இதன் ஓளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளது.

ஸ்ரீகாந்துக்கு, அவர் இழந்த மார்க்கெட்டை இந்தப் படம் பெற்றுத்தந்துள்ளது என்பதே பாக்ஸ் ஆபீஸில் கருத்தாக உள்ளது.

 

மனதில் நிற்கும் நடிகையாக இருக்க நினைக்கிறேன் – அகிலா

Mistress Spice Akila

சின்னத்திரையோ, சினிமாவோ இரண்டையும் சரியாக பேலன்ஸ் நடித்து பெயரையும், புகழையும் சம்பாதித்துக் கொண்டிருப்பவர் அகிலா. இவற்றோடு சீசன்ஸ் ஈவன்ட்ஸ் என்ற நிறுவனமும் நடத்திக் கொண்டிருக்கிறார். சின்னத்திரையில் ரோஜாக்கூட்டம்,சிவசக்தி, கோலங்கள், திருமதி செல்வம், இளவரசி, உதிரிப்பூக்கள் என பிரபலமான தொடர்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் சினிமாவில் சரவணன், மனதோடு மழைக்காலம், கண்ணும் கண்ணும், பொல்லாதவன், அரசாங்கம், திருவண்ணாமலை, வேதா என பல திரைப்படங்களில் தங்கை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் அகிலா.

தற்போதைக்கு சன் தொலைக்காட்சியில் திருமதி செல்வம் தொடரில் திரில் அனுபவங்களுடன் போய்க்கொண்டிருக்கிறது அகிலாவின் வாழ்க்கை. உதிரிப்பூக்கள் தொடரில் மாமனுக்காக ஏங்கும் பெண்ணாக சோக கீதம் வாசிக்கிறார். தன்னுடைய சின்னத்திரை, சினிமா அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் அகிலா படியுங்களேன்.

இப்பொழுது சினிமாவில் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்து வருகின்றன. சினிமாக்களுக்கு இருக்கிற வரவேற்பைப் போல் சீரியல்களுக்கான வரவேற்பும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனாலும், சீரியல்களின் கதை களம் இன்னும் மாறவில்லை. அதை மாற்றினால் சீரியல்களுக்கான வரவேற்பு இன்னும் கூடும்.

சீரியல்களின் எல்லைகள் சினிமாவைப் போல் இப்போது விரிந்திருக்கிறது. சீரியல்களுக்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் உள்பட அனைத்தும் மாறியிருக்கிறது. பல நாடுகளில் ஷூட்டிங் நடத்தி சினிமாவில் சொல்லுகிற மெசேஜை ஒரு வீட்டில் வைத்து சீரியல் சொல்லுகிறது. அவ்வளவுதான் சினிமாவுக்கும் சீரியலுக்கும் உள்ள வித்தியாசம். நாளுக்கு நாள் பெருகி வரும் டி.வி. சேனல்கள் போட்டி போட்டு சீரியல்களை வழங்கி வருகிறது. இந்த போட்டி என்னை போன்ற நடிகைகளுக்கு நல்ல உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. போட்டியிடும் எந்த துறையும் வருங்காலத்தில் சிறந்து விளங்கும். தற்போது திருமதி செல்வம் தொடரிலும், உதிரிப்பூக்கள் தொடரிலும் நடித்து வருகிறேன். இரண்டுமே சவால் நிறைந்த கேரக்டர்கள் பொழுது போக்கு என்று எனக்கு தனியாக எதுவும் கிடையாது. நடிப்பதே பொழுதுபோக்காக இருப்பதால் எப்போதும் அதை பற்றிதான் சிந்தனைகள் இருக்கிறது.

இளவரசி தொடரில் வில்லத்தனம் செய்த கயல்விழி கதாபாத்திரம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது அதற்காக வில்லி கதாபாத்திரம்தான் செய்வேன் என்றில்லை. மக்களின் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து செய்வேன். சினிமாவில் நல்ல கேரக்டர்கள் கிடைக்க கொஞ்சம் காலம் ஆகும். அதற்காக காத்திருக்க முடியாது. எனவே சீரியல்களில் கிடைக்கும் திருப்தியான கதாபாத்திரங்களை செய்து வருகிறேன்.

சீசன்ஸ் ஈவன்ட்ஸ்'ங்கிற பேர்ல நானும் நண்பர் பிரதாப்பும் சேர்ந்து சென்னை தி.நகரில் நிறுவனம் ஒன்று வச்சிருக் கோம். ஸ்டார் நைட், ஸ்போர்ட்ஸ் ஸ்டார் புரோக்கிராம்ன்னு பல புரோக்கிராம்கள் நடத்திக் கொடுத்திருக்கோம். "பிளாக் அண்ட் ஒயிட்' என்ற டைட்டிலில் பழம்பெரும் நடிகர், நடிகைகள் கலந்து கொண்ட "ஸ்டார் நைட்' நிகழ்ச்சியும் நடத்திக் கொடுத் தோம்.

சின்ன நிகழ்ச்சிகளைவிட பெரிய நிகழ்ச்சிகள்ல நிறைய பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும். பிரச்னை வருதேன்னு நினைச்சு செய்த வேலையை பாதியில் விட்டுவிட்டு வந்துடமுடியாது. நான் செய்ய வந்ததை நல்லபடியாக செய்து முடிக்கணும்ங்கிற ஆர்வம் இருந்ததால தான் தனியா நிறுவனம் வச்சு நடத்துகிற அளவுக்கு தைரியமாக முயற்சிக்க முடிகிறது.

பெண்களை எப்படி நடத்தினா அவுங்க சுதந்திரமாக நினைச்ச இலக்கை எட்ட முடியும்ன்னு பெற்றோர்களுக்கு தெரிகிறது. அதனால் பெண்பிள்ளைகளுக்கு கட்டுப்பாட்டினால் தடைகள் அவ்வளவாக இப்போது இல்லை என்று சொல்வேன், என்று அழுத்தமாக சொன்னார் அகிலா.

 

17 வயசுக்கு மாறிய தனுஷ், சோனம் கபூர்!

பள்ளி மாணவன் வேடம் என்றால் தனுஷ் க்கு அல்வா சாப்பிடுவது போலாகிவிட்டது. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 3 போன்ற படங்களைத் தொடர்ந்து இந்தியில் முதன் முதலாக நடிக்கும் ராஞ்சனா திரைப்படத்திலும் பள்ளி மாணவன் கதாபாத்திரம் தனுஷ்க்கு கிடைத்துள்ளது.

sonam dhanush turn 17 again their hindi flick ranjhaana
Close
 
ராஞ்சனா திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஆனந்த் ராய் இயக்குகிறார். தனுஷூக்கு ஜோடியாக சோனம் கபூர் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு காசியில் நடைபெற்றது. காசி மக்கள் கூட்டம் நிறைந்த நகரம். இங்கு படப்பிடிப்பு நடத்துவது சிரமமான காரியம்தான். ஆனால் கதாநாயகன் தனுசும், நாயகி சோனமும் பள்ளி மாணவர்கள் வேடத்தில் இருந்ததால் யாராலும் எளிதாக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து கூறிய இயக்குநர், படப்பிடிப்பின் போது பள்ளிச் சீருடையில் இருந்த தனுஷ், சோனம் கபூர் ஆகியோரை கூட்டத்தினரால் அடையாளம் காண முடியவில்லை. இருவரையும் இச்சீருடையில் பார்க்கையில் மிகவும் இளமையாக இருந்தனர். இதனை நாம் கண்டிப்பாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்றார். இப்படம் காதலின் பின்னணியில் உருவாகி வருகிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 17 வயது பள்ளி மாணவர்களாக நடிக்கும் தனுசுக்கு 29 வயதாகிறது. கதாநாயகி சோனம் கபூருக்கு 27 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பணத்தைக் கொட்டி பெரிதாக்கிய மார்புகளை வெளியில் காட்டியபடி உலா வந்த நடிகை!

Frankie Highlights Her New Assets

லண்டன்: தி ஒன்லி வே இஸ் எஸ்ஸக்ஸ் என்ற டிவி தொடரில் நடித்து வரும் நடிகை பிராங்கி எஸ்ஸக்ஸ் பெரும் பொருட் செலவில் பெரிதாக்கிய தனது மார்புகளை வெளியில் காட்டியடி உலா வந்து அனைவருக்கும் நல்ல 'தரிசனம்' கொடுத்தார்.

24 வயதாகும் பிராங்கி, ஒரு டிவி நடிகை. இவருக்கு பெரும் பலமே இவரது மார்புகள்தான். சமீபத்தில்தான் இதை மேலும் பெரிதாக்கினார். அதற்காக இவர் செலவழித்த தொகை 4.5 ஆயிரம் பவுண்டுகளாகும். இப்போது முன்பை விட பிரமாண்டமாக மாறியுள்ளது பிராங்கியின் மார்பகங்கள். இப்படி பெரும் பணத்தைக் கொட்டி பெரிதாக்கிய தனது மார்பகளை சமீபத்தில் வெள்ளோட்டத்திற்கு விட்டார் பிராங்கி. அதாவது மார்பகங்களின் அழகு வெளியில் தெரியும் வகையிலான உடையுடன் அவர் ஷாப்பிங் வந்து போனார்.

பெரிதாக்கப்பட்ட மார்பகத்துடன் வந்த பிராங்கியை பலரும் உற்றுப் பார்த்து குதூகளித்தனர். பிராங்கியும், அனைவருக்கும் மார்பகங்கள் தெளிவாகத் தெரியும் வகையில் குனிவதும், நிமிர்வதுமாக இருந்தார்.

தனது மார்பகப் பெருக்கம் குறித்து பிராங்கி கூறுகையில், இப்போது எனது மார்பகங்கள் படு நேர்த்தியாக உள்ளன. இதை நான் ரசிக்கிறேன். இப்போதுதான் என்னால் ஒரு முழுமையான பெண்ணாக உணர முடிகிறது என்றார்.

நீல நிற ஜீன்ஸ் அணிந்தும், கருப்பு நிற வெஸ்ட்டும் போட்டுக் கொண்டு படு கூலாக தனது மார்பகத்தை வெளிக்காட்டியபடி வந்து போனார் பிராங்கி. மேலும் அவர் கொண்டு வந்திருந்த ஒரு பெரிய சூட்கேஸை கீழே போட்டும், அதில் உள்ளவற்றை குணிந்து எடுத்தும், கைப்பையை கீழே வைப்பதும், எடுப்பதுமாக அவர் காட்டிய ஷோ... அடடா, அடடா என்று பார்த்தவர்களை ரசிக்க வைத்தது.

எப்படியெல்லாம் பப்ளிசிட்டி தேடுகிறார்கள் அந்த ஊரில்...!