1/22/2011 10:53:29 AM
சினிமாவில் நடித்துக்கொண்டே, மேடை கச்சேரிகளில் பாடுகிறார் சரண்யா மோகன். இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. அதிக படங்களில் நடிப்பதைவிட, அழுத்தமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதே ஆசை. 'அழகர்சாமியின் குதிரை', 'வேலாயுதம்' படங்களில் எனது வேடங்கள் வித்தியாசமாக இருக்கும். மலையாளத்தில் டைரக்டர் பாசில் என்னை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார். இப்போது அவரே என் சகோதரி சுகன்யாவை ஹீரோயினாக அறிமுகம் செய்கிறார். நானும், சுகன்யாவும் சங்கீதம் கற்றுள்ளோம். 'யுவ கலா பவன்' என்ற குழுவை தொடங்கி, கேரளாவில் மேடை கச்சேரிகளில் நானும், சுகன்யாவும் பாடி வருகிறோம்.