பிரபல மலையாளப் பின்னணிப் பாடகி ராதிகா திலக் புற்றுநோயால் மரணம்

கொச்சி: கேரளாவைச் சேர்ந்த பிரபல பின்னணிப் பாடகியான ராதிகா திலக் புற்றுநோயால் கேரள மருத்துவமனை ஒன்றில் காலமானர்.

கேரள மாநிலம் கொச்சி பிள்ளையா விளையை சேர்ந்தவர் ராதிகா திலக். 45 வயதான இவர் பிரபல மலையாள சினிமா பின்னணி பாடகி. 1991 ஆம் ஆண்டு "ஒற்றையால் பட்டாளம்" என்ற மலையாள சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமான ராதிகா திலக் 70 க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் பாடியுள்ளார்.

Radhika Thilak is dead

இந்த நிலையில் ராதிகா திலக் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

உடனே அவர் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ராதிகா திலக் மரணமடைந்தார். இதைதொடர்ந்து அவரது உடல் கொச்சியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

ராதிகா திலக் மரணமடைந்த தகவல் கிடைத்ததும் மலையாள திரையுலகினர் அங்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பிரபல மலையாள பாடகர்கள் எம்.ஜி.ஸ்ரீகுமார், வேணுகோபால் உள்பட பாடகர்களும் ராதிகா திலக் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இன்று மாலை பாடகி ராதிகா திலக் உடல் அடக்கம் கொச்சியில் நடைபெறுகிறது. ராதிகா திலக்கின் கணவர் சுரேஷ். இவர் தொழில் அதிபராக உள்ளார். இந்த தம்பதிக்கு தேவிகா என்கின்ற ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பாகுபலியின் "சர்ச்சைக்குரிய " காட்சி பற்றி முதன்முறையாக வாய்திறந்த தமன்னா

சென்னை: பாகுபலி படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சி குறித்து முதன்முறையாக கருத்துத் தெரிவித்திருக்கிறார் நடிகை தமன்னா.

Baahubali - The Beginning (Tamil) (U/A): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

பாகுபலி படத்தின் ஒரு பாடல் காட்சியில் நாயகனும், நாயகியும் மிக நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு காட்சி வரும். இதில் நடிகை தமன்னா நாயகன் பிரபாஸுடன் இணைந்து நடித்திருந்தார்.

Movie is the Entertainment not for Analysis - says Tamanna

படம் வந்தபோது விமர்சகர்களால் இந்தக் காட்சி பெரிதும் விமர்சிக்கப்பட்டது, மேலும் இந்தக் காட்சி பலத்த கண்டனத்திற்கும் உள்ளானது.

இது குறித்து படத்தின் இயக்குனரோ, நாயகியோ எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தக் காட்சி பற்றி நடிகை தமன்னா முதன்முறையாக வாய்திறந்து பேசியிருக்கிறார்.

"திரைப்படம் மற்றும் காட்சிகள் குறித்து விமர்சிக்க ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு ஆனால் முடிவில் திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமே.

படங்களை மக்கள் மிகவும் ரசிக்கிறார்கள், மேலும் படங்களில் பெண்ணை அழகாக உயர்த்திக் காண்பிக்கின்றனர். படங்களைப் பார்க்கும்போது ஒருகாட்சியை பார்த்து ரசிக்க வேண்டுமே தவிர அதன் உள்ளே சென்று ஆராயக்கூடாது.

திரைப்படங்கள் பொழுதுபோக்கிற்காக மட்டுமே எடுக்கப்படுகின்றன, ஒரு காட்சியை பார்த்து ரசித்து கருத்துத் தெரிவிக்கலாம். ஆனால் அதன் அடி ஆழம் வரை சென்று ஒரு காட்சியை எப்படி எடுத்தார்கள் என்று அலசி ஆராய்ந்தால் தேவையில்லாமல் மன நிம்மதிதான் கெடும்.

பொதுவாக திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே, ஆராய்ச்சி செய்வதற்கு அல்ல" என்று பாகுபலி படத்தின் காட்சி குறித்து தனது விளக்கத்தை முதன்முறையாக கூறியிருக்கிறார் நடிகை தமன்னா.

தற்போது தோழா படத்தில் நடித்துவரும் தமன்னா, விரைவில் பாகுபலி 2 படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க தெளிவா தான் இருக்கீங்க...

 

மிஷ்கின் இயக்கும் புதிய க்ரைம் த்ரில்லர்

சவரகத்தி படத்தில் நடித்து வரும் இயக்குநர் மிஷ்கின், தனது இயக்கத்தில் அடுத்த புதுப் படத்தை அறிவித்துள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பிசாசு படம் நல்ல வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு தனது புதுப் படத்தை அறிவிக்காமல், 'சவரகத்தி' படத்தில் நடிக்கப் போய்விட்டார்.

இப்போது தனது இயக்கத்தில் அடுத்த புதுப்படத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

Mysskin declares his next project.

இந்தப் படத்துக்கான ஷூட்டிங் வரும் நவம்பரிலிருந்து தொடங்கவிருக்கிறார். ட்ரான்ஸ்வேல்ட் டெலி கம்யூனிகேஷன்ஸ் என்ற புதிய நிறுவனத்தின் மூலம் ரகுநந்தன் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதா நாயகனாக அறிமுகமாக உள்ளார் புது முகம் ஷ்யாம். இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிக , நடிகையர் , தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகியோரின் தேர்வு நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது.

'சவரகத்தி' படத்தின் இடை விடாத படப்பிடிப்புக்கிடையே மிஷ்கின் தனது புதிய படத்தின் கதை, திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கிறார்.

இது ஒரு க்ரைம் த்ரில்லராக உருவாகிறது.

 

இந்த பெங்களூர்க்காரர்தான் கபாலி ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை உருவாக்கியவர்!

செப்டம்பர் 16-ம் தேதி வெளியானது ரஜினியின் கபாலி முதல் தோற்ற போஸ்டர். அடுத்து வந்த நாட்களில் ஊடகங்களை முழுசாக ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தின இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்.

இதுவரை எந்தப் படத்தின் முதல் போஸ்டர்களுக்கும் கிடைக்காத வரவேற்பு இது. இணையத்தில், சமூக வலைத் தளங்களிலிருந்த பலரது இணையப் பக்கங்களிலும் இந்த போஸ்டர்கள்தான் ப்ரொபைல் படங்களாக மாறின.

Vinci Raj, the designer of Kabali shares his experience

இந்த போஸ்டர்களை இத்தனை சிறப்பாக வடிவமைத்தவர் யார் என்று கேட்காதவர்கள் குறைவு.

யார் அந்த டிசைனர்?

அவர் பெயர் வின்சி ராஜ். ரஜினிகாந்தின் மிகத் தீவிர ரசிகர். பெங்களூரில் டிசைனராகத் திகழும் இவர், பிரபல பிராண்டுகளின் விளம்பரங்களை டிசைன் செய்துள்ளார். பெங்களூரில் பரபரப்பேற்படுத்திய ட்ராபிக் போலீசாரின் 'டாக் தெம் டெட்' விழிப்புணர்வு போஸ்டர் டிசைன்கள் இவரது கைவண்ணம்தான்.

Vinci Raj, the designer of Kabali shares his experience

இவரது இன்னொரு விழிப்புணர்வு டிசைன் 'தி குட் ரோட்' ஸ்பைக் ஏசியா 2014-ல் தங்கப் பதக்கம் வென்றது.

கபாலி போஸ்டர் டிசைன்களை உருவாக்கியது பற்றிக் கூறுகையில், "ரஞ்சித், சிவி குமார் படங்களில் பணியாற்றியிருக்கிறேன். திடீர் விபத்து காரணமாக நான் சமீப காலமாக படங்களில் பணியாற்றாமல் இருந்தேன். அப்போதுதான் கபாலி பட டிசைனர் வாய்ப்பை அளித்தார் ரஞ்சித்.

ஆனால் அந்த இடைவெளியில் பல புதிய தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டு அவற்றை கபாலி டிசைனில் காட்டினேன்.

கபாலியில் இதுவரை ரஜினியின் இரு டிசைன்களை மட்டும் காட்டியுளேன். இரண்டுமே கதையோடு தொடர்புடையவை. ஒன்றில் ரஜினி சார் மிக கம்பீரமாக ஒரு சோபாவில் அமர்ந்திருப்பார். இரண்டாவது தனது பகையாளிகளை வீழ்த்தி விட்டு இமயமாய் எழுந்து நிற்பார் ரஜினி.

மொத்தம் பதினோரு போஸ்டர்கள் தயார் செய்தோம். முதல் போஸ்டர் தவிர, மீதி பத்து போஸ்டர்கள் கபாலி படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் தலைப்பு கூட கதையை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த எழுத்துகளில் ரஜினி உருவம், தொழிலாளிகளின் உருவம் இருப்பதுபோல டிசைன் செய்தேன். படத்தின் கதையை ஏற்கெனவே ரஞ்சித் எனக்கு சொல்லிவிட்டதால், இப்படி உருவாக்க முடிந்தது.

Vinci Raj, the designer of Kabali shares his experience

ரஜினி சார் மாதிரி எளிமையான, மிக சகஜமாக பழகக் கூடிய பெரும் சூப்பர் ஸ்டாரைப் பார்க்க முடியாது. படத்தின் மொத்த போட்டோ ஷூட்டும் இரண்டே நாட்களில் முடியக் காரணம் ரஜினி சாரின் வேகமும் அர்ப்பணிப்பும்தான். நான் முதல் முதலில் அவரைப் பார்த்ததும், 'சார், நான் உங்களைப் பார்த்துதான் வளர்ந்தேன். நீங்க சிரிச்சா மட்டும் போதும்,' என்றேன். அவர் உடனே தனக்கே உரிய ஸ்டைல் புன்னகையுடன், 'அய்யோ... நோ ப்ராப்ளம் கண்ணா... லெட்ஸ் ஸ்டார்ட்' என்றார்.

இந்த போட்டோஷூட்டுக்கு மலேசிய போட்டோகிராபர் ஸ்டீவ் கோ-வை பயன்படுத்தினேன்," என்றார்.

கபாலிக்காக எடுக்கப்பட்ட மற்ற போட்டோக்களை விரைவில் அடுத்தடுத்து வெளியிடப் போகிறார்களாம்.

 

"பாடிகார்டு"களுடன் திரியும் வாரிசு நடிகை

சென்னை: அந்த வாரிசு நடிகையின் பூர்வீகம் தமிழ் என்றாலும் அறிமுகமானது ஹிந்திப் படங்களில் தான். பாலிவுட்டில் நடிகை நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டடித்துக் கொண்டிருக்கிறது.

இதனால் நடித்த ஒரு சிலபடங்களிலேயே ஹிந்தி உலகின் முன்னணி நடிகைகளை ஓரங்கட்டி முன்னணி நடிகையாக மாறிவிட்டார் நடிகை. ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடிகையின் ஆட்சி கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.

முதலில் வீடு அடுத்து கார் தற்போது புரொடக்க்ஷன் கம்பெனி என்று நடிகை கலக்கிக் கொண்டிருக்கிறார். தெனிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளில் நடிகை கொடிகட்டிப் பறப்பதால் இவர் எங்கு சென்றாலும் இவரைப் பார்ப்பதற்காக பெரிய ரசிகர் பட்டாளமே கூடிவிடுகிறதாம்.

ஒருசில நேரங்களில் ரசிகர்கள் சிலரின் தொல்லைகளிலும் இவர் மாட்டி விடுகிறாராம். இதிலிருந்து தப்பித்துக் கொள்ள தற்போது இவரை சுற்றி ஒரு பாதுகாப்பு படையை உருவாக்கியுள்ளாராம்.

நடிகை படப்பிடிப்பு தளம், கடை திறப்பு விழா என எங்கு சென்றாலும், இந்த பாதுகாப்பு படை அவரை சுற்றியே வலம் வருகிறதாம். நடிகையின் இந்த ஏற்பாட்டால் ரசிகர்கள் நடிகையைப் பார்த்தால் பத்தடி முதல் நூறடி வரை தள்ளிச்சென்று விடுகின்றனராம்.

நல்ல ஏற்பாடு தான்....

 

பாகுபலி 2: நோ பைனான்ஸ்... ஒன்லி அட்வான்ஸ்!

பாகுபலி திரைப்படம் இந்தியாவில் இதுவரை எந்தப் படமும் செய்யாத பெரும் சாதனையை வசூலில் நிகழ்த்தியுள்ளது. இந்தப் படம் மட்டும் ரூ 600 கோடியை இதுவரை குவித்துள்ளது.

Baahubali - The Beginning (Tamil) (U/A): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

அமெரிக்காவில் ரூ 45 கோடியை இந்தப் படம் குவித்துள்ளது.

Bahubali producers new plan

இப்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. அதற்குள் படத்துக்கு பிஸினஸ் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்தப் படத்தைத் தயாரிக்க, யாரிடமும் ஒரு ரூபாய் கூட பைனான்ஸ் வாங்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளனர். மாறாக படத்தை வாங்கி வெளியிடப் போகும் விநியோகஸ்தர்களிடமிருந்து பெரிய அட்வான்ஸை வாங்கிக் கொள்ளப் போகிறார்களாம்.

முதல் பாகத்துக்கு தெலுங்கு மீடியாவின் பெரும் தலை ராமோஜி ராவ் பைனான்ஸ் செய்திருந்தார். இந்த முறை அவரிடம் போகாமல், முழுப் பணத்தையும் விநியோகஸ்தர்களிடமிருந்து அட்வான்ஸாகவே பெறப் போகிறார்களாம்.

பாகுபலி முதல் பாகத்தில் நடித்த அத்தனை பேரும் இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறார்கள்.

 

விசாரணை படத்தைப் பார்த்து பாராட்டித் தள்ளிய இயக்குநர் விஜய்!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விசாரணை படம் பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார் இயக்குநர் விஜய்.

அட்டக்கத்தி தினேஷ், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘விசாரணை'. இப்படம் வெளிவருதற்கு முன்பே பலரின் பாராட்டுக்களையும், பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளையும் வாங்கிக் குவித்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற வெனீஸ் திரைப்பட விழாவில், இப்படம் திரையிடப்பட்டு, விருதையும் வென்றது.

Director Vijay hails Vetrimaran's Visaranai

இந்நிலையில், இப்படத்தை சமீபத்தில் பார்த்த இயக்குனர் விஜய், படத்தைப் பெரிதும் பாராட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், "விசாரணை படத்தை நான் அமெரிக்காவில் பார்த்தேன். இந்த படம் இந்தியாவில் தலைசிறந்த படங்களில் இதுவும் ஒன்றாக அமையும்.

வெற்றிமாறன் ஒரு அற்புதமான படைப்பை உருவாக்கியிருக்கிறார். இந்த படத்தை பார்த்து முடித்ததும் ஒரு நிமிடம் என்னால் பேச முடியவில். கதை, திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்களை அவர் கையாண்டவிதம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.

இப்படத்தில் நடித்துள்ள அனைவரும் ரொம்பவும் இயல்பாக நடித்துள்ளனர். அனைவருக்கும் மிகப்பெரிய பாராட்டுக்கள். இப்படம் எல்லாவிதத்திலும் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும். உலக சினிமா அரங்கில் இந்த படம் இந்திய சினிமாவுக்கான ஒரு தனி அடையாளமாக இருக்கும்.

சினிமா துறையில் ஒருவனாக இருக்கும் எனக்கு இப்படத்தை முன்கூட்டியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இந்த படத்தைப் பார்க்கத் தவறாதீர்கள்," என்று கூறியுள்ளார்.

 

எம்மி விருதுகள் 2015: சிறந்த நடிகைக்கான விருது பெற்ற முதல் ஆப்ரிக்கப் பெண் வயோலா டேவிஸ்!

67வது எம்மி விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில் கேம் ஆப் த்ரோன்ஸுக்கு சிறந்த சீரியலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. வயோலா டேவிஸுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

Emmy Awards 2015: The complete winners list

சிறந்த தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்ச்சிகளுக்கான எம்மி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது.

Emmy Awards 2015: The complete winners list

இதில் விருது வென்ற கலைஞர்கள், தொடர்கள் பற்றிய முழு விபரம்:

சிறந்த தொடர் (நாடகம்): கேம் ஆப் த்ரோன்ஸ் (ஹெச்பிஓ)

சிறந்த காமெடித் தொடர்: வீப் (ஹெச்பிஓ)

சிறந்த நடிகர் : ஜான் ஹாம் (மேட் மேன்)

சிறந்த நடிகை: வயோலா டேவிஸ் (ஹவ் டு கெட் அவே வித் மர்டர்)

சிறந்த காமெடித் தொடர் நடிகர்: ஜெஃப்ரி டாம்பர் (ட்ரான்ஸ்பேரன்ட்)

சிறந்த காமெடித் தொடர் நடிகை: ஜூலியா லூயிஸ் - ட்ரேபஸ் (வீப்)

சிறந்த துணை நடிகர்: பீட்டர் டிங்ளேஜ் (கேம் ஆப் த்ரோன்ஸ்)

சிறந்த துணை நடிகை : யுஸோ அடுபா (ஆரஞ்ச் ஈஸ் நியூ பிளாக்)

சிறந்த காமெடித் தொடர் துணை நடிகர்: டோனி ஹேல் (வீப்)

சிறந்த காமெடித் தொடர் துணை நடிகை: அலிசன் ஜான்னே (மாம்)

சிறந்த குறுந்தொடர்: ஆலிவ் கிட்டரிட்ஜ் (ஹெச்பிஓ)

சிறந்த தொலைக்காட்சி திரைப்படம்: பெஸ்ஸி (ஹெச்பிஓ)

சிறந்த டாக் ஷோ : தி டெய்லி ஷோ (காமெடி சென்ட்ரல்)

சிறந்த இயக்குநர் (ட்ராமா) : கேம் ஆப் த்ரோன்ஸ், மதர்ஸ் மெர்ஸி (டேவிட் நட்டர்)

சிறந்த காமெடித் தொடர் இயக்குநர்: ட்ரான்ஸ்பேரன்ட் - பெஸ்ட் நியூ கேர்ள் (ஜில் சோலோவே)

சிறந்த இயக்குநர் (குறுந்தொடர், திரைப்படம் மற்றும் சிறப்புத் தொடர்) : ஆலிவ் கிட்டரெடஜ் (லிசா சோலோடென்கோ)

 

மகேஷ் பாபு... சூப்பர் ஸ்டார் டைட்டிலை நீங்க எப்படி போட்டுக்கலாம்? - ரஜினி ரசிகர்கள் கேள்வி

சூப்பர் ஸ்டார்...

இந்தத் தலைப்பைக் கைப்பற்ற சில மாதங்களுக்கு முன்பு வரை சில தமிழ் நடிகர்கள்தான் பாயைப் பிறாண்டிக் கொண்டிருந்தார்கள் என்றால்.. இப்போது அந்தப் பட்டியலில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவும் சேர்ந்து கொண்டது ரஜினி ரசிகர்களை கோபத்துக்குள்ளாக்கியுள்ளது.

மகேஷ்பாபு சமீபத்தில் நடித்த ஸ்ரீமந்துடு படத்தில் அவர் பெயருக்கு முன்னால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டப் பெயரைச் சேர்த்துள்ளனர்.

Rajini fans demand Mahesh Babu to remove Super Star

தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் ரஜினிகாந்த் பெயருக்கு முன்னால் சூப்பர் ஸ்டார் என்ற அடை மொழியை கடந்த பல ஆண்டுகளாகப் போட்டு வருகிறார்கள். 35 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்று அறியப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் தமிழில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு சில நடிகர்கள் இளம் சூப்பர் ஸ்டார், அடுத்த சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் தங்கள் பெயருக்கு முன்னாள் போட்டுக் கொள்ள முனைந்தனர். ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அப்படிப் பயன்படுத்துவதைத் தடுத்தனர்.

ஆனால் மகேஷ் பாபுவோ தடாலடியாக தன் பெயருக்கு முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று போட்டுக் கொண்டுள்ளார் ஸ்ரீமந்துடு படத்தில். அதன் தமிழ்ப் பதிப்பான செல்வந்தன் படத்திலும் இந்தத் தலைப்பை போட்டுக் கொண்டுள்ளார்.

இதனைக் கடுமையாக எதிர்த்துள்ள ரஜினி ரசிகர்கள், "ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளம். சூப்பர் ஸ்டார் என்றால் அவர்தான் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது, ரஜினியை பெரிதும் மதிப்பதாகக் கூறிக் கொள்ளும் மகேஷ்பாபு, அவரது பட்டப் பெயரை தனக்குப் பயன்படுத்திக் கொள்வது மிகவும் வெட்கக் கேடானாது. இதனை அவர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்," என்று சமூக வலைத் தளங்களில் வற்புறுத்தியுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக மகேஷ்பாபுவுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக கடிதமும் எழுதியுள்ளனர், ஆந்திராவிலுள்ள ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர்.

 

ஸ்ரீமந்துடு வெற்றி: இயக்குனருக்கு "ஆடி" காரை பரிசளித்து மகிழ்ந்த மகேஷ்பாபு

ஹைதராபாத்: ஸ்ரீமந்துடு படத்தின் மாபெரும் வெற்றி காரணமாக இயக்குநர் கொரட்டல சிவாவுக்கு ஆடி ஏ6 கார் ஒன்றைப் பரிசளித்து மகிழ்ந்திருக்கிறார் நடிகர் மகேஷ்பாபு.

மகேஷ்பாபு, சுருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஸ்ரீமந்துடு திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது, குறிப்பாக பாக்ஸ் ஆபிசிலும் படம் வசூலில் பட்டையைக் கிளப்பியது.

Mahesh Babu Gifts Audi A6 to Koratala Siva

மேலும் இந்தப் படத்தில் நடித்த மகேஷ்பாபு பலரின் பாராட்டுக்களையும் இந்தப் படத்தின் வாயிலாக பெற்றார். இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த மகேஷ்பாபு நேற்று இரவு திடீரென்று இயக்குநர் கொரட்டல சிவாவை தொடர்பு கொண்டு ஆடி ஷோரூமிற்கு வர சொன்னார்.

என்ன காரணம் என்று யோசித்துக் கொண்டே வந்த கொரட்டல சிவா மகேஷ்பாபு பரிசளித்த ஆடி காரைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் வாயடைத்து நின்று விட்டார்.

வெள்ளைக் கலரில் இருந்த அந்த ஆடி கார் மகேஷ்பாபுவின் அன்பையும் அவரது பெருந்தன்மையையும் படம்பிடித்துக் காட்டியதாக கொரட்டல சிவா நெகிழ்ந்து போயிருக்கிறார்.

இந்த பரிசளிப்பு நிகழ்வில் மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா சிரோத்கரும் கலந்து கொண்டார். ஸ்ரீமந்துடு படத்தின் இணை தயாரிப்பாளர் மகேஷ்பாபு என்பது குறிப்பிடத்தக்கது.

இளவரசருக்கு தாராள மனசுதான்...

 

'ச்சே.. கபாலியில் ரஜினியுடன் நடிக்க முடியாமப் போச்சே!'- பிரகாஷ் ராஜ்

கபாலியில் பிரதான வில்லன் வேடத்தில் நடிக்கவிருந்த பிரகாஷ் ராஜ், அந்த வாய்ப்பு கைகூடாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘கபாலி' படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே இதுவரையில்லாத அளவுக்கு பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Prakash Raj regrets for withdrawing from Kabali

இப்படத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் முதலில் ஒப்புக்கொண்டிருந்தார். பின்னர் அப்படத்திலிருந்து விலகிக்கொண்டார்.

ஏன் விலகினார்?

இந்தப் படத்துக்காக தொடர்ச்சியாக 60 கால்ஷீட் தேவைப்பட்டததாம். ஆனால், பிரகாஷ் ராஜ் தற்போது பல மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால், தொடர்ச்சியாக 60 நாட்கள் ஒதுக்கித் தர முடியவில்லையாம்.

இதனாலயே இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகக் கூறியுள்ள பிரகாஷ்ராஜ், "ரஜினியுடன் நடிக்க முடியாதது வருத்தமளிக்கிறது," என்றும் கூறியுள்ளார்.

‘கபாலி' படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், தன்ஷிகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கலைப்புலி தாணு இப்படத்தைத் தயாரிக்கிறார்.

 

படிப்பது கடமை; சாதிப்பதுதான் பெருமை -வில் அம்பு விழாவில் ஜெயம் ரவி!

வில் அம்பு திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியீட்டு விழா நேற்று லயோலா கல்லூரியில் நடந்து வரும் 'இன்ஜினியா' கலை விழாவில் நடந்தது.

இவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர்கள் சுசீந்திரன், தாய் சரவணன், இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம், படத்தின் நாயகர்கள் ஸ்ரீ , ஹரிஷ் கல்யாண் நாயகி ஸ்ருஷ்டி டாங்கே இசையமைப்பாளர் நவீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பாடலை வெளியிட்டார் நடிகர் ஜெயம் ரவி.

முதலாவதாக படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் சுசீந்திரன் தங்கள் படக்குழுவை அறிமுகம் செய்து வைத்தார். படத்தின் நாயகர்களுள் ஒருவரான ஹரிஷ் கல்யான், "இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை நான் பெரிதாக கருதுகிறேன். நானும் இந்த லயோலா கல்லூரியில் மாணவனாக சேர்ந்து படிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. இந்த கல்லூரியில் சேர வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் எனக்கு இங்கு சேர வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று உங்களோடு இங்க நான் நடித்திருக்கும் படத்தின் சிங்கிள் பாடல் வெளியிடுவதில் மகிழ்ச்சி," என்றார்.

Jayam Ravi releases Single track of Vil Ambu

நடிகர் ஸ்ரீ பேசுகையில், "எனக்கு எப்போதும் வித்தியாசமான கதைகளில்தான் நடிக்கப் பிடிக்கும். இந்தப் படத்தில் நான் ஏற்று நடித்திருக்கும் கதாப்பாத்திரம் முற்றிலும் புதுமையானது. நிச்சயம் உங்கள் எல்லோருக்கும் அது பிடிக்கும்," என்று கூறினார்.

சிங்கிள் ட்ராக்

அடுத்ததாக நடிகர் ஜெயம் ரவி வில் அம்பு படத்துக்காக இசையமைப்பாளர் நவீன் இசையில் இசையமைப்பாளர் டி.இமான் பாடியுள்ள வில் அம்பு படத்தின் சிங்கள் டிராக் பாடலான, 'நீயும் அடி நானும்' பாடலை வெளியிட்டுப் பேசினார்.

ஜெயம் ரவி

அவர் பேசுகையில், "நானும் சில வருடங்களுக்கு முன்பு இந்த கல்லூரியில் மாணவனாக படித்துள்ளேன். இதே பெட்ரம் ஹாலில் நிறைய நிகழ்ச்சியில் நான் என்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளேன். இப்போது நான் உங்கள் சீனியராக இங்கே நிற்கிறேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது . உங்களிடம் நிறைய பேசலாம் என்று தான் வந்தேன் ஆனால் உங்கள் ஆரவாரத்தை பார்த்தவுடன் எனக்கு என்ன பேச வந்தோம் என்றே மறந்துவிட்டது.

நம்முடைய வாழ்க்கையில் இரண்டு முறை மகிழ்ச்சியான தருணம் வரும் ஒன்று நாம் பிறக்கும் போது நம்மை சார்ந்தவர்களுக்கும் மற்றொன்று நாம் எதற்காக பிறந்தோம் என்று நாம் அறியும் போதும் வரும். உங்களை போல் இங்கே அமர்ந்து நானும் கைதட்டி ஆரவாரம் செய்திருக்கிறேன். நாம் கல்லூரிக்கு வந்து படிப்பில் சாதனைப் படைப்பது பெரிய விஷயமல்ல. படிப்பது நம்முடைய கடமை. அதைத் தாண்டி நாம் என்ன சாதித்தோம் என்பது தான் நமக்கு பெருமை.

இயக்குநர் சுசீந்திரனை போல் நட்புக்கு பெரிய மரியாதை கொடுப்பவன் நான். இந்தப் படத்தின் இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் சுசீந்திரனின் நெருங்கிய நண்பர். இருவரும் பதினான்கு வருடங்களாக ஒரே அறையில் தங்கி இருந்தனர். அந்த நட்பை மறக்காமல் இயக்குநர் சுசீந்திரன் தன் நண்பனுக்காக இந்த படத்தை தயாரித்துள்ளார். இதைப் போன்ற நட்பை நீங்கள் அனைவரும் கல்லூரி காலத்தில் தவறவிட்டுவிட கூடாது. இயக்குனர் சுசீந்திரனின் மேல் உள்ள மரியாதையின் காரணமாகத்தான் நான் இந்த விழாவுக்கு வந்தேன்.

இந்த படத்தில் நடித்துள்ள ஸ்ரீயின் நடிப்பை ஓநாயும் ஆட்டுகுட்டியும் படத்தில் நான் நிறைய ரசித்தேன். அவருக்கு வாழ்த்துக்கள். படத்துக்கு இசையமைத்துள்ள நவீன் பாடல்கள் அருமையாக உருவாக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல்களை பெயர்பெற்ற இசையமைப்பாளர்களை கொண்டு உருவாக்கியுள்ளார் நவீன். இது ஒரு நல்ல முயற்சி. இதை போன்ற முயற்ச்சிகள் நிச்சயம் வெற்றி பெறும்," என்று வாழ்த்தினார் நடிகர் ஜெயம் ரவி.

விழா மலர் வெளியீடு

விழாவில் லயோலா எஞ்ஜினீயரிங் கல்லூரியின் மலரை ஜெயம் ரவி வெளியிட, அதனை மக்கள் தொடர்பாளர் ஜான்சன் பெற்றுக் கொண்டார். கல்லூரியின் டீன் ரெவரன்ட் ஜான் பிரகாசம், இயக்குநர் ரெவ்ரன்ட் ப்ரான்சிஸ் சேவியர், கலைவிழா ஒருங்கிணைப்பாளர் சுமன், சென்னை மிஷன் சுபீரியர் ரெவ்ரன்ட் ஜெபமலை ராஜா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

டார்லிங் 2 ஆக மாறிய ஜின்!

ஜின் என்ற பெயரில் தயாராகி வந்த படத்தை வாங்கியுள்ள ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா, அதனை டார்லிங் 2 என்ற தலைப்பில் வெளியிடுகிறார்.

இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் ‘டார்லிங்' படம் மூலம் நடிகரானார். இதில் இவரது நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இதில் ஜி.வி. பிரகாஷுடன் நிக்கி கல்ராணி, சிருஷ்டி டாங்கே, பாலா, கருணாஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள். சாம் ஆண்டன் இயக்கியிருந்த இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

Jinn releasing as Darling 2

பேய் படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. வணிக ரீதியாக இப்படம் வெற்றியடைந்தது.

இந்த நிலையில் டார்லிங் 2 என்ற தலைப்பில் இன்னொரு படத்தை வெளியிடத் தயாராகி வருகிறார் ஞானவேல் ராஜா.

பொதுவாக முதல் படத்தின் தொடர்ச்சியாக அல்லது ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ள படமாக இரண்டாம் பாகம் வரும்.

ஆனால் டார்லிங் 2 கதை வேறு.

Jinn releasing as Darling 2

இதில் நாயகர்களாக ரமீஸ் ராஜா, மெட்ராஸ் கலை நடிக்கிறார்கள். டாக்டர் மாயா என்ற புதுமுகம் நாயகியாக அறிமுகமாகிறார். இந்தப் படம் முழுவதுமாக முடிந்துவிட்டது. இதுவும் பேய்ப் படம் என்பதைத் தவிர, டார்லிங்குக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

Jinn releasing as Darling 2

ஆனால் இந்தப் படத்தை வாங்கி டார்லிங் 2 என்று தலைப்பிட்டு வெளியிடுகிறார் ஞானவேல் ராஜா.

 

மணிரத்னத்துடன் மீண்டும் இணையும் நித்யாமேனன்

சென்னை: ஓ காதல் கண்மணி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தான் இயக்கப் போகும் அடுத்த படத்திலும் நித்யா மேனனுக்கு வாய்ப்பளித்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

இந்த ஆண்டு(2015) ஏப்ரல் மாதத்தில் வெளிவந்த "ஓ காதல் கண்மணி" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக மாறியது.

ஓ காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து சில மாதங்கள் ஓய்வுக்குப் பின் தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் மணிரத்னம். இந்தப் படத்தில் துல்கர் சல்மான், கார்த்தி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர்.

Nithya Menen Mani Ratnam Collaborate Again

மற்றொரு நாயகிக்கான தேடல் நடைபெற்று வந்த நிலையில் தற்போது நித்யாமேனன் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

பழிவாங்கும் த்ரில்லர் வகை கதையாக இந்தப் படத்தை உருவாக்கவிருக்கிறார் மணிரத்னம். இன்னும் ஒரு சில தினங்களில் படத்தில் நடிப்பவர்கள் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகலாம்.

நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் மாதத்தில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவிருக்கிறது. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் "இசைப்புயல்" ஏ.ஆர்.ரகுமான்.

ஓ காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து 2 வது முறையாக நித்யாமேனன், துல்கர் சல்மான், மணிரத்னம் மூவரும் இந்தப் படத்தின் மூலம் இணையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

சிவகார்த்திகேயனைத் தாக்கியவர்கள் யார்? விசாரணையைத் துவக்கிய கமல்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனை மதுரையில் வைத்து தாக்கியவர்கள் யார் என்று விசாரிக்குமாறு, நடிகர் கமல் தனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறார்.

நேற்று மதுரை விமான நிலையத்தில் இருந்து நடிகர் சிவகார்த்திகேயன் வந்தபோது மதுரையைச் சேர்ந்த கமல் ரசிகர்கள் சிலர் அவரைத் தாக்க முயற்சித்தனர்.

ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், நடிகர் கமல் குறித்து எதுவும் சொல்லாமல் ரஜினிதான் எனது ரோல்மாடல் என்று கூறியிருந்தார்.

Kamal Haasan Starts Enquiry in Sivakarthikeyan Issue

கமல் நடித்த காக்கிச்சட்டை படத்தின் தலைப்பில் நடித்தது பற்றி ஒருவார்த்தை கூட சிவகார்த்திகேயன் பகிர்ந்து கொள்ளவில்லை.மேலும் கமல் குறித்து எதுவும் பேசவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கமல் ரசிகர்கள் மதுரையில் நேற்று அவர்மீது தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு விழாவில் நடிகர் கமலுடன், சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருவரும் ஒன்றாகத் திரும்பியபோது நடந்த நிகழ்வுகள குறித்து கமல் அறிந்து கொண்டிருக்கிறார்.சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாகப் பேசியதோடு, சென்னை வந்ததும், மதுரையில் சிவகார்த்திகேயனைத் தாக்க முற்பட்டது யார்? என்பதை உடனடியாக விசாரித்து என்னிடம் சொல்லுங்கள் என்று கடுமையாக உத்தரவிட்டிருக்கிறாராம் கமல்.

அவருடைய ரசிகர்மன்றத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தால் கண்டிப்பாக அவர்கள் மேல் கமலே நடவடிக்கை எடுப்பார் என்று சொல்லுகிறார்கள்.

திரையுலகில் தற்போது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது இந்த விவகாரம்...

 

”நான் நலமாகத்தான் இருக்கின்றேன்”- தாக்குதல் சம்பவம் குறித்து சிவகார்த்திகேயன் விளக்கம்

சென்னை: மதுரையில் கமலைப் பற்றி அவதூறாக பேசியதாக நடிகர் சிவகார்த்திகேயன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் நடிகர் கமல் மற்றும் சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளனர்.

மதுரையில் நடிகர் சிவகார்த்திகேயன் மீது சிலர் தாக்குதல் நடத்த முயன்றனர். மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது அவர் மீது கமல் ரசிகர்கள் தாக்குதல் நடத்த முற்பட்டதாக கூறப்படுகிறது.

Kamal and sivakarthikeyan speaks about hit incident

நடிகர் கமலை சிவகார்த்திகேயன் விமர்சனம் செய்ததாக கூறி இந்த தாக்குல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்,நடிகர் கமல் ஹசான் ஆகியோர் தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தனர்.

நடிகர் கமல் ஹாசன் கூறுகையில், "எனது ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் உண்மையில்லை, தாக்குதல் நடந்தாக கூறப்படும் சம்பவம் எதுவும் நடக்கவில்லை. நானும் சிவகார்த்திகேயனும் மதுரையில் நிகழ்ச்சி முடிந்து ஒன்றாகத்தான் வருகிறோம்" என்றார்.

இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகையில், "எனக்கு எந்த பிரச்னையும் இல்லை, நான் நலமாகத்தான் உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.