பிப்ரவரி 27-ல் காக்கிச் சட்டை.. சிவகார்த்திகேயனுக்கு காத்திருக்கும் முக்கிய 'டெஸ்ட்'!

காக்கிச் சட்டை படத்தை வரும் பிப்ரவரி 27-ம் தேதி வெளியிடவிருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

துரை செந்தில் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் காக்கிச் சட்டை. முதல் முறையாக இந்தப் படத்தில் காக்கிச் சட்டை போட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

பிப்ரவரி 27-ல் காக்கிச் சட்டை.. சிவகார்த்திகேயனுக்கு காத்திருக்கும் முக்கிய 'டெஸ்ட்'!

தனுஷின் சொந்தத் தயாரிப்பான இந்தப் படம் கடந்த பொங்கலன்றே வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், பொங்கலுக்கு ஐ வந்ததால், பிப்ரவரிக்கு தள்ளி வைக்கப்பட்டது. எந்த கட்டும் இல்லாத கிளீன் யு சான்று பெற்று இந்த போலீஸ் படம், வரும் பிப்ரவரி 27-ம் தேதி உலகம் முழுவதும் வெலியாகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே படங்களுக்குப் பிறகு பெரிய அளவில் எதிர்ப்பார்க்கப்படும் நாயகனாகிவிட்ட சிவகார்த்திகேயனுக்கு இது முக்கியமான டெஸ்ட் என்று கூடச் சொல்லலாம்.

 

ஏகப்பட்ட படங்கள் வருவதால் ஒத்திவைக்கப்பட்டது பொங்கி எழு மனோகரா!

நாளை வெளியாகவிருந்த பொங்கி எழு மனோகரா படம், வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இர்பான், அர்ச்சனா, அருந்ததி, சிங்கம் புலி நடித்துள்ள புதிய படம் ‘பொங்கி எழு மனோகரா'.

இப்படத்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ரமேஷ் ரங்கசாமி என்பவர் இயக்கியுள்ளார்.

காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் நாளை வெளியாகவிருந்தது. பத்திரிகையாளர்களுக்கு சிறப்புக் காட்சியும் போடப்பட்டது.

ஏகப்பட்ட படங்கள் வருவதால் ஒத்திவைக்கப்பட்டது பொங்கி எழு மனோகரா!

இந்நிலையில், படம் நாளை வெளியாகாது என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, தயாரிப்பாளர் பரந்தாமன் கூறுகையில், ‘பொங்கி எழு மனோகரா' படத்தை நாளை வெளியிட முடிவு செய்திருந்தோம். இந்தப் படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டோம்.

ஆனால், நாளை ‘இசை', ‘புலன்விசாரணை 2', ‘தரணி', ‘கில்லாடி', ‘டூரிங் டாக்கீஸ்' ஆகிய படங்கள் வெளியாவதால் நாங்கள் எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைக்கவில்லை. ஆகையால், படத்தை வேறு தேதிக்கு ஒத்திவைத்துள்ளோம். படம் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்," என்றார்.

 

ஏழுமலையான் கருணையால் 'என்னை அறிந்தால்' பிப்.5ல் ரிலீஸ் ஆகுமா? எதிர்பார்ப்பில் அஜித் ரசிகர்கள்

திருப்பதி: என்னை அறிந்தால் திரைப்படம் நல்லபடியாக உருவாகி வந்துள்ள நிலையில், நடிகர் அஜித், திருப்பதி கோயிலுக்கு சென்று எழுமலையானை தரிசித்து விட்டு திரும்பியிருக்கிறார். படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே செல்வதால், அஜித்தின் சாமி தரிசனத்திற்கு பிறகாவது சொன்ன தேதியில் என்னை அறிந்தால் ரிலீஸ் ஆகுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் ‘என்னை அறிந்தால்'. இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், ரசிகர்கள், எங்களுக்கு இது 'தல' பொங்கல் என்று கூறி கொண்டாடிடனர். இதனிடையே பட வேலைகள் பாக்கியிருப்பதால் ஜனவரி 29ம்தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழு திடீரென அறிவித்ததால் தயாரிப்பு தரப்புக்கு எதிராக ரசிகர்கள் பொங்கினர். இருப்பினும், அஜித்துக்காக பல்லைக்கடித்துக் கொண்டனர்.

ஏழுமலையான் கருணையால் 'என்னை அறிந்தால்' பிப்.5ல் ரிலீஸ் ஆகுமா? எதிர்பார்ப்பில் அஜித் ரசிகர்கள்

ஆனால் ரசிகர்களின் பொறுமையை சோதிப்பது போல, படம் பிப்ரவரி 5ம்தேதி ரிலீஸ் ஆகப்போவதாக அறிவிக்கப்பட்டது. இம்முறை சென்சார் தாமதத்தை காரணமாக கூறியது படக்குழு. பட வெளியீடு தள்ளிப்போக, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் இடையே ஏற்பட்டுள்ள மோதல்தான் காரணம் என்று சிலர் கொளுத்திப்போட்டனர். இந்நிலையில்தான், அஜித் படம் ரிலீசாகும் தினத்தன்று தியேட்டர்களில் குண்டு வெடிக்கும் என்ற மிரட்டல் வெளியாகியுள்ளது.

இத்தனை களேபரங்களுக்கு மத்தியில்தான் அஜித் நேற்று திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார். ஏழுமலையானை அவர் மனமுருக வேண்டிக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார்.

அஜித் ஏழுமலையானை தரிசனம் செய்வது புதிது கிடையாது. பில்லா-2, ஆரம்பம், வீரம் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்த பிறகும் அஜித் ஏழுமலையானை தரிசனம் செய்தார். திருப்பதி சென்று வந்த பிறகு தனது திரையுலக வாழ்க்கையில் திருப்பங்கள் நடந்துவருவதாக நம்பிக்கை கொண்டுள்ளார் அஜித் என்கின்றனர் அவரது நெருங்கிய நண்பர்கள்.

எனவேதான், என்னை அறிந்தால் ரிலீசுக்கு முன்பாகவும், அஜித் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அந்த ஏழுமலையான் கருணையால், இனியாவது என்னை அறிந்தால் ரிலீஸ் தேதி தள்ளிப்போகக்கூடாது என்பதே அவரது ரசிகர்களின் வேண்டுதல்.

 

'புலி' விஜய் எப்படி இருப்பார்: பார்க்க ஆசையா இருக்கிறதா?

சென்னை: இளைய தளபதி விஜய் நடித்து வரும் புலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

சிம்பு தேவன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் பேன்டஸி படம் புலி. துப்பாக்கி, கத்தி என்று தொடர்ந்து ஆயுதங்களின் பெயர் கொண்ட படங்களில் நடித்த விஜய் தற்போது விலங்கின் பெயர் கொண்ட படத்தில் நடிக்கிறார். ஆனால் இந்த பெயரும் நிலையில்லை என்று கூறப்படுகிறது. படத்தின் பெயர் மாற்றப்படலாம் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

'புலி' விஜய் எப்படி இருப்பார்: பார்க்க ஆசையா இருக்கிறதா?

ஹாங்காங்கைச் சேர்ந்த ஸ்டண்ட் மாஸ்டர் நாங்(Nang)கூறியபடி விஜய் பயங்கரமான ஸ்டண்ட் காட்சியில் நடித்துள்ளாராம். புலி படத்தின் படப்பிடிப்பு பற்றி பல செய்திகள் வருவதை பார்த்துவிட்டு ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது புலி படத்தில் விஜய் பார்க்க எப்படி இருப்பார் என்பது தான் அந்த எதிர்பார்ப்பு. இந்நிலையில் தான் ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தியை தெரிவிக்கிறோம். புலி படத்தின் பர்ஸ்ட் லுக் பிப்ரவரி மாதம் 2வது வாரத்தில் வெளியாகுமாம்.

புலி படத்தில் ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா என இரண்டு இளமை துள்ளும் ஹீரோயின்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சேரனின் சினிமா டு ஹோம் திட்டம் மீண்டும் தள்ளி வைப்பு.. பிரமாண்ட விழா எடுத்து ஆரம்பிக்க முடிவு!

சென்னை: சேரன் தொடங்கியுள்ள சினிமா டு ஹோம் திட்டத்துக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

படங்களை திரையரங்குகளில் வெளியிடும் போதே, நேரடியாக வீட்டுக்கு வீடு டிவிடியாக வழங்கும் திட்டமான சினிமா டு ஹோம் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

சேரனின் சினிமா டு ஹோம் திட்டம் மீண்டும் தள்ளி வைப்பு.. பிரமாண்ட விழா எடுத்து ஆரம்பிக்க முடிவு!

இத்திட்டத்தின் மூலம் சேரன் இயக்கிய ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை டி.வி.டி.யாக வீடுகளில் கடந்த பொங்கலன்று விநியோகம் செய்ய ஏற்பாடு நடந்தது. பின்னர் அது 30-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது மீண்டும் தள்ளிப் போகிறது.

இதுகுறித்து சேரன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "சினிமா டூ ஹோம் திட்டம் மூலம் ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை நாளை (30-ந் தேதி) டி.வி.டி.யாக வீடுகளில் சப்ளை செய்ய இருந்தோம். தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவர் கலைப்புலி தாணு மற்றும் விநியோகஸ்தர்களை நேற்று சந்தித்து இத்திட்டம் குறித்து விளக்கினேன்.

கலைப்புலி தாணு நல்ல முயற்சி என்று பாராட்டினார். தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் பலன் அளிக்கும் திட்டம் என்றும் கூறினார். இரு வாரங்கள் கழித்து நடிகர்- நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரை அழைத்து பிரமாண்டமாக இந்த திட்டத்தின் தொடக்க விழாவை நடத்தலாம் என்று யோசனை தெரிவித்தார். அதை ஏற்றுக் கொண்டேன்.

நாளை தொடங்க இருந்த இத்திட்டம் கலைப்புலி தாணு வேண்டுகோளுக்கிணங்க தள்ளி வைத்துள்ளேன். விரைவில் நடிகர், நடிகை வைத்து பிரமாண்டமாக இதன் தொடக்க விழா நடத்தப்படும்.

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட திலையுலகினரின் கூட்டு முயற்சியாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும்," என்றார்.

 

அப்பாவின் நடிப்பைப் பாராட்டிய விஜய்!

டூரிங் டாக்கீஸ் படத்தில் ஹீரோவாக நடித்துள்ள தன் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் நடிப்பை நடிகர் விஜய் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் கூறுகையில், "டூரிங் டாக்கீஸ் படத்தை என் மகன் நடிகர் விஜய் பார்த்தார்.

அவரைப் பற்றி அனைவருக்குமே தெரியும், அதிகம் பேசமாட்டார் என்று.

அப்பாவின் நடிப்பைப் பாராட்டிய விஜய்!

அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் ஒன்றும் சொல்லாமல் போய்விடுவார்.

என்னிடம் கடந்த சில ஆண்டுகளாகவே ஓய்வெடுக்கச் சொல்லி வருகிறார். ஆனால் ஒரு நல்ல வெற்றிப் படம் கொடுத்துவிட்டு ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இந்த முறை டூரிங் டாக்கீஸ் படத்தைப் பார்த்ததுமே, என் மகன் என் தோளில் தட்டி நல்லா பண்ணியிருக்கீங்கப்பா என்றார். அதுவே பெரிய விஷயம்தான்.

இது என்னைப் பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றிப் படம்," என்றார்.

 

லிங்கா பட விவகாரம்: ரஜினி, கே.எஸ்.ரவிகுமார் நேரில் ஆஜராக மதுரை கோர்ட் உத்தரவு

மதுரை: இழப்பீடு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், ரஜினி உள்ளிட்ட லிங்கா படக்குழுவினர் ஆஜராக, நோட்டீஸ் அனுப்ப மதுரை மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் லிங்கா. இப்படத்தின் கதை தன்னுடையது என மதுரை சின்ன சொக்கிகுளத்தைச் சேர்ந்த ரவிரத்தினம் என்பவர் மதுரை ஷைகோர்ட் கிளையில் கடந்த டிசம்பர் மாதம் மனுத் தாக்கல் செய்தார்.

லிங்கா பட விவகாரம்: ரஜினி, கே.எஸ்.ரவிகுமார் நேரில் ஆஜராக மதுரை கோர்ட் உத்தரவு

அந்த மனுவில், "முல்லைப் பெரியாறு அணை மற்றும் அணையைக் கட்டிய பென்னிகுயிக் வரலாறை பின்னணியாக கொண்டு ‘முல்லைவனம் 999' என்ற படத்தை இயக்கி வருகிறேன். அந்த கதையை திருடி ‘லிங்கா' படத்தை தயாரித்துள்ளனர். எனவே, ‘லிங்கா' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். எனது கதையை திருடிய ‘லிங்கா' படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ரவிரத்தினம் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட தனி நீதிபதி, ‘மனுதாரரின் முக்கியமான கோரிக்கை பதிப்புரிமை சட்டம் தொடர்பானது என்பதால் மனுதாரரின் கோரிக்கைக்கு இந்த நீதிமன்றம் பரிகாரம் அளிக்க முடியாது. மனுதாரர் சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம்" எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக ரவிரத்தினம் மதுரை மாவட்ட கூடுதல் உரிமையியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "லிங்கா படத்தின் கதை, நான் திரைக்கதை எழுதி தயாரித்து வரும் முல்லைவனம் 999 படத்தின் கதை ஆகும். எனவே, லிங்கா படத்தின் கதையும், முல்லைவனம் 999 கதையும் ஒன்று தான் என்று உத்தரவிட வேண்டும். இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை லிங்கா படக்குழுவினர் அந்த படத்தின் கதையை தங்களுடையது என்று சொல்வதற்கு தடைவிதிக்க வேண்டும். என்னுடைய கதையை திருடியதற்காக இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சரண் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணை முடிவில், லிங்கா படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் ஆஜராக நோட்டீசு அனுப்புமாறு உத்தரவிட்டதுடன் வழக்கை வருகிற மார்ச் மாதம் 16-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

விஜய் நடித்த கத்திக்கு இன்று 100வது நாள்!

விஜய் நடித்த கத்தி படம் இன்று நூறு நாட்களைத் தொட்டுள்ளது.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - சமந்தா நடித்த படம் கத்தி. லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படம் பல வழக்குகள், ஆர்ப்பாட்டங்கள், சர்ச்சைகளைக் கடந்து தீபாவளிக்கு வெளியானது.

உலகெங்கும் வெளியான இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், வசூலில் இதுவரை வந்த விஜய் படங்களை முந்தி சாதனைப் படைத்ததாக பாக்ஸ் ஆபீஸில் கூறப்படுகிறது.

விஜய் நடித்த கத்திக்கு இன்று 100வது நாள்!

இந்தப் படம் சென்னையில் மூன்று திரையரங்குகளில் நூறு நாளை எட்டியுள்ளது.

வெளிநாட்டு கார்ப்பொரேட் நிறுவனங்கள், தமிழகத்தில் விவசாயத்துக்கான தண்ணீரை உறிஞ்சுவதை மையப்படுத்தி வந்த படம் கத்தி. இந்தக் கதை தன்னுடையது என சிலர் வழக்குத் தொடர்ந்தனர். படத்தைத் தயாரித்த லைகா நிறுவனத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதையடுத்து லைகா பெயரை நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டனர்.

கடைசியில் நீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது. இப்போது லைகா நிறுவனப் பெயரிலேயே படம் நூறாவது நாள் கண்டுள்ளது.

 

‘நச்’சுனு ஒரு படம்... 7 ஹீரோ, 5 ஹீரோயின்களுடன்!

சென்னை: 7 கதாநாயகர்கள், 5 கதாநாயகிகள் நடிப்பில் ‘நச்' என்ற தலைப்பில் படம் ஒன்று உருவாகி வருகிறது.

‘மரிக்கார் ஆர்ட்ஸ்' தமிழில் தயாரிக்கும் முதல் படம் ‘நச்'. இப்படத்தினை ஹசிம் மரிக்கார் எழுதி, இயக்குகிறார். இதில் ‘அங்காடி தெரு' மகேஷ், சஞ்சீவ், பிரவீன் பிரேம், மக்பூல் சல்மான் உட்பட 7 பேர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகிகளாக மதுரிமா பானர்ஜி, எதன், பூனம் ஜாவர் உட்பட 5 நடிக்கிறார்கள். மற்றும் ரியாஸ்கான், காளி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

‘நச்’சுனு ஒரு படம்... 7 ஹீரோ, 5 ஹீரோயின்களுடன்!

இந்தப் படத்தில் நடித்துள்ள மக்பூல் சல்மான் நடிகர் மம்முட்டியின் அண்ணனும், பிரபல நடிகருமான இப்ராகிம் குட்டியின் மகன் ஆவார். ஏற்கெனவே 5 மலையாள படங்களில் நடித்திருக்கும் மக்பூலின் முதல் தமிழ்ப் படம் இது.

இதேபோல், மதுரிமா பானர்ஜி விஷாலின் ‘ஆம்பள' படத்தில் நடித்தவர்.

‘நச்’சுனு ஒரு படம்... 7 ஹீரோ, 5 ஹீரோயின்களுடன்!

இப்படத்திற்கு மன்சூர் அகமது இசையமைக்கிறார். அடுத்தமாதம் துவங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொச்சின், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது.

‘நச்’சுனு ஒரு படம்... 7 ஹீரோ, 5 ஹீரோயின்களுடன்!

வரும் மே மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

 

வருணின் வருங்காலப் படத் தயாரிப்புகளில் கை கோர்க்கிறார் திரிஷா!

வருங்கால கணவருக்கு துணையாக படத்தயாரிப்புப் பணிகளில் இறங்குகிறார் வருணின் வருங்காலப்  படத் தயாரிப்புகளில் கை கோர்க்கிறார் திரிஷா!

த்ரிஷா - வருண்மணியன் திருமண நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது. மார்ச் மாதத்துக்கு பிறகு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

திருமணத்துக்கு பிறகு நடிப்பதில் தடையில்லை என்று த்ரிஷா கூறியிருந்தார். புதிய படங்களில் ஒப்பந்தமாகப் போவதாகவும் கூறியிருந்தார்.

இன்னொரு பக்கம், வருண் மணியனுடன் இணைந்து படத் தயாரிப்பில் இறங்கவும் த்ரிஷா திட்டமிட்டுள்ளாராம்.

முதலாவதாக திரு இயக்கும் படத்தை தயாரிக்கப் போகிறாராம். விஷாலை வைத்து சமர், தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன் படங்களை இயக்கியவர் திரு.

இந்த படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.